Advertisement

“நீ தான் மருந்து போட்டுட்டல்ல? போய் வேலையை பாரு”, என்று கூச்சத்துடன் சொன்னாள் நந்திதா.
 
“இப்படி ஒரு செக்சி போஸ் பாத்துட்டு சும்மா போனா, உலகம் ஹரியை தப்பா பேசும் நந்து செல்லம்”
 
“இப்படி எல்லாம் கொஞ்சின கொன்னுருவேன். நீ முதலில் இங்க இருந்து கிளம்பு. இருந்ததையும் அவுத்து விட்டுட்டு வம்பு பண்ணிட்டு இருக்க? போடா”
 
“போறேன், போறேன். அதுக்கு முன்னாடி ஒரே ஒரு வேலை பாக்கி இருக்கே”
 
“என்ன வேலை ஹரி?”
 
“இந்த வேலை தான்”, என்று சொல்லி கொண்டே அவள் முதுகில் காயம் இல்லாத இடத்தில் தன் உதடுகளை பதித்தான்.
 
“ஹரி”, என்று அதிர்ச்சியாக அழைத்தாள் நந்திதா.
 
“ஐயோ படுத்துறானே, எந்திச்சா கழண்டு வேற விழுந்துரும்”, என்று நினைத்து பல்லை கடித்தவள், அடுத்து அவன் செய்த செயலில் உணர்ச்சி கொந்தளிப்பு தாங்க முடியாமல் தன் உதட்டை பல்லால் கடித்தாள்.
 
ஒரு இடத்தில் பதிந்த அவன் உதடுகள் அப்படியே முதுகில் இருந்து கழுத்துக்கும், பின் கீழே இடுப்புக்கும் ஊர்வலம் போனது.
 
அவள் அசையாமல் படுத்திருப்பதை உணர்ந்த ஹரி “என்ன நந்து, நான் செய்றது பிடிச்சிருக்கு போல? மெய் மறந்து படுத்திருக்க”, என்று சிரித்து கொண்டே கேட்டான்.
 
“நான் எப்ப டா பிடிச்சிருக்குனு சொன்னேன்?”
 
“அப்ப பேசாம இருக்க? நான் அப்படியே தடவி கொடுத்துட்டு இருக்கேன். நீ அப்படியே படுத்திருக்க. எந்திரிச்சு என்னை நாலு அடி வச்சிருக்க வேண்டாமா?”
 
“பன்னி, கழட்டி விட்டுட்டு கிண்டலா பண்ற? விடு ஹரி. கூச்சமா இருக்கு”
 
“ஹ்ம்ம் ஐயோ பாவம்னு விடுறேன். காயம் பெருசா இல்லை. கொஞ்ச நேரம் எரியும். அப்புறம் சரியாகிரும். நானே வீட்டை கிளீன் பண்ணிறேன். நைட் கடைல சாப்பாடு வாங்கிக்கலாம்”, என்று சொல்லி விட்டு வெளியே போனான்.
 
“அந்த பொண்ணை ரொம்ப விரும்பிருப்பானோ? அதான் என்னை விட்டு விலகியே இருக்கானோ? அந்த பொண்ணு எப்படி இருப்பா? எதுக்காக பிரிஞ்சாங்க? நான் அவன் சொல்ல வந்ததை கேட்டுருக்கணுமோ?”, என்று யோசித்து கொண்டே படுத்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.
 
கொஞ்ச நேரம் கழித்து “என்ன செய்றா?”, என்று பார்க்க வந்தவன் அவள் தூங்குவதை உணர்ந்து, ஒரு போர்வையை எடுத்து அவள் காயத்தில் படாதவாறு மூடி விட்டு, “எப்படி இருக்க தெரியுமா டி செல்லம்? அப்படியே சொக்கி போறேன்”, என்று நினைத்து கொண்டு மறுபடியும் வேலையை பார்க்க சென்றான்.
 
தூங்கி எழுந்த நந்திதா “அவன் இருக்கானா?”, என்று தலையை தூக்கி பார்த்தாள். அங்கே அவன் அரவம் தெரியவில்லை.
 
“வெளியே இருக்கான் போல”, என்று நினைத்து மெதுவாக எழுந்து, ஒரு மெல்லிய நைட்டி எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
 
டிவி பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான் ஹரி. இவளை பார்த்ததும் “எந்திச்சிட்டியா நந்து? இப்ப வலி குறைஞ்சிருக்கா?”, என்று கேட்டான்.
 
“ஹ்ம்ம்”, என்று முனங்கி கொண்டே அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.
 
“என்ன ம்ம்? காயம் எப்படி இருக்குன்னு கேட்டேன்ல?”
 
“நானும் பதில் சொன்னேன்ல?”
 
“போடி திமிரு பிடிச்சவளே”
 
“நீ தான் டா திமிரு பிடிச்சவன்”
 
“அப்ப நம்ம சரியான ஜோடி தான். சரி போட்ட மருந்து எப்படி இருந்தது?”, என்று கண்ணடித்து கேட்டான்.
 
“ஹ்ம்ம் அது நான் வாங்குன மருந்து. நல்லா தான் இருக்கும்”
 
“நான் அதை கேக்கலை. மருந்து போட்டதும் அப்புறம் இன்னொரு மருந்து என்னோட உதட்டால போட்டேன்ல? அது எப்படி இருந்துச்சுன்னு கேட்டேன்”
 
“பன்றதையும் பண்ணிட்டு எப்படி நக்கல் அடிக்கிறான் பாரு?”, என்று நினைத்து கொண்டு “எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வா. பசிக்குது”, என்று பேச்சை மாற்றினாள்.
 
சிரித்து கொண்டே எழுந்து சட்டையை போட்டு விட்டு கடைக்கு சென்றான் ஹரி.
 
இருவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அவள் எதுவோ சொல்ல வருவது போல அவனுக்கு பட்டது.
 
“என்ன நந்து? எதாவது கேட்கணுமா?”, என்று கேட்டான் ஹரி.
 
“ஹ்ம்ம் ஆமா. ஆனா எப்படி கேக்கனு தெரியலை”
 
“என்ன மா கேளு”
 
“அது வந்து…உங்க காதல் கதையை சொல்லுங்களேன்”
 
“இப்ப எதுக்கு அது?”
 
“இல்லை அவ எப்படி இருப்பான்னு தெரிஞ்சிக்கணும். உங்க மனசுல ஆழமா பதிஞ்சிருக்குறவளை பத்தி எனக்கு தெரியணும். பொண்டாட்டியா உங்க கண்ணு முன்னாடி இருக்கேன். என்னை பாத்து சலன பட வேண்டிய நேரத்துல கூட நீங்க ஸ்டெடியா இருக்கீங்க. அதுக்கு காரணம் உங்க பழைய காதல் தான? இப்ப உங்க காதல் கிடைக்காம எனக்கு கஷ்டமா இருக்கு. அதே மாதிரி தான உங்க காதல் சேராதப்ப உங்களுக்கு கஷ்டமா இருந்துருக்கும். எதுக்கு பிரிஞ்சீங்க ஹரி? அந்த பொண்ணு வீட்ல ஒத்துக்கலையா? இப்ப அந்த பொண்ணு என்ன செய்றா? இப்பவும் ஒரு வேளை உங்களுக்காக காத்துட்டு இருக்காளா? நான் படத்துல எல்லாம் வர மாதிரி உங்களை விட்டு கொடுத்து அவ கூட உங்களை சேத்து வைக்கணுமா ஹரி?”
 
கடைசி வார்த்தை கேக்கும் போது அவள் கண்களில் அவளை அறியாமலே கண்ணீர் வந்தது.
 
கையை நீட்டி அவள் கண்ணீரை துடைத்தவன், “இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எனக்கு பொன்டாட்டினா அது நீ தான் நந்து. எனக்காக நாளைக்கு மட்டும் பொறுமையா இரு. நாளான்னைக்கு நான் எல்லாம் சொல்றேன் சரியா?”
 
“ஹ்ம்ம்”
 
“அழாத டா. கொஞ்சம் சிரியேன்?”
 
சிரித்து கொண்டே “எனக்கு சாப்பாடு ஊட்டி விடு ஹரி”, என்றாள் நந்திதா.
 
“அதை விட வேற என்ன வேலை?”, என்று சொல்லி கொண்டே அவளுக்கு உணவு ஊட்ட துடங்கினான்.
 
அடுத்து சாப்பிட்டுமுடித்ததும் கை கழுவி விட்டு, டிவி ஹாலில் அமர்ந்திருக்கும் போது, மறுபடியும் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.
 
“இப்ப என்ன நந்து? எதுவும் வேணுமா?”, என்று கேட்டான் ஹரி.
 
“ம்ம்ம்”
 
“என்ன?”
 
