Advertisement

14

தடுமாறிப்போனேன் அன்றே
உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன்
நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம்
கேள்விக்கேட்கும் ஆனாலும்
நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்

காலையிலேயே அனைவரும் குளித்து கிளம்பி கொடைக்கானல் செல்லும் பாதையில் வேனில் சென்று கொண்டிருந்தனர்.  காலை உணவிற்கே அங்கு சென்று விடலாம் என்ற எண்ணம் இருந்தாலும்.,  கையில் கொஞ்சம் சிற்றுண்டி போல பிள்ளைகள் பசித்தால் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று பாட்டி செய்து கொடுத்து விட்டிருந்தார்.,  அதை தவிர காபி., பால் தனியே ப்ளாஸ்க் ல் கொடுத்து அனுப்பியிருந்தார்.,

அனைவரும் மலையேறும் போது சத்தமாக பாட்டு போட்டு கொண்டு   டான்ஸ் ஆடிக்கொண்டும்.,விளையாடிக்கொண்டும் பிள்ளைகள் வர., ஜெ. கே அவர்களையே பார்த்துக் கொண்டு வந்தான். இவள் தான் “ஏன் இப்படி பார்க்கறீங்க” என்று அவனிடம் கேட்டாள்.

“இல்ல உண்மையை சொல்லனும்னா., இந்த ஏழு வருஷத்தில் நான் வேலை வேலை என்று இருந்ததால்., மத்த யாரைப் பத்தியும் யோசிக்கலை., அதுக்கு முன்பு நானும் அப்ப தான் காலேஜ் முடிச்சிருந்தேன்., இப்ப தான் தோணுது இந்த பிள்ளைகளை வெளியே கூட கூட்டிட்டு போகாமல் இருந்திருக்கோம் னு.,  தீபாவளி பொங்கலுக்கு டிரஸ் எடுக்க மட்டும் திருநெல்வேலி வரைக்கும் எல்லாரும் போயிட்டு வருவாங்க.., அப்பவும் நான் கூட்டிட்டு போனது கிடையாது.,  அவ்வளவு தான்., வேற எங்கயும்  போறது கிடையாது.,  எனக்கு தெரிஞ்சி ஏதாவது நல்ல படம் வந்தா.., நந்தா கூட இல்ல., அடுத்தவன் கூட போவாங்க.,  சித்தி அம்மா  பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து போவாங்க., வேற எங்கேயும் போக மாட்டாங்க.,  வேலை  டென்ஷன்.,  இந்த பிள்ளைங்க காலேஜ்.,  படிப்பு., னு இருந்தாங்க.,  நானும் எதோ தப்பு பண்ணிட்டேன்னு பீல் பண்றேன்.,  எங்க கூட்டிட்டு போயி இருக்கேன்.., இல்ல குடும்பத்தோட ஒரு தடவையாவது வெளியே போயிட்டு வந்திருந்தா., எல்லாருக்கும் நல்லா இருந்திருக்கும்”.., என்று சொன்னான்.

இவர்கள் இருவரும் இருந்த இடத்திலிருந்து மெதுவாக எட்டிப் பார்க்க அங்கே சித்தப்பாவும் பிள்ளைகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்., எல்லாம் ஆட்டம் பாட்டம் ஆக 10 மணி அளவில் எல்லாம்  அவர்கள் வீடு இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.,

அழகான மலைப் பாங்கான இடமாக ஏரிக் கரையை ஒட்டி அமைந்து இருந்த வீடும்., அருகிலேயே ரிச்சார்ட் ம் இருந்தது.  அதில் அதிகமான அறைகள் கிடையாது., பராமரிக்க முடியாது என்பதால் சிறு சிறு குடில் போன்ற அமைப்புகளோடு கூடிய வீடு தான் அதில்  ஏழு மட்டும் இருந்தது.,  பார்க்க அவ்வளவு அமைதியான இடமாக இருந்தது. அருகிலேயே ஒரு சிறிய உணவகம்., மொத்தத்தில்  அழகான இடமாக அமைந்திருந்தது.,  இவர்களுக்கான வீட்டில்  உணவும் சமைப்பவர்  இருந்ததால் இவர்கள் வருவது தெரிந்ததும்.,  காலை உணவை தயார் நிலையில் வைத்திருந்தார்.

