Advertisement

காதல் ஆலாபனை 27 
“நான் என்ன டென்க்ஷன்ல இருக்கேன்..? நீங்க என்ன பேசிட்டிருக்கீங்க..?” என்று தீக்ஷி சிவந்த முகத்துடன் கோவமாக பொரிய, அவளை கூலாக பார்த்த இந்திரஜித், 
“எனக்கும் தான் எல்லாம்  நல்லபடியா நடக்கும்னு டென்க்ஷனா இருக்கு, அதெல்லாம் உனக்கு புரியாதே..?”  என்று உதட்டை வளைத்து சொன்னான். 
“உங்களை..” என்று பல்லை கடித்தவள், “முதல்ல இந்த பேச்சை விட்டுட்டு விஷூ அண்ணா, அதி விஷயத்தை கொஞ்சம் பாருங்க.. இன்னும் கல்யாணத்துக்கு  ஒரு வாரம்தான் இருக்கு..” என்று படபடப்போடு பேசினாள். 
“ஏய்.. ரிலாக்ஸ்டி, எதுக்கு  இவ்வளவு டென்க்ஷன் எடுத்துகிற..?” என்றவாறே கதவுக்கருகில் நின்றிருந்த அவளின் கை பிடித்து கூட்டி சென்று சேரில் அமரவைத்தவன், அவளை பார்த்தபடி  டேபிள் மேல் சாய்ந்து நின்றான். 
“இப்போ என்ன செய்றது..? விஷூ அண்ணா ஒத்துக்கவே மாட்டாங்களா..? அவங்க எங்க இருக்காங்க..? இன்னொரு முறை பேசி பார்க்கலாமா..?”  என்று காதலனின் முகம் பார்த்து கவலையுடன்  கேட்டாள்.  
“விஷூ எங்க இருக்கான்னு சொல்ல மாட்டேன், அது எனக்கும், அவனுக்குமானது, ஆனா அவன் கண்டிப்பா கல்யாணத்துக்குள்ள வந்துடுவான்..” என, 
“எனக்கு சொல்ல வேண்டாம், ஆனா நீங்களாவது அவர்கிட்ட பேசலாம் இல்லை..”
“பேச வேண்டிய அவசியமிருக்காதுன்னு நினைக்கிறேன், ஏற்கனவே அவங்க பாசமலர் பேசினதே போதும், அதை யோசிச்சு முடிவெடுக்க தான் போயிருக்கான்,  கண்டிப்பா நல்ல முடிவா இருக்கும்னு நம்பிக்கை இருக்கு..” என்று  இந்திரஜித் சிரிப்புடன் சொல்ல, தீக்ஷியின் முகமும் சந்தோஷத்தில் மின்னியது. 
“உண்மையாவா சொல்றீங்க..? அண்ணா அதியை கல்யாணம் செஞ்சுக்க ஓகே சொல்லிடுவாரா..?” என்று சந்தோஷ எதிர்பார்ப்புடன் கேட்டாள். 
“ஓகே சொல்லிடுவான்னு நைன்டி பர்சன்ட் நம்பிக்கை இருக்கு, பார்க்கலாம்..”
“அப்போ அவங்க கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சிரலாமா..?” 
“என்னத்த பெருசா ஏற்பாடு செய்ய போறோம்..? கல்யாணம் கோவில்ல தான், மத்தபடி நமக்கு ரெஜிஸ்டர் செஞ்சப்பவே விஷூவுக்கு தெரியாம அவங்க பேரும் ரெஜிஸ்டர் ஆபிஸ்லயும், கோவில்லயும்  பதிஞ்சாச்சு, சோ அந்த பிரச்சனையும் இருக்காது..”
 “ரிசப்ஷன் மட்டும் தானே கிராண்டா செய்ய போகுது,  அதிலயும்  நம்ம பக்கதுல அவங்களுக்கும்  ரெண்டு சேர் போட்டா முடிஞ்சது, பார்த்துக்கலாம்..” என்று ஈசியாக சொல்ல, தீக்ஷியின் முகத்தில் அதுவரை இருந்த டென்க்ஷன் எல்லாம் மறைந்து மலர்ந்தது. 
“ம்ம்.. நம்  கல்யாணத்தை நினைச்சு கூட உன் முகம் இப்படி பளபளக்கல, உங்க நொண்ண கல்யாணத்துக்கு முகத்துல ஒரு நட்சத்திர கூட்டமே மின்னுது, என்ன செய்ய..? என் நிலைமை அப்படி..?” என்று இந்திரஜித் பொங்கியபடி புகைந்தான். அவனின் புகைச்சல் தீக்ஷிக்கு சிரிப்பைதான் கொடுத்தது. 
“அது என் தப்பு இல்லை, என்னை  கல்யாண செய்ய போறவரோட தப்பு..” என்று சீண்டினாள். 
“ஒய்.. இதுல என் தப்பு எங்கடி இருக்கு..?” என்று இந்திரஜித் கோவத்தோடு கேட்க, 
“ஆமா.. நம்ம கல்யாணத்தை நினைச்சு நான் சந்தோஷப்படறது போலயா  நீங்க பேசுனீங்க..? எவ்வளவு கோவம்..? என்னா  சண்டை ..?” என்று அவனை குற்றம் சாட்டினாள். 
“ஆமா நீ  ஒவ்வொரு முறையும் என்னை கல்யாணம் செஞ்சுக்க யோசிப்ப, நீ எப்போடா  ஓகே சொல்லுவென்னே நான் காத்துட்டே  இருக்கனும், போடி.. அதான்  நானே முடிவெடுத்துட்டேன்.. இப்போவும் நான் இப்படி செய்யலன்னா நீ ஓகே சொல்லியிருக்கவே மாட்ட”, 
“அடுத்து நமக்கு ஸ்ட்ரைட்டா  60வது கல்யாணம் தான் நடந்திருக்கும்..  அதுக்கும் மனோ பசங்களுக்கு கல்யாணம் செஞ்சுட்டு நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு சொல்ல கூடிய ஆள் தான் நீ..?” என்று தீக்ஷியின் குணம் அறிந்து சொல்ல, தீக்ஷிக்குமே அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது, 
“ச்சே ச்சே.. அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன்.. மனோ பேரபசங்களுக்கு கல்யாணம்  செஞ்சுட்டு நாம செஞ்சுக்கலாம்ன்னு வேணா சொல்லியிருப்பேன்..” என்று சிரித்தபடி சொன்னாள்.

“உன்னை..” என்று கோவத்தோடு இழுத்தாலும், அவளின் சிரிப்பில்,  “ராட்சஸி..” என்று தானும் சிரித்தவன், “அப்படி மட்டும் நடந்திருந்தா மனோ பேரபசங்க கல்யாணத்துல நீயும்  உன் பேரபசங்களோட தான்  நின்றிருக்கணும், பின்ன  அதுவரைக்கும்  நான் உன்னை விட்டு வச்சிருப்பேனாக்கும்,  கல்யாணமே ஆகலேன்னாலும் பரவாயில்லைன்னு  உன்னை மொத்தமா முழுங்கிருவேன.. பார்த்துக்கோ..”  என்று கண்ணடித்து  சிரிக்க, 
“உங்களை.. ராஸ்கல்..” என்று முகம் சிவந்தவளின் கை பிடித்து எழுப்பி தன்னோடு அணைத்து கொண்டான். “இது ஆபிஸ்..? விடுங்க..”  என்று அவனின் அணைப்பில் இருந்து தள்ளி வந்தவளின் போன் ஒலிக்க எடுத்து பார்த்தாள். 
“சொல்லு மனோ..  என்ன..? எப்போ வந்தாங்க..?”  என்று ஆச்சரியத்தோடும், ஆராய்ச்சியோடும் கேட்டு தெரிந்து கொண்டவள் போனை வைத்துவிட்டு, “உங்க அப்பா,அம்மா வீட்டுக்கு வந்திருக்காங்களாம்..”  என்றாள். 
“என்ன சொன்ன..? என்னோட அப்பா, அம்மாவா..?” என்று உர்ரென்று கேட்டவனின் முகத்திலும் யோசனைதான். 
“சாரி அத்தை, மாமா..”  என்று உணர்ந்து சொன்னவள், “வீட்டுக்கு போலாம், அவங்க வெய்ட் செஞ்சிட்டு இருக்காங்க..” என்றாள். “ம்ம்..” என்ற இந்திரஜித்துடன், தீக்ஷியும் வீட்டுக்கு செல்ல, அங்கு சுபா, ஆனந்தன் இருவரும் சோபாவில் அமர்ந்திருக்க, மனோவும், தருணும், அதிதியும்  அவர்கள் எதிரில் அமர்ந்திருந்தனர்.  
“வாங்க மாமா, வாங்க அத்தை..” என்று வீட்டு ஆளாய் மரியாதையுடன் வரவேற்ற தீக்ஷி, உபசரிப்புக்காக பார்க்க, அங்கு ஏற்கனவே காபி, ஸ்னாக்ஸ் எல்லாம் வைக்கபட்டிருந்தது, ஆனந்தன் சாப்பிட்டிருக்க,  சுபா எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தது தெரிந்தது. 
இந்திரஜித் அமைதியாக அப்பாவின் அருகில் அமர்ந்துகொள்ள, தீக்ஷி கிச்சனுக்குள் சென்றவள், திரும்பவும் காபி, ஸ்னாக்ஸ் கொண்டுவந்து தானே சுபாவிடம் கொடுத்தாள். அவள் எடுத்து கொள்ளாமல் அவளை பார்க்க, 
“எடுத்துக்கோங்க அத்தை..” என்ற தீக்ஷியின் சொல்லில் எடுத்து கொண்டவர், காபியை பருக, இந்திரஜித்தும் நிம்மதியான மனதுடன் தீக்ஷி கொடுத்த காபியை எடுத்து கொண்டான். அவனுக்குமே சுபாவின் மறுப்பு உள்ளுக்குள் வருத்தத்தை கொடுத்திருக்க, இப்போதான அவரின் மாற்றம்  புரிந்து உள்ளம் நிறைந்தது. 
“எப்போ வந்தீங்கப்பா..? சொல்லவே இல்லை..”  என்ற இந்திரஜித் அப்பாவிடம் கேட்க, 
“இப்போ கொஞ்ச  நேரத்துக்கு முன்னதான் வந்தோம்..”, என்றவர், “ஏன் எங்க  மருமக வீட்டுக்கு நாங்க வர்றதுக்கு  உன்கிட்ட சொல்லிட்டு வரணுமா என்ன..?” என்று அதிகாரத்துடன்  அதட்டினார்.
“இது வேறையா..? நடத்துங்க..” என்று இந்திரஜித்தின் முகத்தில் சிரிப்பே. 
“விஷூ எங்க..?”  என்று சுபா கணவரை பார்த்து கேட்க, அந்த கேள்வி  தனக்கானது என்று புரிந்து கொண்டவன், 
“அவன் கொஞ்சம் ரிலாக்ஷேனக்காக போயிருக்கான், வந்துடுவான்..”  என்றான் தந்தையை பார்த்தே. 
“ஓஹ்.. கல்யாண வேலை எல்லாம் எப்படியாம்..?” என்று சுபா கணவரை பார்த்தே  கேட்டார். 
“என்ன செய்றது..?  நாங்களே செஞ்சுக்குறோம், எங்களுக்குன்னு  எடுத்து போட்டு செய்ய  யார் இருக்கா..?” என்று இந்திரஜித் கோபத்துடன் அம்மாவை  தாக்கினான். 
“அதுக்கு முதல்ல அப்பா, அம்மாக்கு மரியாதை கொடுத்து, அவங்களை முன்னிறுத்தி எல்லாம் செய்யணும், அதை விட்டு தானே எல்லாம் முடிவெடுத்துட்டு  கல்யாண வேலை மட்டும்  நான் செய்யணுமா..?” என்று சுபாவும் மகனுக்கு சளைக்காமல் பொரிந்தார். 
“சுபா, ஜித்து.. ரெண்டு  பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க..? இது சண்டை போடுற நேரமா..? அமைதியா  ஆகுற வேலையை பார்க்கணும், நாள் இல்லை..” என்று ஆனந்தன் மனைவி, மகனை கட்டுப்படுத்த, 
“இதை உங்க மகனுக்கு சொல்லுங்க..” என்று மனைவியும், 
“இதை உங்க பொண்டாட்டிக்கு சொல்லுங்க..” என்ற மகனும் அவரிடமே மல்லுக்கு நின்றனர். 
“உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் சொல்றேன், முடிஞ்சது முடிஞ்சு போச்சு, இனியாவது கல்யாண வேலையை பார்ப்போம்.. விஷூ என்ன சொல்றான்..?” என்று ஆனந்தன் மகனிடம் கேட்டார். 
“ம்ம்.. மோஸ்ட்லி ஓகே சொல்லிடுவான்னு நினைக்கிறேன்,  நாம அவங்க கல்யாண  வேலையையும் பார்க்க ஆரம்பிச்சிரலாம்..” என்றான். 
“என்ன இனிதான் ஆரம்பிக்கணுமா…? இந்த ஒரு வாரத்துல ரெண்டு கல்யாண  வேலையும் முடிக்க முடியுமா..? இதுவரை ஒன்னுமே செய்யலையா..?” என்று சுபா அதிர்ச்சியாக கேட்டார். 
“செய்யல, இனிதான் செய்யணும்..”, என்று இந்திரஜித் அலட்சியமாக சொன்னாலும், விஷ்வஜித் கவலை இருந்ததாலே எதுவும் செய்யாமல் தேங்கி நின்றிருந்தனர்.
“என்னங்க இது..? இன்னும் தாலி செய்யணும், முகூர்த்த பட்டு எடுக்கணும், இன்விடேஷன் கொடுக்கணும்.. இன்னும் எவ்வளவு வேலை இருக்கு..? இப்போ வந்து ஒன்னுமே செய்யலன்னு ரொம்ப சாதாரணமா சொல்றான்..” என்று சுபா கணவனிடம் வெடித்தார். 
“இவங்களுக்கு என்ன  புதுசா எங்கமேல அக்கறை..? இப்போ வந்து என்னமோ அது செய்யலையா..? இது செய்யலையான்னு..? கேட்கிறாங்க, அவ்வளவு அக்கறை இருக்கிறவங்க முதல்லே வந்து எல்லாம் செய்ய வேண்டியதுதானே..?” என்று மகன் அவருக்கு குறையாத ஆத்திரத்தில் கேட்டான். 
“வேண்டாம்ங்க.. அவனை வாயை மூட சொல்லுங்க, நான் ஏன் அவனுக்கு செய்யணும்..?” என்று சுபா  கொதித்தார். 
“ஏன் செஞ்சா என்னவாம்.? பிள்ளைகளுக்காக செய்றது ஒன்னும் தப்பில்லை, பாசமா செய்யலைன்னா போகுது,  கடமையாவது செய்ய சொல்லுங்க..” 
“ஆமாமாம் பிள்ளைகளுக்காக அம்மா  பாசமா செய்யலன்னா கூட கடமையாவது செய்யணும் தான், சரி.. ரொம்ப சரி..  ஆனா இதுவே அம்மா எதிர்பார்த்தா  அதுக்கு பேரு சுயநலம், ஈகோ..”  என்று தீக்ஷியை பார்த்து கேட்க, தீக்ஷி அவரின் பார்வையை  தயங்காமல்  எதிர்கொண்டாள்.  
“சுபா.. என்ன இது..?” என்று கணவர் அதட்ட, 
“நான் ஒன்னும் சண்டை போடலங்க, என்னோட வருத்தத்தையும் நான் சொல்லலாம் இல்லை,  என் பசங்க கல்யாணத்துக்கு ஒரு அம்மாவா நான் கண்ட கனவை சொல்லாம் இல்லை,  ஒரு மாமியாரா என்னோட எதிர்பார்ப்பை சொல்லலாம் இல்லை, இது எல்லாம்  மொத்தமா கலைஞ்சு போறப்போ என்னோட ஏமாற்றத்தை, வலியை சொல்லலாம் இல்லை..”, 

Advertisement