Advertisement

அத்தியாயம் 15
“எங்க ஒளிஞ்சிருக்க தருண்..? வெளியே வா.. ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு..”  என்று ஸ்கூல் போகமாட்டேன் என்று ஒளிந்து கொண்டிருக்கும் தருணிடம் ராணி கத்திக்கொண்டிருந்தார். 
“விடு ராணி.. LKG தானே, இன்னிக்கு ஒரு நாள் ஸ்கூல் போகலேன்னா என்ன..?” என்று அரசு பேரனுக்காக சப்போர்ட் செய்ய, அவரை முறைத்தவர், 
“நீங்க இப்படி  அவனுக்கு சப்போர்ட் செய்ய போய் தான் அவன் அங்க தர்ஷினியை ஏமாத்திட்டு இங்க வந்துடுறான், இந்த மாசத்துல மட்டும் பத்து நாளைக்கு மேல லீவ் எடுத்தாச்சு, இன்னிக்கு கண்டிப்பாவே முடியாது..”என்று ராணி பேச, 
“ஆமா..  போறதே அரை நாளு, இதுல அப்பப்போ  ஸ்கூல் விடுற லீவ், அது போக நம்ம சாரும் பாதி நாளைக்கு லீவ் போட்டுடுறாரு, இதுக்கு பேசாம இவன் வீட்லே இருந்திருக்கலாம், இவனுக்கு கட்டின பீஸாவது மிச்சமாகி இருக்கும்.. ”   என்று தீக்ஷிதா  சாப்பிட்டபடி நக்கலடித்தாள். 
“அவனாவது ஸ்கூல் தான் ஒழுங்கா போகல, ஆனா நீ காலேஜே ஒழுங்கா போறதில்லை, அடிக்கடி லீவ், மொத்தமா கிளாஸ் பங்க்.. இதுல ஸ்டடி ஹாலிடேஸ் வேற, நீ அவனை  சொல்லறீயா..?” என்று மனோஜ் அக்காவை கிண்டலாக சொன்னான். 
“நீ  என்னமோ ஒழுங்கா ஸ்கூல் போனமாதிரி என்னை  சொல்ல வந்துட்ட, நீயும் பாதி நாள் இப்படித்தான் லீவ் போட்டுடுவ, அப்போவும் இதே மாதிரி அப்பா தான் உனக்கு சப்போர்ட் செய்வார், இப்போ அதையே தருணுக்கு சொல்லி கொடுத்து அவனையும் நீதான் கெடுக்கிற..”  என்று தீக்ஷி சிலிர்த்தபடி தம்பியிடம் சண்டைக்கு நின்றாள்.  
“ஷ்ஷ்.. இப்போ ரெண்டு பேரும் வாயை மூடல தோசை கைதான் பார்த்துக்கோங்க, அமைதியா சாப்பிட்டு கிளம்புங்க..”, என்று பிள்ளைகளை அதட்டிய ராணி, 
“தருண்.. இப்போ நீ வெளியே வரலன்னா, உனக்கு இந்த வீக்எண்ட் அவுட்டிங் கட்..”  என்று சத்தம் போட்டு சொன்னவர், அவனுக்கு டிபன் எடுத்து வைக்க, மனோஜின்  ரூமிலிருந்து வெளியே வந்த தருணை பார்த்த ராணி, மகனை  பார்வையால் பொசுக்க, அவனோ  குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு கொண்டிருந்தான்.  
“வா..  வந்து சாப்பிடு..” என்று முறைத்தபடி அவனுக்கு ஊட்டிவிட்டவரை தாவி அணைத்து கொண்டு முத்தம் வைத்த தருண், “நான் இன்னிக்கு ஸ்கூல் போறேன் ராணிம்மா..”  என்று நல்ல பிள்ளையாக சொன்னான். 
“ம்க்கும்.. அவுட்டிங் கேன்சல்ன்னு சொன்னதால தானா ஸ்கூல் போற, இதுல என்னமோ ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நான் இன்னிக்கு ஸ்கூல் போறேன் ராணிம்மான்னு வேற கொஞ்சி எங்க அம்மாவை ஏமாத்துற, சரியான கேடிடா நீ..” என்று தீக்ஷிதா  கிண்டலாக சொல்ல, அவளை  கோபமாக முறைத்தான் தருண். 