“என்னை கட்டி பிடிச்சிக்கிறியா? எனக்கு என்னவோ நீ ரொம்ப தொலைவா இருக்குற மாதிரி இருக்கு”
 
அடுத்த நொடி அவளை நெருங்கியவன் அவளை இறுக அணைத்தான்.
 
அவன் தோளிலே முகம் புதைத்து கொண்டாள் நந்திதா.
 
“என்னோட காதலை நினைச்சு அவ சந்தோச படாம, இப்படி தவிக்கிறதா? எப்பவுமே உன்னை சந்தோசமா வைச்சிக்கணும்னு நினைச்சு தான் கல்யாணம் பண்ணேன் நந்து. என்னோட காதலை சொன்னேன்னா உன்னோட குழப்பமும், நான் வேற பொண்ணை விரும்பிருக்கேன்னு நீ நினைக்கிற இந்த மன கஷ்டமும் போகும்ன்னா அதை இப்பவே சொல்றதுல எந்த தப்பும் இல்லை”, என்று நினைத்து கொண்டு அவளிடம் இருந்து விலகியவன் “ஒரு நிமிஷம் இரு”, என்று சொல்லி விட்டு எழுந்து அந்த அறைக்கு சென்று அவனுடைய டைரியை எடுத்து வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
 
குழப்பமாக அவன் முகத்தை பார்த்தாள் நந்திதா.
 
“நான் இப்ப சொல்ல போறதை கேட்டு அழ கூடாது. என்னை கட்டி பிடிச்சு முத்தம் எல்லாம் கொடுக்க கூடாது சரியா?”, என்று சிரித்தான் ஹரி.
 
“ஹ்ம்ம் உனக்கு ஆசை தான். என்கிட்ட அடி வாங்காம இரு அது போதும். என்ன சொல்ல போற ஹரி?”
 
“சொல்லலை காட்ட போறேன்”, என்று சொல்லி கொண்டே அந்த டைரி லாக்கை எடுத்து அதை விரித்தான்.
 
“இப்ப எதுக்கு இதை கட்டுறான்? அவனோட காதலை பத்தி சொல்ல போறான் போல. மனசை தைரியமா வச்சிக்கோ நந்து”, என்று நினைத்து கொண்டு அவனை பார்த்தாள்.
 
அதன் உள்ளே இருந்த பொருளை எடுத்து அவள் முகத்தின் முன் நீட்டினான் ஹரி.
 
அதை பார்த்து அதிர்ச்சியில் அவள் கண்கள் இரு மடங்கு விரிந்தது.
 
ஆச்சர்யத்துடன் “ஹரி இது என்னோட ஸ்கூல் ஐ. டி கார்டு. இது எப்படி உன்கிட்ட வந்தது?”, என்று கேட்டு கொண்டே அதை திருப்பி திருப்பி பார்த்தாள்.
 
அமைதியாக சிரித்து கொண்டிருந்தான் ஹரி.
 
“அப்ப நிஜமாவே நான் தான் அந்த பொண்ணா? நீ என்னை தான் லவ் பண்ணியா ஹரி? அதுவும் நான் நயன்த் படிக்கும் போதேவா? எப்படி ஹரி? நீ என்னை எப்ப பாத்த? சீக்கிரம் சொல்லு ஹரி”, என்று அவன் சட்டையை பிடித்து கேட்டாள் நந்திதா.
 
“ஏய் லூசு, உனக்கு என்னை நினைவு இல்லையா? கொஞ்சம் யோசிச்சு பாரு. நாம ஒரு வாரம் பாத்து பழகிருக்கோம். என்கூட தான் ஒரு வாரமும் பகல் புல்லா இருந்துருக்க. அடிமனசுல என் உருவம் பதிஞ்சிருக்கும். கொஞ்சம் வெளிய கொண்டு வா மா. நினைவே வரலைன்னு சொல்லிராத”, என்று சிரித்தான்.
 
அவன் சட்டையை விட்டு விட்டு, கன்னத்தில் கை வைத்து வாய் விட்டே யோசித்தாள்.
 
“இந்த ஐ. டி கார்டு நயன்த்ல உள்ளது. சயின்ஸ் எக்சிபிஷன் அப்ப காணாம போயிருந்தது. மறுபடி ஸ்கூல் ஆரம்பிக்கும் போது பைன் கட்டி வேற வாங்குனேன். அந்த எக்சிபிஷன் தான் ஒரு வாரம் நடந்துச்சு. அப்ப நீ அங்க வந்துருந்தியா? பேசி பழகிருக்கோமா? நான் பேசுனது மூணு பேர் கிட்ட தான்”, என்று யோசித்து கொண்டே வந்தவள் “ஏய் கண்டு பிடிச்சிட்டேன்”, என்று கத்தி விட்டு “கிரிஷ் அண்ணா”, என்று கூவி கொண்டே அவனை கட்டி கொண்டாள்.
 
“கண்டு பிடிச்சிட்டேன்”, என்று அவள் சொல்லும் போது பிரகாசமான ஹரி முகம், “கிரிஷ் அண்ணா”, என்ற வார்த்தையில் விளக்கெண்ணெய் குடித்து போல ஆனது.
 
“இப்ப அண்ணா சொன்ன கொன்னுருவேன் பாத்துக்கோ”, என்று சிரித்து கொண்டே சொன்னவன் கைகளும் அவளை தன்னுடன் இறுக்கி கொண்டது.
 
“இப்ப எப்படி டா அண்ணணு சொல்ல தோணும்? அப்ப இருந்தே என்னை லவ் பன்றியா ஹரி? என்னை உனக்கு பிடிக்குமா?”, என்று அவனை கட்டி பிடித்து கொண்டே அவன் காதில் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் நந்திதா. அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவன் கன்னத்திலும் பட்டது.
 
“இப்ப எதுக்கு நந்து அழுகை?”, என்று சொல்லி கொண்டே அவளை விலக்கியவன், அவள் கண்ணீரை துடைத்தான்.
 
“அழுகையா வருது ஹரி. ரொம்ப ரொம்ப சந்தோசமா எதோ சாதிச்ச மாதிரி இருக்கு”
 
“அழுதேன்னா இதை பத்தி பேச வேண்டாம் நந்து. நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கும். நீ பீல் பண்ண கூடாதுன்னு தான் நான் இப்ப சொல்லவே ஆரம்பிச்சேன்”
 
“சரி சரி நான் அழலை”
 
“அப்ப பேசலாமா?”
 
“ஹ்ம்ம் பேசலாம். ஆனா ஒரு டவுட்”
 
“என்ன நந்து?”
 
“அன்னைக்கு உன்கூட இருந்த பாலமுரளி தான், நம்ம கல்யாணத்துக்கு வீட்டுக்கு வந்த முரளி அண்ணாவா?”
 
“ஹ்ம்ம் ஆமா”
 
“ஐ ஜாலி ஜாலி”
 
“எதுக்கு முரளியை பத்தி கேட்டுட்டு இப்படி சந்தோச படுற?”
 
“இரு ஒரு நிமிஷம்”, என்று சொல்லி விட்டு அவன் சட்டை பையில் இருந்த போனை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.
 
“என்ன முரளியை பத்தி கேட்டுட்டு யாருக்கு போன் போடுறா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான் ஹரி.
 
அந்த பக்கம் போன் எடுத்ததும், “ஏய் பூரணி உன் ஆளை நான் கண்டு பிடிச்சிட்டேன் டி”, என்று கூவினாள் நந்து.
 
 
“ஆமா டி”
 
….
 
“இந்த வாரம் ஞாயிறு அன்னைக்கு, எங்க வீட்டுக்கு வா. அவங்களை பாக்கலாம்”
 
….
 
“அங்க இல்ல. சாரி. நான் நிறைய விஷயம் உன்கிட்ட சொல்லல. நான் இப்ப என் வீட்ல இல்லை. எனக்கு கல்யாணம் ஆகிட்டு. நான் அட்ரஸ் அனுப்புறேன். சண்டே அன்னைக்கு வா சரியா? அங்க வந்து என்ன வேணும்னாலும் திட்டு”
 
….
 
“சரி டா வைக்கிறேன். அப்புறம் கூப்பிடுறேன். வீட்டுக்கு வா. நிறைய பேசலாம்”, என்று சொல்லி விட்டு வைத்தாள் நந்திதா.
 
“நந்து இப்ப நீ பேசுனது, முரளி பின்னாடி அழைஞ்ச அந்த பூசணி கிட்டயா?”
 
“ஹ்ம்ம் ஆமா ஹரி”, என்று கூவி கொண்டே அவன் கழுத்தை கட்டி கொண்டாள் நந்திதா.
 
மனதில் வந்த சொல்ல முடியாத சந்தோசத்துடன் அவளை இறுக்கமாக கட்டி கொண்டான் ஹரி.
காதல் பூக்கும்…

Advertisement