Advertisement

சர்வேஷின் அறையில் அன்பரசி தடதடத்த இதயத்துடன் மெத்தையில் அமர்ந்திருக்க அவள் அருகே அமர்ந்திருந்த சர்வேஷ் தன்னவளை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளது பார்வை தரையில் பதிந்திருந்தாலும் அவனது மௌனமான தாபம் நிறைந்த பார்வையை உணர்தவளின் படபடப்பு அதிகரித்தது. 
நொடிகள் நிமிஷங்கள் ஆகவும் அவள் மெல்ல பார்வையை உயர்த்தினாள். அதற்காகவே காத்திருந்தவன் கண்களில் சம்மதம் வினவினான். அவள் சிறு பயத்துடன் தலையை சம்மதமாக ஆட்டிய நொடியில் அவனது இறுகிய அணைப்பில் இருந்தாள்.
அவள் அவன் முகத்தை பார்க்க, “லவ் யூ ஸோ மச் அரசி” என்றவன் அவளது இதழ்களை சிறை செய்திருந்தான். 
முத்தத்தின் மூலமாகவே அவளது பயத்தை போக்கி இதழ் என்னும் சாவி கொண்டே அவளது வெக்கப் பூட்டை உடைத்து அவளுள் கலந்தான். இருவருக்கும் இன்பமான விடியா இரவாக அமைந்தது.
 
அடுத்த நாள் மாலை மனைவிக்கு தைரியம் சொல்லி தேற்றிய ப்ரனேஷ் மகளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டதில் ‘ஆபரேஷன் கூட ஈஸியா செய்திறலாம் போலவே’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டான். 
அடுத்து வந்த நாட்கள் சர்வேஷ் அன்பரசி ஜோடியினருக்கு முயல் வேகத்தில் நகர ப்ரனேஷ் ப்ரனிஷா ஜோடியினருக்கு ஆமை வேகத்தில் நகர்ந்தது. 
ப்ரனேஷ் ஒரு வாரம் விட்டு வார இறுதியில் திருநெல்வேலி வந்து சென்றான். வந்து செல்லும் அந்த இரண்டு நாட்களில் கிடைக்கும் சில மணி நேர தனிமையே மனைவியை மாற்ற அவனுக்கு போதுமானதாக இருந்தது. பயம் எனும் மேகத்திற்கு பின் மறைந்திருந்த அவளது உணர்ச்சிகளை மெல்ல மெல்ல தனது காதலாலும் இதழ் முத்ததினாலும் வெளி கொண்டு வந்துக் கொண்டிருந்தான். 
அமுதா பாதி நாட்கள் இங்கேயும் அங்கேயுமாக இருக்க, பேத்தியை பார்ப்பதற்காக ஆனந்தன் நடுவில் மூன்று முறை இங்கே வந்து சென்றார்.
ஒருவாறு ப்ரனிஷா தன் ஆசிரியர் கடமையை முடித்துவிட்டு மகளுடன் சென்னை கிளம்பினாள். கடைசி நேரத்தில் ஒரு அவசர அறுவை சிகிச்சை காரணமாக ப்ரனேஷால் வர முடியாமல் போக ப்ரனிஷா மகளுடன் தனியாக தான் ரயிலில் கிளம்பினாள். அவர்களை அழைத்துச் செல்ல கூட ஆனந்தனே வந்திருந்தார். தன்னவனை காண வேண்டுமென்ற ஆவல் நெஞ்சம் முழுக்க இருந்தாலும் கணவனின் உன்னதமான உயிர் காக்கும் பணியை புரிந்துக் கொண்டிருந்தவள் அவன் வர முடியாததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் குழந்தையோ கோபத்துடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
வண்டியில் வீட்டிற்கு செல்லும் வழியில் ஆனந்தன், “அபி குட்டி ஏன் அமைதியா இருக்காங்க?”
“நான் தோபமா(கோபமா) இருத்தேன்(இருக்கேன்)”
“அச்சோ! தாத்தா மேல் ஏன் கோபம்?”
“தாத்தா மேல் இல்லை அப்பா மேல்”
“ஓ! அப்போ தாத்தா கூட பேசலாமே!” என்று ஆரம்பித்து ஐந்து நிமிடத்திற்குள் குழந்தையை இயல்பிற்கு கொண்டு வந்திருந்தார். 
