Advertisement

12

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே

இரண்டு நாட்கள் ஆன நிலையில் இப்போது தான் ஜெ. கே யோடு மற்றவர்கள் முன்னிலையில் ஏதோ ஓரிரு வார்த்தைகளாவது பேசத் தொடங்கியிருக்கிறாள்.  அறையில் இருக்கும் போதும் அவன் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்வாள்., ஜெ. கே  நினைத்துக் கொள்வான் ‘கூட்டிற்குள் அடைந்திருக்கும் கூட்டு பறவை போல இருக்கிறாள்.,  கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியே கொண்டுவர வேண்டும்’ என்று., ஆனால் மற்ற பிள்ளைகள் அனைவரிடமும்  நன்றாகவே பேசினாள்…

அன்று காலை குலதெய்வம் கோயிலுக்கு செல்ல வேண்டும்., அங்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறியதால்., காலையிலே குடும்பத்தினர் கிளம்பிக் கொண்டிருந்தனர்..

முதல்நாளே விசாலாட்சி சொல்லியிருந்தார்., பட்டுப்புடவையும் பார்த்து தேர்ந்தெடுத்து கொடுத்திருந்தார். அவளுக்கு இன்னும் நிறைய உடைகள் வராததால் திருமணத்திற்கு  கட்ட என்று எடுத்து வந்திருந்த அழகான புதுப்புடவை தான் இன்று கோயிலுக்காக கட்டியிருந்தாள்.,  இடுப்பு வரை  நீண்டு கிடந்த முடியை பின்னலிட்டு விட்டு முகத்திற்கு லேசான ஒப்பனை செய்து,  பொட்டு வைத்து விட்டு குங்குமத்தை  உச்சி வகிட்டில் வைக்க எடுக்கவும்., ஜெ. கே அவளுக்கு பின்புறமாக வந்து நின்றான்.,

அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்  “திரும்பு” என்று சொன்னவன்., அவளை திருப்பி அவள் கையில் இருந்த குங்குமத்தை வாங்கி அவனே உச்சி வகிட்டில்  வைத்து விட்டான்…

அவன் ஏற்கனவே கிளம்பி தயாராக இருந்ததால் அவள் தோள் பற்றி மறுபடியும் கண்ணாடியை பார்த்து திருப்பியவன்.,  அவளைத் தோளோடு சேர்த்து பிடித்தபடி கண்ணாடியில் இருவரின் உருவத்தையும் சேர்த்து அவளை பார்க்கும் படி  செய்தான்..

அதன்பிறகு அவளோடு சேர்ந்து இருப்பது போல  செல்ஃபி மட்டும் எடுத்துக்கொண்டு.,  “சரி சீக்கிரம் கிளம்பு., பூ வச்சிக்க, ரெடி ஆகு” என்று சொல்லி அனுப்பி வைத்தான். அவளும் சிரித்தபடி அவன் கையை விலக்கிக் கொண்டு   அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்…

போயிட்டு கிளம்பு என்று சொன்னவன்., தன் பிடியை மற்றும் விளக்காமல் அழுத்தமாக தோளை பிடித்து வைத்திருந்தான்., எனவே தான் அவனிடம் இருந்து கையை விலக்கிக் கொண்டு கிளம்பினாள்.,  அவனும் சிரித்தபடி வெயிட் பண்ணு வந்தர்றேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்..

அவள் கீழே வரவும் விசாலாட்சி பூ வெடுத்து தலை நிறைய வைத்துவிட்டார். ஜெ. கே யின் பெரிய சித்தி தான் “அக்கா வந்தவுடன் மறந்திடாமல் சுத்தி போடுங்க.,  எத்தனை பேர் கண்ணு இன்னைக்கு மருமக மேல விழப் போகுதோ தெரியல”.,  என்று சொன்னார்.

” முதலில் நம்ம கண்ணு எல்லாம் படாமல் இருக்கட்டும்” என்று சொன்ன  அதற்கு அடுத்த சித்தி உப்பை எடுத்து வந்து சுத்தி பின்புறம் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் கொண்டு போட்டு விட்டு வந்தார்.

“அய்யோ அத்தை சும்மா இருங்க”.,  என்று இவள் சொல்ல அவர்களுக்குள் சொல்லிக்கொண்டனர்.

“அமைதியான அழகு”., என்று தான் அழகு என்பதை எவ்விதத்திலும் காட்டாமல் இருக்கும் போது அந்த அழகு தான்  பேரழகாக விளங்கும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை..

எல்லோரும் சேர்ந்தே கிளம்பினர்… உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் கிளம்ப தனித்தனி காரில் கிளம்புவதை விட., ஒரே வேனில் கிளம்பி விடலாம் என்று அனைவரும் சேர்ந்து கிளம்பினர்.  சரண்யாவின் வீட்டினரும்., பெரியப்பா வீட்டினரும், தனியே காரில் வந்தனர்.

அங்கு கோவிலுக்கு சென்றவுடன் ஜெ.கே யின் சித்திகளின் உதவியோடு விசாலாட்சி சொல்ல சொல்ல அதன்படி கோயிலுக்கு பொங்கல் வைத்து., பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பூஜை முடித்த பிறகு அங்கேயே மதிய உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால்., அதற்கும் சமையல் ஆள்கள் வந்திருக்க.,  அங்கே சமைத்து உறவினர் அனைவரும் சாப்பிட்டு விட்டே கிளம்பினர்.  இவள் வீட்டுப் பெண்களோடு சேர்ந்து இருந்தாள்.,

அதே  நேரம் மங்கையும்., ரத்னா, செண்பகம், என அனைவரும் அவளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி கொண்டே இருந்தனர். “உன்ன பத்தி எங்களுக்கு தெரியும்.,  நீ நல்லபடியா இருந்திடுவ ன்னு தெரியும்.,  ஆனா பெரிய குடும்பத்துக்குள்ள போயிருக்க நீ அட்ஜஸ்ட் பண்ணி போகணும்.,   எந்த சூழ்நிலையிலும் உன்ன தப்பா சொல்லி விடக் கூடாது.,  அதை மட்டும் பார்த்துக்கோ, நீ அந்த குடும்பத்தின் மூத்த மருமக.,  ஜெகே க்கு ன்னு ஒரு பெயர் இருக்கு.,  அந்தப் பெயரை காப்பாற்ற வேண்டிய கடமை உனக்கு இருக்கு”.,  என்று சொன்னார்கள்.

அனைவரும்  அறிவுரையோடு.,  குடும்பத்தினரிடமும் நன்றாக பேசிக் கொண்டிருக்க முதல்முறையாக  சீதாவே நினைத்தார்., ‘திவ்யா இருந்திருந்தால் கூட இந்த இடத்தில் இத்தனை பொறுமையாக பக்குவமாக அனைவரோடும் பழகி இருக்கமாட்டாள்’., என்று நினைத்தார்.

“சரண்யா தான் இந்த குடும்பத்திற்கு ஏற்ற மருமகள்” என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள தோன்றியது. அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அதை தெய்வானை இடமும் பழனிவேல் இடமும்.,  ‘அவர்கள் இருவரும் தானே சற்று வருத்தத்தில் இருந்தது’ எனவே அவர்களிடம் பக்குவமாக சொன்னாள்.

“திவ்யா வந்து இருந்தா கூட.,  நீங்க எல்லாரும் தான் அவளுக்கு அட்ஜஸ்ட் பண்ணி போற மாதிரி இருக்கும்.,  அடம்பிடிப்பா.,  எப்படி பழகுவா அப்படி எல்லாம் சொல்ல முடியாது., சட்டுனு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடு வா.,  ஆனா இவ அப்படி கிடையாது.,  நம்ம குடும்பம்  கலையாமல் இருக்கு இப்ப வரைக்கும்., அதே இது கடைசி வரைக்கும் இருக்கும்.,   இப்ப நான் சொல்றேன் மா.,  சரண்யாவால இந்த குடும்ப பிரியாது அதை எழுதி வச்சிக்கோங்க.,  திவ்யாவா இருந்தா கண்டிப்பா இதுகுள்ள ஒரு சண்டை வந்து இருக்கும்”., தெய்வானை பாட்டி சீதாவை பார்க்கவும்., “ஏம்மா அப்படி பார்க்கீங்க., பெத்தவ தான், பெற்ற பிள்ளையை குறை சொல்லக்கூடாது தான்.,  ஆனா என் பிள்ளை வளர்ந்த லட்சனம், எனக்கு தானே தெரியும்.,  இனிமேல் வீட்டுக்கு வந்தாலும்.,  இல்லை  இங்க விருந்துக்கு வந்தாலும்., செல்லம் கொடுக்குற வேலை வெச்சுக்காதீங்க., உங்களுக்குப் பேத்தினா.,  எனக்கு மக மா” என்று சொன்னார்.

தெய்வானை  “பிள்ளைய  குறை சொல்லாத சீதா” என்றார்.

“இல்லம்மா குறை சொல்வதற்காக, சொல்லல மா., எல்லாரும் செல்லம் கொடுத்து வளர்த்துட்டு.,  இப்போ என் மனசு கெடந்து தவிக்குது மா., சரண்யாவை வீட்டுக்குள் வரக்கூடாது ன்னு சொல்லும் போது., நீங்க எல்லாம் அப்பவே கண்டிச்சி பக்ஷசொல்லி இருந்தீங்கன்னா., கொஞ்சமாவது சரியாகி இருக்கும்., நாம என்ன பண்ணினாலும் நமக்கு சப்போர்ட் பண்ண ஆள் இருக்காங்க ங்கிற தைரியம் தான் அவள இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணுற அளவிற்கு கொண்டு விட்டுருக்கு..,  அவளுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் அப்படிங்கற மாதிரி நீங்க எல்லாம் பேசினீங்க.,  இனிமேல் அப்படி இருக்காதீர்கள்., அவ இன்னொரு வீட்டுக்கு வாழ போயிருக்கா, அந்த வீட்டிலிருந்து நல்லபடியா வாழனும், அதுக்கு நீங்க எல்லாம் சரியா இருந்தா தான்., அவ ஒழுங்கா இருப்பா பார்த்துக்கோங்க.., என்ன இப்போ அண்ணன் வீட்டுக்கு மருமகளா வந்திருக்கிறது., என் கொழுந்தன்  மக., அப்படினா  எனக்கும் மக தான்., முகம் காட்டாதீங்க”., என்றார்

“உனக்கு வருத்தம் இல்லையா”.., என்றார் தெய்வானை பாட்டி.

“இல்லன்னு சொல்லல.,  ஆனா அவ வளர்ந்திருக்க விதத்துக்கும்.,  இவ வளர்ந்து  இருப்பதற்கும் வித்தியாசம் இப்ப எனக்கு நல்ல தெரியுது., இவளும் ஒத்த புள்ளையா வளர்ந்திருக்கா, ஆனாலும் ஒரு குறை சொல்ல முடியுமா.,  இந்த புள்ள கொஞ்ச நாளா., இங்க வர போக இல்ல.,  வரப்போக இருந்திருந்தால், எனக்கும் அப்போவே தெரிஞ்சிருக்கும்., நானும் அப்ப கவனிக்காம விட்டுட்டேன்”., என்று வருத்தத்தோடு கூறிக்கொண்டிருந்தார் சீதா….

