Advertisement

அத்யாயம் – 3
நிலவில் வளிமண்டலம் இல்லை. நிலவின் வெப்பநிலை -223 ‘c to 123’c  
நான் வளர்வதும் இல்லை தேய்வதும் இல்லை 
சுற்றிவரும் நீ தான் முடிவு செய்கிறாய் 
நான் வளர்வதாகவும் தேய்வதாகவும் 
இப்படிக்கு உன் –நிலா 
மூன்றாவது டாப்ஸை தன் மேல் வைத்து அழகு பார்க்கும் மதுவை பார்த்து சிரித்தான் மனிஷ்.  
“என்னாச்சு மது…? லாஸ்ட் ஒன் வீக்கா நானும் பாக்குறேன்,  பீயூட்டீ பார்லர் போற. பேசியல், ஹைர்கட், ஐபுரோ ட்ரிம், மஸ்கார, லிப்ஸ்டிக்,  இது எல்லாம் தாண்டி இப்ப  ஜீன்ஸ் டாப்ஸ் வரை வந்தாச்சு, என்ன ஆச்சு வழக்கமா சுடிதார் தான” என்றான் கேள்வியாய்.  
“ம்ம்… இன்னும் டூவீக்ஸ்ல தேனீ போறோம்ல அதுக்கான ஒத்திகை தான். நீ கூட உன்னை தயார் பண்ணிக்கோ. நல்ல ஸ்டைல்லா. அடுத்தவாட்டி நாம வெளிய போகும் போது கிட்ஸ் வேர்ல்ட் போய் ரக்சிகும் புது புது டிரஸ் வாங்கணும் சரியா ?”  
“ஹலோ மேடம்…! லோக்கல் பூஞ்சோலை போறத்துக்கு ஏதோ அமெரிக்கா போற மாதிரி பில்டப் கொடுக்குற ?” மனிஷ் கேலியில் இறங்கவும்,
“போடா இடியட்! நாம எங்க போனாலும் அங்க இருகிறவங்களை விடவித்யாசமா இருக்கனும். அப்பதான் கவனிப்பாங்க” மது பதில் அளித்து கொண்டே தன் தேடுதலில் கவனமாய் இருந்தாள்.
“எனக்கு என்னவோ மெண்டல் ஹாஸ்பிடலுக்கு போன் பன்னுவாங்கலோனு தோணுது.” என்றான் சிரிப்புடன். 
“யூ” அவள் கோபமாய் அடிக்க கை ஓங்க, “ஓகே! ஓகே! ரக்சிக்கு ப்ளே ஸ்கூல் முடிஞ்சி இருக்கும் போய் கூட்டீடு வரலமா” என்றவன் நியாபகப்படுத்த, “ம்ம்… போலாமே”  என உற்சாகமாக அவனுடன்கிளம்பினாள் மது மஞ்சரி.
கார் போக்குவரத்து நெரிசல் அற்ற சாலையில் வழுக்கி கொண்டு செல்ல ட்ரைவிங் சீட்டில் அமர்ந்திருந்த மனிஷ் பக்க வாட்டில் அமர்ந்திருந்த மதுவை ஓர பார்வை பார்க்க, அவள் புன்னகை உடன் சாலையை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள். 
மனிஷிற்கு என்னவோ இந்தியா  செல்ல போகிறோம் என்று தெரிந்த நாள் முதல் மது நாளுக்கு நாள் அழகாகி கொண்டே செல்வது போல் தோன்றியது.
ரக்சிதாவின் ப்ளே ஸ்கூல் வந்துவிட காரின் கதவுகளை திறக்கமுனைந்த மதுவை, “ஒரு நிமிஷம் மது! நீ இன்னும் அவன் பேர் என்ன…? ம்ம்ம்… அந்த ரத்ன வேலுவ லவ் பண்றியா ?” எனக் கேட்க, ஒரு விநாடி மனிஷ் முகத்தை மது உற்றுப் பார்த்தாள். 
