Advertisement

காதல் ஆலாபனை  37 {எபிலாக்} 
சில மாதங்களுக்கு பிறகு…
“எல்லாம் ரெடியா..? இந்த டிசர்ட்டை இங்க வைக்காதீங்க, கடைசில அந்த ரூப்ல கொண்டு போய் வைங்க.. அங்க சேர்ஸும் போடுங்க, சீக்கிரம்.. சீக்கிரம்..” என்று எல்லோரையும் இந்திரஜித் விரட்டி கொண்டிருந்தான். 
இன்று காலை தான் தீக்ஷியின் கனவு ப்ராஜெக்ட் ஷாப்பிங் காம்ப்ளெக்சின் திறப்பு விழா நடந்து முடிந்திருந்தது, அதற்கான பார்ட்டிக்கான ஏற்பாடு தான் இப்போது  நடந்து கொண்டிருந்தது. 
“ஜித்து.. ட்ரிங்க்ஸ் எல்லாம் மேல பார்ல தான் சொல்லிடு, கீழ யாரும் வரக்கூடாது..” என்று விஷ்வஜித் உறுதியாக சொன்னான். 
“ம்ம்.. நானும் அதைதான் யோசிச்சேன், எல்லாம் பேமிலியா இன்வைட் செஞ்சிருக்கோம், கீழ ட்ரிங்க்ஸ் இருந்தா சரிப்பட்டு வராது..” என்றவன், 
“ஆமா.. வீட்டுக்கு போன் செஞ்சியா..? ஏன் இன்னமும் யாரும் வரல..?” என்று  கேட்டான். 
“நான் இப்போதான் செஞ்சேன் மாமா.., டூ மினிட்ஸ்ல வந்துடுவோம்ன்னு சொன்னாங்க..” என்று மனோ சொன்னான். 
“ஓகே.. நீ இங்க பாரு, நான் உள்ள போய் மத்த அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் பார்க்கிறேன்..” என்று விஷ்வஜித் உள்ளே சென்றுவிட, வீட்டில் இருந்து எல்லோரும் வந்திறங்கினர். 
“வாங்க.. ஏன் இவ்வளவு லேட்..? ம்மா.. ஆன்ட்டி.. நீங்க உள்ள போய்  எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க..” என்று சுபாவையும், பாரதியையும் உள்ளே அனுப்பியவன்,  
“ப்பா.. நீங்க கணேஷ் அங்கிள் பேமிலி ஏன் இன்னும் வரலன்னு பாருங்க..”
“ராகுல்.. நீ எங்க  நேரா பபேகிட்ட போற..? உனக்கு உள்ள மனோவோட வேலை இருக்கு,   தருண்..  நீயும் அவங்களோட  ஓடு..”
“அதி நீ ஏன் இன்னும் இங்கேயே நிக்கிற..? உள்ள போய் அம்மா,  ஆன்ட்டிக்கு ஏதாவது உதவி செய்..”  என்று  எல்லோருக்கும் வேலை சொல்லியவன், மனைவி உள்ளே செல்ல போகவும், அவளின் கையை எட்டி பிடித்து தன்னிடம் நிறுத்தி கொண்டான். 
“நீ எங்க ஓடுற..? என்னோடே நில்லு..”  என்று சொல்லவும், அதிதி அவனை முறைத்தவள், 
“அது சரி,  உங்க பொண்டாட்டி மட்டும் எந்த வேலையும் செய்யாம உங்களோட  நிக்கணும், நாங்க மட்டும் ஓடணுமா..?” என்று கிண்டலாக கேட்டாள். 
“என்ன அதி இப்படி சொல்லிட்ட, அவ வேலை செஞ்சா உனக்கு மனசு தாங்காதுன்னு தான் நான் அவளை பிடிச்சு வச்சிருக்கேன், அவ  மேல உனக்கு இருக்கிற பாசம் எனக்கு தெரியாதா சொல்லு, உனக்காகதான்..” என்று சிரிப்புடன் சொன்னான். 
“இதென்ன புது ட்ரிக்கா இருக்கு..?  உங்க பொண்டாட்டி வேலை செஞ்சா எனக்கு மனசு  தாங்காதா..? அதெல்லாம் தாங்கும், நீங்க அவ கையை விடுங்க..” என்று அதிதியும் விடாமல் சொன்னவள், தீக்ஷியின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தாள். 
“அதி.. எனக்கு ஒரு டவுட்.. இந்த விஷூ அண்ணா..  பார்ட்டிக்கு லெஹங்காவே வேணும்ன்னு ஏன் பிடிவாதம் பிடிச்சார்ன்னு உனக்கு ஏதாவது தெரியுமா..? ஒருவேளை ரிசப்ஷன் அன்னிக்கு உன் அழகை சரியா பார்க்க முடியலன்னு இப்போ போட்டு பார்க்க ஆசைப்பட்டாரோ..?” என்று தீக்ஷி குறும்பாக அவளின் காதுக்கருகில் சென்று கேட்க, அதிக்கு முகம் குப்பென சிவந்துவிட்டது. 
“தீக்ஷி.. நீயும் சின்ன மாமாவோட சேர்ந்து ரொம்ப கெட்டுபோயிட்ட, போ.. போ.. அவர்கிட்டேயே போ..” என்று அவளை மறுபடியும் இந்திரஜித்திடம் ஒப்படைத்துவிட்டாள். 
“தீக்ஷி.. என்ன அதிசயம் இது..? அதி இவ்வளவு சீக்கிரம் பின் வாங்கிட்டாளே..? என்ன சீக்ரட்..?  எங்களுக்கும் சொல்லேன்..” என்று ராகுல் ஆர்வமாக கேட்டான். 
“டேய்.. நீங்க உள்ள போகவே இல்லையடா..? இங்கேயேதான் சுத்திட்டு இருக்கீங்களா..?” என்று இந்திரஜித் கடுப்பாக கேட்டான். 
“ஆஹ்ன்.. இது நல்ல கதையா இருக்கே..? உங்க பொண்டாட்டி மட்டும் எந்த வேலையும் செய்ய கூடாது, நாங்க மட்டும் செய்யணுமா..? போங்கண்ணா..” என்ற ராகுல், 
“தீக்ஷி.. நீ சொல்லு.. அதி வாயை எப்படி அடைச்ச..?” என்று திரும்பவும் கேட்டான். 
“ம்ம்.. அது எல்லாம் கேர்ள்ஸ் டாக்கிங்..” என்று தீக்ஷி உதடு சுளித்தாள்.  
“ஆமா பெரிய கேர்ள்ஸ் டாக்கிங்.. என்ன இந்தியா.. சைனா பிரச்சனையா பேசி இருக்க  போறீங்க..? எப்போ பார்த்தாலும் ட்ரெஸ், மேக்கப், இதப்பத்தி தான் பேசறீங்க..  இதுக்கு பேரு கேர்ள்ஸ் டாக்கிங்காம்..” என்று மனோ  கிண்டலாக சொல்ல, 
“கரெக்ட்டா சொன்ன மனோ, என்ன அதிக்கு மலாய் ஸ்வீட் வாங்கி தரேன்னு ஏதாவது சொல்லியிருப்ப, இதுக்கு போய் இவ்வளவு பில்ட்அப்..” என ராகுல் சொல்லவும், 
“சில்லி அதிம்மா..” என்ற தருணும் மாற்றி மாற்றி ஹைபை போட்டு கொண்டனர். 
“டேய்.. என்னை சில்லி சொன்னீங்க.. நான் வில்லியா மாறவேண்டியிருக்கும் பார்த்துக்கோங்க.. என்ன மறந்துடுச்சா..?” என்று அதிதி பொங்கி சண்டையிட ஆரம்பித்தாள். 
“அப்போ இல்லை நீ எங்களை பழிவாங்கிட்டது.. இப்போ  எல்லாம் எங்க பக்கத்துல கூட நீ வரமுடியாது.. போவியா..”  என்று ராகுல் நக்கலாக சொல்ல, 
“ஆமா நாங்க வளந்துட்டோம்.. சில்லி கேர்ள்ஸ்… என்ன சித்தப்பா..” என்று தருண் இந்திரஜித்திடம் வேறு கேட்டான். 
“டேய்.. உங்க ஆட்டத்துக்கே நான் வரல, உங்களுக்கு பரவாயில்லை, என்னை மாதிரி குடும்பஸ்தானுக்கு தான் பல கஷ்டம்.. போங்கடா..” என்று தீக்ஷியின் முறைப்பில் அவன் ஜகா வாங்கி கொண்டவன், அங்கிருந்து மனைவியையும் இழுத்து கொண்டு சென்று விட்டான். 
“ஆனா.. இந்த கேர்ள்ஸ்.. சந்திரமுகி மாதிரி முறைச்சே ஹஸ்பண்ட்ஸை பயமுறுத்திடுறாங்க.. என்ன ராகுல்ண்ணா.. டூ பேட்..”  என்று மனோ, அக்காவின் முறைப்பை கிண்டலாக சொன்னான். 
“மனோ.. என்ன நீ..? இவங்களை போய் இன்னும் கேர்ள்ஸ் சொல்லிட்டிருக்க..? இப்போ இவங்க எல்லாம் ஆன்ட்டிஸ்… எப்படி ஆன்ட்டி..?” என்று ராகுல் சொல்லி சிரிக்கவும், 
“அப்போ நான் இனி இவங்களை  சில்லி கேர்ள்ஸ் சொல்ல கூடாது..  சில்லி ஆன்ட்டிஸ் தான்  சொல்லணும்..”  என்று தருணும் சொல்ல, மூவரும் வழக்கம் போல் ஹைபை போட்டு கொண்டனர். 
“டேய்.. பச்சா பசங்களா..? ரொம்ப ஓவரா போய்ட்ட்டிருக்கீங்க பார்த்துக்கோங்க..” என்று அதிதி கோவமாக மிரட்ட, 
“ஐயோ.. நாங்க பயந்துட்டோம்.. அதி ப்ளீஸ்.. எங்களை எதுவும் செஞ்சுடாத..” என்று மூவரும் நடுங்குவது போல்  செய்து நக்கலாக சிரித்தனர். 
“அப்படியா..?  இருக்குடா இன்னிக்கு உங்களுக்கு..?” என்று உள்ளுக்குள் நம்பியார் போல் கையை பிசைந்தவள், 
“ஓகே.. போய் தொலைங்க.. இனி உங்களோட எல்லாம் நான் சண்டை போட விரும்பல.. நான் என்ன உங்களை மாதிரியா..? எனக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கு..?”  என்று கெத்தாக முகத்தை தூக்கி வைத்து பேச, மூவரும் அவளையே  யோசைனையுடன்  பார்த்தனர். 
“என்ன அதி..?  திடீர்னு பருப்பை  பத்தி எல்லாம் பேசற..? சரி சொல்லு.. என்னென்ன பருப்பு இருக்குனு நாங்களும் தெரிஞ்சுகிறோம்..” என்று ராகுல் மேலும் சீண்ட, 
“வாடா… வா.. இன்னிக்கு உனக்கு பத்து ஸ்பூன்டா..” என்று உள்ளுக்குள் எண்ணி கொண்டிருந்தவள், 
“ம்ம்.. என்னென்ன பருப்பு இருக்குன்னு உனக்கு வரபோற பொண்டாட்டிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.. போ..” என்று கண்ணை சுருக்கி சொன்னாள். 
“அப்போ.. உனக்கு தெரியாது..? வாட் எ பிட்டி..? பாவம் விஷூ மாமா..”  என்று மனோ உச்சு கொட்டினான். 
“பாவம் அவர் இல்லைடா.. நீங்கதான்..” என்று கொதித்து கொண்டிருந்தவளை உள்ளே இருந்து சுபா கூப்பிட, 
“போ.. போ.. உன் பாவப்பட்ட மாமியார் கூப்பிடுறாங்க, உன் பருப்பை.. பொறுப்பை எல்லாம் அவங்ககிட்ட  காட்டு..” என்று ராகுல் சொல்லவும், மூவரும் ஹைபை போட்டு சிரித்தனர். 
“ஆடுங்கடா.. ஆடுங்க.. இன்னிக்கு உங்களை அலறவிடல.. என் பேரை மாத்திக்கிறேன்..”  என்று சூளுரைத்து கொண்டு உள்ளே சுபாவிடம் சென்றாள். 
“அதிதி.. இந்த திங்க்ஸை எல்லாம் உள்ள கொண்டு போய் வச்சிட்டு வந்துடு..” என்று சுபா கொடுத்த பொருட்களை தூக்கி கொண்டு சென்றவளின் வழியில் எதிர்புறமாக  வந்து கொண்டிருந்த விஷ்வஜித்,மனைவியை மிக தீவிரமாக சைட் அடித்த படி வந்து கொண்டிருந்தான். 
“என்ன இவரு இப்படி பார்க்கிறாரு..?” என்றவளுக்கு அவனின் பார்வை செல்லும் இடம் புரியவும் முகம் சிவந்து போனது. 
“அச்சச்சோ.. இந்த தாவணி விலகியிருக்கே..” என்று குனிந்து தன் இடையை பார்த்தவளுக்கு இழுத்து  விட முடியமால்  கையில் பொருட்கள் இருக்கவும், தடுமாறிய படி வந்து கொண்டிருந்தவளை நெருங்கி விட்டான் விஷ்வஜித். 
அவனின் சுவாசம் அவளின் நெற்றியில் மோதும் அளவிற்கு நெருங்கி நின்றவன் மிக மெல்லிய குரலில், 
பாடி கொண்டிருக்க கை விரல்கள் அவளின் இடையில் ஊர்ந்து சென்று அவளின் நழுவிய தாவணியை மேலே இழுத்து பின் செய்தது. 
அவனின் பாடலும், இடையில் மாயம் செய்யும் விரலும் அதிதிக்கு மிக அதிகமான நடுக்கத்தை கொடுக்க உதடு துடிக்க கண் மூடி நின்றுவிட்டாள். 
“இனியும் முடியாது.. இன்னிக்கு நைட் ரெடியா இருடி..” என்று அவளின் காதுக்கருகில் கிசுகிசுப்பாக சொன்னவன், சென்றுவிட, அதிதி தன்னிலை வரவே சில நிமிடங்கள் ஆகின. 
அதற்கு பிறகு கணவன் இருக்கும் பக்கமே பார்வையை திருப்பாமல் சுற்றி கொண்டிருந்தவளின் வெட்கம் கலந்த பயம் புரிய விஷூவிற்கு உள்ளுக்குள் சிரிப்பு. “வெறும் வாய் சொல் வீராங்கனை..” என்று செல்லமாக கொஞ்சி கொண்டான்.
“விஷூ.. போதும்டா, இங்க ஆறே ஓடுது..” என்று இந்திரஜித் அண்ணனின் பார்வையை கவனித்து கிண்டல் செய்யும் அளவு விஷூவின் பார்வை மனைவி மேலே நிலைத்தது. 
“போதும் போடா.. உங்களுது எல்லாம் கடலே நிறைஞ்சுடுச்சு, என்னை சொல்ல வந்துட்டான்..” என்று சிறிதும் அசராமல் தம்பிக்கு கொடுத்தவன் சென்றுவிட, தீக்ஷி வாய் மூடி சிரித்தாள். 
“அப்படியா… நம்மது கடலேவா என்ன..?” என்று மனைவியிடம் இந்திரஜித் சிரிப்புடன் கேட்டான். 
“ம்ம்.. எனக்கு ஒன்னும் அப்படி தெரியல..” என்று தீக்ஷி குறும்பாக சொன்னாள். 
“அப்படிங்கிற.. அப்போ  மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்போமா..? என்றவனின் காதல் பார்வையில் சிலிர்த்த மனைவியின்  கையை இறுக பற்றி கொண்டான். அவளும் அவனின் கை விரல்களுடன் தன் கை விரல்களை இறுக்கி கொண்டாள்.
“மனோ.. இது நம்ம RK சார்.. நம்மளை போல இவங்களும் கோல்ட் பிஸ்னஸ் தான்..” என்று தம்பிக்கு இப்போதிருந்தே தொழில் ஆட்களை பழக்கி விட ஆரம்பித்தாள் தீக்ஷிதா. 
அவனும் தேவை இல்லை என்று நினைக்காமல் எல்லோருடனும் மரியாதையுடனே பேசினான். இந்திரஜித்துமே எல்லா இடத்திலும் மனோவை முன்னிறுத்தி தான் செய்தான். 

Advertisement