Advertisement

        “ நீங்க எப்பவும் என்னதான் சத்தம் போடுவீங்க., அவளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்று சொன்னாள்.

        திட்டி விட்டு அவளிடமிருந்து அந்த பையை வாங்கி மறுபடியும் சரண்யாவிடம் கொடுக்க., அவன் மேல் உள்ள கோபத்தில் திவ்யா சரண்யாவை பிடித்து தள்ளிய வேகத்தில் கொடுக்காப்புளி மரத்தின் அடியில் இருந்த பாறையின் மேல் போய் சரிந்து விழுந்தாள்., அதே நேரம் வேகமாக ஜெ. கே பிடித்து தூக்கி விட்டான்., ஜெ. கே தூக்கியது அவள் இடுப்பை பிடித்து  என்பதை திவ்யா பார்த்துவிட்டு., “நீ அவளை எப்படி பிடித்து தூக்கி விடுற”.,  என்று அங்கு வைத்தே சண்டைபோட்டாள்.

           “அறிவில்ல உனக்கு..,  புடிச்சு தள்ளிவிடுற அந்த குத்து பாறையில் போய் விழுந்து இருந்தா.,  இந்நேரம் நீ கொல கேஸ்ல உள்ள போயிருப்ப”.., என்று சொல்லும் போதே.., அவளைப் பார்க்க.,  லேசாக கிழித்து இடதுபக்கம் தோளுக்கு சற்று கீழே ரத்தம் வரத் தொடங்கி இருந்தது.,

              இவன் ரத்தத்தை பார்த்தவுடன் திவ்யா ஜெ. கே  யிடம் “வீட்டில்  சொல்லிக் கொடுத்த., நான் உன்னை வேற மாதிரி சொல்லிக் கொடுப்பேன்., நீ அவளை இடுப்பை பிடித்திருந்த அப்படின்னு சொல்லி., உன்னை கேவலப்படுத்தி விடுவேன் பார்த்துக்கோ”.,  என்று சொன்னாள்.,

     “அசிங்கம் பிடிச்சவனே போ., இங்கிருந்து” என்று  கத்த அங்கு ஒரு பெரிய களேபரம் ஆக  இருந்தது.,  அதே நேரம் வயலில் வேலை பார்த்தவர்கள் அழைத்து அவள் கீழே விழுந்துவிட்டாள்., தோளில் ரத்தம் வருகிறது என்னவென்று பாருங்கள்” என்று சொல்லி அப்பெண்மணி யிடம் ஒப்படைத்து அனுப்பினான்., கீழே விழுந்தது  ஜேகே அவன் அம்மாவிடம் மட்டும் சொல்லி இருந்தான்.,  திவ்யா சொன்னதைப் பற்றி சொல்லியிருந்தான்.,  ஆனால் திவ்யா யாரிடமும் எந்த விஷயமும் சொல்லவில்லை சொன்னால் தான் தான் கீழே தள்ளி விட்டோம் என்று வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தினால் சொல்லாமல் இருந்து கொண்டாள்..

திவ்யா பேசியதையும் ஜெ.கே அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான்.  ஆனால்  வீட்டில் சொன்னால் திட்டு விழுமோ என்ற பயத்தில் தான் திவ்யா வீட்டில் தெரியப்படுத்தவில்லை.,

