Advertisement

காதல் ஆலாபனை 16
“ஆல் தி பெஸ்ட் தீக்ஷி..”  என்ற இந்திரஜித்தின் மெசுஜுடன்  விடிந்தது  தீக்ஷியின் காலை பொழுது. இன்றோடு அவளின் இளங்கலை பட்ட படிப்பிற்கான எக்ஸாம்ஸ் முடிய போகிறது, அதற்கான வாழ்த்து தான் இந்திரஜித்தின் இந்த மெசேஜ்.  
பதிலுக்கு எதுவும் அனுப்ப தோன்றாமல் அதையே சில நிமிடம் சிரிப்புடன் பார்த்தவள், எக்ஸாமிற்கு நேரமாவது உணர்ந்து எழுந்து கிளம்பினாள். “ம்மா.. சீக்கிரம் டிபன் வைங்க, டைம் ஆச்சு..” என்று அரக்க பரக்க சாப்பிட வந்தமர்த்த தீக்ஷியை நிதானமாக பார்த்த ராணி, 
“அப்படியொன்னும் நேரம் ஆகிடல, பொறுமையாவே சாப்பிடு..” என்று எடுத்து வைத்தவர், தானே மகளுக்கு ஊட்டி விடவும், இடையோடு அன்னையை அணைத்து கொண்டாள். “தேங்க்ஸ்மா..” என்று சாப்பிட்டு முடித்து அம்மாவிற்கு முத்தம் வைத்தவள், கிளம்பவும், “இரு தீக்ஷி இன்னிக்கு நானே உன்னை டிராப் செய்றேன்..” என்று அரசு வந்தார். 
“ப்பா.. இதெல்லாம் டூ மச்..”,  என்று அதுவரை சோபாவில் உர்ரென்று முகத்துடன் அமர்ந்திருந்த மனோஜ் சொல்லவும், 
“என்னடா..? ஏன் இவ்வளவு அப்செட்..?” என்று அரசு புரியாமல் மகனின் தலைகோதி  கேட்டார். 
“பின்னே.. ஒரு சாதாரண செமஸ்டர் எக்ஸாம் எழுத போற இவளுக்கு இவ்வளவு பில்டப்பா..? அம்மா என்னடான்னா அவளுக்கு ஊட்டி விடுறாங்க, நீங்க பர்ஸனலா அவளை டிராப் செய்ய போறீங்க, போன மாசம் 12த் போர்டு எக்ஸாம் கொடுத்த எனக்கு கூட இவ்வளவு கவனிப்பு இல்லை..”, என்று பொறாமையில் பொங்கிய தம்பியை பார்த்து நக்கலாக சிரித்தாள் தீக்ஷிதா. 
“தீக்ஷி.. இப்படி சிரிச்ச நடக்குறதே வேற..”, என்று அக்காவின் நக்கல் சிரிப்பில் காண்டான மனோஜ் கத்தினான்.  “என்னடா செய்வ..?”  என்று தீக்ஷி பதிலுக்கு எகிறி கேட்டாள்.
“ஷ்ஷ்.. ஆரம்பிச்சிடீங்களா..?” என்று சலிப்பான  ராணி, “மனோ.. இது சண்டை போடுற நேரம் இல்லை, அவ கிளம்பட்டும், டைம் ஆச்சு..” என்று மகனை கண்டிப்புடன் அதட்டி மகளை கணவனுடன் வழியனுப்பி வைத்தார். 
“தீக்ஷி.. இன்னிக்கு நைட் எனக்காக வெய்ட் செய், அப்பா உன்னோட பேசணும்..” என்று அரசு மகளை காலேஜில் விட்டு சொல்லவும், சரியென்றவள், சொன்னது போல் அன்றிரவு அரசுக்காக அவரின் ஆபிஸ் ரூமில்  காத்திருந்தாள். 
அந்த நேரம் இந்திரஜித் “குட் நைட்..” மெசேஜ் செய்யவும், தந்தை சாப்பிட சென்றதை உறுதி செய்து கொண்டு அவனுக்கு அழைத்து விட்டாள். “சொல்லுங்க தீக்ஷி மேடம், எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சுதா..?” என்று உற்சாகத்துடன் கேட்ட இந்திரஜித்திடம், 
“ம்ம்.. முடிஞ்சது..”, என்று மிகவும் ரீலிப்பாக சொன்னாள். 
“ஓகே.. வீடியோ கால் பேசலாமா..?” என்று ஆசையாக கேட்ட இந்திரஜித்திடம், 
“முடியாதே.. நான் இப்போ அப்பா ஆபிஸ் ரூம்ல அவருக்காக வெய்ட் செஞ்சிட்டு இருக்கேன்..”  என்றாள் மறுப்பாக. 
“ஏன் இந்த நேரத்துல..?” என்று இந்திரஜித் புரியாமல் கேட்டான். 
“அப்பா என்னமோ பேசணும்னு சொன்னாரு, அதான் வெய்டிங்..” என்று தீக்ஷி  சாதாரணாமாக சொல்லவும், இந்திரஜித்திற்கு பக்கென்றது. சமீப  நாட்களாக  தீக்ஷியை பெண் கேட்டு நிறைய வரன்கள் வருவதாக விஷ்வஜித் தம்பியிடம் சொல்லியிருந்தான். 
அதை நினைத்து டென்ஷானவன், “என்ன விஷயமா..? ஏதாவது சொன்னாரா..?” என்று கேட்க, 
“இல்லை, ஜஸ்ட் பேசணும்னு மட்டும் தான் சொன்னார்..” என்றவளிடம், 
“என்ன..? அவரு  பேசணும்ன்னு சொன்னா நீ என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா..?” என்று கோவம் வெளிப்பட கேட்டான். 
அவனின் திடீர் கோவத்தில், “என்ன ஆச்சு..? ஏன் இவ்வளவு கோவம்..?” என்று புரியாமல் கேட்டாள். 
“ம்ப்ச்..” என்றவன், “இல்லை உன்னோட கல்யாண விஷயமா இருக்குமோன்னு கொஞ்சம் டென்ஷன்..”  என்று சொல்லவும், 
“அப்படியும் இருக்குமோ..? கொஞ்ச நாளா வீட்ல அலையன்ஸ் பேச்சு நிறைய வருதே..?”  என்று  தீக்ஷிக்குமே சிறிது பதட்டம் தான் என்றாலும், அப்பா, அம்மாவின் மேல் நிறைய நம்பிக்கையும் இருந்தது. அதையே இந்திரஜித்திடமும் சொல்லவும்  செய்தாள். 
“டென்க்ஷன் ஆகாதீங்க..? இவ்வளவு சீக்கிரம் எல்லாம்  எங்க அப்பா, அம்மா எனக்கு கல்யாணம் செய்ய மாட்டாங்க..” என்றாள். 
“என்ன..?” என்று அதற்கும் டெங்ஷனானவன், “அப்போ நான் பொண்ணு கேட்டாலும்  ஒத்துக்க மாட்டாங்களா..?” என்று கேட்டான். அவனின் டெங்ஷனில் சிரித்தவள்,  
“நீங்க என்ன நான் எது சொன்னாலும் டென்க்ஷன் ஆகுறீங்க..?” என்று சிரிப்புடன் கேட்டாள். 
“நான் டென்க்ஷன் ஆகுற மாதிரியே தான்  நீ  சொல்ற..?” என்றவனுக்கு அவளின் சிரிப்பு சத்தம் கேட்க,   “ராட்சஸி.. என்னோட டென்க்ஷன் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா..?”  என்று செல்லமாக அதட்டினான். 
“நான் அப்பறமா பேசுறேன், அப்பா வர்றாரு..”   என்று அரசு வருவதை பார்த்து தீக்ஷி போன் வைக்க போகவும்,    “ஏய் கால் கட் பண்ணாத ப்ளீஸ்..”  என்று இந்திரஜித் கேட்கவும் சரியென்றவள், போனை ஆனிலே வைத்து கொண்டாள்.  
அரசு வந்தவர் முதலில் எக்ஸாம்ஸ் எப்படி போச்சு..? என்று சில நிமிடங்கள் பொதுவாக பேசியவர், “அடுத்து என்ன செய்ய போறடா..?” என்று கேட்டார்.   
“MBA படிக்கலாம்ன்னு ஒரு தாட்ப்பா..” என்றாள். 
