Advertisement

காதல் ஆலாபனை 33 1
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சதா விஷூ..? நான் ஏதாவது ஹெல்ப் செய்யவா..?” என்று வந்து நின்ற தம்பியை கண்டு கொள்ளாதவனாய், 
“ப்பா.. ஸ்டேஜ் டெக்கரேஷன் வேலையை காலையிலே  ஆரம்பிச்சுருவாங்க, நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன், அப்பறம் ரிசப்ஷன் வர்ற கெஸ்டுக்காக கொடுக்க வேண்டிய  ரிட்டர்ன் கிப்ட் இப்போ வந்துரும், அதை ஒன்ஸ் செக் செஞ்சிடுங்க.. நான் கிளம்பறேன்..” என்று அன்று மாலை இரு ஜோடிகளுக்கும் நடக்கவிருக்கும் ரிசப்ஷன் வேலைக்கான ஏற்பாட்டிற்கு கிளம்பிய அண்ணனின் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்ற  இந்திரஜித், 
“என்ன..? என்கூட பேசமாட்டியா..? என்னமோ அங்காளி பங்காளி மாதிரி விறைச்சிட்டே போற..?” என்று கடந்த ஒருவாரமாக அண்ணன் தன்னிடம் பேசாத  கோவத்தில் தம்பி கேட்டான். 
“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீ எனக்கு பங்காளி தாண்டா, அதான் எனக்கு தெரியாமையே எல்லா வேலையையும் நீயே செய்றியே.. அப்பறம் என்ன..?” என்று தம்பி மினிஸ்ட்டர் பிரச்சனையை தன்னிடம் மறைத்த கோவத்தில் சொன்னான். 
“என்னடா இப்படி  சொல்லிட்ட..? உன்னோட ரத்தத்தின் ஒரே சொந்தம்டா நான்.. என்னை போய் பங்காளின்னு..?” என்று வருத்தப்படுவது போல் கண்ணை துடைத்தவனை நக்கலாக பார்த்த விஷூ, 
“டேய் நீ எவ்வளவு நடிச்சாலும் உண்மை மாறாது, கூட பிறந்தவன் எல்லாம் பத்து வயசுலே பங்காளி தான்ன்னு  முன்னோர்கள் சொல்லி வச்சது உன்னை போல தம்பியால் தாண்டா..” என்ற விஷூ கிளம்பி காருக்கு செல்ல, 
“மாமா.. வெய்ட்.. நானும் வந்துட்டேன்..” என்று ஓடி வந்தான் மனோ. 
“நீயேன் அலையற மனோ..? ஏற்கனவே இந்த ஒருவாரமா உனக்கு வேலை அதிகம் தான், இன்னிக்கும் அலையாத, வீட்லே ரெஸ்ட் எடு, ஈவினிங் ரிசப்ஷன்லயும் நமக்கு வேலை இருக்கும்..” என்று விஷ்வஜித் ஆதுரமாக மச்சானிடன் சொன்னான். 
ஆனந்தனிடம் சொல்லியிருந்தது போல் ரிஸப்ஷனுக்கான எல்லா செலவையும் மனோ, தீக்ஷி  தான் பார்த்துக்கொண்டார்கள். இதை கேள்விப்பட்டு அண்ணனும், தம்பியும் முடியாது என்று மறுக்க, மனோ இரு மாமாக்களிடமும் பாசமாக பேசியே அவர்களையும் ஒத்து கொள்ள வைத்தான். 
சொன்னது போல் எல்லா வேலைக்கும் மனோ உடன் இருந்தான் தான் ஆனால் பெரியவர்கள் எடுக்கும் முடிவில் குறுக்கில் நிற்பதில்லை, மினிஸ்ட்டர் பிரச்சனை முடியவுமே ஆனந்தன் தான் முன்னமே முடிவெடுத்தது போல இந்த வாரம் ரிசப்ஷன் வைத்து விடவேண்டும் என்றதால்,  இன்று மாலை சென்னையில் உள்ள மிகப்பெரிய மண்டபத்தில் ரிஷப்ஷனிற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. 
“நோ மாமா.. எங்க அக்காங்க ரிசப்ஷன் முடியற வரை நோ ரெஸ்ட், வாங்க போலாம்..” என்று முன்னுக்கு  நடந்த மனோவை பெருமையாக பார்த்த விஷ்வஜித், தம்பியை சீண்டும் பொருட்டு, 
“ம்ம்ம்.. பிறந்த இந்த மாதிரி தம்பியோட பிறக்கணும்.. எனக்கும் தான் இருக்கே..” என்று பெருமூச்சு விட்டான். 
“டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் பார்த்துக்கோ, இப்போ நான் என்ன குறைஞ்சு போயிட்டேனாம் உனக்கு..?” என்று தம்பி எகிறினான். 
“என்ன நிறைச்சிருக்கு..? எல்லாம் குறைதான்..” என்று நொடித்தவாறே காரை ஸ்டார்ட் செய்தவனுடன்  தானும் ஏறிக்கொண்ட  இந்திரஜித், 
“உன்னை போல அண்ணனுக்கு நானே பெருசு.. வந்துட்டான் குறை சொல்ல..” என்று தானும் கடுகடுத்தவன், 
“அப்புறம் மச்சான், உன் அக்கா என்ன சொல்றா..?” என்று மனோவிடம் தீக்ஷியை பற்றி நக்கலாக கேட்டாலும், உள்ளுக்குள் ஏக்கம் இருக்கவே செய்தது. 
அவள் அவனுடன் பேசியே ஒரு வாரமாகிவிட்டது. அன்று என்கொயரிக்கு சென்று வந்த போது பேசியதோடு சரி,அதற்கு பிறகு  கணவனின் முகம் பார்க்க கூட தவிர்த்தாள். 
“சரிதான் போடி..” என்று இவனும் மனைவியின் மேல் முறுக்கி கொண்டு ஹோட்டலிலே இருந்துகொண்டான்.  ஆனாலும் மனைவியின் ஒதுக்கம் வலிக்காமல் இல்லை. 
அப்படி இருக்க இந்திரஜித் கேட்ட கேள்விக்கு  என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மவுனித்த மனோவின் சங்கடத்தை புரிந்து கொண்ட விஷ்வஜித், 
“இதுக்கு தான் நான் முதல்லே சொன்னேன், உன்னை மாதிரி ஆளுங்களுக்கு என் தங்கச்சியை கொடுக்க மாட்டேன்னு, அது சரியாதான் போச்சு..” என்று கிண்டலாக சொன்னான். 
“டேய்.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின ஈவினிங் ரிசப்ஷன்ல கை, கால் கட்டோடுதான் படுக்கணும்  பார்த்துக்கோ..” என்று அண்ணனை மிரட்டினான் தம்பி. 
“போடா போடா டேய்..”  என்று தம்பியின் மிரட்டலை அலட்சியமாக ஊதி தள்ளியவன், ரிசப்ஷன் நடக்க இருக்கும் மண்டபத்தின்  முன் காரை நிறுத்தி உள்ளே சென்றனர். சில மணி நேரங்கள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தவர்கள்,  கேட்ரிங் ஆட்களிடமும் துரிதமாக எல்லா முன்னேற்பாடு வேலைகளையும் முடித்து  வைக்க சொல்லி கிளம்பினர். 
“அப்பறம் விஷூ..  வேறென்ன வேலை பெண்டிங் இருக்கு..? சொல்லு..” என்ற தம்பியை கண்ணை சுருக்கி பார்த்தவன், 
“டேய்.. நல்லவனே, ஒரு வாரமா வேலையை காரணம் காமிச்சிட்டு ஓடி போய்ட்டு இப்போ வந்து எல்லா வேலையையும் முடிஞ்ச பின்னாடி கேட்கிற.. சரியான பிராடுடா நீ..” என்று திட்ட, 
“என்ன விஷூ.. இப்படி சொல்லிட்ட, நிஜமாவே வேலைதான்..” என்று  வருத்தமாக சொன்னான். 
“ஆமா.. என்னமோ உன் வேலை  எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு செய்றமாதிரி சொல்ற.. போடா..” என்று என்று விஷ்வஜித் கோவத்தோடு பேசினாலும் அதில் தம்பி தன்னிடம் எதுவும் சொல்லாத வருத்தம், மனத்தாங்கல் இல்லாமல் இல்லை. அதை சரியாக புரிந்து கொண்ட இந்திரஜித், 
“விஷூ.. ப்ளீஸ் இப்படி பேசாத, உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லை, உங்களையும் டென்க்ஷன் செய்ய வேண்டாம்ன்னு பார்த்தேன், அதோட அந்த மினிஸ்டர் இந்தளவு இறங்குவான்னு நானும் எதிர்பார்க்கல, எனக்குமே ஷாக் தான்”, 
“அதான் இனியும் அவரை விடக்கூடாதுன்னு துணிஞ்சு இறங்கிட்டேன், இதுல நான் எதிர்பார்க்காதது அவர் இப்படி தீக்ஷியை உள்ள இழுத்து விடுவார்ன்னு, அதுக்கு தான் இந்த ஒரு வாரமா அலைஞ்சு செமையா செஞ்சு விட்டுருக்கேன்”, 
“அவரோட பெரிய மதிப்புள்ள ரெண்டு கம்பெனியை, சொத்தை  அவருது தான்னு ப்ரூப்போட ப்ரெஸ்க்கு, சோசியல் மீடியா.. டேக்ஸ் டிபார்ட்மென்ட்ன்னு எல்லா இடத்திலும் அவரை கொண்டு போய் சொருகி விட்டுட்டு வந்திருக்கேன்,  அதை சமாளிக்கவே அந்தாளுக்கு நாக்கு தள்ளிடும், அதையும் மீறி என்கிட்ட வந்தா தான் இருக்கிறதே..” என்று இன்னும் அடங்காத சீற்றத்தில் கொந்தளித்தவனின் தோளை தட்டிய விஷ்வஜித், 
“இனியும் எங்ககிட்ட இருந்து எதையும் மறைக்காத ஜித்து, உனக்கு தேவையானதை செய் ஆனா சொல்லிட்டு செய் அவ்வளவுதான்..” என்று சொல்ல, தம்பியும் ஏற்றுகொண்டான்.
“தீக்ஷி ரெடியா..?” என்று வந்த மனோ, அக்காவின் அழகில் புன்னைகைத்தான். 
“என்னடா சிரிக்கிற..? நான் நல்லா இல்லையா..?” என்று தீக்ஷி சந்தேகத்துடன் கண்ணாடியை பார்த்தாள். கருநீல கலர் லெஹன்கா அணிந்து முடியை ஒருபக்கமாக வாரி ப்ரீ ஏர் விட்டிருந்தவளின் அலங்காரமும், நகையும் அளவாக தீக்ஷிக்கு மிகவும் பொருத்தமாக தான் இருந்தது. 
“ரொம்ப நல்லா இருக்க தீக்ஷி..”, என்றவனை பார்த்தவள், 
“டேய்.. நீ இன்னும் கிளம்பலையா..?” என்றாள். 
“இதோ.. உன்னையும், அதியையும் பார்த்திட்டு போலாம்னு வந்தேன், ஆமா அதி எங்க..?” என்று கேட்க, 
“உன் பின்னாடி தான் இருக்கேன்..” என்று குரல் வந்த திசையை பார்த்தவன் சத்தமாக சிரித்துவிட்டான். அவளுக்கும் மெரூன் வண்ணத்தில் லெஹன்கா எடுத்திருக்க, அதன் ஷாலை மடித்து பின் செய்யாமல் சுற்றி கொண்டிருந்தவளின் தலை முடியும் விரித்து நின்றிருந்தாள். 
“டேய் சிரிச்ச கொன்னுடுவேன்.. நானே கடுப்புல இருக்கேன்..” என்று அதிதி கத்தி கொண்டிருக்கும் உள்ளே வந்த தருண், முதலில் தீக்ஷியை பார்த்தான். 
“தீக்ஷி.. லுக்கிங் பியூட்டிபுல்..” என்றவன், மனோவின் சிரிப்பில் தானும் அதிதியை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான். 
“டேய்.. நீங்க ரெண்டு பேரும் இப்போ வாயை மூடல, நடக்கிறதே வேற..”, என்று கொதித்தவளை தோளோடு அணைத்து கொண்ட தீக்ஷி, 
“ஷ்ஷ்.. மனோ, தருண்  அமைதியா இருங்க..” என்று அதட்டியவள், அதிதியை டிரெஸ் மாற்றும் தடுப்பிற்கு பின்னால் கூட்டி சென்றாள். 
“தீக்ஷி.. இந்த ஷால் ரொம்ப ட்ரான்ஸ்பரண்ட்டா இருக்கு,  அதோட இங்க பாரு முதுகு முழுசும் தெரியுது, இடுப்புக்கும் இந்த பாவாடைக்கும் எவ்வளவு கேப் பாரு, மொத்த இடுப்பும் தெரியுது..” என்று மெல்லிய குரலில் புலம்பியவளை சமாளித்து புடைவை போல் அணிந்து எல்லாவற்றையும் ஓரளவுக்கு மறைத்த தீக்ஷி, அவளுக்கும் தன்னை போல் ப்ரீ ஏர் விட்டு, மெலிதான அலங்காரம் செய்ய, இப்போது அவளும் அழகில் ஜொலித்தாள். 
“தீக்ஷி.. செம, அதிதியைவே அழகா காமிச்சுட்டியே..” என்று மனோ சிரிப்புடன் சொல்ல, 
“எஸ் மனோண்ணா.. தீக்ஷி கிரேட் தான்..” என்று தருணும் மனோவுடன் ஹைபை போட்டுகொண்டு சிரித்தான். 

Advertisement