          அதேபோல சரண்யாவும் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை., சொன்னால் அவன் தூக்கியதையும் சொல்ல வேண்டுமே என்று அந்த வயதுக்குரிய பயம் இருந்தது., ஏனெனில் மங்கையின் அம்மா ரத்னா அவளை அப்படித்தான் வளர்ந்திருந்தார்., யாரையும் தொட்டுப் பேசக் கூடாது என்பதை சொல்லி சொல்லி வளர்த்ததால்., தாய் தந்தை அருகில் இல்லாமல் பாட்டி தாத்தாவிடம் வளரும் பிள்ளை யாரும் எதுவும் தவறாக சொல்லி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் மெதுவாக சொல்லி சொல்லியே வளர்த்திருந்தனர்., அதனால் அவன் தொட்டு தூக்கியது அவளுக்கு பயமாக இருந்தது. சொன்னால் வீட்டில் கண்டிப்பாக திட்டு வேண்டும் என்ற எண்ணம்  தான் அதனால் அவளும் சொல்லவில்லை., கேட்டதற்கு கீழே விழுந்துவிட்டேன் என்று மட்டுமே சொன்னாள்., அதிலிருந்து 2 நாள்களுக்குள் மங்கையும் முரளியும் அவளை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் சென்றுவிட்டனர் ., ஏனெனில் அவர்களுக்கு இங்கே நடந்தது என்ற விஷயம் தெரியாது., ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு திவ்யா ஜெ. கே ன் வீட்டிற்கு விசாலாட்சி சரண்யாவை அழைத்துக் கொண்டு சென்றிருந்த போது., நீ இங்கு வரக்கூடாது  என்று சொல்லியதை எப்படியோ கேள்விப்பட்டு விட்டனர்.,  வீட்டில் அனைவருக்குமே தெரியும்., இவளுக்கு அது வருத்தம் ஒருவர் வீட்டிலிருந்து தன்னை ஒருவர் தன் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்வது பெரும் அவமானம் என்று நினைத்தாள்., எனவே அங்கு இனி எக்காரணம் கொண்டும் போகக்கூடாது என்ற முடிவோடு இருந்தாள்.,  எப்படியும் விடுமுறை என்று வந்தால் விசாலாட்சி கண்டிப்பாக சரண்யாவை பார்க்க வருவார்., அப்போது எப்படியும் ஒரு முறை எனினும் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்., அல்லது மங்கை செல்லும்போதோ அல்லது செண்பகம் செல்லும் போதோ உடன் அழைத்து செல்வார்கள்., அதனால் இனி வந்தால் அவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது.., நாம் ஒன்றும் இன்னும் சின்ன பிள்ளை இல்லையே எல்லோரும் அவமானப்படுத்தினாலும்., உதாசீன படுத்தினாலும் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு மறுபடியும் அங்கு போய் நிற்பதற்கு தன்னால் முடியாது., அதனால் இனி இங்கு வரவே கூடாது என்ற முடிவோடு தான் அங்கிருந்து கிளம்பினாள், அதுமட்டுமல்லாமல் திவ்யா அவன் தன்னை தொட்டுத் தூக்கியதை சொல்லிவிடுவாளோ என்ற பயம் ஒரு காரணமாக இருந்தது.,
அதன் பிறகு இந்த ஏழு வருடமாக அவள் அங்கு செல்லவில்லை., அல்லது காரணம்  திவ்யாவின் உதாசீனப் பேச்சாகவும் இருக்கலாம் ..,  அல்லது அவள் அறியாமல் ஏற்பட்ட அந்த சிறு சலனம்., ஏன் தனக்கு இதுபோன்ற உரிமையானவர்கள் சொந்தத்தில் இல்லை., என்ற அந்த எண்ணமாக கூட இருக்கலாம். ஏதோ ஒன்று அவளை தடைசெய்ய அதிலிருந்து அங்கு செல்ல வேண்டாம்., இனி தன் மனம் சலனப்படுவது  நல்லதல்ல என்ற எண்ணத்தோடு அங்கு செல்வதை நிறுத்தி இருந்தாள்.,

             ஆனால் வீட்டில் உள்ளவர்களும்.,  ஊரில் உள்ளவர்களும் நினைத்திருந்தது., திவ்யா தன்னை  வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லும் போது மற்றவர்கள் எதுவும் சொல்லவில்லை., ஆனாலும் அவள் சொன்னதை நினைத்துக் கொண்டு தான் அவள் வர மறுக்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள்.., அதுமட்டுமல்லாமல் அவள் வரும்போதெல்லாம் திவ்யா ஏதாவது வம்பு செய்வாள் என்பது அனைவருக்கும் தெரியும்., அதனால் தான் வர மறுக்கிறாள்., ஒதுங்கிக் கொள்கிறாள் என்று நினைத்து கொண்டார்கள்., ஆனால் ஒவ்வொரு முறையும் மங்கையும் முரளியும் செங்கோட்டை சென்று விட்டு திண்டுக்கல் வரும் போது சொல்வதெல்லாம் உன்னை எல்லோரும் ரொம்ப கேட்டார்கள்., உன்னை ரொம்ப ரொம்ப விசாரித்ததாக   சொல்ல சொன்னாங்க., ஜெ.கே நீ ஏன் வர மாட்டீக்க னு கேட்டாங்க., என்று சொல்லி பெரியப்பாவும் பெரியம்மாவும் உன்ன ரொம்ப கேட்ட்தா  சொல்ல சொன்னாங்க”.., என்று சொல்லுவார்கள்.,

