Advertisement

“அந்த பொண்ணுக்கு உங்களை பிடிக்குமா”., என்றாள்.

“பிடிக்கும் னு தான் நினைக்கிறேன்”.,  என்று சொன்னான்.

“கடைசி வரைக்கும் சொல்லலையா”., என்று கேட்டாள்.

அவனோ.,  சிரித்துக்கொண்டே “சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கல”., என்றான்.

“ஓ கிடைச்சிருந்தா சொல்லி இருப்பீங்க இல்ல”.,  என்றாள்.

அவளை பார்த்துக் கொண்டே “கண்டிப்பா சொல்லி இருப்பேன்.,  ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிடுச்சு” என்று சொன்னான்.

“இப்போ உங்க மனசுல இந்த பொண்ணு இருக்குதா”.,என்று கேட்டாள்.

“எல்லார் மனசுலயும் முதன் முதலில் வந்த  லவ் அப்படிங்குறது மறக்க முடியாத ஞாபகம் தான் எல்லாருக்குமே இருக்கும்… அதை மறக்கனும் ன்னு சட்டம் எல்லாம் போட முடியாது.,  அந்த பீல்  யாருக்கும் புரியாது.,  நீ எதும் தப்பா நினைக்குறீயா”.., என்று கேட்டாள்.

“இல்ல, இல்ல அது உங்களோட பர்சனல்” என்று சொன்னாள். முகம் மாறினாலும் சமாளித்துக்கொண்டு அவனை பார்த்து சிரித்தபடி “கலீல் ஜிப்ரான் கவிதைகள் படிச்சிருக்கீங்களா., அவ்ளோ அருமையா இருக்கும். அதுல ஒரு இடத்தில் சொல்லி இருக்காரு., வாழ்க்கை துணை அப்படிங்கிறவங்க வந்து கோயில் தூண் மாதிரி தள்ளி தள்ளி தான் இருக்கனும்., அப்பதான் லைஃப் பேலன்ஸ் பண்ண முடியும்., அப்படின்னு சொல்லி இருப்பாரு.., அது உண்மை தான் அப்படி இருந்தா மட்டும் தான் பேலன்ஸ் பண்ண முடியும்.,  அது மட்டுமில்லாமல் இன்னொன்று சொல்லியிருப்பாரு ஒருவருக்காக ஒருவர் காப்பி கோப்பையை நிரப்பிக் கொள்ளுங்கள்.,  ஆனால் ஒருவர் கோப்பையில் மற்றொருவர் குடிக்க முயலாதீர்கள்.,  அப்படின்னு சொல்வார்,  அதுவும் உண்மை தானே…,  அது மாதிரி தான் இதுவும் உங்களோட பாஸ்ட் எனக்கு தேவையில்லை..,  ஆனால் உங்களுடைய பிரசன்ட்  நான் தான்., அதே மாதிரி என்னோட பாஸ்ட் என்னென்பது எனக்கு தெரிஞ்சி எதுவுமில்லை.,  இல்லன்னு சொல்வதை விட எப்படி சொல்றது ன்னு தெரியல., யோசிச்சு சொல்றேன்”.,  என்று சொல்லி விட்டு.,  “அது போல தான் இப்போ உங்களோட பிரசன்ட்  நான் தான்., என்னோட புருஷன் நீங்க தான்.,  அவ்வளவு தான்” என்றாள்.

“அவ்வளவு தானா.,  அப்புறம் என்ன ஆச்சு.,  யாருன்னு கேட்க மாட்டியா”.,  என்று கேட்டான்.

“இல்ல வேண்டாம்., கேட்க மாட்டேன் ஏன்னா கேட்டா., நான் கண்டிப்பா என்னைக்காவது அவங்களை பார்த்தா என்ன அறியாம என் மனசுக்குள்ள ஒரு பொறாமை வந்தாலும் வந்திரும் இல்ல.,  அதனால தான்” என்று சொன்னாள்..

“ஏன் உனக்கு இதில் உனக்கு வருத்தம் இல்லையா., கோபம் இல்லையா.,  அந்த பொண்ணு யாருன்னு கேட்கணும்னு தோணலையா., என்றான்.

