Advertisement

அத்தியாயம் 5
உன்னைப் பற்றிய
நினைவுகளை சுமந்து
நிற்கும் தருணத்தில்
என் மீது காதல்
பூக்குமா என்னவனே!!!
 
அந்த வாரம் வெளியே செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்தான் ஹரி. பத்திரிகை அடிப்பது முதல், சாப்பாடு வரைக்கும் ஆர்டர் சொல்லி விட்டான். அதே நேரம் நந்திதாவும், விஜியும் தேவையான பொருள்கள் எல்லாவற்றையும் வாங்கினார்கள்.
 
சுதாகரால் அதிக நேரம் வெளியில் அலைய முடியாததால், வீட்டில் இருந்தே அவரால் செய்ய முடிந்த வேலை எல்லாம் செய்தார்.
 
அவன் வேலைக்கு கிளம்புவதற்க்கு முந்தைய நாள் இரவு ஹரி கிளம்புவதுக்காக, எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டிருந்தான்.
 
“அங்க போய் எங்க தங்க போறன்னு தெரியலை. போய் தான் வீடு தேடனும். அதுக்குள்ளயே நிறைய டிரெஸ் கொண்டு போக வேண்டாம் ஹரி. ஒரு பேக் மட்டும் கொண்டு போ”, என்று சொல்லி விட்டாள் விஜி.
 
“அதுவும் சரி தான்”, என்று சொல்லி ஒரு பையை மட்டும் எடுத்து வைத்தான்.
 
அதே நேரம் இங்கே நந்திதா சோகத்தில் இருந்தாள். “கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. ஒரு காதல் பார்வை என் பக்கம் வீசுறானா பாரு. பாவி, நான் தான் இவனை சுத்தி சுத்தி வர வேண்டி இருக்கு”, என்று தவித்தாள்.
 
ஆனால் அவளுக்கு என்ன தெரியும்? அவன் அவனையே கன்ட்ரோல் செய்து கொண்டு இருப்பது. அது மட்டும் இல்லாமல் எல்லா வேலையும் அவனே செய்வதால், அவளை கவனிக்கவும் நேரம் குறைவு தான். அந்த நேரத்திலும், “காதலை காட்டினால் எல்லா விஷயமும் சொல்ல வேண்டி வரும். கல்யாணம் வரைக்கும் பொறுமையாக இருக்கணும்”, என்று நினைத்தான் ஹரி.
 
இரவு உணவு முடிந்ததும் எல்லாம் எடுத்து வைத்து ஹால்க்கு வந்தான் ஹரி.
 
“ஆல் தி பெஸ்ட் ஹரி”, என்று வாழ்த்து சொன்னாள் நந்திதா.
 
“ஹ்ம்ம் தேங்க்ஸ் நந்திதா”, என்று சொன்னான் ஹரி.
 
“போய் போன் பண்ணு பா”, என்று சொன்னார் சுதாகர்.
 
“சரி பா”
 
“பத்திரமா போ சரியா?”, என்று அவன் கன்னத்தை தடவினாள் விஜி.
 
“சரி மா. கண்டிப்பா பத்திரமா போறேன். நான் லீவு கிடைச்சா, முன்னாடியே வரேன். அப்படி இல்லைனா வெள்ளிக்கிழமை கிளம்பி சனிக்கிழமை வந்துருவேன்”
 
“சரி பா. சந்தோசமா போய்ட்டு வா “
 
“ஹ்ம்ம் சரி மா. போய்ட்டு வரேன் அப்பா. மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுங்க. பை நந்திதா. தேவையானது எல்லாம் அம்மா கூட போய் வாங்கிக்கோ. அப்புறம் அம்மா, நாளைக்கு என்னோட பிரண்ட் முரளி வருவான் . நீங்க மிச்ச இருக்குற வேலை எல்லாம் அவன் கிட்ட கொடுத்துருங்க. பத்திரிகை கொடுக்குற வேலை மட்டும் நீங்க பாத்துக்கோங்க. மித்தது எல்லாம் அவன் பாத்துப்பான். அவன் கிட்ட சொல்லிட்டேன். போய்ட்டு வரேன்”
 
“சரி பா”, என்று சொல்லி வழி அனுப்பினார்கள்.
 
அவன் தென்காசிக்கு அடுத்த நாள் காலையில் சேர்ந்தான். அதே நேரம் நந்திதா குளித்து முடித்து அவள் அறையில் இருந்து, வெளியே வந்தாள்.
 
“என்ன மா நந்திதா? காலைலே குளிச்சிட்டியா? காபி குடிக்கிறியா?”, என்று கேட்டாள் விஜி.
 
“ஹ்ம்ம் ஆமா அத்தை. சரி குடுங்க குடிப்போம். நீங்களும் மாமாவும் குடிச்சாச்சா?”
 
“நாங்க அப்பவே ஆச்சு, இரு சூடு பண்றேன்”, என்று அடுப்பில் வைத்தாள்.
 
அப்போது அழைப்பு மணி ஒலித்தது. “முரளி வந்துருக்கான்னு நினைக்கிறன் மா”, என்று சொன்னாள் விஜி.
 
“நீங்க இருங்க அத்தை. நான் கதவை திறக்கிறேன்”, என்று வெளியே போனாள் நந்திதா.
 
கதவை திறந்த நந்திதா, அப்படியே மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து போனாள். அங்கே இடுப்பில் குழந்தையுடன், மற்றொரு கையில் ஒரு பையுடனும் புன்னகையுடன் நின்றாள் வனிதா.
மனதில் எழுந்த குழப்பத்தை மறைத்து கொண்டு “உள்ளே வாங்க”, என்று அழைத்தாள் நந்திதா.
 
“நீங்க தான் நந்திதாவா? எங்க மச்சானை நீங்க தான் கல்யாணம் செஞ்சிக்க போறீங்களா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தாள் வனிதா.
 
“ஹ்ம்ம் ஆமா”, என்று சொல்லி கொண்டே வனிதாவின் கையில் இருந்த பேகை, வாங்கி கொண்டாள் நந்திதா.
 
“யாரு மா வந்துருக்குறது?”, என்று கேட்டு கொண்டே வந்த விஜி, வனிதாவை பார்த்து “ஏய் வனிதா, வா வா, எப்ப வந்த? சிவா குட்டி எப்படி இருக்க?”, என்று கேட்டு கொண்டே வனிதாவின் குழந்தையை தூக்கி கொண்டாள்.
 
“மச்சானுக்கு கல்யாணம்னு சொன்னீங்களே அத்தை? அதான் ஒத்தைல கஷ்ட படுவீங்கன்னு, அம்மா போக சொன்னாங்க. அவங்க எல்லாம் ரெண்டு நாள் கழிச்சு வருவாங்க. என் வீட்டுக்காரர் தான் பஸ் ஏத்தி விட்டார்”, என்று சிரித்து கொண்டே சொன்னாள் வனிதா.
 
“கல்யாணம்”, என்ற வார்த்தையிலே தான் விஜிக்கு உரைத்தது தான் சொன்ன பொய்.
 
“ஐயோ இவளை கட்டி வைப்பேன்னு தான, நந்துவை மிரட்டுனேன். இவ கல்யாணத்தன்னைக்கு வருவா கூட்டத்தில் தெரியாதுன்னு நினைச்சேனே. இன்னைக்கே வந்து காரியத்தை கெடுத்துட்டாளே”, என்று நினைத்து கொண்டே நந்திதா புறம் திரும்பினாள் விஜி.
 
அங்கே கைகளை கட்டி கொண்டு, முகத்தில் ஒரு சிறு சிரிப்புடன் கூர்மையாக விஜியை பார்த்து கொண்டிருந்தாள் நந்திதா. அவளை பார்த்து, விஜிக்கு நாக்கு வறண்டது.
 
