Advertisement

“அப்புறம்” என்று கேட்டவன் மறுபடி அவள் தலை குனிந்து அமர்ந்திருக்கும் போது பேசவும் இல்லை., அவளை பார்த்த படி., “முழுசா சொல்லிரு” என்றான். குரலில் ஒரு வற்புறுத்தலோடு.,

“அந்த தடவ என்னை அங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டா., நீ எதுக்கு வர்ற., இது எனக்கு தான் மாமா வீடு.,  உனக்கு ஒன்னும் சொந்தக்காரங்க கிடையாது., உனக்கு உங்க அம்மா வழியில இருக்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போ., இங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டா.,  அப்பவும் சின்னத்தை சத்தம் போட்டாங்க.,  அத்தை சத்தம் போட்டாங்க., ஆனா பாட்டி தாத்தா வந்து எதுவுமே சொல்லல.., பெரிய மாமா மட்டும் சத்தம் போட்டாங்க.., ஆனாலும் ரொம்ப பிடிவாதம் பிடித்து என்னை அங்க இருக்க கூடாதுனு.,  என் கையை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு போய் விட்டா., வெளியே இழுத்து விட்டு வேகமா உள்ள வந்துட்டா., உள்ள வந்து ஸ்கிரீன் எல்லாம் இழுத்து விட்டா…   எனக்கு அதை என்னவோ ரொம்ப ஒரு அன்னீசியா பீல் பண்ணேன்.,  என்னவோ வரக்கூடாத இடத்துக்கு வந்து., யாரோ கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுற ஒரு ஃபீல் வந்துருச்சு.,  அப்போ உண்மையிலேயே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.., அத்தை ஃபீல் பண்ணி அங்க உள்ள சத்தம் போட்டாங்க., அது எனக்கு தெரியும், எல்லாரும் பார்த்துட்டு தான் இருந்தாங்க.., அவ சின்ன புள்ள., இவ இந்த மாதிரி பண்றா.,  நீங்க எல்லாம் தடுத்து நிறுத்த மாட்டீங்களா ,  காலேஜ் போக போறவளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா.,  அப்படின்னு  சொன்னாங்க..,  திவ்யாவுக்கு பிடிக்காத எதுவும்  செய்ய கூடாது., அவ  என் பேத்தி என் பேத்திக்கு இல்லாத உரிமை அந்த வீட்ல யாருக்கும் கிடையாது என்று சொன்னாங்க.., அப்ப தோணுச்சு., கண்டிப்பா நமக்கு நம்ம பாட்டி வீடு தான்  நம்ம போகணும்., வேற யார் வீட்டுக்கும் வர கூடாதுன்னு அப்ப முடிவு பண்ணினேன்., அந்த டைம்ல தான் இனி உங்க வீட்டுக்கு வரக்கூடாது அப்படிங்கற முடிவோட  தான் பாட்டி வீட்டிற்கு வேகமா போய் சேர்ந்தேன்., அத்தையும் பின்னாடியே வந்தாங்க., நான் வீட்டுக்கு உள்ள போறதுக்கு முன்னாடி என்னை பிடிச்சு என் நெற்றியில் முத்தம் கொடுத்துட்டு தான் திரும்பி போனாங்க., என்றாள்.

சற்று நேர அமைதிக்கு பின்., தற்செயலா பாட்டி பெரியம்மா வ  கூட்டிட்டு வர சொன்னாங்க.,  அங்கேயும் பெரியம்மா  ட்ட சண்டை போட்டுட்டு இருந்தா..,  பாட்டி ஏதோ அவசரமா கூட்டிட்டு  வரச்சொன்னாங்க.,   அதனால பெரியம்மா வீட்டுக்கு  கூப்பிட நானும் போனேன்.,  அப்போ பெரியம்மா திட்டிட்டு இருந்தாங்க.,  ரொம்ப ஓவரா பேசினா., அது எனக்கு உரிமையான இடம் தான்.,  இருந்தாலும் என்னால அதுக்கப்புறம் அங்கேயும் போகணும் அப்படின்னு தோணல..,  இப்ப வரைக்கும் நான்  வீட்டுக்குள்ள போகல தெரியுமா.., உங்க வீட்டுக்குள்ளே  வந்துட்டேன்” என்றாள்.

