Advertisement

அத்தியாயம் 16

அருண்அவனது அறையில்  உமா பற்றிய நினைவுகளில் முழ்கியிருந்தான்…

உமாவை பார்ப்போமோ இல்லையா என்று தவிப்போ தவிப்பு ஆரம்ப காதல் பொறியை இப்பிரிவு காற்று விசிறி விசிறி 

காட்டுத்தீயாய் உடல் மனம் எங்கும் எரியவிட்டிருந்தது

எங்கே கடத்தி வைத்துருப்பார்கள்? வண்டி எண் கிடைத்தும் ஒரு பலனும் இல்லையென்று புலம்பிக்கொண்டிருந்தான் ..பைத்தியகாரனை போல..அறிவு அன்பில் கரைந்து விட்டிருந்தது….

நிரஞ்சனும்,சத்யாவும் அருணின் வீட்டினுள்  நுழையவும், தீபியின் செல்லுக்கு அழைப்பு.. 

எடுத்து யாரென்று  பார்க்க, பார்த்தவள் முகம் நொடியில் மலர்ந்தது, உடனே அவள் அலைப்பேசியை  இயக்கி காதில் வைக்க,மற்ற இருவரின் முகத்தில் இருந்த கேள்விக்கு பதிலாக  அவள் பேசியை ஸ்பீக்கர் மோடில் போட..

“கவிதா போன் பண்றா, அவ கிட்ட எப்பவும் சின்ன போன் இருக்கும் அதை நான் மறந்துட்டேன் ”  என்றுக் கூறியவள் அந்தப் பக்கம் சத்தம் வராமல் இருப்பது கண்டு பதட்டமாக ,

அதற்குள் கவியின் எண்ணை கண்ட்ரோல் ரூமிற்க்கு அனுப்பி லோக்கேஷன் கண்டுபிடிக்க சொல்லி,இவர்கள் தீபி மற்றும் சத்தம் கேட்டு வெளிய வந்தணை கூட்டிக்கொண்டு காரில் ஏறினர் ..

அந்தப்பக்கம் கவி போனில் தீபியை தொடர்புக்கொண்டவுடன் வெளியே சத்தம் கேட்கவே அலைப்பேசியை துண்டிக்காமல்  பாக்கெட்க்குள் போட்டுவிட்டாள்..

உள்ளே வந்தவர்கள் நால்வரின் மயங்கி  நிலைக்கண்டு , 

“ஒரே தடவை மருந்து  அடிச்சதுக்கே இப்படியா,நோஞ்சான்கள், நமக்கு வேலை மிச்சம், மயக்கமா  இருக்கறதுனால அப்படியே தூக்கிட்டு போய்,கன்டைனர்ல ஏத்திடலாம்,பிரச்சனை பண்ணாதுங்க ”  என்றான் ..

இவர்கள் பேசுவதை அந்தப் பக்கம் கேட்ட நால்வருக்கும், பிரஷர் ஏறியது..

“அருண்,நிரு போன் சிக்னல் அம்பத்தூர்  தாண்டி காமிக்குது,￰￰￰பக்கத்துல எங்க கண்டைனர் யார்ட் இருக்குனு  செக் பண்ணுங்க , அங்க தான் பங்க் அவங்களுக்கு”  என்று கூறிய சத்யாவின் கையில் பறந்தது..

இவர்கள் நால்வரும் கண்டைனர் யார்ட் போய் சேரவும், மறுபடியும் பெண்களுக்கு லேசாக  மயக்க மருந்து ஸ்பிரே செய்திருந்தார்கள்..

 பெண்களைக் கை,கால்களை  கட்டி கன்டைனரில் ஏற்றவும்  சரி ஆக இருந்தது..அவர்கள் இருந்த கோலம் கண்டு இவர்கள் நால்வரின் இதயமும்  நொறுங்கி துடித்தது ..

என்ன செய்யலாம் என்று யோசித்த சத்யா சுத்தி பார்க்க, கண்டைனரில் ஏற்றிக் கொண்டிருந்த வேற யாரும் இல்லை..நேரம் நள்ளிரவை  தாண்டிக்கொண்டியிருந்தது ..