“இப்பவும் சொல்றேன் நான் கேட்க மாட்டேன்.,  நான் உன்கிட்ட சொன்னது  தான் பொறாமை வந்துடக் கூடாது.,  இன்னொன்னு என்னை அறியாமலே எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது..,  அழகா இருப்பாங்களோ., ரொம்ப நல்லா இருப்பாங்களோ ன்னு., அந்த மாதிரி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுடுவேன்.,  சோ., பாஸ்ட் இஸ் பாஸ்ட் அவ்வளவு தான்” என்று சொன்னாள்.,

“சரி படுத்து தூங்கு”என்று சொன்னான்.

“ஏன் கேட்கலை ன்னு வருத்தமா”., என்று கேட்டாள்.,

“இல்லை இல்லை., மீதியை நாளைக்கு  சொல்றேன்” என்று சொல்லி விட்டு ஒரே கம்பளியாக இருந்ததால் இருவருக்கும் சேர்த்து  போர்த்தியவன்., எப்போதும் ப படுப்பதை விட அவளிடம் சற்று நெருங்கி படுத்திருந்தது போல அவள் உணர்ந்தாள்.,  ஆனாலும் எதுவும் கேட்காமல் படுத்திருந்தவள்.., சற்று நேரத்தில் எல்லாம் உறங்கி விட்டாள்.,

அவள் உறங்கிய பிறகு இன்னும் அவளருகே நெருங்கி., அவள் இடுப்பில் கையைப் போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டான்., மேலே கை பட்டவுடன் அரைத்தூக்கத்தில்  எழுந்தவள் கையை தள்ளி விட போக., அவன் “ப்ளீஸ் இருக்கட்டுமே” என்று சொன்னான்.,

அவன் அவன் சொன்ன விதம் அவளுக்கு ஏனோ அவன் மேல்  பரிதாபத்தை உண்டு பண்ணியது போல இருந்ததால்., எதுவும் சொல்லாமல் அமைதியாக படுத்துக் கொண்டாள்., அவனும்  “வேறு எதுவும் இல்லை சும்மா  ஜஸ்ட்  கையை போட்டு இருக்கேன்.., உன் கிட்ட சொன்னது தான்., இன்னும் நம்ம   நிறைய பேசணும் நினைக்கிறேன்.,  நமக்குள்ள அனலைஸ் பண்ண வேண்டியது நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்., அதெல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணலாம்., அது வரைக்கும் சும்மா ஜஸ்ட் கை போடுக்கிறேன்., இது மட்டும் தான் சரியா”.,  என்று கேட்டான்.

அவளும் தூக்க கலக்கத்திலேயே., ம்ம்ம் ம்ம்ம்  என்று சத்தம் கொடுத்த படி இருந்தாள்.,  சற்றுநேரம் தூக்கம் வராமல் இருந்தது போல இருந்தாலும்., ஆனால் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள்., அவனும் அவள் மேல் கையை போட்டு அவளை இழுத்துப் பிடித்து படுத்த சற்று நேரத்திற்கெல்லாம் அவனும் ஆழ்ந்த உறக்கத்திற்கு போய்விட்டான்.

உறக்கம் என்பது கடவுள் கொடுக்கும் வரம்., ஆனால் சில நேரங்களில் இரவு உறக்கம் கலைந்து எழுந்து விட்டால், அதன் பிறகு மறுபடியும் உறக்கத்தைத்  தழுவுவதற்கு நேரம் எடுக்கும் அப்படித் தான் அன்று சரண்யாவிற்கு திடீரென்று தூக்கம் கலைய.., அப்பொழுது தான் பார்த்தாள்..,  அவன் கை அவள் இடுப்பை அழுத்திப் பிடித்திருந்தது.., அவள் போட்டிருந்த சட்டை லேசாக மேலேறியிருக்க.,  அவன் கை அவள் வெற்றிடையில் அழுந்த பதிந்திருந்தது..,  கம்பளிக்குள் அவன் கையணைப்பில்  இருந்தாலும் ஏனோ சிறு நடுக்கம் ஏற்பட்டது போல உணர்ந்தாள்., சற்று நேரம் அமைதியாக கண்மூடிப் படுத்திருந்தவளுக்கு பழைய நினைவுகள் வந்தது.

