Advertisement

நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்து கொண்டு., அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டிற்கு சென்றான் …

காரில் செல்லும் போதே இருவருக்கும் பிடித்தமான மெலோடி பாடல்கள் ஒலிக்க அமைதியாகவே வந்தான் ஜெ. கே அவனிடம் அவள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் வந்தது., எப்போதும் போல சரிக்கு சரியாக அவன் பேசவில்லை.,  இவள் தான் அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தாள்.

‘என்ன ஆச்சு இவருக்கு., ஏன் அமைதியா இருக்காங்க’., என்று யோசனையோடு அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ ஏதோ யோசனையில் வருவது போலவே தோன்றியது.

என்னவா இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தவள்., அங்கு வந்தவுடன் அவர்களுடைய அறையில் அவன் சொன்ன படி கொண்டு போய் பையை வைத்து விட்டு வரவும்., அப்படியே நடந்து போயிட்டு வரலாம் என்று சொல்லி அழைத்துக் கொண்டு சென்றான்., அவர்கள்  வருவார்கள் என்று தெரிந்ததால்.,  தோட்டத்தில் வேலைக்கு இருக்கும் குடும்பத்தில் உள்ள பெண்மணி இவர்களுக்கு தேவையான மதிய உணவை தயார் செய்து வீட்டில் எடுத்து வைத்துவிட்டார்., இரவு உணவும் அது போல பின்புறமுள்ள வாசல் வழியாக கொண்டு வந்து கிச்சனில் வைத்து விட்டு கதவை பூட்டி விட்டு செல்வதாக சொல்லி விட்டார்.  கிச்சனுக்கு இந்தப் பக்கமாக உள்ள வாசலை இவர்களை பூட்டி கொள்ளும்படி அந்த பெண்மணி சொல்லியிருந்தார்., அது எப்போதும் உள்ள வழக்கம் தான் என்பதால் சரி என்று சொல்லி விட்டனர்.

இருவரும் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு மெதுவாக நடந்து தோட்டத்திற்கு உள்ளே செல்ல., பம்புசெட்டில் தண்ணி வேகமாக விழுவதை கண்டவள். “வாவ் சூப்பரா இருக்கு.,   சொல்லி இருக்கலாம் இல்ல., காலையிலே குளிக்காமல் வந்து இருப்பேன்., இங்கே வந்து குளிச்சி இருக்கலாம்., நல்லா இருக்கும்., சின்ன பிள்ளையில் குளிச்சது, இந்த மாதிரி பம்புசெட்டில் எல்லாம்..,   இங்க வந்ததுக்கு அப்புறம் கூட கூட்டிட்டு வரல இல்ல  நீங்க”., என்று சொன்னாள்.

“சரி இப்ப என்ன.,  இறங்கு குளி” என்று சொன்னான்.

” ஐயோ., இப்பவா,  நான் கையில் டிரஸ் கூட எடுத்துட்டு வரல”.,  என்றாள்.

” இங்க இருந்து, அஞ்சு நிமிஷம் நடந்து போறதுக்குள்ள காத்துல உலர்ந்துரும்., போய் டிரஸ் மாற்றிக்கலாம்”., என்று சொல்லிக்கொண்டே இருந்தான்….

“வேற யாரும் வர மாட்டாங்களா” என்று கேட்டாள்.

“வரமாட்டாங்க” என்று சொல்ல.., சரி “நீங்க போங்க நான் குளிச்சிட்டு வாறேன்” என்று சொன்னாள்.

“என்னது” என்றவன்.,  வேஷ்டியை மடித்துக் கட்டியபடி அவளை கையில் தூக்கியவன் தண்ணீர் தொட்டிக்கு அருகில் கொண்டு செல்ல..,  அவன் சட்டையை இழுத்து பிடித்தபடி “வேண்டாம், வேண்டாம்.,  உள்ள விட்ராதீங்க பயமா இருக்கு” என்று சொன்னாள். அவளை நிதானமாக தண்ணீர் தொட்டியில் இறக்கி விட்டவன்.,  பின்பு அவனும் தண்ணீருக்குள் இறங்கி விட்டான்..

காதல் தாண்டி அவன் அவளுக்காக நிறைய சொல்லிக் கொடுக்க  தொடங்கியிருந்தான்., அவள்தான் வெட்கத்தில் சிவந்து போனாள்.

சற்று நேரம் கழித்து  அவன் “சரி வா வீட்டுக்கு போலாம்” என்று சொன்னான். தண்ணிக்குள் இருந்து அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்., பின்பு அவனிடமிருந்து அவள் வெட்கத்தில் விலகி செல்ல தொடங்கியிருந்தாள்.

