Advertisement

காதல் ஆலாபனை 22
“ப்ளீஸ் மனோ நீயும் என்னோட  போர்ட் மீட்டிங் வாயேன்.. ஏன் வரமாட்டேன்கிற..?” என்று தீக்ஷி மனத்தாங்கலாக தம்பியிடம் கேட்டாள். 
“இல்லை தீக்ஷி நான் வரல, எனக்கு அவங்க  யார் முகத்தையும் பார்க்க  வேண்டாம்..”  என்று வெறுப்பாக சொன்னவனின் கையை பற்றி கொண்ட தீக்ஷி, 
“இனி அவங்க முகத்தை நாம பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது மனோ, நம்ம பிஸினஸை விட்டு மொத்தமா அவங்களை வெளியே அனுப்ப போறேன்..” என்று உறுதியாக சொன்னாள். 
“ரொம்ப நல்லது தீக்ஷி, அப்படியே செய், அந்த நம்பிக்கை துரோகிகங்க நம்ம பக்கத்துலே வேண்டாம்..” என்று முடித்துவிட்டான்  தம்பி.   பார்ட்னர்களின் நம்பிக்கை துரோகமும், தன்னை ஆக்சிடென்ட்  செய்ய பார்த்த அவர்களின் கொலை முயற்ச்சியும் மனோவை மிகவும் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளதை புரிந்து கொண்ட தீக்ஷி அவனை  வரச்சொல்லி வற்புறுத்த விருப்பமில்லாமல் தான்  மட்டும் போர்ட் மீட்டிங் கிளம்பிவிட்டாள். 
“மேம்.. நீங்க கேட்ட டாகுமெண்ட்..” என்று பாலா கொடுக்க, வாங்கி பார்த்தவள், “ஓகே.. எல்லாம் சரியா இருக்கு, அவங்க எல்லாம் வந்துட்டாங்களா..?” என்று பார்ட்னர்ஸை பற்றி கேட்டாள். 

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டாங்க.. எல்லார் முகமும் பேஸ்தடிச்சி இருக்கு..” என்று பாலா சொன்னான். 
“இருக்கட்டும்.. நான் சொல்ற பேப்பர்ஸை எல்லாம் சீக்கிரம் ரெடி செய்ங்க..” என்று மேலும் சில வேலைகளை முடித்துவிட்டே கான்பரன்ஸ்  ஹாலுக்குள் சென்றாள். இவள் உள்ளே நுழையவும் இவளை பார்த்தவர்களின் பார்வையில் அன்று இருந்த அந்த திமிர், அலட்சியம் எதுவும் இல்லை, இன்னும் சொல்ல போனால் சிலரின்  முகத்தில் பயம் வெளிப்படையாகவே தெரிந்தது. 
அதை கண்டும் பொருட்படுத்தாமல் MD சீட்டில்  அமர்ந்தவள், பாலாவை பார்க்க அவன், “மேம் உங்ககிட்ட கேட்டிருந்த  மூணு வருஷத்து AAR  ரிப்போர்ட்ஸ், கணக்கு எல்லாம் கொடுங்க..” என்று பொதுவாக எல்லோரையும் பார்த்து கேட்டான்.  
“இன்னும் ரெடி ஆகல, கொஞ்சம் டைம் வேணும்..” என்று ஒருவர் சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். 
“இன்னும் டைம் வேணுமா..? மேம் உங்களுக்கு கொடுத்த டைம் மூணு நாள் தான், ஆனா இப்போ ரெண்டு வாரத்துக்கு மேலே ஆகிடுச்சு, இன்னும் என்ன டைம் வேணும் உங்களுக்கு.?” என்று சிறிது கோவமாகவே கேட்டான் பாலா. 
“மூணு வருஷத்து கணக்கு, ரிப்போர்ட் எல்லாம் ரெடி செய்ய வேண்டாமா..? கேட்டவுடனே எடுத்து கொடுத்திட முடியுமா..? எவ்வளவு வேலை இருக்கு..?” என்று ஒருவர் சொல்ல, 
“என்ன வேலை இருக்கு..? போலி ரிப்போர்ட் அடிக்கவும், போலி கணக்கை கொடுக்கவும் எதுக்குப்பா டைம்..?” என்று நக்கலாக கேட்டபடி உள்ளே வந்த இந்திரஜித்தை அங்கு எதிர்பார்க்காமல் தீக்ஷி ஆச்சர்யாமாக பார்க்க, மற்றவர்கள் அதிர்ச்சியாக பார்த்தனர். 
“இவர் எதுக்காக போர்ட் மீட்டிங் வந்திருக்கார்..? இவருக்கும்  நம்ம பிஸினஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, வெளியே போக சொல்லுங்க..” என்று தீக்ஷிக்கு  அடுத்து சட்டமாக  அமர்ந்திருந்த இந்திரஜித்தை பார்த்து ஒருவர் எகிற, மற்றவர்களும் அதை பின்பற்றி இந்திரஜித்தை வெளியே அனுப்பிவிட முயன்றனர். 
“ஏன்..?” என்ற கேள்வியை தாங்கி  தன்னை பார்த்த தீக்ஷியை கண்டு கொள்ளாமல், பாலாவை  பார்த்தான் இந்திரஜித், அவன் வேகமாக அவள் முன் ஒரு பேப்பரை வைத்தான். அதை பார்த்து அதிர்ந்த தீக்ஷி, இந்திரஜித்தை கேள்வியாகவும், பாலாவை கோவமாகவும் பார்த்தவள், 
“என்ன இதெல்லாம்..? ஏன் இப்படி..?” என்று அவள் முன் வெறும் பேப்பர் வைத்திருக்க, அதில் கையெழுத்து போடுமாறு சொன்ன இந்திரஜித்திடம் கேட்டாள். 
“இது சும்மா..  இப்போதைக்கு  இவங்க வாயை அடக்க தான்..” என்று முணுமுணுத்தவனிடம் கண் சுருக்கி தன் அதிருப்தியை காட்டினாள்
“ம்ப்ச்.. டைம் வேஸ்ட் செய்யாத, சீக்கிரம் சைன் போடு, எனக்கு டெல்லி போக பிளைட்டுக்கு டைம் ஆகிடும்..” என்று பல்லை கடித்து வார்த்தைகளை துப்பினான். அப்போதுதான் அவனின் முகத்தை  பார்த்தவளுக்கு அதில் கடுமை நிறைந்திருப்பதை  புரிந்தது. 
“ஏன் இப்படி இருக்கார்..?, நேற்று வீட்டுக்கு வந்தப்போ கூட இப்படி உர்ரென்று தான் இருந்தார்..” என்று யோசித்தவளின் கை மீது பேனா வைத்து சுள்ளென்று அடி போட்ட இந்திரஜித், 
“ம்ம்.. பாஸ்ட்..”, என்று அவசரப்படுத்த, அவனின் அடியில் தேய்த்தவாறே அவனை முறைத்து பார்த்தவளிடம், “இப்போ சைன் போடுறியா இல்லையா..?” என்று கடுப்பாக கேட்டான். 
“போடுறேன்.. போட்டு தொலையுறேன்..” என்று தீக்ஷி முனுமுனுத்து  சைன் போடவும், “நீ  தொலையுறதுலே இரு..” என்று அவள் கையெழுத்து போட்ட பேப்பரை வாங்கி பாலாவிடம் கொடுத்தான்.   
“என்ன நாங்க இங்க  கேட்டுட்டே  இருக்கோம், நீங்க பதில் சொல்லாமல் உங்களுக்குள்ளே பேசிட்டு  இருந்தா என்ன அர்த்தம்..?” என்று அவர்களின் கத்தலை மதிக்காமல் தங்களுக்குள் பேசி கொண்டிருந்த தீக்ஷியை பார்த்து கத்திய பார்ட்னரை “நிறுத்து..”  என்பது போல் கை காட்டிய இந்திரஜித் பாலாவை பார்க்க, அவன் இந்திரஜித் கொடுத்த பேப்பரிலிருந்ததை மற்றவர்களுக்கு படித்து காட்டினான்.
“Mr இந்திரஜித் ஆனந்தன்  AAR டவர்ஸோட  ஜாயிண்ட் MD யா  இந்த செகண்டிலிருந்து பொறுப்பு எடுத்துகிறார்.. “ என்று பாலா சத்தமாக அழுத்தி வாசிக்க, கேட்டிருந்தவர்கள்  கோவத்தோடும், பயத்தோடும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். 
“இது   செல்லாது,  போர்ட்ல  டெசிஷன்  எடுக்காம நீங்க  இவரை ஜாயிண்ட் MDயா  அப்பாய்ண்ட் செய்ய முடியாது, எங்க பெர்மிஷன் வேணும்..” என்று ஒருவர் கோவமாக கேட்டார். 
“ஆமா.. இது செல்லாது, உடனே இவரை வெளியே அனுப்பிவிடுங்க..” என்று மற்றவரும் சொல்ல, அவர்களை எரிச்சலுடன் பார்த்த இந்திரஜித், 
“போதும்  நிறுத்துங்க..”  என்று அலட்சியாயமாக கை காட்டி எழுந்து நின்றவன், “இங்க எங்க போர்ட் இருக்கு..?, அப்படி ஒன்னு AAR டவர்ஸில  கிடையவே கிடையாது..”  என்று ஒரே போடாக போட்டான். 
“என்ன..? என்ன சொல்ற நீ..? அதெப்படி இல்லாம போகும், எங்க எல்லோருடைய ஷேரும் AAR ல இருக்கு, நாங்கதான் போர்ட்..”  என்று மாற்றி மாற்றி கத்த, 
“ஷ்ஷ்..” என்று மூச்சை இழுத்து விட்டு வாட்சை பார்த்த இந்திரஜித்,  “கத்துறதை சீக்கிரம்  கத்தி  முடிங்க, நான் பேச வேண்டியதை பேசிட்டு கிளம்பனும், எனக்கு வேலை இருக்கு..” என்று அசால்ட்டாக அவர்களின் கோவத்தை புறந்தள்ளியவனை ஆத்திரத்துடன் பார்த்தனர். 
“என்ன இப்படி பேசுறீங்க..?” என்று தீக்ஷி இந்திரஜித்திடம் முணுமுணுக்க, 
“நான் இவங்க கிட்ட எல்லாம் பேசியே இருக்க மாட்டேன், வேலுதான் பேசியிருப்பான், என்ன செய்ய..? அதுக்கு நீ ஒத்துக்க மாட்டியே…? அதனாலதான் நான் பேசுறேன்..”  என்று  தீக்ஷியிடம் காய்ந்தவன், 
“உங்க  கத்தல் ஆச்சா.. நான் பேசலாமா..?”  என்று சத்தமாக ஆரம்பித்தான். “Ms தீக்ஷிதா அரசு கேட்டிருந்த மூணு வருஷத்து AAR  அக்கவுண்ட்ஸ் இது..”  என்று ஒரு பைலை டேபிள் மேல் தூக்கி போட்டவன், 
“எடுத்து செக் செஞ்சுக்கோங்க சரியான்னு..?” என்று சொல்ல, அவர்களும் அதை வேகமாக எடுத்து பார்த்தனர். அதில் உண்மையான கணக்கு எல்லாம் மிக சரியாக இருக்க, அதிர்ச்சியாக  இந்திரஜித்தை பார்த்தனர். 
“அடுத்து இதையும் ஒன்ஸ் சீக்கிரமா செக் செஞ்சுக்கோங்க..” என்று பாலாவை பார்க்க, அவன் ஒவ்வொருக்கும் தனி தனியே பைலை கொடுக்க, வாங்கி படித்து பார்த்தவர்களுக்கு வேர்க்க ஆரம்பிக்க பயத்தோடு இந்திரஜித்தை பார்த்தனர். 
“முடிஞ்சுதா..? எல்லாம் சரியா இருக்கா..? Mr.. நீங்க நாளைக்கு ரெஜிஸ்டர் செய்ய இருந்த அந்த லேண்டு அதுல இருக்கா..? செக் செஞ்சுக்கோங்க..”, என்று ஒருவரிடம் கேட்டவன், 
“உங்க வைப் பேர்ல இருக்க அந்த டைமண்ட்  பிசினஸ்  இருக்கா..? பாருங்க..”, என்று மற்றவரிடம் கேட்டான். இப்படியாக அந்த ஐவருடைய  பிஸினஸையும், ப்ராபர்ட்டி  டீடைல்ஸையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து எடுத்திருந்தான். 
“எல்லாம் சரியா இருக்கா..? ஓகே, இப்போ  நீங்க எல்லாம் என்ன செய்றீங்கன்னா..? உங்க பைல்ல  நான் மார்க் செஞ்சிருக்கிற ப்ராப்பர்டி எல்லாத்தையும் Ms  தீக்ஷிதா அரசு, Mr மனோஜ் அரசு பேருக்கு  உடனே ரெஜிஸ்டர் செஞ்சு கொடுக்கிறீங்க..”, 
“அதோட  உங்க பைல்ல நான் போட்டிருக்கிற அமௌன்ட்டை  AAR  பேங்க்  அக்கவுண்டுக்கு உடனே  ட்ரான்ஸ்பர் செய்றீங்க…” என்று முடிக்க, கேட்டிருந்தவர்கள் உறைந்து போய்விட்டனர். 
