Advertisement

இதழ் 16
ப்ரனேஷின் கணிப்பு மிகவும் சரியே! ப்ரனிஷா மகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்த போது, வண்டியில் இருந்து இறங்கிய ப்ரனேஷை பார்த்தாள். பார்த்த நொடியே அவனை அவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. முன்பு அவனை ஒருமுறையாவது பார்க்க முடியாதா என்று ஏங்கிய அவளது மனம் முதலில் அடைந்தது மகிழ்ச்சியே. அவனிடம் போய் பேசலாமா என்று கூட ஒரு நொடி யோசித்தாள் ஆனால் அடுத்த நொடியே ‘அவருக்கு என்னை அடையாளம் தெரியுமா? ஒருவேளை தெரியலை என்றால்?’ என்ற கேள்வி எழுந்து அவளது மனதை வேதனைப்படுத்தியது. 
அதற்குள் அவன் உள்ளே சென்றிருக்க, ஆசிரியர் அறை நோக்கிச் சென்றவள் வழியில் மாணவர்கள் அவளுக்கு சொன்ன வணக்கத்தில் தன் மனதை அடக்கி மென்னகையுடன் வணக்கம் சொன்னாள்.
பழைய நினைவுகளை ஒருவாறு கஷ்டப்பட்டு ஒதுக்கி தற்போதைய நிலையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். அப்பொழுது சர்வேஷ் அவளை அழைக்கவும் மீண்டும் அவளது மனம் போராடத் தொடங்கியது.
‘அவர் அங்கே இருப்பாரா? அவருக்கு என்னை அடையாளம் தெரியுமா? நான் அவரை தெரிந்த மாதிரி பேசவா?’ என்ற கேள்வி தோன்றிய அடுத்த நொடியே, அவள் மனம், ‘இந்நேரம் அவருக்கு கல்யாணம் ஆகி மனைவி குழந்தை னு சந்தோஷமாக இருப்பார்.. நான் எதற்கு தேவை இல்லாத பழையதை கிளற வேண்டும்?’ என்று நினைத்தது.
‘அவருக்கு என்னை அடையாளம் தெரிந்தால் என்னை எப்படி அணுகுவார்?’ என்ற கேள்வி எழுந்தபோது ஏதோ சொல்ல தெரியாத உணர்வு அவளை ஆட்கொள்ள, ‘அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தாள் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பதை அவனை சந்தித்த போது புரிந்துக் கொண்டாள். 
தண்ணீர் குடித்து தன்னை ஒருவாறு சமன் செய்தவள் பிறகு, ‘அவருக்கு என்னை தெரிந்தாலும் நான் தெரியாதது போல் நடந்துக் கொள்வது தான் அவருக்கு நல்லது.. கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும்’ என்ற உறுதியுடன் தான் சர்வேஷ் அறையை நோக்கிச் சென்றாள்.
ஆனால் ‘எப்படி இருக்கிற இனியா?’ என்று அவன் கேட்ட கேள்வியில் ஆட்டம் கண்டது அவளது உறுதி. அவனது ‘இனியா’ என்ற அழைப்பு அவளது மனதை பிசைந்தது தான் ஆனால் அவனது ‘என் உயிரில் கலந்தவள்’ என்ற வார்த்தைகளில் பெரும் அதிர்ச்சி அடைந்தவளின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவனுக்கு தன்னை அடையாளம் தெரியுமா என்று யோசித்தவள் அவன் முன்பை விட பல மடங்கு அதிக காதலுடன் தன்னை அணுகவும் பெரும் அதிர்ச்சி அடைந்தாள். இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து சிறிது தெளிந்தவளின் மூளை யோசித்தது ‘அது அவனுக்கு நல்லதல்ல’ என்பதை தான். முழுவதுமாக அதிர்ச்சியில் இருந்து மீளாதவள் அவனிடம் கோபமாக பேசிவிட்டு வெளியே வந்தாள்.
ஆசிரியர் அறைக்கு வந்து தன் இடத்தில் அமர்ந்தவளது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. அவன் நினைவுகளோடு சேர்த்து அவளது கடந்த கால வாழ்க்கையும் சேர்த்து துரத்த அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் விடுமுறை எடுக்கும் முடிவிற்கு வந்தவள் சர்வேஷ் அறைக்கு சென்றாள்.
