Advertisement

 

செண்பகம் “தன் பேத்திக்கு சேர்த்து வைத்திருப்பதை சேர்த்துக் கொடுக்கவேண்டும்”.,  என்று ரத்னாவிடம் சொன்னார்.,

“சரி அங்கிருந்து நாங்கள் கொண்டு வந்த பிறகு., நீங்கள் செய்ய எடுத்து வைத்ததும் வையுங்கள்.,  சேர்த்து கொடுத்து விடுவோம்”., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

அது எதிலும் தலையிடாமல் சரண்யா அவளுடைய கொடைக்கானல் பழப் பண்ணை பராமரிப்பின்றி போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தாள்.

முரளியும் “கண்டிப்பாக போனவுடன் எழுதிக் கொடுத்து விடுவேன்., பிறகு வந்து விடலாம் அதிகபட்சம் 6 மாதம் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ., அவ்வளவு சீக்கிரம் வந்து விடுகிறேன்”.,  என்று முரளியும் சொல்லிக்கொண்டிருந்தார்.  அதன் பிறகு சம்மதமாக தலையசைத்தாள் சரண்யா…

இரண்டு மூன்று நாட்களுக்குள் இங்கிருந்து திண்டுக்கல் கிளம்பி வருவதாக  சொன்னார்கள்., வீட்டில் உள்ள மற்றப் பிள்ளைகளும் அதாவது ஜெ.கே யின் சித்தப்பா பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து., “நாங்களும் வருவோம்”., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

“அப்படியே கொடைக்கானல் போய்ட்டு சுத்திட்டு தான்., எல்லாரும் சேர்ந்து வருவோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

வீட்டு பெரியவர்கள் தான் “அவங்க ரெண்டு பேரும் போயிட்டு வரட்டும்” என்றதற்கு “ஏன் நாங்க போக கூடாதா” என்று கேட்டார்கள்.

சரண்யா தான்  “எல்லாரும் சேர்ந்து போகலாம்” என்று சொல்லிவிட்டாள்…

வீட்டு பிள்ளைகள் அனைவரும் சேர்ந்தார் போல சந்தோஷ கூச்சலிட்டனர். ஏனெனில் அவர்கள் கல்லூரி சுற்றுலா தவிர வேறு எங்கும் வெளியில் சென்றது கிடையாது.  எனவே அனைவரும் சேர்ந்து போவது  மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்.,

வீட்டு பெரியவர்கள் தான் “நாங்க எல்லாம் எதற்கு., நீங்க போயிட்டு வாங்க” என்று சொன்னார்கள்.

கடைசி சித்தப்பாவும் சித்தியும் பெரியவர்களாக பிள்ளைகளுக்கு துணையாக வரட்டும் என்று பேசிக் கொண்டார்கள்., ஆளுக்கு ஒரு வேலை சொல்ல., கடைசியில் கடைசி சித்தப்பா வேலையை மற்றொன்று சித்தப்பா பார்த்துக்கொள்வதாக சொன்னார். எனவே அவர்கள் இருவரையும் மட்டும் சேர்த்துக் கொண்டார்கள். இங்கிருந்து இதே போல ஒரு  வேனை பிடித்து அனைவரும் சேர்ந்து திண்டுக்கல் செல்வதாகவும்., பின்பு கொடைக்கானல் சென்று விட்டு திரும்பி வருவதாகவும் பேசிக்கொண்டார்கள்…

ரத்னா தான் தெய்வானையும் பழனிவேலையும் சேர்த்து அழைத்தார். “நீங்களும் வந்துட்டு வாங்க ஊருக்கு”என்று அழைத்தார்.

