Advertisement

அந்த பன்னாட்டு மீனம்பாக்கம் விமான நிலையம் நள்ளிரவு வேளையிலும் ஜெகஜோதியாகவும் பரபாப்பாக இருந்தது. வெளிநாட்டில்  இருந்து வரும் விமானத்துக்காகவும் …….வெளிநாடு போகும் விமானத்துக்காகவும் மக்கள் ஆவலுடன் காத்து இருந்தனர்.
அங்கு அழகி (தேன்விழி) தன் அன்னையை  அணைத்துக்கொண்டு  “இங்க பாரு ராதும்மா  ரொம்ப பீலிங் கூடாது…….என்னமோ நான் இப்போதான் புதுசா ஊருக்கு போற மாதிரி ஓவர்  பீலிங் …….நான்   ஆறு மாசத்துக்கு ஒரு தடவ வந்துட்டு தானே போறேன் . ஒரு வருஷத்துல ரெண்டு தடவை வந்துட்டு போய்ட்டேன்…..அங்க பாரு அந்த பக்கிங்க நீ அழுவறத பார்த்து வராத அழுகாச்சிய…….  கஷ்ட்ட பட்டு  கூட்டிட்டு வருதுங்க ” என்று தன் தோழர்கள் இருக்கும் பக்கம் கையை காட்டினாள் .
அவளின் தோழர்கள் லேசான கண்கள் கலங்க நின்று இருந்தனர்.அகிலன்…சத்யன் ….மாரிமுத்து….ப்ரித்வி. இதில அகிலன் அழகியின் நெருங்கிய நண்பன். சிறு வயது தோழன்.
விமானம் நள்ளிரவு நேரம் என்பதால் தோழிகள்   ஷாலினி, ருக்மணி இருவரையும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
  ராம்   அழகியின் அழகிய கம்பீரமான அப்பா  “ராதும்மா பாப்பா போகும் போது கண்ண கசக்காத…….இப்போ கண்ண கசக்குவ……அவ ஊருக்கு போய் சேர்ந்ததும் ….அங்க அப்படி இருக்காத……இப்படி டிரஸ் பண்ணாத……கலரிங் போடாதன்னு ஆயிரம் அட்வைஸ் மழையில அவளை  முக்கி எடுப்ப  ” என்றார் உதட்டில் நக்கல் சிரிப்பும், கண்ணில் குறும்புடனும்.
ராதிகா  தன் கணவரை கொஞ்சமாக முறைத்தவர் தன் மகளை இறுக அணைத்து ” கண்ணம்மா பத்திரம்…..போய் சேர்ந்ததும் மெசேஜ் செய்” என்றவர்…அழகியிடம் “மாப்பிளை வரேன்னு சொன்னாரா”  என்று கணவருக்கு கேட்காமல் ரகசியமாக கேட்டார்.
அழகி தன் கையில் இருந்த மோதிரத்தை லேசாக வருடி கொண்டே கண்களில் அலைப்புறுதலுடன் “தெரியலம்மா” என்றாள். ராதிகா ” கொஞ்சம் லேட்டா வருவாரா இருக்கும். நீ உள்ள போறதுக்குள்ள வந்திடுவார்.” என்று சமாதானம் செய்தார்.
மகளின் தெரியலம்மா என்ற வார்த்தையை …மகள் கிளம்புகிறாள் என்ற கவலையிலும் …….சுற்றுப்புறம் பார்த்து கொண்டு அதன் உள்ளர்த்ததை உணராமல் போனார்.
ராம் ” ராதும்மா அவளை கொஞ்சம் விட்டேன்……அவளோட பிரெண்ட்ஸ் ரொம்ப நேரமா …..அவகிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்காங்க….”என்றவர்  “பாப்பா பசங்க வெயிட் பண்றாங்க பாரு போய் பேசிட்டு வா….. உள்ள போகணும் நேரம் ஆகிடுச்சு “என்றார்.
அழகி தன் அப்பாவை இறுக அணைத்து ” அப்பா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்ப்பா” என்று மூக்கை உறிஞ்சினாள்.
ராம் அவளை அணைத்து “நானும் தான் பாப்பா ” என்று அவளின் உச்சியில் ஒரு முத்தம் வைத்து கண்  கலங்கினார். அதை பார்த்து ராதிகாவும் ……நண்பர்களும் கூட கலங்கினார்கள். ஏன் என்றால் …அழகியின் முதல் தோழன் அவளின் ராம் அப்பா தான்.
தன் தோழர்களை பார்த்து நடந்தவள்  கண்களை சுற்றும் முற்றும் அலையை விட்டாள்…..ஆனாலும் அவள் எதிர் பார்க்கும் நபர் அவள் கண்களில் படவில்லை,
நபர்களின் அருகில் வந்தவள் ” டேய்  பக்கிங்களா  போயிட்டு வரேன்டா…….அப்பப்போ வீடு பக்கம் வந்துட்டு போங்க…அண்ணாவும் இல்ல… அக்காவும் இப்போ வேற ஊருக்கு மாறி போய்ட்டா “என்று சொன்னதும்…… நண்பர்களும் அனைவரும் “லூசு …நாங்க பார்த்துகிறோம்…..நோ ஒரீஸ்”  என்று அவளை சமாதானம் செய்தனர்.
ஆமாம் அழகிக்கு ஒரு அக்கா சஞ்சனா….திருமணம் முடிந்து மும்பையில் …மாமா திலீபன் …குழந்தை அநுராகா …..மாமா வைர வியாபாரம் …பாரம்பரியமான குடும்பம். அண்ணா   அஜய் ……. அண்ணி கீர்த்தனா………..திருமணம் முடிந்து  ஆஸ்திரேலியாவில்  சிட்னியில்  ஸ்பெக் இந்தியா  IT கம்பெனியில்  சீனியர் சாப்ட்வேர் டெவெலப்ர்.
அழகி நண்பர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு…..நண்பர்கள் அனைவரும் அவளிடம் பிரியா விடை பெற்றனர்… அப்போதும் அவளின் மனம் எதிர் பார்த்த நபர்  காணாமல் லேசாக மனம் சுணங்கினாள் ….அடிக்கடி தன் செல் போனில் கண்ணை பதித்து கொண்டே இருந்தாள்…ஆனாலும் அதில் எந்த அதிர்வும் இல்லாததால் மனம் விட்டு போனது…தோழியின் அலைப்புறுதலை பார்த்து   அகிலன் மனதில் அவனின் மேல்  செம கடுப்பில் இருந்தான். தோழியின் கையை அழுத்தி கொடுத்தவன் “விடுடா ….எதோ வேலை வந்து இருக்கும் போல …அதனால் தான் வரலை போல என்று சமாதானம் செய்தான்.
அழகியின் முகம் கசங்கி ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள்.
நண்பர்கள் சென்றதும் தன் தாயிடம் வந்தவள் ” அம்மா செக்கின் டைம் ஆச்சு நான் உள்ள போறேன்” என்று தன் லக்கேஜை  எடுத்து கொண்டாள்.
ராதிகா “மாப்பிளைக்கு போன் போடு அழகிம்மா….வந்திட்டு இருக்காரோ என்னவோ ….. ட்ராபிக்ல மாட்டி இருப்பாரா இருக்கும், கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம்” என்று பதறினார்.
அழகி வேதனையுடன் தன் அப்பாவை பார்க்கவும் …..ராம் “ராதும்மா நேரம் ஆகிடுச்சு….அவ உள்ள போகட்டும் விடு” என்று  அழுத்தமாக சொல்ல…..இல்லங்க என்று தயங்கும் முன்னே அழகியின் போனுக்கு மெசேஜ் வந்த சத்தம் கேட்ட அழகி தன் போனை பார்க்க “ஹாப்பி ஜர்னி ” என்று ஒரு வரியுடன் அது முடிந்து இருந்தது.
அழகி “அம்மா அவர்தான் …எதோ  ஆக்சிடென்டம் ….ட்ராபிக் க்ளியர்  ஆக நேரம் ஆகுமாம்….மெசேஜ் அனுப்பி இருக்கார்….நான் கிளம்பறேன் மா” என்று தாயையும்,  தந்தையும் அணைத்து லேசாக கண்கள் கலங்க தன் உள்ளதை மறைத்து  சிறு புன்சிரிப்புடன் கை அசைத்து உள்ளே சென்றாள்.
சிறு ஏளனம் உதட்டில் இழையோட  நடையை எட்டி போட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினான் .

Advertisement