Advertisement

9

மணமகளே மருமகளே வா வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா

இன்றுவரை கிராமப்புறங்களில், மட்டும் அல்லாமல் ஊர் பகுதியிலும்.,  திருமண வீடு என்றால் பெண்ணை மணமகன் வீட்டிற்கு அழைத்து வரும்போது.,  மணமகன் வீட்டில் இந்தப் பாடல் கண்டிப்பாக மணமகளை வரவேற்கும் பாடலாக  இருக்கும்., அப்படிதான் சரண்யாவையும் ஜெ.கே ன் வீட்டிற்கு அழைத்து வரும் போது அதே பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.,  உள்ளறையில் இருந்து ஜெ. கே பார்த்துக் கொண்டிருக்க பச்சை பட்டுடுத்தி தேவதையாக வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்து உள்ளே வந்தாள்..

அதன்பிறகு அங்குள்ள முறைப்படி வீட்டிற்கு வந்த மருமகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து.,  மருமகள் கைப்பட செய்ய வேண்டியது அனைத்தும் செய்தனர்., அதன் பிறகு மூஹீர்த்த  நேரத்திற்கு சற்று முன்பு அவளை மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

மண்டபத்தில் பார்லரிலிருந்து பெண்கள் வந்திருந்தனர். அதிகமான மேக்கப் தேவைப்படாது என்று அந்த பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ஜெ. கே வீட்டு பெண்கள் அனைவருமே இருந்தனர்.

சித்தி., சித்தி பிள்ளைகள் அனைவரும் இருக்க.. மேக்கப் நடந்து கொண்டிருக்கும் போதே அவளது நினைவுகள் நேற்றைய இரவை  நினைத்துக் கொண்டாள்.

‘அவனோடு பேச வேண்டும் என்று திருமணம் பேசும் போது சொன்னது தான்.,  அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை., அது இருவருக்கும் நினைவு இருந்தாலும்., இருவரும் பேசுவதற்கு சரியான வாய்ப்பு இல்லாமல் அமைதியாகவே இருந்தனர்’.

பெரியவர்களின் அறிவுரையோடு உணவு உண்டபின் படுக்கச் சென்றவளுக்கு சற்று நேரம் உறக்கம் வரவில்லை., வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் எத்தனை பெரிய பிரளயத்தை உண்டு பண்ணுகிறது என்பது போலத் தோன்றியது.

ஆனால் ஏனோ ஜெ கே  வீட்டில் யாரிடமும் பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை., வீட்டில் உள்ளவர்களுக்கு பெண் மாறியதை தவிர., திருமணம் தவிர மற்ற எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.,

ஜெ. கே வீட்டிலும் சரி யாரும் என்ன நினைக்கிறார்கள்  என்று தெரியவில்லை., ஆனால் ஜெ கே ன் மன நிலை என்ன என்று அவளுக்கும் தெரியாது., இவளது மனநிலையே இவளுக்கு புரியவில்லையே என்ற யோசனையில் தான்.,  அந்த சூழ்நிலையில்  இருந்தவள்.,  போனை எடுத்து  பார்த்துக் கொண்டிருக்கும் போதே தெரியாத நம்பரிலிருந்து ஒரு மெசேஜ் இருந்தது. யார் நம்பர் என்ற யோசனையோடு போனை பார்க்க.,  அதில் ஜெகே ன் மெசேஜ் இருந்தது.

‘பேச வேண்டும் என்று இருவருமே சொல்லியிருந்தோம். ஆனால் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை., இப்பொழுது கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும் என்றால் சொல்லு போனில் கூப்பிடுகிறேன்.,  இல்ல உனக்கு மெதுவா பேசினா கூட பிரச்சனை இல்லை ன்னா சொல்லு., நாளைக்கு நாம பேசிக்கலாம்’ என்று அனுப்பி இருந்தான்.என்று  மெசேஜ் காட்ட., இவளும் வேறு வழி இல்லாமல் பேசாமல் விட்டு விட்டாள்.

கண்டிப்பாக தான் பார்த்தது அவனுக்குத் தெரிந்து இருக்கும்., ஆனாலும் மேற்கொண்டு அவனும் எந்த மெசேஜும் செய்யவில்லை, என்பதால் அவளும் அதை பற்றி யோசிக்காமல் இருந்தாள்.

இப்பொழுது சுத்தி வீட்டினர்கள் இருக்க.,  அவளுக்கு ஏனோ அவன் நேற்று ‘பேச வேண்டுமா., பேச வேண்டுமென்றால் பேசலாம்’., என்று சொன்னது நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது.

‘சரி எதுவானாலும் இது தன்னுடைய வாழ்க்கை’ என்று தோன்றியது. ஆனாலும் ‘மனம் சிறிது லேசானது போல ஒரு உணர்வு இருக்கத்தான் செய்தது., அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தது., ஆனால் அந்த கேள்விகளை எல்லாம் யாரிடம் சொல்வது உடன்பிறந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் இக்கேள்விக்கான பதிலை கேட்டு தெரிந்து இருக்கலாம்’., தன் எண்ண ஓட்டங்களை ஆராய அவள்  முற்படவில்லை.,  ஆனாலும் ‘அவள் மனதில் தோன்றிய எண்ணத்திற்கு என்ன அர்த்தம்’ என்று இப்பொழுது வரை தெரியவில்லை..

யாரிடம் கேட்பது என்ன செய்வது என்று  அமைதியாக இருந்து கொண்டாள்…

மண்டபத்தில் அலங்காரம் முடித்து கிளம்பி கோயிலுக்கு சென்றனர்.,  இவர்கள் கோயிலுக்கு செல்லும் போது அங்கு ஏற்கனவே திவ்யாவிற்கு  தாலி கட்டும் சம்பிரதாயத்துக்காக நடந்த திருமணம் முடிந்து வெளியே வீட்டினர் காத்திருந்தனர்.,  அவள் கணவன் குடும்பத்தினர் கிளம்பலாம் என்று முடிவு பண்ணி பேசிக் கொண்டிருக்கும் போதே.., இவர்கள் வந்து இறங்கவும் திவ்யா அவளை முறைத்துப் பார்ப்பது குறித்து கண்டுகொள்ளாமல் திரும்பிக்கொண்டாள்., அதேநேரம் ஜெ.கே யும் நந்தா மற்றும் அவன் அப்பா அம்மா ஓடு வந்து இறங்கினான்..  இவள் அமைதியாக ஜெ.கே ன் சித்திகளோடு நிற்க., மங்கையும் முரளியும்.,  திவ்யா பாலாவோடு அவள் வீட்டுக்கு அனுப்புவதற்காக சென்றிருந்தனர்.,

அதே நேரம் மற்றவர்கள் கோயிலுக்குள் உள்ளே செல்ல தொடங்கவும்.,  மங்கையோ.,  அவங்களோடு உள்ளப்போ.,  இப்ப வந்துடறேன் என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு., திவ்யா வீட்டினர் கிளம்பிய பிறகு அவர்களும் வந்து சேர்ந்தனர்.,

அதன் பிறகு இவர்களுக்கான திருமண சடங்கு சம்பிரதாயங்கள் கோயிலில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. பட்டு எடுக்கும் போதே தாலி செயின் முதற்கொண்டு வேற வாங்க சொல்லிவிட்டான்., எனவே எல்லாம் தயார் நிலையில் வாங்கி வந்துருந்ததால்  சாமியின் பாதத்தில் வைத்து எடுத்து வந்து கொடுக்க., அதுவரை தனித் தனியாக நின்ற இருவரையும் சேர்ந்து நிற்க சொல்லி கோயிலில் உண்டான முறைப்படி சாமி முன்பு வைத்தே.,  ஜெ.கே யின் சரிபாதி ஆகினாள்  சரண்யா…

கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கவும். அங்கு வைத்து செய்ய வேண்டியதை மட்டும் செய்து விட்டு., பின்பு சாமி முன்னிலையில் ஒரு பட்டுத்துணியை வைத்து இருவர் கையையும் கட்டி கோயிலை ஒரு முறை சுற்றி வந்து விட்டு இங்கிருந்து கிளம்புங்கள் என்று சொன்னார்கள். அதன்படியே இருவரும் கோவிலை சுற்றி வந்த பின்பு அங்கிருந்து மண்டபம் வந்தனர்.

அதன் பிறகு அவர்களுக்கான அந்த நாள் வேகமாக ஓடியது.,  சரண்யாவை சிறுவயதில் பார்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது தான் பார்க்கிறார்கள்.

மற்றவர்களுக்கு எப்படியோ சரண்யாவிற்கு திருமணம் சற்று பதட்டமாகவே இருந்தது.,  தன் மனம் என்ன நினைக்கிறது என்பதை அவளாலே உணர்ந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் தான் இருந்தாள்.

மண்டபத்திலிருந்து கிளம்பும் போது ஜெ. கே வீடு.,  சரண்யாவின் அப்பா பாட்டி வீடு., என இரண்டு வீட்டிற்கும் மாறி மாறி செல்ல வேண்டிய சடங்குகள் எல்லாம் முடித்து.,  மாலை இருள் கவியத் தொடங்கும் நேரம் ஜெ. கே வீட்டிற்கு சரண்யா அழைத்துவரப்பட்டாள்.