அவர்கள் “உடல்நிலை ஒத்துக்கொண்டால் கண்டிப்பாக வருகிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

அதேநேரம் சீதாவை அழைக்க., “மங்கை திவ்யாவுக்கு கொடுக்க வேண்டியது எல்லாம் கொடுக்கணும்.,  அதனால கொடுத்துட்டு அப்புறம்., இன்னொரு தடவை நீங்க இங்க வந்ததுக்கு அப்புறம்.,  நாங்க வாரோம்” என்று சீதா சொல்லிக்கொண்டிருந்தார்.,

ஒருவழியாக குடும்பத்தோடு சேர்ந்து ஒரு டூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.,

முரளி மங்கையும் ஜெ.கே இடம் தனியாக சென்று சொல்லி விட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினர். விசாலாட்சி யிடம் தனியாக சொல்லி விட்டு சென்றாள்  மங்கை., மறுநாள் அதிகாலையில் அவர்கள் அங்கிருந்து கிளம்புவதால் காலையில் வந்து சொல்லிக்கொள்ள நேரம் இருக்காது என்று அப்போதே சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.

இவர்கள் அதன் பின் வீட்டிற்கு கிளம்பினர்.,  வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அனைவரும் எப்படி போவது.,  எத்தனை நாள்.,  எங்கு தங்குவது என்பதை பற்றி யோசனையோடு சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  அதையும் இரவு உணவு நேரத்தில் அனைவரும் சரண்யாவை தேடி வந்து விட்டனர்…

“அண்ணி அண்ணி” என்ற பதட்டத்தோடு ஆளாளுக்கு அழைத்துக் கொண்டு வர.., இவளும் எதற்கு என்று அழைக்கிறார்கள் என்று தெரியாமல் அவசரமாக “என்ன” என்று கேட்டாள்.

பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து “அண்ணி டூர் பிளான் சொல்லுங்க., எப்படி எந்த மாதிரி டிரெஸ் எடுத்து வைக்கணும்.,   எத்தனை நாள்”.,  என்று கேட்டனர்.

“எத்தனை நாள் நீங்க தான் சொல்லணும்.,  எந்த மாதிரி டிரெஸ் வேண்டும் னாலும் எடுத்துக்கோங்க., ஒன்னும் பிரச்சினை கிடையாது”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“தங்குற இடம் எப்படி இருக்கும்” என்று கேட்டாள். நடுவில் உள்ள சித்தப்பாவின் மகள்.

“திண்டுக்கல்ல பாட்டி வீடு., நல்ல பெருசா இருக்கும்., இங்க இருக்க மாதிரி தான் நிறைய ரூம் இருக்கும்.,  உங்களுக்கு என்ன ரூம் பிடிச்சிருக்கோ அதை யூஸ் பண்ணிக்கோங்க., கொடைக்கானல  நம்ம ரிசார்ட் இருக்கு.,  அங்கேயும் வீடு இருக்கு.,  சோ எங்க வேணுமோ.,  அங்க தங்கிக்கலாம்., வெளியே சுற்றி பார்க்க போகும் போது மட்டும் தான் ஸ்வட்டர் தேவைப்படும்.,   இப்போ ரொம்ப குளிரு  அப்படின்னு சொல்ல முடியாது.,  பிளசன்டா இருக்கும்., உங்களுக்கு ஒருவேளை குளிர மாதிரி ஃபீல் இருக்கும்., அப்படின்னு தான் சொல்றேன் எடுத்துக்கோங்க”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஓகே” என்று எல்லாம் கத்திக்கொண்டு “எத்தனை நாள்” என்று கேட்டது வீட்டின் கடைக்குட்டி.,

“உனக்கு எத்தனை நாள் இருக்கணும்னு., சொல்லு அத்தனை நாள்  இருக்கலாம்., இல்ல உனக்கு அங்கேயே பிடிச்சிருந்தா சொல்லு.,அங்கே விட்டிட்டு வந்துடறேன்”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…

பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து அவளை பிச்சி எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டு பெரியவர்கள் தான் “எத்தனை நாள் ன்னு பிளான் பண்ணிட்டு.,  அதுக்கு தகுந்தாற் போல் எடுத்துக்கோங்க., என்றனர்.

