Advertisement

காதல் ஆலாபனை 32 
“நீங்க உள்ள வரமுடியாது Mr. இந்திரஜித்..”  என்று தீக்ஷியை அழைத்து செல்லும் விசாரணை அறைக்குள்  அவனை அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர் அதிகாரிகள். 
“ஏன்..? ஏன் நான் வரமுடியாது..? தீக்ஷி என்னோட  வைப், அவளோட  நான் வருவேன்..” என்று பிடிவாதமாக நின்ற கணவனிடம் வந்த தீக்ஷி, 
“இதுவரைக்கும் தான் என்னை நம்பலை, இனியாவது என்னை நம்புங்க, என்னால ஹாண்டில் செய்ய முடியும்..” என்று விறைத்து சொன்னாள். 
“உன்னால நல்லாவே ஹாண்டில் செய்ய  முடியும்ன்னு  எனக்கும் நல்லா தெரியும், நான் இப்போ வரேன்னு சொன்னது எனக்காகதான், உன்னை தனியா உள்ள அனுப்பிச்சிட்டு என்னால இங்க வெய்ட் செய்ய முடியாது..” என்று இந்திரஜித் கோவத்தோடு சொல்ல, அவனை கூர்மையாக பார்த்தவள், 
“என்னை நம்புறீங்க தானே..?” என்று கேட்க, 
“தீக்ஷி..  உனக்கு என்மேல என்ன கோவம் இருந்தாலும் அதை இப்போ காட்டாத, நான் உன்னை நம்புறேன், நம்பலைங்கிறது இங்க விஷயமே கிடையாது, எனக்கு உன்னோட இருக்கனும், அவ்வளவுதான், ப்ளீஸ் புரிஞ்சுக்கோ..” என்று மெலிதான குரலில் கேட்டவனை பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், 
“நான் போறேன்.. நான் மட்டும் தான் உள்ளே போறேன்.. நீங்க இங்கேயே வெய்ட் செய்ங்க..” என்று தீவிரமாக சொன்னாள். 
“ஓஹ்.. என்னை பனிஷ் பண்ற, அப்படித்தானே..?” என்று முகம் இறுக கேட்டவனின் கோவம் தீக்ஷியை சிறிதும் பாதிக்கவில்லை, “எத்தனை நாள் கெஞ்சியிருப்பேன்..? என்ன பிரச்சனை சொல்லுங்கன்னு..? இப்போ எந்தளவுக்கு வந்து நிற்குது..?” என்று உள்ளுக்குள் குமுறியவள், 
“நான் பார்த்துப்பேன்..  நீங்க இதுல எதுவும் செய்ய கூடாது..” என்றாள் அழுத்தமாக.
“என்ன நான் எதுவும் செய்ய கூடாதா..? அதை நீ சொல்லாதடி..” என்று இந்திரஜித் ஆத்திரத்துடன் சொன்னான். 
“நீங்க எதுவும்  செய்ய கூடாதான்னு செய்ய கூடாது தான்..”, என்று மிகவும்  உறுதியாக சொன்னவள் கணவனின் கோவத்தை கண்டு கொள்ளாமலே  தனியே உள்ளே சென்றாள். அங்கு மனோ உட்காரவைக்கப்பட்டிருக்க, பார்த்த தீக்ஷி மிகவும் கலங்கி போனாள். 
“மனோ..”  என்று தம்பியை கூப்பிட்டவளை, வேகமாக திரும்பி பார்த்த மனோ, 
“தீக்ஷி..” என்று ஓடிவந்து அவளின் கை பற்றி கொண்டான். அவனின் முகத்தில் லேசான கலக்கம், குழப்பம் இருந்ததே தவிர பயம் சிறிதும் இல்லாமல் தைரியமாய்  தான் இருந்தான்.  
“எங்கே தம்பி பயந்திருப்பானோ..?, மிரண்டிருப்பானோ..? என்று அவனின் நலனை நினைத்து இத்தனை நேரம் தவித்திருந்தவளுக்கு அவனின் தைரியம் கண்டு நிம்மதியானது.
“ஆர் யூ ஓகே மனோ..?” என்று தம்பியின் கையை பற்றிகொண்டு கேட்டவளை, மெலிதான சிரிப்புடன் பார்த்தவன், 
“எனக்கென்ன தீக்ஷி, நான் ஓகே தான், என்னையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வரசொல்லியிருந்தாங்க..”, என்று சொல்ல, கேட்ட தீக்ஷிக்கு கோவம் பொங்கியது. 
“என்கொயரி ஆரம்பிக்கலாமா..?”  என்று விசாரணை அதிகாரிகள் வர, அவர்களை கோவத்தோடு பார்த்தவள், 
“மனோவை ஏன் வரவச்சிருக்கீங்க..?” என்று கேட்டாள். 
“ஏன்னா..? இது என்ன கேள்வி Mrs இந்திரஜித்..? அவரும் AARல பார்ட்னர் தானே..?” என்று அதிகாரிகள் நக்கலுடன் கேட்டனர். 
“பார்ட்னரா இருந்தா போதுமா..? அவங்க இன்னும் பிஸினஸுக்குள்ள வந்தாங்களா…? இல்லையான்னா..? பார்க்கணும் இல்லை, அவன் ஒரு ஸ்டூடெண்ட், அவன் எனக்கு பவர் கொடுத்திருக்கான், அவனுக்கும் சேர்த்து நான்தான் டெசிஷன் எடுக்கிறேன்..”, 
“அப்படி இருக்க அவனை நீங்க என்கொயரிக்கு கூப்பிட்டிருக்கவே கூடாது, உங்க ரூல்ஸ் உங்களுக்கே தெரியாதா..? முதல்ல எந்த பேஸ்ல நீங்க எங்கமேல என்கொயரி வச்சிருக்கீங்க..?” என்று  நிமிர்ந்து நின்று சரமாரியாக கேள்விகள் கேட்டாள்.
“எந்த பேஸ்லயா..? உங்க நகைக்கடைக்கு வாங்கின தங்கத்துல முறைகேடு நடந்துருக்கு, பிளாக் மணி இன்வால்வ் ஆகியிருக்கு..”, என்று அந்த அதிகாரி சொல்ல, 
“நீங்க பார்த்தீங்களா..? எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க..? ஒருவேளை நீங்கதான் அந்த பிளாக் மணியை கொடுத்தீங்களா..?”
“என்ன பேசுறீங்க..? ஒரு கவர்மெண்ட் ஸ்டாப்கிட்ட இப்படி பேசினா என்ன நடக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமில்லை..” என்று அதிகாரி மிரட்டி பேச, அவரை தீர்க்காமாக பார்த்தவள், 
“ஒரு நேர்மையான கவர்மெண்ட் ஸ்டாப் கிட்ட எப்படி பேசணும்னு எங்களுக்கு தெரியும்..? அதேபோல உங்களை மாதிரி ஆளுங்ககிட்ட எப்படி பேசணும்ன்னு எங்களுக்கு தெரியும்..? இது எல்லாம் தெரியாமதான்  நாங்க பிஸ்னஸ் செய்றோமோ..? அதனால எங்களுக்கு எப்படி பேசணும்னு கிளாஸ் எடுக்காம எங்களை ஏன் என்கொயரிக்கு கூப்பிட்டிங்க அதை மட்டும் சொல்லுங்க..” என்று கறாராக கேட்டாள்.
“AAR க்கு வாங்கின தங்கத்தை நாங்க பிடிச்சு வச்சிருக்கோம், அந்த தங்கத்துகான முறையான எந்த பெர்மிஷனும் இல்லை, அதுக்கான லீகல் பேப்பர்ஸும் இல்லை, பில்லும் இல்லை, டேக்ஸ் கட்டினத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை..” என்று அந்த அதிகாரி சொல்ல, நக்கலாக சிரித்தவள், 
“முதல்ல  நீங்க பிடிச்சு வச்சிருக்கிற அந்த கோல்ட்  AAR தானான்னு  செக் செஞ்சிங்களா..?” என்று கேட்டாள்.  
“அதுல AARக்கான சீல், உங்க லோகோ எல்லாம் இருக்கு, கூடவே உங்க மேனஜரும் இருக்கார்.. அவரை கூட்டிட்டு வாங்க..” என்று உள்ளே வந்த மேனேஜரை வெறுப்புடன் பார்த்தாள். பணத்துக்கு விலை போன அந்த மனிதரை எரித்து விடுவது போல் பார்த்தவளிடம், 
“மேம் இப்போ என்ன சொல்றீங்க..?  இவரு உங்க மேனேஜர் தானே..?” என்று அந்த அதிகாரி கிண்டலாக கேட்டார். 
“அவர் எங்க மேனேஜர் தான், ஆனா எக்ஸ் மேனேஜர்..” என்று நிதானமாக சொன்னவளை அதிகாரியும், மேனேஜரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். 

“என்ன மேம்..?  எங்களை ஏமாத்த பார்க்குறீங்களா..? இவர் உங்க மேனேஜர் தான்னு எங்ககிட்ட ப்ரூப் இருக்கு..” என்று அதிகாரி கோவத்தோடு எகிற, 
“என்ன ப்ரூப் இருக்கு..? காட்டுங்க..”  என்று சாதாரணமாக கேட்டாள்.  

“சேலரி, வொர்க்கிங் கார்ட்..” என்று சில பேப்பர்களை காட்ட, எல்லாவற்றையும் நிதானமாக பார்த்தவள், 
“இது எல்லாம் சரிதான், ஆனா பாருங்க, இவரை நாங்க நேத்து நைட் தான் நாங்க வேலையை விட்டு தூக்கிட்டோம், டிசிப்ளினரி ஆக்ஷன்..” என்றாள். 
“என்ன..? எனக்கு அப்படி எந்த மெயிலும் வரல..”, என்று அந்த கருப்பு ஆடு பதறியது.
“எங்க AAR மெயில் ஹாங் ஆயிடுச்சு, அதனால போஸ்ட் அனுப்பியிருக்கோம், மே பி இன்னும் டூ டேய்ஸ்ல வந்துடும்..” என்றாள். 
“அப்படி பார்த்தாலும் உங்க சீல், உங்க லோகோ எல்லாம் இருக்கு..” என்று அதிகாரி படபடப்புடன் சொல்ல,  
“சார்.. யார் வேணும்ன்னாலும் சீல், லோகோ எல்லாம்  ஈஸியா ரெடி செய்ய முடியும், அதை மட்டுமே ஆதாரமா வச்சுக்கிட்டு நாங்கதான் சென்சோம்ன்னு நீங்க சொல்லமுடியாது, யார் கண்டா இதோ இவரே கூட நாங்க வேலையை விட்டு தூக்கின கோவத்துல  எங்களை பழிவாங்க கூட இப்படி செஞ்சிருக்கலாம்..”, என்று அந்த கருப்பு ஆட்டை கை காட்டி சொன்னவள். 
“சார்.. இங்க பாருங்க, நீங்க தலை கீழா நின்னாலும், அந்த கோல்டு எங்க AAR தான்னு ப்ரூப் செய்ய முடியாது, நாங்க  கோல்ட் வாங்குற  ப்ரொசீஜர் வேற, அதுக்கான பில், நடைமுறை, கட்டுபாடு எல்லாம் இப்படி கிடையாது.. அதை முதல்ல தெரிஞ்சுக்கிட்டு வாங்க..”
“அப்போ இந்த கோல்டு உங்களுது இல்லைன்னு சொல்றீங்களா..? அதை ப்ரூப் செய்ங்க..” என்று அந்த அதிகாரி விடாமல் சொன்னார். 
“சார்.. நான் ஏன் ப்ரூப் செய்யணும்..? நானா பிடிச்சு வச்சிருக்கேன், நீங்கதான் ஏதொரு தங்கத்தை பிடிச்சு வச்சி  அது  எங்களோடதுன்னு சொல்லி எங்களை என்கொய்ரி வரவச்சிருக்கீங்க.. அது உங்களோட வேலை, இது ஜஸ்ட் சந்தேகம் தான், கன்பார்ம் இல்லை, நீங்க கன்பார்ம் செய்ங்க.. நான் இல்லன்னு ப்ரூப் செய்றேன்..”
“இன்னும் சொல்லப்போனால் எங்க AAR பேரை யூஸ் செஞ்சு யாரோ பிராடுத்தனம் செஞ்சுருக்காங்க, இது போர்ஜரி, இதுக்கான கம்பளைண்ட் நான் கொடுக்க தான் போறேன்..” என்று தீக்ஷிதா சிறிதும் அசராமல் அடித்தாள். 
“இது சந்தேகம் எல்லாம் கிடையாது, கன்பார்ம் தான், உங்களை கஸ்டடி எடுக்கணும்..” என்று அதிகாரி சொல்லவும், 
“என்ன என்னை கஸ்டடி எடுக்கணுமா..? எந்த ஆதாரத்தின் பேர்லன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?”
“அதை உங்களை விசாரிச்சு நாங்க கன்பார்ம் செய்வோம்..” என்று அந்த அதிகாரி தீக்ஷியை கஸ்டடி எடுபதிலே குறியாக இருக்க, விசாரணைக்கான அனுமதி கடிதத்துடன் உள்ளே வந்தனர் AAR ன் ஆடிட்டரும், லாயரும். 
அதற்கு பிறகு மறுநாள் காலை வரை விடிய விடிய விசாரணை நடந்த போதும் அந்த அதிகாரி தீக்ஷியை கஸ்டடி எடுத்தே தீருவேன் என்று  நின்றவருக்கு போன் வர எடுத்து பேசியவர், 

“இதோ சார், உடனே அனுப்பிடுறேன்.. பைலை க்ளோஸ் செஞ்சுடலாம்..” என்று பம்மி போய் சொன்ன மனிதர் அடுத்த நொடி தீக்ஷியையும்,மனோவையும் வெளியே அனுப்பிவிட்டார். அதிலே புரிந்தது இது இந்திரஜித்தின் வேலை என்று, 
மனோவும், தீக்ஷியும் வெளியே வர, ஒட்டு மொத்த குடும்பமும் இவர்களுக்காக காத்திருந்தார்கள். “தீக்ஷி, மனோ..” என்று அதிதி வேகமாக இருவரையும் அணைத்து கொண்டாள். சுபா மனோவின் கையை பற்றி கொள்ள, ஆனந்தன் மருமகளின் தலையை தடவினார். 
விஷ்வஜித் இருவரையும் தோளோடு அணைத்து கொள்ள, தீக்ஷியின் பார்வையோ அங்கு ஓரமாக நின்றிருந்த கணவன் மேல்தான் இருந்தது. கண்கள் சிவந்து,  உடை கசங்கி,  வறண்டிருந்த உதட்டோடு  இருந்தவன், “கிளம்பலாம்..” என்று மனோவை மட்டும் அணைத்து கூட்டி சென்றவன், மனைவியின் பக்கமே திரும்பவில்லை. 
வீட்டிற்கு சென்று இருவரும்  குளித்து வர, சுபா பூஜையருக்கு கூட்டி சென்று பூஜை செய்தார். முதலில் மனோவிற்கு திருநீறு வைத்தவர், மருமகளுக்கு  மிகவும் தயக்கத்துடன் தான் வைத்தார். திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் இருவரும் பொதுவாக கூட பேசிக்கொள்ளவில்லை. 
“சாப்பிடுங்க..” என்று அதிதி  பரிமாற, தீக்ஷியின் கண்கள் கணவனை தேடியது. 
“ஜித்து..  ஹோட்டல் போயிருக்கான்..” என்று அவளின் பார்வையை உணர்ந்து விஷூ சொல்லவும், சாப்பிடாமலே எழுந்து கொண்டாள். 
“தீக்ஷி..” என்று மனோ தானும் சாப்பிடாமல் அழைக்க,
 “நீ சாப்பிடு மனோ..” என்றாள். 
“ம்ஹூம்.. நான் மாமாக்கு போன் பண்றேன் இரு..” என்று அக்காவின் கணவனுக்கு போன் அடித்தான். இருவருக்கும் எதோ பிரச்சனை என்று புரிய, தம்பியாக கவலை கொண்டான். 
“அவர் எடுக்கல..” என்று இரண்டு முறை போன் செய்தும் இந்திரஜித் எடுக்காததை சொன்னவன், சாப்பிடாமலே இருக்க, கடுப்பான சுபா, 
“மனோ நீ சாப்பிடு, நேத்து மதியம் சாப்பிட்டது, அது அவங்க புருஷன், பொண்டாட்டி விஷயம், அவங்க பார்த்துப்பாங்க, நமக்கென்ன.. நீ சாப்பிடு..”  என்று பரிமாற தீக்ஷிக்கு மெலிதான சிரிப்பு. 
“இல்லைத்தை.. அக்கா, மாமா வரட்டும்..” என்று மனோ சொல்லவும், 

Advertisement