             அதுபோல சில நேரங்களில் ஊரில் இருக்கும் சமயங்களில் யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தாள்., போன் செய்து கொடுத்துவிடுவார்கள் பேச சொல்லி அப்படி  விசாலாட்சி இடம் இரண்டு மூன்று முறை பேசி இருக்கிறாள்.,  பெரியப்பாவிடமும் பெரியம்மாவிடமும் எப்போதும் பேசுவது தான்.., இப்படி அவர்களது நினைப்பு ஒரு புறமிருந்தாலும் அவள் மனதில் இருந்த சலனம் தனக்கு ஏன் அது போல ஒரு சொந்தம் கிடைக்கவில்லை என்ற எண்ணம்தான்.., அத்தான் என்று அழைப்பதற்கு கூட உரிமை இல்லாத அளவிற்கு நாம் இறங்கிப் போனோம்., என்ற எண்ணமும் அவளுக்கு அடிக்கடி எழும்., ஏனெனில் உறவுமுறைகளில் உள்ளவர்கள் எல்லாம் அவனை அத்தான் என்று அழைத்தாலும்., இவளை மட்டும் திவ்யா அழைக்க விட மாட்டாள்.., ஏன் ஒன்றுவிட்ட இரண்டு விட்ட சொந்தங்கள் கூட., இவளுக்கு நெருங்கிய சொந்தம் கூட அவனை அத்தான்., மச்சான் என்று அழைக்க இவள் மட்டும் ஜெ.கே என்று பெயர் சொல்லி தான் அழைக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தாள்…

அவன் இவளுடன் நன்றாகவே பேசுவான்., அதையும் ஒன்றுக்கு இரண்டாக பாட்டி தாத்தாவிடம் சொல்லி அது ஜெ.கே ன் தாத்தாவும் பாட்டியும் அவனின் அந்த வயதில் கல்லூரி காலத்தில் அதனை  பேச அதிலிருந்து தான்., பேசுவதை குறைத்துக் கொண்டாள், ஒருமுறை சொல்லியிருந்தான் “எனக்கு விவசாயத்தில் ஆர்வம் சிறப்பாக செய்ய வேண்டும்” என்று சொல்லியிருந்தான்.

         அப்போது இவளும் சொல்லியிருந்தார் “விவசாயம்  என்ன தோட்டம் அதுல எல்லாம் நல்ல வருமானம் இருக்கும்.., தாத்தா அடிக்கடி சொல்வாங்க தாத்தாவோட  ரெஸார்ட்., பழப்  பண்ணை எல்லாமே செமையா இருக்கும்., அந்த மாதிரி நீங்களும் ஒன்று ஆரம்பிங்க” என்று சொல்லி அவனிடம் உற்சாகமாகவே விவசாயம் சார்ந்த தொழில் செய்வதற்கு ஆதரவு தெரிவித்து பேசி இருந்தாள்.,

          அப்போது அவன் சொன்னான் “கண்டிப்பாக எல்லாம் சூப்பரா ஆரம்பித்து விடுவேன்., வரும்போது நீயே பாரு என் பெயரை சொன்னாலே ஊருக்கே தெரியும்., அந்த அளவுக்கு சூப்பரா கொண்டு வந்துவிடுவேன்”., என்று சொன்னான்.

            “சூப்பர் கண்டிப்பா செய்யுங்க” என்று இவள் அப்பொழுதே  “அட்வான்ஸ் வாழ்த்துக்கள்” என்று சொல்லி அவன் விவசாயம் சார்ந்த தொழில் செய்ய போகிறேன் என்று  சொல்லும்போது முதன் முதலாக அவனை ஆதரித்து அவனிடம் பேசியவள் இவள் ஒருத்தி மட்டும் தான்., மற்ற அனைவரும் அவன் படித்து முடித்து இந்தத் தொழில்தான் செய்யப்போகிறேன் என்று சொல்லும் போது எல்லோரும் மாற்றுக் கருத்து தான் சொன்னார்கள்., விவசாயத்தில் வருமானம் இல்லை., இனி என்ன செய்யப்போற என்ன வைக்க போற., என்பது போல தான் பேசினார்கள்..

காலை உணவின் போதும் ஏதோ யோசனையோடு நேரம் கழித்துவிட்டு., மதியத்திற்கு பிறகு தாத்தாவிடம் இருந்து காரை ஓட்டுவதற்கு வாங்கினாள் .., அதுவரை அவளுடைய யோசனைகள் தன் சிறுவயது எண்ணங்களையும் ஜெ.கே யை சுற்றி வந்ததை அவள் அறிவாள் ..,  ஏன் தனக்கு அப்படிப்பட்ட சொந்தம் இல்லாமல் போனது என்று அடிக்கடி தோன்றும் .,  இன்னும் அவள் மனம் யாரிடமும் அவள் சொன்னதில்லை.., சொல்லவும் போவதில்லை.., என்பது அவள் மட்டும் அறிந்த விஷயம்தான்… இப்போது அவளுக்கு பிடித்த இளையராஜா பாடல்களை ஒலிக்க விட்டிருந்தாள் செங்கோட்டை அவளுக்கு என்ன வைத்திருக்கிறது என்ற யோசனையோடு..

Advertisement