Advertisement

அத்தியாயம் 6
கனவில் கண்ட உன் பிம்பத்தை
என் இதயத்தில் வரைகிறேன்
காதல் என்னும் தூரிகையால்!!!
“என்ன ஹரி சொல்ற?”
 
“ஆமா டா நாம டூவல்த் படிக்கும் போது, எஸ். டீ ஸ்கூல்ல இன்டர்நேஷனல் சயின்ஸ் எக்சிபிஷன் நடந்ததே. நீ கூட வெட்டுண்ட தலை பேசும் அப்படிங்குற செட்டப் செஞ்சியே. ஒரு வாரம் நடந்தது நினைவு இருக்கா?”
 
“ஆமா இருக்கு”
 
“அன்னைக்கு நீ என்ன செஞ்ச?”
 
“என்ன செஞ்சேன்? ஒரு வாரம் ஸ்கூல் கட். அங்க வர பொண்ணுங்களை எல்லாம் சைட் அடிச்சேன். வித விதமான சாப்பாடுன்னு செமையா இருந்தது மச்சி. அதுக்கும் நீ சொல்ல வரதுக்கும் என்ன சம்பந்தம்?”
 
“இருக்கு டா. இரு சொல்றேன். நீ அது மட்டுமா செஞ்ச? இன்னொன்னும் செஞ்ச”
 
“என்ன செஞ்சேன்?”
 
“லவ் பண்ண. நினைவு இருக்கா?”
 
“ஹா ஹா அது லவ் இல்லை டா மச்சான். காமெடி. ஒரு வாரமும் ஒரு குண்டு பூசணி என் பின்னாடியே அலைஞ்சது. அதையா டா நீ லவ் பண்ண? இருந்தாலும் உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமாவா இருக்கணும் ஹரி”
 
“டேய் அரை மண்டை. முழுசா கேளு டா. அங்க ஸ்டால் போட்டுருந்தோம்ல? அப்ப உனக்கு அடுத்து நான். எனக்கு அடுத்து ஒரு பொண்ணு. அதுக்கு பிறகு தான அந்த குண்டு பூசணி இருந்தா”
 
“ஆமா டா மச்சான். நல்லதா போச்சு. நீங்க ரெண்டு பேரும் இடைல இருந்தீங்க. இல்லைன்னா நான் அந்த பூசணி கிட்ட மாட்டிருந்துருப்பேன். அந்த வயசுலே எனக்கு லவ் லட்டர்லாம் எழுதி கொடுத்து செம இம்சை டா”
 
“இம்சையா? அப்ப மட்டும் நீயும் பதிலுக்கு அவளை லவ் லுக்கு விட்டுட்டு இருந்த?”
 
“அது எல்லாம் சும்மா பன் மச்சி. அவ எந்த ஊரு, எந்த ஸ்கூல்னு கூட இப்ப எனக்கு மறந்துட்டு. ஒரு வாரம் பகல் முழுவதும் ஒண்ணா இருக்க போறோம். சும்மா என்ஜாய்மென்ட் வேண்டாமா? என்னோட அழகுல அந்த பூசணி மயங்கிட்டா. திருப்பி பாக்கலைன்னா, அவ பீல் பண்ணுவா ஹரி. அதுக்கு தான் பிரியுற வரைக்கும் சும்மா அவ பார்வைக்கு பதில் பார்வை பார்த்துட்டு இருந்தேன்”
 
“ஆனா கடைசி நாள் அழுத?”
 
“அது சும்மா டா. அன்னைக்கு அந்த பூசணி எப்படி அழுதா, என்னை பார்த்து. நிஜமாவே அவ அழுகையை பார்த்து எனக்கும் கஷ்டமா இருந்துச்சு டா. நானும் அழுத்துருக்கேன் போல? இப்ப மறந்துட்டு டா. சரி இப்ப எதுக்கு இந்த பிளாஷ் பேக்?”
 
“ஹ்ம்ம் இரு சொல்றேன். அன்னைக்கு என் பக்கத்துல நின்னாளே. அவ தான் என்னோட சுவீட்டி”
 
“டேய் மச்சான். அந்த குள்ளச்சியா டா? அவ தான் அந்த குண்டு பூசணிக்கு தூது வந்தா. அப்ப அவ நயன்த்தோ என்னவோ தான டா படிச்சா?”
 
“ஆமா டா. ஆனா அப்பவே என் மனசுல பதிஞ்சவ. உன்னால தான் மச்சான் எனக்கு அவ மேல லவ்வே வந்தது”
 
“நினைச்சேன் டா. நீ அப்ப என்கூட பேசாம அவ கூட தான பேசிட்டே இருப்ப. ஆனா நான் என்ன செஞ்சேன்?”
 
“உனக்காக தான, அவ அந்த பூசணிக்கு தூது வந்தா. கடைசி நாள் உன்னை பிரிய முடியாம, உன் ஆள் அழுததை பார்த்து என்னோட ஆள் என்கிட்ட ஒரே புலம்பல்”
 
“என்னன்னு?”
 
“உண்மையான காதல் பிரிய போகுதுல்ல. பூரணி உங்க பிரண்டை நினைச்சு ரொம்ப அழுறா. எனக்கு கஷ்டமா இருக்குன்னு என் ஆள் ஒரே அழுகை. அப்ப இருந்து அந்த வெகுளியான தேவதைக்கு நான் அடிமையாகிட்டேன் முரளி”
 
“என்ன ஹரி, உன் காதல் சின்ன பிள்ளை தனமா இருக்கு?”
 
“ஹ்ம்ம் அப்படி தான் இருக்கு. ஆனா என்னால அவளை மறக்கவே முடியலை”
 
“சரி இப்படி உருகுறவன், அப்புறம் எதுக்கு டா நந்திதாவை கல்யாணம் செஞ்ச?”
 
“உனக்கு புரியலையா டா முரளி. அந்த தேவதை நந்திதாவே தான்”
 
“என்னது? என்ன ஹரி சொல்ற? அவளா இது?”
 
“ஆமா டா”
 
“ஆமா நந்துன்னு பேர் இப்ப தான் நினைவு வருது. அப்ப கொஞ்சம் சார்ட்டா இருந்தா டா”
 
“அந்த வயசுல அவ்வளவு உயரம் தான் இருக்க முடியும்”
 
“ரொம்ப சந்தோசம் டா. உன் லவ் சக்ஸஸ் ஆனதுல? ஆனா அதுக்கு அப்புறம் நீ எப்ப அவளை பாத்த? அவளுக்கு உன் லவ் தெரியுமா?”
 
“இல்லை முரளி. ஆனா அன்னைக்கே அவளோட ஸ்கூல் ஐ டி கார்டை சுட்டுட்டு வந்துட்டேன். அப்புறம் நான் காலேஜ் படிக்க போய்ட்டேன். செகண்ட் இயர் படிக்கும் போது தான் ஒரு நாள் ரோட்ல வச்சு பாத்தேன். அப்பவும் அதே ஸ்கூல் யூனிபார்ம் தான் போட்டிருந்தா. சரி எங்க போயிற போறான்னு நினைச்சு அப்பறம் விட்டுட்டேன். படிச்சு முடிச்சு அவ வீட்டை தேடி போகும் போது தான், அங்க வேற யாரோ இருந்தாங்க. அப்புறம் அவளை பாக்கலை. அதுக்கு பிறகு தான் அன்னைக்கு அந்த ரோட்ல அடி பட்டு கிடந்தா. அப்படியே நிஜமான தேவதை மாதிரியே இருந்தா டா. அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே”
 
“நீ தப்பு பண்ணிட்ட மச்சான். அவ ஸ்கூல் தெரியும். வீடு தெரியும். அப்பவே லவ் சொல்லி கரெக்ட் பண்ணிருக்கலாம்ல?”
 
“இல்லை டா. அது தப்பு. அந்த வயசுல அது விஷத்தை விதைக்கிற மாதிரி. வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாத வயசில் காதல்னு சொல்லி எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் திசை மாத்த சொல்றியா? அதுக்கான மெச்சூரிட்டி வந்த பிறகும் எனக்கு தான் அவ அப்படினு ஒரு உறுதி பண்ண தான் அவங்க வீட்டுக்கு போனேன். கல்யாணம் பண்ணவும் இல்லை காதல் பண்ணவும் இல்லை”
 
“ஒரு வேளை அவ உனக்கு கிடைக்காம போயிருந்தா, என்ன ஹரி செஞ்சிருப்ப?”
 
“விடை தெரியாத கேள்விகள் அப்படினு ஒரு வாசகம் கேள்வி பட்டுருக்கியா? எடுத்து காட்டுக்கு, முதல் மனிதனோ, இல்லை மனுஷியோ எப்படி வந்தாங்க? அவங்க மட்டும் இல்லை அனிமல்ஸ், பேர்ட்ஸ் எல்லாத்துலயும் முதல் ஜோடி எப்படி வந்தது? பைபிள்ல கடவுள் இப்படி படைச்சாரு, அப்படி படைச்சாருன்னு போட்டிருக்கும். அது உண்மையா இருந்தா கூட, நிறைய நேரம் நம்ம மனசு ஏத்துக்காது. அதே மாதிரி தான் இதுவும். இந்த கேள்விக்கு விடை தெரியாத மாதிரி தான் நீ கேக்குற கேள்வியும். அவ கிடைக்கலைன்னா என்ன செஞ்சிருப்பேன்னு சொல்ல தெரில”
 
“வேற கல்யாணம் பண்ணாம, அவளையே நினைச்சிட்டு இருந்துருப்பியா?”
 