“என்ன அத்தை என்னவோ போல இருக்கீங்க? இது நந்திதா தான? நீங்க போன்ல சொன்ன மாதிரி அழகா இருக்காங்க. ஹரி மச்சானுக்கு பொருத்தமான பொண்ணு”, என்று சிரித்தாள் வனிதா.
 
“ஹி ஹி ஆமா”, என்று அசடு வழிந்தாள் விஜி.
 
“சரி வனிதா, என்ன நின்னுட்டே இருக்கீங்க. நீங்க உள்ள போய் குளிங்க. பையனை நான் வச்சிக்கிறேன். அப்புறம் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்”, என்று சொன்னாள் நந்திதா.
 
“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி கொண்டே உள்ளே சென்றாள் வனிதா.
 
அவள் போன பிறகு “நந்து அது வந்து…”, என்று இழுத்தாள் விஜி.
 
“என்ன இங்க சத்தம்? யார் வந்துருக்கா?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்தார் சுதாகர்.
 
அப்போது தான் விஜி கையில் இருந்த குழந்தையை பார்த்த சுதாகர் “ஓ வனிதா வந்துருக்காளா?”, என்று சகஜமாக கேட்டு விட்டு “ஐயையோ”, என்று அலறினார்.
 
இப்போது தான் தன் மனைவி, திரு திரு என்று முழித்து கொண்டிருப்பதே அவர் கண்ணில் பட்டது. அவருக்கு சமமாக சுதாகரும், நந்திதாவை பார்த்து முழித்தார். விஜி அருகில் போய் நின்று கொண்டார் சுதாகர்.
 
நந்திதாவை என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல், முழித்து கொண்டிருந்தவர்களை பார்த்து சிரிப்பு வந்தது நந்திதாவுக்கு.
 
இருவரின் அருகில் சென்றாள் நந்திதா. “என்ன சொல்ல போறா?”, என்று நினைத்து கொண்டு இருவரும் பார்வையை பரிமாறி கொண்டார்கள்.
 
அமைதியாக போய் நின்ற நந்திதா, “அத்தை உங்களுக்கு ஒன்னு கொடுக்கணும்”, என்று சொன்னாள்.
 
“விஜி, என்ன விஜி கொடுக்க போறா? நீ சொன்ன பொய்க்கு அடி கொடுக்க போறாளோ?”, என்று விஜியின் காதில் சொன்னார் சுதாகர்.
 
“ரொம்ப நாள் உங்களுக்கு இந்த ஆசை இருக்கும் போல? உங்களை அப்புறம் கவனிச்சுக்குறேன்”, என்று சொன்ன விஜி “ஹி ஹி, நந்திதா நேரம் ஆகிட்டு பார். உனக்கு பசிக்கும். நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்”, என்று கழண்டு கொள்ள பார்த்தாள்.
 
“சாப்பாடு எல்லாம் அப்புறம். அதுக்கு முன்னாடி உங்களுக்கு கொடுத்தே ஆகணும்”, என்று சொல்லி கொண்டே விஜி அருகில் சென்ற நந்திதா, விஜியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்தாள்.
 
பெரியவர்கள் இருவரும் சிரித்தார்கள். “உங்க ரெண்டு பேருக்கும் மருமகளா வந்ததுக்கு நான் ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கணும் அத்தை”, என்று சொல்லி கொண்டே விஜியின் தோளில் சாய்ந்து கொண்டாள் நந்திதா.
 
“எங்களுக்கு மருமகளா உன்னை விட்டா யாரும் வர முடியாது மா. இதுக்கு எல்லாம் கண்ணு கலங்கலாமா?”, என்று சமாதான படுத்தினாள் விஜி.
 
