Advertisement

இதழ் 11
ப்ரனேஷ் மருத்துவமனையில் தன் அறையில் அமர்ந்திருந்த போது சர்வேஷ் அவனை அழைத்தான்.
ப்ரனேஷ் அழைப்பை எடுத்து, “சொல்லுங்க சார்! எங்களிடம் பேசக் கூட நேரம் இருக்கிறதா?”
“நான் கேட்க வேண்டியை நீ கேட்கிற”
“திறப்பு விழாவிற்கு கூட வர முடியாத வி.வி.ஐ.பி நீங்க”
“நான் தான் சொனேனே! இன்னும் கோபம் போகலையா?”
“..”
“அதான் அம்மா வந்தாங்களே! நான் என்ன வேணும்னா பண்ணேன்! திறப்பு விழா அன்னைக்கு தான் இங்கே இன்ஸ்பெக்ஷன்.. நான் எப்படி வர முடியும்! விழா முடிந்தே ஒரு மாசம் ஆகிருச்சு.. இன்னும் அதை பிடிச்சு தொங்கிட்டு இருக்கிற.. இதெல்லாம் ரொம்ப ஓவர் டா.. சொல்லிட்டேன்..”
“சரி சரி விடு.. சும்மா உன்னை கெஞ்ச விட்டு பார்க்கலாம்னு நினைத்தேன்”
“அட பாவி”
“அதான் கெஞ்சாம மிஞ்ச தானே செய்த அப்பறம் என்ன!”
“உன்னிடமெல்லாம் கெஞ்ச முடியாது” என்றதை கண்டுக்கொள்ளாதது போல் ப்ரனேஷ், “எப்படி போகுது உன் புது பிரான்ச்?”
“உன் திறமை எனக்கு இல்லை பா.. நாங்கலாம் ஸ்லொவ் பிக்-அப் தான்”
“ஸ்ப்பா!!!!”
“சரி எப்போ இங்கே வர?”
“நீ முதலில் இங்கே வா”
“எனக்கு கொஞ்சம் டைட்டா போகுது.. நீ இங்கே வா..”
“உன் கல்யாண தேதியை சொல்லு.. வரேன்”
“இதெல்லாம் ரொம்ப ஓவர் டா.. நீ இங்கே வரதுக்காகலாம் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது”
“சித்தி உனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கிறதா கேள்விப் பட்டேன்!”
“ஹ்ம்ம்.. சைடுல அது ஓடிட்டு தான் இருக்குது”
“அப்போ சீக்கிரம் டும் டும் டும் னு சொல்லு”
“எங்கே! கல்லை கண்டால் நாயை காணும் நாயை கண்டால் கல்லை காணும் கதையா இருக்குது”
அவன் சொன்ன விதத்தில் சிரித்தவன், “ஏன் டா!”
“ஹ்ம்ம்.. ஜாதகம் பொருந்தினால் பொண்ணு நல்லா இல்லை.. பொண்ணு நல்லா இருந்தால் ஜாதகம் பொருந்தலை”
“இதில் யாரு நாய் யார் கல்லு?”
“ரொம்ப முக்கியம்!!!”
“பேசாம லவ் மேரேஜ் பண்ணிக்கோ”
“நமக்கெல்லாம் இந்த லவ் செட் ஆகாது.. அம்மாவா பார்த்து ஏதாவது செய்தால் தான் உண்டு”
“உன் ஸ்கூலில் ஒரு டீச்சரமா கூடயா உன் மனதை கவரலை”
“அப்படி சொல்ல முடியாது”
“ஹ்ம்ம்.. அப்பறமென்ன!!!”
“ரொம்ப அவசரப் படாத.. ஒரு டீச்சரம்மா என் மனதை கவர்ந்து இருக்காங்க தான்……………”
“கவர்ந்து இருக்காங்களா கவர்ந்துட்டு இருக்காங்களா?”
