Advertisement

அத்தியாயம்…..13

ஷ்யாம் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க  சாருவிடம்.. “ அடுத்து ஓட்டலுக்கு தான் போறோம்.. சொல் உனக்கு என்ன வேண்டும்..” என்று கேட்டு கொண்டவனின் காதில் ரகசியம் போல..

“ ஐஸ் க்ரீம்..” என்று சொல்ல.. அதற்க்கு ஷ்யாம்  சரி என்று சொல்லும் முன்னவே, சாரு என்ன கேட்டு இருப்பாள் என்று  அவளை அறிந்து கொண்டவளாக சக்தி..

“ அது எல்லாம் கிடையாது.. நேற்று தான் கோல்ட் என்று மருந்து ஊத்தினேன்..” என்று மறுப்பு சொன்னாள்..

ஷ்யாமும் அதை புரிந்து கொண்டு .. “ உடம்பு எல்லாம் சரியான உடனே உனக்கு ஒன்றுக்கு பதிலாக இரண்டாகவே வாங்கி தருகிறேன்  பேபி…” என்று ஒரு தேர்ந்த தந்தையாக தன் மகளிடம் பேசிக் கொண்டே  வெளியில் வந்தவன் கண்ணில் முகத்தில் கவலை சூழ  கை பேசியில் பேசி கொண்டு இருந்த சூர்யாவை தான் பார்க்க நேர்ந்தது…

அப்போது தான் நாம் இவனை அழைத்து வந்ததோடு சரி.. பின் இவனை நான்  எதற்க்கும் அழைக்கவும் இல்லை.. 

இவனை கண்டு கொள்ளவும் இல்லை.. என்று மனதில் குற்றவுணர்வோடு, கூடவே  இவன் ஏன்  ஒரு மாதிரியாக இருக்கிறான்…என்று நினைத்து கொண்டே அவன் அருகில் சென்றான்..

இவனை பார்த்ததும் சூர்யா அவசர அவசரமாக  கை பேசியில்… “ நான் அப்புறம் கூப்பிடுறேன் அம்மா.. ம் ஷ்யாம் கிட்ட பேசிட்டு  வர்றேன்..” என்று  சொல்லி விட்டு பேசியை  அணைத்தான்..

சூர்யாவின் அருகில் சென்ற ஷ்யாமின்  காதில் இது விழ. “ என்ன சூர்யா வீட்டில் ஏதாவது பிரச்சனையா..? பிரச்சனை  என்றால்  உடனே போக வேண்டியது தானே.. அது என்ன என் கிட்ட கேட்டு கொண்டு..” என்று அதட்டியவனுக்கு எதுவும் பேசாது அமைதியாக  இருந்த சூர்யாவை இப்போது ஷ்யாம் யோசனையுடன் பார்த்தான்..

ஷ்யாம் திரும்பவும்.. “ என்ன சூர்யா..?” என்று கேட்கவும்..

“ வீட்டில் பிரச்சனை தான் ஷ்யாம்.. உன் வீட்டில்..” என்று  சொல்லவும், ஷ்யாமின் பார்வை சட்டென்று தன்  குடும்பம் அதாவது இப்போது  தன் குடும்பம் என்று  அவன் நினைக்கும்,  சக்தியின் குடும்பம் தன் தனம்மா கிருஷ்ணமூர்த்தி அப்பாவின் பக்கம் தான் சென்றது..

ஷ்யாமின் பார்வையை பார்த்த சூர்யா… “ அந்த குடும்பம் ஷ்யாம்..” என்று சொல்லும் போது  சரியாக அந்த இடத்துக்கு வந்த சக்தியின் காதில் இந்த வார்த்தை விழுந்தன…

அவள் என்ன என்று பார்க்கும் போது சூர்யா .. “ சாரி ஷ்யாம்  …  உன் சந்தோஷத்தை கெடுக்கும் படி..” என்று வார்த்தை இழுக்கும் போதே சக்தி..

“ என்ன பிரச்சனை என்று சொல்லுங்க அண்ணா…?” என்று கேட்கவும்..

சூர்யா … “ உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்… ஷ்யாமின் அம்மாவை பற்றி…

 இப்போ  அவங்க தான் போன் பண்ணாங்க…  கடன் எல்லாம் ஷ்யாம் தலையீட்டில் எல்லாம்  முடிந்து விட்டது தான்… 

அவங்க இரண்டு பெண்களும் அவங்க பைனான்ஸ் கம்பெனியை பார்த்துக்கிறாங்க…” என்று சொன்னது அனைத்தும் ஷ்யாமுக்கு தெரியும். அதனால் அதை கவனத்தில் படியாது கேட்டு கொண்டு இருந்தான்..

