Advertisement

            3

               யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

             திண்டுக்கல்லில் பெரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் மாணிக்கம் ரத்னா தம்பதியினர். இவர்களின் ஒரே மகள் தான் மங்கை., மாணிக்கத்திற்கு உடன்பிறந்தவர்கள் நிறைய இருந்தாலும்., ரத்னாவிற்கும் உறவு என்று நிறைய இருந்தாலும்., அவர்களுக்கு இருப்பது போல இவர்களுக்கு பிள்ளை செல்வங்கள் நிறைய இல்லாமல் மங்கை ஒருத்தியோடு நின்றது..

திண்டுக்கல்லில் தனித்தனி தோப்பு துறவு வீடு என்று அனைவரும் இருப்பதால் அவரவர் வேலையில் அவரவர் மும்மரமாக இருந்தனர். இவர்களது குடும்பம் கூட்டுக்குடும்பம் இல்லை., தனித்தனி தொழில்., தனித்தனி வீடு., தனி தனி இடம்., என்று எல்லோரும் தனித்தனியே இருந்தனர்.  மாணிக்கத்தின் உழைப்பின் பலனாக சொத்துக்கள் அதிகம் சேர்த்து வைத்திருந்தார்.

          கொடைக்கானலில் ஒரு ரெஸ்டாரன்ட்., ஒரு பழ பண்ணையும் வைத்திருந்தார்., சீசன் நேரங்களில் கூட்டம் அதிகம் வரும்., வருமானமும் அதிகம் என்றே இருந்தது., திண்டுக்கல்லில் தென்னந்தோப்பு மாந்தோப்பு என்று ஏக்கர் கணக்கில் அதிகமாகவே வைத்திருந்தார்..,

ஒரே மகள் என்று நிலையில் நல்ல விதமாக படிப்பும்,  கலைகளையும் கற்றுத் தேர்ந்து இருந்தார் மங்கை., ராமையா  வீட்டைப் பொருத்தவரை முரளி படித்து சிங்கப்பூரில் வேலையில் இருந்ததால் அவனுக்கு ஏற்றார் போல் படித்த பெண்ணை தேடும் போது தான் மங்கையே அறிந்தனர்., விவசாய குடும்பம் விவசாயத்தை மதிப்பவர்கள் என்ற எண்ணத்தில் தான் முரளிக்கு மங்கைக்கும் திருமணம் நடந்தது., சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு வருவதை விடவில்லை அப்படி ஊருக்கு வரும்போது இருவர் வீட்டிற்கும் சென்று வருவது அவர்களுக்கு பழக்கமான ஒன்றுதான்..,

மங்கையைப் போல சரண்யாவும் ஒற்றை பிள்ளையாக இருந்து விட்டாள். அதற்கு மங்கையின் உடல் நலமே காரணமாகி போனது., ஆனாலும் ஒற்றை மகள் என்ற எண்ணத்தில் நன்கு படிக்க வைத்து நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவளை தன் கையிலேயே வைத்து வளர்த்து வந்தாள் மங்கை..

சரண்யாவின் ஐந்தாம் வகுப்பு வரை சிங்கப்பூரில் பயின்றாலும்., இருவரும் தங்களது வேர்  கிராமம் என்று அறிந்தே பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் கலாச்சாரத்தையும் சொல்லியே வளர்த்து வந்தனர்., சரண்யா ஜாடை  கிட்டத்தட்ட முரளியை போலிருந்தாலும் அன்னையின் அழகும் சேர்ந்து வந்ததால் இன்னும்  அழகாக தெரிந்தாள்…

வருடம்தோறும் செங்கோட்டைக்கு ராமையா செண்பகத்தை காண முரளியும் மங்கையும் வரும்போது கூடவே சரண்யாவும் வருவது தவறவில்லை…

ஆறாம் வகுப்பிலிருந்து திண்டுக்கல்லில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் வந்து சேர்ந்தாள் சரண்யா., கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கப்பட்டாள். அங்கு உள்ள வித்தியாசம் என்றாலும் இவர்களுக்கு கொடைக்கானலில் ரெஸ்டாரன்ட்.,  இருப்பதால் அவளுடைய அம்மா பாட்டி தாத்தா இருவரும் அவளை வாரம் தவறாது பார்க்கவும் அவளுக்கு தேவையானதை செய்யவும் அருகிலேயே இருந்ததால் அவளுக்கு அதிகமாக விடுதியில் இருந்தது போல் எண்ணம் இல்லாமல் நன்றாகவே படித்தாள்..

