Advertisement

  இதழ் 30
வரவேற்ப்பு விழாவிற்கு அவர்கள் மருத்துவமனையில் வேலை செய்பவர்களையும் ஆனந்தனின் நட்பு வட்டாரத்தையும் ப்ரனேஷின் நட்பு வட்டாரத்தையும் அழைத்திருந்தனர். கூடவே சில மிக நெருங்கிய உறவுகளையும் அழைத்திருந்தனர். கீதா மற்றும் விமல் குடும்பத்தினர் வந்திருந்தனர். 
ப்ரனிஷா லண்டனில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்ற போது ப்ரனேஷும் ப்ரனிஷாவும் லண்டனில் காதல் திருமணம் செய்துக் கொண்டதாகவும் சில மாதங்களில் பிரிந்ததாகவும் இப்பொழுது சேர்ந்ததாகவும் அனைவரிடமும் கூறப்பட்டது. அபிசாரா தன் பேச்சில் அனைவரையும் கவர்ந்து பேச்சை திசை திருப்பிக் கொண்டிருந்தாள். மேலும் வம்பு பேசுபவர்கள் யாரும் விழாவிற்கு அழைக்கப் படாததால் பிரச்சனையின்றி சென்றது.
மருத்துவமனையில் வேலை செய்யும் சிலர் (முக்கியமாக பள்ளி முகாமிற்கு சென்றவர்கள்) அவந்திகாவிடம், ‘டாக்டர் உங்கள் மாமா னு சொல்லவே இல்லை!’, ‘உங்க அக்கா தான் டாகடர் சார் வைப் னு சொல்லவே இல்லை’ போன்ற கேள்விகளை கேட்க அவள் சிரிப்பை பதிலாக தந்தாள்.
அதையும் மீறி கேட்டவர்களிடம், “இப்பொழுதும் ஹாஸ்பிடல் வெளியே மட்டுமே அவர் எனக்கு மாமா” என்றதோடு முடித்துக் கொண்டாள். 
விழா ஆரம்பிக்கும் பொழுது வந்த வக்கீல் (ப்ரனிஷா தாய் மாமனின் நண்பர்) அவள் தலை மீது கை வைத்து, “நல்லா இரு மா” என்று ஆசிர்வதித்தவர், “இப்போ தான் சதாவின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்” என்று உண்மையான மகிழ்ச்சியுடன் கூறி சென்றார். 
மார்க் மற்றும் ஜஸ்மின்(ப்ரனேஷின் லண்டன் நண்பர்கள்) கைபேசியில் அழைத்து இருவருக்கும் வாழ்த்துக் கூறினார்கள்.
ப்ரனேஷின் பார்வை வந்தவர்களை கவனித்ததை விட விழாவிற்காக பிரத்யேக அலங்காரத்தில் தேவதையாக ஜொலித்த தன்னவளின் மீதே இருந்தது.
அன்பரசி கூட குளிர்பானம் கொடுப்பது போல் மேடை ஏறி, “மாம்ஸ் ரொம்ப முத்தி போச்சு போலவே! இப்படியா பப்ளிக்கா விடாம சைட் அடிப்பீங்க!” என்று கிண்டலடித்தாள்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “எனக்கு புல் ரைட்ஸ் இருக்கிறது”
“அதுக்காக! கொஞ்சம் வந்தவங்களையும் பாருங்க”
“அதற்கு தானே நீயும் சர்வேஷும் இருக்கிறீங்க” என்றவன், “நானாவது வந்தவங்களை கொஞ்சம் பார்க்கிறேன்.. ஆனா சர்வாவின் பார்வை உன்னை விட்டு இம்மிக் கூட நகரவில்லை” என்றதும் அவள் அசடு வழிந்துவிட்டு கீழே சென்றுவிட்டாள்.
ப்ரனேஷ் தன்னவளை பார்த்து பிறர் அறியாமல் கண்ணடிக்க,
அவள் படபடத்த இதயத்தை மறைத்து, “கொஞ்சமாவது அடங்குறீங்களா?” 
“அடக்க தான் வெயிட்ங்” என்று இரு பொருள் பட கூற அவள் சிறு அதிர்வுடன், “என்ன?”
அவன் புன்னகையுடன், “நீ அடக்க தான் வெயிட்ங் னு சொன்னேன்” என்று கூறி சமாளித்தான்.
கீழே சென்று அமர்ந்த அன்பரசி அருகில் அமர்ந்த சர்வேஷ் அவள் பக்கம் சரிந்து  “அப்படியே கொல்றடி” என்று கிரக்கத்துடன் அவள் காதில் கூறினான்.
அவள் வெக்கத்துடன், “ச்ச்.. சும்மா இருங்க”
“இப்போ இன்னும் அழகா இருக்க” என்றவன் மெல்லியக் குரலில், 
“அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே
அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே..” என்று பாடினான்.   
அவன் கண்ணில் தெரிந்த தாபம் அவளுள் ஏதோ செய்ய பார்வையை தாழ்த்தியவள், “ப்ளீஸ்” என்றாள்.
“இன்னும் ஒரு வாரம் தான் உன் ப்ளீஸ் செல்லுபடி ஆகும்” என்றவனின் பார்வை அவள் இதழில் பதியவும் அவள், “அத்தை கூப்பிடுறாங்க” என்று கூறி தற்காலிகமாக அவனிடமிருந்து தப்பித்து ஓடினான்.
இப்படி சில பல கிண்டல்களுக்கும் கொஞ்சல்களுக்கும் நடுவே விழா இனிதே நடந்து முடிந்தது.
வந்தவர்கள் அனைவரும் கிளம்பிய பிறகு உடையை மாற்ற சென்ற ப்ரனிஷா பின்னால் சென்ற ப்ரனேஷ் அறை உள்ளே சென்றதும் கதவை அடைத்தான்.
“என்..ன பண்..றீங்..க..” என்று அவள் வார்த்தைகள் தந்தியடிக்க கேட்டாள்.
அவனோ அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் நிதானமாக அவளை நெருங்கினான். 
அவளோ பயம் கலந்த இன்ப அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பயம் கொண்ட அவளது ஒரு மனம் ‘நகர்ந்தோ போ’ என்று கூற, காதல் கொண்ட மனமோ ‘உன்னவனை ஏமாற்றாதே’ என்றது.
அவளை நெருங்கியிருந்தவன், “பயப்படாதே ஸ்வீட்டி.. ஒரே ஒரு கிஸ் மட்டும் ப்ளீஸ்” என்று காதலுடனும் தாபத்துடனும் கேட்டான்.
அவளது மௌனத்தை சம்மதமாக ஏற்றுக் கொண்டவனின் வலது கை அவள் இடையை அணைக்க அவனது இதழ்கள் அவளது இதழ்களை மென்மையாக அணைத்தது.
முதலில் நடுங்கியவள் பின் அவனது முத்தத்தில் கரையத் தொடங்கினாள். தன்னவளின் ஒத்துழைப்பில் தன்னை தொலைத்தவனின் உதடுகள் மெல்ல கீழே இறங்க அவளது கழுத்திற்கு அடியில் முகத்தை புதைத்தான். அவனது கைகள் சிறிது எல்லை மீற, அவள் மயக்கத்தை மீறி தன்னையறியாமல் அவனை தள்ளி விட்டிருந்தாள்.  
அவன் சிறு பதறலுடன், “சாரி பேபி.. சாரி.. நான்.. ச்ச்.. இனி இப்படி நடக்காது.. சாரி பேபி” என்று கலக்கத்துடனும் சிறு குற்ற உணர்ச்சியுடனும் வருத்ததுடனும் கெஞ்சினான்.
அவனது கெஞ்சல்களில் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்தவள் அவனது முகத்தில் தெரிந்த கலவையான உணர்ச்சிகளை கண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கண்களை மூடியவள் அவன் வாயை கைக் கொண்டு மூடினாள்.
அரை நொடி சிலையாய் நின்றவன் அடுத்த நொடி நிம்மதியுடன் அவளது இடையை மென்மையாக அணைத்து அவள் தலையில் கன்னம் பதித்தான்.
சில நொடிகளில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “சாரி………………” என்று ஆரம்பிக்க இப்பொழுது அவள் வாயை மூடுவது அவன் முறையானது.
அவன் புன்னகையுடன், “காலம் நீண்டிருக்கிறது.. நான் தான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன்.. விடு பேபி” என்றான்.
அவள் சிறு கலக்கத்துடன் பார்க்கவும் அவன், “கலக்கம் கொள்ள அவசியமே இல்லை டா.. நிச்சயம் அதுவா எல்லாம் சரியாகும்.. உன்னிடம் மாற்றம் வந்திருக்கிறது..  இப்பொழுது என் தொடுகையை இயல்பாக ஏற்றுக் கொள்கிறாய்.. இப்போ முதலில் கூட ரசிக்கத் தான் செய்தாய்.. என் கை கொஞ்சம் எல்லை மீறவும் தான் உன்னை அறியாமல் தள்ளிவிட்ட.. கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகும் டா”
“ஹ்ம்ம்”
அவள் முகம் முழுமையாக தெளியாததை கண்டவன், “இனி தனிமையில் இருக்கும் போது (அவள் உதட்டை ஒற்றை விரலால் வருடியபடி) இதை பற்றி நினைத்துக்கொள் சீக்கிரம் சரியாகிரும்” என்றவன் புன்னகையுடன் கண்ணடித்தான்.
சட்டென்று பூத்த வெக்கத்துடன் அவள் பார்வையை தாழ்த்தினாள். 
அவளது இரு கன்னகளையும் பற்றி நெற்றியில் இதழ் பதித்தவன் மென்னகையுடன், “டிரெஸ் மாத்திட்டு வா” என்று கூறி வெளியேறினான்.
அன்று இரவு உறங்காமல் வெகுவாக யோசித்தவள் இறுதியில் ஒரு முடிவிற்கு வந்திருந்த பிறகு சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.
அடுத்த நாள் காலையில் அவன் கண் விழித்து, “குட் மார்னிங் இனியா பேபி” என்றதும்,
புன்னகையுடன், “குட் மார்னிங்” என்றவள் அவன் காலை கடன்களை முடிந்து விட்டு காபியை அருந்தியதும் கோப்பையை அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு மெத்தையில் அவன் அருகே அமர்ந்தாள்.   
அவன் கனிவுடன், “என்ன டா?”
அவன் தோளில் சாய்ந்து முகத்தை நிமிர்த்தி, “நான் கௌன்சிலிங் போகட்டுமா?”
அவள் தோளை சுற்றி கை போட்டவன், “நேற்று நடந்ததையே நினைத்து மனசை போட்டு குழப்பிக்காதே டா.. நடக்க வேண்டியது அதுவா நடக்கும்” 
“ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?”
“உன் கடந்த காலம் நம்முள் புதைக்கப் பட்டதாகவே இருக்கட்டும் டா”
“மாமாவுக்கு நம்பிக்கையானவங்க யாரிடமாவது போறேனே!” என்று அவள் கெஞ்சலுடனும் சிறு தவிப்புடனும் கேட்டாள்.
“உன் பசங்களை கரையேத்திட்டு நீ சென்னை வந்த பிறகு பார்த்துக்கலாம்”
அவள் அமைதியாக இருக்கவும், “நாலு மாசம் தானே டா.. அதற்குள் நானும் அப்பாவிடம் பேசுறேன்” என்றவன் புன்னகையுடன் அவளது கன்னம் தட்டி, “அதற்குள் உன் மனம் அதுவாவே மாறினாலும் மாறலாம்.. பார்க்கலாம்”
“ஹ்ம்ம்”
“இப்போ கொஞ்ச நேரம் தூங்குறியா?”
அவள் கேள்வியாக பார்க்கவும் அவன், “இதையே யோசிச்சிட்டு நைட் தூங்கவே இல்லை தானே!”
அவள் புன்னகையுடன், “இப்போ உங்க மகள் எழுந்திடுவா” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, “துத்(குட்) மார்னிங் தாதி(டாடி).. துத் மார்னிங் மம்மி” என்றபடி பின்னால் இருந்து அவர்கள் கழுத்தை கட்டிக் கொண்டாள் அவர்களது செல்ல மகள்.
கையை பின்னால் கொண்டு சென்று மகளை மடிக்கு கொண்டு வந்தவன் சிரிப்புடன், “வெரி குட் மார்னிங் அம்மு குட்டி” என்றான்.
குழந்தை தந்தை மடியில் சுகமாக படுத்து அவனை கட்டிக் கொண்டு அன்னையை பார்த்து, “அம்மா நீ” என்றாள்.
அவளும் மகிழ்ச்சியுடன், “குட் மார்னிங் அபி குட்டி” என்றாள்.
அதன் பிறகு அன்றைய நாள் எப்பொழுதும் போல் நகர்ந்தது.
இரண்டு நாட்கள் கழித்து மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு திருநெல்வேலி கிளம்பினான். சாரதாவின் உத்தரவில் அவள் தங்கியிருந்த வீட்டை காலி செய்து அடுத்த நான்கு மாதங்களும் அவர் வீட்டில் தங்குவதாக முடிவானது. அதனால் அபிசாராவிற்கு தான் மகிழ்ச்சி. 
ப்ரனிஷா பள்ளியில் சேர்ந்த அன்று ப்ரனேஷும் அவளுடன் பள்ளிக்கு சென்றான். சர்வேஷின் அனுமதியுடன் அவளுடன் அவள் பாடம் நடத்தும் பன்னிரெண்டும் வகுப்பிற்கு சென்றான்.
மாணவர்கள் ‘என்ன’ என்பது போல் பார்த்தனர்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “குட் மார்னிங் பிரெண்ட்ஸ்.. இப்போ நான் எதற்கு இங்கே வந்திருக்கிறேன் னு யோசிக்கிறீங்களா? உங்களிடம் ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்” என்றவன் மனைவி பக்கம் கையை காட்டி, “நான் உங்கள் ப்ரனிஷா மேடமின் கணவர் தான்” என்றதும் சில மாணவர்கள் “ஓ” என்று மகிழ்ச்சியுடன் கத்தினர்.
அவன் சிரிப்புடன் ஸ்வேதாவை பார்த்து, “இப்பொழுது புரியுதா! அன்னைக்கே உங்கள் மேம் ஏன் தயங்காமல் எனக்கு சாக்லேட் கொடுக்க சொன்னாங்க னு!” என்றான்.  
அந்த மாணவி ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் புரிந்தது என்பது போல் தலையை ஆட்டினாள். 
அந்த மாணவி கலக்கத்தில் இருந்தாள். அன்று சுகுணா விசாரித்ததை பற்றி அவள் யாரிடமும் சொல்லவில்லை ஆனால் அவர் மற்ற ஆசிரியர்கள் முன் விசாரித்த தோரணையும், அதனை தொடர்ந்து ப்ரனிஷா பள்ளிக்கு வரவில்லை என்றதும் தன்னால் தனக்கு பிடித்த ஆசிரியருக்கு ஏதும் கெட்டப் பெயர் வந்து விட்டதோ! அதனால் தான் அவர் வரவில்லையோ என்று பெரிதும் கலங்கினாள். அடுத்த மூன்று நாட்களில் சுகுணா வேலையை விட்டு தூக்கப்பட்டார் என்பதையும் ப்ரனிஷா பத்து நாட்கள் விடுமுறையில் இருக்கிறாள் என்பதையும் அறிந்த பிறகு நிம்மதியடைந்தாலும் அன்றைய சம்பவம் அவள் மனதை உறுத்திக் கொண்டு தான் இருந்தது. 
ப்ரனேஷ், “எங்களுக்குள் சின்ன பிரச்சனை இருந்தது.. தப்பு என் மேல்………….”
