Advertisement

சிந்து கிளம்பலாம் என்று சொல்ல, “இரு சிந்து என் அத்தை பிள்ளைங்க கூட போட்டோ எடுக்கல?”, என்று சொல்லி இருக்க வைத்தான்.
“அப்ப அவங்களை கூப்பிடுங்க”
“இப்ப வருவாங்க”, என்று சொன்னவன் அவளை தனியே விட்டு விட்டு சென்றும் விட்டான். பின் கால் மணி நேரத்துக்கும் மேலே அவள் அவளுடைய தோழிகளுடன் தான் இருந்தாள். 
பின் அவனுடைய ஐந்து அத்தை பெண்களின் குடும்பத்தோட தனியாகவும் பின் மொத்தமாகவும் போட்டோ எடுத்து முடிக்கும் போது பயங்கர கடுப்பில் இருந்தாள் சிந்து. 
அப்போதும் முடியாமல் அவ்வளவு நேரம் போடாமல் விட்ட தாலிசெயினையும் மெட்டியையும் போட கொடுத்தார்கள். “இதை அப்பவே செய்ய வேண்டியது தான?”, என்று கடுப்பாக இருந்தது. ஆனாலும் அவளுக்கு அது பிடித்த விஷயமே. அதனால் பொறுமையாக இருந்தாள். 
செயினை சித்தார்த் தான் அணிவித்தான். மெட்டி அணிவிக்கும் போது அது கழண்டு ஓடியது. “நான் நைட் போட்டு விடுறேன்”, என்று சொல்லி எடுத்து வைத்துக் கொண்டாள் பிரேமா.
அதன் பின்னரும் கிளம்பாமல் இருக்க மீண்டும் எரிச்சல் தலை தூக்கியது. “எவ்வளவு நேரம் எங்க வீட்ல வெயிட் பண்ணுறாங்க. உங்களுக்கு உங்க அத்தை பொண்ணுங்க கூட போட்டோ எடுக்குறது தான முக்கியம்? அதுவும் எடுத்தாச்சு தான? கிளம்பளாமா”, என்று கேட்டு அவனிடம் எரிந்தும் விழுந்தாள்.
“கடைசி அத்தை மகள் குடும்பம் கூட போட்டோ எடுக்காமல் போனால் நல்லா இருக்காது சிந்து. கொஞ்சம் பொறு”,  என்று சொல்லி அவள் பொறுமையை வெகுவாக சோதித்தான். 
மறு வீட்டுக்கு கிளம்பும் போது காரை வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டான் சித்தார்த் பின் அனைவரும் வேனில் ஏறினார். உள்ளே ஏறி அமர்ந்ததும் அவள் கையைப் பற்றியவன் “சாரி”, என்று சொன்னான்.
அதன் பின்னரும் கோபத்தை இழுத்து வைக்க முடியாமல் சகஜமாக பேசினாள். “கொஞ்சம் என்கிட்ட தள்ளி ஊக்காரு டி”, என்று அவன் சரசமாக சொன்னதும் வெட்கப் பட்டவள் அவனை ஒட்டியே அமர்ந்தாள். ஒரு வழியாக சிந்து வீட்டுக்கு இவர்கள் செல்லும் போது மணி ஐந்து.
அங்கே இருவருக்கும் ஆரற்றி எடுத்தாள் லட்சுமி. பின் மாப்பிள்ளையின் கால்களை தண்ணீரால் கழுவி விட்டாள். அவளுக்கு அவன் பணம் கொடுக்க வேண்டும் என்பதால் சட்டையில் துழாவினான். 
“இன்னைக்கு புல்லா தலவாணி சுமந்திருக்கேன். கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க கொலுந்தனாரே”, என்று அவள் சொன்னதும் அங்கே சிரிப்பலை எழுந்தது. 
அங்கே அனைவரிடமும் பேசி, பின் அவளுடைய தலை அலங்காரம் அனைத்தும் கலைக்க பட்டு கவரிங் நகைகளை கழட்டி விட்டு தங்க நகைகளை அணிந்தாள்.
அவளுக்கு பதினைந்து பவுனும், சித்தார்த்துக்கு மூன்று பவுனும் போட்டு மகளின் கல்யாணத்தை முடித்து விட்டோம் என்று நிம்மதியாக இருந்தாள் ராணி. 
பேங்கில் இன்னும் மூன்று பவுன் மற்றும் இரண்டு பவுனில் இரண்டு செயின் இருக்கிறது. அதையும் திருப்ப தான் எண்ணினாள்.  ஆனால் முடிய வில்லை. 