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே.,  அவனின் இமைக்காத பார்வையில் “என்ன” என்றாள். “உங்க வீடு இல்ல.,  நம்ம வீடு புரிஞ்சுதா” என்றான்.

சிரித்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க.,  “உன் வீடு புரிஞ்சதா., யாரும் இனிமேல் உன்னை ஒன்னும் சொல்ல முடியாது., அது உனக்கான உரிமை உள்ள இடம்., உன்ன தவிர அந்த வீட்டில் வேற யாருக்கும் உரிமை கிடையாது புரிஞ்சதா”., என்று சொன்னான். மெதுவாக தலையை ஆட்டி கொண்டாள். “சரி இப்போ சொல்லு” என்றான்…

“சோ.,  இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் தான்.,  எனக்கு என்னவோ ரொம்ப மனசு ஒரு மாதிரி ஃபீல் பண்ணினேன்., அதுக்கு அப்புறம் வரக்கூடாது அப்படிங்கிற முடிவோட இருந்துட்டேன்.,  ஆனாலும் அப்பப்ப ரொம்ப தேடும்., அம்மா அப்பா செங்கோட்டைக்கு வந்துட்டு வரும் போதெல்லாம் நான் கேட்பேன்”., என்று சொன்னாள்.

“என்ன கேட்பியா”., என்றான்.

“கேட்பேன்., பொதுவாக எல்லாரும் எப்படி இருக்காங்க, அப்படின்னு கேட்பேன் வேற எதுவும் கேட்கமாட்டேன்..,  பாட்டி தாத்தா ட்ட கண்டிப்பா டெய்லி பேசிடுவேன்., பெரியம்மா பெரியப்பா ட்ட எப்போதாவது பேசுவேன்.,  அப்டியே போச்சு., ஏழு வருஷமும்., என்றாள்.

“சரி எதுக்காக ஹார்ட்டிகல்ச்சர்  எடுக்க முடிவு பண்ணின”  என்று கேட்டான்.

“தோட்டம் தான் மெயின் ரீஸன்.,  தாத்தாவோட தோட்டம்., செங்கோட்டைக்கு நான் வராமல் போனாலும், இங்க இருக்கிறத பார்க்கணுமே அப்படிங்கறது தான்.,  பெருசா வேற ஒன்னும் காரணம் இல்ல., எனக்கு  தோட்டம் எல்லாம் பிடிக்கும்.,  மே பி அது கூட உங்ககிட்ட இருந்து தான் வந்துச்சு., அப்படின்னு அடிக்கடி யோசிப்பேன்..,  எனக்கு தெரிஞ்சு  நீங்க என் கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம்..,  அந்த தோட்டத்தில வச்சு தான் நீங்க பேசுவீங்க.,  எப்பவுமே பேசும் போதெல்லாம், நீங்க அக்ரி படிக்கும் போதிலிருந்தே உங்களோட பேச்செல்லாம் விவசாயத்தை பற்றி இருக்கும்.,  நீங்களும் என்னை சின்ன பொண்ணு அப்படி நினைக்காமல்., எனக்கு என்ன புரியும் அப்படிங்கறதை பற்றி யோசிக்காமல்.,    எப்படி வளர்க்கணும்., பாராமரிப்பது னு சொல்லுவீங்களா”., என்று செல்லவும்., அவன் சத்தமாக சிரித்தான்.,

“சத்தமாக சிரிக்காதீங்க”., என்றாள்.

“நான் சொல்ல ஆள் கிடைக்கல.,  அப்படின்னு சொல்லிட்டு., நல்ல ஒரு ஆள் கிடைச்சதே னு., நான் சொல்றதெல்லாம் கேக்குற னு., எல்லாத்தையும் உன்கிட்ட சொன்னா.,  உனக்கு இப்படி யா தெரியும்”.,  என்று சொல்லி சிரித்தான்.