ஆனால் சூர்யா அடுத்து சொன்ன விசயமான …   “ முன்ன கடன் கொடுத்தவனில்  ஒருவன் போன வருடம் தான்  மனைவியை இழந்தவனாம்.. அவன்  அந்த பெண் தனுஜாவை பெண் கேட்டு வந்து இருக்கான்..” என்ற பேச்சில் ஷ்யாமின் கவனம் மொத்தமும்  இப்போது  சூர்யாவின் பேச்சில் இருந்தன..

சூர்யாவும், ஷ்யாம் தன் பேச்சை கவனிக்கிறான் என்றதில் இவ்வளவு நேரமும் சக்தியின் முகம் பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தவன் ஷ்யாமின் முகம் பார்த்து…

“ அதுக்கு  அவங்க இல்ல நாங்க இப்போ என் பெண்ணுக்கு கல்யாணம் செய்யும் ஐடியா இல்லை என்று பொறுமையா தான்  சொல்லி இருக்காங்க..

ஆனா அதுக்கு அவன்.. ஏன் இப்போவே அந்த  பெண்ணுக்கு இருபத்தியெட்டு வயசு ஆகுது.. காலும் ஊனம்.. நிச்சயம் நடந்து முறிந்து விட்டது… அதோட அப்பாவும் இறந்துட்டாங்க..

நீங்க ஏன் எல்லாம் பாரமும் உங்க தலையில் போட்டு கொள்றிங்க.. எல்லாம் விசாரிச்சி தான் வந்து இருக்கேன்..

எனக்கு  நாற்பது வயசு ஆகுது.. இரண்டு பெண் பிள்ளைங்க இருக்கு.. அது மட்டும் இல்லேன்னா எனக்கு தேவைக்கு வெளியில் கூட பார்த்துப்பேன்.. ஆனா போனவ பொட்ட புள்ளையா பெத்து போட்டு போயிட்டா…

அதுக்கு தான்   அம்மா ஸ்தானத்தில் ஒரு பெண் வேண்டும் என்று உங்க கிட்ட பெண் கேட்கிறேன்…” என்றதற்க்கும் அவங்க…

கோபப்படாது தான்.. “ இல்ல என் பெண்ணை இரண்டாம் தாரமா கட்டி கொடுக்க விருப்பம் இல்லை… அதோடு இப்போ எங்க பைனான்ஸ் கம்பெனியை பார்த்துக்குறா.. அவளுக்கு இரண்டு வருடம்  சென்டு தான் கல்யாணம் செய்யும் எண்ணம் இருக்கு என்று அவங்க சொன்னதற்க்கு..

அவன் நான் தான் எல்லாம் விசாரிச்சிட்டே என்று சொன்னது உன்  காதில் சரியா விழலையா..? . பொம்பளை நீயே.. அந்த சுகத்துக்கு   ஆசைப்பட்டு  அதுவும்   இரண்டாம் கல்யாணம் செய்துக்கிட்ட…  இரண்டாம் கல்யாணம் செய்யும் ஆம்பிளைக்கு எனக்கு  நீ பெண் கொடுக்க மாட்டியா..?

நான் என்ன உன் பெண்ணை வெச்சிக்கிறேன் என்றா கேட்டேன்… முறையா கட்டிக்கிறேன் என்று தானே கேட்டேன்…  அதோடு ஆம்பிளை இல்லாத வீடு.. பார்த்து…” என்று  அவன் பேசியதை சூர்யா சொல்ல சொல்ல ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு உக்கிரகம் ஏறியது..

அதுவும் அந்த சுகத்துக்கு.. ஒரு அன்னையை  பார்த்து ஒருவன் பேசி இருக்கிறான் … அதை ஒரு . மகனாக  கேட்க .. அவனால் முடியவில்லை..

ஆனால் சூர்யா இதோடு முடியவில்லை  இன்னும் இருக்கிறது என்பது போல்…

“ அவ்வளவு கடன்.. ஆனால் ஒரே வாரத்தில் எல்லோருக்கும் கொடுத்து இருக்கிங்க… எப்படி..?” என்று கேட்டவன் ஒரு கோணல் சிரிப்போடு..

“ கோழி முடமா இருந்தாலும் குழம்பு ருசியா  இருந்தா போதும்.. என்ன தான் கால் ஊனமா இருந்தாலும் பொண்ணு சும்மா நச்சுன்னு தான் இருக்கா.. உங்க  சொந்த பொண்ணும் சும்மா சொல்ல கூடாது ஏ ஒன்…” என்று சொன்னவன்.. பின் பின்…” என்று சூர்யா பேச்சை இழுத்து அடிக்க..

இது வரை சூர்யா சொன்னதையே ஷ்யாமால் கேட்க முடியவில்லை… அவனே சொல்ல தயங்கும் வார்த்தை என்ன என்பது போல்  ஷ்யாம்  சூர்யாவை பார்த்து..

“ பின் என்ன…? சொல்…” என்று ஷ்யாம் கேட்ட விதத்தில்..

சூர்யா எச்சில் முழுங்கி கொண்டு…  “ நீயும் இந்த வய..” என்று  சொல்ல வந்தவனை கை நீட்டி தடுத்து நிறுத்திய ஷ்யாம்…

சக்தியின் பக்கம் பார்வையை செலுத்தி.. “ எல்லோரையும் நீ கூட்டிட்டு போ…” என்று சொன்னவனின் முகத்தை பார்த்த சக்திக்கு ..

“ஏன்…? ” என்று  கேட்க முடியாது  தன் குடும்பம் இருக்கும் பக்கம் சாருவை அழைத்து கொண்டு சென்றவளின் மனதில்.. 

கடையின் உள்ளே பார்த்த முகமா இது..? என்பது போல் ஷ்யாமை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்..

தன் குடும்பம் செல்லும் வரை அமைதி காத்து நின்ற ஷ்யாம்… அவர்கள் சென்றதும் சூர்யாவின் பக்கம் பார்வையை திருப்பி…

 “ யார்..?” என்று கேட்டான்..

இரண்டு மணி நேரத்திற்க்குள் அவனின்  அனைத்து விவரங்களும்  ஷ்யாமின் முன் இருந்தன.. 

அடுத்த நாளே அவன் விபச்சாரம் செய்த பெண்ணோடு கைது செய்ய பட்டான்.. அது அனைத்து ஊடகங்களிலும் வெளி வந்தன..

பின் அதில் இருந்து வெளி வந்த நாளே அவன் வீட்டில் வருமான வரி சோதனை நிகழப்பட்டு கணக்கில் காட்டாத சொத்து குவிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்டான்..

இது அனைத்தும் அந்த கயவன் என்ன…?  ஏது ..? தன்னை சுற்றி என்ன நடக்கிறது…? என்று உணரும் முன்னவே நடந்து முடிந்து விட்டது…

அனைத்தும் நடந்த பின் தெரிந்து விட்டது… தன்னை சுற்றி ஏதோ வலை பின்னி இருப்பதை.. ஆனால் யார்..?  விரித்தது  வலை என்று யோசிக்கும் போது, அவன் முன் சென்றான் ஷ்யாம்..

ஷ்யாமை அவனுக்கு தெரிந்தது.. ஒரே தொழில் எனும் போது .. ஆனால் இவன் ஏன் நம்மை பார்க்க என்று யோசிக்கும் போது..

“ அம்பிளை இல்லாத வீட்டில் தான்   உன்னால்  ஆம்பிளை தனத்தை காட்ட முடியும்.. ஆனால் நான்..” என்று  ஷ்யாம்  பேச பேச… அவனுக்கு …

  எதற்க்கு..? ஏன்..? என்ற விவரம்   புரிந்து விட்டது.. ஆனால் அவர்களுக்கு இவன்  யார்..? என்ற அவன்  கேள்விக்கு சூர்யா..

“ அந்த வீட்டில் தலை மகன் …” என்று பதில் கொடுத்தான்..

அங்கு இருந்து வெளி வந்த ஷ்யாம் சூர்யாவிடம்.. “ அவங்களுக்கு நான்  யார்..? என்று  எதற்க்கு சொன்ன..?” என்ற கேள்விக்கு..

சூர்யா… “ வீட்டில் அவன் அந்த கடன் அடச்சதுக்கே எப்படி பேசி  இருக்கான்.. இது எல்லாம் செய்தது  எதற்க்கு..? என்று அவன்  தப்பா யோசித்து விட கூடாது இல்ல..” என்று சூர்யா சொன்ன உடன் திரும்பவும் கோபத்துடன்..

“ அவன் அப்படி எல்லாம் நினைத்து விடுவானா…?   என்று சொல்லிக் கொண்டே  திரும்பவும் அந்த சிறைச்சாலைக்குள் போக பார்த்தவனின் கை பிடித்து தடுத்து நிறுத்திய சூர்யா..

“ இவன் கிட்ட உன் கோபத்தை காட்டலாம்.. அடுத்து எத்தனை பேரிடம் உன் கோபத்தை காட்ட முடியும் ..? சொல்..” என்ற சூர்யாவின் கேள்விக்கு குழப்பமாக அவன் முகத்தை பார்த்தான் ஷ்யாம்..

“ என்ன புரியலையா..?”

“  இப்போ அது ஆம்பிளை இல்லாத வீடு…” என்று  சொல்லி கொண்டு வந்த சூர்யா ஷ்யாமின் பார்வையை புரிந்து கொண்டவனாய்…

“  மத்த வீட்டில் ஆம்பிளை இல்லை என்றால் பிரச்சனை வருமா..? வரதா…? என்று எல்லாம் எனக்கு தெரியல.. ஆனால் அந்த  வீட்டில்  நிலை இப்போ எல்லோருக்கும்  தெரியும்.. அதாவது கடன் பட்டு இப்போ அவ்வளவு தொகையும் ஒரே வாரத்தில் திருப்பி கொடுத்தது…

கொடுத்த கடன் காரன் பெரும்பாலோர் சொல்வது போல் இல்ல.. அது உனக்கே தெரியும்.. அடைப்பட்ட கடன் தொகை தான் அவர்களுக்கு கண் முன் நிற்க்கும்..  அது வந்த வழி தெரியாததால், அவங்களுடைய கற்பனை வேறு மாதிரி தான் இருக்கும்..

அதுவும் போனவர்   பணத்தை மட்டும் அல்லாது பகையையும் சேர்த்து வைத்து தான் போய் இருக்கிறார்.. நான் விசாரித்த வரை எனக்கு வந்த தகவல் இது..

நீ வெளி வராது  செய்யும் எந்த செயலும் அவங்களுக்கு  நிரந்தர தீர்வு கிடைக்காது ஷ்யாம்…” என்று சொன்ன சூர்யாவிடம்..

“ அப்போ சொந்தம்  கொண்டாடிட்டு அந்த வீட்டுக்கு போக சொல்றியா சூர்யா..?” என்று ஷ்யாம் கேட்டான்..

“ சொந்தம்  கொண்டாடிட்டு  நான் உன்னை அந்த வீட்டுக்கு போக சொல்ல.. நீ அவங்க  சொந்தம்.. அதுவும் எந்த மாதிரி சொந்தம் என்று எல்லோருக்கும் புரியும் படி சொன்னாலே போதும்.. 

இனி தப்பான கண்ணோட்டத்துடன் யாரும் அந்த வீட்டுக்கு போக மாட்டாங்க..” என்று சொன்னவனின் பேச்சில் ஷ்யாம் யோசிக்க தொடங்கினான்..

வீட்டுக்கு வந்த பின்னும் அவனின் தனம்மாவுக்கு சொக்கலிங்கத்தின் மூலம்  விசயம் தெரிந்து விட்டதால்…

இப்போது நேராகவே கோபத்தோடு .. “ உனக்கும்  விசயம் தெரிந்து  இருக்கு என்று  ஒரு வாரமா உன் முகமும், உன் நடவடிக்கையிலும் தெரியுது.. அதுக்கு தானே  அன்னைக்கு கடை வாசலிலேயே எங்களை விட்டு விட்டு போன..” என்று கேட்கவும்..

“ அது தான் உங்களுக்கும் தெரியுது தானே தனம்மா.. அதோடு அதற்க்கு நான் என்ன செய்தேன் என்று தெரிந்து இருக்குமே..?” என்ற ஷ்யாமின் கேள்விக்கு..

சூர்யா  சொன்னதையே தான் அவனின் தனம்மாவும் சொன்னார்கள்..

“ இது போல் எத்தனை பேரை செய்வ கண்ணா.. அன்னைக்கு புடவை எடுக்கும் போது உன் முகம் எப்படி இருந்தது  தெரியுமா..? கண்ணா..

பரவாயில்லை இனியாவது என்  பேரன்  மகிழ்ச்சியா  ஒரு குடும்பமா  இருப்பான் என்று  நான் சந்தோஷப்பட்டேன்.. ஆனா  உன் மகிழ்ச்சியும் சரி.. என் சந்தோஷமும் சரி  கொஞ்ச நேரம் கூட நீடிக்கல..” என்று சொன்ன தன் தனம்மாவிடம்..

“ இப்போ அதுக்கு என்னை என்ன செய்ய சொல்றிங்க தனம்மா..? “ என்று  ஒரு வித சலிப்புடன் கேள்வி  கேட்டான்…

“ இதுக்கு நிரந்த தீர்வு செய் கண்ணா… என்ன தான் இருந்தாலும் கெளசல்யா உன் அம்மா..” என்ற தனம்மாவின் பேச்சில் ஷ்யாமின் முகம் வேதனையை காட்டியது…

“  நீ என்ன தான் பழையது நினைத்து வேதனை பட்டாலும், உனக்கும் கெளசல்யாவுக்கும் இருக்கும் அந்த உறவு மாற போவது கிடையாது கண்ணா..

அவளிடமோ  அவள் மகளிடமோ  யாராவது தப்பா நடந்துக்குறது என்ன..? தப்பா பார்த்தா கூட.. அது உன்னை பாதிக்கும்…” என்று சொன்ன தனம்மா..

ஷ்யாமை கூர்ந்து பார்த்த வாறு… “  இல்ல  என்று சொல் பார்க்கலாம்..” என்று கேட்டார்..

இதற்க்கு அவன் எப்படி இல்லை என்று சொல்வான்…

கெளசல்யா என்ன.. அவர் மகள் ஷைலஜா என்ன.. அந்த பெண் தனுஜா அவளுக்காக கூட பார்த்தானே.. அவனின் தாத்தா சொக்கலிங்கம் சொத்து..

அது எல்லாம் அவனுக்கு பெரிய விசயம் கிடையாது.. உரிமை.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஆனால் அன்று அங்கு அந்த பத்திர பதிவு அன்று அவ்வளவு அவசரமாக  அங்கு சென்றதற்க்கு காரணம்  உரிமை மட்டும் கிடையாதே..

அந்த பெண்.. இது போல் ஒருவனை திருமணம் செய்தால்   மகிழ்ச்சியை விடு.. எப்படி  நிம்மதியாக இருப்பாள்..?

இதோ திரும்பவும் அந்த இடம் தனுஜாவை திருமணம் செய்ய கேட்கிறார்கள் என்று தெரிந்த பின்…

 அந்த பையனை கவனிக்க வேண்டிய விதத்தில் நன்கு கவனித்தது எதற்க்காக…?  ஒரு முறையில் அந்த பெண்ணும் எனக்கு.. அதற்க்கு மேல் அவனால் நினைக்க முடியவில்லை..

தன் பேச்சிற்க்கு தன் பேரனின் முகம் வேதனையில் கசங்குவதை பார்த்து..

“ கண்ணா  நீ வேதனை பட என்று நான் இதை பேசலப்பா.. ஒரு தாய் மனசு நிம்மதியா இருந்தா தான் நீ மகிழ்ச்சியா  இருக்க முடியும் கண்ணா…

 அதுக்கு தான் நான்  இவ்வளவும் பேசுறேன்.. புரிஞ்சிக்கோ..” என்று சொல்லி அவன் மறுக்க மறுக்க  ஷ்யாமை சாப்பிட வைத்து தான் அவன் அறைக்கு அனுப்பி வைத்தார் அவனின் தனம்மா..

இங்கு செங்கல்பட்டு இல்லத்தில் சொக்கலிங்கம் தன் மனைவி சரஸ்வதியிடம்…

“ பார்த்தியா நீ  சம்மந்தி இடம் சொன்னா பேரன்  சிட்ட சொல்லி  நம்ம மகள் வீட்டுக்கு நம் பேரனை அனுப்புவாங்க  என்று சொன்ன.. ஆனால் பார் கிணற்றில் போட்ட கல் போல்  இருக்காங்க..

நம்ம பேரன் நம்மை கண் கொண்டு பார்க்காததிற்க்கும், அவன் அம்மாவை அவ்வளவு வெறுக்கவுமே இவங்க தான் காரணம்…” என்று பேசி கொண்டு இருந்தார்..

 

Advertisement