“ஒண்ணுமே இல்லாத என்னை நீங்க பாசமா பாத்துக்கிட்டதும் இல்லாம, பொய் சொல்லி உங்க பையனுக்கே கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்சிருக்கீங்க. என்னோட தனிமையுணர்வை போக்க, எனக்கு சந்தோசத்தை கொடுக்க, நீங்க இவ்வளவு யோசிச்சிருக்கீங்கன்னு நினைக்கும் போது, எனக்கு சந்தோசமா அதே நேரம் அழுகையா வருது அத்தை”
 
“விடு நந்து. இனி உன்னோட வாழ்க்கைல அழுகையே வர கூடாது. சரி வனிதா விஷயம், உனக்கு தெரிஞ்சிட்டுன்னு ஹரிக்கு சொல்ல வேண்டாம். அவன் வந்து தெரிஞ்சிக்கட்டும்”
 
“ஹ்ம்ம் சரி அத்தை”
 
“அப்புறம் நந்திதா, அது வந்து ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்”
 
“சொல்லுங்க அத்தை”
 
“இல்ல, உங்க வீட்டுக்கு சொல்லணும்ல மா? என்ன தான் கோபமா இருந்தாலும், இப்ப அவங்க மனசு மாறிருப்பாங்க. உன்னோட கல்யாணத்தை பாக்கணும்னு நினைப்பாங்க. சொல்றது தான மா முறை?”
 
அவரை கண்ணீருடன் பார்த்த நந்திதா “என்னை செத்து போயிருக்கலாம்னு சொன்னாங்க அத்தை. அது கூட பரவால்ல, ஆனா”, என்று சொல்லி சுதாகரை ஒரு பார்வை பார்த்து விட்டு “கன்னியா இல்லையான்னு சோதனை செய்ய கூட்டிட்டு போனாங்க. அங்க அந்த டாக்டர், உனக்கும் உன் புருஷனுக்கும் பிரச்சனையா? சேந்து வாழாமலே எப்படி மா குழந்தை பிறக்கும்னு கேட்டாங்க? அவமானமா இருந்தது அத்தை. கூனி குறுகி நின்னேன். இதெல்லாம் அவங்களால தான? பெத்த பொண்ணை நம்பியிருக்க வேண்டாமா? என்னால அந்த வலியை மறக்க முடியாது அத்தை. அவங்க யாரையும் நான் பாக்க கூட விரும்பலை. எனக்கு அம்மா, அப்பா நீங்களும், மாமாவும் தான். ப்ளீஸ் அத்தை இதை பத்தி பேச வேண்டாமே”, என்று சொன்னாள்
 
“சரி மா நீ அழாத. உன் குடும்பத்தை நீ தேடுவியோன்னு நினைச்சு உங்க மாமா தான் கேக்க சொன்னார். இனி அதை பத்தி பேசலை. நீ சிவாவை பிடி. நான் எல்லாத்துக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”, என்று சொன்னாள் விஜி.
 
“ஏய் குட்டி பையா, சித்தி கிட்ட வாங்க”, என்று சொல்லி அவனை தூக்கி கொண்டாள் நந்திதா.
 
அப்போது ஹரி பிரண்டும், வந்து விட ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து விட்டு கல்யாண வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.
 
அங்கு வேலைக்கு சென்ற ஹரி, வெளியே ஹோட்டலில் குளித்து கிளம்பி, அந்த பள்ளியை அடைந்தான்.
 
அங்கு உள்ள ஹெட் மாஸ்டர் சண்முகம், அவனை பாசமாக வரவேற்றார்.
 
“முதலில் சிக்த்ல இருந்து நயன்த் வரைக்கும் எடுங்க. அதுக்கு பிறகு ஹையர் செகண்டரிக்கு போடுறேன்”, என்று சொன்னார் சண்முகம்.
 
“ஹ்ம்ம் சரி சார். சும்மா வா போன்னே சொல்லுங்க. உங்களை விட ரொம்ப வயசு கம்மி எனக்கு”, என்றவன், “இங்க வாடகைக்கு வீடு கிடைக்குமா?”, என்று கேட்டான்.
 
