Advertisement

“இன்னிக்கு ஒரு நாளைக்காவது  பொண்ணா  அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்கிறாங்களே..?”  என்று  இருவரையும் அடிக்க சீப்பை எடுத்து கொண்டு ஓடியவள், அவர்களை பிடிக்க முடியாமல் சீப்பை விட்டெறிந்தாள். 
“ஆஆஆ..” என்ற விஷ்வஜித்தின் அலறல் சத்தத்தில் எல்லோரும் பயந்து போய் கதவின் பக்கம் பார்த்தனர். அங்கு இவள் எறிந்த சீப்பு விஷ்வஜித்தின் தலையில் பட்டு அவன் வலியில் முனகி கொண்டிருக்க, அவனுக்கு பின்னால்  சுபா, இந்திரஜித், ஆனந்தன், கணேஷ் குடும்பம் என்று ஒரு கூட்டமே இவர்களை முறைத்து கொண்டிருந்தது. 
“ரிஷப்ஷனக்கு டைம் ஆச்சேன்னு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இங்க என்ன ஆட்டம் வேண்டியிருக்கு.. கிளப்புங்க முதல்ல..” என்று சுபா கோவத்தோடு எல்லோரையும் அதட்டியவர், 
“மனோ.. இந்தா  உன் டிரஸ் சீக்கிரமா கிளம்பு.. தருண் நீ வா..” என்று கத்திவிட்டு செல்ல, விஷ்வஜித் அதிதியை கடுமையாக முறைத்து கொண்டிருந்தான். 

“ஏன் தீக்ஷி இதான்  எங்க கவுண்டர் பார்த்த  ரொமான்டிக் லுக்கோ..? பாரேன் பொண்டாட்டியை எப்படி வச்ச கண்  வாங்காம சைட் அடிக்கிறார்ன்னு..” என்று வாய் மேல் கைவைத்து சத்தமாகவே  சொன்ன அதிதியின் பேச்சில் தீக்ஷி சிரித்துவிட்டாள், 
அவளின் பேச்சில்  சர்ரென்று ஏறிய பிபியை இறக்கமுடியாமல் கொந்தளித்த விஷ்வஜித், “இருடி.. உன்னை கவனிச்சுக்கிறேன்..” என்று உறுமினான். 
“கவனிங்கன்னு தான் நானும் சொல்றேன், எங்க..?” என்று பெருமூச்சு விட்டவளின் பேச்சில் திணறிப்போனவன், முகம் சிவக்க அங்கிருந்து ஓடாத குறையாக ஓடினான். 
“அதி.. ஏண்டி இப்படி எல்லாம்..? அண்ணா பாவம்..” என்றவாறே சிரித்த  தீக்ஷியின் முகம் பற்றி வாசலுக்கு திருப்பிய அதிதி, 
“அப்போ என் சின்ன மாமா  மட்டும் பாவமில்லையாக்கும், அங்க பாரு, அப்படியே இந்த உலகத்தையே மெய் மறந்து 
“பார்த்த விழி பார்த்தபடி இருக்க..”
கமல் மாதிரி அவர் உடல், பொருள், ஆவி மொத்தமும் உன்மேல் தான் இருக்கு..” என்று வாசலில் வைத்து தன்னையே விழிவிரித்து பார்த்து கொண்டிருக்கும் கணவனின் பார்வையை  காட்டினாள். 
அவனின் சிமிட்டா பார்வையில் முகம் சிவந்த தீக்ஷியை கவனித்த அதிதி வெளியே சென்றிட, இந்திரஜித் மனைவியின் அருகில்  வந்தான். கணவன் தன்னை நெருங்கி வரவும் வேகமாக திரும்பி உள்ளே செல்ல போனவளின் இடையை இழுத்து தன்னோடு அணைத்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.
“ப்ளீஸ்டி.. கொஞ்சநேரம் இப்படியே இரு..” என்றவனின் குரலில் தெரிந்த ஏக்கம், தன்னை இத்தனை நாள் தேடிய  அவனின் தேடலை  காட்டியது. சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன், மனைவியின் சிலை போல் அமைதியில் லேசான கோவம் வந்தது. 
“இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இப்படி பனிஷ் செய்யபோற..?” என்று மனைவியை திருப்பி தன் முகம் பார்க்க வைத்து கேட்டான். 
“நான் யாரு உங்களை பனிஷ் செய்ய..?” என்று மனைவி ஒதுக்கத்துடன் கேட்டாள். 
“வேணாம் தீக்ஷி.. இட் ஹர்ட்ஸ் மீ..” என்று முகம் இறுக சொன்னான். 
“வலிங்கிறது எல்லாருக்குமே இருக்கும், ஆனா அது அவங்களுக்கு வலிக்கும் போது தான் புரியும்..” என்று நிதானமாக சொன்னவளை ஆதங்கத்துடன் பார்த்தவன், 
“உன்னால எப்படிடி என்கிட்ட இப்படி பேசமுடியுது..? கல்யாணம் ஆன நாள்லிருந்து நானும் நீயும் எப்படியெல்லாம் இருந்தோம், அதை எல்லாம் மறந்திட்டு இப்படி யாரோ போல என்னை எப்படி தள்ளிவைக்க முடியுது..?, கல்நெஞ்சகாரி..”
“என்னால இந்த வாரம் முழுசும் தூங்கவே முடியல, உன் ஞாபகமாவே இருந்தது. உன்னோட  இந்த கழுத்து வாசம் இல்லாமல் எனக்கு முடியவே இல்லை..  உடம்பே அப்படி பத்திகிட்டு எரியற மாதிரி இருந்துச்சு, உன்னோட அந்த குளிர்ச்சி இல்லாமலே அப்படியே எரிச்சுபோயிடுவேனோன்னு கூட பயமாயுடுச்சு தெரியுமா..?”
“ஆனா உனக்கு அப்படி  எதுவும்  இருந்த மாதிரியே தெரியல, என்னோட தொல்லை  இல்லாம நல்லா தூங்கியிருக்க, நான்தான் டே..அண்ட் நைட் உன்னையே  தேடியிருக்கேன்.. போடி..” என்று கோவத்தில், விரகதாபத்தில் கத்தியவனை உதடு கடித்து பார்த்தவளின் மவுனத்தில் மேலும் கொதித்த இந்திரஜித், 
“ஏண்டி.. நான்  உங்கிட்ட தானே கத்திட்டு இருக்கேன், நீ அப்படியே மரம் மாதிரி நிக்கிற..? உன்னை..” என்று அவளின் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்த வேகத்தில் அவனின் இறுகிய நெஞ்சின் மேல் அவளின் பூ நெஞ்சு பட்டு துடிக்க, இந்திரஜித்தின் கோவம் எல்லாம் பூவின் ஸ்பரிசத்தால் தாபமாக மாறியது. 
“தீக்ஷி..”  என்று கிசுகிசுப்பாக மனைவியின் பெயர் சொல்லி இறுக்கி அணைத்தவனின் கை அவளின் முடியை ஒதுக்கி வெற்று முதுகில், இடையில் ஒருவிதமான அழுத்தத்தோடு அலைய, அவனின் இதழ்கள் அவளின் முகத்தில் தன் தடத்தை பதித்து கொண்டிருந்தது. 
திருமணத்திற்கு பிறகான முதல் ஊடல், இருவரையும் பாதித்திருக்க, அதை கையாள தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். 
“என்ன செய்றீங்க நீங்க..? விடுங்க.. விடுங்க..” என்று அவனின் அணைப்பிலுருந்து வலுக்கட்டாயமாக வெளியே வந்த தீக்ஷியை ஏமாற்றத்தோடும், கோவத்தோடும் பார்த்தவன், 
“ரொம்ப ஓவரா போறடி, இப்படியே என்னை தள்ளி வச்சிட்டு இருந்தன்னு வை, அப்பறம் ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை.. பார்த்துக்கோ..” என்று மிகவும் சீரியஸாகவே மிரட்டினான். 
“க்கும்..” என்று அவனின் மிரட்டலில் உதடு சுழித்தவளின் உதட்டையே வெறித்து பார்த்தவன், நொடியில் அவளை இழுத்து சுழித்த  உதட்டிற்கு நன்றாக வலிக்கும்படி தண்டனை கொடுத்தே விட்டான். 
“ஸ்ஸ்..” என்று எறிந்த உதட்டை மெதுவாக தடவியவள், கணவனை கோவத்தோடு பார்த்தாள். 
“என்ன பார்வை..? நான்தான் சொன்னேன் இல்லை.. இது ஜஸ்ட் பாய்ண்ட் ஒன் பர்ஸன்ட் தான், மெயின் தண்டனைக்கு ரெடியா இரு..” என்ற மிரட்டலோடு வெளியே சென்றான். 
“தீக்ஷி.. கிளம்பலாமா..?” என்று வந்த அதிதி அவளின் சிவந்த முகத்தையும், கலைந்த கூந்தலையும்  பார்த்து கண்ணடித்து சிரிக்க, தீக்ஷிக்கு  முகம் மேலும் சிவந்து போனது. 
தன்னை பார்த்து சிரிக்கும் அதிதியை விரல் நீட்டி மிரட்டியவளுக்கு “இவள் எப்போது இது போல் வாழ்வாள்..” என்ற கேள்வி தோன்றிய நொடியே முகம் சுருங்கி போனது. 
“தாம்பத்தியம்..” என்ற எண்ணமே இருவருக்கும் அணுவளவும் இல்லை என்று நன்றாகவே புரிய அதிதியை நினைத்து வேதனை உண்டானது. முதல் எப்படியோ ஆனால் இப்போது கணவன், மனைவி உறவின் உச்சகட்ட இன்பத்தை அடைந்த பிறகு, அது அதிதிக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாக,
 அதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்ற யோசனை மிக தீவிரமாக உள்ளுக்குள் ஓடியது. அதற்கான வழியும் அன்றே கிடைக்க அதை அப்படியே பயன்படுத்தி கொண்டாள் தீக்ஷிதா. 
மாலை  நேரத்தில் ஆரம்பித்த ரிசப்ஷன் நீண்டு கொண்டே இருக்க, இரு ஜோடிகளும் கை குவித்து, கை கொடுத்தே சோர்ந்து போயினர். இருபக்க உறவுகள், நண்பர்கள் கூட்டம், பிசினஸ் ஆட்கள், ஸ்டாப்கள் என்று பல ஆயிரம் பேர் வந்து வந்து சென்று கொண்டிருக்க, முடியவே முடியாதா எனும் எண்ணமே எல்லோருக்கும் உண்டாகிவிட்டது. 
ஆட்கள் இருக்க இருக்க இன்னும் இன்னும்  தான் கூடினரே தவிர குறைந்தபாடில்லை. மணமக்களுக்கு மனோ, தருண், பாரதி, சுபா, கஸ்தூரி, சுதா, கிரி.. என்று பெரிய பட்டாளமே ஜுஸ், ஸ்னாக்ஸ் வகைகளை கொடுத்து தம் கட்டி நிற்க வைத்து கொண்டிருந்தனர். 
“தீக்ஷி.. தீக்ஷி..” என்ற  அதிதியின் மெலிதான குரலில் அவளுக்கு இந்த புறம் நின்றிருந்த தீக்ஷி, 
“என்ன அதி..?” என்று கேட்டாள். 
“இந்த தாவணி பின் கழண்டிருச்சு தீக்ஷி, இந்த பக்கம் இடுப்பு புல்லா இறங்கி தெரியுது, ஏதாவது செய் தீக்ஷி..” என்று தவிப்புடன் கேட்டவளுக்கு செய்யும் எண்ணத்துடன் ஓர் அடி எடுத்து வைத்தவளின் முகம் பளிச்சென மலர்ந்தது. 
“ம்ப்ச்.. என்ன அதி நீ..? இப்போ எப்படி நான் வரமுடியும்..? நீயே பார்த்துக்கோ,இல்லை அண்ணாகிட்ட கேளு..” என்று வரும் கெஸ்டுகளுடன் மிக தீவிரமாக போட்டோ எடுக்க ஆரம்பித்துவிட்டாள். 
“தீக்ஷி.. தீக்ஷி..” என்று மேலும் சில முறை கூப்பிட்டவளின் கண்ணில் நீரே தேங்க ஆரம்பிக்க,  முழுவதுமாக விலகிய இடையை, வயிறை மறைக்க விஷ்வஜித்தை ஓட்டி நின்றாள். அவளின் திடீர் நெருக்கத்தில் திட்ட வாய் திறந்தவனுக்கு அவளின் கண்ணீர் தெரிய யோசனையானவன், 
“என்ன  ஆச்சு அதி..?” என்று பரிவாக கேட்டான். 
“மாமா.. மாமா.. அது..” என்று சொல்ல முடியாமல் திணறியவளிடம், 
“என்னன்னு சொல்லு அதி..? ஏன் இப்படி கலங்குற..?” என்று பொறுமையாகவே கேட்டான். 
“அது.. அது..” என்று எப்படி சொல்ல என்று தடுமாறியவள், கணவனை விட்டு லேசாக விலகி தன் இடையை பார்க்க, அவளின் பார்வை தொடர்ந்து  தானும் பார்த்தவனுக்கு அவளின் முழு இடையும், ஒட்டிய வயிறும் தெரிய ஓர் நொடி குப்பென வியர்த்து விட்டது. 
“இதை.. இதுக்கு பின் செய்யணும்..” என்று திக்கியவளின் நிலை உணர்ந்து, 
“சரி.. நீ போய்ட்டு பின் செஞ்சுட்டு வா..”  என்றவனின் நேரம் ஒரு முக்கிய புள்ளி வர, அதிதி இறங்கமுடியாமல் கணவனை ஒட்டி நின்று கொண்டாள். அவரை தொடர்ந்து எல்லோரும் மேடை ஏறிய வண்ணமே இருக்க, மனைவியின் கலங்கிய முகம் கண்டவன்,
“இப்படியே என்னை ஓட்டி மறைச்சு பின் செஞ்சுக்கோ..” என்றான்.
“சரி..” என்று தலையாட்டியவள், கணவனின் புறம்  நன்றாக திரும்பி நின்று ஷாலை இழுத்து பின் செய்ய, விஷ்வஜித்திற்க்கு லேசாக நடுங்கவே செய்தது. 
“ரொம்ப தேங்க்ஸ் மாமா..” என்று பின் குத்திய ரீலிப்பில் சிரித்தபடி கணவனுக்கு நன்றி சொல்லியவள், அவனின் புதிதான பார்வையில் முதல் முறையாக  திணறல்..  தடுமாற்றம்.. தவிப்பு.. 

Advertisement