Advertisement

  இதழ் 29
சென்னையில் ப்ரனேஷ் வீட்டு தோட்டத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்ட மேடையில் இதழில் புன்னகைப் பூவை சூடியபடி ப்ரனேஷும் ப்ரனிஷாவும் நின்றிருக்க அவர்கள் நடுவே அவர்களின் குட்டி தேவதை அபிசாரா நின்றிருந்தாள்.
ஆம் அது ப்ரனேஷ் தன் மனைவியையும் மகளையும் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்திருந்த சிறிய வரவேற்பு விழா.
ப்ரனிஷா தன் இதழ் திறந்து சம்மதத்தை சொன்ன அன்று இரவே அவளையும் மகளையும் அன்னையுடன் அழைத்துக்கொண்டு சென்னை கிளம்பி விட்டான். ப்ரனிஷா தன் மாணவர்களின் படிப்பை நடுவில் விட மனமில்லாமல் இந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு சென்னை வருவதாக கூற, ப்ரனேஷும் இந்த இடைவெளி அவள் மனம் மாற உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் சரி என்றிருந்தான். அதனால் அவள் பள்ளிக்கு பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்து இருந்தாள். 
அவர்கள் சென்னை வந்த அடுத்த நாளே வடபழனி முருகன் கோவிலில் எளிமையான முறையில் ப்ரனேஷ் ப்ரனிஷாவின் திருமணம் நடந்தது. 
ப்ரனேஷ் விரிந்த புன்னகையுடன், “ஐ லவ் யூ இனியா பேபி” என்று கூறி தன்னவளின் வெக்கப் புன்னகையை ரசித்தபடி அவளது கழுத்தில் தாலி கட்டினான். 
திருமணத்திற்கு சர்வேஷ், அன்பரசி, சாரதா, அவந்திகா, கீதா மற்றும் விமல் வந்திருந்தனர். ப்ரனேஷ் தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் விமல் அபிசாராவை பனிப்பாகு(ஐஸ்-கிரீம்) வாங்கி தருவதாக கூறி வெளியே அழைத்துச் சென்றான். குழந்தையிடம் கோவிலுக்கு செல்வதாக மட்டுமே சொல்லியிருந்தனர். இப்பொழுது புரியவில்லை என்றாலும் விவரம் தெரிந்த பின் புரிந்துக் கொண்டு கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக ப்ரனேஷ் செய்த ஏற்பாடு இது. 
காலை உணவை முடித்த பிறகு அவந்திகா மருத்துவமனைக்கு கிளம்பிவிட, அமுதாவும் சாரதாவும் குழந்தையுடன் வீட்டிற்கு செல்ல மற்றவர்கள் திருமண பதிவு செய்யும் அலுவகத்திற்கு சென்றனர். 
அலுவலகதிற்கு ப்ரனேஷும் ப்ரனிஷாவும் தனியே ப்ரனேஷ் காரில் செல்ல, மற்றவர்கள் விமல் வண்டியில் சென்றனர்.
ப்ரனேஷ் தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியை ஓரப்பார்வை பார்த்தபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். அவளோ அதை உணராமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளது மனமோ ஒருநிலையில் இல்லாமல் முதல் திருமணத்திற்கும் இன்றைய திருமணத்திற்கும் நடுவில் அல்லாடியது. அதற்கு காரணம் இதே தேதியில் தான் அவளது முதல் திருமணமும் நடந்திருந்தது.
போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் சாலை ஓரமாக வண்டியை நிறுத்திய ப்ரனேஷ், “இனியா” என்று அழைத்தான்.
திடுக்கிட்டு திரும்பியவள் அப்பொழுது தான் வண்டி நின்றதை கவனித்தாள்.
அவன், “என்ன டா?”
அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டி அவனுக்காக புன்னகைத்தாள்.
அவளது கையை தன் கைக்குள் அடக்கியவன், “உன் மனதின் அலைபுறுதலுக்கான காரணம் எனக்கு தெரியும்.. நான் வேணும் னு தான் இன்று நம் திருமணத்தை நடத்தினேன்” என்றதும் அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
அவள் அவனுக்கு தெரியாது என்று நினைத்த  விஷயம் அவனுக்கு தெரிந்திருப்பதில் தான் இந்த அதிர்ச்சி.
அவன், “இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா நாளடைவில் உனக்கு இந்த தினத்தில் நம் திருமணம் மட்டுமே நினைவில் இருக்கும்..” என்றவன் புன்னகையுடன், “எப்பொழுதும் நான் மட்டுமே உன் கணவன்” என்று கூறி அவள் கையில் மென்மையாக இதழ் பதித்தான்.
அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.
அவன் அதை துடைத்தபடி, “நோ பேபி.. இனி உன் கண்ணில் கண்ணீர் வரக் கூடாது.. அதுவும் இன்றைக்கு கட்டாயம் வரவே கூடாது” என்றான்.
அவள் மெல்லிய புன்னகையுடன், “இது வருத்தத்தில் வருவது இல்லை.. சந்தோசம் நிம்மதி நெகிழ்ச்சி கலந்த கண்ணீர்” என்றாள்.
“இவ்வளவும் சொன்ன நீ காதலை விட்டுட்ட!!”
அவள் விரிந்த புன்னகையுடன், “அதுவும் தான்”
“எதுவும் தான்?” என்று கண்ணில் குறும்புடன் வினவ,
அவளும், “ஹ்ம்ம்.. நீங்க எதை சொன்னீங்களோ அது தான்”
“அதை உன் வாயால் சொல்லலாமே!” என்று கூறி அவன் புன்னகையுடன் புருவம் உயர்த்த,
அவள் வெட்க்கத்துடன், “நெஞ்சம் நிறைந்த காதலுடன் வந்த கண்ணீர்.. போதுமா!” என்றாள்.
அவன் விரிந்த புன்னகையுடன் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, “இப்போது இது போதும்” என்று கூறி வண்டியை கிளப்ப அவள் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்க இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
தன்னவளை ரசித்தவன் வண்டியை ஓட்டியபடி, “பக்கத்தில் வந்து உட்காரு”
“ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க” என்று அவள் மிரட்டலாக கூற,
“பார் டா! தாலி ஏறியதும் மிரட்டுவதை!”
“ஹலோ! ஸ்கூலில் வந்து கேட்டு பாருங்க! என் மிரட்டல்களை”
“அது தான் தெரியுமே!”
“அப்பறமென்ன!!!”
“என்னை இப்போது தானே மேடம் மிரட்டுறீங்க!”
“சொல்லிட்டீங்க தானே.. இனி பாருங்க” என்று அவள் கெத்தாக கூற,
அவன் புன்னகையுடன், “தங்கள் மிரட்டலுக்கு பணிய அடியேன் காத்திருக்கிறேன்”
“பின்னாடி பீல் பண்ணப் போறீங்க!”
“அதே போல் மேடமை பணிய வைக்க அய்யாவிற்கு தெரியுமே!” என்று கூறி அவன் கண் சிமிட்டி உதட்டசைவில் முத்தம் கொடுக்கவும் அவள் படபடத்த இதயத்துடன் மௌனமானாள்.
அவன் வாய்விட்டு சிரிக்க, அவள் செல்ல சிணுங்கலுடன் அவன் கையை அடித்தாள். 
பிறகு, “முன்னாடியே திருமண ஏற்பாடுகளை செய்துட்டீங்களா?”
அவன் புன்னகைக்கவும் அவள், “நான் சம்மதம் சொல்லாமல் இருந்து இருந்தால்?”
அதற்கும் அவன் புன்னகைக்கவும் அவள், “சொல்லுங்க”
“நான் ஏற்கனவே சொன்னது தான்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. நான் என்னையும் என் காதலையும் நம்பினேன்”
“அப்போ என்னை நம்பலை!” என்று அவள் போலியாக முறைத்து கேட்டாள்.
அவனோ விரிந்த புன்னகையுடன், “என்னில் நீ அடக்கம் தானே!” என்று கூறி கண் சிமிட்டவும் அவள் பேச்சிழந்தாள்.
“என்ன பேபி அமைதியாகிட்ட!”
அவள் புன்னகையுடன் அவன் அருகில் நகர்ந்து அமர்ந்தாள். அவன் உல்லாசமாக விசில் அடித்தபடி வண்டியை ஓட்ட, அவள் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள்.
அவன் விசில் அடித்தபடி ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்த, அவள், “தினமும் புதுசா தெரியிறீங்க”
அவன் புன்னகைத்தான். அவனது புன்னகையை ரசித்துப் பார்த்தாள்.  
திருமண பதிவு அலுவலகம் வந்ததும் இருவரும் இன்முகத்துடன் இறங்கினர். ப்ரனேஷ் சார்பாக ஆனந்தனும் சர்வேஷும் சாட்சி கையெழுத்து போட ப்ரனிஷா சார்பாக கீதாவும் அன்பரசியும் சாட்சி கையெழுத்து போட்டனர்.
ன்று இரவு சர்வேஷ் குடும்பம் கிளம்பியிருக்க வீட்டு மக்கள் மட்டுமே இருந்தனர். உணவை முடித்துக் கொண்ட பிறகு சிறு பயத்தில் ப்ரனிஷா அமர்ந்திருந்தாள். என்ன தான் ப்ரனேஷ் மேல் நம்பிக்கை இருந்தாலும் அவளை சிறு பயம் ஆட்கொள்ளத் தான் செய்தது. அவளது முகத்தில் இருந்தே அவள் பயத்தை உணர்ந்த ப்ரனேஷ் சோபாவில் இருந்து எழுந்தபடி, “தூங்கலாமா அம்மு” என்றான்.
அவனது குரலில் ப்ரனிஷா பேந்த பேந்த விழிக்க, அவன் ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.
அவள் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள்.
அப்பொழுது அங்கே ஓடி வந்த அபிசாரா, “அப்பா இன்னும் தொஞ்ச(கொஞ்ச) நேரம் தாத்தா தூட(கூட) விளையாது(டு)றேன்.. அப்பறம் தூங்தலாம்(தூங்கலாம்) பா ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
புன்னகையுடன் மகளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டவன், “இப்போ வந்தா அப்பா குட்டிமாவுக்கு கதை சொல்லுவேன்”
“என்ன ததை(கதை)?”
“குட்டிமாவுக்கு பிடிச்ச லயன் எலிபண்ட் வச்சு கதை சொல்லுவேன்”
“ஹே!!!” என்று கை தட்டி சிரித்தவள், “அதில் தைனோ(டைனோ) வருமா?” 
“ஓ வருமே” என்றான்.
ப்ரனிஷா பயம் நீங்கி அப்பா மகளின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ ஓதே(ஓகே)என்ற குழந்தை “தாத்தா நான் அப்பா தூட(கூட) தூங்த(தூங்க) போறேன்” என்று கத்தினாள். 
அவளது குரலில் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்த ஆனந்தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, “என் கூட விளையாடுறேன் னு சொன்ன!” என்றார்.
தாத்தாவின் சோக முகத்தை பார்த்தவள் உடனே தந்தையிடமிருந்து கீழே இறங்கி தாத்தாவிடம் ஓடினாள். 
ஆனந்தன் அவளை தூக்கியதும், “இப்போ தூங்தி(தூங்கி) தைம்(டைம்).. நீங்த(நீங்க) சமத்தா தூங்தினா(தூங்கினா) நேத்து(நாளைக்கு) நான் உங்தளுத்து(உங்களுக்கு) ததை(கதை) சொல்லுவேன்.. சரியா” என்று கண்ணை உருட்டி உருட்டிக் கூறினாள்.
ஆனந்தன் விரிந்த புன்னகையுடன், “ஓகே.. நான் சமத்தா தூங்குறேன்” 
“துத்(குட்)என்று கூறி அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அவரும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றார்.
அமுதா, “எனக்கு” என்றதும் அவரிடம் சென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு, “துத் நைத் ஸ்வீத் திரீம்ஸ்” என்றாள்.
அவரும் புன்னகையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றதும் மகிழ்ச்சியுடன் தாய் தந்தை கைகளை பற்றிக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள்.
குழந்தை இருவருக்கும் நடுவில் படுத்தாள். மகளுக்கு கதை சொல்லி தூங்க வைத்த ப்ரனேஷ் அவள் தூங்கியதும் அவளை சுவரோரம் படுக்க வைத்துவிட்டு அவன் நடுவில் படுத்தான்.
ப்ரனிஷா அவளையும் அறியாமல் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.
அவளது தோள்களை பற்றி அவளை படுக்க வைத்தவன் அவளது தலையை மென்மையாக வருடி புன்னகையுடன் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து, “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் ஸ்வீட்டி.. நல்லா தூங்கு” என்று கூறி படுத்துக் கொண்டான்.
இப்பொழுது அவள் சிறு பயம் கலந்த இன்ப அவஸ்த்தையை உணர்ந்தாள். அவள் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுக்கவும் அவன் அவள் புறம் திரும்பி படுத்து அவள் தலையை மென்மையாக வருடியபடி, “தூங்கு டா” என்றான்.
அவனது வருடலில் மெல்ல கண்ணயர்ந்தாள். 
டுத்த நாள் காலையில் அவள் கண் விழித்த போது அவள் அவன் அருகில் நெருங்கி படுத்தபடி கையை அவன் மேல் போட்டிருந்தாள். மகள் அருகில் படுக்கும் பழக்கத்தில் அவ்வாறு செய்திருந்தாள். தனது செய்கையில் சிறு வெக்கத்துடன் எழுந்து அமர்ந்தவள் கணவனின் முகத்தை சில வினாடிகள் ரசித்துப் பார்த்துவிட்டே குளியலறைக்குள் சென்றாள்.
அவள் குளியலறைக்குள் சென்றதும் விரிந்த புன்னகையுடன் ப்ரனேஷ் எழுந்தான். பத்து நிமிடங்களுக்கு முன்பே விழித்தவன் மனைவியின் நெருக்கத்தில் இன்பமாக அதிர்ந்தான். மகளின் நினைவில் தான் தன்னை நெருங்கி படுத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தாலும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. கண் விழித்ததும் அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்ப்பதற்காகவே கண்களை மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்தான். மனைவி பதறி விலகாததோடு தன்னை ரசித்துவிட்டு செல்லவும் அவன் மனம் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தது.
அவள் வெளியே வந்ததும் புத்துணர்ச்சியுடன், “குட் மார்னிங் பேபி” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு குளியலறைக்குள் ஓடிவிட்டான்.
மெல்ல கதவை திறந்து எட்டி பார்த்தவன் ப்ரனிஷா கன்னத்தில் கைவைத்தபடி மென்னகையுடன் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நிற்பதை கண்டவன் கதவை அடைத்துவிட்டு உள்ளே ஒரு குத்தாட்டத்தை போட்டான்.
காலை உணவை முடித்த பின் அறையில் சில காகிதங்களில் அவளிடம் கையெழுத்து வாங்கினான்.
கேள்வி கேட்காமல் கையெழுத்து போட்டவளிடம், “நான் லண்டனில் சம்பாதித்தையெல்லாம் சேர்த்து உன் பெயரில் டிரஸ்ட் ஆரம்பிக்கிறேன்.. அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு இலவசமா மருத்துவ சிகிச்சையோ ஆபரேஷனோ செய்ய உதவ போறோம்” என்றான்.
ஆச்சரியத்துடன் அவனை பார்த்தவள் சிறு தயக்கத்துடன், “என் பெயரில் வேண்டாமே!” என்றாள்.
“நீ இப்படி சொல்லுவ னு தெரிந்து தான் சொல்லாமல் கையெழுத்து வாங்கினேன்.. டிரஸ்ட் பெயர் ‘இனியா சைல்ட் டிரஸ்ட்’..” என்றான்.
பிறகு, “நான் ஹாஸ்பிடல் போயிட்டு சாயுங்காலம் சீக்கிரம் வரேன்.. நானும் நீயும் வெளியே போறோம்.. ரெடியா இரு.. கிட்ட திட்ட பத்து நாள் கழித்து போறதால் மதியம் சாப்பிட வர மாட்டேன்..”
“நேரத்திற்கு சாப்பிடுங்க”
“ஹ்ம்ம்”
“சாயுங்காலம் எங்கே போறோம்?”
“உன் சித்தி வீட்டிற்கு”
“அங்கே எதற்கு?”
“பயமா?”
“அவர்கள் பேச்சு பாதிக்கும் நிலையை நான் கடந்து விட்டேன்.. காரணமில்லாமல் அங்கே போகணும் னு சொல்ல மாட்டீங்களே னு கேட்டேன்”
அவன் புன்னகையுடன், “குட்.. காரணமா தான் சொல்றேன்.. வர சண்டே நம்ம வீட்டில் சின்ன பார்ட்டி.. உன்னையும் அம்முவையும் அறிமுகப் படுத்துவதற்காக.. அதை தெரிவிக்க தான் அங்கே போறோம்”
“வேண்டாம்.. இங்கே வந்து ஏதாவது பிரச்சனை பண்ண போறாங்க.. உங்களுக்கோ அத்தை மாமாவிற்கோ ஏதாவது தலை குனிவு வந்தால் என்னால் தாங்க முடியாது”
“இனி எப்பொழுதும் பிரச்சனை பண்ணக் கூடாது என்பதற்காகத் தான் போறோம்.. ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம்” 
அவள் சிறு கவலையுடன் பார்க்கவும் அவள் கன்னத்தை புன்னகையுடன் தட்டியபடி, “கவலை வேண்டாம் பேபி.. நான் பார்த்துக்கிறேன்” என்றவன் குரலை மாற்றி, “காலையில் கொடுத்தது எப்படி இருந்தது?” என்றான்.

Advertisement