நீங்க உங்களுக்கு சொல்லுறத கேட்க ஆள் கிடைக்கல னு  சொல்லி இருக்கீங்க னு.,  எனக்கு எப்படி தெரியும்., அம்பிஷன்   சொல்றீங்கன்னு, நினைச்சேன். நான் என்னமோ விவசாயம் பெருசு., அப்படி  நீங்க சொல்றதா நினைச்சு., ஆன்னு வாயைத் திறந்து வைத்து கேட்டுட்டு இருந்திருக்கேன்..,  மே பி அப்படி மைண்ட்ல  செட் ஆயிடுச்சா என்னவோ.., அதுக்கப்புறம் எனக்கு  விவசாயம் தோட்டம் அதிலே இண்ட்ரஸ்ட் வந்துருச்சு.., அதனால கூட ஸ்டடிஸ் செலக்ட் பண்ணியிருப்பேன் னு நினைக்கிறேன்”., என்று சிரித்தபடி சொன்னாள்.

அவனும் சிரித்தபடியே அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்., “சரி எனக்கு கல்யாணம் னு இனிவிடேஷன் வந்து கொடுக்கும் போது., நீ ஏதாவது ஃபீல் பண்ணினயா”.,  என்று கேட்டான்.,

“சும்மாவே., அவங்க மாமா வீடு னு சொல்லுவா.,  இனி அந்த பக்கம் நிமிர்ந்து கூட பார்க்க முடியாது., அப்பா என்ன பேச்சு பேசுற அப்படின்னு தோணுச்சு.,  ஆனாலும் எப்படி சொல்றதுன்னு தெரியல., ஏதோ ஒரு பீல் செட்டாகாது அப்படிங்கற மாதிரி எனக்கு ஒரு பீலிங்.,  அது எப்படி இரண்டு பேருக்கும் செட்டாகும் அப்படின்னு ஒரு பீலிங்., அவளோட குணத்திற்கும், உங்க வீட்டுக்கும் ஒத்துவராது அப்படிங்கற மாதிரி  இருந்துச்சு., மத்தபடி வேற ஒன்னும் இல்ல எப்படி சொல்றது., உங்க லைஃப்., உங்க இஷ்டம் அப்படிங்கற மாதிரி தோணுச்சு., நீங்களும் சம்மதிச்சி தானே கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருப்பாங்க னு நினைச்சேன்., அத்தை சொன்னதுக்கு அப்பறம் தான் தெரியும்., உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு”., என்று சொன்னாள்.

அமைதியாக  சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாலும்., சற்று நேரம் அமைதியாக குனிந்து அமர்ந்து கைகளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., “நானும் உன் கிட்ட நிறைய பேசணும்., என்று சொன்னான்.

“சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டாள்.