“ஓ அப்ப என்னை கிழவன்னு சொல்ற? சரி விடு”, என்று சிரித்த சண்முகம் “அம்மா, அப்பாவும் கூட வருவாங்களா?”, என்று கேட்டார்.
 
“இல்லை சார். நானும் என் மனைவியும் தான்”
 
“கல்யாணம் ஆகிட்டா? ஆனா, சிங்கிள்னு போட்டுருக்கே”
 
“இல்லை சார், அடுத்த வாரம் ஞாயிறு அன்னைக்கு தான் கல்யாணம்”
 
“வெரி குட் வெரி குட். இந்த வாரம் வேலை, அடுத்தவாரம் கல்யாணமா? ரொம்ப சந்தோசம். அப்புறம் வீடு…”, என்று யோசித்தவர், “என்னோட வீட்டுல மாடி சும்மா தான் இருக்கு. அது வேணா பாரு. இல்லைன்னா நம்ம பியூன் கணபதி வேற வீடு பாத்து தருவான்”, என்றார்.
 
“ஹ்ம்ம் சரி சார். அப்புறம் வெள்ளிக்கிழமை லீவு கிடைக்குமா? வந்த அன்னைக்கே லீவு கேக்குறேன்னு தப்பா நினைக்க கூடாது சார்”
 
“இதுல என்ன பா தப்பு? கல்யாணம்ன்னா லீவு எடுத்து தான் ஆகணும். சரி நீ பிரைடே லீவு எடுத்துக்கோ. அப்புறம் மண்டே, டுயூஸ்டே லீவு எடுத்துட்டு வெட்னெஸ்டே வந்துரு. இந்த மாசம் விட்டுட்டு, அடுத்த மாசம் ஒரு வாரம் கூட லீவ் எடுத்துக்கோ சரியா?”
 
“ரொம்ப நன்றி சார்”
 
“அதை விடு ஹரி. நீ ஸ்டாப் ரூம் போ. டைம் டேபிள் கொடுக்க சொல்றேன். சாயங்காலம் என் கூடவே வந்து, வீடு பாரு. நான் என் மனைவியை கிளீன் பண்ணி வைக்க சொல்றேன்”
 
“ஹ்ம்ம் சரி சார். ரொம்ப நன்றி”, என்று சொல்லி விட்டு ஸ்டாப் ரூம் நோக்கி சென்றான்.
 
அன்று முழுவதுமே, அவனுக்கு சந்தோசமாக இருந்தது. அவனுக்கு பிடித்த வேலையை மன நிறைவாக பார்க்க ஆரம்பித்தான் ஹரி.
 
மாலை சண்முகத்துடன் போய் வீட்டை பார்த்தான். இரண்டு அறை, ஒரு ஹால், ஒரு கிட்சன் என்று சிம்பிளாக இருந்தது வீடு.
 
“எனக்கு பிடிச்சிருக்கு சார். இன்னைக்கே வந்துறேன். ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன். திங்ஸ் எடுத்துட்டு வந்துறேன். வாடகை எல்லாமே ஓகே தான் சார்”, என்றான் ஹரி.
 
“ஹ்ம்ம் சரி பா. ஆனா ஸ்கூல் தான் கொஞ்சம் தள்ளி இருக்கு. எப்படி போவ? தினமும் என் கூட வண்டில வந்துருவியா?”
 
“பரவால்ல சார். இவ்வளவு செஞ்சதே பெருசு. நான் திங்ஸ் கொண்டு வரும் போது, என் வண்டியையும் எடுத்துட்டு வந்துருவேன்”, என்று சிரித்தான் ஹரி.
 
“ஹ்ம்ம் சரி. நீ உன் மனைவியோட குடியேறுற வரைக்கும், எங்க வீட்ல தான் சாப்பாடு. இப்ப போய் உன்னோட பேக் எல்லாம் எடுத்துட்டு வந்துரு”, என்று சொன்னார் சண்முகம்.
 