சத்யா,அருண்,நிரு மூவரும் சத்தமில்லாமல்  சென்று, அந்த பொறுக்கிகள் பின் இருந்து தாக்க, ஓரு நிமிடம் தடுமாறியவர திருப்பி தாக்க  ஆரம்பிக்க,அடுத்த பத்து நிமிடங்கள் சண்டையில் கழிய,அங்கு வந்த காவல் படைவரையும் சுற்றி வளைத்தது.

இவர்கள் அனைவரும் வண்டியை  தள்ளி நிறுத்தி நடந்து வந்ததால் , இவர்கள் சுற்றி வளைத்தது தெரியாமல் போக , இவர்களுக்கு  தலைவனான லோக்கல் அரசியல்வாதி மேற்பார்வை பார்க்க வந்து தானாக சிக்கிகொண்டான்.

இவர்களது  மிக பெரிய நெட்ஒர்க் பெண்களை கடத்தி பல்வேறு நாடுகளுக்கு அவர்களை அடிமைகளாக, அடை யாளமில்லாதவர்களாகவிற்பது தான் தொழில்..

பெண்கள் எல்லாத் துறையிலும் கால் பதித்து வெற்றியாளராக விளங்கினாலும்,இது மாறி கடத்தல்களும் வன் கொடுமைகளும் நடந்துக்கொண்டுதானிருக்கிறது, 

இது எப்பொழுது மாறும் என்ற கேள்விக்கு காலம்  தான் அரசாங்கம் தான் பொறுப்பாய் பதில் சொல்ல வேண்டும்..

நான்கு தோழிகளை மட்டும் அல்லது இன்னும் கன்டைனரில் பல பெண்கள்..எல்லாம்18-20 வயது  உடையவர்கள் மொத்தம் முப்பது பெண்கள்..

அத்தனை பெண்களையும்  கண்டு சத்யாவும் நிரஞ்சனும் ஆத்திரத்தில்  அந்த அரசியல்வாதியை அடி பின்னி எடுத்துவிட்டனர்..

அவனை பிற காவலரிடம்  ஒப்படைத்து விட்டு,அந்த பெண்களையும் ஹாஸ்பிடல்  கொண்டு போக சொல்லி,கவிதா மற்றும் அனிதாவை தீபி மற்றும் நிருவை கவனிக்க  சொல்லிவிட்டு வர்ஷியை கையில் தூக்கிய சத்யாவிற்கு,இனிமேல் வர்ஷியை விட்டு இருக்க முடியாதுயென்ற  எண்ணம் தீவிரமாக,அதே எண்ணம் தான் உமாவை கையில் ஏந்திய அருணுக்கும்…

தூக்கிட்டான்ங்க.

ஹீரோஸ் வில்லன்கள் கிட்டேர்ந்து ….

கடத்திட்டாங்க தத்தம் வீட்டுக்கு…இதுல யாரு வில்லன்ஸ்??? Haha

ஹீரோயின்ஸ்க்கு பிடிச்ச 

வில்லன்ஸ்..

அருண் வீட்டிலாவது சொந்தங்கள் உறுப்பினர்கள் ஜாஸ்தி..

கண்ணு முழிச்சதும் உமாவின் குடும்பமும் இருக்க…காதலாய் ஓர் ஓரவிழி வீச்சு மட்டும் அருணுக்கு போனசாய் கிடைக்க…

அங்கு பார் புகழும் நிரஞ்சனுக்கோ பித்து பிடித்து கிடந்தது..

அபிராமி அபிராமி ன்னு கன்னத்தில் போட்டுக்காத குறைதான்..

தன் பெட்டில் படுக்க வைத்திருந்தவன் டாக்டர் தவிர யாரையும் அவளை பார்க்க விடவில்லை..

மயங்கி கிடக்கும் தன்னவளின் கழுத்தில்

பொன்தாலி வாங்கி கட்டிருவோமா? தின்கிங் இல் இருந்தான்…

அவன் தாத்தா முத கொண்டு வரு பேமிலி வரை காதில் புகையோடு வெளியில் காத்து கிடந்தார்கள்..

வர்ஷி முழிக்கும் போது…

நிரு எப்படி இருப்பான்?

