Advertisement

  இதழ் 24
ப்ரனேஷ் தன்னவளின் முறைப்பை ரசித்தபடி புன்னகையுடன், “மேடம் இங்கே வந்து மூன்று மணி நேரம் ஆகிருச்சு.. இப்போ தான் உன்னை பார்க்க வராங்க.. என்னன்னு கேளு” என்றான்.
ப்ரனிஷா தங்கையை செல்லமாக முறைக்க, 
அவந்திகா ப்ரனேஷை பார்த்து, ‘ஏன் டாக்டர்?’ என்பது போல் பார்த்துவிட்டு தமக்கையை பார்த்து சிறு திணறலுடன், “அது வந்து.. கொஞ்சம் வேலை இருந்தது கா” என்றாள்.
ப்ரனிஷா மெல்லிய புன்னகையுடன், “சரி விடு..” என்றவள், “ஆமா! நீ எப்படி இங்கே?” என்று வினவினாள்.
“நான் டாக்டர் என்பதை மறந்துட்டியா? மாமா குழுவில் நானும் ஒருத்தி”
அவளது ‘மாமா’ என்ற அழைப்பில் ப்ரனிஷாவின் உடலில் சிறு அதிர்வு வந்தது. அதை மற்ற இருவருமே உணர்ந்தனர்.
அவந்திகா உற்சாகத்துடன், “சரி நீ சொல்லு.. எப்போ உனக்கும் மாமாவுக்கும் கல்யாணம்?”
ப்ரனிஷா, “அவந்தி!” என்று கண்டிப்புடன் அழைத்தாள்.
அவந்திகா அதை கண்டுக்கொள்ளாமல், “நீங்க சொல்லுங்க மாமா.. எப்போ கல்யாணம்?”
ப்ரனேஷ் புன்னகையுடன், “கூடிய சீக்கிரம் நடக்கும்”
ப்ரனிஷா, “இல்லை.. அப்படி ஒன்னு நடக்கவே நடக்காது” என்று படபடப்புடன் கூறினாள்.
ப்ரனேஷ் நிதானமாக, “ஏன்?”
“..”
“அன்று சொன்ன காரணங்களை சொல்லாதே.. இந்நேரம் அவை உண்மை இல்லைன்னு உன் மனதிற்கு தெள்ளத் தெளிவா புரிந்திருக்கும்”
“ப்ளீஸ் என்னை இப்படியே விட்டிருங்க”
அவன் கைகளை கட்டிக் கொண்டு அவளை தீர்க்கமாக பார்த்தான். 
அவள் இயலாமை தந்த கோபத்துடன், “வேறு யாரு மேல் அன்பு வைக்க னு கேட்டீங்களே! (அவந்திகாவை காட்டி) இதோ இவள் மேல் வைங்க.. இவளை கல்யா………………………” முடிக்கும் முன் அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அரைந்திருந்தான்.
அவள் பெரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தபடி உறைந்து போய் நின்றாள்.
அவள் கூறியதை ஜீரணிக்க முடியாமல் தவித்தவன், அவளை அடித்து விட்டதில் தன் மேலேயே பெரும் கோபம் கொண்டான். கோபத்தை கட்டுப் படுத்த முடியாமல் அருகில் மூடியிருந்த ஜன்னலை ஓங்கி குத்தினான்.
அவன் குத்திய வேகத்தில் அதன் கண்ணாடி சுக்கு நூறாக உடைய, உடைந்த கண்ணாடி துண்டுகள் அவன் கையை கிழித்து ரத்தம் கசிந்தது.
அவந்திகா, “டாக்டர்” என்று கத்த, அப்பொழுது அங்கே வந்திருந்த அன்பரசி, “மாம்ஸ்” என்று கத்த, ப்ரனிஷா, “ஐயோ! என்ன பண்றீங்க?” என்றபடி அவன் கையை பிடிக்க போக,
குறையாத கோபத்துடன் அவளை பார்த்தவன் மறுகையை நீட்டி அவளை தடுத்தான்.
அவள் அழுகையுடன், “என்னை எத்தனை முறை வேணாலும் அடிங்க.. உங்களை காயப் படுத்திக்காதீங்க”
“நீ மனதை காயப்படுத்தியதை விட இது ஒன்றும் பெரிய காயம் இல்லை”
அவள் வலியுடனும் தவிப்புடனும் அழுதபடி அவனை பார்த்தாள்.
கண்களை மூடி திறந்து தன்னை சமன் செய்ய முயற்சித்தவன் அது முடியாமல் போகவும் அவந்திகாவிடம், “எல்லோரையும் கிளம்பச் சொல்.. நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறினான்.
போகும் அவனையே ப்ரனிஷா பார்த்துக் கொண்டிருக்க, அன்பரசி அவளை அழைத்துச் சென்று சற்று மறைவான இருக்கையில் அமரச் செய்தாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய அன்பரசி அவந்திகாவிடம், “நீ மற்ற டாக்டர்ஸ் கிட்ட கிளம்ப சொல்லிட்டு சர்வேஷ் சாரிடமும் சொல்லிட்டு வா..”
“அக்கா” என்று அவள் தயங்க, “நான் பார்த்துக்கிறேன்.. நீ போய் சொல்லிட்டு வா” என்று கூறி அனுப்பினாள்.
அன்பரசி, “நீ அப்படி பேசியிருக்கக் கூடாது”
“..”
“அது அவரை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் னு என்னை விட உனக்கு தெரியும்”
அன்பரசியை நிமிர்ந்து பார்த்தவள், “அவரை காயப்படுத்தும் போது அவருக்கு வலிப்பதை விட எனக்கு அதிகமா வலிக்குது இருந்தாலும் எனக்கு வேறு வழி இல்லை.. என்னால் அவரை கல்யாணம் செய்துக்க முடியாதே!! 
என்ன பிறப்போ நான்! கைகெட்டிய தூரத்தில் அவர்.. இப்போ நான் அவரை சேர்வதற்கு தடைகள் இல்லை ஆனால் என்னால் அவரை சேர முடியலையே! இப்படி ஒரு நிலையில் இருப்பது எவ்வளவு வலியையும் வேதனையையும் தருது தெரியுமா! அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவருக்காகத் தான் அப்படி பேசினேன்.. 
ப்ச்.. அன்னைக்கு ஏன் எனக்கு கோபம் வரணும்? நான் ஏன் ஆட்டோவை விட்டு இறங்கி போகணும்!!!! அவர் கண்ணில் நான் படாமல் இருந்து இருக்கலாம்.. என் மேல் அன்பு வைத்து இப்படி கஷ்டப்படாமல் அவராவது நிம்மதியா இருந்து இருப்பார்” என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.
அடுத்த நொடியே பரபரப்பாக எழுந்தவள் மேஜையில் இருந்த கைபேசியை எடுத்து அவனுக்கு குறுச்செய்தி அனுப்பினாள்.
“கைக்கு மருந்து போடுங்க ப்ளீஸ்.. எனக்காக” என்று அனுப்பினாள்.
ப்ரனேஷ் ஒற்றை கையினால் வண்டியை வேகமாக ஓட்டியபடி வீட்டிற்கு வந்திருந்தான்.  வண்டியில் இருந்து இறங்காமல் ஸ்டியரிங்கில் தலையை சாய்த்தபடி அமர்ந்து இருந்தவன் கைபேசி எழுப்பிய ஓசையில் அதை எடுத்துப் பார்த்தான். அவளது குறுஞ்செய்தியை படித்ததும் அவனது மனம் அமைதியடைய வண்டியில் இருந்த மருந்து பெட்டியை எடுத்து கைக்கு மருந்திட்டு கட்டு போட்டுவிட்டு இறங்கி வீட்டினுள் சென்றான். 