அவர்கள் வண்டி உள்ளே நுழையவும் பின்னால் ப்ரனேஷின் வண்டி உள்ளே நுழைந்தது. அவன் கீழே இறங்கும் முன் “அப்பா” என்று கத்திக் கொண்டு அபிசாரா அவனிடம் ஓடினாள்.
விரிந்த புன்னகையுடன், “அம்மு குட்டி” என்றபடி மகளை தூக்கி சுற்றியவன், “சாரி டா குட்டிமா.. ஒரு எமர்ஜென்சி ஆபரேஷன்.. அதான் அப்பாவால் வர முடியலை”
குழந்தை புன்னகையுடன், “இத்’ஸ் ஓகே தாதி.. தாத்தா சொன்னாங்த” என்றாள். 
தந்தையை பார்த்து புன்னகைத்தவனின் பார்வை மனைவி மேல் விழுந்தது. இருவரும் கண்களில் காதலுடன் பேசிக்கொள்ள,
ஆனந்தன், “அபி குட்டி வாங்க.. நாம பாட்டியை போய் பார்க்கலாம்” என்றபடி அவர் பேத்தியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்.
ப்ரனேஷ் பார்வையை விலக்காமல் நிற்க அவள் அதிகரித்த இதயத் துடிப்புடன் நின்றிருந்தாள். இப்பொழுது அவளிடம் பயம் நீங்கியிருந்தது. முழுமையாக நீங்கவில்லை என்றாலும் தன்னவன் அதை போக்கிவிடுவான் என்ற நம்பிக்கை நூறு சதவிதம் இருந்தது.
சில நொடிகள் மௌனத்தில் கழிய அவன் எதுவும் பேசாமல் உள்ளே சென்றான். ‘என்னாச்சு?’ என்ற கேள்வியுடன் அவனை பின் தொடர்ந்து தங்கள் அறைக்குள் சென்ற நொடி ப்ரனேஷின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
ஒரு நொடி அதிர்ந்தவள் அடுத்த நொடி மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
சில நொடிகள் கழித்து அணைப்பை சிறிது தளர்த்தியவன் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான். முதல் முறையாக ஒரு வன்மையான இதழ் ஒற்றல் அவனிடமிருந்து வந்தது. முதலில் சிறிது பயந்தாலும் தன்னவனின் காதலும் பொறுமையும் புரியவும் அவனுடன் இசைந்தாள்.
அவள் மூச்சுக் காற்றுக்கு திணறும் பொழுது தான் இதழை பிரித்தவன், “லவ் யூ ஸோ மச் இனியா பாபி அண்ட் மிஸ்டு யூ அ லாட்.. இனி என்னை விட்டுட்டு எங்கேயும் போகதே” என்றான்.
“நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றவள் முதல் முறையாக தன் தயக்கத்தை மீறி அவன் இதழில் பட்டும் படாமல் இதழ் ஒற்றி, “மீ டூ ஐ லவ் யூ ஸோ மச்” என்றாள்.
இன்ப அதிர்ச்சியில் விசில் அடித்தவன், “கலக்குறியே ஸ்வீட்டி” என்றதும் அவள் வெக்கத்தில் முகத்தை அவன் நெஞ்சில் மறைத்தாள்.
அவன் உல்லாசமாக சிரித்தபடி அவள் முகத்தை நிமிர்த்தி, “ஆனால் டீச்சரம்மா பாடத்தை ஒழுங்கா படிக்கலையே!” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“நீங்க ஒழுங்கா சொல்லிக் கொடுக்கலை”
“சொல்லி கொடுத்திட்டா போச்சு” என்றவன் மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான். ஆனால் இந்த முறை மென்மையான நிதானமான  ரசனையுடன் கூடிய இதழ் முத்தமாக இருந்தது. 
முத்தத்தை முடித்து அவன் அவள் முகம் பார்த்தபொழுது அவள் கண்களை மூடியபடி அவனது முத்தத்தில் கரைந்தபடி நின்றிருந்தாள். மென்னகையுடன் மீண்டும் அவள் இதழை தீண்டியவின் கைகள் சிறிது எல்லை மீறத் தொடங்கியிருந்தது. முன்பு போல் அல்லாமல் இப்பொழுது அவள் மனம் அவனுள் கரைந்துவிடவே விரும்பியது ஆனால் மூடிய கதவிற்கு பின் “அம்மா” என்று கேட்ட மகளின் குரலில் இருவரும் சட்டென்று பிரிந்தனர்.
அவள் அவன் முகம் பார்க்கும் துணிவின்றி வெக்கத்துடன் தரையை பார்க்க அவன் புன்னகையுடன் அவள் கன்னத்தை தட்டி, “நைட் கவனிச்சிக்கிறேன்.. அம்முவை பார்.. நான் குளிச்சிட்டு வந்திருறேன்” என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டே குளியலறைக்குள் சென்றான்.
அதன் பிறகு மின்னல் வேகத்தில் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றவன் அடுத்து மனைவியை கைபேசியில் அழைத்தபோது மணி மூன்று.
அழைப்பை எடுத்தவள், “சாப்டாச்சா?”
“இப்போ தான் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறேன்”
“உங்களிடம் நான் என்ன சொல்லியிருக்கிறேன்” என்று அவள் செல்ல கோபத்துடன் வினவ,
அவன், “இன்னைக்கு சேர்ந்து சாப்பிடுவோம்.. இப்பவே மணி மூணு”
“அதெல்லாம்………….”
“நான் லைனில் இருக்கிறேன்.. பேசிட்டே சாப்பிடலாம்” என்று உறுதியுடன் கூறவும் அவள், “சரி” என்றபடி சாப்பிட அமர்ந்தாள்.
இருவரும் ஏதேதோ பேசியபடி உண்டு முடித்து அழைப்பை துண்டித்தனர்.
இரவு ஒன்பதரைக்கு அவன் வீட்டிற்கு வந்தபொழுது குழந்தை தூங்கியிருந்தாள். அவன் குளித்துவிட்டு வந்ததும் இருவரும் சேர்ந்தமர்ந்து உண்டனர். அவன் உணவை எடுத்துக் கொண்டதை விட மனைவியை பருகியது தான் அதிகம். அவனது பார்வை வீச்சை தாழாமல் அவள் இன்ப அவஸ்த்தையுடன் உணவை கொறித்துக் கொண்டிருந்தாள்.
ப்ரனேஷிடம் மருத்துவமனை சம்பந்தமாக பேச வந்த ஆனந்தன் மகனின் பார்வையை கண்டுக் கொண்டு வந்த சுவடின்றி சென்றுவிட்டார். நேராக மனைவியிடம் சென்றவர், “இன்னைக்கு அபி குட்டி நம்மளுடன் தூங்கட்டும்”
“அவ தான் தூங்கிட்டாளே!”
“பரவாயில்லை அவளை தூக்கிட்டு வா”
“ஏன்?” என்று யோசனையுடன் அவர் பார்க்க,
ஆனந்தன் புன்னகையுடன், “இன்றைக்கு தான் நம் மகன் வாழ்க்கையை துவங்க போகிறான்” என்றதும்,
அமுதா மகிழ்ச்சியுடன், “இப்பவே போய் அபி குட்டியை தூக்கிட்டு வரேன்” என்றவர் மகன் அறையை நோக்கி விரைந்துச் சென்றார்.
அபிசாராவை தங்கள் அறையில் படுக்க வைத்துவிட்டு அவர் உணவறைக்கு சென்ற போது ப்ரனிஷா பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்க, அங்கே அமர்ந்திருந்த ப்ரனேஷின் பார்வை அவளை தொடர்ந்துக் கொண்டிருந்தது.
அமுதா, “நான் ஒதுக்கி வச்சிக்கிறேன்.. நீ போய் படு” என்றார்.
அன்னையின் குரலில் சுய உணர்வு பெற்று இருக்கையில் இருந்து எழுந்தான்.
அமுதா  வேலையை செய்தபடி, “இன்னைக்கு அபிக் குட்டி எங்களுடன் தூங்கட்டும்.. அவளை எங்கள் ரூமில் படுக்க வைத்துவிட்டேன்” என்றார்.
ப்ரனிஷாவின் பார்வை சட்டென்று கணவனை பார்க்க அவனோ அன்னையிடம், “எதுக்கு மா! அம்மு எங்களுடனே தூங்கட்டும்” என்றான்.
அமுதா, “ஒரு நாள் எங்களுடன் தான் தூங்கட்டுமே டா” என்றார்.
அதே நேரத்தில் அங்கே வந்த ஆனந்தன் புன்னகையுடன் அவன் தோளை தட்டிக் கொடுத்து, “தூங்க போ” என்றார்.
தந்தையின் சிரிப்பிலேயே அவர் தன்னை கண்டுக் கொண்டார் என்பதை புரிந்துக் கொண்டவன் சிறு வெக்கத்துடன் அவரைப் பார்த்தான். அவர் விரிந்த புன்னகையுடன், “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி சென்றார்.
அவன் தன்னவளை பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கண்ணசைவில் அவளை அழைத்துவிட்டு செல்ல அவள் சங்கோஜத்துடன் அவனை தொடர்ந்தாள்.
அறை உள்ளே சென்றதும் மெத்தையில் அமர்ந்திருந்தவனை பார்த்து, “எல்லாம் உங்களால் தான்.. உங்க பார்வையில் தான் அத்தையும் மாமாவும்…………………”
அவள் அருகே சென்று தோளை சுற்றி கை போட்டபடி, “ரிலாக்ஸ் பேபி.. இதையெல்லாம் அவர்கள் கடந்து தானே வந்திருப்பார்கள்..” என்றான்.
“இருந்தாலும்.. நான் எப்படி அவர்கள் முகத்தில் முழிப்பேன்” என்று சிணுங்க,
“அதை நாளைக்கு பார்த்துக்கொள்” என்றவனது கை அவளது தோளில் இருந்து இடைக்கு சென்று அழுத்தம் கொடுக்கவும் அவள் பேச்சு நின்றுப் போனது. 
அவன் கண்ணில் காதலுடன் புருவம் உயர்த்தி சம்மதம் வினவ, அவள் வெக்கத்துடன் பார்வையை தாழ்த்தினாள்.
ஒற்றை விரலால் அவளது முகத்தை நிமிர்த்தியவன், “உனக்கு விருப்பம் இல்லை என்றால் நான் காத்திருக்க தயார் பேபி..”
அவள் தனது சம்மதத்தை தெரிவிக்கும் விதமாக கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்தாள்.
அவன், “எனக்கு உன் முழு சம்மதம் தேவை பேபி” என்று சிறு தவிப்புடன் அவன் கூற,
அவனது தயக்கத்தை போக்கும் விதமாக அவனது இதழில் மென்மையாக இதழ் பதித்தவள் தலையை சரித்து புன்னகையுடன் புருவம் உயர்த்தினாள்.
அவளது முத்தத்திலும் ‘எப்படி!’ என்று அவள் கேட்ட விதத்திலும் தன்னை தொலைத்தவன், அவளது இதழை ருசிக்க துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கி, “எனக்காக பார்க்காதே பேபி” என்று இறங்கிய குரலில் கூறினான்.
அவள் புன்னகையுடன், “எனக்காகவும் தான்.. பயமோ விலகும் என்னமோ இன்றி என்னை உங்களுள் கரைய வைப்பது உங்கள் திறமையில் இருக்கிறது” என்று கூறி அவள் கண் சிமிட்டினாள்.
அடுத்த நொடி அவளை கைகளில் ஏந்தியவன் மென்மையாக படுக்கையில் அவளை கிடத்தி அவள் அருகில் படுத்தான்.
என்னதான் அவனிடம் தைரியமாக பேசினாலும் அவளுள் சிறு பயம் இருக்கத் தான் செய்தது. அதை உணர்ந்தவன் முதலில் ஒற்றை விரலால் அவள் முகத்தை அளந்தான். அவள் மெல்ல கண்களை மூடவும் இதழ் கொண்டு மெல்ல அவளை தீண்டத் தொடங்கினான்.
அவனது இதழ்களும் கைகளும் செய்த மாயாஜாலத்தில் அவளது உணர்ச்சிகள் தூண்டப்பட்டு பயத்தை மீறி அவனுள் கரைத்துவிட துடித்தாள். அதை அவள் தனது அணைப்பின் மூலம் அவனுக்கு புரியவைக்க, அவன் மகிழ்ச்சியுடன் அவளுடன் கலந்தான்.
கூடலுக்கு பின் இருவரின் முகத்திலும் நிறைவான புன்னகை பூத்திருந்தது.
தனது ஆழாமான காதலின் மூலம் பெண்ணவளின் இதழை திறக்க செய்தவன் அவள் வாழ்க்கையில் சந்தோஷக் கதவை திறந்துவிட்டான். இனி இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும். 
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ சுபம் ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥  ♥

Advertisement