“அப்படி எல்லாம் இல்லை டா. எங்க இருக்கான்னே தெரியாத ஒருத்திக்காக எனக்காகவே வாழற எங்க அம்மா அப்பாவை கஷ்ட படுத்த முடியுமா சொல்லு. கண்டிப்பா எங்க அம்மா அப்பா பாக்குற பொண்ணை கல்யாணம் செஞ்சிருப்பேன். எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கல்யாணம்னு எங்க வீட்ல பேசும் போதே என்னோட காதலையும் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டேன். அப்புறம் தான் அவங்களும் என்னோட காதல் சேரும்மான்னு வெயிட் பண்ண ஆரம்பிச்சாங்க. கடவுள் அவளை என் கண்ணுல காமிச்சிட்டார். அவ கிட்ட இன்னும் சொல்லலை. முழு கதையும் அவ கிட்ட சொல்லி, அவ யோசிச்சு, என்னோட காதலை ஏத்துக்கிட்டு, என்னை காதலிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ள மறுபடியும், அவ என்னை விட்டு பிரிஞ்சிருவாளோன்னு பயம். அதுக்கு தான் ஏதேதோ கதையை சொல்லி கல்யாணத்தை முடிச்சாச்சு”
 
“இனி என்ன செய்ய போற?”
 
“என்ன செய்யணும்? அவளை என்னை காதலிக்க வைக்கணும். அதெல்லாம் ஈசி டா மச்சான். பொண்ணுங்களுக்கு கல்யாணம் முடிஞ்சாலே இயல்பா காதல் வந்துரும். ஆனா என்னோட நந்துவுக்கு கடமையா இல்லாமல் நிஜமாவே எப்ப காதல் வருதோ அப்ப தான் அவ கூட என் வாழ்க்கையை ஆரம்பிப்பேன் முரளி”, என்று ஹரி சொன்ன பிறகு எதுவும் சொல்லாமல் அமைதியாய் யோசித்து கொண்டிருந்தான் முரளி.
 
“என்ன முரளி யோசிக்கிற?”
 
“இல்லை அப்படி இருந்த நந்திதா, இப்படி ஆகிட்டா. அப்படி இருந்த பூசணி இப்ப எப்படி இருப்பான்னு யோசிச்சேன்”
 
“நல்ல யோசனை தான் முரளி. டபுள் ஆகுறதுக்கும் வாய்ப்பு இருக்கு”
 
“ஆமா டா ஹரி. சரி அப்புறம் அது வந்து, நான் குள்ளச்சின்னு சொன்ன விசயத்தை நந்திதா கிட்ட சொல்லிறாத டா”
 
“ஹா ஹா அது எப்படி டா? பிளாஷ்பேக்னா மறைக்காம எல்லாம் சொல்லணும்”, என்று சிரித்தான் ஹரி.
 
“ஐயோ மச்சான். வேண்டாம் டா தப்பா நினைக்க போறா”
 
“சரி சரி நான் சொல்லலை”
 
“சரி ஹரி. ஹேப்பி மேரிட் லைஃப். நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீ ஊருக்கு போற அன்னைக்கு வரேன்”, என்று சொல்லி எழுந்தான் முரளி.
 
“சரி டா போன் பண்ணு”, என்று விடை கொடுத்தான் ஹரி.
 
அவன் போன பின்பு தன்னுடைய அறைக்குள் போகும் முன், அவள் அறையை திரும்பி பார்த்தான் ஹரி.
 
“மேடம் தூங்குறாங்க”, என்று சிரித்து கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று அவளுடைய ஐ டி கார்டு எடுத்து பார்த்தான் ஹரி.
 
அவன் புகை படத்தில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள் நந்திதா.
 
அன்று இரவு விஜி செய்த அலங்காரத்துடன், ஹரியின் அறையில் அமர்ந்திருந்தாள் நந்திதா. அறையில் படத்தில் வருவது போல எந்த அலங்காரமும் இல்லை.
 
“எவளையோ லவ் பண்ணிட்டு, என்னை கல்யாணம் பண்ணிருக்கான். எவ்வளவு தைரியம் இருக்கணும்? இவன் எப்படி என்னை விட்டுட்டு வேற பொண்ணை லவ் பண்ணலாம்? இன்னைக்கு வரட்டும்”, என்று பொருமிக்கொண்டு அமர்ந்திருந்தாள். மதியம் முழுவதும் அழுததால், இப்போது அவள் மனம் சாதாரணமாக இருந்தது.
 