அவன் உள்ளே சென்றதும் அவன் கையை பார்த்த அமுதா, “கைக்கு என்னாச்சு கண்ணா?” என்று பதற,
அவன், “ஒண்ணுமில்லை மா.. சின்ன காயம் தான்”
“எப்படி அடிபட்டது?”
“அது”
“என்ன டா?”
ப்ரனேஷ் நடந்ததை கூற அமுதா சிறு கோபத்துடன், “மலரை எல்லோருமா கார்னர் பண்ணும் போது மன அழுத்தம் இப்படி தான் வெளிப்படும்.. அதுக்காக நீ இப்படி கோபப்படுவியா?”
“ப்ச்.. போங்க மா” என்றபடி சக்தியெல்லாம் வடிந்தவனாக சோபாவில் அமர்ந்து தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடினான்.
சாரதா, “மனம் தளராத.. இவ்ளோ நாள் பொறுத்துகிட்ட.. நிச்சயம் அவள் முழு மனதுடன் சம்மதிப்பாள்”
கண்களை திறந்தவன் அவரை பார்த்து, “எனக்கும் நம்பிக்கை இருக்கிறது சித்தி ஆனாலும் அவ(ள்) பேசியதை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியலை” என்று வேதனை குரலில் கூறியவன் பின் பெருமூச்சொன்றை வெளியிட்டு, “அவ(ள்) மனதை ஏதோ ஒரு விஷயம் அழுத்திக்கிட்டு இருக்குது.. அது என்ன னு வாய் திறந்து சொன்னாலாவது நான் ஏதாவது செய்வேன்.. ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்றபடி எழுந்தான்.
அமுதா, “ரொம்ப வலிக்குதா டா?”
“இல்லை மா ரொம்ப ஜில்லுன்னு இருக்குது”
“இரு.. கல்யாணத்திற்கு அப்பறம் மலரை உன் வாயிலேயே போடச் சொல்றேன்”
“தாராளமா.. ஆனா கையால் இல்லாமல் வாயால் போட சொல்லுங்க” என்று கூறி கண் சிமிட்டினான்.
“அம்மா கிட்ட பேசுற பேச்சா! போடா” என்று அவர் தலையில் அடித்துக் கொண்டார்.
அப்பொழுது சொர்ணம்(வேலையாள்) காப்பியை கொடுக்கவும் அதை வாங்கியபடி அன்னையிடம், “நீங்க எப்போ ஐ லவ் யூ சொல்லப் போறீங்க?”
“இன்னைக்கு சாயுங்காலம் தான் போகலாம் நினைத்தேன் ஆனா இப்போ அவ(ள்) இருக்கும் மனநிலையில்…………..”
“இன்னைக்கே போய் பாருங்க.. நல்ல நியாபகம் வச்சுக்கோங்க.. நீங்க சித்தியோட அக்காவா மட்டும் தான் பார்க்க போறீங்க.. என் அம்மா னு ஏதாவது உளறிடாதீங்க”
“எத்தனை முறை தான் டா சொல்லுவ! சென்னையில் இருந்து இதைத் தான் சொல்லிட்டு இருக்க”
“என்ன பண்றது உங்க(ள்) ஆர்வக் கோளாறு அப்படி”
அவர் அவனை முறைக்கவும் அவன் புன்னகையுடன் அவர் கன்னத்தை பிடித்து, “ஸ்வீட் அம்மா” என்று கொஞ்சிவிட்டு தன் அறைக்கு சென்றான்.
வந்திகா வந்ததும் ப்ரனிஷா, “அவரை பார்த்தியா? காயத்திற்கு மருந்து போட்டாரா?” என்று தவிப்புடன் கேட்டாள்.
அவந்திகா, “நான் மா….. டாக்டரை பார்க்கலை கா” என்றாள்.
ப்ரனிஷாவின் முகம் மேலும் வாடியது.
