Advertisement

அத்தியாயம் 8
மழைச்சாரலாய்
என்னைத் தீண்டி செல்கிறது
உன்னுடன் இருந்த நினைவுகள்!!!
 
“ஐயோ உளறிட்டோமே”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து பெ பெ என்று முழித்தான் ஹரி.
 
சிறிது யோசித்து விட்டு, “இல்லை நந்திதா நீ சும்மா அங்க இங்க நடக்கும் போதே, சும்மா இடுப்பை வளைச்சு நெளிச்சு தான நடந்து போற? அதான் உனக்கு தெரியும்னு நினைச்சு சொன்னேன். ஆனா இப்ப தான் நீயே ஒத்துக்கிட்டியே உனக்கு டேன்ஸ் தெரியும்னு”, என்றான்.
 
“நான் நடக்குறதையா கிண்டல் பண்றீங்க?”, என்று சொல்லி கொண்டே அவன் தலையில் கொட்டினாள் நந்திதா.
 
“ஆ வலிக்குது”, என்று தலையை தடவி கொண்டான்.
 
“நான் உங்களுக்கு டேன்ஸ் சொல்லி கொடுத்தா, எனக்கு என்ன கிடைக்கும்?”, என்று கேட்டாள் நந்திதா.
 
“நீ முதலில் எனக்கு சொல்லி தா. அப்புறம் உனக்கு கிடைக்க வேண்டியது தன்னால கிடைக்கும்”, என்று சிரித்தான் ஹரி.
 
அன்று இரவு டேன்ஸ் ப்ராக்டிஸ். சொல்லி கொடுக்க ஆயத்தமாக இருந்தாள் நந்திதா.
 
“காலை தவளை மாதிரி வைக்காத ஹரி. அசிங்கமா இருக்கும். இதோ இப்படி வை”, என்று சொல்லி கொண்டிருந்தாள் நந்திதா.
 
“ஏய் நந்து, எதுக்கு இப்படி கிண்டல் செய்ற? எனக்கு அப்படி தான வருது? நான்  என்ன செய்ய?”
 
“நான் என்ன செய்யவா? அதெல்லாம் வரும். நீ கொஞ்சம் விரிச்சு வை, அப்புறம் இடுப்பை வளை”
 
“கொடுமை படுத்தாத நந்து. எனக்கு வரலை”
 
“அதெல்லாம் முயற்சி செஞ்சா வரும்”
 
“தெரியாததை செய்ய சொன்னா எப்படி வரும்? பேசாம ஒன்னு செய்யலாம். நீ டேன்ஸ் ஆடு. நான் வேணும்னா பாட்டு பாடுறேன். இது நல்ல ஐடியா வா இருக்கே”
 
“அடி வாங்க போற? அதெல்லாம் வரும். நீ நான் சொல்ற படி செய் ஹரி”
 
“ஏண்டி இப்படி கொடுமை படுத்துற?”, என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு சொன்னான் ஹரி.
 
“சின்ன பிள்ளை மாதிரி செய்யாத. நீ நான் சொல்ற படி செய்ற அவ்வளவு தான். கணக்கு டீச்சர்ன்னு பேரு. எந்த கணக்கை கொடுத்தாலும் அசால்ட்டா ஆன்சர் கொண்டு வர, ரெண்டு ஸ்டெப் ஒழுங்கா பண்ண மாட்டிக்க”
 
“கணக்குல எம்பி எம்பி கஷ்ட பட்டு பாஸ் பண்ணல்ல? உன்னை போய் நூறு மார்க் எடுன்னு சொன்னா உனக்கு எப்படி இருக்கும்? அந்த மாதிரி தான் இருக்கு, எனக்கு இப்ப”, என்று உளறினான் ஹரி.
 
“ஏய் நீ இப்ப என்ன சொன்ன? உனக்கு எப்படி தெரியும், நான் கணக்குல வீக்குன்னு?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் நந்திதா.
 
“நாலு நாள் வாயை மூடுட்டு இருக்க மாட்டியா டா”, என்று தன்னையே நொந்து கொண்டு “அது உன் முகத்தை பாத்தாலே தெரியுது”, என்று சொல்லி சிரித்து மழுப்பினான்.
 
“அவ்வளவு வெளிப்படையாவா தெரியுது? சரி நீ வா. ஒழுங்கா ஆடு”, என்று சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.
 
ஒரு வழியாக கஷ்ட பட்டு, கடுப்புடன் ஆடி கொண்டிருந்தான் ஹரி.
 
“இப்படி கை வை ஹரி. இதோ இந்த மாதிரி இரு வரேன்”, என்று சொல்லி கொண்டே அவன் அருகில் வந்தவள் அவன் கையை பிடித்து “இப்படி வைக்கணும்”, என்று சொல்லி கொடுத்தாள்.
 
திடீரென்று கிடைத்த நெருக்கத்தில் மெய் மறந்தான் ஹரி. அவளுடைய தொடுகையில் அவனுக்கு நடனமா வரும்?
 
“இப்படி வை”, என்று சொல்லி நகர பார்த்தவளை “எப்படி வைக்கணும்? இன்னொரு தடவை சொல்லேன்”, என்று மறுபடியும் அழைத்தான் ஹரி.
 
“டவுட் தான் கேக்குறான்”, என்று நினைத்து மறுபடியும் அவனுடைய கையை பிடித்தாள் நந்திதா. அப்போது அவள் கைகளை அவன் பிடித்தான். என்னவென்று அவன் முகத்தை பார்த்தாள் நந்திதா.
 
அதில் ஒரு வித மயக்கம் தெரிந்தது. “என்ன இவன் இப்படி பாக்குறான்?”, என்று நினைத்து அவனிடம் இருந்து விலக பார்த்தாள்.
 
அவள் செய்கையை உணர்ந்தவன், இடுப்போடு சேர்த்து இறுக்கி பிடித்தான்.
 
“விடு ஹரி. இப்ப டேன்ஸ் படிக்கணும்”, என்று குரலே வராத குரலில் சொன்னாள் நந்திதா.
 
“இது டேன்ஸ் படிக்க வேண்டிய நேரம் இல்லை. வேற என்னனென்னவோ படிக்க வேண்டிய நேரம். இப்படி தொள தொளன்னு என்னோட சட்டையை போட்டுக்கிட்டு, அப்படியே மயக்குற ஏஞ்சல் மாதிரி இருந்தா உன்மேல கவனம் வராம, நீ சொல்லி கொடுக்குறதுலயா கவனம் வரும்?”, என்று சொல்லி கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
 
“நான் உனக்கு ஸ்டெப் தான சொல்லி கொடுத்தேன். நீ அதை கவனிக்காம என்ன பண்ற?”, என்று வாய் சொன்னாலும், அவள் கைகளும் அவன் முதுகை வளைத்து பிடித்திருந்தது.
 
மென்மையாக சிரித்தவன், “இப்படி கும்முனு முன்னாடி வந்து நின்னு டேன்ஸ் சொல்லி கொடுத்தது உன்னோட தப்பு”, என்றான்.
 
அவனுடைய மீசை அவள் கழுத்திலும், அவன் பேசும் போது அவன் உதடுகள் அவள் காதிலும் படிந்து இம்சையை கொடுத்தது.
 
“ரெண்டு நாள் தான் ஹரி இருக்கு ஹரி. விடு ப்ராக்டிஸ் பண்ணுவோம்”
 
“நீ பேசாம இப்படியே இரு. சீக்கிரம் உன்னை விட்டுட்டு, ப்ராக்டிஸ் ஆரம்பிக்கலாம். இல்லைன்னா விடவே மாட்டேன்”
 
“தெரியாம சொல்லி கொடுக்க வந்துட்டேன் ஹரி. விட்டுறேன். நீ வேணும்னா பாட்டே பாடேன்”
 
“அதெல்லாம் கிடையாது. என் பொண்டாட்டி ஆசை பட்டுட்டா. கண்டிப்பா அவளுக்காக டேன்ஸ் தான் ஆடுவேன். அதையும் நீ தான் இப்படி கிட்ட வந்து வந்து சொல்லி கொடுக்கணும்”
 
“உன் மீசை குத்துது ஹரி”, என்று சொல்லி கொண்டே இன்னும் அவன் நெஞ்சில் சாய்ந்தாள் நந்திதா.
 
