Advertisement

தனுஜா இருக்கையில் அமர வேண்டி நான்கு அடி எடுத்து வைக்கும் போது தான், ஷ்யாம் அவளின் நடையில் தெரிந்த வேறுபாட்டில் அந்த பெண்ணை யோசனையுடன் பார்த்த வாறு சூர்யாவை பார்த்தான். 

சூர்யா ஆம் என்பது போல் செய்த சமிஞ்சையில் இப்போது இந்த பெண்ணை எது போல் நடத்துவது என்று குழம்பி போனான் ஷ்யாம். 

நல்ல மாதிரி நடத்த முடியாது. அதே சமயம் முகத்துக்கு நேராக பார்த்து முகத்தில் அடிப்பது போல் பேசி அனுப்பவும் ஏனோ அவனின் மனது இடம் கொடுக்க வில்லை.

இரண்டு கெட்டான் மனநிலையில் தான் ஷ்யாம் இருந்தான். ஆனால் சூர்யா வுக்கு அது போல் எந்த தயக்கமும் இல்லை போல். அதனால் “ தனுஜா ஏதாவது குடிக்கிறிங்களா… ?” என்று கேட்டான்.

அதற்கு என்ன சொல்வது என்பது போல் தயங்கிய தனுஜா ஷ்யாம் பார்த்தாள். அவள் பார்வையில் சூர்யா “ நாங்க இப்போது தான் குறித்தும். “ அவள் அதற்கு தான் ஷ்யாம் பார்த்தாள் என்பது போல் மாற்றி பேசிய சூர்யாவை இப்போது ஷ்யாம் நேரிடையாகவே முறைத் தான்.

இதை கவனித்த தனுஜா வுக்கு தன்னால் இவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்து விட போகிறது என்று அவசரமாக.. 

“ வேண்டாம்.. வேண்டாம்.. நானும் இப்போ தான் குடித்து விட்டு வந்தேன். “ என்றவுடன் பேச்சை ஷ்யாம் புரிந்து கொண்டான். 

“ பரவாயில்லை குடி” என்று டேபிள் மீது இருந்த பைலை  பார்த்து கொண்டே சொன்னவன் பேச்சில் தனுஜா மகிழ்ந்து போனாள். 

சிரித்த முகத்துடன் தன்னை பார்த்த தனுஜா விம் சூர்யா.. “ அது தான் உன் அண்ணன் சொல்லிட்டேன் அப்புறம் என்னம்மா சொல் காபியா.. டீயா ? “ என்று கேட்டதற்கு. 

“ எதுன்னாலும் பரவாயில்லை. “ என்று சொன்னவளின்  பேச்சு அப்போதும் அவசர அவசரமாக தான் இருந்தது. 

இவள் ஏன் இப்படி எக்ஸைட்டா இருக்கா என்று ஷ்யாம் நினைத்தான். அதை சூர்யா வேறு மாதிரி நேரிடையாக.. “ நீ என்ன அவசரத்தில் பிறந்தவள்..? “ என்ற அவனின் கேள்விக்கு, 

“ ஆமாம். “ என்றவள் குனிந்து தன் காலை பார்த்த போது தான் அங்கு இருந்த இரு ஆண்களுக்கும் அவள் பிறந்த சூழ்நிலை நியாபகத்தில் வந்தது. 

ஷ்யாம் “ யார் கிட்ட என்ன பேசுவது என்று உனக்கு தெரியாதா.. “ என்று கடிந்து கொண்டான். 

‘ அட பாவி இந்த பெண் வந்ததில் பேசாது இருந்தவன் இவன். நான் இந்த பெண் மனது நோக்கி கூடாது என்று பேசிக் கொண்டு இருந்தால் இவன் என்னை திட்டுவானா..? ‘ என்று மனதில் நினைத்ததை தன் நண்பனிடம் கேட்டே விட்டான். 

பின் “ நீயும் ஆச்சி உன் தங்கையாச்சி எனக்கு என்ன வந்தது. “ என்று கோபமாக பேசுவது போல் பேசி விட்டு அவர்கள் இருவரும் பேசட்டும் என்று நினைத்து சூர்யா அந்த அறையை விட்டு வெளியேறினான். 

ஷ்யாமுக்கு அவன் எண்ணம் புரிந்ததால் அமைதியாக இருந்தான். ஆனால் தனுஜா சூர்யா அந்த அறையை விட்டு போனதில் பட்டத்துடன் அந்த அறையின் வாசலை பார்ப்பதை பார்த்த ஷ்யாம் முதல் முறையாக தனுஜாவின்  முகம் பார்த்து.. 

“ அவன் கோச்சிகிட்டு எல்லாம் போகல… நீ எதுக்கு இங்கு வந்த அதை சொல். “  என்று கேட்ட வனுக்குக் தனுஜாவால்  உடனடியாக பதில் கொடுக்க முடியாது ஒரு வித தயக்கத்துடன் ஷாயாமை  பார்த்தாள். 

ஷ்யாமுக்கும்  தனுஜாவிடம்  பேசி அனுப்பி விட லாம் என்ற மனநிலையில் இருந்தான். 

அதோடு இந்த பெண் என்ன தவறு செய்தது என்ற எண்ணமும் அவனுக்கு. அதனால் முதலில் தயங்கினாலும் பின் பேச ஆரம்பித்து விட்டான். 

தனுஜா “ எல்லாத்துக்கும் நான் தான் காரணம் அண்ணா. “ என்ற அவளின் அண்ணா என்ற அழைப்பில் அவளை பார்த்த ஷ்யாம் அவள் அழைக்கும் விதத்திற்கு  மறுப்பு தெரிவிக்க வில்லை. 

ஆனால் அவள் சொன்ன விசயத்தை மறுத்தான். 

“ என்னை பொறுத்த வரையில் உன் அப்பாவை யாவது ஒரு விதத்தில் மன்னித்து விடலாம். ஆனால் உன் அம்மாவை என்னால் ஒரு நாளும் எப்போதும் என்னால் மன்னிக்கவே முடியாது. 

நல்லா கேட்டுக்கே  எப்போதும் என்னால் மன்னிக்க முடியாது. “ என்பவனின் பேச்சில் அதிர்ச்சியாகி  அவனை பார்த்தாள். 

அதுவும் ஷ்யாம் சொன்ன “ உன் அப்பாவையாவது நான் மன்னித்து விடுவேன்” என்ற வார்த்தையில் இவை அனைத்திற்கும் காரணம் அவர் தானே என்று நினைத்தவள் அதை வெளிப்படையாக ஷ்யாமிடமே கேட்டு விட்டாள். 

அதற்கு அவன் சொன்ன “ அவர் இவ்வளவு செய்தும் உன்னை அவர் ஒரு போதும் கை விட வில்லை தானே.. “ 

இந்த வார்த்தையை அவன்  சாதரணமாக தான் சொன்னான். ஆனால் அந்த வார்த்தையில்  இருந்த வலி பெண் மனதை பலமாக தாக்கியது. அதில் அவள் முகம் தன்னால் வேதனையின் சாயல் தெரிய. 

“ இதற்கு நீ ஏன் மா வேதனை படுற..? பட வேண்டியவர்களே சந்தோஷமா இருக்கும் போது. “

இந்த வார்த்தை யாரை குறிப்பிட்டு சொல்கிறான் என்று புரிந்ததால்.. “ அம்மா சந்தோஷமா இருக்காங்க என்று உங்களுக்கு தெரியுமா ண்டா.. “ என்ற இந்த கேள்வியை கோபமாக கேட்க நினைத்தாலும் தனுஜாவால் கேட்க முடியும் யாது  கொஞ்சம் குரல் குறைத்து வார்த்தையாக தான் வந்து விழுந்தன. 