“ஆமா இவரு கோவமா முறைச்சா அப்படியே நான் எரிஞ்சிருவேன்.. போடா பால் டப்பா..”  என்று மேலும் அவனை நக்கலிடத்துவிட்டு எழுந்து சென்றவள், 
“ப்பா.. என்னோட வண்டி சர்வீஸுக்கு போயிருக்கு, நீங்க ஆபிஸ் போகும்போது என்னையும்  அப்படியே காலேஜுல ட்ராப் செஞ்சுடுங்க..”  என்று அரசுவிடம் சென்று நின்றாள். 
“ஏங்க.. அப்படியே  மனோஜ், தருணையும் ஸ்கூல்ல விட்டுடுங்க..”, என்று ராணி குரல் கொடுத்தவர், தருணை கையோடு அழைத்து வந்து கணவனிடம் ஒப்படைத்தார். 
“மனோ.. சீக்கிரம் சாப்பிட்டு முடி, அப்பா கிளம்பிட்டார் பாரு..” என்று ராணி மகனுக்கு சொல்ல, “ஏன்மா நீங்க வேற, அவன் மொத்தத்தையும் காலி பண்ணாம அங்கிருந்து எந்திரிக்கவே  போறதில்லை, அதுக்குள்ள ஸ்கூலே முடிஞ்சுடும்..” என்று தீக்ஷி தம்பியை விட்டேனா பார் என்று சீண்டினாள். 
“ம்மா.. சும்மா சாப்பாட்டை மோந்து பார்க்கிறவங்க எல்லாம் சாப்பிடறதை பத்தி பேச தகுதியே இல்லாத ஆளுங்கன்னு  சொல்லி வைங்க..” என்றவாறே வந்த மனோஜுக்கு தருண் சிரிப்புடன் ஹைபை போட்டு கொள்ள, இருவரையும் முறைத்தாள் தீக்ஷிதா. 
எப்போதுமே அவர்கள் இருவரும் கூட்டணி போட்டு கொண்டு தீக்ஷிதாவை வம்பிழுக்க, இவளும்  அசராமல் இருவரையும் போட்டு தாக்கி கொண்டே இருப்பாள். அதிலும் அதிதி இருந்தால் நால்வருக்குள்ளும் அடிதடியே நடக்கும், 
“காலையிலே ஆரம்பிச்சிடீங்களா, கிளம்புங்க முதல்ல..” என்று மூவரையும் வெளியே தள்ளிவிட்ட ராணி, “இவங்களோட மல்லு கட்டுறதே என் பொழப்பா போச்சு..” என்று முணுமுணுத்துக்கொண்டே உள்ளே சென்றுவிட, அடுத்த பிரச்சனை யார் முன்னால் அமர்வது என்பதில் ஆரம்பமானது. 
“நான் தான் பிரண்ட் சீட்ல உட்காருவேன்..” என்று தீக்ஷிதா நிற்க, தருணும் “நாந்தான் உட்காருவேன்..” என்று பிடிவாதமாக  நின்றான். “ஏன் தீக்ஷி அவன்தான் சின்ன பிள்ளை, அவனோட போயி போட்டி போடுற சில்லி கேர்ள்..”, என்று மனோஜ் கிண்டாலாக சொன்னான். 
“மனோன்னா.. நீங்க சொல்றது சரிதான்.. கேர்ள்ஸ் ஆல்வேய்ஸ் கேர்ள்ஸ் தான்..” என்று தருணும் மனோஜுடன் ஹைபை போட்டு கொண்டு சிரித்த இருவரையும் கண்ணை சுருக்கி பார்த்தவள், 
“ஓகே.. ஒரு டீல், நீ என்னை அக்கான்னு கூப்பிடு, நான் உனக்கு முன்னாடி சீட்டை விட்டு கொடுத்துடுறேன்..” என்றவளின் மூளை விழித்து “ஏய் தீக்ஷி.. நீ அவனுக்கு அக்கா இல்லை,  சித்தி..!!” என, அவசரமாக, “அக்கா இல்லை சித்தி கூப்பிடு.. சீட் உனக்கு தான்..” என்று டீல் பேசியவளை சிரிப்புடன் பார்த்த இருவரும், 
“ஓஹ் காட் தீக்ஷி.. ஹவ் கிரேஸி யூ ஆர்..? ஒரு சீட்டுக்காக உன்னை அக்கான்னு கூப்பிடுவேனா..? ச்சு ச்சு..” என்ற தருணுக்கு மறுபடியும் ஹைபை போட்டு கொண்ட மனோஜ், 
“இதுல சித்தின்னு கரெக்க்ஷன் வேற.. அந்த மரியாதைக்கு எல்லாம் நீ சரிபட்டு வரமாட்ட தீக்ஷிக்ஷி..” என்று ராகம் இழுத்த மனோஜ், தருணுடன் பின் சீட்டிலே அமர்ந்து கொள்ள, “போங்கடா  டம்ப் பாய்ஸ்.. ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னை அக்கா, சித்தின்னு கூப்பிடாமையே போயிடுவீங்க..” என்று பொறுமிய மனதுடன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள் தீக்ஷிதா. 
“தீக்ஷி.. நீ ஏதோ பங்க்ஷனுக்கு ஷாப்பிங் போகணும்ன்னு அம்மாகிட்ட கேட்டுட்டு இருந்த, என்ன பங்க்ஷன்..?” என்று அரசு மகளிடம் காரில் செல்லும் போது கேட்டார்.
“காலேஜ் ட்ரடிஷனல் டேப்பா, எல்லோரும் சேரி, ஹால்ப் சேரி, வேஷ்டி, ஷார்ட்  இது போல நம்ம பாரம்பரிய டிரஸ் போடணும், அதுக்கு தான் ஷாப்பிங்..” என்று மகள்  சொன்னாள். 
“ம்ம்.. இது போல ஒரு ஈவென்ட் வச்சாதான் நீங்க நம்ம பாரம்பரிய டிரஸ் போடுவீங்கன்னு அவங்களுக்கும் தெரியுது போல, அதுக்குன்னு  ஒரு டே வைக்க ஆரம்பிச்சிட்டாங்க..” என்று அரசு அங்கலாய்ப்புடன் சொன்னவர், மகளை காலேஜில் இறக்கிவிட்டு நேரே பிசினஸ் சங்க மீட்டிங்கிற்கு சென்றார். 
அங்கே விஷ்வஜித்தையும், இந்திரஜித்தையும் சங்கத்திற்குள் சேர்க்க கூடாதென ஷர்மா அண்ட் கோ எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்க, உள்ளே நுழைந்த அரசு, “ஏன் அவங்க உள்ளே வரக்கூடாது..?” என்று அதிகாரமாக கேட்டார்.  
“இப்போதான் பிஸினஸே ஆரம்பிச்சிருக்காங்க, அது நிற்குமா இல்லை படுக்குமான்னே  தெரியாது, அப்பறம்  எப்படி உள்ளே விட..? முதல்ல அவங்க அதுல கொஞ்சமாவது  சக்ஸஸ் ஆகட்டும், அப்பறம் சேர்த்துக்கலாம், இது அவங்களுக்கு மட்டுமில்லை, பொதுவான ரூல்ஸ் இது தான்..” என்று ஷர்மா வினயமாக சொன்னார். 
“அவங்க இப்போ தான் பிஸினஸுக்குள்ள வந்தாங்கன்னு உங்களுக்கு தெரியுமா..?  ஊட்டில ஆல்ரெடி பிசினஸ் செஞ்சிட்டு இருக்கிறவங்க தான், அதுவும் இல்லாம சில பல கம்பெனிஸ்ல இன்வெஸ்ட்டும் செஞ்சிருக்காங்க..” என்று பேப்பரை நீட்டியவர், வாதாடி அண்ணன், தம்பியை சங்கத்திற்குள் சேர்த்துவிட்டார். 
“ஷர்மாஜி.. இந்த அரசு சப்போர்ட் அந்த ஜித் பசங்களுக்கு அதிகமா இருக்கு.., ஆமா ஜி, இவரோட சப்போர்ட் இருக்கிற வரை அந்த பசங்க இப்படித்தான் ஆடுவாங்க..” என்று மற்றொருவனும் சொன்னான். 
“ம்ம்.. எனக்கும் தெரியுது பார்க்கலாம், ஏதாவது சேன்ஸ் கிடைக்கட்டும், மொத்தமா மூணு பேரையும் முடிச்சிடலாம்..” என்ற ஷர்மாவிற்கு, கவர்மண்ட் ப்ராஜெக்ட் கை நழுவி இந்திரஜித்திற்கு சென்ற வன்மம் இருந்தது.
“ஜித்து.. இன்னிக்கு அசோஸியேஷன் மீட்டிங் போயிருந்தேன் இல்லை, அங்க வழக்கம் போல எனக்கும்  அந்த ஷர்மா கேங்குக்கும் முட்டிகிச்சு..”  என்று விஷ்வஜித் லேபிலிருந்து வீடியோ கால் வழியாக பாரினில் இருக்கும்  இந்திரஜித்திடம் பேசி கொண்டிருந்தான். 
