Advertisement

11

அந்த நீள நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

இந்த இரவை கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள் அது சொல்லும்
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்

காலையில் கோயிலுக்கு செல்லும் போது வீட்டிலுள்ள சிறியவர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக கிளம்பி சென்றனர்., அனைவரும் அவளோடு நன்றாக பேசினர்.

கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் நேரம் பிள்ளைகளுடன் அனைவரும் பேசிக் கொண்டே வர சற்று நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்கு வந்த பிறகு உறவுகள்.,  சொந்தம், பந்தம், என கூடியிருக்க அன்று வீட்டில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் சமையல் நடந்து கொண்டிருந்தது.  அவ்வப்போது யாராவது வந்து அவளோடு பேசினாலும்., அவளுக்கு ஏனோ சற்று தனியாக இருக்கவேண்டும் போலவே தோன்றியது., அந்த எண்ணத்தோடு பின்புறமாக  தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கு நடுவே போடப்பட்டிருந்த பெஞ்சில் போய் அமர்ந்தாள். அதற்கு சற்று தள்ளி தான் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது., அங்கு தான் வீட்டில் பெண்கள் அனைவரும் இருந்தனர். அதனால் சற்று தைரியமாக அங்கு போய் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது நேற்று அவன் கேட்டது பேசியது எல்லாம் நினைவு வந்தது.  தோளோடு அணைத்து இருந்தவன், சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தான். பின்பு “உள்ளே வா நீ சரியா தூங்கி இருக்க மாட்ட.,  முதல் நாள் தான் வந்திருக்க., காலையில் கிளம்பி கோவில் வேற போயிருக்க.,  திரும்பி வந்த உடனே நிச்சயம் அது முடிஞ்ச உடனே  கடைக்கு போயாச்சி.,  உனக்கு ரெஸ்டே இருந்திருக்காது., வந்ததில் இருந்து” என்று சொல்லி உள்ளே அழைத்து வந்தான்.

அவளுக்கோ என்ன செய்வது என்ற யோசனையோடு வேறு வழியின்றி அவன் பின்னே எழுந்து நடந்தால்., அவன் வேறு எதுவும் சொல்லவில்லை “உன் வீட்டில் உன் அறையில் இருந்தால்.,  எப்படி இருப்பியோ அது போலவே இரு”., என்று சொன்னவன் அவளுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்து விட்டு “பெரிய கட்டில் தான்., நான் சொன்னது ஏற்கனவே சொன்னது தான்., அதில் எந்த மாற்றமும் இல்லை.,  என்று சொல்லி எதைப்பற்றியும் யோசிக்காமல் தூங்கு” என்று சொன்னான்.

அப்போது அவளிடம் கேட்டது “நேத்து திடீர்னு நிச்சயதார்த்தம் சொல்லும்போது நீ என்கிட்ட பேசணும்னு சொன்ன.,  நான் உன்கிட்ட பேசணும் சொன்னேன்., ஆனால் ரெண்டு பேருக்கும் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கல., ஏதோ முக்கியமான விஷயம் னா.,   சொல்லு பேசலாம்” என்று சொன்னான்.

இவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்., “மெதுவா பேசும்  விஷயம் தான்.,  ஆனா இதை  உங்க கிட்ட பேசணும் னு நினைச்சேன்”., என்றாள்.

“இனி மேல் சொல்லக்கூடிய விஷயம் இல்லை யா., இல்ல சொல்லலாம் னா சொல்லு”  என்றான்.

“இல்ல அங்க கொடைக்கானலில் தாத்தாவால  பிசினஸ் பார்க்க முடியாது.,  அப்பா வேலையை விட்டுட்டு வரதுக்கு ஒரு சிக்ஸ் மந்த் ஆகும்.,  அதுவரை கொடைக்கானல் ரிச்சர்ட்., பழப்பண்ணை பாக்கணும்., கண்டிப்பா தாத்தாவால முடியாதுன்னு எனக்கு தெரியும்.,  அதுதான் என்ன பண்ணனு தெரியாமல் யோசிச்சிட்டு இருந்தேன்”., என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

“இதுக்கு தான் இவ்ளோ யோசிச்சியா ஏற்பாடு பண்றேன்” என்று சொன்னான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்து “நீங்களும் ஏதோ பேசணும்னு சொன்னீங்களே” என்று கேட்டாள்.

அவனும் “பேச நினைச்சேன்., என்ன நான் சொல்றது., ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது”., என்று சொன்னான்.

