Advertisement

அத்தியாயம் 9
உன்னை விட உன்னுடைய
நினைவுகளே என்னை
அதிகமாய் தாக்குகிறது அன்பே!!!
 
“எனக்கு சந்தோசமா இருக்கு ஹரி. எதுக்கு நீ முன்னாடியே சொல்லலை?”
 
“கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லணும்னு தோணலை. நான்  பர்ஸ்ட் நைட்ல சொல்லலாம்னு வந்தேன். ஆனா மேடம் காளி அவதாரம் எடுத்துடீங்க. அதுக்கு பிறகும் எங்க சொல்ல விட்ட?”
 
“இன்னைக்கு சொல்ல சொன்னதுக்கு, எதுக்கு நாளைக்கு ஒரு நாள் காத்திருக்க சொன்ன?”
 
“அது நாளான்னைக்கு உனக்கு பிறந்தநாள் வருதுல்ல? அன்னைக்கு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா நீ ரொம்ப பீல் பண்ணியா? அதான் இப்பவே சொல்லிட்டேன்”
 
“நல்லதா போச்சு ஹரி. இன்னைக்கே சொல்லிட்ட”
 
“ஏன் நந்து அப்படி சொல்ற?”
 
“இல்லை நாளான்னைக்கு வரது, என்னோட ஒரிஜினல் பிறந்த நாளே இல்லை”
 
“அட பாவி என்ன சொல்ற? நான் இத்தனை வருஷம் அப்படி தான நினைச்சிட்டு இருக்கேன்”
 
“நீ நினைச்சா அதுக்கு நானா பொறுப்பு? என்னோட பிறந்த நாள் நாலு மாசம் கழிச்சு தான் வருது”
 
“நல்லதா போச்சு. இன்னைக்கே சொல்லிட்டேன். இல்லைனா இன்னும் எத்தனை நாள் காத்திருக்கவோ?”
 
“எதுக்கு ஹரி?”
 
“ஹ்ம்ம் இதுக்கு தான்”, என்று சொல்லிக்கொண்டே அவள் இதழ்களில் முத்த மிட்டான்.
 
அவளும் அவனுடன் இழைந்தாள். இந்த முறை இருவருமே முடிவடையாத, முடிக்க முடியாத முத்தமாக அது இருந்தது.
 
மூச்சுக்காக தவிக்கும் போது தான், அவனிடம் இருந்து விலகியவள், “முதலில் பேசலாம் அப்புறம் தான் இதெல்லாம்”, என்று சொன்னாள்.
 
அவள் கழுத்தில் முத்தம் பதித்தவன் மெதுவாக காதுக்கு முன்னேறி முடிவில் நெற்றியில் முத்தத்தை பதித்து விட்டு, “அப்புறம் பேசலாமே ப்ளீஸ் டா”, என்றான்.
 
“ம்ம்”, என்று சொன்ன நந்திதாவின் கைகள் அவன் முதுகில் அலைந்தது.
 
“என்ன ம்ம்? இப்ப பேசணுமா? இல்லை அப்புறம் பேசணுமா? நீ சொல்லு. இப்பவே பேசணும்னாலும் பேசலாம் நந்து”, என்று சொன்னான் ஹரி.
 
“பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாத ஹரி. அப்புறமா பேசலாம்”, என்று சொல்லி கொண்டே அவள் முகத்தை அவன் நெஞ்சில் மறைத்து கொண்டாள்.
 
அடுத்த நொடி அவளை கைகளில் அள்ளி கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் ஹரி.
 
அவளை  கட்டிலில்  கிடத்தியவன்  அவள் மேலே விழுந்தான்.
 
“ஆ பன்னி இப்படியா விழுவ? போடா”, என்றாள் நந்திதா.
 
“எப்ப பாத்தாலும் வாடா, போடா, பன்னி, எருமைன்னா பேசுற? உன்னை இரு டி. இன்னைக்கு நீ  செத்த”, என்ற படியே அவள் முகத்தை நோக்கி குனிந்தான்.
 
அழுத்தமாக அவள் உதடுகளில் தன் உதட்டை பொறுத்தினான் ஹரி. நந்திதா கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.
 
உதட்டில் இருந்து விலகியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். கழுத்து, காது என்று அவன் முத்தம் பயணித்தது.
 
“ம்ம்ம் கூச்சமா இருக்கு ஹரி”, என்று சிணுங்கினாள் நந்திதா.
 
“பிடிக்கலையா?”, என்று கிசு கிசுப்பான குரலில் கேட்டான் ஹரி.
 
“ம்ம்”, என்று முனங்கினாள் நந்திதா.
 
“பிடிச்சிருக்கா?”
 
“ம்ம்”
 
அதுக்கும் முனங்கல் தான் வந்தது.
 
அவளுடைய  கைகள் அவன் முதுகில்  பதிந்து அழுத்தத்துடன் அழைப்பு விடுக்க, அவள் முனங்கல் போதையை தந்தது ஹரிக்கு. அடுத்து ஒரு நொடி தாமதிக்காமல் அவளை தனக்கென்று எடுத்து கொண்டான்.
 
களைத்த தோற்றத்துடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்தாள் நந்திதா.
 
“எதுக்கு டா என்னை உனக்கு அப்பவே பிடிக்கும்?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“சொல்ல தெரியாது நந்து. உன்கூட இருந்தப்ப ஒரு குட்டி பாப்பாவா தான் தெரிஞ்ச. உன்னோட சாப்பாடை என்கூட ஷேர் பண்ணி கிட்ட. சிரிச்ச முகமா கதை பேசுன. கணக்குனா பயம்னு கண்ணை உருட்டி சொன்ன. அப்ப எல்லாம் எனக்குள்ள எந்த தப்பான எண்ணமும் இல்லை”
 
 
“ஆனா அந்த பூரணி, முரளியை லவ் பண்றேன்னு சொல்லி லெட்டர் உன்கிட்ட கொடுத்து கொடுக்க சொன்னப்ப, உன் முகத்தில் இருந்த ஆர்வம். அவங்க காதல் ஜெயிக்கணும்னு உன்னோட எண்ணம், முரளியை பிரிய போறேன்னு அந்த பூரணி அழுததை பாத்து நீ அவங்க லவ் ஜெயிக்காதான்னு கேட்டு நீ அழுதப்ப தான் காதல் அப்படிங்குற வார்த்தையே என் மனசில் முதல் தடவையா பதிஞ்சது”
 
….
 
“அந்த காதல் அப்படிங்குற வார்த்தை பதியும் போது உன்னோட முகமும் சேந்து பதிஞ்சிட்டு மா. எனக்கே தெரியாம  உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது. அது வரைக்கும் உன் செய்கையை மட்டும் ரசிச்சவன் கடைசி நாள் உன்னையே ரசிக்க ஆரம்பிச்சேன்”
 
….
 
 
“உன்னோட கண்ணு, உன்னோட நெத்தில இருந்த கருப்பு பொட்டு, அழகான உன்னோட சிரிப்பு எல்லாத்தையுமே ரசிச்சேன். நைசா உன்னோட  ஐ. டி. கார்டு எடுத்தும் வச்சிக்கிட்டேன். அப்புறம் உன்னோட வீட்டுக்கு வந்து பாத்தப்ப தான், அங்க வேற யாரோ இருந்தாங்க. உன்னை மறக்க முடியாம தவிச்சேன். நாள் ஆக ஆக உன்னை மறந்துருவேன்னு நினைச்சேன்.  ஆனா காலேஜ் போய் நிறைய பொண்ணுங்களை பாத்தாலும் உன்னோட முகம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு. அப்ப தான் உன்னை எப்பவுமே என்னால மறக்க முடியாதுனு தோணுச்சு”
 
…..
 