“இன்னிக்கு என்ன பிரச்சனை..?” என்று இந்திரஜித் கேட்க, 
“இல்லடா நியூவா  பிசினஸ்க்குள்ள வர்றவங்க எல்லாம், ஏற்கனவே செஞ்சிட்டு இருக்கிறவங்க பிஸினஸை எல்லாம் ஏமாத்தி, போர்ஜெரி செஞ்சு பிடுங்குறாங்கன்னு நம்மளை தாக்கி பேசினான், நானும் திருப்பி பேச போய் பிரச்சனை ஆகிருச்சு, கடைசில அரசு மாமா சொன்னதால தான் அவனை விட்டுட்டு வந்தேன், இல்லை என்கிட்ட செமத்தியா வாங்கி கட்டியிருப்பான்..” என்றான் ஆத்திரமாக, 
“விடு விஷூ.. நீ சீக்கிரமா ரியாக்ட் செய்றன்னு தான் அவன் உன்னை பார்க்கும் போதெல்லாம் சீண்டிகிட்டே இருக்கான், கண்டுக்காம ப்ரீயா விடு, எங்க போயிட போறான், பொறுமையா பார்த்துக்கலாம்..” என்ற  இந்திரஜித், 
“எனக்கு இங்க அந்த கவர்மெண்ட்  ப்ராஜெக்ட்க்கு தேவையானது எல்லாம்  வாங்கி முடிக்க, இன்னும் ஒரு மாசமாவது ஆகும் போல, அது வரைக்கும் கொஞ்சம் ஹோட்டல்ஸை பார்த்துக்கோ, உனக்கு ஏற்கனவே நிறைய வேலை தான், இதுல இது வேற ஆட் ஆயிடுச்சு..” என்று விஷ்வஜித்தின் பளு தெரிந்து வருத்தபட்டான். 
“அதுக்கென்ன பார்த்துக்கலாம் விடு, பெங்களூர் ஹோட்டல் கன்ஸ்ட்ரக்ஷ்ன் முடிய போகுது, நீ வந்தவுடன் அதை திறந்துரலாம்..” என்றவனிடம் மேலும் சில விஷயங்களை பேசி கொண்டிருந்த இந்திரஜித்தின் முகம் விஷூவிற்கு பின் தெரிந்த காதலியின் தரிசனத்தில் நொடியில் மலர்ந்து விகசித்தது. 
“ஜித்து. இந்த டாகுமெண்ட் உனக்கு செண்ட் செய்றேன், பார்த்துட்டு சொல்லு..” என்று விஷ்வஜித் டாகுமெண்ட்டை பார்த்து பேசி கொண்டிருக்க, தம்பியோ சேலையில் ஜொலித்து கொண்டிருந்த காதலியை தீவிரமாக சைட் அடித்து கொண்டிருந்தான். 
“ராட்சஸி.. எப்படி சிரிச்சிகிட்டு இருக்கா பாரு, என்னடா நாம பக்கத்துல இல்லையேன்னு கொஞ்சமாவது வருத்தம் தெரியுதா..?” என்று தர்ஷினியுடன் டைனிங் டேபிள் சேரில்  அமர்ந்து பேசி கொண்டிருந்த தீக்ஷிதாவை  பிரிவின் தாபத்தோடு வெறித்து பார்த்து கொண்டிருந்தான். 
“ஜித்து..  இந்த இம்போர்ட் டாகுமெண்ட் உள்ள இருக்கு, நான் இதோ எடுத்துட்டு வந்துடுறேன் இரு..” என்று விஷ்வஜித் எழுந்து உள்ளே செல்ல,  இவன் உடனே  தீக்ஷிக்கு அழைத்தான்.
“க்கா.. நீங்க வேற, அந்த பையன் வேட்டி அவிழ்றது கூட தெரியாம எங்களை பார்த்து பார்த்து காக்கா வலிப்பு வந்த மாதிரி டேன்ஸ் ஆடிக்கிட்டு இருந்தான்..”  என்று இன்று நடந்த டிரெடிஷனல் டே கலாட்டாவை பற்றி சொல்லி சிரித்து கொண்டிருந்தவளின் மொபைல் ஒலிக்க  பார்த்தவளின் முகம்  முதலில் குழப்பம் கொண்டு பின் லேசான பதட்டத்துடன் அட்டென்ட் செய்தவள், “ஹெலோ..” என்றாள். 

Advertisement