“நடுவில் பேசாமல் முழுசா கவனி டா”
“சரி சொல்லுங்க சார்”
“ஒரு டீச்சரம்மா என் மனதை கவர்ந்து இருக்காங்க தான்.. ஆனால் அவங்களிடம் தோழமையுடன் பழக தான் மனம் ஆசைப் படுது..”
“பார் டா!”
“ஷி இஸ் அ டலென்டட் அண்ட் டிபிரென்ட் பெர்சன்”
“ரொம்ப தான் உறுகுற! தோழமை னு சொன்னா நம்புறது போல் இல்லையே!”
“டேய்.. நிஜமா பிரெண்ட் ஆ இருக்க தான் ஆசைப்படுறேன் பட்”
“என்ன பட்?”
“அவங்க அதை விரும்பலை”
“ஏன் அவ உன்னை லவ் பண்றாளா?”
“அட பாவி! இதை மட்டும் அவங்க கேட்டால் உன்னை அடி பின்னிருவாங்க”
“ஏன்?”
“அதான் அவங்க டிபிரென்ட் னு சொன்னேனே! அவங்க ஒரு புரியாத புதிர்”
“டேய்!!!!!!”
“இரு உனக்கு முதலில் இருந்து சொன்னால் தான் தெரியும்” என்று கூறி ப்ரனிஷாவை சந்தித்த சூழ்நிலையில் இருந்து அன்பரசி விஷயம் வரை சொல்லி முடித்தான். அன்று ஆசிரியர் அறையில் அவள் பேசியது முதற்கொண்டு சொன்னான். அன்று அவள் பேசியதை மகாலக்ஷ்மி ஆசிரியர் சர்வேஷிடம் கூறி இருந்தார்.
அனைத்தையும் கேட்ட ப்ரனேஷ், “வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க போல! அந்த டீச்சர் போல் அல்லது வேறு ஏதோ ஒரு சூழ்நிலையில் மற்றவர்கள் அவங்களை தப்பா பேசியிருக்கனும் அது இன்று வரை அவங்க மனதில் ஆறாத வடுவாக இருக்க வேண்டும்..”
“ஹ்ம்ம்.. நானும் அதான் நினைத்தேன்.. ஆண்களை அவங்க தவிர்ப்பதற்கு காரணம் அவங்க கணவனோ இல்லை குழந்தையின் தகப்பனாக கூட இருக்கலாம்”
“அது என்ன குழந்தையின் தகப்பன்?”
“குழந்தை பிறப்பதற்கு கல்யாணம் ஆகியிருக்கணும் னு அவசியம் இல்லையே!”
“மனதளவில் கணவனாக நினைத்திருக்கலாம், அவர் கல்யாணத்திற்கு முன் இறந்திருக்கலாம்.. இல்லை.. அவங்க பெயரிற்கு முன் இருக்கும் மிஸ்-க்கு காரணம் திருமணம் முடிந்து டைவர்ஸ் ஆகியோ இல்லை கணவன் இறந்ததினாலோ இருக்கலாம்” என்றவன், “சரி இப்போ எதுக்கு இந்த தேவை இல்லாத டிஸ்கஷன்! எதுக்கு போன் பண்ண?”
“ஹ்ம்ம்.. சும்மா தான் பண்ணேன்”  என்று அவன் குரல் சிறிது சுருதி இறங்கி வந்தது.
“என்ன டா?”
“இல்லை.. இப்போ உன்னிடம் பேசிய பிறகு ப்ரனிஷா பற்றி தெரிஞ்சுக்கணும் னு தோணுது”
“சித்தியிடம் கேள்”
“ச்ச்.. அம்மா சொல்ல வந்தப்போ வேணாம் னு கத்திட்டேன்.. இப்போ கேட்டாலும் சொல்லுவாங்க தான்..”
“அப்பறம் என்ன?”