அன்பரசி, “மாம்ஸ் உன் மேசெஜ்ஜை பார்த்ததும் மருந்து போட்டிருப்பார்”
“நிச்சயமா போட்டிருப்பாரா?” என்றவள், “இப்போ நீ என்ன சொன்ன?”
“மருந்து போட்டிருப்பார் சொன்னேன்”
“அது இல்லை.. அவரை என்னனு சொன்ன?”
“நான் அபி குட்டிக்கு சித்தி ஸோ நீ எனக்கு அக்கா.. அக்கா கணவர் மாமா தானே.. அதை தான் சுருக்கி மாம்ஸ் சொன்னேன்”
‘நீயுமா!’ என்பது போல் அவள் பார்க்கவும் அன்பரசி, “அவரை பற்றி நீ சொன்னதும் அவரை மாமா னு முடிவு பண்ணிட்டேன்.. இருந்தாலும் உன் மனதை கருதி தான் உன் முன்னிலையில் அப்படி கூப்பிட தயங்கினேன்.. இப்போ நீயே உன் மனதில் அவர் நீக்கமற கலந்துவிட்டதை சொன்ன பிறகு நோ தயக்கம்” என்றவள் அவந்திகாவை பார்த்து, “நீயும் டாக்டர் னு சொல்றதை விட்டுட்டு மாமானே சொல்லு” என்றாள்.
ப்ரனிஷா தலையில் கை வைத்தபடி அமர்ந்தாள்.
அன்பரசி, “இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை? ஏன் மாம்ஸ்-ஸை கல்யாணம் செய்துக்க முடியாது னு சொல்ற?”
“ப்ளீஸ் அதைப் பத்தி பேச வேண்டாம்”
“சும்மா இதையே சொல்லாத.. இப்போ எனக்கு காரணம் தெரிந்தே ஆகணும்”
“நான் அவருக்கு தகுதியானவள் இல்லை”
அவந்திகா, “அவரே நீ தான் வேணும் னு சொல்றப்ப நீ ஏன் பிடிவாதம் பிடிக்கிற.. மாமா உன்னை நல்லா பார்த்துப்பார்.. இனிமேலாவது சந்தோஷமா இரு”
“நான் அவரை கல்யாணம் பண்ணால் அவர் சந்தோஷம் போய்டுமே!”
“நீ தானே அவர் சந்தோஷமே!” என்று அவந்திகாவும்,
“இப்போ மட்டும் மாம்ஸ் ரொம்ப சந்தோஷமா இருக்காராக்கும்?” என்று அன்பரசியும் கூறினார்.
“ச்ச்.. உங்களுக்கு புரியாது.. தயவு செய்து என்னை இப்படியே விட்டிருங்க”
அன்பரசி ஏதோ பேச வர, ப்ரனிஷா, “நான் போய் அபியை கூட்டிட்டு வரேன்” என்றபடி எழுந்தவள் அவந்திகாவை பார்த்து, “நீ எங்க தங்கி இருக்க? என்னுடன் வீட்டிற்கு வரியா?”
“ஹ்ம்ம்.. வரேன் கா.. இங்கே பக்கத்தில் தான் ஒரு வீட்டில் தங்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க.. நான் போய் என் லக்கேஜ் எடுத்துட்டு வரேன்.. கொஞ்சம் வெயிட் பண்றியா?”
“சரி நீ போய் எடுத்துட்டு வா” என்றவள் தன்னை முறைத்துக் கொண்டு நின்ற அன்பரசியை பார்த்து, “என்னை முறைக்கிறதை விட்டுட்டு சர்வேஷ் சாருக்கு என்ன பதில் சொல்றது னு யோசி”
‘சர்வேஷ்’ பெயரை கேட்டதும் அன்பரசியிடம் சிறு பதற்றம் வந்து ஒட்டிக்கொள்ள,
அவந்திகா, “ஓ! கதை அப்படி போகுதா! பார்த்தியா சொல்லவே இல்லை”
“நீ வேற! சும்மா இரு” என்ற அன்பரசி ப்ரனிஷாவை பார்த்து, “என்ன சொல்லட்டும்?”
“உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு”
“எனக்கே தெரியலையே!”
ப்ரனிஷா அவந்திகாவிடம், “நீ போய் உன் லக்கேஜை எடுத்துட்டு வா” என்று கூறி அனுப்பினாள்.
பிறகு அன்பரசியின் கையை பற்றி, “என்ன குழப்பம்?” என்று வினவினாள்.
“என்னிடம் அன்பு காட்டுற யாரையும் என்னால் விலக்க முடியாது.. ஆனா இது அன்பிற்கும் மீறிய விஷயம்”
“சரி.. அவர் வேண்டாம் னு நினைக்க உன்னிடம் ஏதும் காரணம் இருக்கிறதா?”
“அவர் உயரம்”
“அது அவருக்கும் தெரியும் தானே!”
“இருந்தாலும்”
“சாரதா மேம் பற்றி யோசிக்கிறியா?”
“அதுவும் தான்”
“அவங்க ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. வேற என்ன?”
“அவரை பார்த்தாலே எனக்கு பயம் வருதே!”
“அது நீ தள்ளி இருந்து பார்ப்பதால்.. கிட்ட வந்து பழகிப் பார் அவர் இனிமையானவர் தான்.. அவரது வேகத்திற்கும் உனது நிதானதிற்கும் பொருந்தும் தான்.. குடும்பத்தில் ஒருத்தர் நிதானமா இருப்பது நல்லது தானே!” என்று கூறி புன்னகைத்தாள்.
“..”
“இன்னும் என்ன?”
“தெரியலை”
“சரி.. அவரிடம் பேசு”
“எனக்கு பயமா இருக்குது”
“பயப்படாம போய் பேசு” என்றவள், “அவந்தி வந்ததும் நான் அபியை கூட்டிட்டு கிளம்புறேன்.. நீ பேசிட்டு வீட்டிற்கு வரியா இல்லை ஹாஸ்டல் போறியா?”
“வீட்டுக்கே வரேன்”
“சரி” என்றவள் புன்னகையுடன் கட்டை விரலை காட்டி, “ஆல் தி பெஸ்ட்” என்றாள்.
ன்பரசி சர்வேஷின் அனுமதியுடன் உள்ளே சென்றாள். அவன் அமைதியாக அவளை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.
அவள் சிறு தயக்கத்துடன், “காலையில்.. கேட்டதை பத்தி பேசணும்”
“மலர் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பார்க் இருக்குது.. தெரியுமா?”
“ஹ்ம்ம்..”
“அங்கே பேசலாம்.. பத்து நிமிடத்தில் நான் அங்கே இருப்பேன்”
“ஹ்ம்ம்” என்றவள் வெளியேறினாள்.
ப்ரனிஷாவிடம் சொல்லிவிட்டு இவள் பூங்காவிற்கு நடந்து சென்ற போது அவன் இவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
உள்ளே சென்று மூவர் அமரும் மர பெஞ்சில் இடைவெளி விட்டு அமர்ந்தனர். அன்பரசி படபடப்புடன் அமர்ந்திருக்க சர்வேஷ் இயல்பாக அமர்ந்திருந்தான்.
அவன், “பேசணும் சொல்லிட்டு அமைதியா இருக்கிற?”
“உங்களுக்கு.. உங்களுக்கு எதனால் என்னை பிடித்தது?”
“உண்மையை சொல்லட்டுமா?”
“ஹ்ம்ம்”
“இன்று காலையில் ப்ரனேஷ் அம்மா கிட்ட எனக்கு பொண்ணு பார்த்திருப்பதாக சொன்னான்.. யாருன்னு கேட்ட போது உன்னை சொன்னான்..” என்று கூறி நிறுத்தி அவள் முகத்தை ஆராய்ந்தான்.