“சூப்பர் தீக்ஷி, எங்க படிக்க போற..? ஏதாவது அப்பளை செஞ்சிருக்கியா..?” என்று கேட்டார். அதை பற்றி எல்லாம் எதுவுமே யோசிக்காமல் இருந்தவள், தந்தை கேட்கவும், “இங்க சென்னையிலே படிக்கிறேன்ப்பா..” என்றுவிட்டாள். 
“ஓஹ்..”  என்ற தந்தையின் முகம் திருப்தி இல்லாததை கண்டு கொண்டவள், “ஏன்ப்பா..?” என்று கேட்டாள். 
“இது எல்லாம் நான் உனக்காக வாங்கி வச்சிருக்கிற MBA அப்ளிகேஷன் பார்ம்ஸ்..” என்று ஒரு கத்தை பேப்பரை நீட்டியவரிடம் வாங்கி பார்த்தாள். ஸ்டேன்போர்ட் பிஸ்னஸ் ஸ்கூல் இன் US,  ஹார்வர்ட்  பிஸ்னஸ் ஸ்கூல் இன் US, ஆக்ஸ்போர்ட் இன் UK, இது போக IIM  யூனிவர்சிட்டி அப்ளிகேஷன்ஸும் இருந்தது. 
எல்லாவற்றையும் பார்த்து மலைத்தவள், “ப்பா.. இது எல்லாம்..?” என்று திணறலாக கேட்டாள். 
“ஏண்டா..? இங்க எல்லாம் வேண்டாமா..? ஸ்டேன்போர்ட், ஹார்வர்ட்  எல்லாம் பிஸ்னஸ் கோர்ஸ் ரொம்ப நல்லா இருக்கும், நம்ம இந்திரஜித் தம்பி கூட ஹார்வர்ட்ல தான்  படிச்சிருக்கார்..”, என்று சொல்லவும், எல்லாவற்றையும் கேட்டிருந்த இந்திரஜித் கலவையான மனநிலையில் இருந்தான். 
திருமண விஷயம் இல்லை என்று சந்தோஷப்பட முடியாமல், தீக்ஷியின் மேற்படிப்பிற்கான பேச்சு, அதுவும் வெளிநாட்டில் எனும் போது வருத்தம் தான் வந்தது. பக்கத்தில் இருந்தாலே பேச, பார்க்க இவ்வளவு பாடு, இதில் இன்னும் தூர சென்றால் அவ்வளவுதான்.. 
அதற்காகவே தீக்ஷியின் பிரிவை தவிர்க்கவே ஊருக்கு வந்தவுடன் பெண் கேட்டு திருமணம் முடித்து விடலாம் என்று  இத்தனை நாளாக கனவு கண்டு கொண்டிருந்தவன், இப்போது அதையும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் போனை கட் செய்துவிட்டான். 
இதுவரை வெளிநாட்டிற்கு சென்று படிப்பதையே யோசித்திராத தீக்ஷி, எப்படி மறுப்பது என்று தந்தை முகம் பார்த்தாள். அவர் மிகவும் எதிர்பார்ப்புடன் அவளின் முகம் பார்க்க, மறுக்க முடியாமல் தடுமாறியவளிடம், “என்னடா இதுல எதுவும் பிடிக்கலையா..?” என்று வருத்தத்தை மறைத்து கேட்டார், 
“அப்படி எல்லாம் இல்லைப்பா, இங்க எல்லாம் போக எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கும், எப்போ..? எப்படி..?” என்று தடுமாற்றத்துடன் கேட்டாள். 
“அதுக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் டைம் இருக்கு, முதல்ல அப்பளை செஞ்சுடலாம், லாஸ்ட் டேட் வந்துருச்சு..” என்று மிகவும் உற்சாகமாக சொன்னவர், 
“மனோக்கு தான் பிசினஸ் மேல இன்டெரெஸ் இல்லாம போயிருச்சு, என்ஜினீயரிங் படிக்கறேன்னு சொல்லிட்டான்..” என்று மகன் பிசினஸ் மேல் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லிவிட்டதில்  வருத்தம் இருந்தது. ஆனாலும் மகள் தன்னை போல பிஸ்னஸ் செய்ய ஆசைப்படுகிறாள் என்ற நம்பிக்கை  மலை போல இருக்க, அதை மறைக்காமல் மகளிடமும் சொன்னார். 
“விடுடா அவனுக்கு என்னமோ பிடிக்கல, அதான் நீ இருக்கியே..? அப்பா பிசினஸை அடுத்த லெவலுக்கு கொண்டு போக.. எனக்கு உன்மேல நிறைய நம்பிக்கை இருக்குடா, ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ கண்டிப்பா சாதிப்ப, அதை பார்த்து அப்பா ரொம்ப சந்தோஷப்படுவேன்..” என்று உணர்ச்சி பொங்க பேசியவரிடம் மறுக்க முடியுமா தீக்ஷியால்..? சரி என்று விட்டவள், அன்றே அப்ளையும் செய்து விட்டாள். 
“என்ன MBA படிக்க போறியா…?” என்று தீக்ஷி ரூமிற்கு வந்து இந்திரஜித்திற்கு அழைக்கவுமே கேட்டான். 
“என்ன செய்ய சொல்றீங்க..? அப்பா என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார், அவரை எப்படி டிஸாபாய்ண்ட் செய்ய..?” என்று கேட்டாள். 
“ம்ம்.. இன்னும் ரெண்டு வருஷம் வெய்ட் செய்யணுமா..?” என்று பெருமூச்சோடு கேட்டவன், “எனக்கு நேரமே சரியில்லை போல, எங்க வீட்ல என்னோட அப்பாவும், அண்ணாவும் சூப்பர் பாஸ்ட்டா இருந்தா, நான் டெட் ஸ்லொவ்வா இருக்கேன்..” என்றான் கடுப்பாக. 
“உங்களுக்கென்ன இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்யணும், கொஞ்ச வருஷம் போகட்டுமே..” என்று தீக்ஷி சொல்லவும், 
“நீ சொல்லுவ பின்னே..?, உன்னோட நினைச்சா நேரம் பேச முடியாம, பார்க்க முடியாம எனக்கு தான் பொங்குது, உனக்கென்ன..?” என்று காரமாக கேட்டவனின் கோவம் எதனால் என்று உணர்ந்து கொண்டவள், அவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நினைத்து, 
“இனி நீங்க நினைச்ச நேரத்துக்கு என்கிட்ட பேசலாம், என்னை பார்க்கலாம், நோ தடா..” என்றுவிட்டாள். 
“போடி ஜோக் பண்ணாத..” என்று கடுப்பாக  சொன்னான். 
“நான் சீரியஸா தான் சொல்றேன்..”, என்றவளிடம், 
“நீ போனை வை, நான் வீடியோ கால் வரேன்..”  என்று வீடியோ கால் செய்தவன்,  
“சொல்லு, இப்போ என்ன சொன்ன..?” என்று கண்களில் கனல் மின்ன கேட்டான், என்ன சொன்னேன்னு என்று அவள் சொல்லியதை திரும்பவும் சொல்ல, 
“ஏண்டி.. உனக்கு எவ்வளவு நக்கல் இருந்தா இனி நினைச்ச நேரத்துக்கு உன்னை பார்க்கலாம்ன்னு சொல்லுவ..?” என்று கேட்டான். 
“இதுல இவ்வளவு கோவப்பட என்ன இருக்கு..?” என்று புரியாமல் கேட்டவளை ஆத்திரம் பொங்க பார்த்தவன், 
“எது நீ வெளிநாடு போனதுக்கு அப்புறம் நான் நினைச்ச நேரத்துக்கு வந்து உன்னை பார்க்கிறது.. நடக்கிற காரியமா..? இதுல அதுக்கு என்னமோ பெர்மிஷன் வேற கொடுக்கிற..? ராட்சஸி..” என்று சொல்லவும், உணர்ந்து உதடு கடித்தவள், 
“சாரி, நான் அதை யோசிக்கல..” என்றாள் மன்னிப்பாக. 
“நீ எப்படி இதையெல்லாம் யோசிப்ப..? நான்தானே உன்னை பார்க்க, பேச யோசிக்கணும், தவிக்கணும்..” என்று ஆதங்கமாக கேட்டான். 
“ப்ளீஸ்.. ப்ளீஸ் கோவப்படாதீங்க, இன்னும் ரெண்டே ரெண்டே ரெண்டு  வருஷம் தான், சீக்கிரமா ஓடி போயிடும், உங்களுக்கும் அந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட் முடிஞ்சிடும்,  என்று கெஞ்சி, கொஞ்சி கேட்டவள், அவன் இளக்கம் இல்லாமல் பார்க்கவும், 
“எங்க அப்பாக்காக..!!” எனவும் தான் இளகியவன்,  
“மாமாவை சொன்னதால விடுறேன், இல்லை என் பிளான் படி கல்யாணம் தான்..” என்று கனவு.. கனவாகியே  போய்விட்டதை நினைத்து நொந்து சொன்னான். 
“ஆமா.. உங்ககிட்ட ஒன்னு கேட்கணும், ஒருவேளை அப்பா எனக்கு அலையன்ஸ் பார்த்திருந்து, உறுதி செஞ்சிட்டு இருந்தா  என்ன செஞ்சிருப்பீங்க..?” என்று ஆர்வத்துடன் கேட்டாள். 
“மத்தவங்கன்னா எப்படியோ..? ஆனா மாமாகிட்ட என்னால கண்டிப்பா சண்டை எல்லாம் போட முடியாது, நான் போடவும் மாட்டேன், வேணும்ன்னா ஒன்னு செஞ்சிருப்பேன், படாருன்னு அவரு காலுல விழுந்து பொண்ணு கேட்டு கட்டிட்டு வந்துருப்பேன்..”  என்று உண்மையாகவே உணர்ந்து சொன்னான். 
“ஹாஹா..!!” என்று அவன் சொன்னதில் சிரித்தவளை காதலாக ரசித்து பார்த்தவன், “நீ இப்படி மனசு விட்டு ப்ரீயா சிரிக்கிறப்போ எல்லாம் இன்னும் இன்னும் அழகா இருக்கடி..” என்று சொல்ல, அவளின் சிரிப்பு மறைந்து வெட்கம் ஆட்கொண்டது. 
“ஆரம்பிச்சிடீங்களா..?” என்று காதலி செல்லமாக சலித்து கொள்ள, 
“என்ன ஆரம்பிச்சுட்டேன்..?, இன்னும் ஒன்னுமே இல்லை, வருஷம் தான் ஓடுதே தவிர, இன்னமும் ஒரு முன்னேற்றமும் இல்லை, இதோ இப்போ கூட பாரு,  உன் உதட்டுக்கும், என் உதட்டுக்கும் எவ்வளவு தூரம் இருக்கு, எப்போ இது நாலும் ஒன்னு சேர்ந்து பேசி, பழகி, ரசிச்சு நான் அடுத்த கட்டத்துக்கு போறது..” என்று காதலனும் நூல் விட்டான். 
“உங்களை..”  என்று அவனின் தீவிர பார்வை தன் உதட்டை குறுகுறுக்க வைத்ததில், விரல் கொண்டு துடைத்தாள். 
“என்ன செஞ்சுட்டேன்னு இப்படி துடைக்கிற..? பாரு என் உதட்டோட  ஜோடி உதடு எப்படி சிவந்து போச்சு..”  என்று மேலும் பேசியவனை  முறைத்த காதலி, 
“இதே மாதிரி பேசிட்டு இருந்தீங்க நான் கட் செஞ்சுடுவேன்..” என்று மிரட்டினாள். 
“சரி, சரி போ..” என்று விட்டவன்,  “நேர்ல பார்க்கும் போது என்ன செய்றேன்னு நானும் பார்க்கிறேன்..” என்று முணுமுணுத்தான். அவனின் முணுமுணுப்பு கேட்டு தீக்ஷிக்கு கோபம் வராமல் அந்த நாள் என்று வரும் என்று ஏக்கம் தான் வந்தது, அதை மறைத்தவள், 
“நீங்களும் அங்க ஹார்வர்ட்ல தானே படிச்சீங்க, ஏதாவது டிப்ஸ் கொடுக்கிறது..” என்று டாபிக்கை மாற்றி கேட்டாள். 

Advertisement