அப்போது தான் அவளை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்., ‘ஜெ. கே க்கு யாரோ ஒரு பொண்ண புடிச்சிருந்த  மாதிரி., எனக்கு யாரையும் பிடிச்சு இருந்துச்சா., என்று கல்லூரி, பள்ளி என ஒவ்வொன்றாக யோசித்தும் அவள் நினைவிற்கு யாரும் வரவில்லை.,  அவள் நினைவில் இருந்தது எல்லாம் அவளை சாயா என்றழைத்து அவளோடு  பேசி அவளுக்கு துணையாக நிற்கும் அந்த சிறுவயது ஜெ. கே ஞாபகத்திற்கு வந்தான். அவனது கல்லூரி முடிக்கும் சமயம் என்றாலும்., இப்போது இருப்பதற்கும்.,  அப்போது இருப்பதற்கும்., நிறைய வித்தியாசம் இருக்கிறது அல்லவா.,  அப்படித்தான் இருந்தான் ஜெ. கே அவளைப் பொறுத்தவரை., அந்த ஜெ. கே அவளுக்கு அதிகமாக நினைவில் நின்றிருந்தான். அவனை அத்தான் என்று அழைக்கக்கூடாது என்று சொன்னதற்காக., தான் ஜெ. கே என்று அழைக்கத் தொடங்கியது..,  ஒவ்வொன்றாக யோசித்து பார்த்தவளுக்கு ஒருவேளை அந்த வயதில் வந்தது ஈர்ப்பு என்று தான் நினைத்திருந்தாள்., அவளுக்கு ஜெ. கே யை ரொம்ப பிடிக்கும் என்பது அவள் ஏற்கனவே அறிந்த ஒன்று தான்..,  ஆனால் அது அந்த பதின்பருவத்தில் புரியும் போது  எதிர்பாலின ஈர்ப்பு என்று மட்டுமே நினைத்திருந்தாள்.,  இப்போது தோன்றியது கண்டிப்பாக இது வெறும் ஈர்ப்பு மட்டுமல்ல..,  ஒருவேளை அந்த நேரத்தில் அது ஈர்ப்பாக இருந்திருக்கலாம்..,  தொடர்ந்து ஏழு வருடங்கள் பார்க்காமல் இருந்ததால் அந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறிவிட்டது..,  என்று நினைக்கும் போது அவள் அறியாமல் அவள் கண்ணில் கண்ணீர் சுரந்தது., இதே வேறு யாரையும் திடீரென மாப்பிள்ளை என்று கொண்டு வந்து நிறுத்தி இருந்தால்,  திருமணம் செய்து இருப்போமா.., என்று ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது.,  கண்டிப்பாக செய்திருக்க மாட்டேன்.., என்று அவள் உள்மனம் அடித்துச் சொன்னது. அது போல இதோ  திருமணம் முடிந்து ஏழு நாட்கள் தான் ஆகிறது.,  இந்த ஏழு நாட்களுக்குள் அவனோடு இப்போது தான் அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறாள்.  முதல் இரண்டு மூன்று நாட்கள் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் அவனோடு பேசியது கிடையாது.., அவள் சிறுவயதில்  பேசாமல் எல்லாம் இல்லை..,  சிறு வயதில் அவளும் அவனும் பேசிய கதைகள் ஏராளம்..,  பள்ளி-கல்லூரி கதை., விவசாயம், தோட்டம்.,  தனக்கு தெரிந்த தன் தோழமைகள் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள்..,     சிறு பிள்ளைத்தனமாக இவள் சொல்லும் கதைகளை அவன் கேட்டிருக்கிறான்..,  இவளை பெரிய மனுஷியாக நினைத்து அவனுடைய ஆசைகளையும்., தொழில் பற்றியும் அவன் பேசியதை இவளும் கேட்டிருக்கிறாள்., ஆனால் இருவருக்கும் முதல் மூன்று நாட்கள் சரியாக பேசத் தோன்றவில்லை., ஆனால் இப்போது பேசினால் எல்லாவற்றையும் பேசுகிறோம் என்று தோன்றியது., இதோ அவன் கையணைப்பில்  இருக்கும்., இந்த நிமிடம் கூட., இந்த இடத்தில் வேறு யாரும் இருந்தால் இப்படி கையை மேலே வைக்க சம்மதித்து இருப்போமா’ என்று கூட தோன்றியது.., அவள் அறியாமல் அவள் மனதில் தோன்றியது ‘நான் அப்போ ஜெ.கே வ லவ் பண்ணி இருப்பேனோ’ ., என்று அவளே அவளை கேட்டுக்கொண்டாள். ‘ஆமா’ என்று அவள் மனசாட்சி அவளை சுட்டிக்காட்டியது. அதனால் தான் திவ்யா கல்யாணத்திற்கு ஜெ. கே தான் மாப்பிள்ளை என்று தெரிந்தவுடன் போகப் பிடிக்காமல் இருந்திருக்கிறது.,  வேறு வழியின்றி அனைவரின் கட்டாயத்திற்காக தான் கிளம்பியது.., அப்படியும் அன்றி ஆரியங்காவில் வைத்து ஐயப்பனிடம் வேண்டியது இதே தானே., ‘என் வாழ்க்கைக்கு எது நல்லது என்று நினைக்கிறாயோ அதை கொடு’ என்று நினைத்ததும் அதே தான்.  ‘தாத்தா விரும்பி கேட்கும் ஒவ்வொரு பாடல்களிலும் சரி.., சில வரிகள் மனதை போட்டுக் குழப்பியதற்கு காரணம் இதுதான்’.., என்று உணர்ந்த போது அவளை அறியாமல் கண்ணில் கண்ணீர் வழிந்தது..,  மெதுவாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.,  அவன் கைக்குள்ளே  திரும்பி அவனைப் பார்த்தவள்.,  இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகத்தைபார்த்தபடி அவனோடு நெருங்கி படுத்து..,  அவன் கைகள் இடையே கையை கொடுத்து அவனை பிடித்த படி அவனோடு நெருங்கி நெஞ்சில் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள்.