சர்வேஷின் அனுமதியில் உள்ளே வந்த ப்ரனிஷா, “சார் எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. லீவ் வேண்டும்”
“இன்று உங்களுக்கு முக்கியமான வேலை ஏதும் இல்லையே!” என்றவன் சிறு யோசனையின் பின், “இன்னைக்கு தானே டுவெல்த் பயோலாஜி ப்ராக்டிகல் எக்ஸாம்?”
ஒரு நொடி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள், “சாரி சார்.. நான்..” என்று தடுமாறியவள் குற்றஉணர்ச்சியுடன், “சாரி சார்.. நான் லேப் போறேன்” என்றாள்.
சர்வேஷ் பதில் சொல்லும் முன் அவளை பார்த்தபடி ப்ரனேஷ், “சர்வா அவளை வீட்டிற்கு போக சொல்.. நான் லேபை பார்த்துக்கிறேன்”
சர்வேஷ் தமையனை பார்த்து முறைத்தான் ஆனால் அதை ப்ரனேஷ் அறியவில்லை.. அவனது கவனம் முழுவதும் தன்னவளிடம் மட்டுமே இருந்தது.
அவளோ அவன் கூறிய அடுத்த நொடி விரைப்புடன், “தேவை இல்லை சார்.. என் லேபை நானே பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு திரும்ப,
“மிஸ்.ப்ரனிஷா” என்று சர்வேஷும், “இனியா” என்று ப்ரனேஷும் ஒரே நேரத்தில் அழைத்தனர்.
ப்ரனேஷின் அழைப்பில் அவளுள் அதிர்வலை ஓடியது. மனதை கட்டுபடுத்திக் கொண்டு சர்வேஷை பார்த்தாள்.
சர்வேஷ், “நீங்க வீட்டிற்கு கிளம்புங்க.. நான் மைதிலி மேடமை லேப் ஹன்டில் பண்ண சொல்லிக்கிறேன்”
“இல்லை சார்.. நானே………..”
“நீங்க தான் நேற்றே எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டீங்களே! மேர்பாவை மட்டும் தானே! நீங்க கிளம்புங்க..”
“சார்” என்று அவள் தயங்க, சர்வேஷ் சற்று குரலை உயர்த்தி, “உங்களை கிளம்ப சொன்னேன்” என்றதும் அவள் கிளம்பினாள்.
அவள் அறை வாயிலை அடைந்த போது சர்வேஷ் மீண்டும் அவளை அழைத்தான். அவள் திரும்பியதும், “ரொம்ப யோசித்து மனதை வருத்திக்காதீங்க.. உங்களுக்கு எப்பொழுதும் நல்ல தோழனா நான் உங்களுடன் துணை இருப்பேன்”
சர்வேஷிற்கு பதில் கூறாது அவள் அமைதியாக வெளியேறினாள்.
அவள் வெளியே சென்றதும் தன்னை முறைத்துக் கொண்டிருந்த ப்ரனேஷை சளைக்காமல் சர்வேஷும் முறைத்தான்.
ப்ரனேஷ், “உன்னிடம் அவள் ஹெல்ப் கேட்டாளா?”
“ஹெல்ப் கேட்காமல் செய்பவன் தான் நல்ல தோழன்”
“டேய் என்னை வெறுப்பேத்தாத”
“அவங்க இப்போ என்ன மனநிலையில் இருக்காங்க னு தெரியலை ஆனால் அவங்களது ஓய்ந்த தோற்றத்தை பார்க்க கஷ்டமா இருக்குது.. அதான் அவங்களுக்கு தைரியம் சொன்னேன்” என்றவன் முறைப்புடன், “லூசா டா நீ! நீ போய் லேபை பார்க்கிறேன் னு சொல்ற? அவங்க மனம் மாறும் முன் தேவை இல்லாத வம்பு பேச்சிற்கு நீயே இடம் கொடுக்காதே!”
“ச்ச்.. போடா..” என்றவன் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான்.