“என்னை தோழனா ஏற்றுக்கொண்டால் அவங்களே சொல்லுவாங்க”
“அப்போ விடு”
“ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்..” என்றபடி அவன் தெளியவும், 
“சரி டா பை” என்று கூறி அழைப்பை துண்டித்த ப்ரனேஷ் ‘கடைசி வரை பயபுள்ள அந்த பொண்ணு பெயரை சொல்லலையே!’ என்று கூறினான். பிறகு சிறு யோசனையுடன், ‘நடுவில் ஏதோ சொன்னானே!’ என்றவன் தோளை குலுக்கி, ‘நமக்கெதுக்கு அந்த பெயர்?’ என்று கூறிக் கொண்டு வேலையை தொடர்ந்தான்.
ரு நாள் ப்ரனிஷா யோசனையில் அமர்ந்திருப்பதை பார்த்த அன்பரசி, “என்ன யோசனை பலமா இருக்குது?”
“டுவள்த் ஸ்டுடென்ட்ஸ் படிக்க வைக்கிறதை பற்றி ஒரு யோசனை.. அதை பற்றி சர்வேஷ் சாரிடம் பேசவா வேண்டாமா னு யோசிச்சிட்டு இருந்தேன்”
“சர்வேஷ் சாரிடம் பேசுறதில் உனக்கு தயக்கமா?”
ப்ரனிஷாவின் முறைப்பில், “ஓகே.. நோ கோபம்.. மீ பாவம்”
ப்ரனிஷா புன்னகையுடன், “உன் கூட சேர்ந்ததில் இருந்து இப்பலாம் நான் முறைச்சா அபி இப்படி தான் சொல்றா!”  
அன்பரசி தன்னை தானே தட்டிக்கொள்ளவும் ப்ரனிஷா, “இது குட்டி மேடம் கிட்ட இருந்து நீங்க கத்துகிட்டதாக்கும்”
“யா.. யா” என்றவள், “இன்னைக்கு சாயுங்காலம் நானும் உன்னுடன் வரேன்.. அபி செல்லத்துக்கு பாஸ்த்தா செஞ்சு தரதா சொல்லியிருக்கேன்”
“முந்தாநேத்து தானே செஞ்சு கொடுத்த?” என்றபடி ப்ரனிஷா முறைக்கவும், 
அன்பரசி, “எனக்கு கிளாஸ் இருக்குது.. மீ எஸ்கேப்.. நீ போய் சாரிடம் பேசு” என்று கூறி கிளம்பினாள்.
ப்ரனிஷா புன்னகையுடன் எழுந்து சர்வேஷை பார்க்க சென்றாள்.
உள்ளே செல்ல அனுமதி கேட்டவள் அவனது அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்று, “குட் அப்ட்டர்-நூன் சார்.. டுவள்த் ஸ்டுடென்ட்ஸ் விஷயமா பேசணும்”
“சொல்லுங்க”
“நீங்க டாப்பர்ஸ் மேல தான் அதிகமா கான்செண்டிரெட் பண்றீங்க”
“அதுக்காக மத்தவங்களை கவனிக்காமல் விடவில்லையே!”
“ஆனால் மற்றவங்களுக்கு தான் அதிக கவனிப்பு தேவை னு நினைக்கிறேன்”
“சரி உங்கள் யோசனையை சொல்லுங்க”
“ஸ்டுடென்ட்ஸ்ஸை மூணு குரூப்பா பிரிக்கணும்.. ஒன்னு டாப்பர்ஸ்.. ஒன்னு பௌண்டரி லைன் இன்னொன்னு இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் இருப்பவங்க.. இவனிங் ஸ்பெஷல் கிளாஸ் டாப்பர்ஸ் மட்டுமில்லாமல் எல்லோருக்கும் இருக்கணும்.. மூன்று பிரிவிற்கும் தனி தனி வகுப்பு.. டாப்பர்ஸ்-கு சாதாரண கோச்சிங் போதும்.. பௌண்டரி லைன் ஸ்டுடென்ட்ஸ்கு முக்கியமான டாபிக் மட்டும் மீண்டும் நடத்தி எப்படி படிக்கணும் எந்தெந்த பாயிண்ட்ஸ் கண்டிப்பா இருக்கணும் னு சொல்லி கொடுக்கணும்.. நடுவில் இருப்பவங்களுக்கு தேவையான டாபிக் மட்டும் திரும்ப நடத்தனும்”
“குட்.. நீங்களே குரூப் பிரிச்சிடுங்க”
“அது சரி வராது சார்”
“ஏன்?”
“என் சப்ஜெக்ட்டில் நான் பிரித்து விடுவேன்.. என் சப்ஜெக்டில் வீக்கா இருக்கிற ஸ்டுடென்ட் மதமெடிக்ஸ்ஸில் ஸ்டராங் ஆ இருக்கலாம்.. அதை போல் தான் மற்ற சப்ஜெக்ட்டும்”
“அப்போ டைம் டேபிள் கிளாஷ் ஆகாதா?”
“ஒவ்வொரு சப்ஜெக்ட்க்கும் தனி தனி லிஸ்ட் ரெடி பண்ணிட்டு டிசைட் பண்ணலாம் சார்”
“சரி சர்குலர் அனுப்புறேன்”
“தேங்க்ஸ் சார்”
“இதற்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்”
“சார்.. இன்னொரு விஷயம்”
“சொல்லுங்க”
“படிப்பு படிப்பு னு ரொம்பவும் ப்ரெஷர் கொடுக்கக் கூடாது.. ஸோ ரெகுலர் கிளாஸ் முடிஞ்சதும் முக்கால் மணி நேரம் பிரேக் கொடுப்போம்.. அரைமணி நேரம் விளையாட்டு.. லாஸ்ட் பிப்டீன் மினிட்ஸ் ஸனக்ஸ் டைம்.. அதை நாமளே கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்.. கல்-தோசை, பூரி, சமோசா, கட்லெட், வடை இப்படி ஒவ்வொரு நாளும் ஒன்னு.. அதிகமா இல்லாம லைட்டா கொடுக்கலாம்.. அதுக்கு வேணா மாதம் 2௦௦ ரூபா வாங்கிக்கலாம்.. ரூபா விஷயம் எனக்கு பெருசா ஐடியா இல்லை ஆனால் மற்ற இரண்டையும் கொஞ்சம் யோசிங்க.. விளையாட்டு கண்டிப்பா அவசியம்.. அந்த நேரத்தில் யாரும் வகுப்பினுள் இருக்க கூடாதுனு சொல்லுங்க”
“ஏன்?”
“கேர்ள்ஸ் சிலர் விளையாடுவதில் பெருசா இன்ட்ரெஸ்ட் காட்டாமல் இருக்கலாம்.. அந்த நேரத்தில் கண்டிப்பா கிரௌண்ட்டில் தான் இருக்கணும் என்று சொன்னால் அந்த நேரத்தில் வகுப்பை கவனிக்க தனி ஆசிரியர் கூட தேவை இல்லை”
“வெரி குட் ஐடியா.. விளையாட்டு ஓகே.. ஸனக்ஸ் விஷயம் விசாரிச்சிட்டு சொல்றேன்..”
“தேங்க்ஸ் அகேன் சார்”
“தேவை இல்லை னு சொன்னால் கேட்க போறதில்லை.. விடுங்க.. குரூப் பற்றி இன்று சர்குலர் வந்துவிடும்.. ஸ்டுடென்ட்ஸ் சர்குலர் நாளைக்கு வரும்”
“ஓகே சார்” என்று கூறி விடை பெற்றாள்.
ரண்டே நாட்களில் அவள் சொன்னதை செயல் படுத்தினான். இந்த மாற்றத்திற்கு காரணம் இவள் என்பதை அறிந்து மாணவர்கள் மேலும் இவளை கொண்டாடினர். ஒரு சில ஆசிரியர்கள் பாராட்ட, சுகுணா குழுவினர் எப்பொழுதும் போல் குறை கூறினர். 
இந்த சம்பவத்திற்கு பிறகு சர்வேஷிடம் ஒதுக்கம் காண்பிக்கவில்லை என்றாலும் நெருக்கமும் காண்பிக்கவில்லை. அவளது மனம் அறிந்து அவனும் இந்த மாற்றத்தை அமைதியாக ஏற்றுக் கொண்டான். அவள் அவ்வபோது சாரதாவை சந்திப்பது உண்டு. எப்போதாவது அவர் பள்ளிக்கு வரும் போது அவளே சென்று பார்த்து பேசுவாள். இரண்டு முறை அவர் இவள் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
சென்னையில் ப்ரனேஷ் அன்னைக்கு பிறந்தநாள் பரிசு வாங்க அவரை அழைத்துக் கொண்டு மால் ஒன்றுக்கு சென்றான். புடவை எடுத்துவிட்டு வெளியே வந்தபோது சட்டென்று அசையாமல் நின்றவன் யோசனையுடன் ஒரு பெண்ணை பார்த்தான்.
தனது கேள்விக்கு பதிலில்லை என்றதும் மகனை பார்த்த அமுதா அவனது பார்வையை தொடர்ந்து அந்த பெண்ணை பார்த்தார்.
சில நொடிகளிலேயே தன்னை சுதாரித்த ப்ரனேஷ், “என்ன மா கேட்ட?”
“யாரு அந்த பொண்ணு?”
“இதையா கேட்ட?”
“இதையும் கேட்கிறேன்”
“நம்ம ஹாஸ்பிடலில் தான் வேலை செய்றாங்க.. ஜூனியர் டாக்டர்”
“பெயர் என்ன?”
அவன் சிறு தோள் குலுக்கலுடன், “ஞாபகம் இல்லை”
“இதை என்னை நம்ப சொல்றியா?”
“அது உன் இஷ்டம்”
“சரி உன் பார்வை தினமும் பார்க்கும் பெண்ணை பார்க்கும் பார்வையா எனக்கு தெரியலையே!”
“நீயும் உன் ஆராச்சியும்.. வா மா ஜுவெல்லரி ஷாப் போகலாம்”
அவனை அவர் ஆழ்ந்து நோக்கவும் அவன் புன்னகையுடன், “டாடி உன்னை ரொம்பவே கெடுத்து வச்சிருக்கிறார்.. நிஜமாவே ஒன்றுமில்லை.. வா”
“எனக்கு ஜுவெல்ஸ் வேணாம்.. என் பிறந்தநாள் அன்று நாள் முழுவதும் என்னுடன் இருக்கிற.. அதான் நீ எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு”
அவன் விரிந்த புன்னகையுடன், “அப்போ இந்த புடவை”
“இது வேற டிப்பார்ட்மென்ட்” 
“ஸ்வீட் மம்மி”
“கொஞ்சுறதெல்லாம் சரி.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லவில்லையே”
“ஓகே.. ஓகே.. நாளை மறு நாள் முழுவதும் உன்னுடன் தான்” 
“ஹ்ம்ம்.. பேச்சு மாறக் கூடாது”
“மாற மாட்டேன்”
“சரி வா கிளம்பலாம்”
“கிளம்பலாம் ஜுவெல்ஸ் வாங்கிட்டு” என்றபடி நகைக்கடைக்கு அழைத்துச் சென்றான்.
நகைக்கடைக்கு செல்லும் முன் அந்த பெண்ணை திரும்பி பார்த்த அமுதா அவள் அருகே இருந்த பெண்மணியை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் மனதினுள் ஒரு திட்டத்தை தீட்டினார்.
அவரது திட்டம் பலிக்குமா? அது ப்ரனேஷிற்கு அதிர்ச்சி அளிக்குமா? – பார்க்கலாம்….  
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement