Advertisement

காதல் ஆலாபனை 33 2
“வேலு.. எனக்கு ஒவ்வொரு  செகண்டும் அந்த மினிஸ்டர் என்ன செய்யறார்னு அப்டேட் வந்துட்டே  இருக்கனும், எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை, எப்படியும் நாம  தாம் அவரை போட்டு கொடுத்திருப்போம்னு கண்டுபிடிச்சிருப்பாரு”, 
“சோ.. எனக்கு அவரோட ஒவ்வொரு மூவும் தெரியணும்..”  என்று உத்தரவிட்டு வைத்தவனை அதிர்ப்தியாக தலையை ஆட்டி பார்த்தாள் தீக்ஷிதா. 
“என்ன..?” என்று அவளின் அதிருப்தி புரிந்தே தெரியாதது போல் கேட்டான். 
“ஒன்னுமில்லை..” என்பது போல் மறுப்பாக தலையாட்டியவள், “எல்லோரும் ஊட்டி கிளம்பிட்டாங்க..” என்று தகவல் சொல்லி கீழே செல்ல  மனைவியை தொடர்ந்து தானும் சென்றான். ரிசப்ஷன் முடிந்து இரண்டு நாட்கள் முடிந்திருக்க எல்லோரும் ஊட்டிக்கு கிளம்பினர். 
“பார்த்துக்கோ ஜித்து.. இதுவரை நடந்ததே போதும், இனியும் தேவையில்லாத பிரச்சனை எல்லாம் இழுத்து விட்டுக்காத..” என்று ஆனந்தன் மகனுக்கு புத்தி சொல்லவும், கடுப்பான மகன், 
“ப்பா.. நான் ஒன்னும் உங்க பெரிய மகனாட்டம் வீணா ரோட்ல போற பிரச்சனையை இழுத்து என் தலையில போட்டுகிறதில்லை, இது பிஸ்னஸ், இங்க பயந்து எல்லாம் ஓடமுடியாது, அப்படி ஓடுனா மொத்தமா இழுத்து மூடிட்டு தலையில முக்காடு போட்டுட்டுதான் ஓடணும்..” என்று பொரிந்தான். 
“டேய்.. இப்போ எதுக்குடா என்னை இழுக்கிற..?” என்று விஷ்வஜித் தம்பியிடம் காய்ந்தான். 
“என்ன..?  நான் என்ன பொய்யா சொன்னேன்..?  நீ அப்படித்தானே..? இவங்க உனக்குதான் புத்தி சொல்லணும், அதைவிட்டு எனக்கு சொன்னா..” என்று சிடுசிடுத்தான். 
“டேய்..  இப்போ எதுக்குடா எல்லார்கிட்டயும் இப்படி காய்ற..? முதல்லியாவது பரவாயில்லை, இப்போ உன்னை நம்பி ஒரு குடும்பமும் இருக்கு, அதனால  பார்த்து இருந்துக்கோன்னு சொன்னா எகிறி எகிறி பேசுற..” என்று சுபா மிரட்டினார். 
“ஏன் முன்ன மட்டும் எனக்கு குடும்பம் இல்லையா..? ஒருவேளை நீங்க எல்லாம் என்னோட  குடும்பம் இல்லையா..? என்னை எங்கேயாவது தத்து எடுத்துட்டு வந்தீங்களா..?” என்று மேலும் பேசியவனை பார்த்து மற்றவர்கள் தலையில் கை வைத்துவிட, விஷூ மட்டும்,   
“உன்னை போய் யாருடா தத்து எல்லாம் எடுப்பாங்க, யாரோ கொண்டுவந்து எங்க வீட்டு வாசல்ல போட்டுட்டு போயிட்டாங்க, ஏதோ போனா போகுதுன்னு நாங்க வளர்க்கிறோம்.. என்ன செய்ய..?” என்று கிண்டலாக சொன்னான். 
“என்னடா சொன்ன..? போனா போகுதுன்னு என்னை வளர்க்கிறியா..? உன்னை..”  என்று அவன் மேல் பாய, எல்லோரும் அமைதியாக அமர்ந்தே விட்டனர். இருவரும் உருண்டு புரண்டு சண்டை போட்டு தானாகவே அமைதியாகினர். 
“மனோ.. பத்திரம், வீக் எண்ட் லீவுக்கு ஊட்டிக்கு வந்துடு, தினமும் நாம வீடியோ கால் பேசலாம்..” என்று சுபா சொல்லி கொண்டே போக, 
“ம்மா.. நீங்க ஆள் மாத்தி டைலாக் பேசுட்டு  இருக்கீங்க, உங்க மகன் நான் இங்க குத்துக்கல்லு மாதிரி நிக்கிறேன்..” என்று ஜித்து நக்கலாக சொல்ல, 
“தப்பா சொல்லாதடா மகனே, குத்துக்கல்லு உட்கார்ந்திருக்கும், உலக்கை தான் நின்றிருக்கும், சோ.. டைலாக் மாத்தி உலக்கை மாதிரி நின்றிருக்கேன்னு சொல்லணும், வந்துட்டான் எனக்கு டைலாக் சொல்லி கொடுக்க..” என்று மகனுக்கு மேல் நக்கல் அடித்தார். 
“தருண்.. ப்ளீஸ் மூஞ்சை இப்படி வச்சுக்காத, லீவுக்கு எல்லாம் நான் அங்க வருவேனாம், இல்லை நீ இங்க வந்துடுவியாம்.. சரியா.. சிரிடா..” என்று  ஊட்டிக்கு செல்ல பிடிக்காமல் முகத்தை தூக்கி வைத்திருந்தவனை மனோ சமாதானப்படுத்த, 
“ம்ம்..” என்று அரை மனதாக தலையாட்டியவனை, காருக்கு அழைத்து சென்றனர். 
“அதி.. பார்த்துக்கோ.. ஏதா இருந்தாலும் கால் செய்..”, என்று தீக்ஷி அதிதிக்கு விடைகொடுக்க, 
“ஜித்து.. பார்த்துக்கோடா.. தேவைப்பட்டா கூப்பிடு, தீக்ஷி, மனோ பத்திரம்..” என்று விஷ்வஜித் தம்பியிடம் சொன்னான். 
“ஓகே.. நீ அதிதியை எஸ்டேட்டுக்கு கூட்டிட்டு போ, அவளுக்கும் கொஞ்ச வேலை தெரியும், அதோட அவளுக்கு வீட்லே இருக்க கஷ்டமா இருக்கும் இல்லை..” என்று இந்திரஜித் சொன்னான். 
“எது..?  அவளுக்கு  கொஞ்சம் வேலை தெரியுமா..? நீங்க ரெண்டுபேரும் கேடிங்கடா, உங்ககிட்ட இருந்து நாங்க தான் படுஉஷாரா இருக்கனும் போல..” என்றான். 
“ச்சு.. விஷூ, இப்படியெல்லாம்  அதிகிட்ட எதுவும் பேசிடாத, அவ வருத்தப்படுவா, தீக்ஷிக்கு ஹெல்ப் செய்யணும்ங்கிற ஒரே காரணத்துக்காக தான் அவ இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துருக்கா, அதை புரிஞ்சுக்கோ..” என்று முனங்கினான். 
“சரி விடு.. இனி பேசல, நான் அவளை எஸ்டேட் கூட்டிட்டு போறேன்..”  என்றவன்  தீக்ஷியிடமும், மனோவிடமும்  சொல்லிக்கொண்டு கிளம்பினான். 
“சுபா..”  என்ற கணவனின் அதட்டல் எதனால் என்று புரிந்த சுபா, தீக்ஷியிடம் சென்று, “பார்த்துக்கோ..” என்று ஒரு வாரத்தையில் விடைபெற, தீக்ஷியும் “சரி..” என்று முடித்துகொண்டாள். இருவரும் சகஜமாக பழக காலங்கள் ஆகலாம்  என்று எல்லோருக்குமே புரிந்தது. 
“மனோ..நீ இன்னும் கொஞ்ச நாளைக்கு காலேஜ் பஸ்ல போகாத, உனக்கு  செகியூரிட்டி ஆள் இருப்பாங்க, அவங்களோட நம்ம கார்லே போ..” என்று இந்திரஜித் சொல்ல, மனோ சில நிமிடங்கள் யோசித்தவன், 
“ஏன் மாமா..? வேறெதுவும் பிரச்சனை இருக்கா..?” என்றான். 
“இல்லை.. பட், ப்ரிகாஷன் ஸ்டெப் தான்..”, எனவும், “சரி..” என்றுவிட்டான். அடுத்து தீக்ஷியை பார்த்தவன், அவளின் கூர்பார்வையில் சலிப்பு தோன்ற, 
“எப்படியும் நான் சொன்னாலும் நீ கேட்கபோறதில்லை, சேபா இருந்துக்கோ..” என்று முடித்துவிட்டவன், இரவு அவர்கள் அறையில், 
“உன்கூடவே ஒரு கார்ட் மட்டும் இருப்பார், வேண்டாம்ன்னு சொல்லாத..”  என்றான். 
“அதான் ஏற்கனவே இருக்காங்களே..? இன்னும் எதுக்கு என்கூடவே..?” என்று தீக்ஷி மறுக்க, 
“நோ தீக்ஷி அவங்க உன்னை கேப் விட்டு தான் பல்லோவ் பண்ணுவாங்க, இவர் எப்போதுமே உன்னோடவே இருப்பார், கொஞ்ச நாள்தான்..” என்றான். 
“ம்ப்ச்..” என்று முகம் சுளித்தவளின் விருப்பமின்மையை புரிந்து கொண்டவன், தன் பாணியிலே சொல்ல செய்தான்.
“தீக்ஷி.. உனக்கு பிடிக்குதோ  இல்லையோ..? நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும் அவர் உன்னோடதான் இருப்பார்.. இதுல எந்த மாற்றமும் இல்லை..” என்று உத்தரவாக சொன்ன கணவனை தீர்க்கமாக பார்த்தவள், 
“முடியாதுன்னு சொன்னா..?” என்று சவாலாக  கேட்டாள். 
“ம்ம்.. சிம்பிள் முடியாதுன்னு சொல்ற உனக்கு  பனிஷ்மென்ட்  கொடுத்துற  வேண்டியதுதான்..” என்று தீவிரமாக சொன்னான். 
“ஓஹ்.. உங்க பேச்சை கேட்கலைன்னா எனக்கு பனிஷ்மென்ட்  கொடுப்பீங்க, ஆனால்  நீங்க மட்டும் என்கிட்ட சொல்லாம  என்னென்ன செஞ்சிருக்கீங்க..? உங்களுக்கு பனிஷ்மென்ட்  கிடையாதா..?” என்று சிலிர்த்து கொண்டு சண்டைக்கு நின்றாள். 
“கொடு.. தாராளமா கொடு, நான் மறுக்கவே மாட்டேன், இன்பேக்ட் அதுக்குத்தான் நான் காத்திருக்கேன்.. சொல்லு.. என்னென்ன பனிஷ்மென்ட் தரபோற..?” என்று ஆர்வமாக கேட்டவனின் பேச்சில் குழம்பியவள், 
“எதுக்கு இப்போ இவ்வளவு ஆர்வம்..?” என்று கேட்டாள். 
“பின்ன என் பொண்டாட்டி எனக்கு பனிஷ்மென்ட் தர்றான்னா சும்மாவா..? நீ தாடி என் தங்கம்..” என்று மேலும் சிரிப்புடன் கேட்டவன், அவனின் உதட்டை தடவி கொண்டே அவளின் உதட்டை குறுகுறுவென பார்த்தான். அதிலே அவன் சொல்லும் பனிஷ்மெண்ட்டை புரிந்து கொண்டவளுக்கு மூக்குக்கு மேல் கோவம் எகிற, 
“உங்களை..!!” என்று அவனை அடிக்க கை ஓங்க, ஓங்கிய  கையை பிடித்து சுழற்றி தன்னோடு அணைத்து கொண்டான். 
“உனக்கு பனிஷ் செய்யவே தெரியல, நான் சொல்லி தருவேனாம், நீயும் அதுமாதிரியே என்னை பனிஷ் செய்வியாம்..” என்றவனின்  தண்டனைகள் தீக்ஷிக்கு இன்பம் கலந்த வலியை கொடுக்க, தானும்  அதைவிட அதிகமாகவே கணவனுக்கு  நன்றாக வலிக்க வலிக்க பனிஷ் செய்தாள். 
“ஏய்.. என்னடி இதெல்லாம்..?” என்றவனின் உடல் தடங்கள், தீக்ஷியின் தண்டனையின் தீவிரத்தை காட்ட, 
“இதெல்லாம் கொஞ்சம் தான், நீங்க என்னை படுத்துற பாட்டுக்கு இன்னும் கூட தரலாம்..” என்று முறைத்து சொன்னாலும், முகம் முழுதும் வெட்கத்தின் சாயலே. 