தற்செயலாக சரண்யாவின் அம்மா பாட்டி ரத்னா பேத்திகாக பார்த்து பார்த்து உடை எடுத்து வைத்திருந்ததால் இப்பொழுது அவளுக்கு இங்கு தேவையானது இருந்தது., மற்றபடி இரண்டு நாளில் அவர்கள் எல்லாம் ஊருக்கு சென்று அவளுக்கு தேவையானதை எடுத்து வருவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.,

அவளது யோசனை எல்லாம் ரிசார்ட்.,  கொடைக்கானல்., பழப்பண்ணை  என்று அவளது பிசினஸை சுற்றி வந்தது.,  ஆறுமாதம் என்றாலும் தனியாக அவள் கவனித்து வந்த அவளுடைய பிசினஸ்  என்னாகும் என்ற எண்ணமே அவளுக்கு தோன்றியது.., இதை பற்றி யாரிடமாவது பேச வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே விசாலாட்சி அவள் தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்து அவளோடு வந்து அமர்ந்தார்.  “கார்த்தி எங்கம்மா போனான்” என்று கேட்டார். இவள் தெரியல என்றாள்..

அதே நேரம் காலையிலிருந்து தன் வேலைகள் அனைத்தையும் மேனேஜரின் பொறுப்பிலும்., வேலை பார்ப்பவர்கள் பொறுப்பில் இருந்ததால்., அவர்கள் ஒவ்வொருவரிடமும் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தான். பின்புறமாக நின்றான்.

அவனைத் தேடி வந்த விசாலாட்சி “கார்த்தி அந்த பிள்ளை தனியா உட்கார்ந்து இருக்கா.,  நீ இங்க போன் பேசிட்டு இருக்க வா”., என்று அழைத்தார்.

போனில் பேசுவதை சற்று நிறுத்தியவன்., “அவ கூட கொஞ்ச நேரம் இருங்க மா., இப்ப வர்றேன்”., என்று சொல்லி இருந்தான்.

மனதிற்குள் ஒரு  நிமிடம் அவன் முகத்தை பார்த்து மலைத்து தான் போனார். தன் மகனின் முகத்தில் முழுமையான  சந்தோஷம் காண்கையில்., பல வருடங்களுக்கு பிறகு கண்ணும் சிரிப்பில் மலர்ந்திருப்பதை கண்டவர்., ‘எப்போதும் வேலை வேலை என்று இருப்பதால்., அவன் முகத்தில் எப்பொழுதும் ஒரு இறுக்கம் இருக்கும்., அதிகமாக யாரிடமும் சிரித்து பேச மாட்டான். வீட்டில் உள்ளவர்களிடம் சாதாரணமாக பேசினாலும் எப்பொழுதும் அவனிடம் ஒரு கடினத்தன்மையை பார்க்க முடியும்., ஆனால் இன்று அந்த கடினத்தன்மை எதுவுமில்லை’ என்று யோசித்த விசாலாட்சி க்கு அதன்பிறகு புரிந்தது.,  ‘ஒருவேளை மகன் மனதில் இவளை தான் நினைத்திருப்பானோ,  நமக்குத்தான் தெரியவில்லையோ’ என்று நினைத்தவர் ‘எது எப்படியோ அவன் மனம்போல திருமணம் நடந்துவிட்டது.,  என்று யோசித்தவர் எதுக்கும் ஒரு முறை அவனிடம் பேசிக் கொள்ள வேண்டும்.,  எப்படியோ திவ்யாவிடம் இருந்து தப்பித்தது பெரிய நிம்மதி என்பதுபோல யோசிக்கிறானோ.,  இல்லை உண்மையிலேயே சரண்யாவை அவனுக்கு பிடித்திருக்கிறதா’ என்பதே அவருக்குள் பெரிய கேள்வியாக தொக்கி நின்றது. இருந்தாலும் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் பிள்ளையின் வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும்.,  என்ற எண்ணத்தோடு கடவுளிடம் வேண்டுதல் வைத்துவிட்டு சரண்யாவின் அருகில் வந்து அமர்ந்தார்.

சரண்யாவின் கையை பற்றிக் கொண்டு., “சரண்யா முடிஞ்ச விஷயத்தைப் பற்றி யோசிக்கக்கூடாது., இனிமேல் நீதான் இந்த வீட்டோட உரிமைக்காரி யார் வர்றதா இருந்தாலும்.,  உன் கிட்ட கேட்டுட்டு தான் வரணும்” என்று சத்தமாக சொன்னார். வீட்டில் ஆங்காங்கே அமர்ந்திருந்த வீட்டினர்களின் காதில் விழத்தான் செய்தது.

Advertisement