செஞ்சிருவானா?

அத்தியாயம்17

காதல் மழை (நிறைவு.)

அட  ஏன் சத்யா சத்யா இப்படி பண்றான்,,?

தாத்தாவால் வர்ஷாவின் பெற்றோருக்கு பதில் சொல்லவே முடில.. நண்பர்கள் மற்றும் அவர்களின் ஜோடிகள் ஒருவரை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து வெட்கப்பட்டுக்கொள்ள.. சூழ்நிலை விசித்திரமாக இருந்தது.

இதற்கிடையில் சத்யாவும்,  நிருவும் கடத்தல் கும்பலை பிடித்ததை கேள்விப்பட்து

 டிப்பார்ட்மென்டின் பெரிய தலைகள் வாழ்த்த அழைக்க,விஷயம்  கேள்விப்பட்டு முழுதாக நடந்தது என்னவென்று தெரிய வேண்டி வீட்டை முற்றுகையிட்ட பத்திரிகை மற்றும்  செய்தியாளர்கள் யாருக்கும் பதில் சொல்லாமல் வருவை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்த அருணுக்கும், நிருவுக்கும் அவனை  அர்ச்சனை செய்யும் அளவுக்கு மனதில் தோன்றிய ஆவலை அடக்கிவிட்டு, எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர் … 

சில மணி நேரங்கள் கழித்து … தானாக அறையில் இருந்து வெளியே வந்த சத்யா, தாத்தாவிடம் சென்று ,

“நாளைக்கே நான் வர்ஷாவை கல்யாணம் பண்ணிக்கனும்.. அவங்க வீட்டில் பேசுங்க.. என்னி இந்த சூழ்நிலையெல்லாம் இனி தாங்க முடியாது ப்ளீஸ்” என்று  சொல்ல …  

சோகத்தின் பெரு வலியில் மவுனமானவனை பார்க்க.

 அப்படியே வெளியில் தள்ளிக்கொண்டு போய் காலை கோவிலில் திருமணம்..ரெண்டு வாரம் கடந்த பின்பு ஆடம்பர வரவேற்பு .. முடிவை எடுத்தது போல தாத்தா ராஜவேலு  சொல்ல..

 சத்யாவின்  பெற்றோருக்கு  மகனது திருமணத்தை  ஆடம்பரமாக செய்ய ஆசையிருந்த போதிலும், மகனிடம் அதை உரிமையாகச்  சொல்ல முடியாத தங்கள் நிலைமையை எண்ணி வருந்தி… அவன் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதே  பெரிய விஷயம் என்று நினைத்தவர்கள் மகன் விருப்பப்படி திருமணத்தை நடத்த விழைந்தனர் …

 ஒரு நாள் கூட முழுதாக இல்லை அதற்குள் எப்படி சாத்தியம்? வர்ஷாவின் பெற்றோர் தயங்க.. 

“இப்போவே தாலி கட்ட கூட அவன் தயாராக இருக்கிறான்.. வர்ஷியை  உங்க வீட்டுக்கும் அனுப்ப மாட்டான் போல.. அப்புறம் உங்க இஷ்டம்” தாத்தா பொடி வைத்து பேச..

என்ன செய்ய? மாப்பிள்ளை தங்கம் தான் எதற்கு மறுத்து கொண்டு நேரம் விரயம் செய்யணும் என்ற கட்டாயத்தில் அவர்களும் சம்மதம்  என்று தெரிவிக்க …

அடுத்தடுத்து இருபக்கமும் நெருங்கிய உறவினர்கள் புது வாட்ஸ் அப் குரூப் துவக்கப்பட்டு நொடிக்கு நொடி நடக்கும் ஏற்பாடுகள் லைவ் வா ஆள் போட்டே புதுமையான அதிரடி அவசர திருமணம்.. ஆனால்  அவசர திருமணம் மாதிரி இல்லாமல் நிறைவாக நடத்திக்காட்டினர் கார்த்திக்கும் லக்ஷ்மியும் … சிறப்பா நடந்துச்சு..

பணம் காசு துட்டு மணி மணி இல்லாதவங்களுக்கு தான் பிளான் வேணும் .. இவங்களுக்கு 15 மணிநேரமே ரொம்ப அதிகம்..

