Advertisement

தன்னைச் சுற்றி உறவுகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்., அவளின் ஆசையாக இருந்தது., ஆனால் அதுவும் தனக்கு கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் அதற்காக வருத்தப் படக்கூடாது என்று ஒவ்வொரு முறையும்  நினைத்துக் கொள்வாள்., ஏனெனில் இப்போது உள்ள காலகட்டங்களில் அப்படித்தானே இருக்கிறது என்று நினைத்துக் கொள்வாள்..

இந்த முறை அவள் திண்டுக்கல் போகவே இல்லை., ஒரு மாசம் கூடவே கடந்து விட்டது., இதோ இன்னும் இரண்டு நாளில் திண்டுக்கல் வருவதாக தாத்தா பாட்டியிடம் சொல்லி இருந்தாள். ஆனால் இரண்டு நாளாக பாட்டி ஜாடைமாடையாக திருமணத்தை பற்றி அதிகமாக பேசுவதை உணர்ந்திருந்தாள்., அவளும் சிரித்துக்கொண்டே சம்மதம் என்பது போல தான் பதில் சொல்லி வைத்திருந்தாள்..

அன்றைய இரவு அதற்கான விஷயம் வெளிவந்தது., சிங்கப்பூரில் இருக்கும் தாய் தந்தையோடு வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போது, மங்கை தான் மெதுவாக பேச்சை தொடங்கினார். “இன்னும் ஒரு பதினைந்து நாள்ள நாங்க இந்தியா வர்றோம்., செங்கோட்டை போகனும் பாட்டி வீட்டுக்கு” என்று சொன்னாள்.

                இவளும் “என்னமா திடீர்ன்னு எப்பவும் கோயில் திருவிழா சமயம் தான வருவீங்க” என்று சொன்னாள்.

                  “அப்ப தான்டா வருவோம்., ஆனா இப்போ திவ்யாவுக்கு மேரேஜ் பேசி இருக்காங்க., சோ மேரேஜ் க்கு வரணும் இல்ல தாத்தா போன் பண்ணாங்க., பெரியப்பா பெரியம்மா எல்லாம் பேசினாங்க .,  நாங்க ஊருக்கு வரலாம் அப்படின்னு இருக்கோம் நீ தாத்தா பாட்டி கூட வந்துருடா” என்று அவர் சொன்னார்…

“அம்மா நீங்க தான் கல்யாணத்துக்கு வரீங்க.,  நான் எதுக்கு அங்க” என்று சொன்னாள்.

               “இல்லம்மா இவ்ளோ நாள் நீ வராமல் இருந்தது வேற., இப்ப அப்படி இருக்க முடியாது டா.., அவ கல்யாணம் நீ வரலைன்னா தப்பா சொல்லுவாங்க., அதனால நீ முடிந்தளவு வர ட்ரை பண்ணு”., என்று சொன்னார்.

          “ம்மா ஆனா நான் அங்க வந்தா., எனக்கு  அவ பேசினது தான் ஞாபகம் வரும் வேண்டாமா பாத்துக்கலாம்” என்று சிரித்தபடியே சொன்னாள்..

முரளி பொதுவாக மகளிடம் மறுத்துப் பேசுவது கிடையாது., ஒரே பெண் செல்லம் என்பது ஒருபக்கம் என்றாலும்.,  இந்த முறை சரண்யாவிடம் “சரன் குட்டி கண்டிப்பா வரணும் டா., நீ கிட்டத்தட்ட ஊருக்கு வந்து ரொம்ப வருஷம் ஆகுது.,  இதுவரைக்கும் நான் எதுவும்சொன்னது கிடையாது..,  உன்னை யாரும் பேசினா., அம்மா அப்பாக்கு பொறுக்குமா சொல்லு., நீ எங்க ஒரே பொண்ணு இல்லையா உன்னை யாராவது அப்படி பேச விட்டுவோமா., இது கல்யாணம்  நம்ம போயிட்டு நீ உடனே தாத்தா பாட்டி கூட ரிட்டர்ன் ஆயிடலாம்.., அதனால வந்து விடு  என்று சொன்னார்.,

     “ சரி பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்..