நீண்ட பெருமூச்சோடு பழனிவேல் தாத்தா தான் “கடவுள் யாருக்கு யார் என்று முடிச்சு போட்டு வச்சிருப்பான்., அது படி தான் நடக்கும் ன்னு சும்மாவா சொல்றாங்க.,  அப்படித்தான் நடந்து இருக்கு.,  சரி அவ இஷ்டப்படி வாழ்க்கை  தேர்ந்தெடுத்து விட்டாள்.,  அமைஞ்ச  வாழ்க்கையை நல்லபடியாக காப்பாற்ற வேண்டியது அவ பொறுப்பு., நல்லபடியாக வாழ்ந்துருவா ன்னு,  நம்புவோம்” என்று சொன்னார்.

தெய்வானை தான் “அவளை செல்லம் கொடுத்து வளர்த்தாச்சி.,  இன்னொரு வீட்ல போயி எப்படி விட்டுக்கொடுத்து போவா ன்னு தெரியலையே”.,  என்று ஒரு வித பயத்தோடு சொன்னார்.பேத்தியின் குணம் அறிந்தவராக சொன்னார்.

சீதா தான் “இனிமேல் நல்லபடியா இருப்பா ன்னு நம்புவோம்., அதுக்கு மேல எதுவும் பண்ணினான.,  எல்லாரும் சேர்ந்து தான் சொல்லணும்., இனிமேலும் நீங்க செல்லம் கொடுக்காதீங்க அப்பா.,  உங்களுக்கு தான் சொல்லுவேன்..,  உங்க கிட்ட தான்  கூட கொஞ்சம் செல்லம் கொஞ்சுவா.,  இப்போ எங்க மேலே ஒரு பயம் இருக்கு.,  என்கிட்ட சொல்லாம ஒரு தப்பை பண்ணிட்டு., மறைச்சிட்டா அப்படிங்கிற பயம் இருக்கு.,  நீங்க ரெண்டு செல்லும் குடுப்பீங்க, அதனால தான் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தார்…

கோயிலில் வைத்தே கிளம்பு முன் ரத்னாவும் மங்கையும் வந்து விசாலாட்சி இடமும்., வீட்டு பெரியவர்களிடமும் பொதுவாக பேசினர். “நாங்க நாளைக்கு காலைல ஊருக்கு கிளம்பலாம் என்று இருக்கோம்.,  நீங்க என்னைக்கு திண்டுக்கலுக்கு அனுப்பி வைக்கிறீர்களோ.,  அனுப்பி வைங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்”.,  என்று ரத்னா திண்டுக்கல் வருவது பற்றி  கேட்டுக் கொண்டிருந்தார்.

மங்கையும் முரளியும்  “நாங்களும் உடன் கிளம்புகிறோம்., அங்க தான் அவளுக்கான எல்லாம் இருக்கு., துணிமணி.,  நகை எல்லாமே., அதெல்லாம்  சீர் வைக்க வரும்போது எல்லாத்தையும் கொண்டாந்து வச்சிட்டு கிளம்புவோம்” என்று  சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போதும் அமைதியாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா., “ஏண்டா அமைதியா பார்த்துட்டு இருக்க.,  என்று முரளி கேட்டார்.

இவளோ “எப்போ வேலையை விட்டுட்டு வருவீங்க” என்று கேட்டாள்.

“வந்துருவேன் டா., சரண்  தோட்டத்தையும்., ரிச்சார்ட் ம் அதுவரை பத்திரமா ஆள் வைத்து  பார்க்கலாம் னு தாத்தா  சொல்லியிருக்காங்க”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  “இப்போ திண்டுக்கலுக்கு தான் போறோம்., உன்னோட எல்லாம் எடுத்துட்டு வந்து ஒப்படைத்து போகணும், நீங்க எப்ப திண்டுக்கல் வர்றீங்க.,  திண்டுக்கல் வந்து விட்டு வரும்போது எல்லாத்தையும் கொண்டு வந்து விடலாம்”. என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

Advertisement