“அப்படிங்கிற.. நான் ரெடி, இன்னொரு ரவுண்ட் ஆரம்பிக்கலாமா..? இந்தமுறை யாருக்கு அதிகமான தண்டனைன்னு பார்த்துரலாம்..”  என்றவர்களின் தண்டனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
“தருண்.. இன்னும் ஒரு இட்லி  வச்சுக்கோ..” என்று அதிதி வற்புறுத்தி தருணுக்கு வைக்க, 
“போதும் அதி..” என்று சோர்வாக சொன்னான் தருண். ரிசப்ஷனில் அவன் அளவில்லாமல் சாப்பிட்ட கேக், ஐஸ்க்ரீம் அதன் வேலையை காட்டியிருந்தது. 
“நீ சாப்பிட்ட ஒரு இட்லி மட்டும் எப்படி போதும் தருண்..?, இன்னும் ஒரு இட்லியாவது சாப்பிடு,  மருந்து சாப்பிடணும், இல்லை வயிறு எரியும், அப்பறம் அதுக்கும் தனியா மருந்து சாப்பிடணும், நீ பாவம்தானே..?” என்று அவனுக்காக பரிதாபடுவது போல் சொன்னவளின் பேச்சில் தருண் அந்த இட்லியையும் சாப்பிட்டு எழுந்தான். 
“அதி.. எனக்கு  இந்த பிங்க் டேப்லட் வேண்டாம்.. ரொம்ப கசக்குது..” என்று அடுத்து ஆரம்பித்தவனை பொறுமையாக பேசியே அதையும் சாப்பிட வைத்து தூங்க அனுப்பியவளை குடும்ப உறுப்பினர்கள் மவுனமாகவே பார்த்து கொண்டிருந்தனர்.  
அதிலும் சுபாவிற்கு அதிதியின் இந்த பொறுமையான  பரிமாணத்தில் ஆச்சரியம் தான். எப்போதுமே சேட்டை செய்து கொண்டும், வாயடித்து கொண்டும் இருபவளின் பொறுப்பு மனநிம்மதியை கொடுக்காமல் இல்லை. 
“பரவாயில்லை நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்லை, சமாளிச்சிடுவா..” என்று  அவளை பற்றி நினைத்தவரின் எண்ணத்தை அடுத்த நொடி அதிதியே உடைத்தாள். 
“நாளைக்கு நீயும் என்னோட எஸ்டேட்டுக்கு கிளம்பு..” என்று பெரியவர்கள் உணவு முடித்து ஹாலில் அமர்ந்திருக்கும் போது அதிதியின் முகம் பார்க்காமல் மொபைலில் முகம் புதைத்து சொன்ன விஷ்வஜித்தின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக லேப்பை பார்த்துக்கொண்டிருந்தவளை  நிமிர்ந்து உறுத்து பார்த்தான் கணவன். 
ரிசப்ஷன் அன்று நடந்ததில் இருந்து அவள் முகம் பார்ப்பதையே தவிர்த்திருந்தான். அன்று அவளை தான் பார்த்த  அந்த  பார்வை மிகவும் தவறு என்ற ஒரு எண்ணம், தவிப்பு  அதிதியின் மேல் கோவமாக மாறியிருந்தது. 
“இவளை யாரு என்னை பார்த்து கண்ணடிக்க சொன்னா..? வம்பு பேச்சு பேச சொன்னா..? அப்படி.. அப்படி.. என்கிட்ட காட்ட சொன்னா..? அதனாலதான் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு, எல்லாம் இவளால்தான்..” என்று பழியை அவள் மேல் போட்டு கோவத்தோடு சுத்தி கொண்டு இருந்தவன் இன்றுதான் அவளிடம் பேசினான். 
அதற்கும் பதில் சொல்லாமல் எனக்கெனன்று  இருந்தவளிடம், “ஏய்.. உன்கிட்ட தானே சொல்லிட்டிருக்கேன்.. பதில் சொல்ல மாட்டியா..?” என்று எரிச்சலாக கேட்டான். 
அப்போதும் பதில் சொல்லாமல், அவனின் பக்கமே திரும்பாமல் இருந்தவளை சுபா அதிர்ப்தியாக பார்த்தவர், பேச ஆரம்பிக்கும் போதே, அவரின் கையை பிடித்து கொண்ட ஆனந்தன் மறுப்பாக தலையசைத்தார். 
