Advertisement

ஹரியை பார்த்து முறைத்து விட்டு “அவன் பக்கத்துல இன்னொரு பையன் இருந்தான். அவன் தான் நம்ம மேடத்தோட ஹீரோ”, என்று சொன்னாள் நந்தினி.
 
“ஏய் சும்மா இரு நந்து. அவங்க என்ன நினைப்பாங்க?”, என்று சொன்னாள் பூரணி.
 
“ஒன்னும் நினைக்க மாட்டாங்க. பாரு எல்லாரும் எப்படி கதை கேக்காங்கன்னு”, என்று சொன்னாள் நந்திதா.
 
“அப்புறம் என்ன நடந்தது மா?”, என்று கேட்டார் சுதாகர்.
 
“இருங்க மாமா சொல்றேன். அந்த ஹரி பக்கத்துல இருந்தது யாரு தெரியுமா? நம்ம முரளி தான்”
 
“என்ன மா சொல்ற?”
 
“ஆமா அத்தை. உங்க பிள்ளையோட பிரண்ட் முரளி தான். அப்பவே அவர் மேல மேடம்க்கு கிரஷ். லவ்சோ லவ்ஸ் தான். இடைல இருந்த நானும் அந்த கிரிஷ் சும் இன்டெர் மெடியேட்டர். ஒரு வாரம் சேந்து இருந்த பறவைகள் அடுத்து பிரிஞ்சிருச்சு. எனக்கு அப்பவே இவங்க சேரணும்னு ஒரு ஆசை. அதனால எப்படியாவது சேந்தா எனக்கு சொல்லணும்னு என்னோட அட்ரஸ் இவ கிட்ட கொடுத்துட்டு நாங்களும் பிரிஞ்சிட்டோம். ஆனா அப்புறம் தான் எங்க நட்பு லெட்டர்ல வளந்துச்சு”
 
“செம லவ் ஸ்டோரி மா. ஆனா உன் பிரண்டுக்கு தெரியுமா? நம்ம முரளிக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்குறது?”, என்று பூரணி தலையில் குண்டை தூக்கி போட்டார் சுதாகர்,
 
அதிர்ச்சியாக நந்திதாவை பார்த்தாள் பூரணி.
 
“அப்பா நீங்களுமா விளையாடுறீங்க?”, என்ற பார்வையை சுதாகரை பார்த்து வீசினான் ஹரி.
 
“நிஜமாவா நந்து? நீ என்கிட்ட இந்த விசயத்தை சொல்லவே இல்லை”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் பூரணி.
 
“என்ன பதில் சொல்ல?”, என்று தெரியாமல் ஹரியை பார்த்து விழித்தாள் நந்திதா.
 
“நீ தான ஆரம்பிச்ச. இப்ப இப்படி தான் முழிக்கணும்”, என்ற பதில் பார்வையை கொடுத்தான் ஹரி.
 
அழுவது போல முகம் வைத்திருந்த பூரணியை பார்த்த விஜி “அவர் சும்மா சொல்லறாரு மா. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நாங்க எல்லாரும் அவனுக்கு தான் பொண்ணு பாத்துட்டு இருக்கோம்”, என்று சொல்லி அவள் நெஞ்சில் பாலை வார்த்தாள்.
 
“போங்க அங்கிள். இப்படியா பண்றது? ஒரு நிமிசத்துல என் இதயமே நின்னுட்டு”, என்று சிரித்தாள் பூரணி.
 
“இன்னும் அவனை விரும்புறியா?”, என்று கேட்டார் சுதாகர்.
 
“அப்படினு சொல்ல முடியாது அங்கிள். அந்த வயசில் வந்த முதல் கிரஷ். ஆனா எப்பவும் மறக்க முடியாததா நெஞ்சில் பதிஞ்சிட்டு. வீட்ல கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா அவன் தான் கண் முன்னாடி முதலில் வந்தான். ஆனா அதை சொல்லவா முடியும்? அவங்க சந்தோஷத்துக்காக சரின்னு சொல்லிட்டேன். அப்ப உண்மையான லவ் இல்லை தான? அப்படி இருந்தா வேற பையனை பாக்க சொல்லிருக்க மாட்டேனே”
 
“இல்லை மா. உன் மனசுல அவன் தான் இருக்கான் இன்னமும். இப்ப நீ உங்க அம்மா, அப்பாவுக்காக சம்மதம் சொல்லிருந்தாலும் கடைசி வரைக்கும் உன் மனசுல முரளி இருப்பான். இது கூட காதல் தான். இன்னும் சொல்ல போனா நிறைய பேரோட வாழ்க்கை இந்த மனநிலையில் தான் இருக்கும். முரளிக்கு நீ தான் பொண்ணு சரியா? அவனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். சுகந்தி எனக்கும் பிரண்ட் தான். அவ கிட்ட நானே உன்னை பொண்ணு பாத்துட்டேன்னு சொல்றேன். அவ ஜாதி, அந்தஸ்து எல்லாம் பாக்க மாட்டா. ஏன்னா அவ கஷ்ட பட்டப்ப அவ சொந்தங்கள் உதவ வரலை. அதனால அவ எங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பா. நீ தான் பொண்ணுன்னு நான்  சொன்னா கண்டிப்பா ஒத்துக்குவா. ஆனா முரளி என்ன நினைக்கிறான்னு நீ தான் கேக்கணும்”
 
“அதுக்கு தான் அத்தை இவளை இன்னைக்கு இங்க வர சொல்லிட்டு, முரளி அண்ணனையும் லஞ்சுக்கு வர சொன்னோம். அந்த அண்ணா வந்து என்ன சொல்றாங்கன்னு கேப்போம்”, என்றாள் நந்திதா.
 
எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு ஹரி டிவி ஹாலில் டிவி பார்க்க ஆரம்பித்தான். சுதாகர் தன்னுடைய அறைக்கு சென்று விட்டார்.
 
“நந்து, பூரணியை உங்க ரூம்க்கு கூட்டிட்டு போய் பேசு. அப்புறம் பதினோரு மணிக்கு மேல மதிய சமையல் ஆரம்பிக்கலாம் சரியா?”, என்று சொன்னாள் விஜி.
 
“சரி அத்தை. வா பூரணி”, என்று அழைத்து கொண்டு போனாள் நந்திதா.
 
“நான் உன் மேல கோபமா இருக்கேன் நந்து. உன்னோட கல்யாணத்துக்கு கூட என்னை கூப்பிடலை பாத்தியா? நிச்சயம் ஆகிட்டுன்னு தான சொன்ன? அப்புறம் ஏன் போன் பண்ணல? உன்னோட நம்பருக்கு பண்ணாலும் சுவிட்ச் ஆப்ன்னு வருது”, என்றாள் பூரணி.
 
“என்னோட கல்யாணம் எந்த நிலைமைல நடந்துச்சுன்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்ட பூரணி. இரு எல்லாம் சொல்றேன். அதுக்கு முன்னாடி ஆல்பம் பாரு”, என்று எடுத்து கொடுத்தாள்.
 
ஒவ்வொரு போட்டோவாய் பார்த்து கொண்டு வந்தாள் பூரணி.  “ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க நந்து. ஆனா உன் வீட்டுக்காரரை எங்கயோ பாத்த மாதிரியே இருக்கு. ஆனா எங்கன்னு தான் தெரியலை”, என்றாள் பூரணி.
 
“உனக்கு உன்னோட ஆள் முகம் தான் நினைவு இருக்கும். அவர் பக்கத்துல இருந்த என் வீட்டுக்காரை எப்படி நினைவு இருக்கும்?”, என்று சிரித்தாள் நந்திதா.
 
“என்ன நந்து சொல்ற?”
 
“உனக்கு ஹரியை இப்பவும் நினைவு இல்லையா? எனக்கே நினைவு இல்லாதப்ப உனக்கு எப்படி நினைவு இருக்கும்? ஸ்கூல் படிக்கும் போது முரளி பக்கத்துல இருந்த ஆளை, நினைவு படுத்தி பாரு”
 
“ஏய் நந்து, இது அப்ப கிரிஷ் அண்ணாவா?”
 
“ஹ்ம்ம் ஆமா. நீயாவது போட்டோ பாத்து முகம் பாத்த மாதிரி இருக்குனு சொல்லிட்ட. நான் கண்டே பிடிக்கலை தெரியுமா?”
 
“எப்படி நந்து இது? எனக்கு ஸ்வீட் ஷாக்கா இருக்கு”
 
“ஹா ஹா நீ பாத்து முடி. எல்லாம் சொல்றேன்”
 
அடுத்து வரிசையாக பார்த்து கொண்டே வந்த பூரணி, ஒரு பக்கத்தில் அப்படியே நிறுத்தி கூர்மையாக பார்த்தாள்.
 
அவளுடைய முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் நந்திதா.
 
ஆனால் பூரணி எதுவுமே சொல்லாமல் அடுத்த பக்கத்தை திருப்பினாள்.
 
“என்ன பூரணி ஒன்னுமே சொல்லாம திருப்பிட்ட?”
 
“என்ன சொல்லணும்?”
 
“அந்த பக்கத்தில் யார் இருக்கான்னு தெரியலையா?”
 
“தெரியுமே”
 
“யார் இருக்கா?”
 
“முரளி”
 
“அட பாவி கண்டு பிடிச்சிட்டியா? அப்புறம் ஒன்னுமே சொல்லலை”
 
“அது அது வந்து….”
 
“உன்னை வெக்க படாதன்னு சொன்னேன்ல பூரணி, என்னனு சொல்லு”
 
“முரளி இப்ப இன்னும் சுமார்ட்டா தெரியுறார். அப்படியே போட்டோக்கு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு. உன் முன்னாடி செய்யவா முடியும்? அதான்”
 
“அட பாவி. நீ வேகமா தான் டி இருக்க”
 
“அதை விடு. ஆனா இதுல எதுக்கு டி உன்னோட வீட்ல இருந்து யாருமே இல்லை. சுமதி அம்மாவை கூட காணும். உன் தம்பி, அப்பா, அண்ணன், அக்கா, அக்காவோட குட்டி யாருமே இல்லை”
 
“யாரையும் கூப்பிட கூடாதுன்னு, நான் தான் சொல்லிட்டேன் பூரணி”
 
“நந்து!!!!”
 
“ஆமா உனக்கு முழுசா சொன்னா தான் தெரியும். உன்கிட்ட சொன்னேன்ல நிச்சயம் ஆகிட்டுனு. அந்த கல்யாணம் நின்றுச்சு”, என்று ஆரம்பித்து பழைய கதையை எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள் நந்திதா.
 
அவள் சொன்னதை கேட்டு மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், இப்ப அழகான வாழ்க்கை கிடைத்தது நிம்மதியாக இருந்தது பூரணிக்கு.
 
“இப்பவாது அவங்களை மன்னிச்சிறேன் நந்து. தெரியாம அந்த அயோக்கியன் சொன்னதை நம்பிட்டாங்க. அப்புறம் வருத்த பட்டுட்டு தான் இருப்பாங்க”, என்றாள் பூரணி.
 
“விடு பூரணி. என்னோட காயங்கள் எல்லாம் பெருசு. அதை மறுபடியும் நான் கீறிக்க விரும்பலை. அவங்க வாழ்க்கை அவங்களுக்கு. என்னோட வாழ்க்கை எனக்கு அவ்வளவு தான்”
 
“ஹ்ம்ம் சரி விடு.  இரு நான் கிரிஷ் அண்ணனை கண்டு பிடிச்சிட்டேன்னு சொல்லிட்டு வரேன்”
 
“இரு நானும் வரேன். அப்படியே முரளி சாரையும் சீக்கிரம் வர சொல்லணும்”, என்று எழுந்தாள் நந்திதா.
 
“கிரிஷ் அண்ணா உங்களை கண்டு புடிச்சிட்டேன் தெரியுமா?”, என்று சிரித்தாள் பூரணி.
 
பதிலுக்கு சிரித்த ஹரி “நீயாவது கண்டு புடிச்சிட்ட. ஆனா இந்த மேடம் கண்டு புடிக்க ரொம்ப கஷ்ட பட்டாங்க”, என்று சிரித்தான் ஹரி.
 
“நம்பவே முடியாத சாக் எல்லாம் இன்னைக்கு நடக்கு”, என்று சிரித்தாள் பூரணி.
 
“சந்தோசமா இருக்கல்ல? அது போதும் மா”
 
“சரி ஹரி. முரளி அண்ணா எப்ப வருவாங்க? மேடம் ரொம்ப துடிக்கிறாங்க”, என்றாள் நந்திதா.
 
“இரு நந்து கால் பண்ணி கேக்குறேன்”, என்று சொல்லி போன் எடுத்து முரளியை அழைத்தான்.
 
“எங்க டா முரளி இருக்க? இன்னைக்கு வீட்டுக்கு வர தான?”, என்று கேட்டான் ஹரி.
 
“ஹ்ம்ம் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்”, என்றான் முரளி.
 
“அப்ப இப்ப வந்துருவியா?”
 
“ஹி ஹி இல்லை மச்சான். இப்ப தான் வீட்ல இருந்தே கிளம்புறேன்”
 
“சரி சரி சீக்கிரம் வந்து தொலை”
 
“ஆமா நீ எதுக்கு இன்னைக்கு இவ்வளவு ஆர்வமா என்னை கூப்பிடுற?”
 
“ஹ்ம்ம் உனக்கு பொண்ணு பாத்து வச்சிருக்கேன். அதை காட்ட தான். எவன் டா இவன்? சும்மா பாக்க தான் கூப்பிட்டேன். சீக்கிரம் வா வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தான் ஹரி.
 
“இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் பூரணி அவன் வர. அது வரைக்கும் வெயிட் பண்ணு. வந்த உடனே நீயும் நந்துவும் அவன் கிட்ட எதுவும் உளறிராதீங்க. அவனுக்கு பூரணியை நினைவு இருக்கு. ஆனா அப்ப குண்டா இருந்ததுனால பூசனினு சொல்லுவான். இப்ப கண்டிப்பா அவனால கண்டு பிடிக்க முடியாது”, என்று சிரித்தான் ஹரி.
 
“சரி அண்ணா. நான் நந்துவோட பிரண்டாவே இருக்கேன்”
 
“ஹ்ம்ம் சரி மா. அப்புறம் நந்து அம்மா கிட்ட என்ன வாங்கணும்னு கேட்டுட்டு வா. நான் கடைக்கு போய்ட்டு வரேன்”
 
“அத்தை அப்பவே சொல்லிட்டாங்க ஹரி. சிக்கன் வாங்கி கோங்க. அப்புறம் மாமாக்கு மீன் அவ்வளவு தான். மித்தது எல்லாம் இருக்கு”, என்றாள் நந்திதா.
 
“சரி இப்பவே போய் வாங்கிட்டு வந்துறேன்”, என்று சொல்லி தன்னுடைய அறைக்குள் சென்றான் ஹரி.
 
“இங்க உக்காரு பூரணி. இதோ வரேன்”, என்று சொல்லி விட்டு ஹரி பின்னே சென்றாள் நந்திதா.
 
அவள் அப்படி வருவாள் என்று தெரியுமாதலால் காத்திருந்தவன், வந்தவுடனே அவளை இறுக்கி அணைத்தான்.
 
“ஐயோ என்ன ஹரி இது? பகல்ல விடுங்க”, என்று அவன் கை பிடியில் இருந்து விலக பார்த்தாள் நந்திதா.
 
“விடுறதா? பிடிச்சிக்கணும்னு தான மேடம் என் பின்னாடியே உள்ள வந்தீங்க? பின்ன விட சொல்ற?”
 
“ஓ கண்டு பிடிச்சிடீங்களா?”
 
“ஹ்ம்ம் ஆமா. மேடம்க்கு இப்ப என்ன வேணும்?”
 
“எனக்கா இப்ப சூடா ஒரு முத்தம் வேணும். அப்புறம் என் புருசனுக்கு பிடிச்ச மட்டன் வாங்கிட்டு வரணும்”, என்று அவன் சட்டை காலரை இழுத்தவாறே சொன்னாள் நந்திதா.
 
“மட்டன் வேணும்னா வாங்கிட்டு வரேன். ஆனா முத்தம் கிடையாது”
 
“ஏன் ஏன் ஏன்? எதுக்கு கிடையாதாம்?”
 
“விட்டா அடிச்சிருவ போல. தர மாட்டேன். போடி. என்னை கிறுக்கன்னு சொன்னீல்ல?”
 
“கிறுக்கனை கிறுக்கன்னு சொல்லாம, வேற என்ன சொல்ல?”
 
“அடி வாங்க போற டி”
 
“பின்ன மனசு முழுக்க ஆசையை வச்சிக்கிட்டு, என்னை வந்து பாக்காம இத்தனை வருஷம் கழிச்சு வந்து காதலை சொன்ன அறிவாளி தான நீங்க?”
 
“ஏய் அப்பவே சொல்லிருந்தா, உன் படிப்பு பாதிக்க படும்னு நினைச்சு அப்படி இருந்தேன் டி”
 
“ஆமா ஆமா இப்ப படிச்சு கலெக்டர் வேலை பாக்குறேன் பாருங்க? படிப்பு கெடுறதுக்கு. அப்பவே லவ் சொல்லிருந்தா எப்படி இருந்துருக்கும்?”
 
