Advertisement

“மறுமகன் கூட சேட் பண்ண முடியுமா? தப்பா பேசாதீங்க மா?”
“அப்ப கண்டவன் கிட்ட மட்டும் பேசலாமா?”
பெற்ற தாயைப் பற்றி கணவன் கேவலமாக பேசும் போது கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் சிந்து எவ்வளவோ பொறுமையாக எடுத்து சொன்னாள். ஆனால் சித்தார்த் கேட்கவே இல்லை. 
அதுவும் ஒரு நாள் “உங்க அப்பா சரி இல்லை. அதான் உங்க அம்மா இப்படி இருக்காங்க. ஒரு நாள் உங்க அப்பா கிட்ட பேசணும்”,என்று சொன்ன போது அதிர்ந்து தான் போனாள்.
“இவன் என் அம்மாவைப் பத்தி என்ன தான் நினைச்சிருக்கான்.ஒரு மாமியாரைப் பத்தி இப்படி எல்லாம் பேசுறானே?”, என்று மனதுக்குள் அழுவாள். இந்த விஷயத்தை மறந்தும் ராணியிடம் சொல்ல வில்லை. சொல்லக் கூடிய விஷயமும் இல்லை என்பதால் தனக்குள்ளே புழுங்கினாள். 
ஆனால் ஒரு முறை “இது யார் நம்பர் மா?”, என்று ராணியிடம் விசாரிக்கவும் செய்தாள். 
“அந்த ஆட்டோக்கார தம்பியோட பொண்டாட்டி நம்பர் சிந்து. அந்த பிள்ளைங்க நல்ல பேசும்”
“நீங்க மெஸ்ஸேஜ் எல்லாம் பண்ண மாட்டீங்களே மா?”
“எனக்கு இங்க்லிஷ் வாசிக்க தானே தெரியும், எழுத தெரியாதே சிந்து. நான் வாய்ட்டு சொல்லுவேன். அதுவே டைப் ஆகும்”, என்று புன்னகையுடன் சொன்னாள் சிந்து. 
அதன் பின் வந்த நாட்களில் எல்லாம் ராணியைப் பார்க்கும் போது மனம் புழுங்கினாள் சிந்து. ஏனென்றால் சிந்துவை அந்த அளவுக்கு சாகடித்தான் சித்தார்த். 
“எனக்கு மட்டும் எதுக்கு உங்க அம்மா மெஸ்ஸேஜ் பண்ண மாட்டிக்காங்க. அவனுக்கு மட்டும் பண்ணுறாங்க”, என்று கேக்கும் போது “இவன் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கான்”, என்று சிந்துவுக்கு தோன்றும். 
“இங்க பாருங்க மா. அது அந்த அண்ணன் நம்பர் இல்லை. அந்த அக்காவோடது”, என்று அவள் சொல்லும் போது “பொய் சொல்லாத, அந்த நம்பரையும் அவன் ஆட்டோல எழுதிருக்கான்”, என்று அவளிடம் வாதம் செய்தான்.
போராடி போராடி பார்த்தவள் ஒரு நாள் “உங்க அம்மா மேல நீங்க இப்படி சந்தேக படுவீங்களா? எங்க அம்மா தான் கிடைச்சாங்களோ?”, என்று சண்டை போட்டாள் சிந்து. 
“எங்க அம்மாவா போன் எடுத்து கண்டவன் கிட்ட எல்லாம் பேசுராங்க. எங்க அம்மா போன்ல வாட்சப்பே இல்லை”
“அப்ப அது அந்த அண்ணானோட நம்பர் இல்லைன்னு சொல்லியும் நீங்க நம்பலைல்ல? என்கிட்டயே எங்க அம்மாவை தப்பா பேசுறீங்க? இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இனி என்கிட்ட பேசாதீங்க. உங்களை நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு. உங்க மேல இருந்த காதல் எல்லாம் செத்து போச்சு”, என்று சிந்து திட்டியதும் “இனி அவங்களைப் பத்தி பேச மாட்டேன். பேசுனது தப்பு தான். லவ் பண்ணலைன்னு சொல்லிறாத செல்லம். நீ தான் எனக்கு முக்கியம்”, என்று வாக்கு கொடுத்தான் சித்தார்த். 
இப்போது இன்று மீண்டும் அந்த பேச்சு எடுத்ததும் அழுது கொண்டே படுத்திருந்தாள் சிந்து. ராணி வாழ்வில் பட்ட கஷ்டங்கள் பல. ஒழுங்கான வேலையும் இல்லாமல் தினமும் குடித்து விட்டு வரும் கணவனை வைத்துக் கொண்டு போராடி தான் சிந்துவையும் அரவிந்தையும் படிக்க வைத்து ஆளாக்கினாள். 
ஆனால் இன்று அவளுடைய ஒழுக்கத்தையே ஒருவன் குறை கூறிக் கொண்டு இருக்கிறான். இத்தனை நாள் பேசாமல் இருந்தவன் மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறான். இப்போது மெல்ல மெல்ல அவன் மீது இருந்த எரிச்சல் வெறுப்பாக மாறியது. 
இதை எண்ணிக் கொண்டு படுத்திருந்ததால் தூக்கம் அவளை விட்டு சென்றிருந்தது. அப்போது ஒரு தூக்கம் போட்டு எழுந்த சித்தார்த் அவள் வயிற்றில் கையைப் போட்டான்.
அந்த தொடுகையில் எரிச்சல் அடைந்தவள் “இவன் எண்ணவேணும்னாலும் பேசிட்டு இவன் தேவைக்கு என்னை நெருங்குவானா?”, என்று எண்ணிக் கொண்டு அருவருப்புடன் கையை தட்டி விட்டாள். 
“இப்ப எதுக்கு தட்டி விடுற?”, என்று கேட்டான் சித்தார்த். 
எழுந்து அமர்ந்த சிந்து “தேவை இல்லாம என்கிட்ட சண்டைக்கு வராதீங்க. நானே மன கஷ்டத்துல இருக்கேன்”, என்றாள். 
“நான் இருக்கும் போது உனக்கு என்ன கஷ்டம்?”, என்று கேட்டுக் கொண்டே முத்த மிட வந்தான் சித்தார்த். 
முகத்தை திருப்பிக் கொண்ட சித்தார்த் “நீங்க எல்லாம் மனுஷன் தானா? வாய் இருந்தா என்ன வேணும்னாலும் பேசலாமா? அப்படி பேசிட்டு என் கிட்ட வறீங்க?”, என்று கேட்டாள்.
“இப்ப என்ன நான் இல்லாததையா சொல்லிட்டேன். உங்க அம்மா சேட் பண்ணது உண்மை தானே? இவங்க எதுக்கு அவன் கிட்ட பேசணும்?”
“நான் அத்தனை தடவை சொல்லியும் நீங்க நம்பலைல்ல? சரி இப்ப அந்த அண்ணன் மேல உங்களுக்கு என்ன கோபம்?”
“அவன் என்னை அவமானப் படுத்திட்டான்”
“இது என்ன புதுக் கதை?”
“நான் தீபாவளி அன்னைக்கு உங்க பெரியம்மாவை விட போனப்ப என்ன நக்கலா என்கிட்ட பேசுனான் தெரியுமா?”
“என்ன சொன்னாங்க?”
“அதை உங்க பெரியம்மா கிட்டயே கேளு. இருந்தாலும் உங்க அப்பா சரியில்லை”
அடுத்த நொடி போனை எடுத்த சிந்து ராணியை அழைத்தாள். அந்த நேரத்தில் பதறிப் போய் போனை எடுத்த ராணி சிந்துவின் அழு குரலை கேட்டு திகைத்தாள்.
“என்ன சிந்து ஆச்சு?”
“அம்மா, எனக்கு வாழவே பிடிக்கலை மா”
“சிந்து”
“ஆமா மா, நானும் எல்லாம் மாறும் மாறும்னு நம்புறேன். ஆனா ரொம்ப வலிக்குது மா”
“என்னன்னு சொல்லு சிந்து, எனக்கு பதறுது”
“நீங்க அந்த ஆட்டோக்காரன் அண்ணன் கிட்ட பேசுறீங்கன்னு சொல்லி என்னை டார்சல் பண்ணுறாங்க மா?”, என்று சொன்ன சிந்து தாயிடம் சொல்ல கூடாத விசயங்களையும் சொல்லி விட்டு ஏங்கி ஏங்கி அழுதாள். 
“சிந்து”, என்று அதிர்ந்து போய் அழுத ராணியின் கண்களிலும் கண்ணீர். 
சித்தார்த் டார்ச்சல் செய்த விசயங்களையும் பேசிய பேச்சுக்களையும் ராணியிடம் சொன்னாள் சிந்து. அனைத்தையும் சித்தார்த்தும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். 
“சிந்து மா, நீ அடிக்கடி மூடவுட் ஆகி இருக்குறதுக்கு நான் தான் காரணமா? உன்னை உன் மாமனார் மாமியார் தான் கஷ்ட படுத்திருக்காங்கன்னு பாத்தா என்னை வச்சும் உனக்கு பிரச்சனை வந்துருக்கா சிந்து?”, என்று அழுது கொண்டே கேட்டாள் ராணி. 
“ஆமா மா, எவ்வளவோ போராடிட்டேன். உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு எவ்வளவோ முயற்சி செஞ்சேன். இவ்வளவு நாள் பேசாதவங்க, இன்னைக்கு மறுபடியும் ஆரம்பிக்காங்க மா”
“சிந்து நான் அப்படி பட்டவளா சிந்து”
“அம்மா, எனக்கு உங்களை பத்தி தெரியும் மா. நான் அது அந்த அக்கா நம்பர்ன்னு சொல்லியும் அவங்க நம்பாம பேசுராங்க மா”
“ஐயோ என் பொண்ணு வாழ்க்கை இப்படியா ஆகணும்? எப்படியோ வாழணும்னு நினைச்சா நான் ஏன் இவ்வளவு கடனோட இருக்க போறேன். நான் செத்துட்டா நீ நிம்மதியா இருப்ப தானே சிந்து”
“அம்மா, நீங்க இல்லைன்னா எனக்கு வேற யாரு மா இருக்கா?”
“சரி அந்த ஆட்டோக்காரன் உன் வீட்டுக்காரரை என்ன சொன்னானாம்?”
“அதை சொல்ல மாட்டிக்காங்க. கேட்டா உன் பெரியம்மா கிட்ட கேளு சொல்றாங்க”
“சரி சிந்து, நான் நாளைக்கு பேசுறேன். இப்ப அழாம தூங்கு. எதுவும் சண்டை போடாத. சரியா மா”
“சரி மா”, என்று சொல்லி போனை வைத்த சிந்து அங்கிருந்து எழுந்து அடுத்த ரூமில் சென்று படுத்துக் கொண்டாள். 
அழுது அழுது எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. 
அடுத்த நாள் எழுந்து அவன் முகத்தைக் கூட பார்க்காமல் வீட்டு வேலையை செய்து கொண்டு இருந்தாள் சிந்து. 
அவனை நினைத்தாலே அவளுக்கு வெறுப்பாக இருந்தது. “அவனோட அம்மாவை இப்படி சொல்வானா?”, என்று கோபமாக வந்தது. 
அப்போது அவளை அழைத்தான் அவளுடைய தம்பி அரவிந்த். 
“எப்படிக்கா இருக்க?”
”நல்லா இருக்கேன் தம்பி, நீ எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன், சாப்பிட்டியா?”
“சாப்ட்டேன். அங்க என்ன தான் பிரச்சனை?”
“அம்மா சொன்னாங்களா?”
“இல்லை மாமா தான் போன் பண்ணுனாங்க. அவங்க அம்மாவை நீ சனியன்னு எல்லாம் பேசிருக்க?”
“ஓ, உன்கிட்ட பத்த வச்சாச்சா?”
“அக்கா நீ அப்படி எல்லாம் பேசிருக்க கூடாதுக்கா?”
“உனக்கு தெரியாது, அவங்க அம்மா அப்பா என்ன எல்லாம் செஞ்சாங்கன்னு”
“அவங்க என்ன வேணும்னாலும் செஞ்சிட்டு போகட்டும், நம்ம அம்மாவைக் கூட ஆச்சி கஷ்ட படுத்திருக்காங்க. அதுக்காக அவங்க அம்மாவை நீ சனியன்னு சொல்லுவியா? நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு வரும். அவ நம்ம அம்மாவை சொன்னா. என்ன நடந்தாலும் பொறுத்து போக்கா”
“நீ ஒரு சைடே பேசாத”
“நான் ஒரு சைடே பேசலை. உனக்காகவும் தான் மாமா கிட்ட பேசுனேன். கொஞ்சம் பொறுமையா போ. அவங்க பெரியவங்க தானே. எல்லாத்தையும் விட்டுரு. சரி என்ன சாப்பிட்ட?”
“இனி தான் செய்யனும்”
“சரி, கொஞ்சம் வேலை இருக்குக்கா. நான் நைட் பேசுறேன்”, என்று சொல்லி அவன் வைத்ததும் ராணியை போனில் அழைத்தாள் சிந்து. 
“நானே போன் பண்ணணும்னு நினைச்சேன். சாப்பிட்டியா சிந்து?”
“இனி தான் மா”
“உங்க வீட்டுக்காரர் எங்க?”
“வெளிய இருக்காங்க போல? ஆளைக் காணும்.இப்ப தான் தம்பி போன் பண்ணுனான். அவன் கிட்ட வத்தி வச்சிருப்பாங்க போல? அவங்க அம்மாவை எதுக்கு சனியன்னு சொன்னன்னு திட்டுரான்”
“நீயும் எதுக்கு சனியன்னு சொல்ற சிந்து. சரி அதை விடு. நான் அக்கா கிட்ட பேசுனேன். அவ அந்த ஆட்டோக்காரன் அப்படி ஒண்ணும் சொல்லலையேன்னு சொல்றா”
“இவங்க வேணுக்குன்னு பேசுராங்க மா.  எவ்வளவு டார்ச்சல் தெரியுமா? சொன்னா நம்பவே மாட்டாங்க”
“ஆட்டோக்காரன் குடும்பம் நமக்கு ஹெல்ப் தானே சிந்து பண்ணிருக்காங்க. அவங்களை போய் இப்படி சொல்லலாமா? நான் அப்படி பட்டவளா சிந்து?”
“சம்பந்தமே இல்லாம பேசுவாங்க மா. உனக்கு வழக்காப்பு வச்சா அவன் வரக் கூடாதுன்னு பேசுவாங்க. நீங்க எதுக்கு போனையே பாத்துட்டு இருக்கீங்க? என்னை மட்டும் எடுக்க கூடாதுன்னு சொல்றீங்கன்னு கேட்டா, நான் என்ன மத்தவங்க மாதிரி மெஸ்ஸேஜா பண்ணுறேன்னு சொல்லுவாங்க. உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன் மா, முடியலை”
“அவங்க கிட்ட பணம் வாங்கிருக்கோம்னு அவங்க கிட்ட அடிமையா இருக்கணும்னு நினைக்கிறாங்களா? நான் வேணும்னா உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசவா சிந்து”
“அதெல்லாம் வேண்டாம் மா”
“சரி கவலைப் படாம இரு.இனி அவங்க அம்மா அப்பா பத்தி எல்லாம் நீ பேச வேண்டாம் சிந்து மா”
“சரி மா”, என்று சொல்லி போனை வைத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 
அப்போது அவள் அருகே வந்த சித்தார்த் “என்னமோ சொன்ன? இப்ப பாத்தியா உங்க அம்மா ஆன்லைன்ல இருக்காங்க”, என்று சொன்னான். 
அதற்கு மேல் தாங்க முடியாமல் அவனை முறைத்தவள் “ச்சி நீயெல்லாம் ஒரு மனுசனா??”, என்று கேட்டாள். 
“மரியாதை கொடுத்து பேசு சிந்து”
“உனக்கெல்லாம் என்ன மரியாதை. சரி அந்த அண்ணன் உன்னை என்ன அசிங்க படுத்திட்டாங்க? அதை சொல்லு முதல்ல?”
“உங்க பெரியம்மா கிட்ட கேளு”
“அவங்க கிட்ட கேட்டாச்சு. அப்படி எல்லாம் இல்லைன்னு அவங்க சொல்றாங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு இப்ப நீ சொல்லணும்”
“அவனை சொன்னா உனக்கு ஏன் எரியுது?”
“ஏன் பேசமாட்ட? உன் அண்ணனை பத்தி பேசும் போதும் நீ இதே வார்த்தையை தானே சொன்ன? வாழைப்பழம் வாங்கினதுக்கே சந்தேக பட்ட குடும்பத்துல பிறந்த நீ எப்படி இருப்ப? உன்னை கட்டிக்கிட்டதுக்கு எவன் கூடவாது ஓடிப் போயிருக்கலாம். நல்லதா போச்சு பிள்ளை இல்லை. வயித்துல பிள்ளை இருக்கும் போதும் நீ என்னை பாடா படுத்த மாட்டேன்னு என்ன நிச்சயம்?”
“நான் இல்லாததையா சொன்னேன்”
“அடச்சி வாயை மூடு, உன் அம்மா காரியை போய் சொல்ல வேண்டியது தானே?”
“அவங்களா வாட்சப் வராங்க. மெஸ்ஸேஜ் பண்ணுறாங்க?”
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட சே?”, என்று சொல்லி விட்டு ராணியை அழைத்த சிந்து “அம்மா இப்ப நீங்க ஆன்லைன்ல வாரீங்கன்னு சொல்லி சண்டையை இழுக்குறாங்க மா”, என்றாள்.
“ஐயோ சிந்து, வாட்சப்பே வேண்டாம்னு டெலீட் பண்ணலாம்னு தான் எடுத்தேன். எப்படி பண்ணணும்னு தெரியலை. அதான் எடுத்தேன். நீ போனை வை. நான் வரேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள். 

Advertisement