அது  போல பாட்டியிடம் பேசும்  போது பாட்டியும் சொன்னார்.., “இன்று பத்திரிக்கை வைக்க ஊரிலிருந்து ஆள் வந்ததாகவும்., அதனால் கண்டிப்பாக கல்யாணத்திற்கு போக வேண்டும்” என்று சொன்னார்.

       அவளுக்கு “தான் அங்கு வருவதில் இஷ்டம் இல்லை” என்பதை தெரியப்படுத்தினாள்..,

       “இல்லை கண்டிப்பாக போக வேண்டும்., நீ நேர்ல வரும்போது எப்படி போயிட்டு எப்படி வர்றது என்பதை பிளான் பண்ணிக்கலாம்” என்று சொன்னாள்.

         இரண்டு நாளில் கிளம்புவதாக இருந்தவளை., கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பு கணக்கு வைத்து கிளம்பி வரச்சொல்லி தாத்தா சொன்னார்., “நீ வந்துட்டு திருப்பி கொடைக்கானல் போனா கல்யாணத்துக்கு வரமாட்ட., ஏதாவது சாக்கு சொல்லுவ அதனால நம்ம கல்யாணத்துக்கு கிளம்புறதுக்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னாடி கிளம்பி வா.., அப்பனா கல்யாணத்துக்கு போயிட்டு வந்து அதுக்கப்புறம் நீ கொடைக்கானல் போயிக்கலாம்” என்று சொன்னார்.

   வேறு வழியின்றி தாத்தாவிடம் “சரி” என்று சம்மதித்தார்..

எப்போதும் பெரியவர்கள் பேச்சை மீறுவது அவளுக்கு பழக்கம் கிடையாது. ஆனால் அவள் மனதில் கஷ்டப்பட கூடாது என்ற காரணத்திற்காக வீட்டில் உள்ளோர் அனைவரும் அவள் இஷ்டப்படியே நடந்து கொள்வார்கள் ஆனால் இந்த ஒரு விஷயத்தில் எல்லோரும் சேர்ந்து சொல்லவும்., வேறு வழி இன்றி வருவதற்கு சம்மதித்தாள்…

அதுபோல ஒரு வாரம் கழித்து ஊருக்கு வந்தவளுக்கு., பாட்டி தாத்தாவுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தாள். திருமண பத்திரிக்கை பார்த்தவுடன் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை., அப்போது தான் தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார்., ஜெ.கே யின் தொழில் வெற்றியை பற்றியும்., அவனுடைய உழைப்பு அவன் முன்னுக்கு வந்தது.., தற்சமயம் அங்குள்ள அவனுடைய நிலை எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார்.., பெரியப்பா சொல்லி பெருமை பட்டதாகவும்., பெரியப்பாவும்,  ஜெ.கே யின் வீடு சார்பாக அவனது சித்தப்பாவும் பத்திரிக்கை வைக்க வந்து இருந்ததாகவும் கூறி பேசிக்கொண்டிருந்தார்…

‘சொன்னது போல ஜெயித்து விட்டான்’ என்று மட்டுமே மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். இவள் எப்போதும் அவனே ஜெ. கே என்று தான் அழைப்பாள்., அது அங்கு உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரியும் காரணம் திவ்யா தான்…

அப்போது  தான் பாட்டி சொல்லிக்கொண்டிருந்தார் “திருமணத்திற்கு முந்திய நாள் நிச்சயதார்த்தம் என்றும்., திருமணம் பிறகு மறுவீடு., மறுநாள் கோயில் பூஜை என்று ஒரு மூன்று நான்கு நாட்கள் அங்கு இருக்க வேண்டியது இருக்கும்., அதன் பிறகு நாம் கிளம்பி வந்து விடலாம்”., என்று சொன்னதோடு “உங்க அம்மாவும்., அப்பாவும் இருந்து மத்ததெல்லாம் முடிச்சிட்டு அதுக்கப்புறமா இங்க வருவாங்க.,  மேனேஜர் க்கு ஃபோன் பண்ணி சொல்லியாச்சு.., கொடைக்கானலில் அவர் எல்லாத்தையும் பார்த்துக்குவாரு.., நீ இன்னும் ஒரு மாசத்துக்கு கொடைக்கானல் போறது பற்றி யோசிக்காத” என்று பாட்டி சொன்னார்.