“எப்படி உள்ள போக? ஒரு மாதிரி இருக்கே. அவளை எப்படி பாத்து முதலில் பேச? எல்லா முதல் ராத்திரிலயும் எல்லாரும் என்ன செய்வாங்க? எப்படி ஆரம்பிப்பாங்க? கூச்சமா இருக்கே”, என்று நினைத்து கொண்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் ஹரி.
 
சிறியவர்களுக்கு சங்கடத்தை கொடுக்க கூடாது என்று நினைத்து விஜியும், சுதாகரும் தங்கள் அறைக்கு சீக்கிரமே சென்று விட்டார்கள்.
 
மணி ஒன்பதை தாண்டியது. “இதுக்கு மேல இங்க இருந்து என்ன செய்ய? போய் அவ கிட்ட என் காதலை சொல்ல வேண்டியது தான். அப்ப அவ எப்படி முழிக்கிறான்னு பாக்கணும். என் செல்லம் அழகா வெக்க படும். அப்புறம் அன்னைக்கு  மாதிரி பக்கத்துல போய் முத்தத்தில் ஆரம்பிக்கணும்”, என்று நினைத்து கொண்டு உற்சாக மனநிலையில் கீழே இறங்கி வந்த ஹரி, அறை கதவை திறந்து உள்ளே வந்தான். கட்டிலில் அமர்ந்திருந்த நந்திதா அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு குனிந்து கொண்டாள்.
 
அவளை பார்த்து சிரித்து விட்டு, கதவை பூட்டி தாழ்பாள் போட்டான். அடுத்து மெதுவாக அவள் அருகே வந்து கட்டிலில் அமர்ந்து, அவளை பார்த்தான். தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அவள் .
 
“எதாவது பேச்சை ஆரம்பி டா”, என்று மனசாட்சி சொன்னவுடன், மெதுவாக கையை நீட்டி அவள் கையை தொட்டான்.
 
அடுத்த நொடி சீற்றத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்த நந்திதா “எடு டா கையை”, என்று சொன்னாள்.
 
திகைத்து விழித்தான் ஹரி. “சொல்றது கேக்கலை? உன்னை தான் சொல்றேன். எடு கையை. எடுடா”
 
“என்னது டாவா?”
 
“பின்ன டா இல்லாம, வாங்க போங்கன்னு மரியாதை கொடுப்பேன்னு நினைச்சியா?”
 
“எதுக்கு இப்படி திடிர்னு கோப படுறா?”, என்று நினைத்து கொண்டு “என்ன நந்திதா? எதுக்கு இந்த கோபம்?”, என்று கேட்டான்.
 
“கோப படாம, உன்னை கொஞ்சுவேனு நினைச்சியா?”
 
“ஹ்ம்ம் ஆமா. ஐயோ இல்லை”, என்று உளறினான் ஹரி.
 
“எவ்வளவு தைரியம் இருந்தா, இப்படி ஒரு காரியம் செஞ்சிருப்ப? என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது?”
 
“எப்படி எல்லாமோ தான் தெரியுது. நீ எதை பத்தி கேக்குற?”
 
“என்ன நக்கலா? இந்த நையாண்டி பேசுறதை எல்லாம் என்கிட்டே வச்சிக்காத”
 
“நந்திதா கல்யாணம் முடிஞ்சாலே, புருசனுக்கு மரியாதை கொடுக்க கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா? நேத்து எல்லாம் எப்படி மரியாதையா ஹரி வாங்க, ஹரி போங்கன்னு பேசுன? இப்ப இப்படி பேசுற? இது கூட கிக்கா  நல்லா தான் இருக்கு. ஆனா நீ கோபத்தில் பேசுறது தான், நல்லா இல்லை”
 
“ஓஹோ உனக்கு மரியாதை கேக்குதோ? அது ஒன்னு தான் கேடு உனக்கு. போடா”
 
“நான் என்ன செஞ்சேன் நந்திதா?”
 
“என்ன செஞ்சியா? எவ டா அந்த ஸ்வீட்டி? அவளை லவ் பண்ணிட்டு, என்னை எதுக்கு டா கல்யாணம் பண்ண? அப்படியே அவளை நினைச்சு உருகுற?”
 
அவள் கேள்வியில் சிரிப்பு வந்தது ஹரிக்கு. “கள்ளி, அரைகுறையா முரளி கூட பேசுனதை கேட்டுருக்கா”, என்று நினைத்து கொண்டு “அப்படி யாருமே எனக்கு தெரியாதே”, என்று பாவமாய் சொன்னான்.
 

Advertisement