Advertisement

” நான் இதுவரைக்கும் தோட்டத்துக்கு போனது இல்லையே” என்று சொன்னாள்.

“போய் பாரு” என்று சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது .,  ஒரு வகையில் அவன் தான். அதை எல்லாம் இப்போது நினைத்துக் கொண்டாள். அவன் சொன்னது போல ஜெயித்து விட்டான் என்று மனதிற்குள் தோன்றியது…

அதன் பிறகு இரண்டு நாள் கழித்து தான் அத்தை வீட்டிற்கு வந்தவளை., திவ்யா சண்டையிட்டு விரட்டி.,  வீட்டிற்கு வரக்கூடாது என்றவள்., வேகமாக கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் வாசலில் விட்டாள். அதிலிருந்து தான் அவளுக்கு வருவதற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அத்தனைபேரும் சத்தம் போட்டாலும் பாட்டி, தாத்தா ஒன்றும் சொல்லவில்லை.,  “திவ்யா க்கு பிடிக்காத எந்த காரியத்தையும் செய்யாதீங்க”., என்று சொன்னார்களே ஒழிய., ஒரு சிறு பெண்ணின் மனம் வருத்தப்படும் என்பதை வயதானவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதன்பிறகு தான்., இந்த ஊருக்கு வரக்கூடாது என்று  நினைத்து விட்டாள்.,

அன்று தான்  ஒன்றுவிட்ட அண்ணனான அசோக் உடன் கொடுக்காப்புளி பறிக்க வாய்க்கால் கரை அருகே போய் இருக்கும் போது தான் அசோக்கின் நண்பர்கள் வர.,  அவன் கொடுக்காய்புளி  எல்லாம் பறித்து கொடுத்து விட்டு “வீட்டுக்கு போ… நான் அப்படியே என் பிரெண்ட்ஸ் கூட சுத்திட்டு வீட்டுக்கு போய்க்கிறேன்., நீ வீட்டுக்கு போ” என்று சொல்லி அவளுக்கு பாதை தெரியும் என்ற எண்ணத்தில் தான்.,  அவளை விட்டு விட்டு போனான்., ஆனால்  திவ்யா வந்து சண்டையிட்டு அவளை கீழே தள்ள.,  பாறையில் எங்கே முகம் பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் தான் ஜெ. கே வேகமாக ஓடிவந்து அவளை பிடித்து தூக்கியது.,  இடுப்பை பிடித்து தூக்கி விட்டான்.,

ஆனால் அதை திவ்யா “நீ அவளை இடுப்பை பிடித்த இல்ல., நான் அதை போய் சொல்லி கொடுக்கிறேன்” என்று சொன்னாள்.

வேறு விதமாகப் பேசத் தொடங்கியவளை பார்த்து., ஜெ. கே கத்திவிட்டு..  “நீ எல்லாம் பொண்ணா” என்று சொல்லி திட்டி விட்டான்.

“நீ தூக்கினேன் ன்னு போய் சொல்லு.,  நான்  எதுக்கு தூக்கினேன் ன்னு  சொல்றேன்., நீ தானே கீழே தள்ளிவிட்ட.,  அதை நான் சொல்லி கொடுக்கிறேன்” என்று சொன்னான்.

பயந்து போய் திவ்யா ஓடி விட்டாள். எங்கே தள்ளிவிட்டதை சொல்லிவிடுவானோ என்று., ஆனால் இதில் அவர்கள் இருவர் சண்டையில் பாதிக்கப்பட்டது என்னவோ சரண்யா தான். அப்போது அவள் தோளில் வடியும் இரத்தத்தோடு கிளம்ப போக., அவசரமாக அங்கிருந்த ஒரு செடியை பறித்து கசக்கி அவள் ரத்தம் வந்த தோள்பட்டை அருகிலிருந்த டி-ஷர்ட்டை லேசாக விலக்கி அவள் தோளில் மருந்து வைத்தான்.

அவளை யாரும் இதுவரை தொட்டு பேசியது கூட இல்லை., என்பதால் கூசிப் போனாள். அந்த நேரத்தில் அவன் தான் “ஒன்னும் இல்ல,  டாக்டர் மருந்து வச்சா பேசாமல் இருப்பது மாதிரி நினைச்சுக்கோ.,  கண்ண மூடு” என்று சொல்லி மருந்து வைத்தான்.