இவளும் சரி என்றாள். அவளும் மனதிற்குள் வேறு ஒன்று நினைத்திருந்தால்., அதை திருமணம் முடிந்த பிறகு அவனிடம் எப்படி கேட்பது என்று அத்தோடு விட்டுவிட்டால்…

அதன் பிறகு சற்று நேரம் இருவரும் அவரவர் தொழில் சம்பந்தமான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்..

அவனுக்கு பாடுவது.,  பாட்டு கேட்பது.,  மிக பிடிக்கும். என்பது இவளுக்கு தெரியும். எனவே அந்த அமைதியான சூழலில் மெதுவான ஒலியில்., அவன் எப்பொழுதும் கேட்கும் இதமான மெல்லிய பாடல்களை வைத்து விட.., சற்று நேரத்தில் அவளும் உறங்கிவிட்டாள்., அவனும் ஏற்கனவே பாடலை இரண்டு பாடலோடு முடியும்படி தான் வைத்திருந்தான்.  அவனுக்கும் தூக்கம் வர பாட்டை ஆப் பண்ணிவிட்டு தூங்கி விட்டான்.  காலை எழுந்து குளித்து கிளம்பி கீழே வரும் போது அவனும் எழுந்து குளித்து கிளம்பி வந்து விட்டான்.  வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்குமே தெரியும் இருவருக்குள்ளும் சரியான பேச்சு வார்த்தை கூட இல்லை என்று., அதனால் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

ஏனெனில் இருவருமே சடங்கு சம்பிரதாயம் வேண்டாம் என்று சொன்னவர்கள் தான்., ஆனாலும் முறைப்படி கோயிலுக்கு செல்ல வேண்டும், என்பதால் மட்டும் அவர்களை போய்விட்டு வர சொல்லி இருந்தனர்.  இன்னும் இரண்டு நாளில் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வர வேண்டும்.,  அதன் பிறகு சரண்யாவின் அம்மா பாட்டி வீட்டுக்கு ஒருமுறை சென்று விட்டு வர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றி யோசித்துக் கொண்டே கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவள்., அவர்கள் சமையல் செய்யும் இடத்திற்கு மெதுவாக எழுந்து சென்றாள்…

அங்கு வீட்டுப் பெண்களாக ஜெ.கே யின் சித்திகள் நின்று சமையலை கவனித்துக் கொண்டிருந்தனர். இவள் சென்றவுடன் பெரிய சித்தி அருகில் அழைத்து வைத்து பேசத்தொடங்கினார்.

“வா மா சரண்யா.,  இங்க வா., இங்கே வந்து உட்காரு” என்று அருகில் அழைத்து வைத்துக் கொண்டவர். “சமைக்க தெரியுமா” என்று சிரித்த படியே கேட்டார்.

“தெரியும்., ஆனா உங்க அளவுக்கெல்லாம் சமையல் செய்வேனா ன்னு தெரியாது.,  ஆனால் ஒரளவுக்கு சமைக்க தெரியும்”என்று சொன்னார்.

அந்நேரம் அங்கு வந்த விசாலாட்சி கொழுந்தன் மனைவிகளும் சாதாரணமாகப் பேசுவதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியுற்றார் ., அதேநேரம் சாதாரணமாக குடும்ப பேச்சுக்களும் அங்கு வர., அவள் அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தாலே,  ஒழிய எந்த கருத்தும் சொல்லவில்லை.,

அதன் பிறகு வேண்டுமென்றே சொந்தத்தில் இருந்த ஒரு பெண் “சமைக்க தெரியும் ன்னு சொல்வதெல்லாம் சரி மா.,  மொத்த குடும்பத்துக்கும் ஒரு நாள் விருந்து வைக்கணும்., உன் கையால தான் சமைக்கனும்”., என்று சொன்னார்.

சிரித்துக் கொண்டே “நீங்க எல்லாம் சாப்பிடுவதற்கு ரெடின்னா., நானும் சமைக்கிறதுக்கு ரெடி” என்று சொன்னாள்.

அதைக் கேட்டவுடன் “அப்படிங்கிற அப்ப சீக்கிரமே விருந்து சமைச்சு போடு”., என்றார்.

” காய் கட் பண்றது தான் கொஞ்சம் கஷ்டம்., அதுக்கு மட்டும் ஏதாவது ஹெல்ப் பண்ணி தந்தா போதும் நானே செஞ்சிருவேன்” என்று சொன்னாள்.