“ஆனாலும் உனக்கு ரொம்ப திமிர் கூடி போச்சுடி, உன்கிட்ட தானே கேட்டுட்டு இருக்கேன், பதில் சொன்னா குறைஞ்சா போயிடுவ..?” என்று மேலும் எகிறியவன், அவள் தன் பக்கமே திரும்பும் வழி காணும் என்று தெரிந்துவிட, அவளின் அருகில் சென்று அவளின் கை பிடித்து எழுப்பி நிறுத்தினான். 
அப்போது தான் அவனின் முகத்தையே பார்ப்பது போல் கேள்வியாக பார்த்தவளிடம், “என்ன..? கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டியா..?” என்று சீறினான். 
“என்ன  பதில் சொல்லணும்..? என்கிட்ட எதையாவது கேட்டேங்களா என்ன..?” என்று பொறுமையாகவே கேட்டாள். 
“ஏய்.. என்ன நக்கலா..? இவ்வளவு நேரம் அந்த கத்து கத்திட்டு இருக்கேன், இப்போ வந்து சாதாரணமா கேட்கிற..?”
“உண்மையாத்தான் சொல்றேன்  எனக்கு தெரியல.. என்ன கேட்டிங்க..?”
“ என்ன கேட்டேனா..? என்னோட எஸ்டேட்டுக்கு வான்னு உன்னை கூப்பிடல..” 
“ஓஹ்.. அது எனக்கு தான் சொன்னேங்களா..? நான்கூட யார்கூடவோ பேசிட்டு இருக்கீங்கன்னு இல்லை நினைச்சேன்..”
“என்ன திமிரா..? உனக்கு நல்லா தெரியும்..? நான் உன்கிட்டதான் கேட்டேன்னு..”
“இங்க பாருங்க.. நீங்க என்னமோ அதிதின்னு என் பேரை கூப்பிட்டு சொன்ன மாதிரியும் நான் பதில் சொல்லாத மாதிரியும் பேசகூடாது, நீங்க பொத்தாம் பொதுவா பேசினா எனக்கெப்படி தெரியும்..?” என்றவளின் பேச்சு புரிய ஒரு நொடி ஜெர்க்கான் விஷூ, 
“ஓஹ்.. மேடம் பேரை சொல்லி கூப்பிடாததனாலதான் இவ்வளவு அக்கப்போறா..? கூப்பிட முடியாது  போடி.. இப்படி மொட்டையா தான் பேசுவேன்.. என்ன செய்வ..?” என்று வீம்பு கொண்டு சொல்ல, 
“ஓகே..” என்று தோள் குலுக்கியவள், “மாமா, அத்தை எனக்கு இங்க GR எஸ்டேட்ல வேலை கிடைச்சிருக்கு, நாளையிலிருந்து நான் அங்க வேலைக்கு போறேன்..” என்று சொல்ல, கேட்டிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி என்றால், விஷூவுக்கு ஆத்திரம் உச்சியில் நின்றது.  
“ஏன்மா..? நம்ம எஸ்டேட்டே இருக்கும் போது வெளியே எதுக்கு வேலை..?” என்று ஆனந்தன் சொல்ல, 
“இல்லை மாமா.. உங்க எஸ்டேட்ல வேலை செய்ற அளவு எனக்கு வேலை தெரியாது.. எனக்கு அந்த தகுதியும் இல்லை.. அதான்..”
“ஏய்.. தகுதி இல்லன்னு நான் சொல்லவே  இல்லைடி.. உனக்கு என்ன வேலை தெரியும்ன்னு தான் கேட்டேன்..?” என்று விஷூ பொறுக்கமுடியாமல்  சொல்லிவிட, அதிதியின் உதட்டோரத்தில் மெலிதான சிரிப்பு. 
“அதைத்தான் நானும் சொல்றேன், எனக்கு எந்த வேலையும் தெரியாதுன்னு தானே நீங்க உங்க எஸ்டேட்டுக்கு நான் வேலைக்கு வரத்தேவையில்லை, எனக்கு வேலையும் கொடுக்க மாட்டேங்கன்னு சொன்னீங்க..” என்று முழுவதையும் சொல்லி முகத்தை பாவமாக வைத்து கொண்டாள். 
“என்ன விஷூ இதெல்லாம்..? அதிதி இந்த  வீட்டு மருமக, அவகிட்ட நீ எப்படி இப்படி பேசலாம்..? உனக்கு இங்க எவ்வளவு உரிமை இருக்கோ அவ்வளுவும் அதிதிக்கும் இருக்கு, அவளை வரவேணாம்ன்னு நீ எப்படி சொல்லுவ..?” என்று ஆனந்தன் கோவத்தோடு அதட்டினார். 
“ஏங்க..  GM போஸ்ட் போட்டுக்கு இவளை அப்பாயிண்ட் செஞ்சுடுங்க, நீ நாளையிலிருந்தே எஸ்டேட்டுக்கு வந்துடு..” என்று சுபா சொல்லிவிட்டு செல்ல, ஆனந்தனும் மனைவியின் யோசனையை ஏற்றுகொண்டு அதிதியை  வரச்சொல்லி சென்றார். 
இருவரும் சென்றவுடன், பாவமான முகத்தை மாற்றி, மலர்ந்த சிரிப்புடன் லேப்பை ஓபன் செய்ய அதில் எந்த அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரும் இல்லை, எதோ இன்சூரன்ஸ பார்ம் தான் வந்திருந்தது. 
“அடிப்பாவி..”  என்று வாய் மேல் கை வைத்தவனை திரும்பி குறும்பாக பார்த்தவள், நொடியில் கண்ணடித்துவிட, விஷ்வஜித்திற்குதான்  திரும்பவும் வேர்த்தது. 
“எதுக்குடி இப்போ என்னை பார்த்து கண்ணடிச்ச..?” என்று தன் தடுமாற்றத்தை மறைக்க கத்தியவனை, புருவம் தூக்கி பார்த்தவள், 
“ஏன் அடிச்சா என்னவாம்..?” என்று மிதப்பாக கேட்டாள். 
“என்னவா..?” என்று படபடப்போடு பேச ஆரம்பித்தவன், படக்கென வாயை மூடி கொண்டான். “பின்னே உன் கண்ணடிப்பு என்னை தடுமாற வைக்கிறது என்றா சொல்ல முடியும்..?” 
“என்னை பார்த்து கண்ணடிக்க கூடாதுன்னா கூடாது தான்.. எனக்கு பிடிக்கல..” 
“அது என்னோட மேனரிஸம்.. அப்படி சட்டுன்னு எல்லாம் மாத்தமுடியாது..”
“மாத்தணும்.. இல்லை கண்ணடிக்க கண் இருக்காது, நொண்டிருவேன்..” என்று விரல் நீட்டி மிரட்ட, உள்ளுக்குள் ஆடிப்போன அதிதி, 
“உண்மையாவே நொண்டிடுவாரோ..?”என்று பயந்த தன் பயத்தை காட்டாமலே, 
“நோண்டுவீங்க.. நோண்டுவீங்க.. அப்படி விட்டுடுவோம் நாங்க.. பக்கத்துல வந்தா தெரியும் சங்கதி..” என்று வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு நின்றவளின் மாராப்பு சேலை ஒதுக்கிவிட, பார்த்துவிட்ட விஷ்வஜித்திற்கு வேர்வை துளிகள். 
“நீ நீ இனி புடவையே கட்டாத..” என்று வேகமாக சொன்னான். 
“என்ன..? புடவை கட்டகூடாதா..? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க..? அதை செய்யாத இதை செய்யாதன்னு வரிசையா சொல்லிட்டு இருக்கீங்க..” என்று எகிறியவளை பார்த்து தலையில் அடித்து கொண்டவன், 
“ஏய்.. வாயை மூடுடி, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின தொலைச்சிருவேன், ஒழுங்கா புடவை கட்ட தெரியல, சொன்னா என்கிட்ட சண்டைக்கு நிக்கிற..?” 
“யாரு..? எனக்கு புடவை கட்ட தெரியலையா..? நீங்க ரொம்பத்தான் கண்டீங்க..”
“பார்த்திட்டு  இருக்கிறதானால  சொல்றேன்..” என்று அவளை பார்க்க முடியாமல் முகம் திருப்பி முணுமுணுத்தவனிடம், 
“என்ன என்ன அங்க முணுமுணுக்கிறீங்க..?” என்று அவனை நெருங்கி காது வைத்து கேட்டவளின், காது நுனியை பிடித்து திருகியவன், 
“முதல்ல மூட வேண்டியது எல்லாம் மூடுடி..” என்று கண் காட்டிவிட்டு செல்ல, குனிந்து பார்த்தவளுக்கு முகத்தை கொண்டு போய் எங்கு வைத்து கொள்ள என்றே தெரியவில்லை.

Advertisement