அவன் தவறான எண்ணத்தோடு அவளை தொடவும் இல்லை ., அவள் டீ-ஷர்ட்டை தோள் பகுதியை விலக்கவும் இல்லை., ஆனாலும் பெரிய பெண்ணாக இருந்தவளுக்கு அது சற்று கூச்சமாகவே இருந்தது.,  தோளில் மருந்தை வைத்து அழுத்தியவன் “அப்படியே பிடிச்சுக்கோ.,  வீட்டுக்கு போ”.,  என்று சொல்லிக் கொண்டு இருந்தவன்  வயலில் இருந்த ஒரு பெண்ணை அழைத்து “அவளை வீட்டிற்கு கொண்டு விடுமாறு சொல்லி மருந்து வைத்திருக்கு ன்னு சொல்லுங்க அக்கா” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அதன்படியே சொல்லிவிட்டாலும் அவனுக்கும் அவளுக்கும் மட்டும் தெரிந்த விஷயம்., ‘அங்கிருந்த மூலிகையைப் பறித்து கசக்கி அதன் சாறை தோளில் படுமாறு வைத்தது அவன் தான்’ என்று அது நம்ம ஊரில் சொல்லும் தாத்தா பூச்செடி என்று சொல்லப்படும் ஒரு வகையான செடிதான் அதை கசக்கி அடிபட்ட இடத்தில் வைக்கும் போது மருத்துவர் வைக்கும் டிஜ்ஜர்  போன்று காந்தும்., ஆனால் புண் சீக்கிரம் ஆறிவிடும்., அதனால் தான் வைத்துவிட்டான்.,

அதை எல்லாம் இப்போது நினைத்துக் கொண்டு பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள்., அவன் உள்ளே வந்து கதவை சாத்தி விட்டு., பால்கனி பகுதியில் வந்து இவள் அமர்ந்து இருந்ததை அவன் பார்த்தும்.,  அவள் கவனிக்கவே இல்லை.,  அவள் எண்ணம் முழுவதும் நிகழ்காலத்தில் இல்லாமல் இறந்தகாலத்தில் ஓடிக்கொண்டிருந்தது..

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே வாசலில் நின்றவன்.  சற்று நேரம் கழித்து மெதுவாக “சாயா” என்று அழைத்தான். நிமிர்ந்து பார்த்தவள் எழும்புவதற்கு முன் அருகில் வந்து “உட்காரு” என்று சொல்லி அவளை அமர்த்திவிட்டு அருகிலேயே அமர்ந்தான்…

“என்னவோ பயங்கர யோசனையில் இருந்த மாதிரி இருந்துச்சு., என்ன ஆச்சு”., என்று கேட்ட படி அவள் கையை மெதுவாக எடுத்து தன் கையோடு கோர்த்து கொண்டவன்.,  அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றவுடன் “நான் பேசலாமா  நீ என்னை யோசிச்சேன்னு., எனக்கு தெரியாது,  பட் நான் சொல்ல வேண்டியதை சொல்லி விடுறேன்” என்று சொன்னான்.
“அவளோ யோசனை எல்லாம் ஒன்னும் இல்ல., சும்மா பழசை யோசிச்சிட்டு இருந்தேன்” என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்தாள்…

அவன் சிரித்தபடி “தோளில் காயம் பெருசா இருந்துச்சா” என்று கேட்டான். அதன் பிறகு தான் இருவரும் பார்த்து கொள்ளவில்லை யே…

அவள் சிரித்தபடி இல்லை  என்றவள் அதற்கு மேல் அதைப்பற்றி பேசவில்லை. அவனும் புரிந்துகொண்டு அதற்கு மேல் அதைப்பற்றி பேச்சை எடுக்காமல் “நான்  உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று சொன்னான்.

அவளும் சம்மதமாக தலையசைத்தாள். அதன் பிறகு அவள் கையை கோர்த்துக் கொண்டு அவன் பேசத் தொடங்கினான். “நம்ம கல்யாணத்தை பொறுத்தவரை உனக்கு திடீர் ஷாக்கா இருக்கும்.,  எனக்கு அப்படி தோணலை., எனக்கு ஏற்கனவே பேசி இருந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்லை., தலையெழுத்து மாத்த முடியுமா ன்னு புலம்பிட்டே இருந்தேன்”., என்று சொன்னதோடு “உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது ல எனக்கு ஒன்னும் வருத்தமெல்லாம் இல்லை  சந்தோஷம் தான்., நான் சந்தோஷமாகவே சம்மதிச்சேன்.., இத எப்படி சொல்றதுன்னு தெரியல., பட் நம்ம இன்னும் பேச வேண்டியது இருக்கு.,  அட்லீஸ்ட் ஒரு வாரமாகட்டும்., அதுக்கு அப்புறம் நான் உன்கிட்ட நிறைய சொல்றேன்”.  என்று சொன்னவன்.,  “நம்ம ஒருத்தர ஒருத்தர் இன்னும் கொஞ்சம் புரிஞ்சிக்கிற வரைக்கும், நீ பழைய சாயா வா இரு., நான் பழைய ஜெ.கே வா இருக்கேன்” என்று சொன்னான்.