அங்குள்ள பழக்க வழக்க படி ஆங்கிலம் சரளமாக பேசவும்.,  நல்ல பழக்க வழக்கங்களும் அவளை மேலும் மெருகேற்றி இருந்தது. அது ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளி என்பதால் அங்கு சொல்லப்படும் போதனைகளும் அவளுக்கு இன்னும் தெளிவான நடவடிக்கையை கற்றுத் தந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரத்னா அன்பை மட்டுமே சொல்லி வளர்த்ததால் அவளும் அன்பின் மறு உருவமாக தான் இருந்தாள்..

பத்தாவது படிக்கும் வரை செங்கோட்டைக்கு வருவது  தவறவே இல்லை., சரியாக அவளது பதினைந்தாவது வயதில் பத்தாவது பரீட்சை எழுதி இருந்த நேரத்தில் ஊருக்கு வந்திருக்கும் போது திவ்யாவினால்  ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அதன்பிறகு சரண்யா ஊருக்கு வருவதே இல்லை., இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று…

அதன் பிறகு சரண்யா சற்று இறுக்கமாக காணப்பட்டாலும் வெளியே காட்டி கொள்ள மாட்டாள். மனதிற்குள் இருந்த எண்ணங்களும் அவளுடைய அமைதிக்கு காரணம் ஆகிப்போனது ., ஆனாலும் மற்றவர்களிடம் பேசும் போது சிரிப்பும் குறும்பும் அவளிடம் இருக்கத்தான் செய்தது., யார் மனமும் வாடாமல் பார்த்துக் கொண்டாள்., தான் நடந்த நிகழ்வை நினைத்து வருந்துவதாக தெரிந்தாள் தன்னை நினைத்து வருந்தும் அம்மா அப்பாவும்., பாட்டி,  தாத்தாவும் பாவம் என்ற எண்ணத்தோடு தன்னை ஓரளவுக்கு மாற்றிக் கொண்டாள்.

அவளுடைய கல்லூரி படிப்பு தோட்டக்கலை சார்ந்து இருந்தது., ஏனெனில் அம்மாவும் ஒரே மகளாக போனதால் அவருடைய சொத்து அனைத்தும் பார்க்க வேண்டிய பொறுப்பு பேத்திக்கு இருப்பதாகவே சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டால் சரண்யா., அதனால் கொடைக்கானலில் இருக்கும் பழத்தோட்டம் ரெசார்ட் திண்டுக்கலில் இருக்கும் தோட்டங்கள் என அனைத்தையும் கணக்கில் வைத்தே அவள் தோட்டக்கலை எடுத்து படித்தாள்..

ஹார்ட்டிகல்ச்சர் எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பு நான்கு வருடங்களுக்கு ஆனது., அதை முடித்துவிட்டு இப்பொழுது கொடைக்கானலில் உள்ள அவர்களுடைய பழப் பண்ணையும்., ரெசார்ட் முழுவதும் அவள் பொறுப்பில் எடுத்து கவனித்துக்கொள்கிறாள்.,  கொடைக்கானலில் இவள்தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள்., அவர்களுக்கு வீடு வேறு இருப்பதால் சமையல் செய்ய வீட்டை கவனித்துக் கொள்ள என்று ஏற்கனவே ஆள் இருப்பதால் இவளுக்கு அங்கு பார்த்துக் கொள்கிறாள். இப்பொழுதெல்லாம் திண்டுக்கல்லுக்கு மாதம் ஒருமுறை வந்து விட்டுச் செல்வது சரண்யாவின் வழக்கமாக இருந்தது., வயதானவர்களுக்கு குளிர் அவ்வளவாக ஒத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தினால் அவள் தன் கையில் எடுத்து அவள் பார்த்துக் கொள்கிறாள்.

வயது 22 எந்த வித உணவு கட்டுப்பாடும் இல்லாமல்., கட்டுக்கோப்பான உடல் அமைப்பு., சாந்தமான முகத்தோடு இருக்கும் அழகிய தேவதை அவள்..

சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்பது போல., அவள் மனம் பலவித எண்ணங்களில் தத்தளித்துக் கொண்டிருந்ததாள்., தன்னை முழுவதும் வேலையில் ஈடுபடுத்திக் கொண்டாள்., அதன் காரணமாக அவர்களுடைய பழப் பண்ணையில் இந்த வருடம் நல்ல விளைச்சல் இருந்தது., அவளுக்கு தெரியாத விஷயங்களை அவளுடைய பேராசிரியர்களிடம் கேட்டு தொழிலை மேலும் விரிவு படுத்தினாள்.,

எவ்வளவு  தான் கட்டுப்பாடாக மனதை வைத்திருந்தாலும்., அவள் அறியாமல் சில சந்தர்ப்பங்களில் அவள் மனதில் எழும் பழைய நினைவுகளை அவளால் தடுக்க முடியாமல் போயிற்று., ஒரு மனம் வேண்டும் என்று அடம்பிடிக்க., மற்றொரு மனம் யாரும் தேவையில்லை என்று உதாசீனப்படுத்த.,  இரண்டிற்கும் நடுவில் கிடந்து தத்தளித்தது என்னவோ அவள் தான்…

ஒற்றை பிள்ளையாக  பிறந்தது அவள் தவறு அல்ல.,  ஆனால் சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, என்று சொந்தங்கள் புடைசூழ அவர்களின் பிள்ளைகளோடு வாழ்வது வரம் தான்.

                    அந்த விதத்தில் இவள் தேவதையாகவே இருந்தாலும் அந்த வரம் மட்டும் வழங்கப்பட வில்லை போலும்., அதற்காகவே அடிக்கடி நினைத்துக் கொள்வாள் ‘தன் வாழ்க்கை தன்னைச் சுற்றி இருக்கும் சொந்த பந்தங்களோடு பெரிய குடும்பம் வேண்டும் என்ற எண்ணத்தோடு.., கண்டிப்பாக பாட்டியோ தாத்தாவோ கேட்டால் இப்படித்தான் சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தோடு தான் இருந்தாள்., ஏனெனில் இப்பொழுதெல்லாம் சில மாதங்களாக அப்பா அம்மா பேசினாலும் சரி., தாத்தா பாட்டி பேசினாலும் சரி திருமணம் என்ற பேச்சு அடிக்கடி  எடுக்கப்படுகிறது…

‘ மனதில் உள்ள எண்ணங்களை குழிதோண்டி புதைத்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி யோசித்து கொள்வாள்., ஆனால் மனம் தான் அவ்வப்போது எழும்பி பேயாட்டம் போடும் என்ன செய்ய நினைவுகளை கொல்வதற்கு ஏதும் மருந்து இருந்தால் கொன்று விடலாமா’ என்று கூட யோசிப்பாள்..

ஏற்கனவே அழகாகவும் தேவதையாகவும் காட்சி அளிப்பவள்., கொடைக்கானலில் குளிர்ந்த சூழ்நிலையில் அங்குள்ள மலை காற்றோடு வாழ இன்னும் மெருகேறி இருந்தாள்..

தினமும் வீடியோ காலில் தாத்தா பாட்டி யோடும்., அம்மா அப்பாவோடு பேசும் போது… அவர்கள் சொல்வதெல்லாம் சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதே., ஆனால் அவளிடம் நேரடியாக எதுவும் சொல்வதில்லை., எப்பொழுதும் அரசல்புரசலாக கேட்கும் பேச்சுகளும் ஜாடைமாடையாக பாட்டியும் அம்மாவும் மாறி மாறி சொல்லும் வார்த்தைகள் மட்டுமே அவளுக்கு தெரியும்..

அவளுக்கு எதுவும் கற்பனை எல்லாம் கிடையாது.,’ தனக்கு வருபவன் இப்படி வர வேண்டும் அப்படி வர வேண்டும் என்று எல்லாம் எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது ஏனெனில் பொதுவாக எதார்த்தத்தை புரிந்தவள் தான் சரண்யா ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் கிடைப்பதில் ஆசையை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் அவளுடைய எண்ணம்..

Advertisement