சர்வேஷ், “எல்லாம் சரியாகும் டா.. அவங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு.. ஏழு ஆண்டுகள் கடந்து இருந்தாலும் நீ அதே ப்ரனேஷாக தான் இருக்கிற.. ஆனால் அவங்க அப்படி இல்லையே!”
“ஹ்ம்ம்..” 
“நீ ஒரு ஜோசியம் சொன்னது போல் நான் ஒரு ஜோசியம் சொல்லவா?”
“என்ன?”
“ப்ரனிஷா கிளம்பி கொஞ்ச நேரத்தில் அன்பரசி மேடம் வந்து மதியம் லீவ் கேட்பாங்க பாரு”
ஒரு நொடி யோசித்த ப்ரனேஷ், “அன்னைக்கு அன்பரசி மேடத்திற்காக தான் சண்டை போட்டாளா?”
“ஹ்ம்ம்.. அதன் பிறகு ரெண்டு பேரும் நெருங்கிய தோழிகள் ஆகிட்டாங்க.. அன்பரசி மேடத்திற்கு யாரும் இல்லை.. அவங்க ஆசிரமத்தில் வளர்ந்தவங்க”
“ஓ” என்றவன் குறும்பு புன்னகையுடன், “டிடேல்ஸ் பக்காவா சேகரித்து இருக்கிற போல!”
“அவங்க என் தோழி”
“நான் அன்பரசி மேடமை சொன்னேன்”
“என் ஸ்கூலில் வேலை செய்றவங்களை பற்றி எனக்கு தெரியாதா?” என்றவன் அப்பொழுது தான் ப்ரனேஷ் கண்ணில் இருந்த குறும்பை கண்டு புன்னகையுடன், “இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.. நான் ஸ்பெஷல்லா எதுவும் சேகரிக்கவில்லை” என்றான்.
“ஹ்ம்ம்”
“டேய்.. நிஜமா தான் சொல்றேன்..”
“சரி.. சரி.. என் மகளை பார்க்க போகலாமா?”
“ப்ரனிஷா கிளம்பட்டும்” என்றவன், “அபியை கூட்டிட்டு போய்டுவாங்களா னு தெரியலையே!”
“இப்போ அவளுக்கு தனிமை தேவைப்படும் ஸோ அம்முவை கூட்டிட்டு போக மாட்டா”
“பார் டா! அதுக்குள்ள செல்ல பெயரெல்லாம் வச்சாச்சு”
“அவள் என் மகள் டா”
“சரி சரி.. அடிச்சிறாத”
ப்ரனேஷ் சிறு யோசனையின் பின், “நான் அன்பரசி மேடம் கிட்ட இனியா பற்றி பேசணும்”
“என்ன சொல்ல போற?”
“இனியா பற்றி சொல்லணும்.. கூடவே உதவி கேட்க போறேன்”
“உதவியா?”
“ஹ்ம்ம்.. இனியாவின் மனநிலை பற்றி சொல்லக் கூடிய ஒரே ஆள் அவங்க தான்”
“ஹ்ம்ம்.. சரி”
சிறிது நேரம் வேறு பேசியவர்கள் அபிசாராவை பார்க்க கிளம்பினர். அப்பொழுது அவர்கள் எதிரில் அன்பரசி வரவும் சர்வேஷ், “எதிரில் வரவங்க தான் அன்பரசி மேடம்” என்றான்.
சர்வேஷ் அவர்கள் அருகில் வந்திருந்த அன்பரசியை அழைத்து, “மேடம் இவர் என் அண்ணன்.. இப்போ உங்களுக்கு வகுப்பு ஏதும் இருக்கிறதா? நீங்க ப்ரீயா இருந்தால் இவரை க்ரஷ்க்கு கூட்டிட்டு போக முடியுமா?”
அவள் சிறு பயத்துடன், “எஸ்.. சார்” என்றாள்.
சர்வேஷ், “எதற்கு எஸ்? வகுப்பு இருக்கிறதா இல்லை………….”
அவள் அவசரமாக தலையை ஆட்டி, “இல்லை சார்.. நான்.. கூட்டிட்டு போறேன்” என்றாள்.
“சரி” என்றவன் ப்ரனேஷை பார்த்து தலை அசைத்தான். அப்பொழுது ப்ரனேஷ் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “என்ன டா?” என்று வினவினான்.
ப்ரனேஷ் மென்னகையுடன், “நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? உன்னையெல்லாம் டெரர் னு நினைத்து இந்த பொண்ணு இப்படி பயப்படுதே!” 
சர்வேஷ் முறைக்கவும் ப்ரனேஷ் விரிந்த புன்னகையுடன், “சரி.. கிளம்பு கிளம்பு.. காத்து வரட்டும்” என்றதும் சர்வேஷ் மேலும் முறைத்தான். அதை கண்டுக்கொள்ளாமல் புன்னகையுடன் அன்பரசியை பார்த்து, “நாம கிளம்பலாம் வாங்க” என்றதும் அவள் ப்ரனேஷை அதிசய பிறவி போல் பார்த்தாள்.
ப்ரனேஷ் அவளது பார்வையை சர்வேஷிடம் சுட்டிக் காட்டிவிட்டே கிளம்பினான்.
செல்லும் வழியில், “என்னை ஏன் அதிசய பிறவியை போல் பார்க்கிறீங்க?”
அவள் அவனை அதிர்ச்சியுடனும் சிறு கலவரத்துடனும் பார்க்கவும் அவன் மென்னகையுடன், “ரிலாக்ஸ்.. உங்கள் பார்வையை வைத்து தான் கேட்டேன்.. ப்ரீயா இருங்க”
அவள் தெளியாததை பார்த்தவன், “சர்வேஷ் நீங்க அமைதி னு சொன்னான் ஆனா இவ்ளோ அமைதி னு நான் எதிர்பார்க்கவில்லை”
“..”
“இதுக்கும் மௌனம் தான் பதிலா” என்றவன், “என்னை உங்கள் அண்ணனா நினைத்துக்கோங்க” என்றதும் அவள் கண்கள் லேசாக கலங்கியது.
அவன், “என்ன?”
அவள் நெகிழ்ச்சியுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
அவன் புன்னகைக்கவும் அவள், “ஆண்களின் வேறு மாதிரியான பார்வைக்கு மட்டுமே பழக்கப் பட்டிருக்கிறேன்.. நீங்க அண்ணா னு சொல்லவும்.. தேங்க்ஸ்” என்றாள்.
அவளை சகஜமாக்கும் பொருட்டு, “சர்வேஷும் ஆண் தானே!”
அவள் பதறிய குரலில், “ஐயோ! நான் அவரை சொல்லலை சார்” என்று பயத்துடன் கூறவும்,
அவன், “எதற்கு இவ்ளோ பயம்?”
“அவரை பார்த்து இந்த ஸ்கூலே பயப்படும் சார்”
“அண்ணா சொல்லலாமே”
“ஹ்ம்ம்..”
“அவன் அவ்ளோ டெரர்-ஆ”
“என்ன அண்ணா இப்படி கேட்டுட்டீங்க!” என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்கவும் அவன் புன்னகையுடன், “எனக்கு அப்படி தோணலை” என்று கூறி தோளை குலுக்கவும்,
அவள், “அதை தான் பார்த்தேனே!”
“எதை?”
“நீங்க அவர் முறைத்ததை பொருட்படுத்தாமல் சிரிச்சு பேசியதை”
“அதுக்கு தான் என்னை அதிசிய பிறவியை பார்ப்பது போல் பார்த்தியா? சாரி பார்த்தீங்களா?”
“ஒருமையிலேயே பேசுங்க.. உங்களை விட சின்னவ தானே”
“ஹ்ம்ம்” என்றவன், “க்ரஷ் போறதுக்கு முன் உன்னிடம் கொஞ்சம் தனியா பேசணுமே”
அண்ணா என்று சொல்லாமல் கேட்டிருந்தால் பயந்திருப்பாள் ஆனால் இப்பொழுது சிறிதும் யோசிக்காமல், “பேசலாமே.. க்ரஷ் பக்கத்தில் சின்ன ப்ளே-கிரௌண்ட் இருக்கிறது.. அங்கே போய் பேசலாம்”
“யாரும் வர மாட்டாங்களே!”
