Advertisement

8

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்ஆனாலும்
அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே

எல்லோரும் சிரித்தாலும் சாதாரணமாக அந்த சிரிப்பு இல்லை என்பதை தாத்தா உணர்ந்து கொண்ட உடன் கோயில் பிரசாதத்தை மங்கையின் கையில் கொடுத்து “கோயில் பிரசாதம் மா எல்லாருக்கும் கொடு” என்று சொல்லிவிட்டு பாட்டி இடம் என்னவென்று கேட்டார்.

பாட்டி அவரை தனியாக அழைத்துக் கொண்டு சென்று விஷயத்தைச் சொன்னார்.  தாத்தாவிற்கு ‘என்ன பொண்ணுடா இப்படி இருக்கு’ என்ற எண்ணமே தோன்றியது.

அதற்குள் பாலா வீட்டினர்., நாளை காலை கல்யாணம் முடித்து அவளை அழைத்துச் செல்வதாக சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் ஜெ.கே சொந்த பந்தங்களுக்குள்.,  யார் பொண்ணை கல்யாணம் பண்ணுவது என்று ஒரு பேச்சுவார்த்தை ஓடியது.,  அவன் அம்மா வழியில் உள்ளவர்களும் சரி..,  அப்பா வழியில் உள்ளவர்களும் சரி..,  ஒன்று விட்ட இரண்டு விட்ட சொந்தம்., என்று அனைவரும் ஜெ. கே க்கு பொருத்தமாக யார் வீட்டு பெண் இருப்பாள் என்று ஆர்வத்தோடு பேச தொடங்கினர்..

அதேநேரம்

கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

என் இரு விழி நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை கண்டாயா
என் இருதய நரம்பினை அருத்தவன்
எவனோ அவனை கண்டாயா…

என்ற பாடல் ஒலியோடு சரண்யாவின் போன் ஒலிக்க தாத்தா அவசரமாக எடுத்து பாடல் சத்தத்தை குறைக்க முயலும் போது.,

முரளி வாங்கி போனை அட்டென்ட் செய்ய தொடங்கினார்.., “சொல்லு மா.., அவ வெளியே நிற்கிறா, வந்தவுடன் பேச சொல்றேன்” என்று சொன்னவர். சரண்யாவிற்கு  அவள் தோழியிடம் இருந்து வந்த போனை பேசினார்.,

மங்கையிடம் போனை கொடுத்து “சரண் ட்ட குடு., காலேஜ் ப்ரண்ட் ட்ட இருந்து போன்” என்று சொன்னார்.

அப்போது  தான் விசாலாட்சி “சரண்யா வந்திருக்காளா.,  என் ட்ட.,  நீங்க சொல்லவே இல்லையே தம்பி”., என்று முரளியிடம் கேட்டார்.,

அதற்குள் அவர்கள் திவ்யா திருமணம் பேசி முடித்திருக்க.,  விசாலாட்சி கேட்டதற்கு முரளி பதில் சொல்லு முன் சீதா சொன்னார்.,  “ஆமா மதினி., வந்திருக்கா..,  ஆனா மானஸ்தி.,  அது தான் இந்த நிமிஷம் வரைக்கும் இந்த வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்கல..,  உங்க வீட்டுக்கும் வரல.. என்றார். அங்கு அப்படி ஒரு அமைதி நிலவியது.

“அண்ணி அப்படி இல்ல” என்று முரளி ஏதோ சொல்லத் தொடங்கும் முன்…,

“இல்ல தம்பி நான் யாரையும் குறைவா சொல்லலை.., அவகிட்ட பாடம் படிக்கனும்., நேத்து அவளைப் பார்த்த பிறகு., எனக்கு தோணுச்சு நான் பிள்ளை வளர்ப்புல ஏதோ தப்பு பண்ணி இருக்கேன் ன்னு.,  ஏழு வருஷமா இந்த வீட்டுக்குள்ள வந்தது கிடையாது.,  இந்த ஊருக்கு வந்தது கிடையாது..,  ஆனா நேத்து பேசும் போது எதையுமே முகத்தில் காட்டிக்காமல் சாதாரணமா பேசினா.,  ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் இங்க வரல.,  காலையிலேயே கிளம்பி  கோயிலுக்கு போயிட்டா.., இப்பவும் ஃபங்ஷன் இருக்கு ன்னு, தான் கோயிலில் பெரியப்பாவ கூட்டிட்டு  வந்து விட்டாலும் அவள் வெளியே தான்.,  இப்பவும்  வீட்டுக்குள் வர மாட்டா.,  எனக்கு தெரியும்”..,  என்று சொன்னார் கண் நிறைந்த கண்ணீரோடு.

விசாலாட்சி முரளியிடம் தம்பி கேட்பேன்.,  தப்பா நினைக்காதீங்க தம்பி.,   “உங்க மகள.,  என் வீட்டு மருமகளா, அனுப்பி வைங்க.,  யாரும் எந்த வார்த்தையும் நாக்கு மேல பல்லு போட்டு பேச முடியாத அளவுக்கு ., அந்த வீட்டோட மருமகளா., எங்க வீட்டோட மகாராணியா  அவள நான் கூட்டிட்டு போறேன்.., எனக்கு மருமகள எங்கிட்ட குடுத்துருங்க”.., என்று கேட்டார்.,

மற்றவர்கள் யார் பெண்ணை ஜெ. கே க்கு கெடுப்பது என்று பேசிக்கொண்டிருக்க..,  விசாலாட்சியும் யாரிடமும் எதைப்பற்றியும் பேசாமல் நேரடியாக முரளியிடம் கேட்டுவிட்டார்..

யாரும் எதுவும் பதில் சொல்வார்கள் என்று பார்க்க யாரும் எதுவும் சொல்லவில்லை.,  எல்லோரும் விசாலாட்சியை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்..,

விசாலாட்சியும் ஜெ. கே ன் முகத்தைப் பார்த்து விட்டு அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை பார்த்து மேற்கொண்டு பேசத் தொடங்கினார்., “நாளைக்கு அதே முஹுர்த்ததில் அதே மாதிரி.,  நம்ம பேசி வச்ச மாதிரி கல்யாணம் முடிச்சிடலாம்.,  நீங்க சொல்லுங்க தம்பி., மங்கை நீ  என்ன சொல்லுதம்மா”., என்று விசாலாட்சி யாரைப் பற்றியும் யோசிக்காமல் கேட்டார்.

மங்கை முரளியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு.,  இருவீட்டு பெரியவர்களையும் பார்க்க.,  அனைவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தெய்வானை பாட்டி தான் “நீ பேசாம பொசுக்குன்னு கேட்டுட்ட.,  அந்த புள்ள வெளிநாட்டில் பிறந்த பிள்ளை.,  வளர்ந்ததும் இங்க எல்லாம் இல்ல..  பின்ன எப்படி கொடுப்பாங்க ன்னு எதிர்பார்க்க”..,  என்று கேட்டார்.

” நான் உங்க கிட்ட அப்பவே சொல்லிட்டேன் பேசாதீங்க ன்னு.,    உங்களுக்கும் எனக்கும் பேச்சு கிடையாது..,  நீங்க இதுல தலையிடாதீங்க.., என் மகன் கல்யாணத்துக்கு நான் கேட்டேன்.., உங்ககிட்ட நான் எந்த அறிவுரையும் கேட்கலை.,  என் பிள்ளை கல்யாணத்தை எனக்கு பார்க்க தெரியும்”., என்று மறுபடியும் கோபத்தோடு பேசிவிட்டார்.

” முரளி தம்பி.,  உங்க ரெண்டு பேரையும் தான் கேக்குறேன்., நீங்க பொண்ண பெத்தவங்க நீங்க தான் முடிவு சொல்லணும்”என்று சொன்னார்.

இரண்டு வீட்டுப் பெரியவர்களும் மங்கையும் முரளியும் தனியே அழைத்துச் சென்று பேச.,  அதேநேரம் சீதாவும், சந்திரனும் ., வந்து சேர்ந்து கொள்ள அனைவருக்கும் சம்மதம் என்ற வார்த்தையே வந்தது.

சரண்யாவிடம் கேட்கவேண்டும் என்று சொன்னதற்கு., சீதா தான் “சரண்யா இங்க வர மாட்டா.,  நம்ம வெளிய போகலாம்”., என்று சொல்லவும்., வெளியே வந்தனர்.

அவர்கள் வெளியே வரும் போது காரை நிறுத்தி விட்டு அங்கு தோட்டத்திற்குள் இருந்த மாமரத்தின் அடியில் திருமணத்திற்கு வந்த உறவினர் பிள்ளைகளெல்லாம் விளையாடிக் கொண்டும்., மரக்கிளையை பற்றி ஆடிக் கொண்டும் இருக்கவும்., இவள் காரின் மேல் சாய்ந்து நின்று பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவர்கள் அனைவரும் வெளியே வந்து அவளை பார்த்தது அவள் அறியவில்லை., கடல் வண்ண காட்டன் சில்க் புடவை கட்டியிருந்தவள்., முடியை நுனியில் மட்டும் பின்னல் இட்டு தலையில் கொஞ்சமாக பூ வைத்து இருந்தாள். ஒரு புறமாக சாய்ந்து நின்றாள்.

அப்போது தான் ஒரு பையன் மாங்காய் பறிக்க முயற்சி செய்து.,  கம்பை வைத்து தட்டிக் கொண்டிருந்தான்., இவளோ அவனை நிறுத்திவிட்டு போய் அவளுக்கு எட்டும் உயரத்தில் இருந்ததால்., அச்சிறிய மரக்கிளையை பிடித்து அந்த மாங்காயைப் பறித்து அப்பையன் கையில் கொடுத்தாள்….

முரளி “எங்களுக்கு சம்மதம்., சம்மதம் இல்லை ங்கிறது இரண்டாவது கா..,  முதல்ல சரண்யா சம்மதிக்கணும்., சரண்யாக்கு  சம்மதம் னா.,  எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.., எங்களுக்கு சம்மதம் தான்” என்று சொன்னவர்  சரண்யாவை அழைத்து வருவதாக கிளம்பினார்.

அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜெ.கே “மாமா ஒரு நிமிஷம் நீங்க இருங்க.., நான் போறேன்” என்று சொன்னான்.

” கார்த்தி” என்று விசாலாட்சி கேள்வியாக பார்த்தார்.

” எனக்கு கொஞ்சம் பேசணுமா.., நான் பேசிட்டு வரேன்.,  நான் பேசும்போதே தெரிஞ்சிடும் அவளுக்கு சம்மதமா.,  சம்மதமில்லையா”., என்று சொன்னான்.

முரளி தான் இல்ல தம்பி.., தப்பா எடுத்துக்காதீங்க., நான் முதல்ல அவ கிட்ட எல்லாவற்றையும் சொல்லுறேன்.,  அதுக்கப்புறம் நீங்க பேசிக்கோங்க” என்று சொன்னார். “ஏன்னா இங்கு நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லணும் அவளுக்கு.,  முதல்ல நீங்க போய் திடீர்னு கேட்டீங்கன்னா.,  அவ எதுவும் தப்பா எடுத்துக்க கூடாது” என்று சொன்னார்.

அதுவும் சரியாக பட சரி என்று அங்கேயே நின்று கொண்டான். அப்போதுதான் சொந்தத்தில் உள்ள பெரியவர்கள் எல்லாம் “நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாம்பூலம் மாற்றனும்” என்று சொன்னார்கள்.

Advertisement