Advertisement

காதல் பௌர்ணமி.
நம் சூரிய குடும்பம் தோன்றி 40-50 மில்லியன் ஆண்டுகள் கழித்தே நிலா தோன்றியது. நிலா தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன.
கரடு முரடான கன்னிகை
கடன் வாங்கியும் பிரகாசிக்கிறாள் – நிலா 
அத்தியாயம் -1
இடம் –லண்டன் 
மது மஞ்சரி தன் கணினி முன் அமர்ந்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாள். 
“யாரோட அப்படி சீரியசா சாட்டிங் போய்டிருக்கு மேம் ?” என்ற குரலில் கலைந்தவள் திரும்ப அங்கே மனிஷ் புன்னகையுடன் நின்றிருந்தான். அவன் சுண்டு விரலை இடது கையிலும் வலது கையில் அவன் சற்று முன் வாங்கி கொடுத்த கோன் ஐஸ்கீரிமை சுவைத்தபடி இரண்டரை வயதான ரக்சிதா நின்று கொண்டிருந்தாள். 
உடனே மதுவின் முகம் பொய் கோபம் பூசி கொண்டு “ வாட் ஈஸ் திஸ் மனிஷ்? எத்தன தடவ சொல்லி இருக்கேன் ரக்சிக்கு ஐஸ்கிரீம் வாங்கி தாரதீங்கன்னு. ரக்சிதா கம் ஹியர்” அவள் குழந்தையை தன் பக்கம் இழுக்க முயல நடுவில் புகுந்த மனிஷ் அப்பாவித்தனமாய் முகத்தை வைத்து கொண்டு, 
“சாரி மேடம்! இன்னைக்கு ரக்சிதா கூட புட்பால் விளையாடுனேனா… ஜஸ்ட் 2 கோல்ல ஷி ஈஸ் வின்னிங். நான் தோத்ததால ரக்சிதா கேட்டபடி ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துட்டேன். சார…! சாரி…ஓகே”.
கட்டுப்படுத்தியும் முடியாமல் மனிஷ் பிளாட்டின் புட்பால் ஆடுகளம் நினைவிற்கு வர வாய்விட்டு சிரித்தவள் “சின்னதா ரெண்டு கட்டம்,  அந்த பக்கம் குப்பை கூடை  இந்த பக்கம் உங்க ஊஞ்சல் கூடை …அப்பப்பா…. ரக்சிதாவை விட நீங்க தான் வாலு.. ஏதோ ஒரு காரணம் சொல்லி வாரத்துக்கு ரெண்டு ஐஸ்கிரீம். ம்ம்….சரி காபி போடவா” என்று அவனை கேட்டு கொண்டே ஐஸ்கிரீமை சுவாக செய்து முடித்திருந்த ரக்சிதாவை கை கழுவ அழைத்து சென்றாள்.
” ம்ம்… டபுள் ஸ்ட்ராங்கா ” ஒரு கணம் அந்த வார்த்தையில் உறைந்தவள் உடனே சமநிலைக்கு வந்து பால் பவுடர் கொண்டு காபி தயாரிக்க துவங்கினாள். 
ஹாலில் ”மானிஷ் டிதும்! டிதும்!” என்று கூவிக்கொண்டே ரக்சிதா மனிஷ் வயிற்றில் குத்த பாவபட்டவன்  போல் முகத்தை வைத்து கொண்டு கீழே விழுந்து கொண்டிருந்தான். கேட்டால் “டபிள் யூ டபிள் யூ எப் ல ரக்சிதா பின்னி எடுக்குராங்களே எல்லாம் மேடம் கொடுக்குற ட்ரைனிங்கோ” என்று இவளை வம்பிற்கு இழுப்பான்.
காபி ரெடியாகிவிடேன் என்பதை உணர்த்த காற்றில் அதன் மணத்தை பரப்ப “ம்ம்.. வசமே தூக்குதே” என்றபடி கிச்சனுக்குள் நுழைத்தவன் அங்கிருந்த கேரட் ஒன்றினை எடுத்து கடித்தான். 