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து கேள்வியாக பார்க்க.., “பழைய சாயா.,  பழைய ஜெ.கே னா, அப்படி னா, என்ன ன்னு யோசிக்கீயா.,  நீ எப்போ இங்கிருந்து போனயோ., அந்த டைம்ல உள்ள சாயா வா   இரு., நான் அந்த டைம்ல ஜெ.கே வா  இருக்கேன்.  இந்த ஏழு வருஷத்துல நாம பேசாதது., நாம பேச நினைச்சது எல்லாத்தையும், இந்த இடைப்பட்ட நாளில் நம்ம பேசி முடிச்சிடலாம்., அதுக்கப்புறம் தான் நம்ம வாழ்க்கைப் பற்றி நம்ம டிசைட் பண்ணனும்” என்று அவன் சொன்னான்.

அவளும் சம்பந்தமாக தலையசைத்தாள்.  பின்பு அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் “ஒரு பிரண்டா முதல்ல நீ என்ன பாக்க பழகு.,  ஏன்னா ப்ரண்ட் ட்ட  மட்டும் தான் நம்ம மனசு விட்டு எல்லாத்தையும் பேசமுடியும். நீ என்னை ஹஸ்பண்ட் அப்படிங்கிற கேட்டகிரியில் வெச்சு பார்த்தேனா.,  என்ட்ட  உன்னால ப்ரீயா பேச முடியாது., சரியா முதல்ல  உன் ப்ரண்ட்ஸ் ட்ட எப்படி பேசுவீயோ  அப்படி பேசு.,  முதல்ல  நம்ம ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசிக்கலாம் சரியா”.,  என்று சொன்னான்.

அவள் சம்மதமாக மறுபடியும் தலையை அசைக்கவும்., “என்ன பேச கூடாது ன்னு., விரதமா” என்று கேட்டான்.

“இல்ல நான் இதுவரைக்கும்.,  நீங்க சொன்னீங்க இல்ல மனசு விட்டு பேசு ன்னு.,   நான் யார்கிட்டயும் மனசுவிட்டுப் பேசி இருக்கேனா ன்னு., யோசிச்சு பார்த்தேன்.  எனக்கு தெரிஞ்சு நான் யார்கிட்டயும் ரொம்ப பேசினது இல்லை., அப்படின்னு இப்பத் தோணுது., என்று சொன்னாள்.

“ஏய்.. நீ பேச மாட்டீயா.. இங்க வரும் போதெல்லாம் நான் உங்கிட்ட எவ்வளவு பேசுறேனோ… அவ்வளவு க்கு நீயும் பேசுவ.. உன்னோட ஹாஸ்டல், படிப்பு., கிளாஸ் அங்க நடக்குற சண்டை சமாதானம் எல்லாம் பேசுவீயே…  அப்புறம் ரொம்ப பேசினது இல்லை ங்கிற”.,  என்றான்.

“உங்ககிட்ட  பேசின அளவிற்கு யார்ட்டையும் பேசலை., இங்கே வராமல் இருந்த போது நான் பேசுறதையே மறந்துட்டேன் ன்னு நினைச்சேன். வீட்டிலும் யாரும் எதுவும் கேட்டா பதில் சொல்லுவேன்… ஸ்கூல்., காலேஜ் சமயம் படிப்பு மட்டும் தான் துணை., இப்ப தாத்தா ட்ட பிஸ்னஸ் பத்தி பேசுவேன்., மத்த படி என்னோட டைம் முழுக்க பிஸ்னஸ் ல போயிரும்”., என்றாள் கண்கலங்க.,

“இனிமேல் பேசு., அது தான் இப்ப நான் இருக்கேனே உனக்கு பேச., உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லு.,  அப்பதான் நீ ஃப்ரீயா இருப்ப”.,  என்று சொன்னான்.

அவனை மறுபடியும் நிமிர்ந்து பார்த்த உடன் அவன் சொன்னது “நான் காலையில் இருந்தே உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன்., நீ கொஞ்சம் குழப்பத்திலேயே இருக்க., மனசு விட்டு எல்லாத்தையும் பேசிட்டா.,  இந்த குழப்பம் ஓடிப் போயிடும்” என்று சொன்னவன் அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.,  ஏனோ அந்த அணைப்பு அவளுக்கு ஆறுதலை அளித்தது போல உணர்ந்தாள்.

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம்
தேடல்கள் தானே

பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்

தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை.

Advertisement