“ஆர் யூ ஜோகிங் ?” என்று கேட்டுவிட்டு இறங்கி சென்று விட்டாள். விலகி செல்லும் மதுவின் முதுகை பார்த்த மனிஷின் முகத்தில் ஒரு கேலி புன்னகை அரும்பியது.  
“மின்னி” என்றபடி ரக்சிதா ஓடி வந்து கட்டி கொள்ள தற்சமயம் உள்ளதெல்லாம் மறந்து போக, “ஹாய்! ரக்சி வாட்ஸ் ஹப்பேன் இன்யுவர் கிளாஸ் டுடே “என்று குழந்தையுடன் மூழ்கினாள். 
மனிஷ் அடுத்தடுத்து  தன் மனதில் தோன்றிய கேள்விகளை புதைத்து கொண்டான். வழமையான உற்சாகத்துடன் நாட்கள் செல்ல, மனிஷ் இந்தியா போவதற்கான  பாஸ்போர்ட், வீசா என அனைத்தையும் தயார் செய்திருந்தான்.
பயணத்திற்கு இன்னும் ஒரு வாரமே மீதம் இருக்க, எவ்வளவு மறைக்க முயன்றும் மதுவின் முகத்தில் பதட்டம் கூடித் தெரிந்தது. மனிஷ் தான் விடாமல் கிண்டல் அடித்து கொண்டிருந்தான். 
“மேடம்! கல்யாணம் உங்களுக்கு இல்ல சௌபர்ணாக்கு. நீங்க இப்படி மேக்கப் பண்ணிகிட்டே இருக்கீங்க, மாப்பிள்ளை பாவம் கன்ப்யூஸ் ஆய்ட போறாரு’’ என அவளை விடாது வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.  
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ என்ன ஓட்றத விட்டுட்டு கிப்ட் என்ன வாங்கலாம்னு யோசி…” என்று அவனை பயணத்தின் மீதுகவனம் கொள்ள செய்தாள். ஒரு வழியாய் ஒரு ஜோடி வைர மோதிரத்தோடு, அவர்களின் விமான பயணம் ஆரம்பித்தது. 
நடுவில்இருமுறை விமானம் மாறி, ரக்சிதாவின் கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் சொல்லி, அவர்களின் பயணம் சென்னை விமான நிலையத்தில்முற்று பெற்றபோது எல்லாவற்றையும் மீறி மதுவின் முகத்தில் ஒரு ஆனந்தம் குடி பெயர்ந்தது. 
அத்யாயம்  – 4
நம் சூரிய குடும்பத்தில் மொத்தம் 166 நிலாக்கள் உள்ளன.
உன்னால் தான் பிரகாசிகிக்றேன் –ஆனால்
உன் போல் தகிப்பதில்லை ஒரு போதும் 
இப்படிக்கு – உன் நிலா   
“ஏய் சௌமி நாளையோட கடைசி நலங்கு முடியுதில்லடி. உங்க அண்ணி எப்ப தான் வாறாங்களாம்.” சௌமி உடன் பயிலும் தோழி வனிதா வினவினாள். 
“அவுகளாவது இங்க வாறதாவது. ஏதோ இவ சொல்லிட்டாளேன்னு வரேன்னு போக்கு காட்டி இருப்பாக. நீ வேணா பாரேன், கல்யாணம்முடிஞ்சி கரெக்டா ஒரு ரெண்டு மணி நேரத்துல கிப்ட் கொரியர்ல வரும்..”என அத்தை மகள் பூரணி பதில் அளிக்க, 
“ரெண்டு பெரும் கொஞ்சம் வாயை மூடுங்கப்பா.எங்க மதனி சொன்ன சொல் மாற மாட்டாக. வரேன்னு கண்டிப்பா வருவாக. ரெண்டு பேரும் வளவளனு பேசாம என்அலங்காரத்தை கவனிங்க சரியா”  என அவர்களின் பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தாள். அதற்கு மேல் அங்கே பேச்சிற்கு நேரம் இல்லாமல் போக, இரண்டாம் அத்தை செண்பகத்தின் நலங்கு நடைபெற துவங்கியது.