“ஆனா நீ இருக்கும் இடம் தெரியாம ரொம்ப கஷ்ட பட்டேன். நான் ஒரு மாதிரி இருக்கிறதை பாத்துட்டு அம்மா கேட்டாங்க. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன். உன்னை மறக்க முடியலைன்னு சொன்னேன். எங்க பாத்தாலும் உன் நினைவு வருதுன்னு சொன்னப்ப அம்மாவும் புரிஞ்சிக்கிட்டாங்க”
 
….
 
“அப்புறம் அவங்க கவலை பட கூடாதுனு நினைச்சு நீங்க கல்யாணம் எனக்கு பண்ணி வைக்குற வரைக்கும் அவளை தேடிக்கிறேன் மா ன்னு அம்மா கிட்ட கேட்டேன். சிரிச்சிட்டே ஆல் தி பெஸ்ட்னு சொன்னாங்க. அப்புறம் எங்க தேடன்னு தெரியாம சும்மா எங்கயாவது போனா சுத்தி நீ இருக்கியான்னு கண்ணு தேடும். அப்படி தான் அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப, உன்னை நான் பாத்தது. நீ கிடைச்சிட்டேன்னு சந்தோச படுறதா? இல்லை ரத்த வெள்ளத்தில் நீ கிடக்கிறது பாத்து அழவான்னு தெரியாம ரொம்ப துடிச்சேன். அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே நந்து?”
 
…..
 
“நீ என்கிட்ட சொன்னது எல்லாமே எனக்கு நினைவு இருந்தது. ஊஞ்சல்  பிடிக்கும்னு சொன்னது, அப்புறம் ஒரு டீச்சர் சேலை கட்டிட்டு வந்ததை காட்டி இந்த கலர் பிடிக்கும்னு சொன்னது, எல்லாமே எனக்கு மறக்க முடியாத நினைவுகளா மாறிட்டு”
 
 
“கல்யாணம் முடிஞ்சப்ப எவ்வளவு சந்தோசம் தெரியுமா? நீ எனக்கே எனக்குன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். எல்லாத்தையும் அன்னைக்கு உன்கிட்ட சொல்லணும்னு ஆசையா வந்தப்ப தான் மேடம் என்னை பேச விடாம செஞ்சிட்டிங்க”
 
…..
 
“நைட் கட்டி புடிச்சு தூங்கும் போது ரொம்ப தவிச்சேன் டி. சும்மா அப்படியே மேலே உரசும்  போது, அப்படியே என்ன எல்லாமோ செய்யணும்னு தோணும். உடம்பெல்லாம் தீ பிடிக்கிற மாதிரி கொதிக்கும். அங்க இங்க தெரியும் போது, என் உதட்டால  ஒத்தி எடுக்கணும்னு வெக்கமே இல்லாம தோணும். என்ன பண்ண? நீ என்னை புரிஞ்சிக்கணும்னு ஆசை பட்டேன்”
 
….
 
“நீ வேணும் அப்படிங்குற ஆசை இன்னைக்கு நிறைவேறிட்டு. ஆனா தவிப்பு அடங்காம அதிகம் ஆகிருச்சு டி”, என்று சொல்லி கொண்டே அவளை மறுபடியும் ஆக்ரமித்தான்.
 
சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன் “என்னை உனக்கு புடிச்சிருக்கா நந்து?”, என்று கேட்டான்.
 
“ஹ்ம்ம்”
 
“கல்யாணம் பன்னதுனால பிடிச்சிருக்கா?”
 
“இல்லை அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் பாத்தப்ப செமையா இருக்கான்னு தோணுச்சு. எனக்கும் பாத்துருக்காங்களே மாப்பிள்ளை. எதுக்கு இவனை மாதிரி மாப்பிள்ளை பாக்கலைன்னு தோணுச்சு. அப்புறம் வீட்ல நிறைய தடவை பாத்துட்டே இருக்கணும்னு தோணும். அடிக்கடி உங்களுக்கே தெரியாம சைட் அடிப்பேன். ரூம்ல உங்க போட்டோல முகம் புதைச்சு தூங்குவேன். அது எல்லாம் ஏன்னு சொல்ல தெரியலை. என்கூட சாப்பாடை ஷேர் பண்ணிகிட்டப்ப ரொம்ப சந்தோசம் இருந்தது தெரியுமா?”
 
….
 
“கல்யாணம் அன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருந்தப்ப தான் உங்க  காதல் தெரிஞ்சு, அரை குறையா கேட்டு என்னையும் வருத்திகிட்டு உங்களையும் கஷ்ட படுத்திட்டேன் சாரி ஹரி”
 
“விடு மா. இப்ப எல்லாம் சரியாகிட்டே. அன்னைக்கு டேன்ஸ்  ஆடும் போது தொள தொளன்னு என்னோட சட்டையை போட்டிருக்கும் போது, கை அங்க அங்க போக தான் நினைச்சது. முதுகுல மருந்து போடும் போதும் கண்ணை திருப்பாம இருக்க என்ன கஷ்ட பட்டேன்னு எனக்கு தான் தெரியும். ஆனா இன்னைக்கு அன்னைக்கு தோணுன எல்லாத்தையும் செய்வேன்”
 
“விடுங்க ஹரி நாம இன்னும் பேசியே முடிக்கலை ஹரி?”
 
“போதும் செல்லம் பேசுனது. ப்ளீஸ் டி”, என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளில் முத்தமிட்டு அவளை பேச விடாமல் செய்தான்  ஹரிகிருஷ்ணன்.
 
விஜியும், சுதாகரும் அமர்ந்து காலை காபி குடித்து கொண்டிருந்தார்கள். அப்போது அழைப்பு மணி சத்தம் கேட்டது.
 
“நந்திதாவும், ஹரியும் தான் வந்துட்டாங்க போல பா. நான் போய் பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து போய் கதவை திறந்தாள் விஜி.
 
அங்கே அவர்கள் தான் இருந்தார்கள். “வா மா நந்து. என்ன டா இவ்வளவு நேரம்? பஸ் நேரமா ஆகிட்டா?”, என்று கேட்டாள் விஜி.
 
“ஆமா மா. உருட்டிட்டே வந்தான். அடுத்த தடவை இந்த ட்ராவல்ஸ்ல புக் பண்ண கூடாது”
 
“சரி வா. காபி தரவா? நந்து உனக்கு மா?”
 
“ஹாய் அப்பா, இல்லை மா குளிச்சிட்டு வரேன்”, என்றான் ஹரி.
 
“காபி குடிச்சிட்டு போய் குளிக்க வேண்டியது தான ஹரி? எப்படி மா நந்திதா இருக்க?”, என்று கேட்டார் சுதாகர்.
 
அவள் பதிலே சொல்லாமல் அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.
 
அதிர்ச்சியாக அவளை பார்த்தார்கள். அப்போது தான் அவள் விஜி கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை என்பதே நினைவு வந்தது.
 
“என்ன ஆச்சு ஹரி நந்திதாவுக்கு?”, என்று கேட்டார் சுதாகர்.
 
“ஆமா ஹரி. வந்த உடனே அத்தைன்னு கொஞ்சுவா. இன்னைக்கு முகத்தை திருப்பிட்டு போறா? நீ எதாவது சொன்னியா?”, என்று கேட்டாள் விஜி.
 
“உங்க மருமக முகத்தை திருப்பினா, உடனே என்னை காரணம் சொல்லுவீங்களே? என்கூட எல்லாம் சிரிச்சு பேசிட்டு தான் வந்தா. உங்க ரெண்டு பேர் மேல தான் கோபம் போல?”, என்று சொல்லி சிரித்தான் ஹரி.
 
“எங்க மேல கோபமா? நானும், உங்க அப்பாவும் என்ன டா செஞ்சோம்?”
 
“ஹா ஹா அது ஒன்னும் இல்லை மா. அவ கிட்ட அவளை நான் லவ் பண்ண கதையை சொல்லிட்டேன். நீங்க அவ கிட்ட முன்னாடியே சொல்லலைனு மேடம் சும்மா முறைச்சிட்டு போறாங்க”
 
“அட பாவி லவ் பண்ணது நீ. பாத்தியா விஜி? இதுக்கு நம்ம மேல பழி. நல்லதுக்கே காலம் இல்லை”
 
“ஆமாங்க. ஐயோ பாவம்னு இப்பவே கல்யாணம் பண்ணி வச்சது தப்பு. இன்னும் அஞ்சு வருஷம் லவ் பண்ணிட்டே இருங்கன்னு விட்டுருக்கணும். நாங்களும் உன் பொண்டாட்டி கூட டூ. அவ கிட்ட சொல்லிரு”, என்று சிரித்தாள் விஜி.
 
“என்கூட டூ  விட்டுருவீங்களோ?”, என்று சொல்லி கொண்டே அங்கு வந்த நந்திதா இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
 
“அப்ப நீ மட்டும் எங்க கிட்ட பேசாம இருந்துருவியோ?”, என்று அவளை மாதிரியே நந்திதாவை முறைத்தாள் விஜி.
 
அடுத்த நொடி “அத்தை”, என்று அழைத்து கொண்டே ஓடி வந்து விஜியை அணைத்து கொண்டாள் நந்திதா.
 
“பழைய நந்திதா வந்தாச்சு”, என்று சிரித்தார் சுதாகர்.
 
அடுத்து இருவரும் குளித்து முடித்து நால்வரும் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
 
“எனக்கு உங்க பிள்ளை ஊஞ்சல் வாங்கி தந்தார் அத்தை”, என்று சிரித்து கொண்டே சொன்னாள் நந்திதா.
 
“பாத்தீங்களா? இங்க நம்ம எதாவது கேட்டோம்னா கடை பக்கமே போக மாட்டான். பொண்டாட்டி வந்தவுடனே மாறிட்டான்”, என்று பொறாமை குரலில் பொறாமையே இல்லாமல் சொன்னாள் விஜி.
 
“விடு விஜி. இதே டயலாக் தான் உன்னை பார்த்து எங்க அம்மா என்கிட்டே சொன்னாங்க”, என்று சிரித்தார் சுதாகர்.
 
எல்லாரும் சிரிக்கும் போது அழைப்பு மணி ஒலித்தது.
 
“இப்ப யாரு வந்திருக்கா தெரியலையே. இருங்க அத்தை நான் போய் பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு போய் கதவை திறந்தாள் நந்திதா.
 
அங்கே பூரணி நின்றிருந்தாள். “ஏய் பூரணி வா வா. எப்படி இருக்க?”, என்று கேட்டு கொண்டே அவளை அணைத்து கொண்டாள் நந்திதா.
 
“ஏய் போடி. பேசாத. என்னை எல்லாம் மறந்துட்டல்ல?”, என்று விளையாட்டாக முகத்தை திருப்பி கொண்டாள் பூரணி.
 
“ஏய் அதுக்கான காரணம் எல்லாம் பெருசு டி. அப்பறம் சொல்றேன். முதல்ல உள்ள வா பூரணி”
 
“ஹ்ம்ம் சரி எப்படி இருக்க நந்து?”
 
“நீ தான் பாக்குறியே? சூப்பரா இருக்கேன். ஆமா உன்னை சாயங்காலம் தான வர சொன்னேன். நீ என்ன காலைலே வந்து நிக்குற?”
 