அதை பறிக்க போனவள் அவன் கையை மேலே உயர்த்தவும்,”ஐயோ ! அதை கழுவிட்டு சாப்பிடுங்களேன்.எவ்ளோ கிருமி இருக்குமோ ” என , “ம்ம்… அதெல்லாம் என்ன ஒன்னும் பண்ணாது அப்படியே எதாவது ஆனாலும் நீங்க சும்மா இருப்பீங்களா! அய்யோட பெரிய பெரிய டேபிலெட்ஸ் கலர் கலரா இன்ஜெக்சன்ஸ் போன மன்த் பீவர் வந்தப்ப பழி வாங்கிடீங்களே ! அதுக்குன்னே காரட்டை கழுவிட்டா பெட்டெர் தான்” அவசரமாய் அவன் ஓடி சென்று கேரட் கழுவி வந்தான்.
 மது சிரித்து கொண்டே காபி கோப்பைகளை ஹாலிற்கு எடுத்து வர “மின்னி ஓவா “ என்று ஓடி வந்த ரக்சிதா ஒரு கப்பை எடுக்க, “அது காபி ரக்சி திஸ் இஸ் யுவர்ஸ் “ என்று ஓவல் கப்பை குழந்தையிடம் அது சமர்த்தாக அமர்ந்து குடிக்க தொடங்கியது. 
மனிஷும் தன் பங்கிற்கு ஒரு கப்பை எடுத்து கொள்ள மேஜை முன் அமர்திருந்த மதுவோ, ஏதோ சிந்தனையுடன் கப்பில் ஸ்பூனை விட்டு கலக்கி கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்தவன், “ரக்சிதா நாம ஒரு விளையாட்டு விளையாடலமா? யார் பஸ்ட் கப்பை காலி பண்றாங்கனு பாக்கலாமா?  ம்ம்…. ” அவன் வேகமாக குடிப்பது போல் நடிக்க ரக்சிதா முழு வீச்சில் ஓவலை காலி செய்துவிட்டு “ ஆம் பஸ்ட் ஆம் பஸ்ட்” என குதிக்க தொடங்கினாள்.
“ஐயோ மனிஷ் இந்த வாட்டியும் காலியா. அடடா டைம் 9  ஓ க்ளாக்கா கார்ட்டூன் சேனல்ல டாம் அண்ட் ஜெரி போடுவாங்களே “அந்த வாக்கியத்தை அவன் முடிக்கும் முன் “ஹே” என்று கத்தி கொண்டே ரக்சி அவள் அறையை நோக்கி ஓடினாள். 
“இப்போ பேசலாமா மது?” மணிஷின் மாறி விட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அவன் கையில் இருந்த காபி கோப்பையை சுட்டிகாட்டி ,”முதல்ல காபியை குடி அப்புறம் பேசலாம்”  என்றுரைக்க,  காபியை பருகி கொண்டே அவள் சுற்றும் முற்றும் பார்வையால் மகளை தேடினாள்.
“ரக்சி டிவில கார்ட்டூன் பாக்குறா” என்ற மனிஷ் ரக்சியும் அவனும் அருந்திய காலி கோப்பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வசதியாக அவள் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து கொள்ளவும், அவள் காபியை குடித்து முடிக்கவும் சரியாய் இருந்தது.
“என்ன கம்ப்யூட்டர் முன்னாடி உட்கான்திருந்தப்ப புருவம் இப்படி இருந்துச்சி..?” என அவன் சுருக்கி காட்டி “எனி மெசேஜ் ப்ரம் இந்தியா “என வினவவும், ஆழமாய் மூச்செடுத்தவள் எழுத்து சென்று ஜன்னல் அருகே நின்று கொண்டாள். 
