Advertisement

விசாலாட்சியும் “எல்லா நேரமும் நல்ல நேரம் தான் ஜாதகம் பார்த்து.,நேரம் பார்த்து  தான்  எல்லாம்  பண்ணுனீங்க.,  என்ன நடந்துச்சு, ஏற்கனவே கல்யாணமான ஒரு பிள்ளைக்கு தான் ஜாதகத்தையும்., நேரத்தையும்  நீங்க பாத்திருக்கீங்க”.,  என்று சொன்னார். சீதாவிற்கு மனம் ஒரு மாதிரியான வலியாக உணர்ந்தார்….

அவள் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருப்பதை.,  பார்த்து விட்டு வேகமாக முரளி அங்கு செல்ல., அவரின் அழைப்பு கேட்டவுடன்.,  அப்பா என்று திரும்பி நின்று பேச தொடங்கினாள்.

முழுதாக திரும்பாமல் இங்கு இருப்பவர்களுக்கு  தெரியாத அளவிற்கு நின்றாள்.,  முரளி சொல்ல சொல்ல ம்ம்ம்., ம்ம்ம்., என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் வரவில்லை.,

“நீ என்னம்மா சொல்ற ம்ம் ம்ம் ம்ம் ங்கிற”.,  என்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றவள். “எனக்கு ஜெ.கே கிட்ட பேசணும் பா”.,  என்று மட்டுமே சொன்னாள்..

“இல்லம்மா நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிச்சயதார்த்தம் முடிக்கணும் ன்னு., சொல்றாங்க” என்று சொன்னார்.

“பேசனும் பா., மற்ற படி ஒன்றும் இல்லை” என்று மட்டும் சொன்னாள். வேறு எதுவும் சொல்லவில்லை.,

“சரி வா” என்று அவளை அழைத்தார்.

“நீங்க போங்க ப்பா.,  வரேன்” என்று சொல்லிய படி அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் கையை காட்டிவிட்டு கிளம்பினாள்., அப்பாவின் பின்னே நடந்தவளுக்குள் மனதில் ஆயிரம் யோசனை இருந்தது.

‘ காலையில் சாமியிடம் வேண்டியது ஒன்று என்றால்., மனம் முழுவதும் ஏதோ வித்தியாசமான உணர்வை அவளால் உணர முடிந்தது.,  தன் மனதில் எத்தனை நாள் இருந்த எண்ணம்  என்ன’ என்று யோசிக்கும் அளவிற்கு அவள்  தன்னைத்தானே குழப்பிக்கொள்ள தொடங்கியிருந்தாள்…

அங்கு வரவும் பெரியவர்கள் “முதலில் நல்ல நேரம் முடிவதற்குள் தட்டை மாற்றிக் கொள்வோம்” என்று சொன்னார்கள்.

அதே நேரம் ஜெ.கே “முதலில் பேசி விடுகிறேன்” என்று சொன்னான். அவளும் “பேசவேண்டும்” என்று சொன்னாள்.
“தட்டு மாத்தின அப்புறம் பேசிக்கோங்க” என்று பெரியவர்கள் அவசரப்படுத்தினர்.

இருவரும் வெகு நாட்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் இருவரும் வேறு எதைப்பற்றியும் பேசாமல் ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் ஆராய்ச்சியில் இறங்கத் தொடங்கினர்.

அந்நேரம் வீட்டிற்குள் இருந்து வந்த திவ்யா “நீங்க வேற எந்த பொண்ண வேண்டும் னாலும் பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.,  ஆனால் இவளை கல்யாணம் பண்ணக்கூடாது”., என்று கத்த தொடங்கினாள்.

அதுவரை அமைதியுடன்.,  நல்லபடியாக எல்லா காரியமும் நடக்க வேண்டும் என்று இருந்தவர்., முதல் முறையாக சந்திரன்,  திவ்யாவை பார்த்து இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின., உன்னை இங்கேயே கொன்று புதைத்து விடுவேன்.,   என்ன பேச்சு பேசுற வாய மூடிட்டு போ”., என்று சொன்னார்.

அதன் பிறகு ராமையா செண்பகம் இருந்த வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடத்தலாம் என்று விசாலாட்சி சொல்ல அனைவரும் சம்மதித்தனர்.,

எனவே பெரியப்பா வீட்டில் இருந்த சொந்தபந்தங்கள் அனைத்தும் பாட்டியின் வீட்டிற்கு நகர.,அவளையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கு சென்ற பிறகு பெரியவர்கள் பேச தொடங்கினர்.

“சரி நீங்க மத்ததெல்லாம் பேசிக்கோங்க.,   சீர்வரிசை பற்றி ஏதும் பேசனுமா” என்று உறவினர்களில் ஒருவர் கேட்டார்.

விசாலாட்சி ஒரே வார்த்தையில் “தப்பா எடுத்துக்க கூடாது.,  எங்க மாமியார் மாமனார் வீட்டுக்காரர் எல்லாரும் இருக்கும் போது நான் பேசுறேன் என்று பெரியவங்க யாரும் தப்பா எடுத்துக்காதீங்க..,  இது என் பிள்ளை கல்யாணம் இப்பதான் நான் பேச வேண்டிய நேரம் ன்னு.,  நினைக்கிறேன். ஏன்னா என் பிள்ளை சம்மதம் இல்லாமல் தான் கல்யாணம் பேசி முடித்தார்கள்.,சரி  உறவு., சொந்தம் பந்தம் எதுவும் விட்டுப் போயிடக் கூடாது என்பதற்காக நான் அமைதியா இருந்தேன். ஆனா என் பிள்ளைக்கு அந்தக் கல்யாணத்தில் இஷ்டமே இல்லை.,இருந்தாலும் குடும்பத்துக்காக சரி பண்ணிக்கிறேன்னு சொன்னான். ஆனா அவன் முகத்துல கொஞ்சம் கூட  சந்தோஷம் எதுவும் தெரியல., அது எல்லாருக்குமே தெரியும், இப்போ என் பையனோட சந்தோஷம் மட்டும் தான் எனக்கு முக்கியம்., இந்த கல்யாணம் கண்டிப்பா என் மகனுக்கு பிடிக்கும் நம்புறேன்., அதனால சீரு செனத்தி  எதுவுமே நான் பேச தயாரா இல்ல.,  சரண்யா  எங்க வீட்டு மருமகளா.,  அந்த வீட்டுக்கு உரிமைக்காரியா வரணும்.,  அது மட்டும் தான் இப்ப நான் கேட்கிறது., மங்கையும் முரளியும் அதுக்கு சம்மதம் சொன்னா போதும்.,  வேற யார் சம்மதம் எனக்கு தேவையில்லை”என்று மறைமுகமாக பெரியவர்கள் அனைவரையுமே ஒதுக்குவது போலவே பேசினார்.

அதற்கு காரணம்  சீதா., சீதா கணவரும் ஏதும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் பெரியவர்கள் மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்லாவிட்டாலும்., திண்டுக்கல் தாத்தா பாட்டியும் சரி இங்கிருக்கும் ராமையா செண்பகமும் சரி., “இதுல நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு., மங்கையும் முரளியும் பெத்தவங்க., அவங்கதான் சம்மதிக்கணும்., என் பேத்தி சம்மதிக்கணும்.,   உங்க எல்லோருக்கும் புடிச்சிருந்தா., மத்த எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம்”., என்று சொல்ல மேற்கொண்டு பேசத் தொடங்கினார்கள்.

ஏற்கனவே முடிவு செய்தது போல., காலையில் கோயில் வைத்து  திருமணம் மண்டபத்தில் வைத்து மற்ற நிகழ்வு.,  அதன் பிறகு ஜெ.கே வீட்டிற்கு அழைத்துச் செல்வது என அனைத்தையும் பேசி முடித்த பிறகு., “உடனே மறுவீடு கூட்டிட்டு போக போறீங்களா” என்று கேட்க,  திண்டுக்கல் தாத்தாவோ  “ஒரு பத்து நாள் செல்லவிட்டு அங்க கொடைக்கானலுக்கு திண்டுக்கல் வந்தா போதும்” என்று சொன்னார்கள்.

எனவே அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு அவளுக்கு பிறந்த வீடு என்று கணக்குப் பார்க்கும் போது செண்பகம் பாட்டியும் தாத்தாவும் இருக்கும் வீடுதான் பிறந்த வீடு என்ற கணக்கில் வருவது.,  அங்கேயே மற்ற விஷயங்களை பேசி முடித்துக் கொள்ளலாம் என்று பெரியவர்களுக்கு பேசத் தொடங்கினார்.,அவளுக்கென்று எடுத்த சேலையை இவளுக்கு கொடுக்க மனமில்லாத விசாலாட்சி., இந்த சேலை , தாலி  எதுவுமே  வேண்டாம்.., நான் இப்ப போய் புதுசு எடுத்துட்டு வந்திருதேன்.,  இப்ப தாம்பூலம் மட்டும் மாத்திக்குவோம்., காலைல பொண்ண  எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது எடுத்துட்டு வர்ற நிச்சயப்பட்டை கட்டிக்கட்டும்.,  அதுக்கப்புறம் எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் மூஹுர்த்தத்திற்கு வேற புதுசே வாங்குவோம்.,  நாங்களே கோவிலுக்கு கூட்டிட்டு போய்க்கிறோம்”.,என்று விசாலாட்சி சொன்னார். அதே நேரம் அனைத்தும் முடிந்தவுடன் மதிய சாப்பாடு ஏற்கனவே அங்கு தயார் செய்யப்பட்டிருந்ததால் அதையே உண்டு விட்டு புடவை எடுக்க கிளம்பினார் விசாலாட்சி.,

அப்போது “கார்த்தி நீயும் வாடா., சேலை எடுத்துட்டு வந்துருவோம்” என்று சொன்னார்.

” நான்” என்று சொன்னவன்., ஒரு நிமிடம் அம்மாவை பார்த்து அவளையும் சேர்த்து கண்ணை காண்பித்தான்.

“சரண்யா நீ வாம்மா., உனக்கு எந்த சேலை பிடித்திருக்கோ.., வந்து எடுத்துக்கோ வா”., என்று சொன்னார்.

அவளோ “இல்லை நீங்க எடுங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”.. என்றாள்.

ஆனால் கார்த்தி தான் பெரியவர்களிடம் பேசி அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டான். எனவே தென்காசி சென்று புடவை எடுக்க சென்றனர். திருநெல்வேலி சென்று விட்டு திரும்பி வருவதற்கு நேரம் ஆகிவிடும் என்பதால்., தென்காசியில் உள்ள நல்ல கடையில் பட்டுப்புடவை எடுக்க சென்றனர்.  அங்கு அருகிலுள்ள தையல் கடையில் கேட்டு உடனே சட்டை தைத்து தர வேண்டும் என்று சொல்ல., தையல் காரரும்  தைத்துத்து வீட்டிற்கு கொண்டு வந்து தருவதாகவும் சொல்லி விட, எல்லா ஏற்பாடுகளும் மிக வேகமாக நடந்தது.,

புடவை கடையில் விசாலாட்சி தேடித்தேடி புடவை எடுத்தார்., அதிக கனம் இல்லாமல் அதே நேரம் பட்டின் தரம் குறையாத அளவிற்கு., நல்ல பச்சை கலரில் இப்போதுள்ள மாடலில் புடவை எடுத்து “இதுவே நிச்சயதார்த்தப் புடவை” என்றார். அது அவ்வளவு அழகாகவும் அவ்வளவு தரமானதாகவும் இருந்தது., பார்க்கும் போதே தெரிந்தது.

உடன் வந்தவர்கள் “விலை என்ன” என்று கேட்டார்கள். “விலை எல்லாம் பேசக்கூடாது.,  எங்க வீட்டுக்கு வர்ற மகாலட்சுமிக்கு நாங்க எடுக்கோம்.,  அவ்வளவு தான்”என்று சொன்னவர். அதுபோலவே திருமண புடவையும்,  நல்ல மாதுளம் பழ உள்ள  முத்துக்கள் நிறத்தில்., உடல் முழுவதும் மெல்லிய ஜரிகையோடு கூடிய அதிக கனமில்லாத நல்ல கட்டி ஜரிகை கையளவிற்கு இருக்குமாறு.,  பார்த்து எடுத்தார்., மங்கையோ “தான் எடுத்தால் கூட இப்படி  தேர்ந்தெடுத்து இருக்க மாட்டேன் அவ்வளவு நன்றாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.

அவளிடம் “உனக்கு  பிடிச்சிருக்கா” என்று விசாலாட்சி கேட்டார். அவள் சிரித்த முகமாக தலையாட்டினாள்.

எல்லோருமே நெருங்கிய சொந்தங்கள் ஏற்கனவே திருமண பட்டு எடுக்க என்று வந்தவர்களுக்கு சற்று ஆச்சரியம் தான்.,  ‘அன்று புடவை எடுக்க வரும்போது கண்டு கொள்ளாமல் நின்ற விசாலாட்சி., இன்று தானே தேடி தேடி மருமகளுக்கு புடவை அதுவும் இத்தனை அழகாக தேடி எடுத்து இருப்பதை பார்க்கும் போது எல்லோருக்கும் புரிந்தது. அந்த கல்யாணத்தில் அம்மாவிற்கும் மகனுக்கும்., துளிகூட இஷ்டம் இல்லை’ என்பது புரிந்தது.

” சரி கடவுள் எது செஞ்சாலும் நல்லதுக்கு தான் செய்வான்”., என்று சொந்தக்கார பெரியவர் ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.

விசாலாட்சி  “உண்மைதான் பெரியப்பா., கடவுள் எங்க வீட்டுக்கு இப்பதான் ரொம்ப நல்லது பண்ணி இருக்காரு”.,  என்று சந்தோஷமாகச் சொன்னார்….

புடவை எடுக்கும்போதே சரண்யாவிற்கு வைத்து பார்த்து அது “அவளுக்கு பிடித்திருக்கிறதா” என்று கேட்டதோடு.,  ஜெ. கே விடம் “உனக்கு பிடிச்சிருக்கா”என்று கேட்டார்.

இருவரும் சம்மதித்த பிறகு தான் புடவையை தேர்ந்தெடுத்தார். விசாலாட்சியின் பிறந்த வீட்டு உறவான அண்ணன் மனைவி “ஏன் மதினி புடவை எடுக்கும் போது மருமக ட்ட   பிடிச்சிருக்கான்னு கேட்கணும் சரி.,  மகன் ட்ட யும்., கேட்கனுமா என்ன., என்று கேட்டார்.

“மருமக கட்டுற சேலை மகனும் பிடிக்கணும் இல்லை” என்று அவரும் சொல்ல.,  அங்கு கிராமத்து காரர்களுக்கு உண்டான சந்தோஷமான கேலியான பேச்சோடு புடவை எடுப்பது என்று அவளுக்கு தேவையான அத்தனை புடவையும் எடுத்து முடித்த பிறகே விசாலாட்சி விட்டார்.   ஜெ.கே தானே கொடுத்து கொள்வதாக சொன்னான். ஜெ. கே அப்பா பணம் கொடுக்க முன்வரும் போது “வேண்டாம்பா நான் கொடுக்கிறேன்” என்று சொன்னதோடு நிறுத்தி விட்டான்…

அங்கிருந்து கிளம்பிய அவரவர் இல்லம் நோக்கி  காரில் வரும் போது  முரளி தான் சரண்யாவிடம் பேசிக்கொண்டே வந்தார்.,  “அவசர அவசரமா பேசி முடிக்கிற மாதிரி கல்யாணம் பண்றோம் ஃபீல் பண்றியா சரண்”.,  என்று கேட்டார்.

“அதெல்லாம் இல்லப்பா” என்று சொன்னவள். “இன்னும் பேசவே இல்லையே” என்று கேட்டாள்.

” போன் நம்பர் தரேன் பேசு”என்று சொன்னார்.

“இல்லப்பா அப்புறம் பேசுகிறேன்”என்று தயக்கத்துடன் சொன்னாள்.

அவனிடம்  பேசவேண்டும் ஆனால் தனியே பேச வேண்டும் என்று சொன்னதோடு சரி.,   இருவரும் எதுவும் தனியே பேசிக் கொள்ள முடியவில்லை.,  முயற்சி எடுக்கவில்லை…

இருவரும் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அதை பற்றி யோசிக்க கூட இல்லை., அவர்களுக்கான திருமண வாழ்க்கையில் என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை…,

Advertisement