“இல்லை.. அது க்ரஷ் குழந்தைகளுக்கானது.. இந்த நேரம் ப்ரீயா தான் இருக்கும்” என்றவளின் மனதினுள் ‘என்ன விஷயமா இருக்கும்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை, இருந்தாலும் அவனை நம்பிச் சென்றாள்.
அங்கே சென்று கல் இருக்கையில் அமர்ந்தனர். அவன் எப்படி ஆரம்பிக்க என்று சிறிது யோசிக்க, அவள், “உங்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது” என்றாள்.
“நான் இன்னைக்கு தான் உன்னை பார்க்கிறேன்” என்றவன், “ஒருவேளை என்னை டிவியில் பார்த்து இருக்கலாம்.. நான் டாக்டர் ப்ரனேஷ்.. என்…………….”
அவள் மகிழ்ச்சியுடன், “ஹ்ம்ம்.. கரெக்ட்.. உங்கள் பேட்டியை பார்த்தேன்.. எப்படி அந்த சின்ன குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணீங்க? இப்போ எப்படி இருக்கிறது அந்த குழந்தை?”
“குழந்தை நல்லா இருக்கிறது”
“அந்த ஆபரேஷன் கஷ்டமா இல்லையா?”
“பேட்டியை பார்த்தேன் னு சொன்ன!”
“ஹி.. ஹி.. பார்த்தேன் தான் ஆனாலும் உங்களை நேரில் பார்க்கவும் ஆர்வத்தில் கேட்டுட்டேன்”
“ஹ்ம்ம்.. கஷ்டமா தான் இருந்தது.. ஆனால் என் லட்சியமே சிறந்த ஹார்ட் சர்ஜன் ஆக வேண்டும் என்பது தான்.. முடியாது என்று கை விட்டவர்களை கூட காப்பாத்த வேண்டும் என்று நினைப்பவன் நான்”
“ஹ்ம்ம்.. சூப்பர் அண்..ணா..” என்று சிறிது திணறியவள், “அப்படி கூப்பிடலாம் தானே!”
“அப்படி கூப்பிட சொல்லி, நீயும் அப்படி கூப்பிட்டதா எனக்கு ஞாபகம்”
“இல்லை.. அப்போ நீங்க யாரு னு தெரியாதே!”
“ஏன் இப்போ மட்டும் எனக்கு கொம்பு முளைச்சிருச்சா?”
அவள் புன்னகையுடன், “தப்பு தான்” என்று கன்னத்தில் தட்டவும் அவனும் புன்னகையுடன், “குட்..” என்றான்.
“என்ன பேசணும் அண்ணா?”
“இனியா.. ப்ரனிஷா பற்றி பேசணும்”
“இனியா யார்? ப்ரனிஷா பற்றி என்ன?”
“ப்ரனிஷாவின் உண்மையான பெயர் இனியமலர்..” என்றவன் தன்னவளின் கடந்த காலம் பற்றியும் தனது காதல் பற்றியும் விரிவாக கூறினான்.
அவள் அமைதியாக இருக்கவும் அவன், “என்ன அன்பு?”
“இல்லை.. நான் அபி குட்டிக்கு என்னை சித்தி னு கூப்பிட சொல்லி கொடுத்திருக்கிறேன்.. இப்போ உங்களை எப்படி கூப்பிடுறது? அண்ணா சொன்னால் அபிக்கு மாற்றி சொல்லி குடுக்கணும்.. அப்போ உங்க ஆளை எப்படி சாமாளிப்பது? அபி செல்லம் வேற கேள்வி மேல் கேள்வி கேட்பாளே!” என்று அதி முக்கியமான கேள்விகளை கேட்டாள்.
அவள் கேட்ட விதத்தில் சிரித்தவன், “கஷ்டமான கேள்வி தான்” என்றதும்,
அவள், “கிண்டல் பண்றீங்களா?”