வந்த அனைவரும் சற்று ரெப்பிரஸ் ஆகி விட்டு.,  வீட்டைச் சுற்றியிருந்த செடி கொடிகள் மரங்கள் என அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்., அங்கிருந்த இதமான குளுமை அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.,  அவளைப் பார்த்தவுடன் ரிசார்ட்டில் வேலை பார்ப்பவர்களும் வந்து பேசிவிட்டு சென்றனர்., அதை பராமரிக்கும் மேனேஜர் குடும்பம் அங்கேயே  அருகிலுள்ள சிறு வீட்டில் இருக்க., அவரும் மனைவியோடு வந்து பார்த்துவிட்டுச் சென்றார்., அதன் பிறகு தற்சமய வேலைகள் இத்தனை நாள் வேலைகள் எப்படி இருக்கிறது என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு., பிறகு பார்க்கிறேன் மற்றவற்றை., என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.

பிள்ளைகள் உணவு உண்டவுடன் “எங்காவது சுற்றிவிட்டு வரலாம்., வாங்க போகலாம் போகலாம்”என்று சொன்னார்கள்.

“நடந்து போகணுமா.,  இல்ல வேனில் போகணுமா” என்று கேட்டாள்.

“நடந்தே போவோம்.,  பக்கத்தில் இருக்குற  இடத்தை சுத்திட்டு வரலாம்.,  அப்புறம் ஈவினிங் எங்கேயாவது கொஞ்சம் தள்ளி போயிட்டு வரலாம்., டிரைவர் அண்ணன் நீங்க ரெஸ்ட் எடுங்க.,  அது வரைக்கும்”.,  பிள்ளைகளை அவர்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.

சித்தப்பாவும் சித்தியும் “சரி நாங்களும் வருகிறோம்”என்று அவர்களும் சேர்ந்து கிளம்ப அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

அப்போது பிள்ளைகளுக்கு அடையாளம் சொல்லிக் கொண்டிருந்தாள்.,  “இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கோங்க.,  ஏன்னா  லேக் ஏரியா எல்லாம் பாக்குறதுக்கு ஒன்று போல இருக்கும்.,  உங்களுக்கு எந்த இடமும் சரியா தெரியாது., அதுனால முடிஞ்ச அளவுக்கு எல்லாரும் ஒன்னா போயிட்டு.,  ஒன்னா வந்துடனும் அடையாளம் தெரியாமல் போய்விடக் கூடாது”., என்று சொன்னாள்.

பிள்ளைகள் பெரியவர்களாக இருந்தாலும் அனைவரும் சரி என்று கேட்டுக்கொண்டனர். அவள் சொன்ன அடையாளத்தை பார்த்து வைத்துக் கொண்டு அங்கிருந்து ஏரிக்கரையை ஒட்டியே மெதுவாக நடக்கத் தொடங்கினர்., சற்று நேரத்தில் எல்லாம்  சிறிது சிறிதாக நிறைய கடைகளும் அதன் அருகில் பல பல வகையான உணவு பண்டங்கள் என நிறைய இருக்க.,  சிறியவர்கள் அவர்களுக்குறிய குதூகலத்தோடு ஒவ்வொன்றாக வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர்.,

சித்தப்பா பணம் கொடுத்தாலும் ஜெ.கே பணம் கொடுக்க போக.,  சித்தப்பாவையும்., ஜெ.கே யும்  நிறுத்திவிட்டு நான் கொடுக்கிறேன்., “நீங்க யாரும் கொடுக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்தாள்..

சித்தப்பாவோ “இல்லம்மா நான் கொடுக்கிறேன்”  என்று சொன்னார்.

” ஐயோ மாமா சும்மா இருங்க.,  முதன் முதலில் இங்க வந்து இருக்காங்க., நான் வாங்கி கொடுக்கிறேன்”  என்று சொல்லி  இவளே வாங்கிக் கொடுத்தாள்.

பிள்ளைகள் அப்பகுதிகளை ஆசைதீர சுற்றி நேரம் போனது தெரியாமல் இருக்க., மதிய உணவு  அவசியமில்லை எனும் அளவிற்கு., அங்கு விற்கும் உணவுப் பண்டங்களையும் வாங்கி சிறு பிள்ளைகள் போல சாப்பிட்டுக் கொண்டனர்.., எனவே “வீட்டிற்கு சென்று விட்டு சற்று ஓய்வு எடுத்து விட்டு எங்காவது வெளியில் கொஞ்சம் தள்ளிப் போகலாம்” என்று சொன்னார்கள்.

சித்தி தான் “குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு முதலில் போவோம்., பிறகு அங்கு அருகில் ஏதாவது இருந்தால் பார்த்து விட்டு வரலாம்”என்று சொன்னார்.

அவளும் முதலில் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு போய் விட்டு  அங்கிருந்து திரும்பி வந்து கோக்கர்ஸ் வாக் போகலாம்.,  நாளைக்கு மற்ற இடங்களுக்கும் போகலாம்”.,  என்று சொன்னாள். மற்றபடி ஒவ்வொரு இடத்தையும் பார்ப்பதற்கு மறுநாள் போகலாம் என்று பிளான் செய்து கொண்டனர்…

அதன்படி வீட்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு., மாலை நான்கு மணிக்கு மேலாக முதலில் கோக்கர்ஸ் வாக் போய் சுற்றி  சற்று தூரம் நடந்து சென்று விட்டு அங்கிருந்து பார்த்தால் கொடைக்கானல் மலைப்பகுதி மிக அழகாக தெரியும்., அதை பார்த்து விட்டு பின்பு அங்கிருந்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு போய் விட்டு நன்கு இருட்டத் தொடங்கிய பிறகே வீடு வந்து சேர்ந்தனர்.

ஏனெனில் அங்கு அதிகமாக இரவு நேரங்களில் வெளியே செல்வது கிடையாது., 9 மணிக்குள் ஓரளவு ஊரடங்கி போன நிலையில் தான் இருக்கும்.,  ஏனெனில் காட்டு எருமைகள் ன் தொல்லை அதிகமாக உண்டு., அங்கு தோட்டம் வைத்திருப்பவர்களும் சரி.., வீட்டிலும் சரி முடிந்தளவு வேலி தான் போட்டு வைத்திருப்பார்கள்.., காட்டெருமை தான் அங்கங்கு சுற்றிக் கொண்டிருக்கும் அதனால் அதிகமாக இருட்டிய பிறகு வெளியே செல்வது அங்கு பழக்கம் கிடையாது., அதை சொல்லியே பிள்ளைகளை சீக்கிரமாக வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.

பின்பு வீட்டின் முன் பக்கமும்., ரிச்சார்ட் ன் அருகில் உள்ள தோட்டத்திலும் பிள்ளைகள் கதை பேசி விளையாடிக் கொண்டிருந்து விட்டு இரவு உணவுக்கு பின்பு சீக்கிரமாகவே எல்லோரும் படுக்க சென்றுவிட்டனர்., வீட்டில் உள்ள அனைவருக்கும் ஹீட்டர் எப்படி போடுவது என்று அனைத்து செயல்முறைகளையும் விலக்கி விட்டு அவர்கள் அறைக்கு வந்துசேர்ந்தாள்.

பெண்கள்  இருவரும் சித்தப்பா சித்தியோடு தங்கிக்கொள்ள.,  பசங்க ஜெ.கே ன் தம்பி அனைவரும் ஒரு அறையில் தங்கிக் கொண்டனர்.  அனைவருக்கும் தேவையானதை பார்த்து விட்டு அவர்கள் அறைக்கு வரும் போது ஜெ. கே குளித்து முடித்து உடை மாற்றி இருந்தான்., வந்து சாப்பிடுவதற்கு முன்பே குளிக்க வேண்டும் என்று சொன்னவனை தூங்கப்போறதுக்கு., முன்னாடி காட் வாட்டர் ல குளிங்க., அப்ப தான்  நல்ல தூக்கம் வரும்..,   என்று சொல்லி ஹீட்டரை ஆன் பண்ணி வைத்து அவனுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டு அறையின் ஹீட்டரையும் குளிக்கப் போகும் போது ஆன் பண்ணுங்க.., இல்ல னா   குளிச்சிட்டு வந்த உடனே குளிரும் என்று  அவனுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு சென்றாள். அங்கு பச்சை தண்ணி எல்லாம்  உபயோகிக்க முடியாத சூழல் தான் எப்போதும்., எனவே அனைவருக்கும் அதைப்பற்றி சொல்லிக் கொடுத்திருந்தாள்.,

