Advertisement

அப்போது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக கிண்டலும் கேலியுமாக பேசிய படி இருந்தனர்.  இவளோ அமைதியாக சிரித்த படி அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அப்போது ஏற்கனவே பேசி முடித்த  அன்று திவ்யா அனைவருக்கும்., இங்குதான் சாப்பாடா என்று அவள் வேண்டுமென்றே கேட்டது போல கேட்டதால்.,  அது புள்ளைகள் மனதிலும் சிறு பாதிப்பு  இருக்கதான் செய்தது.,  பெரியவர்கள் தற்செயலாக சமையல் தெரியுமா என்று பேசிக் கொண்டிருந்தது.,  விருந்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தது., எதுவும் பிள்ளைகளுக்கு  தெரியாது அல்லவா.,  எனவே பிள்ளைகள் அனைவரும் அவளோடு தற்செயலாகப் பேசும் போது வீட்டில் இருந்த இரண்டாவது சித்தப்பாவின் மகள் சொல்லிவிட்டாள். “எல்லாரும் இதே மாதிரி என்னைக்காவது ஒரு நாள் தான் அண்ணி ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுவோம்.,அந்த சந்தோஷம் தான் சூப்பரா இருக்கும்., இந்த மாதிரி ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடற நாள் எப்போது வரும் ன்னு எதிர்பார்த்திட்டு இருப்போம்.,  வீட்டில் எப்ப ஒரு ஃபங்ஷன் நடக்கும்.., எப்படா கோயில் திருவிழா வரும் அப்படின்னு.,   எல்லாரும் ரொம்ப எதிர்பார்த்து இருப்போம்.,  நான்  காலேஜ்ல என் பிரெண்ட்ஸ் ட்ட தான் சொல்லுவேன்.,  இந்த மாதிரி எங்க வீட்ல  விசேஷ நடக்கும்போது ஒன்னா உக்காந்து சாப்பிடுவோம்.,  அவ்வளவு  ஹாப்பியா இருக்குன்னு சொல்லுவேன்.,  ஆனா பாருங்க மத்த நாளெல்லாம் அதுக்கு வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

இவளோ “ஏன் எப்பவுமே ஒண்ணா உக்காந்து சாப்பிடலாமே., எதுக்கு தனித்தனியா சாப்பிடனும்” என்று கேட்டாள்.

” எல்லாரும் தனித்தனியா தான் இருக்கிறோம்”.. என்றனர் பிள்ளைகள்.

“தனித்தனியா இருந்தா.,  தனித்தனியா சாப்பிடணும் என்ன கட்டாயமா.,  நீங்களா அரேஞ்ச் பண்ணிக்கோங்க., இந்த மாதிரி பங்க்ஷன் டைம்ல மட்டும் தான் சாப்பிட முடியும், ஃபீல் பண்றீங்களா.., அட்லீஸ்ட் வீக்லி ஒன்ஸ் ஆவது எல்லாருமா சேர்ந்து சமைச்சு சாப்பிடற மாதிரி அரேஞ்ச் பண்ணிக்கோங்க.,  அப்படி இல்ல தனித்தனியா தான் செய்வோம் அப்படி நினைச்சீங்கன்னா., எல்லாரும் வீட்டிலேயும் செய்றதெல்லாம் தூக்கிட்டு வந்து  ஒரே இடத்தில் உட்கார்ந்து கோங்க., ஜாலியா இருக்கும் இல்ல.., நான் சின்னவளா இருக்கும் போது, இந்த பக்கம் வரும்போதெல்லாம் யோசிச்சிருக்கேன்.,  சூப்பர் ஃபேமிலி அப்படின்னு சொல்லி.,   நான்  தனியா வளர்ந்து வர்றேன்., அப்ப உங்களை பார்க்கும் போதெல்லாம்  ஜாலியா இருக்கும் இல்ல.., இத்தனை பேர் இருக்கும் போது ஹாப்பியா இருக்கும் ன்னு.,  யோசிச்சு இருக்கேன்.., என்னைப் பொருத்த வரைக்கும் அம்மா பக்கத்து வீட்டிலிருந்ததே அதுக்காக தான்.,   பாட்டி தாத்தா  வீட்டில் எப்போதும் யாராவது இருந்துகிட்டே இருப்பாங்க..,  எனக்கு அது ரொம்ப பிடிக்கும்., வீட்ல ஆள் இருக்குற அட்மாஸ்பியர் தான் ரொம்ப நல்லா இருக்கும்.,  அப்புறமா ஹாஸ்டல் தான்.,  வீக் என்ட் பார்க்க வருவாங்க., ஆனாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் வீடு தான்.,  வீட்ல நிறைய பேர் இருக்கணும்,  அப்படிங்கிற மாதிரி தான்., ஏன் நீங்க தனித்தனியா சமையல் பண்றீங்க., வீடு தனித்தனியா இருந்தா  கண்டிப்பா தனித்தனியே சமைக்கனும் ன்னு என்ன கட்டாயமா என்ன”.,  என்று கேட்டாள்.