“என்ன என்ன இதெல்லாம்..? எங்க ப்ராப்பர்டி, பிஸினஸை  எல்லாம் உங்க  பேருக்கு நாங்க எழுதி கொடுக்கணுமா..? முடியாது, என்ன செய்வீங்க..?” என்று ஆத்திரத்துடன் கேட்டவரை தீவிரமாக பார்த்த இந்திரஜித், 
“நீதானே AAR ஐ  எழுதி கொடுக்க சொல்லி தீக்ஷியை  மிரட்டினவன்..?” என்று கேட்க, 
“ஆமா… என்ன செய்வ நீ..?” என்று அந்த மனிதர் திமிராக கேட்ட நொடி அவர் நெற்றியில்  ஒரு கன் வைக்கப்பட்டது. அதை பார்த்த எல்லோரும் திகிலடைந்து வைத்தது யார் என்று பார்க்க, அங்கே வேலு நின்றிருந்தான். இந்திரஜித்தின் அண்டர் கிரவுண்ட் வேலை எல்லாம் செய்பவன். 
அவனின் முகத்தில் கொலை வெறி தாண்டவமாடியது. “பெருசா எதுவும் செய்ய மாட்டோம், ஜஸ்ட் ஒரே ஒரு அழுத்து தான்..” என்று மிகவும் சாதாரனமாக சொன்ன வேலு,  தீக்ஷியை பார்த்து  நெற்றியில் சல்யூட் அடித்து “வணக்கம் மேடம்..”  என்று மரியாதையாக சொன்னான். 
தீக்ஷியோ இருவரையும் மிகவும் கடுமையாக பார்த்தவள், “முதல்ல கன்னை இறக்குங்க..” என்று அதிகாரமாக சொன்னாள். 
“விடு  வேலு..” என்று இந்திரஜித் சொன்ன பிறகே கன்னை எடுத்தவன்,  அவரின் ஆசுவாச மூச்சில்,  “ஆமா நைட் நீ அந்த பார் தானே வருவ..?” என்று  வேறு கேட்டு அந்த பார்ட்னரின் மூச்சை மறுபடியும் நிறுத்தியவன், தள்ளி இந்திரஜித்தின் பின் புறம் நின்று கொண்டான்.  
“என்ன சொன்னீங்க..? எழுதி கொடுக்க முடியாதா..? உங்களை மாதிரி  எழுதி கொடுக்க வைப்போம்ன்னு எல்லாம் எனக்கு மிரட்ட தெரியாது, நானே எடுத்துப்பேன் சிம்பிள்..”  என்று தோளை குலுக்கி அலட்சியமாக சொன்ன இந்திரஜித், 
“உங்களுக்கு  அஞ்சு நிமிஷம் டைம்.. யோசிக்க இல்லை, சைன் போட..” என்று வேலுவை பார்க்க, அவன் வெளியே சென்று  ரெஜிஸ்டர், மற்றும் சிலரை கூட்டி வந்தான். 
“என்ன செய்றீங்க நீங்க..? இதெல்லாம் தப்பு, வேண்டாம், நிறுத்துங்க..” என்று தீக்ஷி கோபமாக இந்திரஜித்திடம் மறுக்க, அவளை பல்லை கடித்து  பார்த்தவன், 
“என் மேல நம்பிக்கை இருந்தா வாயை மூடிட்டு இரு.. ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது..” என்றவன், போன் எடுத்து  “உள்ளே வா..” என்றான். இப்போது யார் என்று பார்க்க, மனோ வந்து கொண்டிருந்தான். 
“வா மனோ உட்காரு..”  என்று தீக்ஷி மகிழ்ச்சியுடன்  தம்பியை வரவேற்றவள், MD  சீட்டை அவனுக்கு கொடுத்தாள். 
“ம்ஹூம்.. நீ தான் உட்காரனும்..”, என்று MD சீட்டில் அவளின் தோள் பிடித்து உட்காரவைத்தவன், பக்கத்து சீட்டில் தான் உட்கார்ந்து கொண்டான்.