“ கல்யாணத்திற்கு மட்டும் இருந்துட்டு கிளம்பிறலாமா”., என்று கேட்டாள்.

       “ என்னடா இது நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள்  தான் நம்ம போய் சேருவோம்., காலையில் தான் கிளம்புறோம் மெதுவா போனா கூட நமக்கு நேரம் ஆகும், அதுவும்  நீயும்., உங்க தாத்தாவும்., ஒவ்வொரு இடமா நிப்பாட்டி நிப்பாட்டி போறதுக்கு சாயங்காலம் ஆகிடுவீங்க புரியுதா.., அதனால நாலு நாள் இருக்குறது ஒன்னும்  தப்பு இல்ல., ஏன் இப்படி யோசிக்க.,  அது உங்க அப்பா  ஊரு.., அவ சொன்னா., உனக்கு அந்த ஊரு  இல்லாமல் போய்விடாது.., இனிமேல் அப்படி யோசிக்காத”.., என்று சொன்னார்.

             ‘சரி’ என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் ‘மனதிற்குள் இருந்த வலியோ அவளை நான்கு நாட்கள் அங்கு தங்க வேண்டுமா’ என்று மட்டுமே யோசிக்க வைத்தது… ‘அது மட்டுமல்லாமல் தன்னைப் பார்த்த உடன் அவர்களுக்கு எல்லாம் அன்று நடந்த சம்பவம் நினைவு வரும் தானே.., அப்படிப்பட்ட இடத்தில் தான் இருக்க வேண்டுமா’ என்று யோசித்துக் கொண்டாள்., அவள் யோசித்ததை அறிந்தது போல தாத்தா அவளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்…

“எல்லோரும்  எப்போதும் ஒரே நினைப்போடு இருப்பதில்லை குட்டிமா, புரிஞ்சுக்கோ அதெல்லாம் கண்டுக்க கூடாது., லைஃப்ல கடந்து போற விஷயம் எவ்வளவோ  இருக்கு.., அது மாதிரி தான் இதுவும் கடந்து போகும் ஒரு விஷயம்., வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கு பார்க்க வேண்டியது., நீ ஒரு சின்ன விஷயத்தை யோசிக்காதே”… என்றார்.

‘உண்மை தான் கடந்து போக வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்க., எதையும் நினைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது’ என்று நினைத்துக் கொண்டாள்.

            ‘வாழ்க்கை  நமக்கு வைத்திருக்கும் பாதையை நோக்கி போய்க் கொண்டே இருக்க வேண்டும்., எது நடந்தாலும் நல்லதுக்கே என்று யோசித்துக் கொள்ள வேண்டும்., என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்’ பின்பு பாட்டியின் அறிவுரைப்படி ஊருக்கு செல்ல தேவையான உடைகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.,

       எப்பொழுதும் அதிக மாடல் ஆன உடைகளை அணிவது இல்லை., அது அவளுடைய வழக்கம்தான் என்றாலும்., இப்போது பாட்டியின் சொல்படி நாலு நாள் அங்கு இருப்பதற்காக அங்குள்ள விசேஷத்திற்கு ஒவ்வொன்றிற்கும் தேவையான  படி புடவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.,  இவள் எடுத்து வைத்தது போக அவள் பாட்டி கூடவே மூன்று நான்கு சேலைகளை சேர்த்து எடுத்து வைத்தார்., அதை தவிர வேறு எதுவும் தேவைப்படும் என்று சுடிதார் அவள் எப்பொழுதும் போடும் நீளமான பாவாடை சட்டை என்றும் எடுத்து வைத்துக் கொண்டார்.,  தன் அழகு பேத்தி., ஏழு வருடம் கழித்து அவ்வூருக்கு வருவதால்  அவளுடைய நிலையை விட்டு என்றுமே இறக்கி காட்டக் கூடாது என்பது பாட்டியின் எண்ணம்..,  அவளுக்கு அத்தனை பேர் ஆறுதல் சொன்னாலும்.,  அவர்களுடைய மனதிலும் திவ்யாவின் உதாசீன பேச்சு தெரியும்  என்பதால்., இவளை எந்த விதத்திலும் குறைவாக இருக்க முடியாத வண்ணமே அனைத்தையும் ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டார்கள்…

நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே

Advertisement