இரவு ஏழு மணிக்கு சித்தார்த் வீட்டுக்கு கிளம்பினார்கள். அங்கே தயாராகி இருக்கும் கறி உணவை சாப்பிட விடாத படி “நேரம் ஆய்ட்டு கிளம்புங்க”, என்று சொல்லி கிளம்ப வைத்து விட்டார்கள். 
கிளம்பும் போது “உங்க அம்மா கிட்ட ஒரு நூறு ரூபாய் வாங்கிக்கோ சிந்து”, என்றான் சித்தார்த்.
“அவங்க கிட்ட இருக்குறதை எல்லாம் பிடுங்கியது எல்லாம் பத்தாதா?”, என்று மனதில் நினைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். 
அவள் நினைத்ததை அவன் உணர்ந்தானோ என்னவோ? “இல்லை சிந்து, அதை நாம பல மடங்கா பெருக்கணும். அதுக்கு தான் கேக்குறேன்”, என்று சொன்னதும் சமாதானமானவள் ராணியிடம் கேட்டாள். 
கேட்கும் போதே கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. இந்த வீட்டை விட்டு செல்ல வேண்டுமே என்று மனது ஏங்கி அழுதது.
“வேற எதுக்கோ கேக்குறா போல?”, என்று எண்ணி “எதுக்கு சிந்து?”, என்று கேட்டாள் ராணி.
“பிள்ளை கேக்குரா, எதுக்குனு கேக்குற? எடுத்து கொடு”, என்று சொல்லி தன் கையில் இருந்த நூரையும் கொடுத்தாள் அமுதா.
சிந்து ஏங்கி ஏங்கி ஆழ ஆரம்பிக்க ஒருவர் ஒருவராக அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். கம்பவுண்ட் வாசலை கடக்கும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இரண்டு வேன்கள் முன்னே செல்ல அவர்களின் பின் புது வண்டியை ஓட்டிச் சென்றான் அரவிந்த்.
அன்று காலையில் சீக்கிரமே எழுந்து, பகல் முழுவதும் ஓய்வில்லாமல் நின்று, அங்கே இங்கே என்று அலைந்து பத்தாததுக்கு அழுது என்று வெகுவாக துவண்டு போய் இருந்தாள் சிந்து. சித்தார்த் “நான் இருக்கேன்ல செல்லம். எதுக்கு அழுற. நீ கஷ்ட படவே கூடாது”, என்று சொல்லி ஆறுதல் சொன்னான்.
அது மட்டுமில்லாமல் “இன்னைக்கு நைட் தூங்கிருவியா டி? அந்த ஜோசியர் வேற பன்னிரெண்டு மணிக்கு தான் சாந்தி முகூர்த்தம்னு குறிச்சு குடுத்துருக்கான்”, என்று சொல்லி அவளை சிவக்கவும் வைத்தான். 
சித்தார்த் வீட்டின் முன் இறங்கியதும் அவள் தலையில் அரிசி பெட்டி வைக்க பட அதன் கணம் தாங்காமல் 
“என்னால தூக்க முடியலை”, என்று சொல்லி விட்டாள்.
மீண்டும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்று அவள் கொண்டு வந்திருந்த விளக்கை அவளை பற்ற வைக்க சொல்லி அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். 
பின் இருவீட்டாரும் சம்பந்தம் கலக்க என்று மாற்றி மாற்றி புது துணிகளை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். 
பின் அவளை விட்டு விட்டு “ஹேப்பியா இரு”, என்று சொல்லி அனைவரும் கிளம்பும் போது மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.
ராணியின் கண்கள் கலங்க அரவிந்தின் கண்களும் கலங்கியது.  எல்லாரும் அழாத அழாத என்று சொல்லி ஆறுதல் சொல்லும் போது “என் மக மாதிரி பாத்துக்குறேன். கவலைப் படாம போயிட்டு வாங்க”, என்று சொன்னாள் தாயம்மா.
அதில் அனைவரும் நிம்மதியானார்கள், அதில் சிந்துவும் அடக்கம்.
இனி இது தான் அவள் வீடு. ஆனால் மனதளவில் தனிமையாக உணர்ந்தாள். எல்லாரும் அவர்கள் வேலையைப் பார்க்க என்ன செய்ய என்று தெரியாமல் தயங்கி நின்றாள். 
அப்போது சித்தார்த்தை வெகுவாக தேடியது மனது. அவனோ, பிரேமாவின் கணவனுடன் சேர்ந்து அவர்கள் இறக்கி வைத்து விட்டு சென்ற சீர் வரிசை சாமான்களை மேலே சிலாபில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். 
பின் வேன் டிரைவருக்கு, என்று பணம் பட்டுவாடா செய்ய போய் விட்டான். 
“கச கசன்னு இருந்தா குளி சிந்து”, என்றாள் பிரேமா. “குளிக்கணும் அண்ணி, அப்புறம் சேலை தான கட்டணும்?”, என்று சங்கடத்துடன் 
கேட்டாள்.
“ஆமா சிந்து”
“நான் இன்னும் சரியா கட்டி பழகலை அண்ணி”
அப்போது அங்கு வந்த மாரி “அதெல்லாம் பழகிரும் சிந்து. எனக்கே இன்னும் சரியா கட்ட தெரியாது. நீ குளிச்சுட்டு நைட்டி மாத்திட்டு வா. அண்ணி கட்டி விடுவாங்க”, என்றாள். 
பின் சவரின் அடியில் நின்றதும் மனசு லேசானது போல இருந்தது. குளித்து முடித்து வந்ததும் ஒரு காட்டன் சேலையை கட்டி விட்டாள் பிரேமா. 
கட்டும் போதே “எதுக்கு டென்சனா இருக்க சிந்து? சித்தார்த் ரொம்ப நல்ல டைப். அவங்களுக்கு கோபமே வராது. உங்க மச்சானாவது பயங்கரமா கோப படுவாங்க. சித்தார்த் உன்னை நல்லா பாத்துக்குவாங்க”, என்றாள் மாரி.
பின் அவள் அவிழ்த்து போட்ட கல்யாண சேலையை மடித்து வைத்த மாரி “இதை இன்னொரு நாள் கோயிலுக்கு கட்டிட்டு மடிச்சு வச்சிரு”, என்று சொன்னாள். 
பின் பத்து மணிக்கு சித்தார்த் குளித்து முடித்து வந்ததும் மதியம் மண்டபத்தில் மீதி இருந்த சாப்பாடை அனைவரும் சாப்பிட்டார்கள். பின் பிரேமா சிந்துவை அழைத்துக் கொண்டு வராண்டாவிற்கு சென்று விட்டாள். மாரி அவள் வீட்டுக்கு சென்று விட்டாள். 
சித்தார்த்தின் அத்தை பிள்ளைகள் மொத்த குடும்பமும் தூங்குவதற்கு மாடிக்கு சென்று விட்டார்கள்.
பிரேமாவும் சிந்துவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அவளிடம் தோழமையோடு பேசுவது அவளுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அப்போது அங்கு தாயம்மா வந்ததும் மாமியார் முன்பு பேசுவது சிறு தயக்கத்தைக் கொடுத்தது. 
அப்போது “இந்த மாரி கல்யாண சேலையை போய் கோயிலுக்கு கட்ட சொல்றா மா”, என்று போட்டுக் கொடுத்தாள் பிரேமா. 
“ஆமா அதை கட்டுனா விளங்கிரும். அப்படியா சொன்னா? அவளுக்கு அறிவே இல்லை”, என்று திட்டினாள் தாயம்மா.
சிந்துவுக்கு தான் மனசு பாரமாக இருந்தது. மாரி வெகுளியாக தான் சொன்னாள். அதை போய் இவர்கள் இப்படி பேச வேண்டுமா என்று இருந்தது. பின் தாயம்மா உள்ளே சென்றதும் பிரேமாவின் பிள்ளைகள் பற்றி பேசிக் கொண்டிருந்ததில் நேரம் சென்றது. 
சித்தார்த், தாயம்மா, சுந்தரம் மற்றும் அவனின் அத்தையோடு பேசிக் கொண்டிருந்தான். 
பிரேமாவின் கணவன் ராஜா, சித்தார்த் ரூமை முதலிரவுக்கு என்று ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தான். 
ஐயர் பன்னிரெண்டு மணிக்கு தான் நல்ல நேரம் என்று குறித்து கொடுத்திருந்ததால் பதினோன்னே முக்காலுக்கு “உள்ள வா சிந்து”, என்று அழைத்து வந்த பிரேமா, அவள் கையில் ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து அறைக்குள் செல்ல சொன்னாள்.
சங்கோஜத்துடன் அதை வாங்கிக் கொண்டவள் அறைக்குள் சென்றாள். அவள் உள்ளே வரும் போது கட்டிலில் அமர்ந்திருந்தான் சித்தார்த்.  
காதல் தொடரும்….

Advertisement