 கௌரவத்திற்க்காக இல்லாமல், மனதில் முழு மகிழ்ச்சியுடன் ஒரே இரவில்  அனைத்தையும் உவந்தே ஏற்பாடு செய்துவிட்டனர்..

ராஜவேலுக்கு முதன் முறை சத்யேந்திரனின் பெற்றோர் மீது  நம்பிக்கை வந்தது.. இப்போவாவது திருந்தினால் மகிழ்ச்சியே..!!!

கடத்தல் அதிர்ச்சியில் இருந்து மீண்ட வர்ஷாவை கல்யாண அதிர்ச்சியில் ஆழ்த்தினான் அவளின் முரட்டு காதலன்..

“ஏங்க படிப்பு முடிச்சுட்டு…ப்ளீஸ்” அவனிடம்  கெஞ்ச..

“என் கூட இருந்து முடிச்சுட்டே .. படிச்சுட்டே இரு” ஓர் முறை முறைத்து அடக்கினான்.. இவள் தேடி எடுத்த திரவியன்.. \\\ மோசத்திலும் படு மோசம் \\\\

பாஸ்ட் புட் போல சத்யாவின் திருமணம் என்றவுடன்,நிரு அருண் இருவரும்  ஒரே புலம்பல் ..

” டேய்  மச்சான்” ..

” என்னடா  அருண்மாப்பி”

“நீதானடா  முதல்ல காதலிக்க  ஆரம்பிச்ச … அடுத்து  நானும் என் தேவதையை காதலிக்க ஆரம்பிச்சேன் … ஆனா  நேத்து காதலிக்க ஆரம்பிச்ச சின்னப்பையனுக்கு நாளைக்கு  கல்யாணம்னு சொல்லும் போது என் பிஞ்சு நெஞ்சு பிஞ்சிப்போய்விட்டது”..என அருண் புலம்ப ..

“டேய் அடங்குடா, அதான்  உன் தங்கச்சியும் ,என் தங்கச்சியும் படிப்பு முடிஞ்சுதான்  கல்யாணம்னு நம்மள பழிவாங்குதுங்களே, 

வர்ஷிய  பாரு சத்யா ஒரு வார்த்தைச்  சொன்னா அப்படியே கேட்டுக்கறா.. உன் தங்கச்சியும் இருக்கே .. தேவதையா? அது பிசாசு”.. என பொரும..

“நான்  மட்டும் என்ன தேவதைனு  சொல்லிக்கிட்டு ஒரு குட்டிச்சாத்தானை தான்   காதலிக்கறேன்”…

///அடேய்  கரஸ் அப்புறம்  ஐ பி எஸ் மாதிரியாடா பேசறீங்க நீங்க ???//

” அப்படியா அப்போ  பிசாசையும்,

குட்டிச்சாத்தனையும் காதலிக்கற நீங்களும் சைத்தான்கள் தான்”  என்ற குரலில் பதறி திரும்ப அங்க நேரில் தீபியும்,வீடியோகாலில் உமாவும் உண்மையாக  பேய் அவதாரம் எடுத்துவிட்டனர்..

ஒரு மாதம் கழித்து திருமணத்திற்கு  சம்மதம் சொல்லலாம் என்று நினைத்தவர்கள்,இப்போ படிப்பு முடிஞ்சி  தான் கல்யாணம் அதுவரை தங்களை நேரில் பார்க்க கூடாதுனு சொல்லிவிட்டனர் …

///கரஸ் ஐ பி எஸ் க்கு  மெகா சைஸ் குல்பீ பக்கதுல இருந்தும்  பாக்க முடியலைன்னு பீல்////

அரட்டி உருட்டி அடாவடி பண்ணி அருகில் உக்காரவச்ச சத்யன் கையால் தாலி வாங்கும் போது வேற எந்த நினைப்பும் வருக்குஇடையில் வரல.

நெஞ்சில் ஓர் நிம்மதி பரவியது உண்மை.

தோழிகள் “நீ கொடுத்து வச்சவடி” என்ற போது வானத்தில் இருந்தாள் பூமி கண்ணுக்கு தெரில

மெலடி பாட்டுக்கள் பின்னணியில் முதலிரவு அறை…

மங்கலான வெளிச்சமும், கட்டிலை சுற்றி பூக்கள்  அலங்காரம் வாசனைமெழுகுவர்த்தியின்  

சேர்ந்து சத்யாவை ஏதோ  ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது… ஆண்மையின் நரம்புகளை குறுகுறுக்க செய்தது.. 100 வருட பழமையான ஒயின் சாப்பிட்ட கிக் குடிக்காமலேயே நினைப்பிலேயே கிடைத்தது..

கதவு திறக்கும்  ஓசையில் நிகழ்வுக்கு வந்தவன்,பிங்க்  நிறத்தில் மெலிய பட்டுதுத்திட்டி,தலையில் பூவும் ,நேத் நெத்தியில் குங்குமமும்,கழுத்தில் காலையில் கட்டிய திருமாங்கல்யமும் அதனுடன்  ஒற்றை சங்கிலியும், காலில் கொலுசும்,தான் அணிவித்த மெட்டியுடன் வந்து நின்றவளை பார்க்க பார்க்க அவனுள் எதோ “நல்ல” மாற்றம் …///  என்னவா இருக்கும் ///

நாமெல்லாம் தமிழ் நாவல் படிக்கும் அப்பாவிகள் இது மாதிரி முதராத்திரியில் கணவன் மனைவியை தொடுவதெல்லாம் சாமி குத்தம் சொல்றவங்க.. அதனால் வெளில வந்துட்டோம்

அந்த நல்ல மாற்றமோ கெட்ட மாற்றமோ உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் 

சத்யனுக்கு   எல்லாம் அவசரம் தான் ஆண்டு இறுதி பரீட்சை எழுத போகும்போது கர்ப்பிணியாக பூரணமாய் மின்னி தேவதையா எழுதினா.. மேல் படிப்பின் போது கையில் ஒன்னு இடுப்பில் ஒன்னு.. முடியல..

அருண்,உமா, நிரஞ்சன், தீபி திருமணம் அவர்கள் படிப்பு  முடிந்த அடுத்த நாள் நிறைவடைய ..அவர்களும் மேல்படிப்பிற்கு  வயிற்றில் குட்டியுடன் செல்ல (இதுலலாம் நண்பர்கள் மிகவும் ஒற்றுமை  தான் )

  மேல் படிப்பின் இறுதி தேர்வு முடிந்ததும்,இன்னும் எவ்ளோ வேணும்னாலும் படிச்சுக்கோ லட்டு என்று வர்ஷாவிடம் நெருங்க..

உங்க ரகசியம் எல்லாம் கண்டு பிடிச்சுட்டேன் போங்க போங்க ஆரவ் அப்பா  என்று ஊரை போல உலகத்தை போல ஏமார்ந்த குடும்ப தலைவியா வர்ஷா…

சத்யாவின் இருபிள்ளைகளை வளர்ப்பது ராஜவேலும் ,கார்த்திக்கும் 

லக்ஷிமியும், சத்யாவிற்கு  கொடுக்காதப் பாசத்தை பேரப்பிள்ளைகளுக்கு குடுத்து ஈடு  செய்தனர் சத்யாவின் பெற்றோர் ..

அடுத்த ஒரு வருடத்தில் உமா,தீபி வர்ஷி மூவரும் ,வர்ஷா நிறைமாதம்,இதை  பார்த்து சத்யா தீயா வேலை செய்யறான்னு நண்பர்கள் கேலி செய்ய அவன் எதையும்  கண்டுக்காமல் ,தன் மனைவியை காணும் வேலையை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்துகொண்டிருந்தான் …

வர்ஷா என்றால் மழையாம் .. 5ஆம் இந்த வான்மழை சத்யா  எனும் வறண்ட பூமியில் பெய்து அதனை விவசாய பூமி ஆக்கிவிட்டது..

அதன் பலன்  மக்களுக்கு உதவியது .. மகிழ்வு தந்தது.. நாமும் பிறருக்கு உதவுவோம் பலன் பெறுவோம்..

வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன்.. சுபம்..

Advertisement