“பின்ன! உன் பிரெண்ட் கஷ்டப்பட்டதை பற்றி சொல்லியிருக்கிறேன்.. அதை…………”
“அவள் வாழ்க்கையை சீர் செய்ய தான் நீங்க இருக்கீங்களே! அவள் பட்ட கஷ்டத்தை நினைக்கறப்ப நெஞ்சடைப்பது போல் கஷ்டமா தான் இருக்கிறது ஆனால் நானும் கவலையில் இருந்தால் அவளை யார் வழிக்கு கொண்டு வரது! அதனால் கவலை படக் கூடாது னு முடிவெடுத்துட்டேன்”
“நல்லது” என்று கூறி அவன் புன்னகைத்தான்.
அவள், “இப்போ எனக்கு ஒரு வழி சொல்லுங்க”
அவன் சுற்றும் முற்றும் சுற்றிப் பார்க்கவும் அவள் அசடு வழிந்தபடி, “சாரி.. யாரும் இல்லை.. கொஞ்சம் தப்பா கேட்டேன்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..”
அவன் அவள் பேச்சை குழந்தையின் பேச்சை போல் ரசித்து புன்னகைத்தான். அதே புன்னகையுடன் “மாமா னு கூப்பிடு.. அக்கா கணவர் மாமா தானே” என்றவனது மனதில் வேறு கணக்கும் இருந்ததோ!!!
அவள் மகிழ்ச்சியுடன், “தேங்க்ஸ்.. அப்படியே கூப்பிடுறேன்.. அண்ணன் மனைவி அண்ணி தாய் போல் என்றால் அக்கா கணவர் மாமா தந்தை போல் தானே! ஸோ இனி நான் உங்களை மாமா னு கூப்பிட்டாலும் எனக்கு நீங்க தந்தை போல்”
நெகிழ்ச்சியான புன்னகையுடன் அவள் தலையில் கை வைத்தான்.
அதன் பிறகு, “சரி வா.. அபியை பார்க்க போகலாம்”
“வாங்க” என்று கூறி அழைத்துச் சென்றாள்.
குழந்தைகள் காப்பகத்தின் அறையை அடையும் முன் அவன், “எனக்கும் சர்வேஷிற்கும் உள்ள உறவை பற்றி இனியாவிடம் எதுவும் சொல்லாதே” 
“சரி.. ஆனா ஏன்?”
“இனியாவிற்கு நான் சர்வேஷின் உறவினன் என்று தெரியாமல் இருப்பது தான் நமக்கு நல்லது” என்றபோது வகுப்பு வந்திருந்தது.
அவன் வெளியே இருந்தே மகளை பார்த்து ரசித்தான்.
அனபரசி, “உள்ளே போகலாம் வாங்க”
“வேண்டாம்” என்பது போல் அவன் தலையை ஆட்டினான்.
சிறிது நேரம் குழந்தையை ரசித்தவன் சிறிது கலங்கிய விழிகளுடன், “கிளம்பலாம்” என்றான்.
இருவரும் கிளம்பினர்.
அவள், “ஏன் பேசலை?”
“அவள் என்னை அங்கிள் என்றோ மாமா என்றோ அழைப்பதை நான் விரும்பவில்லை”
சில நொடிகள் மௌனத்தில் கழிய அன்பரசி, “அபி உங்களை அப்பா னு சீக்கிரம் கூப்பிடுவா.. அது உங்க கையில் தான் இருக்கிறது”
“என் கையிலா!”
“நிச்சயமா.. நீங்க ப்ரனிஷாவை கவனிக்கும் விதத்தில் அவள் மனம் சீக்கிரம் மாறனும்.. அவளே உங்களை அபியின் அப்பாவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்று அவன் புன்னகைத்தான்.
அப்பொழுது சுகுணா இவர்களையே பார்த்தவாறு செல்ல, ப்ரனேஷ், “யாரு அவங்க?”
சுகுணாவை பார்த்த அன்பரசி வெறுப்புடன், “அது ஒரு சகுனி”
“சுகுணா வா!”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“சர்வா சொன்னான்.. சகுனி சுகுணா.. ரைமிங் நல்லா தான் இருக்கிறது” என்றவன் சிறு புன்னகையுடன், “கவலை படாதே.. ஒரு நாள் வச்சு செஞ்சிருவோம்”
அவள் புன்னகையுடன், “ஏற்கனவே உங்க ஆள் செம்மையா வச்சு செஞ்சிட்டா”
“ஹ்ம்ம்.. சர்வா சொன்னான்.. ஆனாலும் அதெல்லாம் பத்தாது..”
“நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?”
“தெரியலையே மா!” என்று கமல் போல் கூறியவன் பின் புன்னகையுடன், “என்ன திடீர்னு?”
“இல்லை.. பார்க்க புன்னகை தேசமா இருக்கிறீங்க ஆனா பேசுறதை பார்த்தால் சர்வேஷ் சாரை விட டெரர் போல லைட்டா தோணுது!”
“போகப் போகத் தெரியும்”
“என்ன தெரியும்?”
“நான் தென்றலா புயலா னு உன் தோழி தான் முடிவு செய்யணும்” என்றபோது சர்வேஷ் அறை வந்திருந்தது. 
“அவள் உங்களை தென்றலா தான் நினைக்கிறாள்”
“எப்படி சொல்ற?” என்றவனது குரலில் சிறு பரபரப்பு இருந்தது. அவன் அறை உள்ளே செல்ல அவள் தயங்கி வெளியே நின்றாள்.
அவன், “உள்ளே வா.. நான் கேட்டதிற்கு பதில் சொல்லிட்டு போ ப்ளீஸ்”
“சொல்லு னு சொன்னால் சொல்ல போறேன்.. எதற்கு ப்ளீஸ்?” என்றபடி உள்ளே சென்றவள், அங்கே சர்வேஷ் இல்லை என்றதும் தான் இயல்பானாள்.
அவன், “சரி சொல்லு”
அவள் மென்னகையுடன், “ஏழு ஆண்டுகளுக்கு முன் அவளிடம் தைரியம் இருந்து இருந்தால் இந்நேரம் ‘பூந்தோட்டம் போன்ற அன்பான குடும்பத்தில் தென்றல் போன்ற காதலுடன் வாழ்ந்துக் கொண்டிருந்திருக்கலாம்’ னு சொன்னாள்.. அப்போ புரியலை.. இப்போ புரியுது.. அது நீங்க னு”
அவனுக்கு சட்டென்று பேச்சே வரவில்லை. இரண்டு நொடிகளில் தன்னை சமன் செய்தவன் சிறிது கரகரத்த குரலில், “எப்போ சொன்னாள்?”
“நேத்து.. சுகுணா மேடம் பிரச்சனை முடிந்த பிறகு அவள் தைரியத்தை பற்றி நான் பேசிய போது சொன்னாள்”
“தேங்க்ஸ்”
“நான் என்ன பண்ணேன்?”
“நீ சொன்ன விஷயம் என் மனதிற்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. சொன்னால் உனக்கு புரியாது”
“புரியுது.. ஆனா” என்று அவள் தயங்க, அவன், “என்ன?”
“ஒன்னுமில்லை”
“பரவா இல்லை சொல்லு”
“அது வந்து.. நான் நெகடிவ்வா பேசுறதா நினைச்சுக்காதீங்க.. அவள் உங்களை மிஸ் பண்ணதை பற்றி சொன்னாலும் இப்பொழுது உங்களை உடனே ஏற்றுக் கொள்வாள் என்பது………”
“புரியுது.. உடனே அவள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் தான்.. ஆனா என்னை மிஸ் பண்ண தாக்கம் மற்றும் வருத்தம் இப்பொழுதும் அவளிடம் இருக்கிறது தானே! அது போதும் எனக்கு.. சீக்கிரம் அவள் மனதை மாற்றுவேன்.. அவள் மனதினுள் புதைந்து இருக்கும் காதலை உயிர்த்து எழ செய்வேன்”
“ஆல் தி பெஸ்ட் மாம்ஸ்” என்று புன்னகையுடன் கூறி வலது கை கட்டை விரலை காட்டினாள். 
அவன் புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றான்.
அன்பரசியின் ‘மாம்ஸ்’ என்ற வார்த்தையை கேட்டபடி உள்ளே வந்த சர்வேஷ் யோசனையுடனும் ஆச்சரியத்துடனும் அவளது புன்னகை முகத்தை பார்த்தான்.