“நினச்சேன் ஷிட்” கோபமாய் தரையை உதைத்து விட்டு எழுத்து செல்ல யத்தனிக்க, “மனிஷ்! ப்ளீஸ்..! நான் சொல்றத கொஞ்சம் கேள். சௌமிக்கு நெக்ஸ்ட் மன்த் மேரேஜ்.அதுக்கான மேரேஜ் இன்விடேசன் தான் மெயில்ல வந்திருந்தது. அங்க இருக்குற எல்லோருக்கும் ரக்சியை பாக்கணுமாம். முக்கியமா ரக்சியோட பாட்டிக்கு..”
“சோ மத்த எல்லாரையும் காரணம் காட்டி நெக்ஸ்ட் மன்த் அந்த ரௌடிய பாக்க ரக்சிதாவோட இந்தியா போற அப்படிதான.  ஆல் தி பெஸ்ட்..! நான் வேணா நாளைக்கே ஓபன் டிக்கெட் அப்ளே பண்ணட்டுமா? சரி வரேன்…” என்று கோபத்தோடு கிள்ளம்பியவனை மறித்து,
“மனிஷ்..! ப்ளீஸ்..! அண்டர் ஸ்டான்ட் மீ. அவர் பண்ண பாவத்துக்கு அவர் சொந்தகாரங்கெல்லாம் என்ன பண்ணுவாங்க? யூ நோ சௌமி எனக்கு தங்கை மாதிரி மட்டும் இல்ல என்னோட பெஸ்ட் பிரண்ட். அங்க போக நான் ஏன் அவர பாத்து பயப்படனும். ஜஸ்ட் ஒரு டூ டேஸ் நாம இந்தியா போயிட்டு மேரேஜ் அட்டென் பண்ணிட்டு உடனே திரும்பிடலாம் சரியா?” கேள்வியாய் அவனை நோக்கினாள்.
“நாமளா?” என்று வியந்தவன் கோபம் தணிந்தவனாய்,”நாம அங்க போன கண்டிப்பா அவன் அங்க இருப்பான் ஏனா நடக்கப் போறது அவன் தங்கச்சி கல்யாணம்.” என குரலில் கடினத்தை தேக்கி முடித்தான்.
“சோ வாட்! நாம கண்டிப்பா போறோம். என்னோவோ நான் அவரை பிரிஞ்சி கரஞ்சிட்டு இருப்பேனும், குழந்தை அப்பாவோட அன்புக்கு ஏங்கிட்டு இருக்கும்னும் நினைச்சிகிட்டு இருப்பார்.நாங்க அப்படி இல்ல.நல்லா சந்தோஷமா இருக்கோம்னு அவர்கிட்ட நீருபிகணும் இல்லையா..? அதனால நீயும் கூட வர” 
இதை சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே,மது மஞ்சரியின் கண்கள் சிவந்து விட்டிருக்க அவளின் கோபத்தை உணர்ந்த மனிஷ் அவளை சோபாவில் அமர்த்தி விட்டு குளிர்ந்த நீரை கொண்டுவந்து கொடுத்தான்.
அவள் அதை அருந்தி முடிக்கவும், டம்ளரை வாங்கி வைத்துவிட்டு, “காம் டவன் மஞ்சரி. ப்ளீஸ் கூல்…! எப்பவும் உன் கூட நான் இருப்பேன் ஓகே.” என்று அவள் கைகளை பற்றி அழுத்த, கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே,
”நான் தோக்க கூடாது மனிஷ்! எப்பவும்!”அவள் விசித்து கொண்டே சொன்னாள். அவள் முகம் ரக்சியை நினைவு படுத்த அவளை ஆறுதலாய் தோளில் தட்டியவன்,”நீ எப்பவுமே தோக்கமாட்ட..! ஓகே மது குட் நைட்…! போய் தூங்கு.” என்றுவிட்டு செல்ல, சென்றவன் முதுகை வெறித்து கொண்டு சிந்தனை வயப்பட்டவளாய் அமர்ந்திருந்தாள் மது மஞ்சரி.
பிறை வளரும்.

Advertisement