Advertisement

“எல்லாருக்கும் வேதனையா இருக்கு மா. அவ நல்லா  இருந்தா எங்களுக்கு போதும். தேடனும்னு ஆசை தான். அவளுக்கு  ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு தான் சும்மா இருக்கோம். மன்னிச்சிருன்னு ஒரு வார்த்தை அவ கிட்டு கேட்டுட்டோம்னா கண்ணை மூடும் போது நிம்மதியா போய் செருவோம்”
 
“அவ நல்லா இருக்கா  மா. எனக்கு பாத்துருக்க மாப்பிள்ளையோட சொந்த காரங்க வீட்டில தான் இருக்கா. ஆனா இப்ப அவங்க எல்லாரும் வேற ஊருக்கு போய்ட்டாங்க. வேணும்னா கல்யாணத்துக்கு வரும் போது பாக்குறீங்களா?”
 
“இல்லை மா. இப்பவே போய் பாக்குறோம். எங்கன்னு மட்டும் சொல்லு மா. பாரு இவரை. நந்து இருக்குற இடம் தெரிஞ்சிட்டுன்னு எப்படி அவர் முகம் பிரகாசமா மாறுதுன்னு. சொல்லு மா”
 
“சரி”, என்று சொல்லி எழுதி கொடுத்தாள்.
 
“ரொம்ப தேங்க்ஸ் பூரணி. நாங்க போய் எங்க பொண்ணை  பாக்குறோம்”
 
“சரி கல்யாணத்துக்கு எல்லாரும் வந்துறணும் மா. நான் கிளம்புறேன்”
 
“கண்டிப்பா வருவோம். நீயும் எங்க பொண்ணு தான். அது போக நந்துவும் வருவாளே அதான்”
 
“இப்பவே பத்து வயசு குறைஞ்ச மாதிரி ஆகிட்டிங்க மா. அப்பாவை பாத்துக்கோங்க. நான் கிளம்புறேன்”
 
“எதாவது சாப்பிடுறியா மா?”
 
“இல்லை இன்னொரு நாள் வரேன். கிளம்புறேன் மா. வரேன் பா”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள் பூரணி.
 
காலையில் எழுந்திருக்க முடியாமல் கட்டிலில் படுத்திருந்தாள் நந்திதா.
 
“ஏய் லட்டு பாப்பா என்ன இன்னும் எந்திரிக்காம படுத்திருக்க?”, என்று கேட்டு கொண்டே குளித்து விட்டு வந்தவன்  டிரெஸ் மாற்றினான்.
 
“எனக்கு தூக்கமா வருது. அத்தை என்னை ஒரு வேலை செய்ய விடுறது இல்லை. அதான் படுத்துருக்கேன்”, என்று சொல்லி கொண்டே அவனை முறைத்தாள்.
 
“இப்ப எதுக்கு டி என்னை முறைக்கிற?”
 
“வெக்கமே இல்லாம கண்ணு முன்னாடி டிரெஸ் மாத்துறீங்க? அங்க போய் மாத்துங்க”, என்று முகத்தை திருப்பினாள் நந்திதா.
 
அவள் அருகில் வந்த ஹரி முகத்தை அவள் முகத்தின் அருகில் கொண்டு வந்து அவள் கண்களை பார்த்தான்.
 
“என்ன?”, என்பதாய் புருவம் உயர்த்தினாள்.
 
“இல்லை ஒன்னு புரியலை. அதான் பாக்குறேன்”
 
“என்ன புரியலை ஹரி?”
 
“இல்லை தினமும் ஒன்னும் இல்லாம தூங்….”, என்று சொல்ல வந்தவனின் வாயை தன் விரலால் மூடினாள்.
 
அவள் விரலுக்கு முத்தம் கொடுத்தவன் “என்ன டி சொல்ல விடாம பண்ற? அப்ப மட்டும் வெக்கம் வராம இப்ப வருதோ?”, என்று கேட்டான்.
 
“ஹரி பேட் பாய். போடா”, என்று சிணுங்கினாள் நந்திதா.
 
“ஓகே உன்னை நைட் வந்து வச்சிக்கிறேன். இப்ப ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு போறேன்”
 
“ஹ்ம்ம்”, என்று சொல்லி எதிர்பார்ப்புடன் கண்களை மூடினாள் நந்திதா.
 
ஆனால் அவன் அவள் வயிற்றில் முத்தம் கொடுத்தான்.
 
கண்களை திறந்து பார்த்தவள் அவனை முறைத்தாள்.
 
“என்ன நந்து பல்ப் வாங்கிட்டியா? நான் ஒன்னும் உனக்கு தரேன்னு சொல்லலையே. பாப்பாக்கு தான் கொடுக்க போறேன்னு சொன்னேன். டாட்டா பை”, என்று வம்பிழுத்தான் ஹரி.
 
அடுத்து முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தவள் அருகில் வந்தவன் அவள் நாடியை பிடித்து தூக்கினான்.
 
“ஒன்னும் வேண்டாம் போடா”, என்றாள் நந்திதா.
 
“தராம போனா என் பொண்டாட்டி ரொம்ப ஏங்கி போயிருவா”, என்று சொல்லி கொண்டே அவள் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான்.
 
அடுத்து அவளிடம் பை சொல்லி விட்டு வெளியே வந்தவனுக்கு சூடாக பொங்கலை பரிமாறினாள் விஜி.
 
சுதாகர் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது அழைப்பு மணி சத்தம் கேட்டது.
 
“மல்லிகாவா இருக்கும் ஹரி. நீ சாப்பிடு நான் போய் பாக்குறேன்”, என்று சொல்லி கதவை திறந்தாள் விஜி.
 
அங்கே நந்திதாவின் மொத்த குடும்பமே இருந்தது. கூடவே மல்லிகாவும், சண்முகம் இருந்தார்கள்.
 
திகைத்து விழித்த விஜி அடுத்த நொடி அவர்களாக தான் இருக்கும் என்று நினைத்து “உள்ளே வாங்க”, என்று சொன்னாள்.
 
அனைவரும் தயக்கத்துடன் உள்ளே வந்தார்கள். சுதாகர் எழுந்து அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.
 
“அம்மா மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துறேன்”, என்று சொல்லி கொண்டே வெளியே வந்த ஹரியும் திகைத்தான்.
 
“நந்திதா வீட்டில் இருந்து வந்திருக்காங்க ஹரி. நீ தான் அடிக்கடி லீவு போடலையே. இன்னைக்கு லீவு எடுத்துக்கோ. நாளைக்கு லீவ் லெட்டர் கொடுத்துரு”, என்று சொன்னார் சண்முகம்.
 
“சரி சார்”, என்றவன் “எல்லாரும் வாங்க”, என்று பேருக்கு அழைத்தான்.
 
“நீங்க சொந்த காரங்களை பாருங்க. எதாவது உதவி வேணும்னா கேளுங்க விஜியக்கா”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள் மல்லிகா. அவளுடன் சண்முகமும் சென்று விட்டார்.
 
அடுத்து என்ன பேச என்று தெரியாமல் எல்லாரும் அமைதியாக இருந்தார்கள்.
 
“விஜி எல்லாருக்கும் காபி கொடு”, என்றார் சுதாகர்.
 
“இதோ போடுறேங்கே. ஹரி கடைக்கு போய்ட்டு வரியா?”, என்று கேட்டாள் விஜி.
 
“சரி மா”, என்று சொல்லி அவன் எழும் போது “இப்ப அதெல்லாம் வேண்டாங்க. எங்களுக்கு நந்துவை பாக்கணும். அவ இங்க இருக்கான்னு தெரிஞ்சது. அதான் பாத்துட்டு மன்னிப்பு கேட்டுட்டு போகலாம்னு வந்தோம். மன்னிக்கிறது கஷ்டம் தான். ஆனா அவ முகத்தை பாத்தோம்னா ஆறுதலா இருக்கும்”, என்று சொன்னாள் சுமதி.
 
“ஹரி நந்துவை கூட்டிட்டு வா”, என்று சொன்னாள் விஜி.
 
தன் அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன் “கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
 
அவனை பார்த்தவள் “என்ன சார்? எதாவது மறந்து வச்சிட்டு போய்ட்டிங்களா?”, என்று கேட்டாள்.
 
அவள் அருகில் சென்று அமர்ந்தவன், “நந்து என்கூட கொஞ்சம் வாயேன்”, என்று அழைத்தான்.
 
அவனை பார்த்து புருவம் சுருக்கியவள் “என்ன ஆச்சு ஹரி?”, என்று கேட்டாள்.
 
“ஒன்னும் இல்லை. சும்மா தான். வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்க. அதான் அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க”
 
“இங்க யாரு கெஸ்ட் இருக்காங்க? சரி நான் முகம் கழுவிட்டு வரேன் பா”
 
“அதெல்லாம் வேண்டாம். இப்படியே வா”
 
“லூசு ஹரி. தூங்கி எந்திச்ச முகத்தோட இருக்கேன்”
 
“எப்படி இருந்தாலும் என் பொண்டாட்டி அழகு தான்”, என்று சிரித்தான் ஹரி.
 
“ரொமான்ஸ் பண்ற நேரத்தை பாரு. போடா பன்னி”
 
“நந்து. வெளிய வந்து ஏதும் கோப படாத சரியா?”
 
“கோபமா? நான் எதுக்கு கோப பட போறேன்?”, என்று கேட்டு கொண்டே அவனுடன் வெளியே வந்து பார்த்தவள் திகைத்தாள்.
 
அவர்களை பார்த்து திகைத்து “என்ன செய்ய?”, என்று தெரியாமல் ஹரி முகத்தை பார்த்தாள்.
 
“எல்லாரையும் வாங்கன்னு சொல்லு”, என்று அவள் காதில் சொன்னான் ஹரி.
 
விஜியும் அதே மன நிலையில் அவளை பாக்க பேருக்கு கூட சிரிப்பில்லாமல் “வாங்க”, என்று அழைத்தாள்.
 
அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. 
 
அதுவும் அவள் கழுத்தில் கிடந்த தாலி, கொஞ்சமாக மேடிட்டு இருந்த வயிறு அவளுடைய வாழ்க்கையை சொன்னது. அது மட்டும் இல்லாமல் ஹரி உள்ளே வந்தவுடன், விஜியே “இவன் தான் உங்க மருமகன். புரியலையா? நந்திதாவோட புருஷன்”, என்று சொல்லி சிரித்தாள்.
 
நந்திதாவுக்கு கல்யாணம் ஆனது அதிர்ச்சியா இருந்தாலும் கொஞ்சம் நிம்மதியாகவும், “அதை நாங்க பாக்கலையே”, என்ற ஏக்கமும் இருந்தது அவர்களுக்கு.
 
அடுத்து எல்லாரும் அவளை சுற்றி வளைத்து மன்னிப்பு கேட்டார்கள்.
 
இப்போதும் “என்ன செய்ய?”, என்று தெரியாமல் அவன் முகத்தை பார்த்தாள்.
 
“பேசு டா”, என்று சொன்னான் ஹரி.
 
பொம்மை போல் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாள் நந்திதா. அவளுக்கும் அவளுடைய அப்பாவை பார்த்து அதிர்ச்சி தான்.
 
“இது உங்களுக்கு தேவை தான்”, என்று குத்தி காட்டி பேசி அவர்களை காய படுத்தாமல், அமைதியாக இருந்து சமாளித்தாள்.
 
அடுத்து எப்பவும் போல  வாந்தி வர பாக்க, அங்கே இருந்த  வாஷ் பேசினில் வாந்தி எடுத்தாள்  நந்திதா.
 
எல்லாரும் பதறினார்கள்.  நந்திதா அண்ணனும், தம்பியும்  ஹரிக்கு வாழ்த்து சொன்னார்கள்.
 
சிறு சிரிப்புடன்  அதை ஏற்று கொண்டான்  ஹரி.
 
அன்று  விருந்து, சிரிப்பு  என்று எல்லாமே நன்றாக தான் போனது.
 
நந்திதா அதிகம் பேசாமல் அவர்களை விட்டு ஒதுங்கியே இருந்தாள்.
 
அவர்களுக்கு புரிந்தாலும், அவளை அதிகம் தொல்லை செய்ய வில்லை.
 