கல்யாண வீட்டின் ஆரவாரத்தில் ரத்ன வேலுவின் முகத்தை கண்டதும் சௌமியின் முகம் மலர குறிப்பாலேயே அவனை தன் அருகே  அழைத்தவள், அவன் அருகே வந்ததும் அவன் காதருகே குனிந்து,
“அண்ணா ! மதனி வருவாக தான” அவள் சந்தேகமாய் கேட்க, “உம் மதனி எப்பவோ இந்தியா வந்தாச்சு “ என்ற அவன் பதிலில் “ஹா” சின்னதாய் ஆச்சர்யமானாள். 
“எங்கண்ணா இங்க வந்தாச்சா” என அவள் தன் விழிகளை சுழற்ற, “இன்னும் இல்ல. அநேகமா உன் அலங்காரத்த பாக்க பயந்துகிட்டு சென்னைலையே தங்கிட்டா போல இருக்கு’’ என்றுவிட்டு சிரித்தான் வேலு. 
“அண்ணா!” சௌமி தலையை கோபத்தில் உருட்டவும், “ஏய்! தலையை ரொம்ப சிலுப்பாத  என்ன என்னத்தையோ சொருகி வச்சி இருக்காக. கழண்டு வந்துடபோகுது.” சௌமியின் கண்களில் கோபக்கனல் தெரியவும் ரத்ன வேலுவின் முகம் மாறியது.
“இங்க வராம எங்க போக போறா…? இன்னும் அதே வீம்புதேன். என் கணக்கு படி, நாளைக்கு நைட் இங்க இருப்பா” சொல்லிவிட்டு அவன் கூட்டதில் கலந்து விட, சௌமிக்கு ரத்னவேலுவை நினைத்து ஒரு புறம் வருத்தம் இருந்தாலும், மறுபுறம் மதுவை நினைக்கையில் ஆத்திரம் வந்தது. 
“என்ன பெண் இவள்…? கட்டிய கணவனை கண் நிறைந்த சொந்தங்களை எல்லாம் விட்டு விட்டு கண்காணாத தேசத்திற்கு ஓடி மறைந்ததோடு இல்லாமல், யாருடனும் தொடர்பும்கொள்ளாமல் எல்லோரையும் வதைக்கிறாள்.” சௌமியின் எண்ண  ஓட்டத்தை தடை செய்வது போல் அவளை தோழிகள் படை சூழ்த்து கொள்ள சௌமி நடப்பிற்கு திரும்பினாள்.
“மின்னி நாம எங்க போறோம் “ தன்னிடம் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கும் ரக்சிதாவை கனிவுடன் நோக்கினால் மது.
 “உன்னோட கிராண்ட்மா வீட்டுக்கு டா”  தலையை ஆட்டிக்கொண்டே கால்டாக்சியின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள் ரக்சி. 
பிறந்ததில் இருந்தே இலண்டனை பார்த்து வளர்ந்தவளுக்கு அந்த கிராமத்து சூழல் அளப்பரிய ஆச்சரியத்தை உண்டு பண்ண, சுவாரசியமாய் பச்சை வயல்களையும், ஆற்று பாலத்தையும், மேய்ச்சல் ஆடுகளையும்,கடந்து செல்லும் மனிதர்களையும், விழி விரியபார்த்து கொண்டே, அது என்ன ? இது என்ன ? என்று தொடர் கேள்வி கணைகளை வீசி கொண்டே வந்தாள். 
மஞ்சரியும் முகம் சுளிக்காமல் விடையளித்து கொண்டே வந்தாள். மனிஷ் இந்த பயணத்தில் அவர்களுடன் கலந்து கொள்ளவில்லை. சென்னை வந்தவுடன் கோயம்புத்தூரில் நண்பன் ஒருவனை சந்தித்து விட்டு தேனீ வருவதாக சொல்லிவிட்டு சென்று விட்டான்.