“என்ன சொல்றது., என்னோட அம்பிஷன் இது எல்லாமே உன் கிட்ட சொல்லி இருக்கேன்., அதுக்கு போராடித்தான் ஜெயிச்சேன்., நீ அங்க வந்த வரைக்கும் என்னோட நிலைமை தெரியும்.,  அதுக்கப்புறம் இந்த ஏழு வருஷம் என்னோட போராட்டம்.,  ரொம்ப பெரிய போராட்டமா இருந்துச்சு.,  அப்பாட்ட பெர்மிஷன் வாங்கி அப்பாவ சம்மதிக்க வச்சு., ஒரு வழியா சரின்னு சொல்லி,  அப்பா இடத்தை கொடுக்க ஆரம்பிச்சாங்க., அப்புறமா கொஞ்சமா தான் காசு வாங்கினேன்.,  அப்புறம் லோன் அப்ளை பண்ண  ஆரம்பிச்சேன்., அதுல கொஞ்சம் ஓரளவுக்கு நல்ல யர்னிங் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்., சைடுல விவசாயத்தையும் கால் பதிக்க ஆரம்பிச்சேன்., நமக்குன்னு இருந்த இடம், வயல் ,தோட்டம் ,அதெல்லாம் போக எக்ஸ்ட்ரா எல்லாத்தையும் குத்தகைக்கு வாங்க வேண்டாம்., விவசாயம் பண்ண முடியாம விட்டுட்டு போறவங்க கிட்ட விலைக்கு வாங்கலாம் அப்படின்னு சொல்லி..,  ஒன்னு ஒன்னா வாங்கி சேர்க்க ஆரம்பிச்சேன்.,  வாங்குனது மட்டுமில்லாமல் அதை எப்படி முன்னுக்கு கொண்டு வருவது என்று தேடித்தேடி ஆள் பிடிச்சு கத்துக்கிட்டேன்.,  நம்ம தோட்டத்துல விளையுற காய்கறி எல்லாமே இயற்கை உரம் மட்டும் தான்., நம்ம மாட்டுப் பண்ணையில் கிடைக்கிற மாட்டு சாணத்தில் இருந்து ரெடி பண்ணுறோம்.,  அதுக்கு தனியா ஒரு யூனிட் ஆரம்பிச்சிருக்கேன்., எல்லாம் நம்ம பயிர்களுக்கு மட்டும் தான்., வெளியே விக்கிறதுக்கு இல்லை.,  வெளிய சுத்தமான இயற்கை உரம்  கிடைக்காது.,   நம்மளோட பயிர் பண்றதே நிறைய., இயற்கை விவசாயத்தில் கொஞ்சம் கால் ஊன்ற ஆரம்பிச்சதுக்கு அப்புறம்., பழத்தோட்டம் ஆரம்பிச்சேன்.,  நமக்கு நல்ல மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் நல்ல க்ளைமேட் நல்லா இருக்கும் எப்பவும்.,  அதுமட்டுமில்லாம நல்ல பழம் விளையுற நேரம் பக்குவப்படுத்தி.,  அதை பேக் பண்ணி ஏற்றுமதி பண்ணுனா ந
என்ன னு   அதை மட்டும் தான் யோசிச்சேன்., என்னை பொருத்த வரைக்கும் ஜெயிக்கனும் அப்படி ஒரு வெறி தான் இருந்தது.,  பழப் பண்ணை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்., அதைப் பதப்படுத்தும் தொழில் ஆரம்பிச்சேன்., அது ஒரு யூனிட் ஓடிக்கிட்டு இருக்கும் போதே.,  எனக்கு தோணுச்சு நமக்கு பால் தேவைக்கு போக மீதி அதிகமாவே கிடைக்க ஆரம்பிச்சு.,  சோ பால் பொருள்கள் எல்லாம்  தயிர் ,பனீர் ,சீஸ் ,இதுக்கெல்லாம் கிராக்கியாக ஆரம்பிச்சிருச்சு.,  பாக்கெட் பாக்கெட்டாக மக்கள் வாங்குவதை பார்த்த உடனே என்னமோ இதை ஒரு பிசினஸ் ஆ பண்ண கூடாது னு தோணுச்சு., வேற எதுவும் இல்ல அட்லீஸ்ட் பன்னீர் ரெடி பண்ணலாம்., தயிர் நெய் இந்த மாதிரி ரெடி பண்ணினாலே போதும் அப்படினு தோணுச்சு., அதனால அதுக்கு ஒரு யூனிட் ஆரம்பிச்சேன்., இப்படித் தான் ஆரம்பிச்சு இப்போ இந்த ஏழு வருஷத்தில் நிக்காம ஓடு ஓடு ஓடிட்டு இருக்கேன்.,  சோம்பல் படாம ஓடினது தான்., இந்த என்னோட வெற்றிக்கு காரணம் கூட சொல்லுவேன்., ஆனா இந்த ஏழு வருஷத்தில் நீ ஒரு தடவையாவது வருவே னு எதிர்பார்த்தேன்., வரவே இல்ல தெரியுமா.,  என்னோட சக்ஸஸ் பற்றி மத்தவங்க சொல்லும் போதெல்லாம் நீ என்ன சொல்லுவ னு எதிர்பார்த்தேன்., உங்கிட்ட மட்டும் தான் வெற்றி யை காமிக்கணும் நான் ஆசைப்பட்டேன்.,  ஏன்னா இந்த மாதிரி எல்லாம் பண்ணனும்.,  இயற்கை விவசாயம் பண்ணனும்., பால் பண்ணை வைக்கணும்., சுத்தமான பால் மக்களுக்கு கிடைக்கிற மாதிரி பண்ணனும்.,  அப்படின்னு சொன்னது எல்லாம் உன்கிட்ட மட்டும்தான்., வேற யார் கிட்டயும் இந்த மாதிரி என்னோட மனசு திறந்து  விவசாயத்தை இப்படி பண்ணலாம்.,  அப்படி பண்ணனும்னு.,  எதுவுமே நான் வேற யார்ட்டையும் சொன்னது கிடையாது.,என்றான்.