அடுத்து வந்த நாள்கள் றெக்கை கட்டி கொண்டு பறந்தது. வியாழன் அன்று இரவு கிளம்பும் போது, சண்முகத்தையும் அவருடைய மனைவி மல்லிகாவையும் கல்யாணத்துக்கு அழைத்தான் ஹரி.
 
“தப்பா எடுத்துக்காதீங்க சார். இன்விடேஷன் கொண்டு வரலை. ஆனா நீங்களும், அம்மாவும் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வரணும்”, என்று சொன்னான் ஹரி.
 
“அவ வர மாட்டா. இங்க டவுன்ல என் பொண்ணை கட்டி கொடுத்திருக்கு. அவ மாசமா இருக்கா. அவளை பாக்க போவா. நான் வரேன் ஹரி, நீ சந்தோசமா போய்ட்டு வா”, என்று வழி அனுப்பி வைத்தார் சண்முகம்.
 
சந்தோசத்துடன் கிளம்பி வந்தான் ஹரி. வெள்ளி கிழமை வருவேன்னு வீட்டுக்கு சொல்லாமல் கிளம்பி போனான்.
 
காலையில் பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு போய் சேர்ந்தவன் அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தான். “நந்திதாவை பாக்கணும்”, என்று அவனுடைய ஒவ்வொரு செல்லும் பர பரத்தன.
 
கதவை திறந்த வனிதாவை பார்த்தவுடன் “போச்சு டா”, என்று வாய் விட்டே சொன்னான் ஹரி.
 
“என்ன மச்சான்? உங்க மயிலு கதவை திறக்கும்னு பாத்தீங்களா? ஆனா, இந்த குயிலு கதவு திறந்துட்டேனா?”, என்று சிரித்தாள் வனிதா.
 
“ஏய் வாலு? வந்த உடனே உன் சேட்டையை ஆரம்பிச்சிட்டியா? எப்ப வந்த? ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”
 
“அவங்க எங்க ஊர்ல இருக்காங்க? எல்லாரும் இங்க தான் இருக்காங்க. உங்க கல்யாணத்துக்கு நாங்க எல்லாரும் இங்க வந்துட்டோம். நான் போன வாரமே வந்துட்டேன். அம்மா, அப்பா எல்லாம் நேத்து வந்தாங்க. என் வீட்டுக்காரர் கல்யாணத்துக்கு வருவார். ஆனா மாப்பிள்ளை இன்னைக்கு தான் வாறீங்க?”
 
“என்ன செய்ய? வேலை மா. சரி குட்டி எப்படி இருக்கான்?”
 
“சூப்பரா இருக்கான். நந்திதாவை விட்டு நகல மாட்டிக்கான். சித்தி சித்தின்னு அவ கிட்ட ஒட்டிக்கிட்டான்”
 
“ஹ்ம்ம்”, என்று சிரித்தான் ஹரி. அப்போது “வா பா ஹரி”, என்று சொல்லி கொண்டே சுதாகரும், விஜியும், வனிதாவின் அம்மா, அப்பாவும் வந்தார்கள்.
 
“வேலை எல்லாம் நல்லா இருக்கா? புது வீடு எப்படி இருக்கு?”, என்று  ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி கேட்டார்கள்.
 
எல்லாத்துக்கும் பதில் சொன்னவனின், கண்கள் அவளை மட்டும் தேடியது.
 
அதை உணர்ந்த விஜி, “சரி பா ஹரி, போய் குளிச்சிட்டு வா”, என்று அனுப்பிவிட்டு பின்னாடியே போய் “நந்து உன் மேல செம கோபம். போய் சமாதான படுத்து”, என்று சொன்னாள்.
 
“ஹ்ம்ம் சரி மா”, என்று சிரித்தவன் குளித்து விட்டு அவள் அறைக்கதவை திறந்தான்.
 
இவனை பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன. அடுத்த நொடி அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டாள் நந்திதா.

Advertisement