Advertisement

“யார் செஞ்ச புண்ணியமோ  விஷ்வஜித் மாதிரி மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்கு கிடைச்சார், இல்லை அன்னிக்கு என் பொண்ணு மணவறையில் நின்னாலே அதுக்கே உங்களை உண்டு இல்லன்னு செஞ்சிருக்கணும், அதை செய்யாம விடப்போய் தான் இன்னிக்கு உண்ட வீட்டுக்கு துரோகம் செஞ்சுட்டு மிருகத்தை  விட கேவலமா நிக்குறீங்க..” என்று பலவருட கோவத்தை கொட்ட, அதிர்ந்த ராமலிங்கம் 
“என்ன பேச்செல்லாம் ரொம்ப நீளுது,  இங்கேயே உன்னை கொன்னு புதைச்சிருவேன் பார்த்துக்கோ..” என்று மிரட்ட, நக்கலாக சிரித்த பார்தி, 
“இன்னும் அதை மட்டும் தான் செய்யாம இருக்கீங்க, அதையும் செஞ்சுடுங்க.. அப்பறம் என் மாப்பிளைகளோட ஆசீர்வாதத்துல ஜெயில்ல போய் இருங்க, எனக்கு அதுதான் சந்தோஷத்தை கொடுக்கும், ஏற்கனவே உங்களை என்ன செய்யலாம்ன்னு தான் சின்ன மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கார்..”  என்று முடிக்க, ராமலிங்கம் திகிலடைந்த முகத்துடன் அமர்ந்துவிட்டார்.
“மனோண்ணா.. அப்பா ஏன் அன்னிக்கு பங்க்ஷன்ல அவ்வளவு  கோபப்பட்டார்..” என்று தருண் கேட்க, முதலில் புரியாமல் விழித்த மனோவிற்கு, அவன் விஷ்வஜித், அதி உறுதி நாளை பற்றி கேட்கிறான் என்று புரிய என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்தான். 
“மனோண்ணா.. சொல்லுங்கண்ணா, என்ன ஆச்சு..? ஏன் இவ்வளவு கோவம்..? அதியோட கூட சண்டை போட்டார் இல்லை,  அதி பாவம் தானே..  நிறைய அழுதா..”   அவன் கவனித்து இருந்ததை கேட்டான். 
“ம்ம்.. அதி பாவம் தான் தருண், அவளுக்கு உன்னோடவும், உங்க அப்பாவோடவும் இருக்கனுமாம், ஆனா உங்க அப்பா மாட்டேன் சொல்றார்..”  என்று மனோ மேலோட்டமாக சொல்லி, தருணின் மனதை அறிய முயன்றான். 
“இருக்கட்டும்.. அப்பா ஏன் வேண்டாங்கிறார், நம்ம அதிதானே..”, என்று நொடியும் யோசிக்காமல் ஒத்துகொண்டவனை தோளோடு அணைத்து கொண்ட மனோ, 
“இன்னும் இதை பத்தி வீட்ல யாராவது உன்கிட்ட டீடைலா பேசுவாங்க  தருண், நீ அதை நினைச்சு கவலைபடாத..” என்று இப்போதைக்கு இது போதும் என்று முடித்துவிட்டான்  மனோ.
“நான் விஷூ அண்ணாவை பார்க்கணும், எங்க இருக்கார்ன்னு செக் செய்ங்க..” என்று அவள் அவனுடன் பேசிய  நாளிலிருந்து  காணாமல் போயிருந்த விஷ்வஜித்தை  கண்டுபிடிக்க சொல்லி  பாலாவிடம்  சொன்னாள் தீக்ஷி. அவனும் அன்று முழுவதும் விஷ்வஜித்தை தேடி பார்த்தவன், கிடைக்கவில்லை என்ற பதிலுடன்  தீக்ஷியிடம் வந்து நின்றான். 
“எங்க போயிருப்பார்..?” என்று தீக்ஷி யோசிக்கவும், 
“மேம்.. ஒருத்தருக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்..” என்ற பாலாவின் பதிலில், யார்..? என்ற கேள்வியுடன் பார்த்தாள். 
“இந்திரஜித் சார்..” என்று சொல்லவும், 
“ஓஹ்.. என்றவள், அவர்கிட்ட கேட்க வேண்டியது தானே..” என்றாள். 
“கேட்டேன் மேம்.. எதுக்குன்னு கேட்டார்..? உங்க பேரை சொன்னவுடன், சொல்ல முடியாதுன்னுட்டார் மேம்..” என்று பாலா சங்கடத்துடன் முடித்தான். “இவரை..”  என்று பல்லை கடித்தவள், பாலாவை அனுப்பிவிட்டு, விஷ்வஜித்தை  கேட்டு அவனுக்கு  மெசேஜ் செய்தாள். 
அவளின் மெசேஜ் பார்த்தும் பதில் அனுப்பாமல் இருந்தவன் மேல் கோவம் கொண்டு கொதித்தவள், கால் செய்தாள். “ஹலோலோலோ..”  என்ற இந்திரஜித்தின் ராகத்தில், கடுப்பான தீக்ஷி, 
“விஷூ அண்ணா எங்க இருக்கார்..?” என்று சிடுசிடுவென கேட்டாள். 
“என்ன சொன்ன..? விஷூ அண்ணாவா..? இதை எங்க அம்மாகிட்ட சொல்லியே ஆகணுமே..”  என்று அவனுடன் அவள் பேசாத கோவத்தில்  வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான். அவனின் வம்பு புரிந்து நொந்தவள், 
“ப்ளீஸ் சொல்லுங்க விஷூ மாமா  எங்க இருக்கார்..?” என்று பொறுமையாகவே கேட்டாள். அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை, திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே மிச்சமிருக்க, விஷ்வஜித்தின்  முடிவு  என்ன..? என்ற பதட்டத்தில் இருந்தவளின் டென்க்ஷனை கண்டு கொள்ளா  இந்திரஜித்தோ, 
“அவன் மட்டும் உனக்கு  மாமாவா..?  அப்போ நான் யாராம் உனக்கு..?”  
“ஓஹ் காட்.. நீங்களும் எனக்கு மாமா..  நோமா எல்லாம்தான்..”  என்று தீக்ஷி கடுப்படித்தாள். 
“மாமா ஓகே.. அதென்ன  நோமா..?” என்று இந்திரஜித் உற்சாகமாக தீக்ஷியை சீண்டியபடி பேசி கொண்டிருந்தான். 
“நோஞ்சானா இருந்தா நோமா..!!”  என்று தீக்ஷி பொறுமை மறைந்து  நக்கலாக அவனை டேமேஜ் செய்தாள். 
“யாரு நான் நோஞ்சானா..? என்ன தைரியம்டி உனக்கு..?” என்று அவன் கொதித்தில் குதூகலித்த தீக்ஷி, 
“என் கண்ணுக்கு  நீங்க நோஞ்சானா தான் தெரியுறீங்க, என்ன இப்போ அதுக்கு..?” என்று அவள் விடாமல் பேச, காண்டான இந்திரஜித், 
“இப்போ ப்ரூப் செய்றேன்டி, நான் நோமாவா..?  இல்லை பீமாவான்னு..?”  என்று சூளுரைத்தான். 
“இப்போ எப்படி ப்ரூப் செய்வீங்களாம்..? பறந்து வந்தா..?” என்று தீக்ஷி கிண்டலாக கேட்டாள். 
“நான் ஏண்டி பறந்து வரப்போறேன்..? நடந்தே வருவேன்..?”  என்ற இந்திரஜித்தின் குரல் தன் ரூம் வாசலில் கேட்க, பதறி போன தீக்ஷி  அவனையே பயத்துடன் பார்த்தாள். தூரத்தில் இருக்கிறான் என்றே அவனை நக்கல் அடித்து கொண்டிருந்தவள், அவன் அருகில் வரவும் கண்ணை விரித்து பார்த்தாள். 
“என்ன சொன்ன நோஞ்சான்  நோமாவா..?” என்று புருவத்தை தூக்கி  மிதப்பாக கேட்டவன்,  “இப்போ தெரிஞ்சிரும்..   நான் நோமாவா இல்லை..? பீமாவான்னு..?”  என்றவன், நொடியில் அவளை கையில் ஏந்திக்கொண்டான். 
“ஏய்.. என்ன செய்றீங்க..? இது ஆபிஸ்.. கீழே இறக்கிவிடுங்க, யாராவது வந்துட போறாங்க..” என்று பதட்டபட்டவளை   தீவிரமாக பார்த்தவன், 
“ம்ஹூம்.. நான் எடுத்த வேலையை முடிக்காமல்  விடுறதில்லை..” என்று சீரியஸாக சொன்னவன், கதவுக்கருகில் அவளை தூக்கி கொண்டு போக,  அவன் செய்ய போவதை புரிந்து கொண்டவள், 
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வெளியே எல்லாம் போகாதீங்க, இறக்கி விட்டுடுங்க..” என்று அவனின் கழுத்தை  கட்டிகொண்டு  கெஞ்சினாள். “இது கூட நல்லா இருக்கே..” என்று அவளின் கெஞ்சலை ரசித்தவன், 
“இல்லைடா  தீக்ஷி தங்கம், நான் இப்படியே உன்னை தூக்கிட்டு போய் இந்த கம்பெனியை ஒரு பத்து ரவுண்ட் வரேன், அப்போ தான் மாமா எவ்வளவு ஸ்ட்ராங்ன்னு உனக்கு தெரியும்.. நீதான்  உன் மாமனோட பலத்தை, வீரத்தை  சந்தேகப்படுறியே..?, சோ..” என்றவாறே   கதவை திறக்க போனான். 
“இல்லை.. இல்லை.. நீங்க நோமா எல்லாம் இல்லை, எனக்கு உங்க வீரத்து மேலயும்  எந்த சந்தேகமும் இல்லை.. அது சும்மா உங்க மேல இருந்த கோவத்துல சொன்னது.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்னை இறக்கி விட்டுடுங்க..”  என்று தீக்ஷி அவசரமாக சொன்னாள். 
“வந்தியா வழிக்கு.. என்கூட பேசமாட்டேன்னு இத்தனை நாளா  என்ன ஆட்டம் காட்டுன..?” என்று உள்ளுக்குள் குதித்தவன், “அப்போ நாம பழையபடி லவ்வர்ஸ்.. நோ மோர் பைட்.. எல்லாம் முடிஞ்சது தானே..” என்று கேட்க, தீக்ஷி  ஒத்துக்கொள்ளாமல் அவனை முறைத்து பார்த்தாள். 
“என்ன ஓகே இல்லையா..? அப்போ சரி..” என்று  கதவை மீண்டும் திறக்க போனவனை மூக்கை சுருக்கி பார்த்தவள், 
“நீங்க  என்னை ரொம்பதான் மிரட்டி  கார்னர் செய்றீங்க.? ஏன் இப்படி..?”  என்று அதிருப்தியுடன் கேட்டாள். 
“நீ ஏன் என்கிட்ட பேசமாட்டேங்குற..? நானும் எத்தனை நாளா  உன்கிட்ட கெஞ்சுறேன்.. அப்படியென்ன பிடிவாதம் உனக்கு..?”  
“நீங்க மட்டும் என்மேல அப்படி கோவப்பட்டு பேசலாமா..? மனோ விஷயத்துல  நான் உண்மையாவே உங்க பாயிண்ட்ல யோசிக்கல, தப்புதான், அதை ஓத்துக்கிட்டு அன்னிக்கே மன்னிப்பும் கேட்டுட்டேன்,ஆனாலும் நீங்க எப்படி கோவப்பட்டீங்க..? என்ன என்ன பேசினீங்க..? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..?” என்று வருத்தத்துடன் சொன்னாள். 
“ஓகே..  நானும்  தப்பு.. நீயும் தப்பு.. ரெண்டும் சரிக்கு சரியா போயிருச்சு.. இனி நமக்குள்ள எந்த  சண்டையும் இல்லை.. எல்லாம் முடிஞ்சது தானே..” என்று  சமாதானத்திலே குறியா நின்ற இந்திரஜித்தை சந்தேகத்துடன் பார்த்தாள். என்ன இந்த  திடீர் மாற்றம்..? என்ற கேள்வியை கேட்க, 
“என்ன திடீர் மாற்றம்..? அப்படி எல்லாம் ஒன்னுமில்லை..”, என்று  கண் முழித்து  சொல்லவும், படக்கென அவனின்  கையில் இருந்து குதித்தவள், 
“உண்மையை சொல்லுங்க,, எப்போ எதுக்கு சமாதான கொடியை இறக்கமா  பிடிச்சிட்டு நிக்கிறீங்க..?” என்று கூர்மையாக பார்த்து கேட்டாள். 
“என்ன  பெருசா பறக்கவிட்டுட்டேன்..? நீ இன்னும் உர்ரென தான் பேசுற.. ஒரு பிரயோஜனமும் இல்லை..”  என்று கடுப்பாக நொடிக்க, 
“சொல்ல போறீங்களா இல்லை..” என்று தீக்ஷி விடாமல் கேட்டாள். 
“என்ன இப்போ உனக்கு..? இன்னும் ஒரு வாரத்துல நம்ம கல்யாணமே வர போகுது, இன்னும் நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருந்தா நல்லவா இருக்கும், அதான் அதுக்குள்ள சார்ட் அவுட் செய்யலாம்ன்னு பார்த்தேன்..”
“நான் வேற இத்தனை வருஷமா போன்லேயும், கனவிலும் தான் உன்கூட  குடும்பம் நடத்திட்டு இருக்கேன், நம்ம கல்யாணத்தைப்போவும் நீ இப்படி விறைச்சிட்டு நின்னா எனக்கு பர்ஸ்ட் நைட் நடந்த மாதிரி தான்..” என்று கோவத்தோடு பொரிந்தவனை வாய் மேல் கை வைத்து அதிர்ந்து பார்த்தாள். 
“அடப்பாவி..”  என்ற அவளின் பார்வையை படித்தவன், “இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்..? இத்தனை வருஷம் லவ்  செஞ்சும் இன்னும் என் உதடும், உன் உதடும் பேசவே இல்லை..”, 
“அதே அப்படின்னா மத்ததெல்லாம் எத்தனை வருஷம் கழிச்சோ..? அதான் பர்ஸ்ட் நைட்டுக்குள்ள  சமாதானம் ஆகிடலாம்ன்னா பார்த்தா எங்க  விடற நீ  ராட்சஸி..”  என்று சலித்தவனை “என்ன செய்வது..?” என்றே பார்த்தாள் தீக்ஷிதா.

Advertisement