சென்னை வந்ததில் இருந்து மனிஷ் முகம் சற்று கடினப்பட்டார் போல் தெரிய மதுவும் எதுவும் சொல்லவில்லை. தான் தேனீ செல்வதில் மனிஷிற்கு விருப்பம் இல்லாததால் இப்படி நடந்து கொள்கிறான் என்று எண்ணியவள் ரக்சியுடன் தன் பயணத்தை தேனீ நோக்கி தொடங்கி விட்டாள்.
“அம்மா! பாட்டி வீட்ல அப்பா இருப்பாங்களா அம்மா…?” ரக்சியின் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்த மது, “ரக்சு அம்மாக்கு  ரொம்ப டயர்ட்டா இருக்குமா. அம்மா கொஞ்ச நேரம் துங்க வா” என அனுமதிகேட்பது போல் சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
மதுவின் சிந்தனை பின் நோக்கி நகர்ந்தது. ரக்சி மற்ற குழந்தைகளை போல் அப்பா வேண்டும் என்று நச்சரித்ததில்லை. 
ஆனால் மனிஷ் “ரக்சிதா அப்பா பத்தி கேக்குறதுக்குள்ள நாமளா ஒரு அப்பாவ ரெடிபண்ணி வீடியோ கான்பரன்ஸ்ல காட்டிடலாம். டாடி ஆர்மில இருகார். லீவ் கிடைக்கும் போது வருவார்னு சொல்லிடலாம். ஓகே தான”  என வினவ மஞ்சரி தலை ஆட்ட மட்டும் செய்தாள். 
உடனே தன்னுடைய பழைய கல்யாண புகைப்படத்தை தேடி எடுத்து மனிஷிடம் கொடுத்தாள். அவனும் ரத்ன வேலுவின் உருவத்தை எடுத்து அதற்கு ஒரு குரலும் பொருத்தி ரக்சிதாவின் அப்பா ஆக்கி விட்டான்.
அதன் படி ஞாயிற்று கிழமைகளில் அவனுடைய அறைக்கு செல்பவள் மாலை தான் திரும்புவாள். வந்தவுடன் அப்பா அதை சொன்னார் இதை சொன்னார் என்று பெரிய சொற்பொழிவே நடக்கும். மஞ்சரியும் புன்னகையுடன் கேட்டு கொள்வாள். 
எப்பொழுதாவது வீட்டிற்கு விளையாட வரும் சார்லஸ், பெல்லா இவர்களிடம் எல்லாம் “மை டாடி இஸ் சோ  ஸ்ட்ராங் அண்ட் சோ டால்’’ என்று எதையாவது சொல்லி கொண்டு இருப்பாள். ரக்சிதா பள்ளி செல்ல தொடங்கியது முதல் ப்ரம் டாடி என்று ஒரு பரிசு தூதஞ்சல் (கொரியர்) வர தொடங்கியது. 
முதலில் மஞ்சரி அதை கண்டு திகைத்தாலும், பிறகு மனிஷ் இதுவும் தன்னுடைய ஏற்பாடு எனவும் சமாதானம் அடைந்தாள்.
டாக்சி ‘கீரீச்’ என்ற சத்தத்துடன் நிற்கவும் ,மஞ்சரி தன் நினைவுகளில் இருந்து மீண்டு நடப்பிற்கு வந்தாள். டாக்சி கதவுகளை திறந்து வெளியேறியவள் தன் உடமைகளை இறக்கி வைத்துவிட்டு டாக்சிக்கு பணம் கொடுத்து கொண்டிருக்க, ரக்சிதா மஞ்சரியை தாண்டிக் கொண்டு ஓடினாள். உடமைகளை எடுத்து கொண்டிருந்த மஞ்சரி  ரக்சிதாவை தடுக்கவில்லை. 
ஆனால் வாகனம் கிளம்பியதும் நிமிர்ந்து பார்த்தவள் நிலை குலைந்து  போனாள்.

Advertisement