மதிய உணவு முடிந்து தன்னுடைய அறையில் படுத்திருந்தாள் நந்திதா.
 
“பியூட்டி குயின் மாதிரி போஸ் கொடுத்துட்டு படுத்துருந்தா மாமாக்கு மூட் ஏறிடும் செல்ல குட்டி”, என்று சொல்லி கொண்டே அவளை இறுக்கி கொண்டான் ஹரி.
 
அமைதியாக இருந்தாள் நந்திதா. “என்ன டா? அவங்க மேல கோபமா வருதா?”
 
“ஹ்ம்ம்”
 
“கோபத்தை காட்டிருக்க வேண்டியது தான?”
 
“திட்டுனா கஷ்ட படுவாங்கள்ல?”
 
“தெரியுதுல குட்டி? பிறகு என்ன மன்னிச்சு விட்டுரு. உடனே மன்னிக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா மன்னிச்சிரு சரியா?”
 
“ம்ம். எதுக்கு இவ்வளவு நேரம் என்கிட்ட பேசவே இல்லை? போடா உன் கூட சண்டை”
 
“உன்னை உன் அக்கா, அம்மா சுத்தி உக்காந்து பிடிச்சிகிட்டாங்க. என்னை என்னோட மச்சினங்க பிடிச்சிகிட்டாங்க. என்ன பண்ண மா?”
 
“அவங்க மேல உங்களுக்கு கோபம் இல்லையா ஹரி? இயல்பா, மாமா அத்தை ன்னு ஏத்துக்கிட்டிங்க? என்னை கஷ்ட படுத்திருக்காங்க? உங்களுக்கு எப்படி அவங்க மேல இருந்த கோபம் போச்சு?”
 
“எதுக்குன்னா எனக்கு இந்த தேவதையை பெத்து கொடுத்துருக்காங்க. என்னோட அழகான வாழ்க்கைக்கு காரணமான என்னோட காதலை தந்தது அவங்க தான? ஒரு வேளை என்னை நீ சந்திக்கணும், நமக்கு கல்யாணம் ஆகணும்னு தான் இப்படி எல்லாம் உனக்கு சோதனை வந்துச்சோ என்னவோ? அதனால கோபம் போய்டுச்சே”
 
“அந்த பூரணி தான் அட்ரஸ் சொல்லிருக்கா. கல்யாணத்துக்கு போகும் போது அவளுக்கு இருக்கு”
 
“விடு நந்து செல்லம். எல்லாம் நன்மைக்கே. அவங்களும் உன்னை நினைச்சு கஷ்ட பட்டுட்டு  தான இருந்துருக்காங்க. அதை முடிவுக்கு கொண்டு வந்த பூரணிக்கு அவ கல்யாணத்து அன்னைக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லிறலாம்”
 
“ஹ்ம்ம். எல்லாரும் எங்க?”
 
“அப்பா, அம்மா கிட்ட பேசிட்டு இருக்காங்க. உனக்கு மருந்து கொடுக்கணும்னு சொல்லி இது தான் சாக்குன்னு ஓடி வந்தேன் குட்டி”
 
“ஐ லவ் யு ஹரி”
 
“ஐ லவ் யு கண்ணம்மா. அது என்ன அவங்களை பாத்து, பாப்பா மாதிரி என் முகத்தை முகத்தை பாத்துட்டு இருந்த? எனக்கு இப்படி இருந்துச்சு தெரியுமா? அப்படியே அமுல் பேபியை கடிச்சு திங்கணும் போல இருந்தது. இப்ப சாப்பிடவா?”
 
“இப்பவா?”
 
“ஹ்ம்ம் நைட் உன்கூட எல்லாம் படுக்க விட மாட்டாங்க. இருக்குறது மூணு ரூம். ஷேர் பண்ணி தான் தூங்கணும். இன்னும் வாரம் வாரம் இப்படி தான் போல? ப்ளீஸ் டா”, என்று சொல்லி கொண்டே அவள் முகத்தை நோக்கி குனிந்தான் ஹரி.
 
காதல் பூத்தது….முற்றும்!!!

Advertisement