“அங்க எப்படி இருக்கும்., குளிர் எப்படி இருக்கும்,  தெரியாது இல்ல, காலேஜ் டைம்ல எப்பவோ ஒரு தடவை டூர் போனது., அதுக்கப்புறம் எங்க கூட்டிட்டு போய் இருக்கீங்க., கடைக்கு கூட்டிட்டு போறீங்க., மிஞ்சி மிஞ்சி போனால் திருநெல்வேலி போறோம்., அதை தவிர வேற எங்க போறோம்”., என்று வருத்தப்பட்டு கேட்டுக்கொண்டிருந்தனர். பெண் பிள்ளைகள் இருவரும்..,

“சரி இப்ப என்ன உங்களுக்கு.,  எல்லாரும் போறீங்க.,  என்ஜாய் பண்ணிட்டு வாங்க.,  போங்க”., என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்தடுத்து வீட்டுப் பெரியவர்கள் மனமகிழ்ச்சி படும்படி நடந்து கொண்டிருந்தது.., ‘கண்டிப்பாக இந்த இடத்தில் வேறு பெண் வந்திருந்தாள் இதெல்லாம் நடந்திருக்குமா’., என்று ஒரு நிமிடம் விசாலாட்சி ‘தன் மகன் எதற்கு தன் வீட்டு மருமகள் எப்படி வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்’ என்பதற்கு காரணம் இப்போது விளங்குவதாக உணர்ந்தார்…

இரவு அறைக்குச் சென்றவள் சற்று சோர்வாக உணர்ந்ததாள். போய் ஒரு குளியலை போட்டுவிட்டு வேறு உடை எதுவும் இல்லாததால் அவள் எடுத்து வைத்திருந்த பாவாடை சட்டையை போட்டு கொண்டாள்., எதுவும் சொல்வானோ ஜெ.கே என்ற பதட்டத்தோடு தான் இருந்தாள்.,  வந்தால் சொல்லிக் கொள்ளலாம்., வேறு அதிகமான சேலை எதுவும் எடுத்து வரவில்லை., ஊருக்கு வருவதால் நைட்டி எடுக்க வில்லை., சுடிதார் தான்.,   பாவாடை சட்டையோடு இருந்து கொண்டாள்., குளித்து விட்டு வந்து வெளியே பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து இருக்கும் போது.,  ஜெ.கே வந்தான்.,

அவனும் களைப்பு தீர ஒரு குளியல் போட்டு விட்டு வந்து பார்க்க சிறுபிள்ளை போல நீளப்பாவடையும்., அழகாக முழுக்கை வைத்த நீளச் சட்டையும் போட்டு பார்ப்பதற்கு சிறு பெண் போலவே தெரிந்தாள்.,  சிரித்துக்கொண்டே  அருகில் அமர அவள் தான் யோசனையோடு பார்த்தாள்., “என்ன  ஒரே யோசனை இப்படி பார்க்குறே” என்று அவன் கேட்டாள்.

“இல்ல நைட்டி இல்ல., புடவையும் வீட்டுக்கு கட்டுற மாதிரி இல்ல.,  காலையில டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்” அதுக்கப்புறம் கீழே வர்றேன். என்றாள்.

அவனும் “இப்ப நான் ஒன்னும் சொல்லலையே., நீ எதுக்கு இவ்வளவு யோசிக்கிற.,  என்று சொன்னான்.

“இல்ல நீங்க இப்படி போட்டால் ஒன்னும் சொல்ல மாட்டீங்களா., என்று கேட்டாள்.

“ரூம்லஎப்படி போட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க., கீழேயே நீ இப்படி போட்டு போனா கூட அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க., வீட்ல யாரும் இதெல்லாம் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க., நீ இப்படி எல்லாம் யோசிக்காத.,  டிரஸ் நீட்டா இருக்கணும், மத்தவங்க பாத்து எதுவும் தப்பா சொல்ற அளவுக்கு இருக்க கூடாது., அவ்வளவு தான்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

“அப்போ ஒரு சுடிதார் போடலாமா” என்று கேட்டாள்.

