Advertisement

10

காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்

அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை

இன்றென்பது உண்மையே

இரவு உணவுக்குப்பின் அவளை அழைத்து சென்று ஜெ.கே யின் அறையில் விட்டு விட்டு வந்தார் விசாலாட்சி., வேறு எதுவும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை. சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று தான் ஜெ. கே யும் சொன்னான்.  “இது திடீர் கல்யாணம் என்ற காரணத்தினால் அவளுக்கு கஷ்டமான பீல் இருக்க கூடாது” என்று தான் சொன்னான்.

ஆனால் வீட்டில் உள்ளவர்கள் தான் “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள்.

“அதெல்லாம் நீங்க பார்த்துக்கோங்க.,  இதில் என்ன இருக்கு” என்று சொல்லி அவளை அவன் அறையில் விட்டுவிட்டு வந்துவிட்டார்.

அவன் வரும் வரை அவன் அறையில் இருந்த பால்கனியில் இருந்து வெளியில் தெரியும் தோட்டத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். பால்கனியில் இருவர் மட்டுமே அமருமளவில் ஒரு சிறு ஊஞ்சல் கிடந்தது.,  அதில் அமர்ந்தாள்.

சற்று நேரத்தில் தன் மனம் மிக அமைதியாய் இருப்பதாக உணர்ந்தாள். இத்தனை நாள் இருந்த குழப்பங்கள் ஏதோ தீர்ந்தது போல உணர்ந்தவளுக்கு தன் மனதின் எண்ணங்கள் சிறிது சிறிதாக புரிய தொடங்கியிருந்தது…

அவள் செல்போனில் இருக்கும் பாடல் “கரிசக்காட்டு பெண்ணே” என்ற பாடல் சிறுவயதில் அவளுக்கு பிடித்த  பாடல் இங்கு வரும் போது அதை அடிக்கடி பாடிக் கொண்டு சுத்துவாள்.  அந்தப் பாட்டிற்கு அப்போதெல்லாம் அர்த்தம் தெரியாது.,  ஆனால் அனைத்தும் தெரிந்த பிறகு ஏனோ அப்பாடலை அவளால் மறக்க முடியவில்லை.,  அதனால் தான் அப்படியே தன் செல்போனில் ரிங்டோனாக வைத்திருந்தாள்.,  அது மட்டுமின்றி சிறுசிறு நினைவுகளையும் யோசித்துக் கொண்டிருந்தாள்., அத்தான் என்று அழைக்க கூடாது என்று திவ்யா சொன்ன அன்று வெகுநேரம் யோசித்துக் கண்டுபிடித்தது தான்., இந்த ஜெ.கே என்ற பெயர்., அதையும் எத்தனை முறை  பேப்பரில் எழுதி பார்த்திருப்பாள்,   திவ்யா தான் அனைவர் முன்னிலையிலும் சொன்னாள்.,  “நீ பெயர் சொல்லினாலும் கூப்பிடு., அத்தான் னு கூப்பிட கூடாது” என்று சொல்லியிருந்தாள்.

அதனால்தான் மறுநாளிலிருந்து ஜெ.கே என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள். இப்போது ஒவ்வொன்றாக யோசிக்கும் போது தான் ‘ஏன் அப்படி இருந்தோம்.,  அப்போதே’..,  என்று தோன்றியது. ‘அது அந்த பதின் பருவத்தில் ஈர்ப்பாக கூட இருக்கலாம்’ என்று அப்பொழுது நினைத்துக் கொண்டாலும்.,  ‘அது அப்படி இல்லையோ மனதில் ஆழப் பதிந்த ஒரு விஷயமா’ என்று தோன்றியது. ஏனெனில் அவன் கல்லூரி காலத்திலேயே அவன் அப்பாவிடம் இருந்த பழைய புல்லட்டை ஓட்டிக்கொண்டு சுற்றுவான்.  அப்போது ஒரு நாள் அவனிடம் “எனக்கு வண்டி ஓட்ட சொல்லி கொடுப்பீங்களா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இந்த வண்டி உன்னால பேலன்ஸ் பண்ண முடியுமா.,  ஸ்டாண்ட் போட்டு நிறுத்த முடியுமா., வண்டி ஓட்ட சொல்லி தர்றேன்” என்றான்.

” அதான் நீங்க சொல்லித்தர கூட இருப்பீங்க இல்ல.,  நீங்க ஸ்டாண்ட் போடுங்க”., என்று சொன்னான்.

“நான் உனக்கு வண்டி ஓட்ட சொல்லி கொடுத்துட்டு., உனக்கு ஸ்டாண்டு போட்டு,  உனக்கு டிரைவர் கம் ஹெல்ப்பர் வேலை பார்க்கிறேன்” என்று சொன்னான்.

“ஜெ. கே ஒரு நாள் நான் வருவேன்.,  உன் கிட்ட வந்து வண்டி ஓட்ட கத்துக்குவேன்” என்று சொன்னாள்.

“முதலில் வண்டி ஸ்டாண்ட் போட கத்துக்கோ., அதுக்கப்புறம் நானே உனக்கு சொல்லி தரேன்” என்று சொல்லி  இருந்தான்.,

அதை இப்போது நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு தோன்றியது.  ‘யாரிடமும் அந்த அளவு பேசாதவள்.,  அவனிடம் மட்டும் சிறுவயதில் அதிகமாக பேசி இருக்கிறோம்’ என்ற நினைப்பு வந்தது….

தனியாக வளர்ந்ததோ என்னவோ.,  திவ்யாவிடம்  எதிர்பார்த்த அன்பு அவளிடம் கிடைக்கவில்லை.,  ஆனால் ராஜா அதிகமாக பேசியது கிடையாது., அப்படியே சற்று நேரம் பேசினாலும் திவ்யா பேசவிடாமல் இழுத்துக்கொண்டு சென்று விடுவாள்.  இவள் இருப்பது ஆச்சி வீட்டில் தான். மற்றபடி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பாள்.,  அப்போது அடிக்கடி தோட்டத்திற்கு வரும் ஜெ.கே அவன் தோழர்களோடு தான் வருவான்.  இருந்தாலும் இவளை பார்த்துவிட்டால் நின்று இவளோடு சற்று நேரம் பேசிவிட்டு தான் போவான்., ‘அந்த வயதில் பேச்சு துணைக்கு ஆள் இல்லாதது இல்லை..,  தனக்கென தன்னோடு பேச ஆளில்லை,  என்ற எண்ணமோ என்னவோ., ஜெ. கே உடன் நன்கு பேச வைத்திருந்தது. அதன் காரணமாகவே அவனோடு அதிகம் பேசியிருந்தாள்..

இவர் பெயரை சரண் என்று வீட்டில்  சுருக்கி கூப்பிடுவது பிடிக்காது., கூப்பிடாதீங்க என்று சொல்வாள்.  இருந்தாலும் அப்பா அம்மா சொல்லும் போது வாயை திறக்க மாட்டாள். அப்பா மட்டும் தான் சரண் என்று அழைப்பார். அம்மா எப்போதாவது.,

வேறு யாரும் பெயரைச் சுருக்கி கூப்பிட்டால் அவளுக்கு பிடிக்காது.,  ஆனால் ஜெ கே., சாயா என்று கூப்பிட்டதற்கு இவள் இதுவரை ஒன்றுமே சொன்னது கிடையாது., அது போல அவனுக்கு விவசாயத்தின் மேல் இருந்த ஆர்வம் தான் அவனோடு அவளை அதிகமாக பேச வைத்தது. ஒருமுறை நண்பர்களோடு பேசிக் கொண்டே வந்தவன்.,  இவளுக்கும் திவ்யா வைக்கும் சண்டை வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு…  பேசிக்கொண்டே இவளிடம்  வந்தவனிடம் “நீங்கதான் காலேஜ் முடிச்சுட்டீங்க இல்ல.,  ஏன் இன்னும் வேலைக்கு போகல”., என்று கேட்டாள்.

அப்போது இவள் சிறு பிள்ளை தானே.,  இவளிடம் எதற்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்.., ஜெ. கே அவளிடம் “நான் விவசாயம் பார்க்க போறேன்.,  விவசாயம் தான் நம்ம நாட்டோட முதுகெலும்பு.., விவசாயம் இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்”.,  என்று சொல்லி விவசாயத்தை பற்றி அவளிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருக்க..,  அதற்குள் அவன் தோழர்களும் கிளம்பிவிட்டனர்.

அவளிடம் சற்று நேரம் என்னென்ன பிசினஸ் பண்ண ப்ளான் போட்டு வைத்திருக்கிறான் என்பது பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

“எனக்கு இந்த மாதிரி  இயற்கை விவசாயம் பண்ணணும்.., இப்படி பண்ணினா நல்லா இருக்கும்., இப்ப காய்கறி எல்லாம்  கெமிக்கல் போட்டு விளைய வைக்குறாங்க., பால் விலையையும் ஏத்தி வைக்கிறாங்க., பாக்கெட் பாலுக்கு முக்கியத்துவம் போகுது., அந்த மாதிரிலாம் இல்லாம இயற்கை உரத்தில் காய்கறிகளை விளைய வைக்கனும்., சொந்தமா விவசாயம் பாக்கணும்., மனுஷன் வாழ சாப்பாடு முக்கியம்.,  சாப்பாட்டுக்கு விவசாயம் தான் முக்கியம்., நம்ம வெளியே வேலைக்குப் போனால் எந்த பிரயோஜனமும் கிடையாது.,  பணமும் சம்பாதிக்கலாம்., ஆனால் நம் மண்ணையும்., நம் விவசாயத்தையும் காப்பாற்ற விவசாயத்தில் தான் இருக்கணும்”.., என்று சொல்ல சொல்ல “ஒஒ., விவசாயத்தில் இவ்வளவு இருக்கா” என்று சொன்னாள்.

அதன் பிறகு அவனோடு தோட்டம் வயல் இது பற்றிய விஷயங்களை பேசிக் கொண்டே இருப்பாள்., பேசிக்கொண்டே இருந்தாள்.  அன்று அவனுடன் அதிக நேரம் பேசியது போல் அவளுக்கு தோன்றியது. அவள் தோட்டத்தில் இருப்பதால்., அவளை யாரும் தேடி வருவது கிடையாது. அப்போது தான் அவன் தோட்டம் பற்றி சொன்ன விஷயங்களெல்லாம் இவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பேரில் தான் இவளுக்கு தோட்டத்தின் மேல் ஆர்வம் வந்தது., அப்போது அவன் சொன்ன ஒரு வார்த்தை “என்ன நீ தோட்டம் வயல் எல்லாம் பத்தி யோசிக்காமல் இருக்க.., உங்க தாத்தா கொடைக்கானல்ல ரிசார்டு வச்சிருக்காங்க.,  பழப் பண்ணை வச்சிருக்காங்க.,  சோ நீயா அதெல்லாம்  யோசிக்க மாட்டியா.,என்றான்.

Advertisement