சர்வேஷ் வந்தும் ஸ்விட்ச் அணைத்தார் போல் அன்பரசியின் புன்னகை நின்றுவிட அவள் முகம் சிறு பயத்தை காட்டியது.
சர்வேஷ் மனதினுள், ‘நான் என்ன பூச்சாண்டியா! ஏன் இவள் இப்படி பயப்படுகிறாள்?’ என்று நினைத்தவன் சிறு சிடுசிடுப்புடன் அவளை பார்க்க, அவளது பயம் கூடியது.
ப்ரனேஷ், “பார்வையாலேயே ஏன்டா மிரட்டுற! நீ போ அன்பு” என்றதும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள்.  
தன்னை பார்த்துக் கொண்டிருந்த சர்வேஷை புன்னகையுடன் பார்த்த ப்ரனேஷ், “என்ன?”
“நீ ஒரு மாய கண்ணன் தான் டா”
“அட பாவி நான் ஸ்ரீராமன் டா”
“ஆனா பொண்ணுங்க மனதில் கண்ணனா தானே இருக்கிற!”
“அன்பு என் தங்கை போல் டா”
“லூசு.. நான் ஜென்ரலா தான் சொன்னேன்.. அது என்ன மாம்ஸ்!”
ப்ரனேஷ் சிறு புன்னகையுடன் அவனுக்கும் அன்பரசிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை பற்றி சொன்னான்.
சர்வேஷ் சிறு ஆச்சரியத்துடன், “இவ்ளோ பேசுவாங்களா?” என்றவன், “ஆனா என்னை பார்த்தால் மட்டும் ஏன் பூச்சாண்டியை பார்த்தது போல் பயப்படுறாங்க?”
ப்ரனேஷ் வாய்விட்டு சிரித்தபடி, “நீ ஒரு பிள்ளை பூச்சி னு எனக்கு தெரியுது! பாவம் இங்கே வேலை பார்க்கிற பயபுள்ளைங்களுக்கு தெரியலையே!”
சர்வேஷ் முறைக்க முயற்சித்து முடியாமல் லேசாக சிரித்தான். பின், “ஸ்கூலில் நான் ஸ்ட்ரிக்ட் தான் ஆனா இந்த அன்பரசி மேடம் மட்டும் ரொம்பவே பயப்படுறாங்க..”
அப்பொழுது அனுமதி கேட்டு உள்ளே வந்த அன்பரசி, “மதியம்.. லீவ் வேண்டும் சார்” என்றாள்.
சர்வேஷ், “எதற்கு?”
“அது.. வந்து..”
“என்ன?”
“ப்ரனிஷா.. அது எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை”
“சரி எடுத்துக்கோங்க” என்றவன், “உங்கள் வகுப்புகள் எல்லாம் மாத்திவிட்டுட்டீங்களா?”
“ஹ்ம்ம்”
“சரி” என்றவன், “உங்க தோழிக்கு மனசு சரியில்லை னு லீவ் கேட்பதை எல்லா நேரத்திலும் அனுமதிக்க மாட்டேன்.. ப்ரனிஷா எனக்கு நல்ல தோழி தான் ஆனால் இங்கே நான் பிரின்சிபால் அவங்க டீச்சர்.. அவ்ளோ தான்.. என்ன புரிந்ததா?”
அவள் பயத்துடன் தலையை ஆட்டினாள். 
அவள் முகத்தை பார்த்தவன் ‘இவங்களை திருத்த முடியாது’ என்று மனதினுள் கூறிக் கொண்டு, “சரி கிளம்புங்க” என்றதும்,
“தேங்க்ஸ் சார்” என்றவள் சிட்டாக பறந்து வெளியேறினாள்.
ப்ரனேஷ், “நல்ல கெத்து காட்டுற டா!”
“உன் ஹாஸ்பிடல் வந்து பார்த்தால் தானே நீ காட்டும் கெத்து தெரியும்!”
ப்ரனேஷ் புன்னகையுடன், “வா னு தானே சொல்றேன்”
“ஹ்ம்ம்.. வரேன்”
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement