Advertisement

அவளோ எதுவும் பதில் பேசவில்லை., ஏன் விசாலாட்சி அப்படி சொல்கிறார் என்பது வீட்டில் ஆங்காங்கே அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரிந்தாலும்., எல்லோரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள். ‘உண்மைதானே இனி இவள்தானே உரிமைக்காரி’ என்ற எண்ணம் அனைவருக்குமே தோன்றியது. பாட்டி மட்டும் சற்று வாடினார் போலத் தெரிந்தார்…

சற்றுநேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்தவர். பின்புறம் திரும்பிப் பார்க்க அப்போதும் போனில் தான் பேசிக்கொண்டிருந்தான் ஜெ. கே.

மெதுவாக அவளை அழைத்துக் கொண்டு உணவு அருந்தும் இடத்தில் வந்து அமர்ந்து சரண்யா உடன்  பேச தொடங்கினார் விசாலாட்சி., “அம்மாடி சரண்யா, நான் உன்கிட்ட பேசறது உனக்கு எப்படி தோணுதோ.,  உன்கிட்ட நான் எல்லாத்தையும் வெளிப்படையா பேசனும்னு நினைக்கிறேன்.  இந்த கல்யாணம் திடீர்னு ஏற்பாடு பண்ணிட்டாங்க அப்படின்னு உனக்கு தோன்றலாம்..,  அவ கல்யாணம் ஆனா பொண்ணு ன்னு தெரிஞ்சதால தான்.,  நம்மள பேசி இருக்காங்க  ன்னு., நீ நினைக்கலாம். ஆனால் எனக்கும் என் பையனுக்கும் இந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்ல., அது  இங்க  மாமா எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.,   ஆனா யாரும் வாயே திறக்கல., ஏன்னா உங்க பாட்டி., தாத்தா வோட ஆசை., அது இதுன்னு சொன்னாங்க.,  நான் அமைதியா இருந்துட்டேன்.,  எங்க கார்த்திக்கு  இந்த கல்யாணத்தில் இஷ்டமே இல்லை.,  இத்தனை நாள்ல பிள்ளை முகம் வாடிப்போய்  கல்யாணம் களையே  இல்லாமல் எப்படியோ இருந்தான்.  எனக்கு உண்மையிலேயே வேதனையா இருந்துச்சு., என் பிள்ளையை  இப்படி பார்ப்பதற்காக நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் ன்னு., அது மட்டும் இல்லாமல் இந்த கல்யாணம் பேசின நாளிலிருந்து என் பிள்ளை வீட்டில் சாப்பிட்டது ஒரு நேர சாப்பாடு தான்.  கேட்டா வெளியே சாப்பிட்டேன் மா., ன்னு சொல்லுவான்.  எனக்கு தெரிஞ்ச வரைக்கும்  சாப்பிட்டு இருக்க மாட்டான்.,  கல்யாணம் பேசுனது க்கு அப்புறம் தான் மெலிஞ்சு போயிட்டான்” என்று சொன்னார்.

சரண்யா அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.,  என்னமா அப்படி பார்க்க.,  இதெல்லாம் எதுக்கு நான் சொல்லுதேன்  தானே..,  ஏன்னா  நீ தெரிஞ்சுக்கணும்.,  என் பிள்ளையை புரிஞ்சுக்கனும்.,  உன் கிட்ட சொல்றேன்.,   அவன் முகம் எனக்கு தெரிஞ்சி., அவன் பிசினஸ் வேலை ன்னு., ஆரம்பிச்சதுக்கு அப்புறம் முகத்துல எப்பவும்  ஒரு இறுக்கம் வந்துருச்சு., ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் முகம் சிரிச்ச முகமா இருக்குன்னா.,  அது இன்னைக்கு தான்., நேத்து கூட அவன் சந்தோஷப்பட்டான் தான்., ஆனாலும் அவன் கண்ணுல யோசனை தெரிஞ்சுச்சு., ஆனால்   இன்னைக்கு நான் அவன் முகத்துல., நான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் அவனோட சந்தோஷத்தை பார்த்த மாதிரி எனக்கு தோணுது..,  பெத்தவளுக்கு தெரியாதா பிள்ளையோட முகம்.,  எனக்கு என் புள்ளையை பற்றி தெரியும் ., என் பிள்ளை முகம் எப்படி மாறினால் என்ன அர்த்தம் ன்னு.,   எனக்கு தெரியும்.,  அவன் சந்தோஷமா இருக்கணும்னு தான் ஆசைப்படுறேன்.,  இப்போ என் பிள்ளை சந்தோஷமா இருக்கும்னு நம்புறேன் மா.,  இந்த சந்தோஷம் வாடாம பார்த்துக்கோ”..,  என்று சரண்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார்.

அவளுக்கு தான் என்னவோ போல் ஆகிவிட்டது. “அத்தை ஏன் இப்படிலாம் பேசுறீங்க” என்று அவள் கையை உருவிக் கொள்ள முயற்சி செய்தால்., ஏன் என்றால் அவர் கேட்டது வேண்டுவது போல இருந்தது.

” இல்லம்மா ஒரு  ஆம்பிளையோட சந்தோஷமோ., வருத்தமோ.,  கல்யாணத்துக்கு முன்னாடி அவன்  அதுக்கு காரணம் குடும்பத்திலுள்ள யாரோ ஒருத்தங்க ன்னு  இருக்கலாம்.,  கல்யாணத்துக்கு அப்புறம் அவன் சந்தோஷமா இருக்கான் அப்படின்னா அதுக்கு காரணம் அவன் பொண்டாட்டியா மட்டும் தான் இருக்க முடியும்.,  அதை மீறி வருத்தபடுறதா  இருந்தாலும்.,   அதுக்கு காரணம் அவன் பொண்டாட்டியா தான் இருக்க முடியும்.,  அந்த விதத்தில் இனிமேல் அவனை பார்த்துக்க வேண்டியது நீ தான்.,  கண்டிப்பா என் புள்ள., ரொம்ப நல்ல புள்ள., எந்த கெட்ட பழக்கமும் கிடையாது., எந்த தப்பான பழக்கம் கிடையாது.,   அதுதான் உன்கிட்ட நான் சொல்றேன்.,  நீ நல்லபடியா பார்த்துக்கோ”.,  என்று சொன்னார்.

அவளும் விசாலாட்சி கையை பிடித்துக் கொண்டு “நம்புங்க அத்தை.,  ஆனா நான் உடனே இங்க அப்படியே செட்டாகி., குடும்பத்தோட ஒன்றிருவேன்,  அப்படின்னு என்னால சொல்ல முடியாது.  ஆனா கண்டிப்பா என்னைய  நான் மாத்திக்குவேன்.,  கொஞ்சநாள்ல குடும்பத்தோட என்னால ஒத்துப் போக முடியும்., ஆனால் கொஞ்சம் டைம் எடுக்கும் நினைக்கிறேன்., நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்”., என்று அவர் கையை பிடித்தபடி சொன்னவள்.

“அது மாதிரி நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்பேன் அத்த.,  நான் பண்றது சரி இல்லன்னா., இல்ல நான் பண்ணுறது ஏதாவது தப்புனா., நீங்க தயவு செய்து சொல்லி கொடுத்துடுங்க., எப்படி சொல்றதுன்னு  யோசிக்காதீங்க” என்று கையை பிடித்துக் கொண்டு சொல்ல., அவள் கையை பிடித்தபடி எழுந்தவர்.  அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

“எனக்கு பொம்பள புள்ள கிடையாது.,   நீ என் பிள்ளை தான்.,  வீட்டுக்கு வர்ற மருமகளா மகளா நினைச்சு பார்த்துக்கிட்டா தான்.,  நல்ல மாமியாரா இருக்க முடியும்.,  அந்த வகையில் நான் நல்ல மாமியாரா இருப்பேன் னு நம்புறேன்., உனக்கும் என் மேல எதுவும் கோவமா இருந்தாலும் இல்ல.,  நான்  சொல்றது பிடிக்கலினாலும்., நீ என் கிட்ட சொல்லிரு, அவன் காதுக்கு கொண்டு போகாத, உங்க அம்மாவா இருந்தா, எப்படி உரிமையா பேசிவீயோ., அதை போல உரிமையோட என்கிட்ட பேசு., நானும் என் புள்ளையா இருந்தா  எப்படி சொல்லுவேனோ அது போல சொல்றேன் பாத்துக்கோடா., என்று சொல்லி அவள் தலையை கோதி விட்டு அவள் நெற்றியில் முத்தம் வைக்கவும்., ஜெ. கே உள்ளே வரவும் சரியாக இருந்தது…

ஜெ. கே உள்ளே வந்து அவன் கண்ட காட்சி., விசாலாட்சி சரண்யாவின் நெற்றியில் முத்தம் வைப்பதும்., சரண்யா விசாலாட்சியின் இடுப்பை கட்டிக்கொண்டு அவள் மேல் முகம் புதைத்து இருப்பது மட்டும் தான்…

ம்ஹூம்…. என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டவன் இருவரையும் பார்த்தபடி., இருவரும் அமர்ந்திருந்த இடத்தில் சற்றுத்தள்ளி அவனும் அமர்ந்தான்.

“என்ன விஷயம் மா., ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்தீங்க”.,  என்று கேட்டான்.

” ஏண்டா நீ என்ன பேசிட்டு இருந்த ன்னு.,  நாங்க யாராவது கேட்டோமா., இல்ல இல்ல.,  அப்புறம் எதுக்கு நாங்க என்ன பேசிட்டு இருந்தோம் ன்னு வந்து கேக்குற..,  உன் வேலை எது உண்டோ, அதை மட்டும் பாரு”., என்றார் விசாலாட்சி.

சரண்யாவும் சிரித்துக்கொண்டு விசாலாட்சியும் அவனும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவனோ  “அம்மா இதெல்லாம் நியாயமே இல்லை.,  என்ன பேசினீங்க ன்னு தான் கேட்டேன்.,  நான் இவ்வளோ நேரம் பிசினஸ் விஷயமா பேசிட்டு இருந்தேன்.., நீங்க ரெண்டு பேரும் என்னமோ பேசிட்டு இருந்தீங்க., நான் வரும் போது அவளை கொஞ்சிட்டு இருந்தீங்களே.,  என்ன விஷயம்” என்று கேட்டான்.

“டேய்., நானே இவ்வளவு நாள் பொம்பள பிள்ளை இல்லாமல்  இருந்தேன்.,  இப்பதான் எனக்கு ஒரு பிள்ளை கிடைச்சிருக்கு.,  கொஞ்ச கூட விட மாட்டீங்க.,  இத பார்த்த உடனே உனக்கு பொறுக்காதே” என்று கேட்டார்.

“அது சரி நடத்துங்க நடத்துங்க” என்று சொன்னவன் “உங்க மாமியார் பாக்கலையா ,  நீங்க கொஞ்சிட்டு இருக்குறத” என்று கேட்டான்.

“ஏன்டா,  உனக்கு இப்படி ஒரு எண்ணம்., இத்தனை வருஷத்துக்கு அப்புறம் எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை இழுத்து  விட பார்க்கீறியா” என்று சொன்னார்.

“நான் எதுக்கு இழுக்கிறேன்.,  நேத்தே  தான்., சண்டை போட்டீங்க இல்ல ரெண்டு பேரும்”., என்று சொன்னான்.
சற்று நேரம் கழித்து அம்மா.,  “நான் முகம் கழுவி., டிரஸ் மாத்திட்டு வர்றேன் மா”.. என்ற படி எழுந்தான்…

“சரி போய்ட்டு வா” என்று சொன்னவர் “ஏதாவது குடிக்கிறியா” கொண்டு வருவா என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தவர்.,  சரண்யாவிடமும் “நீ ஏதாவது குடிக்கலாமே மா”., என்று கேட்டார்.

அவனும் வேண்டாம் என்க.,  அவளும் “இல்ல த்த.,  வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.  அதே நேரத்தில் இரவு உணவுக்கான ஏற்பாடுகள் பின்பக்கமாக சமையல்காரர்கள் முன்னிலையில் நடக்க சின்னமாமனார் வீட்டு ஆட்கள் அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட.,  பரிமாற., என ஏற்கனவே  தயார் செய்யப்பட்ட  இடங்களை சுத்தம் செய்து பந்தி பரிமாற ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தனர்.  ஜெ.கே உடை மாற்றி அதே இடத்தில் வந்து அமர., விசாலாட்சி தான் “நீயும் வேணா போய் ட்ரஸ் மாத்திட்டு வாம்மா”., என்று  அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்…

அதற்குள் ஏதோ வேலையாக ஜெ.கே யின்  சின்ன சித்தி அழைக்க., விசாலாட்சி “இந்தா  வந்துடுறேன்” என்று சொல்லி விட்டு போனார்.

ஜெ. கே சரண்யாவை பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் பார்ப்பதை உணர்ந்து அவள் தலையை குனிந்து கொண்டே இருந்தாள். சற்று நேரத்தில் அவன் தான் “சாயா பேசணும்” என்றான்.

சாயா என்ற அழைப்பு அவன் அவளை அவளது ஒன்பதாம் வகுப்பிலிருந்து அழைக்க தொடங்கினான். அந்த 2 வருடமும் சாயா என்றழைப்பது தான் அவனுடைய வழக்கம்., அதுவும் எல்லோருக்கும் தெரியும் அப்போதெல்லாம்
“கடும் சாயா வா., இல்ல மில்க் சாயா வா”  என்று வேண்டுமென்றே அவளை கிண்டல் செய்து கொண்டிருப்பான்…  அவனை  பொருத்த வரை சாயா என்பது சரண்யாவின் சுருக்கம் தான்.

அவளும் அவன் கல்லூரி படிக்கும் காலத்தில் அதே சமயத்தில் இருந்து தான் அவனை ஜெ. கே என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள்.  அதுவரை அவனை பெரியவர்கள் அத்தான் என்று அழைக்க சொன்னாலும் அவள் அழைத்தது கிடையாது., அதற்கும் திவ்யா சண்டை பிடிக்க., அதன் பிறகு தான் ஜெ. கே என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள். அதேசமயம் தான் அவனும் அவளை சாயா என்று அழைக்கத் தொடங்கியிருந்தான்.

Advertisement