“க்கும்.. பெரிய பாசமலர்கள்..”  என்று அக்கா, தம்பியை  பார்த்து உள்ளுக்குள் வெந்த இந்திரஜித், தீக்ஷியை எரித்து பார்த்தான். 
“என்னை தவிர எல்லாரும் இவளுக்கு முக்கியம்..” என்று பொறுமியவனை பார்த்த   தீக்ஷி,    “ரவுடி..” என்று தானும் மூக்கை சுருக்கி பார்த்தாள். 
“சார் எல்லாம் ரெடி..”  என்று வேலு  குரல் கொடுக்க,  பார்ட்னர்களோ நகர முடியாது என்று நின்றவர்கள், தங்களுக்கு தெரிந்த மினிஸ்டர், போலிஸுக்கு  போன் செய்து  இந்திரஜித்தின் மிரட்டலை சொல்லி கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள்  யாரும் இவர்களுக்கு சப்போர்ட் செய்ய முடியாது என்று மறுத்ததோடு இந்திரஜித் சொல்லும் படி செய்ய சொல்லி வைத்து விட்டனர்.  
“ஹலோ சீனியர் சிட்டிசன்ஸ்.. உங்களை எல்லாம் வச்சிக்கிட்டு  சீரியஸா  டீல் பேச முடியாதா..?” என்று நக்கலாக சலித்த இந்திரஜித்,  
“உங்க ஒவ்வொருத்தரோட  இன் அண்ட் அவுட்   டீடெயில்ஸ் வச்சிருக்கிற எனக்கு உங்களோட சப்போர்ட்  தெரியாம இருக்குமா..? எல்லாம் எப்போவே  விலை போயிட்டாங்க, அதுவும் ரொம்ப சீப்பா தான்..!!  அதனால டைம் வேஸ்ட் செய்யாம டக்கு டக்குன்னு கையெழுத்து போடுங்க பார்ப்போம்..” என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு வேலுவிடம் பேச ஆரம்பித்துவிட்டான். 
இந்திரஜித்தின் கிடுக்கு பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல்  திணறிய பார்ட்னர்கள்  என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவாறே தீக்ஷியையும், மனோவையும் இறுதி வாய்ப்பாக பார்த்தனர். தீக்ஷி அவர்களை வெறுப்பாக பார்த்தாள் என்றால் மனோ அவர்கள் இருக்கும் பக்கம் கூட திரும்பாமல் இறுகி போய் அமர்ந்திருந்தான். 
“எதுக்கு இப்படி யோசிக்கிறீங்க.? நாங்க என்ன உங்க உழைப்பையா கேட்டோம்..? இது  எல்லாமே  அரசு என்ற  ஒரு தனி மனுஷனோட வாழ்நாள் உழைப்பு, அது சேர வேண்டியது அவரோட பிள்ளைங்களுக்கு  தான், உங்களை போல நம்பிக்கை துரோகிகங்களுக்கு இல்லை”, 
“அதனால ரொம்ப யோசிச்சு இருக்கிற மத்த சொத்தையும் இழந்துடாதீங்க.. டைம் ஆக ஆக எனக்கு மனசு மாறிடும், பார்த்துக்கோங்க..”  என்று இறுதியில் மிரட்டலாகவே முடித்தான் இந்திரஜித்.  
எல்லா வழியும் அடைக்கட்டு விட,  மிச்சமிருக்கும் மற்ற சொத்துக்களையாவது  காப்பாற்றி கொள்ள, ஒவ்வொருவராக சென்று கையெழுத்து இட்டு முடிக்க,  தீக்ஷியும், மனோவும் கையெழுத்து போட்டு முடித்தவுடன், சாட்சி கையெழுத்தும் முடிந்து அரசுவின் உழைப்பு அவரின் பிள்ளைங்களுக்கே சென்று சேர்ந்தது.
“அப்பறம் இதுலயும்  சைன் போட்டு மொத்தமா முடிச்சுடுங்க..” என்று இன்னொரு டாக்குமெண்டை காட்டினான். அதில்  அவர்களின்  AAR ஷேர் எல்லாம் தீக்ஷி, மனோ பேருக்கு சரி சமமாக மாற்றபடுவதாக எழுதி இருந்தது. 
“இது.. இது எல்லாம் ரொம்ப அநியாயம், எங்களை ஒட்டு மொத்தமா மோசம் செய்ய பார்க்கறீங்க..? இதுக்கு நாங்க கண்டிப்பாவே ஒத்துக்க மாட்டோம்..” என்று எல்லோரும்  எகிற, 
“ஸ்ஸ்ஸ்..” என்று கடுப்பாக நெற்றியை சொறிந்த இந்திரஜித்,  “அந்த செக்கை கொடு..”  என்று தீக்ஷியிடம் கேட்டான். 
“எந்த செக்..?” என்று பாலாவை முறைத்தவாறே தீக்ஷி புரியாமல் கேட்பது போல் கேட்டாள். அவர்களிடம்  இருந்து AAR ஷேரை எழுதி வாங்க ஏற்கனவே செக் தயார் செய்து வைத்திருந்தாள் தீக்ஷிதா.
“என்னை கடுப்பேத்தாதடி..” என்று அடிக்குரலில் சீறியவன், “கொடு..” என்று  கையை நீட்ட, “ரொம்பத்தான்…” என்று உதட்டை சுழித்தவாறே அவள் தயாராக எடுத்து வைத்திருந்த செக்கை எடுத்து நீட்டினாள். அதில் அவரவர்களின் ஷேருக்குள்ள மதிப்பு போட்டு பணம் எழுதியிருக்க, அதை எல்லோருக்கும்  பாலா மூலமாக கொடுத்தவன், 
“இப்போ சைன் போட்டு முடிச்சு விடுங்க..” என்று அவர்களை பேசவிடாமல் AAR ஷேரையும் எழுதி வாங்கியே அவர்களை போக விட்டான்.
“ஏன் இப்படி எல்லாம்..?” என்று அவர்கள் செல்லவும் தீக்ஷி இந்திரஜித்திடம் அதிர்ப்தியாக கேட்க, 
“எப்படி எல்லாம்..? இது ரொம்ப  குறைவு தான்,  உங்க அப்பா இருந்தவரை ஒரு ரூபா இவங்களை ஏமாத்தி இருப்பாரா..? ஆனா இவங்க அப்படிப்பட்ட மனுஷனுக்கு துரோகம் செஞ்சிருக்காங்க, அதுவும் எப்போ அவர் இல்லாமல் போனதுக்கு அப்பறம்..”
“ நீ படிக்க   UK போன  மாசத்திலிருந்து காசை எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க, அதுவும் அந்த ராமலிங்கம் சொல்லவே வேண்டாம், என்னடா நம்ம உயிர் நண்பன் இல்லையேன்ற  வேதனை கொஞ்சம் கூட  இல்லாம இவங்களோடு சேர்ந்து காசை போட்டி போட்டு எடுத்துட்டு இருந்தார்”. 
“எனக்கு வந்த கோவத்துக்கு அப்பாவே எல்லோரையும் முடிச்சிருப்பேன், நீ வரட்டும்ன்னு தான் விட்டு வச்சிருந்தேன், ஆனா இவங்க  கடைசியில் உன் மேல இல்லை கை வைக்க பார்த்தாங்க, மனுஷங்களா இவங்க..?”  என்று உச்ச கட்ட வெறுப்பாக சொன்னான்.  
இந்த மூன்று வருடமாக இந்திரஜித்  AAR ஐ தொடர்ந்து கண்காணித்து கொண்டே தான் இருந்திருக்கிறான்.. என்று அவன் சொல்ல சொல்ல தான் தீக்ஷிக்குமே தெரிந்தது. 
“ரொம்ப நன்றி மாமா.. இவங்களை போல ஆளுங்களுக்கு இது தான் சரி..” என்று மனோ இந்திரஜித்தின் கை பிடித்து நன்றி சொல்ல, 
“மச்சான்.. நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு..?” என்று இந்திரஜித் நாசுக்காக மச்சான் உறவு சொல்லவும், மனோ புரியாமல் தான் விழித்தான். 
“மச்சானா..? என்ன மாமா புதுசா..? மனோ தானே கூப்பிடுவீங்க..?” என்று கேட்டான். 
“க்கும்.. விளங்கின மாதிரி தான்..” என்று நொந்த இந்திரஜித்,  “இதுக்கு பதில் நான் வந்து சொல்றேன்..”  என்று முறைப்பாக சொன்னவன், தீக்ஷியை குறிப்பாக பார்த்து கிளம்ப, தீக்ஷியும் அவனை பின் தொடர்ந்தாள்.

Advertisement