“ஏன் நீங்க போன் பண்ணி சொல்லி இருக்க வேண்டியது தானே”., என்று கேட்டாள்.

” யார்கிட்ட போய் போன்  நம்பர் கேட்க சொல்ற., யாரை கேட்டாலும் எதுக்கு போன் நம்பரை கேட்கிறான் சொல்லுவாங்க., நீ அங்க இருக்க.., நான் இங்க இருந்து.,   எப்படி சொல்றது..,  உன் மனசுல என்ன இருக்குன்னு கூட எனக்கு தெரியாம..,  நான் உன்கிட்ட எப்படி நார்மலா பேசுறது.,  அதை எப்படி சொல்றதுன்னு தெரியாம, ஒரு தயக்கம் எல்லாம் கூட வச்சுக்கோ.,  என்ன தான் இருந்தாலும் நாங்க கிராமத்திலே வளர்ந்ததாலே.,  எல்லாதுக்கும் ஒரு எல்லை கோடு னு ஒன்னு வச்சு இருப்போம்..,   உனக்கு எப்படி தொட்டு பேச கூடாதுன்னு உங்க வீட்டுல சொல்லி கொடுத்து வளர்த்தாங்க., அதே மாதிரி தான் எங்களுக்கும்… யார் கூட பழகினாலும் ஒரு எல்லையோடு பழகணும் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்தாங்க.., அதனால தான் போன் பண்ணல”..,  என்று அவன் சொன்னான்.

“ஏழு வருஷமா நிற்காமல் உழைச்சிருக்கீங்க., பெரிய சக்சஸ் கொடுத்திருக்கீங்க., இப்பவும் உங்க ஊர்ல இல்ல., பக்கத்து ஊரில் கூட உங்களை சொன்ன தெரியும் அளவுக்கு  எல்லாத்தையுமே உங்களுக்குன்னு ஒரு இடத்தை பிடிச்சு இருக்கீங்க., நிற்காம ஓடினதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கா..,  ஒருத்தன் எதைப்பற்றியும் யோசிக்காமல்., கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி ஓடுறாங்க அப்படின்னா.,  அவங்களுக்குள்ள ஏதாவது ஒரு பாதிப்போ..,  இல்ல எதையாவது மறப்பதற்காக முயற்சி பண்ணுறதாவோ இருக்கலாம்.., அதுக்காக தான் கேட்டேன்” என்று சொன்னாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., “நாளைக்கு சொல்றேன்.,  கொடைக்கானல்ல வச்சு சொல்றேன்” என்று சொன்னான்.

“ஏன் அங்க வச்சு தான் சொல்லணுமா”., என்று சொல்லி சிரித்துக் கொண்டே  “சும்மா சொல்லுங்க சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் சோர்வதை  கண்டவன்.

“பகல் புல்லா  நீ கொஞ்ச நேரம் கூட ரெஸ்ட் எடுக்கலை., தூங்கு” என்று சொன்னான்.

படுத்து சற்று நேரத்தில் உறங்கி விட்டாள். ஆனால் அவன் தான் நாளை
தன் பழைய காதலை எப்படி அவளிடம் தெரிவிப்பது என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

Advertisement