“ஓ!” என்ற போது அவள் குரலில் சுருதி வெகுவாக இறங்கியிருந்தது. அதை கண்டுக் கொண்டவனின் மனதினுள் சாரலடித்தது.
அவன், “காலையில் உன்னிடம் கேட்டது அவன் சொன்னதால் நிச்சயம் இல்லை.. அவன் சொன்னதும் அம்மா சம்மதம் சொல்லிட்டாங்க ஆனா நான் கொஞ்சம் டைம் கேட்டேன்..” என்றவன் அவள் கண்களை நோக்கி, “என்ன தான் அவன் சொன்ன பிறகு தான் உன்னை அந்த கண்ணோட்டத்தில் பார்த்தேன் என்றாலும் எனக்கே தெரியாமல் நீ என் மனதினுள் தடம் பதித்திருப்பதால் மட்டுமே அவன் சொன்ன இரண்டு மணி நேரத்தில் என் மனதினுள் சிம்மாசனமிட்டு அரசியாய் அமர்ந்திருக்கிறாய்..” என்றான்.
இப்பொழுது அவள் கண்ணில் சிறு ஒளி தெரிந்தது. அவள் மனம் அவளையும் அறியாமல் அவன் கூறியதை கேட்டு ரசித்து மகிழ்ச்சியடைந்தது.
அவன் கையில் இருந்த பையில் இருந்து சிகப்பு ரோஜா கொத்தை எடுத்து புன்னகையுடன் அவளிடம் நீட்டி, “எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.. உன் பெயரை போல் என் மேல் அன்பை பொலிந்து எனது அரசியாக இருக்க சம்மதமா?”  
இப்பொழுது அவளிடத்து இருந்த தயக்கமும் பயமும் எங்கே போனது என்று அவளுக்கே தெரியவில்லை .
அவள் சிறு வெக்கம் கலந்த புன்னகையுடன் ‘சம்மதம்’ என்பது போல் தலையை ஆட்டி அந்த பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள்.
அவன் புன்னகையுடன், “வாய் திறந்து சொல்லலாமே”
“சம்மதம்” என்று வெக்கத்துடன் கூறியவள், “ஆனா அரசியாக அல்ல.. உயிருள்ள வரை எனது சர்வமும் இந்த சர்வேஷிடம் அடக்கம்” 
“நான் இந்த உலகத்தையே ஆள்பவனாக இருந்தாலும் என்னை ஆள்பவள் நீ தான்”
அவள் வார்த்தைகளின்றி அவனை பார்க்க அவன் மென்னகையுடன் அவளது கையை பற்றினான். அவளுள் மின்சாரம் பாய இதயம் வேகமாக துடித்தது.
அவன் அவளது கையில் அழுத்தம் கொடுத்து, “தேங்க்ஸ்” என்றான்.
அவள், “நமக்குள் தேங்க்ஸ் வேணாமே! அப்படி சொல்றதா இருந்தால் நான் தான் சொல்லணும்” என்று நெகிழ்ச்சியுடன் முடித்தாள்.
அவன், “காலையில் நீ மயங்கி விழுந்ததும் எப்படி இருந்தது தெரியுமா! ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம் வலி………”
“இல்லை.. அது.. அதிர்ச்சியில்… சாரி” என்று அவள் தவிப்புடன் கூறவும், 
அவன் சிறு புன்னகையுடன், “சரி விடு” என்றான்.
“என்னால் இன்னமும் நம்ப முடியலை”
“கனவில்லை நிஜம் னு நான் நிரூபிக்கட்டுமா?”
“என்ன?”
ஒரு நொடி பார்வையை சுழற்றியவன் அவள் கை விரல் நுனியில் மென்மையாக முத்தமிட்டு, “இப்போ நம்ப முடியுதா?” என்றான் வசீகர புன்னகையுடன்.
அவளோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. வயிற்ருக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க இதயம் அதி வேகமாக துடிக்க என்று புதுவித உணர்ச்சியில் தத்தளித்தாள்.
“பப்ளிக் பிளேசா போயிருச்சு இல்லை நான் முத்தம் கொடுத்திருக்கும் இடமே வேறு” என்றவனது பார்வை அவளது உதட்டில் பதியவும்,
அவள் சட்டென்று கையை உருவிக் கொண்டு எழுந்து நின்றாள்.
அவன், “பிடிக்கலையா?” என்று வருந்தும் குரலில் வினவ, 
அவள், “இல்லை.. எனக்கு..”
“உனக்கு”
“எனக்கு என்னவோ போல் இருக்குது.. கல்யாணத்திற்கு முன் இதெல்லாம் வேண்டாமே ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
அவன் சிறு பெருமூச்சொன்றை வெளியிட்டு, “ஆல்ரைட்.. மகாராணியின் இஷ்டம்”
“அது.. வந்து” என்று அவள் தயங்க, 
அவன் மெல்லிய புன்னகையுடன், “ரிலாக்ஸ்.. முதலில் உட்காரு..” என்றவன் அவள் அமர்ந்ததும், “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை..” என்றான்.
“நான்.. எதுவும் உங்களை ஹர்ட் பண்ணலையே!” என்று அவள் சிறு தயக்கத்துடன் வினவினாள்.
அவன், “நீ சொன்னது தான் சரி.. நான் தள்ளியே இருந்தால் தான் ஸ்கூலில் பிரச்சனை வராது” என்று கூறி கண்சிமிட்டினான்.
அவளது முகம் வெக்கத்தில் சிவந்தது. அதை ரசித்தவன், “வெக்கப்படும் போது நீ ரொம்ப அழகா இருக்கிற” என்றான்.
அவளது வெக்கம் அதிகரித்தது. அதில் அவள் இதழை தீண்டத் துடித்த மனதை அடக்கி, “சரி.. இப்போ ப்ரனேஷ் மலர் பற்றி பேசலாமா?” என்றான்.
அவள் ஆய்வு கூடத்தில் நடந்ததைப் பற்றியும் ப்ரனிஷாவின் மனநிலை பற்றியும் கூறினாள்.
அவன், “லேபில் நடந்ததை பற்றி அவந்திகா மூலமும் அம்மா மூலமும் தெரியும்.. மலர் மனதினுள் ஏதோ ஒன்று இருக்கிறது..” என்றவன் சிறு யோசனையுடன், “அவங்க முதல் கல்யாணம் ஏன் முறிந்தது னு தெரியுமா?”
“இல்லை.. அதை பற்றி கேட்ட போது அது அவளது வாழ்வின் கருப்பு பக்கங்கள் என்றும் அதை பற்றி நினைத்துக் கூட பார்க்க விரும்பலை னு சொல்லிட்டா”
“அதில் தான் ஏதோ இருக்குது னு நினைக்கிறேன்.. எப்படி தெரிஞ்சுக்கிறது!”
“என்னால் இதற்கு மேல் வற்புறுத்தி கேட்க முடியலை”
“ஹ்ம்ம்.. பெரியம்மா மூலம் முடியுதா பார்க்கலாம்” என்றவன், “சரி நேரமாச்சு.. கிளம்பலாம்.. ஹாஸ்டலில் ட்ராப் பண்ணட்டுமா?”
“இல்லை.. ப்ரனிஷா வீட்டிற்கு தான் போறேன்.. பக்கம் தானே.. நடந்து போயிருவேன்”
“ஹ்ம்ம்.. நாளைக்கு வீட்டுக்கு வா.. இன்னைக்கு அம்மாவும் பெரியம்மாவும் மலர் வீட்டிற்கு போறதால் தான் உன்னை கூப்பிடலை”
“ஹ்ம்ம்”  இருவரும் கிளம்பினர்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement