Advertisement

“அதெப்படி எங்க அப்பாவை அவங்க கவனிக்காம விடலாம்..?, விடுங்கப்பா இன்னிக்கு  ரெண்டுல ஒன்னு பார்த்துடலாம்.. உங்க மகன் நான் இருக்கேன்..” என்று சும்மாவே பொங்கி வீரவசனம் பேசியபடியே தந்தையை  வம்பிழுத்து கொண்டிருந்தவனின் பேச்சை கேட்ட தீக்ஷி தலையில் அடித்து கொள்ள கூட  முடியமால்  கடுப்பாக அமர்ந்திருந்தாள். 
“இவருக்கு எல்லாமே விளையாட்டு தான்.. இவரை என்னதான் செய்ய..?” என்று மனதில் கணவனை அர்ச்சித்து கொண்டிருந்தவளின் கண்கள் எதிரில் அமர்ந்திருந்த அதிதி, தருண், விஷூ பக்கம் சென்றது. 
தருண் இருவருக்கும் இடையில் அமர்ந்திருக்க, அதிதி தருணுக்கு தேவையானதை கவனித்து  கொடுத்து கொண்டிருந்தவள், விஷ்வஜித்தின் தட்டில் சட்னி காலியாகவும், தருண் மூலம் சட்னியை வைத்ததை பார்த்தவளுக்கு  இந்திரஜித் சொன்ன பாசிட்டிவ் எண்ணம் தோன்றாமல் இல்லை. 
“என்ன நான்  சொன்னதை சரின்னு நினைச்சியாக்கும்..?” என்று அவளின் காதுக்கருகில் கிசுகிசுத்தவனை கண்ணை சுருக்கி பார்த்தவள், 
“இவ்வளவு நேரம் உங்க அப்பாவை தானே வம்பிழுத்திட்டு இருந்தீங்க..? அதையே செய்ங்க போங்க..”  என்று முகம் திருப்ப, கீழே கை விட்டு அவளின் இன்னொரு கையை பற்றியவன், 
“ஏன்  உன்னை வம்பிழுக்கலன்னு பொறாமையா இருக்கா..?  அதுக்கு தான் இன்னிக்கு நைட் இருக்கே, உன்னை இழுக்க, வளைக்க, கடிக்க, நொறுக்க..” என்று அடுக்கி கொண்டே போனவனின் கை விரல்கள்  இப்போதே அவளின் கைவிரல்களை நொறுக்கி கொண்டு தான் இருந்தது. 
“ஸ்ஸ்..” என்று வலியில் மெலிதாக முனகியவளை குறும்பாக பார்த்தவன், 
“என்ன தீக்ஷி சட்னி காரமா இருக்கா..? ஸ்வீட்  எதுவும் வேணுமா…?” என்று அவனின் இதழை மடித்து சப்பி காட்ட, தீக்ஷிக்கு கோவத்திலும், வெட்கத்திலும் சிவந்து போனது. 
“இந்தா தீக்ஷி  தண்ணி.. அந்த சட்னி சாப்பிடாத, தேங்காய் பால் எடுத்துக்கோ..” என்று அக்காவின் அடுத்து அமர்ந்திருந்த மனோ எடுத்து கொடுக்க, மறுக்க முடியாமல் அதையே சாப்பிட்ட தீக்ஷியின் கை விரல்கள் இன்னும் இந்திரஜித்தின் பிடியில் தவித்து கொண்டுதான் இருந்தது.
இரவு உணவு முடிந்ததும், கஸ்தூரியும், சுதாவும் தீக்ஷி, அதிதி இருவரையும் மெலிதான ஒப்பனையுடன் அவரவர் கணவன் அறைக்கு கூட்டி கொண்டு செல்ல, அதிதியின் மனமோ மாலை தோட்டத்தில் நடந்த பேச்சவார்த்தையிலே  இருந்தது. 
தீக்ஷி சொன்னபடி  குளித்து வந்தவள், தீக்ஷியை குளிக்க போக சொல்லி வாய்திறக்கும் சமயம் அவள் கீழே பதட்டத்துடன் ஓடவும், என்னமோ ஏதோன்று அவளும் தீக்ஷியின் பின்னே ஓடி வந்திருந்தாள். 
அங்கு அண்ணன், தம்பி சண்டை, விஷூ கோவப்பட்டது, இந்திரஜித் பேசியது எல்லாம் கேட்க கேட்க கல்லாய் சமைந்து நின்றாள்.  தருணுக்காக தான் மாமா என்னை மனைவியாக ஏற்று கொண்டிருப்பார் என்றே இருந்தவளுக்கு இப்படி என்று தெரியவும் சுயபச்சாபத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கேவிவிட்டாள். 
“இப்போ நான் என்ன செய்ய..? அவரை மிரட்டிதான் எனக்கு கல்யாணம் செஞ்சு வைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு, இதுக்கு அப்பறமும் அவரை  பிடிச்சு வச்சு கஷ்டப்படுத்தணுமா..?”
“அதான் தருணுக்கு அம்மாவா இருக்க நான் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைச்சிருச்சு இல்லை, இனியும் அவரோட இருந்து அவரை ஏன் கஷ்டப்படுத்தனும்..?  நான்  முதல்ல முடிவெடுத்தது போல தருணை அழைச்சிட்டு மொத்தமா சென்னை போயிடனும்..”, 
“அவரை தொந்தரவே செய்ய கூடாது, தேவைப்பட்டா டிவோர்ஸ் பத்திரத்திலும் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போயிடலாம், அப்போதான் அவர் வேறொரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சுக்க முடியும்..” என்று முடிவெடுத்தவள், அதையே ரூமிற்குள் சென்றவுடன் படபடவென விஷூவிடம் சொல்லியும் விட்டாள். 
அவள் பேசப்பேச  விஷூவின் உள்ளே கொதித்து கொண்டே இருந்தது, இறுதியாக அவள் சொன்ன இன்னொரு கல்யாணம் என்ற வார்த்தையில் வெடித்தே போனான்.  
“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..? ஆஹ்ன்..  வரிசையா கல்யாணம் செஞ்சுகிட்டே போறவன்  மாதிரியா இருக்கு..? என்ன தைரியம் இருந்தா என்னை இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கோன்னு சொல்லுவ..?”
“நான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்காத்தவன்.. இதுல என்னை மூணாவது கல்யாணம் வேற செஞ்சுக்க சொல்றியா..? என்ன திண்ணக்கம்டி  உனக்கு..?” என்று கோவத்தில் கத்தியவனை அதிதி மிரண்டு போய் பார்த்தாள். 
“பதில் சொல்லு.. இவ்வளவு நேரம் கேப்பே விடாம ஏதேதோ பினாத்திட்டு  இருந்த, இப்போ பேசு, இதுல தருணை வேற உன்னோடவே சென்னை கூட்டிகிட்டு  போறியா..? அப்படி ஏதாவது நினைப்பிருந்தா இந்த செகண்டே அழிச்சிரு..”, 
“தருணுக்கும்  சரி, உனக்கும் சரி இதுதான் வீடு.. இங்கிருந்து போகணும்ன்னு நினைச்ச கொன்னுடுவேன் பார்த்துக்கோ..” என்று விரல் நீட்டி மிரட்டியவனின் முகம் அதிர்ப்தியை காட்டியது.  
“நீ சின்ன பொண்ணு நினைச்சேன், ஆனா என்னென்ன பேச்சு பேசுற.. இந்தளவுக்கு யோசிப்பியா நீ..? எனக்கு புத்தி சொல்ற அளவு வளந்துட்டியா நீ..?” என்று தொடர்ந்து வெடித்தவனுக்கு தர்ஷினியின் நினைவு வர, முகம் கசங்கி போனது. 
“உங்க அக்கா இந்த வீட்டுக்குள்ள  மருமகளா வரவேமுடியாதான்னு கடைசி வரை ஏங்கினவ, ஆனா நீ வந்த முதல் நாளே இங்கிருந்து போறதுக்கு துடிக்கிற.. ச்சே..”  என்றுவிட்டு பால்கனி சென்றுவிட்டவனை அதிதி கண்ணை விரித்து நடுங்கி கொண்டே பார்த்தாள்.
“தருண்.. இங்க ஹோம் தியேட்டர் இருக்காமே..? நாம எதாவது படம் பார்ப்போமா..?” என்று மனோ தருணிடம் கேட்டுக்கொண்டிருக்க, அவர்களுக்கு பால் கொண்டு வந்த சுபா, 
“நல்ல ஐடியா மனோ பார்க்கலாம், அக்கா நீங்களும் வாங்க..” என்று சுபா கஸ்தூரியையும் கூப்பிட, அவரும்  சரி என்றுவிட்டவர், “சுதாவையும் வரச்சொல்லுங்க..” என்று வேலையாளிடம் சொல்லவிட்டு எல்லோரும் படம் பார்க்க ஹோம் தியேட்டர் சென்றனர். 
இங்கு ஆனந்தோ தினசரி வழக்கம் போல மனைவியுடன் தோட்டத்தில் நடக்க காத்துக்கொண்டிருந்தவர், வெகு நேரம் சென்றும் அவர் வராமல் இருக்க உள்ளே வந்தவருக்கு வேலையாள் விஷயத்தை சொல்லவும், 
“இடியாப்பம் தான் போச்சுன்னா, வாக்கிங்கும் போச்சா.. நல்லா வருவடா..” என்று மனோவை  அர்ச்சித்து கொண்டே தூங்க சென்றுவிட்டார்.  சுதா தீக்ஷியை  இந்திரஜித் ரூமிற்கு அனுப்பி வைத்தவர், விஷயம் தெரிந்து அவரும் படம் பார்க்க சென்றுவிட்டார். 
இங்கு இந்திரஜித்தின் ரூமிற்குள் நுழைந்த தீக்ஷியின் கை விரல்கள்  இன்னும் சிவந்து தான் இருந்தது. “வாங்க Mrs.. இந்திரஜித்..” என்று உல்லாசமாக மனைவியை  வரவேற்றவன், அவளின் கை பிடித்து தனக்கு அருகில் இழுக்க, “ஸ்ஸ்..” என்று வலியில் முணங்கியவள், அவனிடமிருந்து தன் கை விரல்களை விடுவிக்க முயன்றாள். 
“என்ன இன்னும் வலிக்குதா..?” என்றவனின் கை விரல்கள், அவளின் கை விரல்களை வருட கண்களோ மனைவியின் அழகை மேய்ந்து கொண்டிருந்தது. 
புது மணப்பெண்ணுக்கான ஜொலிப்புடன், மெலிதான சிவப்பு நிற புடையில் லேசான நடுக்கத்துடன் ஒரு பக்கமாக சாய்ந்து நின்றிருந்தவளின் அழகை இன்னும் தூக்கி காட்டியது.. அவளின் நெற்றியில் இருந்த குங்குமமும், கழுத்தில் இருந்த மஞ்சளின் ஈரம் காயாத தாலியும், தலையில் சூடி இருந்த மல்லி பூவும்.. 
அவளையே சிமிட்டாமல் மேலிருந்து கீழாக பார்த்தவனின் கண்களில் பிரமிப்பு ஏறிக்கொண்டே செல்ல, கண்கள் அவளின் வளைந்த இடையில் நிலைத்து நின்றது. “இத்தனை நாளா இந்த ஸ்ட்ரெக்ச்சரை எங்கேடி ஒளிச்சு வச்சிருந்த..?” என்றவனின் விரல் அவளின் இடையின் வளைவை ரசனையாக வருடியது 
அவனின் வருடலில் கூசி சிலிர்த்தவளின் வெட்க அழகில் திணறியவனின் “ஊப்ஊப்..” என்ற   சூடான மூச்சு அவனின் தவிப்பை மனைவிக்கு சொல்ல இன்னும் சிவந்து விட்டவளின் வெட்கம், இந்திரஜித்திற்கு உடல் சூட்டை மேலும் அதிகரிக்க, அவளின் கை விரல்கள்  ஒவ்வொன்றுக்கும் மெலிதான முத்தம் வைத்தவனின்   கை அவளின் வளைந்த இடையில் முழுவதுமாக நுழைந்து தன்னருகில் இழுத்து கொண்டது. 
தன்னுள் கொதிக்கும் கொதிப்பை மனைவியின் குளிர்ந்த தேகத்தில் அணைக்க நினைத்தவன், அவளின் கழுத்தில் முகம் புதைத்து, “என்னால முடியலடி.. அப்படியே வெடிச்சிருவேன் போல..” என்று பிதற்ற, அவனின் இத்தனை வருட ஏக்கத்தை அறிந்திருந்தவள், கணவனை தன்னிடம் இருந்து பிரித்தாள். 
இந்த பத்து வருடமாக எந்த விதமான எல்லை மீறலும் இல்லாமல் கண்ணியமான காதலனாக நடந்து கொண்ட தன் கணவனுக்கு தானும் மனைவியாக நடந்து கொள்ள வேண்டும் என்று தோன்ற,  கணவனின் முகத்தையே காதலாக பார்த்தவள், அவனின் கழுத்தில் கை கோர்த்து தன் உதட்டை  அவனின் உதட்டுக்கருகில் கொண்டு செல்ல, புரிந்த இந்திரஜித் அவளின் இடையை மேலும் இறுக்கமாக பற்றி கொண்டான். 
தீக்ஷி மிக மிக மெலிதாக அவனின் உதடு மேல் தன் உதடு பதித்து தடுமாற,  அதற்கு மேலும் தாங்கமுடியாத கணவன் அவளின் உதட்டை தனக்குள் மொத்தமாக விழுங்கி மனைவிக்கு  சுகவலியை கொடுத்தான். 
தன்னுடைய இத்தனை வருட ஏக்கமான நான்கு உதடும் பேசும் தருணத்தை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ அவ்வளவு நீட்டித்தவனின் கைகள் மனைவியை முழுவதுமாக உணர துடித்தது. 
கைகள் உணர்ந்ததை தன் உதடுகளும்  உணர வேண்டும் என்ற தாபத்தீ அவனை முழுவதுமாக பற்றி கொள்ள, அதை அணைக்கும்  இந்திரஜித்தின் தொடர் இதழ் தீண்டல்கள்   மனைவியின் உயிரோடு கலந்துவிட்ட வேர்வையில் தான்  முடிவுக்கு வந்து அணைந்தது.
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது 
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட..!!
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் 
ஆலிலையில் அரங்கேற..!! 
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு..? 
காண்பவை யாவும் சொர்க்கமே தான்..!!

Advertisement