“எப்படி இருந்துருக்கும்? ஐயோ கிரிஷ் அண்ணன் என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டாங்கனு அழுத்துருப்ப. அழு மூஞ்சி”
 
“நான் ஒன்னும் அழு மூஞ்சி இல்லை. போங்க”
 
“அழு மூஞ்சி தான். அப்புறம் தொட்டா சிணுங்கி”
 
“நான் ஒன்னும் அப்படி இல்லை. போங்க கிண்டல் பண்ணாதீங்க. அப்புறம் அடிப்பேன்”
 
“நீ அப்படி இல்லையா. கொஞ்சம் ஆசையா வேகமா முன்னேறுனா போதும். உடனே வலிக்குதுன்னு சிணுங்குறது. நீ தொட்டா சிணுங்கி தான்”
 
அவன் சொல்வது முதலில் புரியாமல் விழித்தவள் புரிந்தவுடன், அவன் இதழ்களை தன் உதடுகள் கொண்டு மூடினாள்.
 
அவள் முத்தத்தில் ஆழ்ந்தவன் அடுத்து, அவள் முகம் முழுவதும் முத்தத்தை பதித்தான்.
 
“இப்ப ஆரம்பிச்சா முடியாது. நீ வெளிய போ. உன் பிரண்ட் இருக்கா”, என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
 
சிவந்திருந்த முகத்தை மறைத்து விட்டு, இயல்பாக பூரணி அருகில் வந்து அமர்ந்தாள் நந்திதா.
 
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பது போல அவள் எதுவும் கேக்காமல் இருக்கும் போதே “ஹரி ஒரு சட்டை எங்கன்னு கேட்டாங்க. அதை எடுக்க தான் நேரம் ஆகிட்டு”, என்று சொன்னாள் நந்திதா.
 
வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, “நீ கஷ்டப்பட்டு தேடி எடுத்த சட்டையை தான் அண்ணன் போட்டுட்டு வெளிய போறாங்க போல”, என்று சொல்லி அங்கு வந்து கொண்டிருந்த ஹரியை பார்த்து கண்ணை காண்பித்தாள் பூரணி.
 
அங்கே அவன் போட்டிருந்த அதே பழைய சட்டையுடன் தான் வந்தான்.
“ஹி ஹி”, என்று அசடு வழிந்தாள் நந்திதா.
 
“ரொம்ப சிரிக்காத. சிரிக்கிற உதடு சிவந்து போய் காட்டி கொடுத்துடுச்சு. உள்ளே என்ன நடந்ததுன்னு”
 
“ச்சி போடி”, என்று அழகாக வெட்க பட்டாள் நந்திதா.
 
அரை மணி நேரத்தில் ஹரி எல்லாம் வாங்கி கொண்டு வந்தான். அடுத்த அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான் முரளி.
 
மூவரும் டிவி ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள்.
 
எப்பவும் போல “எப்படி மச்சான் இருக்க? எப்படி இருக்க நந்திதா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்த முரளி அங்கு அமர்ந்திருந்த புது ஆளை பார்த்து திகைத்தான்.
 
“நல்லா இருக்கோம். வா முரளி. உக்காரு”, என்று தன் அருகில் அமர வைத்து கொண்டான் ஹரி.
 
“கெஸ்ட் வந்துருக்காங்களா ஹரி? யாரும் இல்லைன்னு நினைச்சு ஓவரா சத்தம் கொடுத்துட்டு வந்துட்டேன்”
 
“விடு டா. நம்ம நந்து பிரண்ட் தான். அவளை பாக்க வந்துருக்காங்க”
 
“ஓ அப்படியா?”, என்று கத்தி சொன்ன முரளி “நீ எனக்கு பாத்த பொண்ணு தான் இதுன்னு நினைச்சிட்டேன்”, என்று ஹரி காதில் சொன்னான்.
 
“இந்த பொண்ணையும் விட்டு வைக்க மாட்டியா டா முரளி?”
 
“அழகா இருக்காங்களா அதான். சும்மா. சரி அமைதியா இரு. போட்டு கொடுத்துறாத”, என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டான்.
 
ஆனால் கண்களை இமைக்க மறந்து முரளியை ரசித்து கொண்டிருந்தாள் பூரணி.
 
அவனுடைய செய்கையை முழுவதும் பார்வையிட்டு கொண்டிருந்தாள்.
 
ஹரியுடன் வம்பிழுப்பது, ஹரியை பற்றி நந்திதாவிடம் சொல்லி சிரிப்பது என்று செய்து கொண்டிருந்தான் முரளி. அப்போது பூரணி தன்னை பார்ப்பதை உணர்ந்தான்.
 
“என்ன இந்த பொண்ணு இப்படி பாக்குது?”, என்று நினைத்து கொண்டு பாக்காதது போல அவனும் பார்த்து கொண்டிருந்தான்.
காதல் பூக்கும்…

Advertisement