“இப்போ எல்லாருமே சுடிதார் போடுறாங்க., நீ எதுக்கு இப்படி யோசிக்கிற”.,  என்று கேட்டான்.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கிளம்புவதாக சொல்லிக் கொண்டிருந்ததைப்  பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள்., சற்று நேரம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் அவளிடம் ” சித்தி, சித்தப்பா.,  புள்ளைங்க எங்கேயும் போனது கிடையாது.,  சோ   எல்லாரும் திண்டுக்கல்ல ரெண்டு நாள் இருந்துட்டு, கொடைக்கானலில் ஒரு மூணு நாள் இருந்துட்டு வர சொல்றாங்க..,  பிள்ளைகளும் கொஞ்சம் வெளியே எல்லாம் பார்த்த மாதிரி இருக்கும் னு., எல்லாரும் வர்றது ல உங்க வீட்ல யாருக்கும் டிஸ்டர்பன்ஸ் இருக்காதே” என்று கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை., நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க”.,என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

அப்போது இவள்  தான் “அஞ்சு நாள்  பிசினஸை பார்க்கிறது”., என்று கேட்டாள்.

“அப்பா பார்த்துப்பாரு.,  நான்  எதாவது வேலை விஷயமாக வெளியே போனாலும், அப்பா தான் பார்த்துப்பாங்க., அதனால மேனேஜ் பண்ணிப்பாங்க” என்றான்.

“நந்தன் என்ன பண்றாப்ல.,  என்று நந்தனை பற்றி கேட்டாள்.

“அவன் அப்பப்ப பாத்துப்பான்.,  இப்போ தான் எல்லாருக்கும் முன் சேர்ந்து கிளம்பிட்டான்., அவனுக்குன்னு ஒரு பொறுப்பு வர மாட்டேங்குது”.,  என்று சொன்னான்.

“ஏன் நீங்க கேக்க மாட்டீங்களா”.,  என்று கேட்டாள்.

“எங்க நான் கேட்டா வாயை திறக்க மாட்டான்., பயப்பட தான் செய்வான்”., என்று சொன்னான்.

” நான் கேட்கட்டுமா.,  தப்பா நினைக்க மாட்டாங்களா” என்றாள்.

” ஏன் தப்பா நினைக்கப் போறான்.,  பேசிப் பாரு.,  உன்கிட்ட ப்ரீயா பேசினா கேளு”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

இருவரும் சாதாரண குடும்ப கதைகளை பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் எப்போதும் போல  அவள் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டு “நிறைய பேசணும்… கல்யாணமாகி நாலு நாள் ஆயிடுச்சு இல்ல., என்றான்.அவன் அவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே தான் கேட்டான்.,

அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தபடி “ஆமா” என்றாள்.

“பேசணும் , நிறைய பேசணும்., ஏழு வருஷம் நினைவுகள் மொத்தமா சேர்த்து வச்சிருக்கேன்., அது புல்லா பேச வேண்டி இருக்கு., இதுவரைக்கும் நான் யார்ட்டையும் மனசு விட்டு வெளியே சொன்னதே கிடையாது” என்றான்.

“உங்க பிரெண்ட்ஸ்” என்று அவள் கேட்டாள்.

எல்லாரும் ஒவ்வொரு வேலை கிடைச்சு.,   போய் உட்கார்ந்துட்டாங்க.,  நான் ஒருத்தன் தான் இங்க இருக்கேன்., எப்பவாச்சும் போன்ல பேசுவோம்.,  அதுவும் எல்லாரும் வேலை பிஸி., எப்பவாது டைம் கிடைக்கும் போது., வீக்லி ஒன்ஸ் அந்த மாதிரி பேசுறது தான்.,  அப்ப நலம்  விசாரிப்பதற்கு சரியா இருக்கும்., நம்ம மனசுல உள்ளதெல்லாம் எங்க சொல்ல.., அதனால எதுவுமே யாருக்கும் சொன்னது கிடையாது., உன் கிட்ட பேசணும் நிறைய பேசணும்”., என்று சொல்லி விட்டு “நீயும் என் கிட்ட மனச திறந்து பேசணும்” என்று அழுத்தமான குரலில் சொன்னான்.

அப்போது அவள் விசாலாட்சி சொன்ன ‘என் மகன் ரொம்ப நாளா இறுகிப் போய் இருக்கான்., இப்பத் தான் சிரிச்சு இருக்கான்’ என்று சொன்ன வார்த்தையும் நினைவில் வந்தது…

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள்
நினைப்பொன்எனக் கொண்ட
பொழுதிலே – என்றன்..

Advertisement