” போங்க அண்ணி.,  இங்கே இருக்க கூட்டத்துக்கு, அதாவது நம்ம ஃபேமிலில இருக்க கூட்டத்தை நீங்க யோசிச்சு பாருங்க.,  அத்தனை கூட்டத்துக்கும் மட்டன் வாங்கணும் னா., ஒரு ஆடு இல்ல வேணும்” என்று சொன்னார்கள்.,

சிரித்துக்கொண்டே “அவ்வளவு தான் சாப்பிடுவீங்களா.,  சும்மா கடையில நீங்க தனித்தனியா வாங்குற திங்ஸ் கணக்கு போட்டா..,  மொத்தமா வாங்குள திங்ஸ் ரேட் அ விட குறைவா தான்  இருக்கும்., அத்தனை பேரும் சேர்ந்து இருக்கும் போது கொஞ்சமா இருந்தாலும்., அஜெஸ்ட் பண்ணி சாப்பிடும் போது அதில் இருக்கிற நிறைவு தனிதனியா சாப்பிடும் போது வருவதில்லை”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் வாயிலிருந்து என்ன வருகிறது என்று பார்ப்பதற்காக தான் பிள்ளைகள் அவளை இழுத்துக் கொண்டு வந்திருந்தனர். அதை அங்கிருந்த பெரியவர்கள் கேட்கும் போது அவர்களும் மனதிற்கு நிறைவாக உணர்ந்தனர்.,அதை  கேட்ட ஜெ.கே க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவள்  தான் என் குடும்பத்திற்கு ஏற்றவள்., என்ற எண்ணம் அவன் மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றியது…

“அண்ணி கொடைக்கானல் ல எப்படி இருக்கீங்க., தனியா தானே இருப்பீங்க.,  என்று கேட்டனர்.

” இல்ல அங்க எப்பவும் ஆள்  இருந்துட்டே இருப்பாங்க., வீட்ல  வேலைக்கு இருந்த அம்மா., அவங்க ஃபேமிலியோட தான் இருந்தாங்க., அவங்க ஃபேமிலி பின்னாடி ஒரு வீட்டில் இருக்காங்க., அந்த அம்மாவும் அவங்க மருமகளும் எப்பவும் என் கூட தான் இருப்பாங்க.., அப்புறம் பக்கத்திலேயே ரிசார்ட்  ரூம்ஸ்., சீசன் இருக்கிற நாள்ல  எப்பவும் ஆள் இருந்துட்டே இருப்பாங்க., சோ அங்க ஒர்க் பண்றவங்க எல்லாம் எதுனாலும்., வீட்டுக்கு வர போக அப்ப  கொஞ்சம் பிசியாக இருக்கும்.,  லோன்லி அப்படிங்கிற பீல் வராது., அது மட்டும் இல்லாம எனக்கு அங்க ஓர்க் கும் கொஞ்சம் ஜாஸ்தி இருந்துட்டே இருக்கும்., எப்பவும் பழத் தோட்டத்தை பார்க்கணும்.,  பழம் பறிக்க அந்தந்த  சீசன் ல பார்க்கணும்.,   நிறைய ஒர்க் இருக்கிற நாள்ல டைம் சரியா இருக்கும்” என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

அதே நேரம் அவர்களோடு வந்து அமர்ந்திருந்த சொந்தத்தில் ஒரு அம்மா.,”நீ என்ன படிச்சிருக்க” என்று கேட்டார்.

” ஹார்ட்டிகல்ச்சர்” என்று சொன்னாள்.

” அப்படின்னா” என்று கேட்டார்.

“தோட்டத்தை பற்றிய சம்பந்தமான விஷயங்களை படிக்கிறது”என்று அவர்களுக்கு பதில் சொன்னாள்.

“அந்த விவசாயத்துக்கு படிப்பாங்களே.,  அந்த மாதிரி படிப்பா” என்று அவர் கேட்டார்.

ஆமாம் என்று சொன்னாள். “உங்க ஊர்ல தோட்டம் எல்லாம்  நிறைய இருக்கு ன்னு.,  அதற்காக தோட்டத்து சம்பந்தமா எடுத்து படிச்சிட்ட என்னமா”என்று கேட்டார்.

ஆமா என்று சிரித்த முகமாக சொல்லிக் கொண்டிருந்தாள். “இந்த இஞ்சினியர் டாக்டர் ன்னு.,  சொல்வதெல்லாம் படிக்கணும்னு நினைக்கலையா., என்று கேட்டார்.

“அவங்க அவங்களுக்கு பிடித்த ஃபீல்டில் தானே படிக்க முடியும்., எனக்கு இது பிடிக்கும்., அதனால இதை எடுத்து படித்தேன்”., என்று சொன்னாள்.

பெரியவர்களும் சரி அவனுக்கு ஏற்ற பெண்தான் என்று சிரித்துக் கொண்டனர்.

அவனும் சொல்லவே இல்லை என்று நினைத்துக்கொண்டான். அவளிடம் என்ன படித்திருக்கிறாள் என்று கூட கேட்காததால் அவள்  ஹார்ட்டிகல்ச்சர் என்பதும் தெரியாது அவனுக்கு.,  இவன் படித்ததோ அக்ரிகல்ச்சர்….

முதல் முதலாக தெய்வானை பாட்டி.,  மனதளவில் திவ்யாவின்  வளர்ப்பில் ஏதோ தவறி விட்டோம் என்பதை உணரத் தொடங்கினார். ஏனெனில் குடும்பம் சொந்தம் அனைவரும் சேர்ந்து இருப்பது என்று பேசும் இந்தப் பெண் எங்கே., பேசிய அன்றே அனைவரும் இங்கு தான் உண்ண வேண்டுமா.., என்று கேட்ட அவள் எங்கே.,  அனைவரின் கேள்விக்கும் சிரித்த முகமாக பதில் சொல்லும் இப்பெண் குடும்பத்திற்கும்.,  தன் பேரனுக்கும் ஏற்றவள் தான் என்பதை ஓரளவு ஏற்க தொடங்கியிருந்தார்.

ஏனெனில் திவ்யாவிற்கு எவ்வளவு தான் நெருங்கிய சொந்தங்கள் என்றாலும்.,  யாரிடமும் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள மாட்டாள்., ஆனால் சரண்யாவிற்கு யாரையும்  யாரென்று தெரியாத நேரத்தில் கூட அனைவரின் கேள்விக்கும் பதில் சொன்ன விதம்., தெய்வானை மனதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement