Advertisement

மதிய உணவை முடித்துக் கொண்டு பின்பு அங்கங்கு வெளியே சுற்றி பார்க்க வேண்டியது எல்லாம் சுற்றி விட்டு மாலை நெருங்கும் நேரத்தில் பிள்ளைகள் அனைவருமே சோர்வாகி “வீட்டுக்கு போகலாம், வீட்ல ஏதாவது நல்ல ஸ்னாக்ஸ் சொல்லுங்க., ஒரு டீய குடிச்சுட்டு ஸ்னாக்ஸ் சாப்பிடுவோம் அண்ணி., நாளைக்கு எங்க கூட்டிட்டு போறீங்க” என்று கேட்டார்கள்.

“பழத் தோட்டத்துக்கு போலாம்., நம்ம பழத்தோட்டம் நல்லா இருக்கும்.,  அங்க போலாம்” என்று சொல்ல அனைவரும் அங்கு செல்வதாக முடிவெடுத்து கொண்டனர்…

அன்று அவன் அணைப்பு இறுக்கமாக இருந்தாலும்.,  அவன் அத்துமீற வில்லை அவனுக்கான உரிமையும் எடுத்துக் கொள்ளவில்லை., அவளிடம் சொன்னது எல்லாம் ஒன்றே ஒன்று தான் “எதுவாக இருந்தாலும்., இது நமக்கான வாழ்க்கை இன்னும் நம் இருவருக்கும் புரிதல் வேண்டும்., அது வந்த பிறகு தான் நம் வாழ்க்கையை தொடங்க வேண்டும்”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.  அவளும் சம்மதமாக தலையை அசைத்தபடி அவன் மார்பில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.  இருவருக்கும் அன்று ஒருவருக்கான ஒருவருடைய காதலை தெரிந்து கொண்ட நாள் என்பதால் அதைப்பற்றி யோசனையோடு இருவரும் தூங்கி போனார்கள். அன்று என்னவோ இருவரும் நிம்மதியான உறக்கத்தில் இருந்ததாக உணர்ந்தனர்.

மறுநாள்  காலையில்  பழத் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு இருக்கும் பழத்தை இவள் என்ன செய்கிறாள் என்று அவன் கேட்டு தெரிந்து கொண்டான். “இங்கிருக்கும் சில வகையை தான் வியாபாரத்திற்கு வாங்குகிறார்கள்”.,  என்று சொன்னாள்.

இதில் உள்ள “எந்த பழத்தை எல்லாம் நாம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய முடியும்” என்ற எண்ணத்தில் இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அதன்படி அவன் சில பழங்களை தேர்ந்தெடுத்து “இதையெல்லாம் ஏற்றுமதி செய்யலாம்., ஆனா நீ மொத்தமா  மத்தவங்களுக்கு என்ன விலைக்கு கொடுப்பீங்களோ.,  அதே விலையை வாங்கிக்கனும்”., என்று சொன்னான்.

“கிண்டல் தானே இதை எங்க அப்பா கிட்ட சொல்லுங்க.., தாத்தா என்ன சொல்கிறாரோ அதை கேட்டுக்கோங்க” என்று சொன்னாள்.

“அப்படி கிடையாது டா.,  இது உன்னோட புராப்பர்டி., பிசினஸ் னு வரும் போது கரெக்டா இருக்கனும்” என்று சொன்னான்.

இவளோ அதெல்லாம் இல்ல..,  இதிலிருந்து அப்படி ஒன்றும் பெரிய லாபம் என்பதெல்லாம் கிடையாது., இருக்கட்டும் மத்தவங்க ட்ட கொடுக்குறத நாமலே எடுக்க போறோம் அவ்வளவு தான்…  நான் பேசிக்கிறேன் பேசாம இருங்க” என்று சொன்னாள்.

அவன் மேற்கொண்டு பேச தொடங்கும் முன்பே., ப்ளீஸ் பிசினஸ்ல இத  ரொம்ப லிங் பண்ணாதீங்க விடுங்க.., இது எல்லாமே என்னுடையது  தான்.., என்னோடது எல்லாம் உங்களோடது தான்.,  சத்தம் காட்டாமல் இருக்கனும்” என்று சொன்னாள்.

அதே  நேரம் நந்தாவுக்கு அந்த தோட்டம் மிக பிடிக்க.., “அண்ணி செமையா  மெயின்டென்  பண்ணி இருக்கீங்க”என்று சொல்லி அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்., “நீங்க என்ன பண்றதா இருக்கீங்க நந்தா.., ஏதாவது பிசினஸ் பண்றதா  இருக்கீங்களா.,  இல்ல எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் ஜாப் போற ஐடியா இருக்கா.., இல்ல என்ன பண்ணலாம் னு வேற  ஐடியா எதுவும் வைச்சு  இருக்கீங்களா ன்னு சொல்லுங்க.,  அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்”., என்று சொன்னாள்.,

“ஐடியா எல்லாம் பெருசா இல்ல…  அண்ணன் கூட சேர்ந்து பிசினஸ் பண்ணி பாக்கணும்., அப்படின்னு நினைச்சேன். தனியா பாக்குற எண்ணம் இல்ல..,  அண்ணன் கூட சேர்ந்து பார்க்குற மாதிரி தான் ஒரு யோசனையிலேயே இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவனிடம் கேட்டாள். “நந்தா நான் கேட்டா., நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே”., என்றாள்.

“சொல்லுங்க அண்ணி என்ன” என்று கேட்டான்.

“அப்போ இங்க இருக்குற இந்த தோட்டம்., ரிசார்ட் ன்னு இங்க இருக்குற பிசினஸ், எல்லாம் நீங்க பார்த்திருக்கீங்களா” என்று கேட்டாள்.

“அண்ணி என்னது., இவ்ளோ பெரிய பொறுப்பை ஏன் தலையில கொடுக்குறீங்க” என்றான்.

“அப்படி எல்லாம் இல்ல.,  நீங்களும் தனியா பிஸினஸ் தான் பண்ணனும் இருக்கிறீங்க., நீங்க வந்து என்ன விட பெரிய பையன்.,  நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க.., நான் பார்த்தேனே,  நானே ஆறு மாசத்துல பிக் பண்ணி கொண்டு வந்துட்டேன்.., உங்களாள  எல்லாம் முடியும்.,  அப்பா வர்ற வரைக்கும் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்”.,  என்று சொன்னாள்.

” ஐயோ வேண்டாம்.,  வேண்டாம்.,  மாமா பார்க்கட்டும்.  எனக்கு இங்கே செட்டாகுமா ன்னு தெரியல.,  அண்ணி பிஸினஸ் பார்க்கலாம் அப்படின்னா.., நான் வந்து செங்கோட்டை பக்கமே., ஆரியங்காவு ஏரியால தோட்டம் வருது, அந்த இடத்தில் பார்த்துக்கலாம்..,  அப்படி இல்லாட்டி  பிரைவேட் பால்ஸ் ஒன்னு விலைக்கு வருது..,   அதோட ஒனர் ப்ரைவேட் பால்ஸ்ஸோட  ரிச்சார்ட் ரொம்ப சின்னதா சேர்த்து வைச்சிருந்தாரு.,  அதை விக்கிற மாதிரி பிளான் இருக்கு., செங்கோட்டை பக்கமும் கூட., அதை வாங்கலாம்., வாங்கினோம் அப்படின்னா., உங்களுக்கும் தெரிஞ்ச ரிச்சார்ட் பிஸினஸ் கூட.., சக்ஸஸ் புல்லா பண்ணலாம்.., இங்க மாமா பார்க்கட்டும்.., நமக்கு இன்னொரு  ஆரம்பிப்போம்”., என்று சொன்னான்.

“சரி உங்கள் இஷ்டம்., பட் உங்களுக்கு தான் ப்ர்ஸ்ட் சாய்ஸ்.., நீங்க பார்க்கலை ன்னு சொல்லுற தால தான்.,   என்று சொன்னாள்.

உண்மையிலேயே அந்த நேரம் சித்தப்பா பெருமையாக உணர்ந்தார். ‘தனக்கு உரிய சொத்து என்று  எண்ணாமல் கொழுந்தன் என்று எண்ணத் கூட இல்லாமல்.,  உடன் பிறந்தவன் போல இதை நீ பார்த்துக் கொள்கிறாயா, என்று கேட்கும் மனம் யாருக்கு வரும்.,அதுமட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் பணம் பார்க்க நினைப்பவர்கள் இது அவளுக்கான சொத்து அனைத்திற்கும் அவள்தான் ஏகபோக வாரிசு என்று தெரிந்தும்., அவள் எதைப்பற்றியும் கணக்கில் கொள்ளாமல் சாதாரணமாக பழகுவது’ அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாக இருந்தது.

அது போல அப்போது தான்.,  அந்த பிரைவேட் பால்ஸ் விலைக்கு வருவது ஜெ.கே க்கும் தெரியும் என்பதால்., அவன் ஜெ. கே இடம் அங்கு வைத்தே நந்தா சொன்னான். பதிலுக்கு ஜெ.கே “அனைத்தையும் பொறுப்பாய் பார்த்துக் கொள்வாய் என்றால்., லோன் அப்ளை பண்ணுவோம்., எக்ஸ்ட்ரா அமௌன்ட் நாம  போட்டு வாங்கலாம்.., ஆனால் நீ விளையாட்டாய் இருக்கக்கூடாது” என்று சொன்னான்.

“கண்டிப்பா பார்ப்பேன் ண்ணா”.., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது  தான் அதே நேரம் இவர்கள் தோட்டத்திலிருந்து கிளம்புவதற்கு தயாராகும் போது தோட்டத்தில் இருப்பவர் தேவையான அளவு பழங்களைப் பறித்து கூடையில் வைத்து பேக் செய்து வைத்திருந்தார்.,

“எதுக்கு இவ்வளவு பழம்”என்று சித்தி கேட்டார்.

தோட்டத்தில் இருப்பவர்  தான் “நேத்து ஐயா போன் பண்ணி சொல்லி விட்டாங்க.,  பேத்தி வரும் எல்லா பழமும் பறிச்சி பேக் பண்ணி வை., என்று சொல்லி இருந்தாங்க.,  அதான் நீங்க காலையில் வருவீங்க ன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் பறிச்சேன்.,  இரண்டு நாள்ல பழுக்குற மாதிரி தான் வைச்சிருக்கேன்.,   நாளைக்கு காலைல கிளம்பிட்டீங்க னா கூட., உங்க ஊரு போய்  நாளைக்கு நைட்டு சேர்ந்துருவீங்க இல்ல”.,  என்று கேட்டுக்கொண்டிருந்தார்..

அவர்களும் அப்படி தான்  கிளம்ப பிளான் செய்திருந்தார்கள். காலையில் கிளம்பி திண்டுக்கலுக்கு சென்று விட்டு அங்கிருந்து மதியத்திற்கு மேல் கிளம்பினால் இரவு நேரத்தில் செங்கோட்டைக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்து இருந்தனர்.

அதற்கு தகுந்தார் போல் பறித்த பழங்களையும் பறித்தவர்கள் பேக் செய்து கொடுக்க.., அதை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

அவர்கள் திட்டமிட்ட படியே திண்டுக்கல்லுக்கு சென்று அனைவரிடமும் விடைபெற்று கொண்டு.., அவளுக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். மீதி எல்லாம் வீட்டினர் வரும்போது கொண்டு வருவதாக சொல்லி விட்டனர்., அதன் பிறகு  இரவு வந்து சேர்ந்தனர்…

அவர்களுக்கான  வாழ்க்கை அலையில்லாத கடலில் செல்லும் படகு போல மெதுவாக சென்று கொண்டிருந்தது. இரண்டு நாளில் அவளுக்கு செய்ய வேண்டிய சீரோடு திண்டுக்கல்லில் இருந்து பாட்டி தாத்தாவுடன்,  மங்கை  முரளி  வர.,  இங்கே செண்பகமும் தன் பேத்திக்கு சேர்த்து வைத்ததை சேர்த்து செய்து அழகாக  ஊர் மெச்சும்படி சீர்  அடுக்கி வைத்தனர்…

அன்று ஜெ.கே வீட்டில் விருந்து தடபுடலாக இருந்தது… அதன் பிறகு அந்த வாரத்திலேயே  குடும்பதினர் உதவியோடு சரண்யா சமையல் செய்ய., முக்கிய சொந்த பந்தங்களுக்கு ஒரு விருந்து வைத்தனர். சாப்பிட்ட அனைவருமே அவளின் சமையலை புகழ்ந்தனர். அந்த மகிழ்வோடு பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு விட்டு கிளம்பினர்.

சாதாரணமாக அவள் வீட்டில் சுடிதார் போடத் தொடங்கி இருந்தாள். வீட்டில் எல்லோருமே போட்டுக்கொள் என்று சொன்னதால் அவளும் போட்டுக் கொள்ள தயங்கவில்லை.,

வெளியில் விசாலாட்சியோடு அருகில் கோயிலுக்கு.,  இல்லை ஜெ.கே யோடு தோட்டத்திற்கு என்று சென்றால் மட்டும் புடவை உடுத்திக் கொள்வாள்., நாலு வீட்டினரும் தனித்தனியாக இருந்தாலும் ஏனோ இப்போது அனைவரும் ஒன்றாக இருப்பது போல் அனைவரும் உணர தொடங்கியிருந்தனர்.,

ஏனெனில் இரவு சாப்பாடு அனைவர் வீட்டிலும் தனித்தனியாக செய்தாலும்., பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்ண தொடங்கியிருந்தனர்.,

வீட்டின் பின்புறமாக நான்கு வீட்டுக்கும் பொதுவாக இருக்கும் பின் வாசல் பகுதியில்., இரவு உணவு பிள்ளைகள் சேர்ந்து உண்ணுவார்கள் என்பதற்காகவே., தனியாக ஒரு கூரை வேய்ந்து சிறிய உணவு அறை போல தயார் செய்துவிட்டார்கள்., காற்றோட்டமாக இருக்கும் படி இருபுறமும் தடுப்பு வைத்து மற்ற பகுதி திறந்த வெளியாக., அமைத்து இருந்தனர். பிள்ளைகள் சேர்ந்து உணவு உண்ண ஆசைப்படுகிறார்கள் என்ற பிறகு., கொடைக்கானலிருந்து வருவதற்குள் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தனர்.

இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் இரவு உணவை பின் புறமாக ஒரே அறையில் அமர்ந்து உண்ண தொடங்கியிருக்கிறார்கள்., நாலு வீட்டு உணவும் சேர்ந்து வயிற்றுக்கு செல்கிறது.,  ஜெ.கே உட்பட அனைவருக்கும் சீக்கிரமாக வீட்டிற்க்கு வந்து விடுகிறார்கள்., அன்று அனைவரும் உணவு உண்டு விட்டு பின் புறமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..,

பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்குள் சென்று உணவு பாத்திரத்தை வைத்து விட்டு வீட்டை ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்க.., விசாலாட்சிக்கு உதவுவதற்காக சரண்யாவும் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

பிள்ளைகள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டு வாசலில் சத்தம் கேட்க பிள்ளைகள் எல்லாரும் ஒரே வீட்டின் வழியாக  ஜெ. கே யோடு சென்றனர்.

திவ்யா., திவ்யாவின் கணவன்.,  கணவன் வீட்டினர்., என அந்த இரவு நேரத்திலும் அனைவரும் வந்து நிற்க..,  என்னவென்று புரியாமல் விசாலாட்சி தான் வந்தவர்களை வாங்க என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

Advertisement