ஏற்கனவே அவன்குளித்து விட்டு  வந்திருப்பதை பார்த்தவள்., அறையின் ஹீட்டரின் டெம்பரேச்சர் சரி செய்து விட்டு இவளும் குளிக்க சென்றாள்., குளித்து விட்டு  பாவடை சட்டையில் வந்தவளிடம்., “எப்பவும் இப்படி தான் போடுவியா” என்று கேட்டான்.

“எப்பவும் இல்லை., இனிமேல் மாத்திக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

“ஒன்னும் பிரச்சனை இல்ல.,  நம்ம ரூம்ல எப்படின்னாலும் போட்டுக்கோ.., எல்லாரும் இருக்கிற சமயம் கீழே போகும் போது மட்டும் பார்த்துக்கோ”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவளும் சரி என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அது மட்டுமின்றி அவள் சொன்னது “ஹலோ நான் ரூம்ல மட்டும் தான் இப்படி போடுவேன்., இந்த ரூம் விட்டு  வெளியே போனா.,  சாரி., சுடிதார்., மட்டும் தான் என்று சொன்னாள்.

அவன் ஒரு சிரிப்பு சிரிக்கவும்., “எதுக்கு சிரிக்கிறீங்க” என்றாள்.

“ஒன்னும் இல்ல.., நேத்து விட்டதை பேச ஆரம்பிக்கலாமா ன்னு  யோசிச்சேன்”.,என்றான்.

“நானே கேட்கனும் னு நினைச்சேன்., சொல்லுங்க, சொல்லுங்க”. என்றாள்.,

“நீ ரொம்ப டயர்டா  இருக்க டா.,  இன்னைக்கு ஃபுல்லா அலைச்சல் இல்ல.,  நீ தூங்கு நாளைக்கு பேசுவோம்”., என்று சொன்னான்.

“அதெல்லாம் இல்ல சொல்லுங்க”.., என்றாள்..

“நீ சொன்னது உண்மை தான்., அந்த ஏழு வருஷமா ஓட்டம் தான்., முதல் ரெண்டு வருஷம் எப்படியாவது முன்னேற வேண்டும்., எப்படியாவது கால் ஊன்றனும் அப்படி ங்கறதுக்காக ஓட்டம்.., அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்டேடி ஆக ஆரம்பிச்சதுக்கு அப்புறம்., நான் ஓட ஆரம்பித்தது  என்னோட காதலை மறக்க….,  என்னால மறக்க முடியாது அப்படின்னு தெரியும்., இருந்தாலும் என்னை கொன்ற அந்த நினைவுகளில் இருந்து தப்பித்து ஓட தான்” என்று சொன்னான்.

அதிர்ச்சியும் வியப்புமாக  அவனை விழி விரிய பார்த்தாள்., “என்ன அப்படி பார்க்கிற” என்று கேட்டான்.

“நீங்க லவ் பண்ணீங்களா” என்றாள்.,

” ஏன் நான் லவ் பண்ண கூடாதா., என்று கேட்டான்.

“இல்ல உங்கள பார்த்தா லவ் பண்ணுற ஆள்  மாதிரியே தெரியலையே.,  ரொம்ப நார்மலா இருக்கிறீங்க.,  லவ் ஃபெயிலியர் ஆ”.,என்று கேட்டாள்.

அவன் அவளை பார்த்துக்கொண்டே “அது எதுக்கு இப்போ., அதை மறைக்கவும்., மறக்க முயற்சி செய்யவும் தான் இந்த  ஓட்டம்.,  நீ சொன்ன மாதிரி நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போது முதன் முதலில் என் மனசுல சின்னதா ஒரு ஆசை வந்துச்சு., ஆனால் வெளியே எதையும் சொல்லல., ஏன் அந்த பொண்ணு ட்ட கூட நான் சொல்லல., எனக்கு என்னனு தெரியல அவ்ளோ பிடிச்சிச்சு., ஏதோ ஒரு ஈர்ப்பு அப்படின்னு நினைச்சேன்., என்றான்.

Advertisement