ப்ரனிஷா, “அதெல்லாம் இல்லை.. நான் தான் கோபப்பட்டு இங்கே வந்துட்டேன்..” என்று இடை புகுந்தாள்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “உங்க மேடம் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசுறாங்க..” என்றவன் தன்னவளின் முறைப்பில், “சரி அதை விடுங்க.. இப்போ நாங்க சேர்ந்துட்டோம்.. அவ்ளோ தான்..” என்றதும்
குறும்புக்கார மாணவன் ஒருவன், “மேடம் கிட்ட ரொம்ப பயமா சார்?” என்றான்.
ப்ரனேஷ் வாய்விட்டு சிரித்துவிட்டு, “ஆமா! ரொம்ப பயம்” என்றான்.
அதற்கும் அவள் முறைக்க, மற்றொரு மாணவன், “உங்க சிரிப்பை பார்த்தால் அப்படி தெரியலையே!”
ப்ரனேஷ் விரிந்த புன்னகையுடன், “பயத்தை விட அன்பு அதிகம்” என்றுவிட்டு, “சரி இப்போ என்ன உதவி னு சொல்றேன்.. உங்க மேடம் உங்களுக்கு பாடத்தை முடித்துவிட்டு தான் என்னுடன் சென்னை வருவேன் னு சொல்லிட்டாங்க” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூற மாணவர்கள் சிரித்தனர்.
ஒரு சில மாணவர்கள், “ஹே!” என்று கத்த, ஒரு சிலர், “தேங்க்ஸ் மேம்” என்றனர்.
ப்ரனேஷ், “நான் கேட்கும் உதவி என்னவென்றால் நீங்க எல்லோரும் நன்றாக படித்து உங்கள் மேடமை சந்தோஷமா சென்னை அனுப்பி வைங்க.. என்ன செய்வீங்களா?” என்று வினவியதும்,
“எஸ் சார்” என்று சத்தமாக ஒருமித்த குரலில் கூறினர்.
“தன்க் யூ பிரெண்ட்ஸ்.. பை” என்று கூறி விடை பெற்றான்.
அன்று சுகுணா அந்த மாணவியிடம் விசாரணை செய்ததின் விளைவாக மாணவர்கள் இடையே தவறான பேச்சு எதுவும் எழுந்துவிட கூடாதே என்ற எண்ணத்திலும், தன்னவளின் மதிப்பு இறங்கிவிடக் கூடாதே என்பதற்காகவும் உதவி என்ற பெயரில் அவன் அவளது கணவன் என்ற செய்தியை கூறியிருந்தான்.
அன்று மாலை அபிசாராவை சமாதானம் செய்ய போராடியவன் இறுதியில் இன்னும் மூன்று நாட்களின் சர்வேஷ் அன்பரசியின் திருமணத்திற்கு வருவதாக கூறி சமாதானம் செய்துவிட்டு சென்னை கிளம்பினான்.
சர்வேஷ் அன்பரசி கல்யாணம் விமர்சையாக அழகாக நடந்து முடிந்தது. சர்வேஷின் பார்வை தன்னவளை விட்டு சிறிதும் நகரவில்லை. சில உறவினர்களின் கிண்டலை அவன் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. அன்பரசி தான் வெக்கத்திலும் சங்கோஜத்திலும் நெளிந்தாள். அதுவும் திருமண விளையாட்டுக்களில் பிறர் அறியாமல் அவன் செய்த சில்மிஷங்களில் அவனை முறைக்க முடியாமலும் தன் உணர்ச்சிகளை மறைக்கவும் அவள் பெரிதும் தவித்துத் தான் போனாள்.
ப்ரனேஷ் தன் தேவதையின் அழகை பருகினாலும் அன்று போல் அல்லாமல் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருந்தான். 
அன்று இரவு மகள் உறங்கிய பிறகு ப்ரனிஷா அமைதியாக அவன் நெஞ்சில் சாய்த்தபடி படுத்துக் கொள்ள, அவன் மென்னகையுடன் வலது கையால் அவளை மென்மையாக அணைத்தபடி அவள் தோளை தட்டிக் கொடுத்தான். அந்த காமம் இல்லா நெருக்கம் இருவருக்குமே நிம்மதியான தூக்கத்தை கொடுத்தது. 

Advertisement