‘அவன் முழித்திருந்தாள்  உடனே தன் காதலை சொல்லி இருப்போமா’., என்று யோசித்தவளுக்கு அவளறியாமல் வெட்கம் வந்தது., ஆனால் கண்டிப்பாக தான் அவனை விரும்பியதை சொல்லிவிட வேண்டும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அப்போதுதான் அவன் சொன்ன யாரையோ அவன் விரும்புவதாக சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தாலும்.,   ‘அவங்க யாரையும் விரும்பியிருந்தாலும்., எனக்கு அதைப்பற்றி  ஒன்றும் இல்ல., நான் அவரை விரும்புறேன்., இப்ப அவரு என்னோட ஹஸ்பண்ட்., ஜேகே என்னோட ஹஸ்பண்ட் ‘ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அவன் மார்பில் முகம் படும்படி வைத்து படுத்தவள் சற்று நேரத்தில் எல்லாம் உறங்கி விட்டாள்..

காலையில் எழுந்தவன் தன் கையணைப்பில் அசையாமல் படுத்திருக்கும் அவளைப் கண்டவன் ‘ஒரு நிமிடம் இது உண்மைதானா’ என்று பார்த்துக்கொண்டான். ஏனெனில் அவன் மார்பில் முகம் புதைத்து அவனை பிடித்த படி அவள் படுத்து இருந்தது., அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சற்று நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன். கைகளுக்குள் அடங்கி படுத்திருக்கும் அவளை மீண்டும் இறுக்க அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் மெதுவாக அவள் உணராத படி தன் முதல் முத்தத்தை பதித்தான்.

“நோகாமல் என் தோளில்
சாய்ந்தால் போதும்
உன் நுனிமூக்கு காதோடு
நுழைத்தால் போதும்
கண்ணோடு கண் பார்க்கும்
காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல்
தள்ளி இரு போதும்.,
பெண்மையில் பேராண்மை

ஆண்மையில்ஓர்  பெண்மை
கண்டறியும் நேரமிது”

Advertisement