அதற்கு ஷ்யாம் எந்த மறுப்பும் சொல்லாது.. “ உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும். “ என்ற அவனின் பதிலில் தனுஜா தான் அடுத்து எப்படி பேச்சை கொண்டு போவது என்று தெரியாது அமைதி காத்துக். 

தனுஜா வுக்கு எப்படியோ ஆனால் ஷ்யாமுக்கு அடுத்து அடுத்து வேலைகள் பார்க்க வேண்டி இருந்ததால். “ பிரச்சனை ஏதாவது இருந்தால் சொல். பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். “ 

அவர்கள் வீட்டை கண்காணிக்க வைத்திருந்த ஆள் ஒன்றும் சொல்லாத தால் பிரச்சினை இருக்காது என்று நம்பி சொன்னான். 

தனுஜா.. “   பிரச்சினை இருந்து இருந்தால் நீங்கள் வைத்த ஆள் உங்களுக்கு சொல்லி இருப்பார்கள் அண்ணா. “ என்று தனுஜா சொன்னதும் ஷ்யாம் அதிர்ந்து எல்லாம் தனுஜா வைத்து பார்க்க வில்லை மெச்சுதலான பார்வையை மட்டுமே அவள் மீது செலுத்தினான். 

பின் எதற்கு என்று பார்க்க.. “ அண்ணா அம்மா” என்று அவள் பேச்சை ஆரம்பிக்கும் போதே கை காட்டி அவள் பேச்சை நிறுத்திய ஷ்யாம்.. 

“ வேறு பேசுவது என்றால் பேசு. “ என்று சொன்னவன் அடுத்து பேசாது தனுஜா முகத்தை பார்த்தான். 

அன்னையின் நிலை பற்றி பேச தான் தனுஜா இங்கு வந்தது. தன்னை பார்த்து சத்தம் போடுவான். கோபமாக திட்டுவானா என்று  அவள் நினைத்த திற்கு மாறாக தன்னிடம் தன்மையாக பேசுவதில். நாம் நினைத்து வந்தது எளிதில் முடிந்து விடும் என்று இவள் நினைக்க.. 

இவனோ எது என்றாலும் என்னிடம் பேசு. அம்மா என்ற வார்த்தையை தவிர்த்து என்று பேசுபவனிடம் என்ன பேசுவது என்று தயங்கியவளிடம். 

“ நீ எதற்கு இங்கு வந்து இருக்கேன் என்று எனக்கு புரியுது. ஆனால் அது எந்த காலத்திலும் நடக்காது. இதை உன் மனதில் இல்லாமல் உன் வீட்டில் இருக்க எல்லோர் மனதிலும் புரியும் படி சொல்லி விடு.” என்று சொன்னவனிடம் அடுத்து எதுவும் பேசாது அந்த அறையை விட்டு வெளியேறும் முன். 

“ இப்போது நீங்கள்  உங்கள் பைனான்ஸை  நீங்களே பார்த்து கொள்ள வேண்டும் என்று எடுத்த டிவிஷன்  சரியானது. 

அதோடு அந்த இடத்தை  நீயே வேண்டாம் என்று சொன்னியே அதுவும் தான். நம்ம இனத்தில் இந்த வயதுக்குள் கல்யாணம் செய்து விட வேண்டும் என்பது எல்லாம் சுத்த பைத்தியக்கார தனமானது. 

கல்யாணம் செய்ய நமக்கு பிடித்தவனா  இருந்தால் போதும். வயது ஒரு பிரச்சினை இல்லை. உன் வீட்டோடு தான் எனக்கு தொடர்பு இல்லை என்று சொன்னேன். உனக்கும் உன் தங்கை “ என்று சொல்லி கொண்டு வந்தவன் தங்கை எனும் போதே வார்த்தை நெஞ்சு குழியில் சிக்கி கொண்டது போல் அடை பட்டு கொண்டன. . 