அவளுடைய நெருக்கத்தில் இன்னும் அவளுடன் இழைந்தவன், “தாங்கி கோ”, என்று சொல்லி கொண்டே அவள் கழுத்தில் தன் உதடுகளை ஆழமாக பதித்தான்.
 
“ம்ம்”, என்று முனங்கினாள் நந்திதா.
 
“எதுக்கு டி என்னோட சட்டையை போட்டுருக்க?”, என்று கேட்டான் ஹரி.
 
“என் புருஷன் சட்டையை நான் போட்டா, உனக்கு என்ன டா”, என்று மயக்கத்துடன் கேட்டாள் நந்திதா.
 
“எனக்கு என்ன? எனக்கு நல்ல விஷயம் தான். வேற டிரெஸ் போட்டா, கை அங்க அங்க வைக்க முடியாது. இப்ப பாரு ஈஸியா, எங்க வேணும்னாலும் கொண்டு போலாம்”, என்று சொல்லி கொண்டே அவள் வெற்றிடையில் கையை வைத்தான்.
 
“விடு ஹரி, எனக்கு ஒரு மாதிரி இருக்கு”
 
“சரி சரி, ஒரே ஒரு முத்தம் கொடு விடுறேன். அப்புறம் டேன்ஸ் பழகலாம்”, என்றான் ஹரி.
 
“அதெல்லாம் முடியாது விடு”
 
“இப்ப நீ தரலைன்னா, வயித்தில் இருக்குற கை எங்க வேணும்னாலும் போகும். அப்பறம் உன் இஷ்டம்”
 
“ஐயையோ அதெல்லாம் வேண்டாம். எப்பவும் போல நீயே கொடுத்துறேன்”
 
“எப்பவும் வாங்கிட்டே இருக்க கூடாது நந்து. அப்ப அப்ப கொடுக்கணும்”
 
“சரி கண்ணை மூடு தரேன்”
 
“ம்ம் சரி”, என்று சொல்லி கண்களை மூடினான் ஹரி.
 
மெதுவாக அவன் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்தாள் நந்திதா.
 
“கன்னத்துல தானா? சரி பரவால்ல. இப்ப என்னோட முறை”, என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை சிறை செய்தான் ஹரி.
 
அடுத்து சிறிது நேரத்தில், மறுபடியும் டேன்ஸ் பிராக்டிஸ் ஆரம்பித்தது. இந்த முறை அவன் அருகில் போகாமலே சொல்லி கொடுத்தாள் நந்திதா.
 
அடுத்த நாள் அறிவாளி தனமாக லூசாக இல்லாமல், இறுக்கமான சுடிதாரை அணிந்து கொண்டு அவனுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.
 
எந்த வம்பும் பண்ணாமல், ஒழுங்காக டேன்ஸ் படித்த ஹரி கடைசியாக அவள் காதில் குனிந்து, “லூசா இருக்க கூடாதுன்னு இதை போட்டுட்டு வந்துருக்க? ஆனா அதை விட இது இன்னும் நச்சுன்னு இருக்கு. எது எது எங்க…”, என்று சொல்லி கொண்டே வந்தவனின் இதழ்களை தன் விரல்களால் மூடினாள் நந்திதா.
 
இதழ்களில் பதிந்த அவள் விரல்களுக்கு முத்தமிட்டவன், அடுத்து அவள் உதடுகளையும் சிறை செய்தான்.
 
“அவனை டேன்ஸ் ஆடு”, என்று சொன்ன தன் மடத்தனத்தை நொந்து கொண்டாள் நந்திதா.
 
அடுத்த நாள் விழா நன்றாக சென்றது. ஸ்டுடன்ட்ஸ் அனைவரும் அன்று சந்தோசமாக இருந்தார்கள்.
 
அடுத்த நாள் விடுமுறை ஆதலால், ஒரு பழைய சேலையை கட்டி கொண்டு வீட்டை ஒழுங்கு பண்ணி கொண்டிருந்தாள் நந்திதா. அவளுடன் வாயடித்து கொண்டே அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான் ஹரி.
 
கிச்சனில் மேலே ஏறி நின்று கிளீன் செய்து கொண்டிருந்த போது, அங்கு செல்ப்பில் இருந்த ஒரு மரக்கட்டை அவள் முதுகை பதம் பார்த்தது. “ஆ அம்மா”, என்று அலறி கொண்டே கீழே விழுந்தாள் நந்திதா.
 
“நந்து என்ன மா ஆச்சு?”, என்று கத்தி கொண்டே அங்கு வந்தான் ஹரி.
 
“பின்னாடி இருந்த கட்டை, முதுகில் இடிச்சிருச்சு போல ஹரி. வலிக்குது”
 
“என்னை கூப்பிட வேண்டியது தான? உன்னை யாரு மேல ஏற சொன்னா? திரும்பு என்னனு பாப்போம்”, என்று சொல்லி கொண்டே அவளை திருப்பினான்.
 
அங்கே அவளுடைய சட்டை காயத்தை மறைத்திருந்தது.
 
“நீ எந்திரி”, என்று சொல்லி அவளை எழுப்பி விட்டவன், அவளை படுக்கை அறைக்கு அழைத்து சென்றான்.
 
அவளை கட்டிலில் அமர வைத்தவன், “காயம் தெரியலை, சட்டையை கழட்டு”, என்றான்.
 
திகைத்து அவனை பார்த்து விழித்தாள் நந்திதா.
 
“என்ன முழிக்கிற நந்து? காயம் தெரியலை. சட்டையை கழட்டு”
 
“என்ன விளையாடுறீங்களா? அதெல்லாம் பெரிய காயம் இல்லை. சின்ன காயம் தான். நான் பாத்துக்குறேன். நீங்க போய் மித்த வேலையை பாருங்க”
 
“லூசா நீ? காயம் முதுகுல பட்டுருக்கு. உன்னால எப்படி பாக்க முடியும்? அது மட்டும் இல்லாம சிராய்ப்பு மாதிரி பட்டிருக்கா? இல்லை ரத்தம் வருதான்னு பாக்கணும். கழட்டு முதலில்”
 
“அதெல்லாம் முடியாது. நீங்க போங்க இங்க இருந்து”
 
“என்கிட்ட அடி வாங்காத நந்திதா”
 
“நீங்க தான் பிரச்சனை பண்றீங்க?”
 
அப்போது தான் அவள் தயக்கத்தையே உணர்ந்தான் ஹரி. “என்னை உனக்கு பிடிக்கவே இல்லை அப்படி தான நந்திதா? என்னை யாரோன்னு தான நினைக்கிற? நான் உன்னை கல்யாணம் பண்ணது ஏதோ உனக்கான தியாகம்னு சொல்லிட்டு திரியுற. ஆனா அப்ப நீ என்னை கல்யாணம் செஞ்சதும், சும்மா ஒரு கட்டாயத்துக்கு தான? என்னை பிடிச்சு, என்னை விரும்பி  கல்யாணம் செய்யலை, அப்படி தான?”, என்று கேட்டான்.
 
“அப்படி எல்லாம் இல்லை ஹரி. எனக்கு உண்மையிலே உங்களை  ரொம்ப பிடிக்கும்”
 
“பொய் சொல்லாத”
 
“இப்ப எதுக்கு அந்த பேச்சு ஹரி?”
 
“ஆமா உனக்கு என்னை பிடிக்கலை. நீ அன்னைக்கே சொல்லிட்ட, நான் உன் புருஷன் இல்லைன்னு. இப்ப  உனக்கு அடி பட்டுருச்சுனு தான கழட்ட சொன்னேன்? என்னமோ தப்பா யோசிச்சு, அப்படி சொன்ன மாதிரி சொல்ற? இத்தனை நாள் உன்கூட தான படுத்துருக்கேன்? என்னை மீறி எதாவது செஞ்சிருக்கேனா சொல்லு? அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா போய்ட்டேன்ல? கீழ மல்லிகா அம்மாவை வர சொல்றேன்”, என்று சொல்லி விட்டு நகர பார்த்தவனின் கையை பிடித்து இழுத்தாள் நந்திதா.
 
திரும்பி அவளை பார்த்தான் ஹரி. குனிந்த தலை நிமிராமல் “எனக்கு உன்னை தான் ரொம்ப பிடிக்கும். உனக்கு தான் என்னை பிடிக்காது. அன்னைக்கு கோபத்துல நான் அப்படி சொன்னாலும், அதுக்கு அப்புறம் உன்கூட நெருக்கமா இருக்கணும்னு தான் நினைச்சேன். நைட் கூட உன்னை கட்டி பிடிச்சு தான் தூங்குறேன். நீ தான் மண்ணு மாதிரி படுத்திருக்க.  இப்ப நான் உன்னை வெளிய போக சொன்னதுக்கு காரணம், இது வரைக்கும் யார் முன்னாடியும் நான் டிரஸ் கூட மாத்துனது இல்லை. அதான் ஒரு மாதிரி இருந்தது. இரு. நீயே மருந்து போடு. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை”, என்று சொல்லி முடித்தவள் அவனுக்கு முதுகு காட்டி, திரும்பி அமர்ந்து, சட்டையை கழட்டி விட்டு, முந்தானையை வைத்து முன்னால் மட்டும் மூடி கொண்டாள்.
 
அவள் முதுகை பார்த்தவனுக்கு, அந்த சிராய்ப்பு கண்ணில் பட்டது.  ஆனால் அது கொஞ்சம் நீளமாக இருந்தது.
 
“ரொம்ப சிராய்ப்பு இருக்கு. இப்படியே விட்டா காந்தும். இரு ஆயின்மென்ட் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு சென்றான்.
 
“இவன் முன்னாடி இப்படி உக்காந்துருக்கேன். எதாவது பீலிங் வருதா, இந்த  பன்னிக்கு”, என்று நினைத்தவள் அப்படியே கட்டிலில் குப்புற படுத்து விட்டாள்.
 
மருந்தை எடுத்து கொண்டு வந்தவன், அவள் முதுகில் அதை போட்டு விட்டான். அவன் கை பட்டதும் உடல் முழுவதும் ஒரு கிளர்ச்சியை அனுபவித்தாள் நந்திதா.
 
இதில் கொடுமை என்னவென்றால் மருந்து  போடும் போது, அவளுடைய உள்ளாடை கொக்கியையும் அவன்  கழட்டி விட்டது தான்.
 
“அட பாவி என்ன இப்படி செஞ்சிட்டான்?”, என்று நினைத்து கொண்டு “ஹரி என்ன பண்ற? அதை போடு”, என்று சொன்னாள்.
 
“முடியாது. அங்கேயும் காயம் இருக்கு. அப்புறம் அழுத்தும். பேசாம இரு”
 
“ப்ளீஸ் ஹரி. சரி நானே போடுறேன்”, என்று சொல்லி விட்டு கையை திருப்பி கொண்டு வரும் போது அது மேலும் கழறுவதை உணர்ந்து அப்படியே அசையாமல் படுத்தாள்.
 
“சொன்னதை கேளு. இப்படியே படுத்துரு”, என்று சொல்லி விட்டு மருந்தை போட்டு விட்டான்.
 
அதன் பின் “நான் மிச்ச வேலை எல்லாம் பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு நகர பார்த்தவனுக்கு, அப்போது தான் அவள் சொன்ன வார்த்தை நினைவு வந்தது.
 
“மண்ணு மாதிரி படுத்துருக்கேன்னு சொல்றா பாரு? நானே இன்னும் ஒரு நாள் எப்படா முடியும்னு காத்துட்டு இருக்கேன். இதுல இவ இப்படி பேசுறா. இவளை இன்னைக்கு என்ன பண்றேன் பாரு”, என்று நினைத்து கொண்டு, “முதுகு அப்படியே பள பளன்னு பளிங்கு மாதிரி இருக்கு நந்து”, என்று வம்பிழுத்தான்.
 

Advertisement