“நாங்க இத்தனை பேர் இருக்கோம் இல்ல.,  எல்லாரும் சேர்ந்து செஞ்சு தர்றோம்.,மத்தபடி நீ தான் மசாலா போடுவது., உப்பு போடுறது., என்ன சமையல் பண்ணனும் முடிவு பண்ணுற வரைக்கும் எல்லாம் பார்க்கணும்., அப்ப தானே உன் கைருசி எப்படி இருக்குனு எங்களுக்கு தெரியும்”., என்று சொன்னார்கள்.

அவளும் சிரித்துக் கொண்டே “சரி செய்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…

சற்று நேரம் அவர்களோடு சாதாரணமாக பேசிக்  கொண்டிருக்கும் போதே பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து வந்து “இங்க வாங்க.,  நாம இங்க உட்கார்ந்து பேசலாம்.,அவங்க கூட போய் என்ன செய்றீங்க., அவங்க ஒல்டு லேடிஸ்” என்று சொல்லி வீட்டிலுள்ள சிறியவர்கள் கிண்டல் செய்து இவளை அவர்களோடு அழைத்துக்கொண்டு செல்ல வீட்டு பெரியவர்களாகிய பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர்.,

விசாலாட்சி தான்  நேரடியாகவே  சொன்னார்.,  நல்ல வேளை கல்யாணம் நின்று.,  இந்த பொண்ணு கிடைச்சிருச்சு” என்று சொன்னார்.

“ஏன் அப்படி” என்று உறவுக்காரப் பெண்மணி கேட்டார்.

“இதே நேரம் இந்த இடத்தில் திவ்யா இருந்து.,உனக்கு சமைக்க தெரியுமா, என்று கேட்டிருந்தால்..,  ஏன் நான் தான் சமைச்சு போடணுமா., நான் என்ன வேலைக்காரியா.,  என்று கேட்டிருப்பா..,  அதேநேரம் குடும்பத்துக்கு விருந்து வைக்கனும்னு சொன்னதுக்கு., நான் எதுக்கு உங்களுக்கு விருந்து செய்யணும் ன்னு கேட்பா..,  என்று சொன்னார்.

ஆமா கல்யாணம் பேசின, அன்னைக்கே ஒரே வீட்டில் சமைத்து சாப்பிட்டதுக்கு “ஏன் எல்லாரும் ஒரே வீட்டுல தான் சாப்பிடணும் ஆ ன்னு கேட்டுட்டா.., எங்களுக்கே கஷ்டமா இருந்துச்சு., நாங்க என்னைக்குமே இருக்கிறது தான் தனித்தனி வீடு., மற்ற படி நாங்க என்னைக்குமே அப்படி பிரித்து பார்த்ததே கிடையாது.,ஆனால் அவ அப்படி சொல்லிட்டா., இத்தனைக்கும் இந்த வீட்டில் பிறந்தவ தான் அவங்க அம்மாவும்.,  எங்களுக்கு ரொம்ப வருத்தமா தான் இருந்துச்சு., நல்லவேளை கடவுளா பாத்து நல்ல மருமகளை இந்த வீட்டுக்கு கொண்டுவந்து விட்டான்” என்று ஜெ.கே யின் சித்தி  பேசிக்கொண்டிருந்தார்.

விசாலாட்சி மனதிற்கு உண்மையிலேயே இப்போது நிறைவாக உணர்ந்தார்., தான் வணங்கிய கடவுள் தன் குடும்பத்தை கைவிடவில்லை, தன் மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை கொடுத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டார்…

இங்கு சமையல் அனைத்தும் முடிந்தவுடன் “விருந்துக்கு இப்பொழுது உணவு பரிமாற வா” என்று கேட்டுவிட்டு எல்லோரும் “சற்று நேரம் செல்லட்டும்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே பிள்ளைகள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு பெரியவர்களும் சென்று சேர்ந்தனர்.

ஆண்கள் மட்டும் முன்புறமாக இருக்க.,  பெண்கள் அனைவரும் பின் இடத்தில் அமர்ந்திருந்தனர்., அங்குதான் பிள்ளைகள் அனைவரும் இருந்தனர்., ஜெ. கே.,  அவன் தம்பிகள் என குடும்பம் மொத்தமும் அங்கேயே இருந்தது. வீட்டில் ஆண்களில் பெரியவர்கள்  மட்டும் வந்திருந்த விருந்தினரோடு வெளியே பேசிக்கொண்டிருந்தார்கள்., அதிலும் தெரிந்த பெண்கள்., நெருங்கிய சொந்தங்கள் அனைவரும், இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி அமர்ந்து இருந்தனர்.

Advertisement