தனுஜாவின் மீது ஷ்யாமுக்கு அனுதாபம் இருக்கிறது. அதனால் தான் தாய் மீது இருந்த கோபத்தை தனுஜாவின் மீது காட்டாது பேசினான். 

அதே போல் அவளுக்கு உதவி செய்யும் தயாராகவும் இருக்கிறான். ஆனால் ஷைலஜா… தந்தை வேறு என்றாலும் தாய் ஒற்றள்ளவா.. 

பெரியவர்கள் செய்த தவறுக்கு சிறியவர்கள் என்ன செய்வார்கள்… ஒன்றாக வளர்ந்து இருந்தால். அவளும் நானும் என்று  நினைக்கும் போதே.. வார்த்தை தடை பட்டு பேசியவனின் பாசம் தனுஜா வுக்கும் புரிந்ததால். அவனை மேலும் சங்கத்துக்கு ஆளாக்காது .. 

“ கண்டிப்பாக எந்த பிரச்சனை என்றாலும் உங்க கிட்ட சொல்றேன் அண்ணா. “ என்றதற்கு சிரிப்பை பதிலாக கொடுத்து தனுஜா வைத்து அனுப்பி வைத்தவின் மனது ரணமாக வலித்தது. 

ஏதாவது செய்ய வேண்டும். இந்த பெண்ணுக்கும். தன் தங்கை க்கும் என்று தன் மனதில் ஷைலஜா தன் தங்கை என்று அவன் அறியாமல் ஏற்றுக் கொண்டது. 

தனுஜா சென்றதும் தான் அந்த அறைக்குள் சூர்யா வந்தான். வந்ததும்.. 

“ அந்த பெண்ணை என்னடா சொன்ன பாவம் முகமே சோர்ந்து போய் இருந்துச்சு. “ என்று கோபமாக பேசிய நண்பனை  ஊன்றி கவனித்த ஷ்யாம்.. 

“ அந்த பெண் இங்கு வரும் போது மகிழ்ச்சியாக வந்துச்சா என்ன ?“ என்று கேட்டான். 

நண்பனின் பார்வையும். கேள்வியும் வித்தியாசமாக இருப்பதை கவனித்த சூர்யா.. மனதில் இரு தங்கைகளும் மனதில் நினைத்து.. 

“ போகும் போது பார்த்தேன்.. வரும் போது பார்க்கல..? என்று  எனக்கு அது  முக்கியம் இல்லது போல் பேசிய நண்பனை அப்படியா என்பது போல் பார்த்த ஷ்யாம்.. 

அடுத்து  வசூல் வந்த தொகை.. வசூலிக்க வேண்டிய தொகை தன் வேலையை பற்றி சூர்யாவுடன் பேசிக் கொண்டு இருந்தாலும். மனதில் ஓரத்தில் தனுஜா வந்து சென்றது. அதை பற்றியும் சுழன்று கொண்டு தான் இருந்தது. 

சக்தி சரண் அதன் பன்னாட்டு வராததை பற்றி கேட்டதற்கு சொன்னேன் கேட்டான் என்று மட்டும் சொல்லி சமாளித்து விட்டவனுக்கு அவன் அவளோடு எதிர் பார்த்த திருமண நாள் வந்தது. 

அவனின் தனம்மா  . “ என்ன தான் இருந்தாலும் உன் அம்மா  இல்லாமல். “ என்று ஏதோ பேச வந்த தன் தனம்மாவை  மேலே பேச விடாது.. 

“ வேண்டாம் தனம்மா.. வேண்டாம். என் கல்யாணம் நாள் அன்றாவது  நான் அவங்க நினைவு இல்லாமல் நிம்மதியாக இருக்கனும் என்று நினைக்கிறேன். “ என்ற பேரனின் பேச்சில்  அந்த முதியவர்கள் ஆடி தான் போய் விட்டனர். 

தாங்கள் என்ன தான் பார்த்து பார்த்து வளர்தாலும். தாயின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்பதை  பேரனின் இந்த ஒத்த வார்த்தையில் 

Advertisement