“அட பாவி. நான் உன்னை பாக்கணும்னு ஆசையா வந்துருக்கேன். நீ இப்படி சொல்ற? போ நந்து நான் கோபமா கிளம்புறேன்”
 
“ரொம்ப சீனை போடாத. நீ உன் ஆளை பாக்க தான் இப்படி விடியுறதுக்கு முன்னாடி வந்துருக்கேன்னு எனக்கு தெரியும்”, என்று அவளை ஓட்டினாள் நந்திதா.
 
“கண்டு பிடிச்சிட்டியா? ஹி ஹி. எப்ப வருவாங்க அவங்க?”
 
“எவங்க?”
 
“கிண்டல் பண்ணாத நந்து. முரளி பத்தி தான் கேட்டேன்”
 
“நான் கிண்டல் பண்ணாம இருக்கேன். அதே மாதிரி நீ வெக்க படாம இரு. என்னால சகிக்க முடியலை. உங்க ஆள் லஞ்சுக்கு தான் வருவாங்க. வா இப்ப சூடா ரெண்டு இட்லி சாப்பிடலாம்”
 
“அட பாவி. ரெண்டு இட்லி எப்படி பத்தும்?”
 
“ஒரு அண்டாவே தரேன். வா டி பூரணி”
 
“சே சே அப்படி சாப்பிட்டா உன் மாமியார் வீட்ல என்னை பத்தி என்ன நினைப்பாங்க? அதனால ஒரு ஆறு ஏழு போதும்”
 
“சிரிப்பு காட்டாம உள்ள வா. எல்லாரும் சாப்டுட்டு தான் இருக்காங்க”, என்று சொல்லி அங்கே அழைத்து சென்றாள் நந்திதா.
 
“அத்தை மாமா இவ பூரணி. என்னோட பிரண்ட். அப்புறம் பூரணி இது என்னோட அத்தை, இது என்னோட மாமா. இது என்னோட லவ்வபுல் ஹஸ்பண்ட்”, என்று சொல்லி அறிமுக படுத்தினாள் நந்திதா.
 
எல்லாருக்கும் வணக்கம் சொன்னாள் பூரணி.
 
“உக்காந்து நீயும் சாப்பிடுமா”, என்று சொன்னாள் விஜி.
 
“சரி ஆண்ட்டி”, என்று சொல்லி விட்டு சாப்பிட அமர்ந்தாள் பூரணி.
 
“அத்தை உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நானும் பூரணியும் எப்படி பிரண்ட் ஆனோம் தெரியுமா?”, என்று சிரித்து கொண்டே ஆரம்பித்தாள் நந்திதா.
 
விஷயம் தெரிந்த ஹரி தனக்குள் சிரித்து கொண்டு அமைதியாக இருந்தான்.
 
“தெரியாது மா சொல்லு”, என்று சொன்னாள் விஜி.
 
“சொல்லாத டி”, என்று கண்ணை காட்டினாள் பூரணி.
 
“நானும் இவளும் பாத்துக்கிட்டது ஒரு எக்சிபிஷன்ல தான்”
 
எக்சிபிஷன் என்று சொன்னதும் விஜியும் சுதாகரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஆவலாக கதை கேட்க ஆரம்பித்தார்கள்.
 
“அப்ப என் பக்கத்துல தான் மேடம் நின்னாங்க. எனக்கு இந்த பக்கம் , ஹரி கிருஷ்ணன் அப்படின்னு ஒரு கிறுக்கன் நின்னான்”, என்று ஆரம்பித்தாள் நந்திதா.
 
விஜி வந்த சிரிப்பை அடக்கி கொண்டாள்.
 
“என்னையா கிறுக்கன்னு சொல்ற?”, என்று நினைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் டேபிள் அடியில் கையை கொண்டு போய் அவள் இடுப்பில் கிள்ளி வைத்தான் ஹரி.
 
“ஆ”, என்று அலற வந்தவள் சூழ்நிலை அறிந்து அமைதியானாள்.
 

Advertisement