இருவருக்குமான புரிதல் இருந்தாலும் ஏனோ ஒரு பயம் அவளுக்குள் இருந்தது. அதை புரிந்து கொண்டவன் மதிய உணவிற்கு பிறகு “தண்ணீர் பிடிக்காமல் சளி புடிச்சிரும்., முடிய நல்லா காய வை” என்று சொன்னவன்., அவளோடு அமர்ந்து அவ்வீட்டின் ஹாலிலேயே பேசிக் கொண்டிருந்தவன்.,

சற்று நேரத்தில் அவள் அமர்ந்திருந்த சோபாவில் அவள் மடியிலேயே படுத்து அவள் இடுப்பை கட்டிக்கொண்டு புடவையின் இடைவெளியில் தெரிந்த வெற்றிடையில் முகத்தை அழுத்தமாக பதித்து கொஞ்சம் கொஞ்சமாக இடையிலிருந்து வயிற்றிற்கு தன் முகத்தை மாற்றி கொண்டான்…

அவள் அவனிடம் எதுவும் சொல்ல முடியாத சூழலில்., மெதுவாக அவன் தலையைக் கோதிக் கொடுத்தபடி அவன் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

எதற்காக தன்னை தோட்டத்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான்., என்பதை ஓரளவுக்கு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது., அவன் எதிர்பார்க்கும் தனிமை இங்கு தான் கிடைக்கும் என்பதால் இங்கு அழைத்து வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்…

இத்தனை மாதமும் தன் முகம் பார்த்து நடந்த அவனுக்காக தன் பயத்தை உதற கூடாது என்று தோன்றியது., அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு இணைந்து போக தொடங்கினாள்., அன்று அவர்களுக்கான புது வாழ்க்கையை அழகாக தொடங்கி கொண்டான்.,  தன் ஒன்பது வருட காதலை தான் விரும்பிய அவளிடமே காட்ட தொடங்கினான்., காதல் சொல்வதில் தாமதப் படுத்தினாலும் தன் ஆசையும்., மோகத்தையும் அவளிடம் காட்ட அவன் தயங்கவே இல்லை., அவள் தனக்கானவள்., தன்னுடையவள்.,  என்ற எண்ணமே அவனை அவளிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இணைந்து போக வைத்தது.,

ஏற்கனவே மனம் நிறைய காதல் உடன் இருந்தவர்களுக்கு., திருமணம் முடிந்த இந்த மூன்று மாதமும் நன்கு புரிதலுக்கான நேரமாக எடுத்துக் கொண்டவர்கள்.,  இப்பொழுது அழகாக தங்கள் வாழ்க்கையை தொடங்கி கொண்டார்கள்.,  அவனின் விருப்பமும் அவளின் தயக்கத்தையும் உடைத்தெறிந்து அழகான தாம்பத்தியம் அங்கு நிறைவாக தொடங்கியிருந்தது….

உண்மையான காதல் எப்படி இருந்தாலும்., எங்கிருந்தாலும் சேர்ந்துவிடும்., மனம் நிறைய காதலும் நினைவெல்லாம் ஒருவருக்கு ஒருவருடைய நினைவுகளுமாக சுமந்துகொண்டு திரிந்தவர்களுக்கு இன்று காதலின் மோகத்தில் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்வது சுகமாகவே தோன்றியது.., நான்கு நாட்களும் அவர்களுக்குரிய அன்னியோன்னியத்தை அதிகப்படுத்தி இருந்தது…

முதல் முறை போயிட்டு வந்த பிறகு அடிக்கடி அவளை அழைத்து கொண்டு சென்றான். ஒரு முறை சுடி போட்டு கிளம்பச் சொன்னான்., இவளும் ரெடியாகி வர ராயல் என்பீல்ட் ல் அழைத்து சென்றான்.

எங்கே போறோம் இந்த பாதை தோட்டத்திற்கு போற பாதையில்லையே என்று கூற… இது நந்தா சொன்ன பிரைவேட் பால்ஸ் போற பாதை என்றவன்., சுற்றிலும் இயற்கை சூழ்ந்த பாதை நடுவே அழைத்து வந்தவன்… அவள் சிறு வயது ஆசையை நிறைவேற்றினான்… அந்த வண்டியை ஒட்டப் பழக்கி கொடுத்தான்.  அன்றைய சந்தோஷத்தில் அவன் கழுத்தை கட்டி கொண்டு தொங்கினாள்… அவன் கேட்காமல் முத்தத்தை அள்ளி வழங்கினாள்.

அவனோ., இப்படி எல்லாம் நடக்கும் னு தெரிஞ்சா., அப்பவே சொல்லி கொடுத்திருப்பேனே… என்று அவள் வெட்கத்தை பெற்று கொண்டான்.

மூன்று மாதத்தில் சரண்யா தாயாகப் போகும் செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது., அவளை வீட்டில் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வதைப் போல ஜெ.கே யின் அம்மா அப்பா மட்டுமல்லாமல் குடும்பத்தின் சித்தி சித்தப்பா முதற்கொண்டு நன்றாகப் பார்த்துக் கொள்ள தொடங்கியிருந்தனர்.

ஆளாளுக்கு அவளுக்கு வாங்கி கொடுப்பதை தான் அவளால் சாப்பிட முடியாமல் திணறிப் போனாள்., எல்லோரும் ஏதாவது ஒன்றைச் சொல்லி மருமகளுக்கு என்று வாங்கி வருவது தவறவில்லை., அந்த அளவிற்கு வீட்டினரோடு ஒரு ஒன்றிப்போய் இருந்தாள் சரண்யா அவள் ஆசைப்பட்ட குடும்பம் அவளுக்கு கிடைத்தது விட அவளுக்கு அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை..

இது போன்ற ஒரு குடும்பம் தானே அவள் ஆசைப்பட்டது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.  அவளுடைய சந்தோஷமே அவளுடைய குழந்தையும் ஆரோக்கியமாக வயிற்றில் வளர வைத்தது…

ஒரு நாள் அவன் கையணைப்பில் அமர்ந்து கதைப் பேசி கொண்டு இருக்கும் போது… “சாயா., தோட்டத்திற்கு ஒரு முறை போயிட்டு வருவோமா”.. என்றான்.

“எனக்கும் தோணுச்சு… ஆனால் இப்ப எப்படி..  அங்கே போக விட மாட்டாங்க”.. என்றாள்.

“காலையில் போயிட்டு ஈவினிங் வந்துறலாம்., நான் பேசுறேன் சரியா”, என்றவன் சொன்னது போலவே வயிறு பெரிதாகும் முன்பு கூட்டி கொண்டு சென்றான்.

பெரியவர்கள் அனைவரும் ஏழாவது மாதம் வளைகாப்பு  வைக்க ஏற்பாடு செய்ய அவன் அவளை அனுப்ப மாட்டேன் என்று சொல்லி விட அவன் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள மற்றப் பிள்ளைகளும் “அண்ணியை அனுப்ப முடியாது., அண்ணி டெலிவரி வரைக்கும் இங்கேயே இருக்கட்டும்”., என்று சொன்னார்கள்.,

வேறு வழியின்றி ஏழாவது மாதம் வளைக்காப்பு செய்து., ஒன்பதாவது மாதம் கூட்டிக்கொண்டு செல்லலாம்” என்று சொன்னார்கள்.,  அப்போதும் பிள்ளைகள் அனைவரும் விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.  அவர்கள் ஆசைப்படியே அங்கேயே பிரசவம் நடந்தது., வீட்டின் மூத்த குழந்தையாக ஜெ.கே யின் மகன் பிறந்தான்….

குழந்தை பிறந்த பிறகு செங்கோட்டையில் முரளியின்  வீட்டில் வைத்து மங்கையே கவனித்துக் கொண்டார். அம்மா பாட்டி., அப்பா பாட்டி உதவியோடு அவளை நன்றாக கவனித்து கொண்டனர். மூன்று மாதம் கவனித்து அதன் பிறகே முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவும் வைத்து.,  அதன் பிறகே ஜெ. கே வீட்டிற்கு சரண்யா தன் மகனோடு வந்து சேர்ந்தாள்.

அங்கு குடும்ப அன்பர்களின் அன்புடனும்.,  அத்தனை பேரின் பாசத்தோடும் மகன் வளர கண்டாள்  பிள்ளை அவளிடம் இருக்கும் நேரம் குறைவு தான்., வீட்டில் அனைவரிடமும் தான் அவளின் மகன் வளர்ந்தான்.  ஏனெனில் அவளை போல் தனியாக பிள்ளை வளர கூடாது என்பதில் அவள் எப்போதும் உறுதியாக இருந்தாள்.

ஜெ.கே க்கும் சரண்யா விற்கும் இருந்த காதல் பெருகியதே தவிர சற்றும் குறையவில்லை., சிறுசிறு விவாதங்கள் தொழில் சம்பந்தமாக வந்தாலும் மற்றவர்களுக்காக பேசும் போது விவாதம் வந்தாலும்., தங்களுக்குள் என்றுமே அவர்கள் விவாதமோ., சண்டையோ வந்தது கிடையாது., சின்ன விவாதம் என்றாலும் அடுத்த நிமிடமே யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போய் விடுவார்கள்.,

தங்கள் குடும்ப வாழ்க்கையை அருமையாக அமைத்துக் கொண்டிருந்த ஜெ. கே சரண்யா தம்பதியர்  போல் அனைவரும் வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது.

“வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைத்து வாழ தொடங்கிவிட்டால் அழகானதாக அமைந்துவிடும்”

முடிந்தால் உங்களுக்கான வாழ்க்கையை அழகாக வாழ்ந்து பாருங்கள்.,  ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுக்கும் வாழ்க்கையில் என்றும் அன்பு நிறைந்திருக்கும்., காதல் மலர்ந்திருக்கும்., இங்கு காதல் காதலைத் தவிர வேறு எதுவுமில்லை..,

“காதல் புனிதமானது.,  உண்மையான அன்பு இருக்கும் இடத்தில்.

காதல் நிலைத்திருக்கக் கூடியது..,  விட்டுக் கொடுத்து வாழும் இடங்களில்.,

காதல் சுகமானது.., அன்பை மட்டும் பொழியும் பொழுதுகளில்”

“ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து .

ஒன்னோடுஇன்றே நான் வாழவேண்டும்
காதல் முடியலாம் நம் காதல் முடியுமா
நீபார்க்க பார்க்க காதல் கூடுதே”

என்றும் அன்புடன்.,

                                ஆதிபிரபா….

Advertisement